Wednesday, December 31, 2008

எனது டைரியிலிருந்து ஒரு பக்கம்

காலை 5.00am : விஜய் டிவியில் மந்த்ராலய மகான் பற்றி ஒலிபரப்பினார்கள். ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.


6.00am : பக்கத்து கோயிலில் ஏதோ திருவிழாவாம். பத்து நாட்களாய் மைக் செட் போட்டு பாட்டு போடறாங்களாம். இன்னிக்குதான் கேள்விப்பட்டேன். எனக்கு எதுவும் கேட்கவில்லை.


8.00am : பக்கத்தில் இருக்கும் ஒரு கோயிலுக்கு போயிருந்தேன். தொன்னையில் வைத்து அருமையான பொங்கல் கொடுத்தார்கள். அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு, சிறிது நேரம் கழித்து கொடுத்த தயிர் சாதமும் சாப்பிட்டேன். கடவுளை ஒரு முறையாவது பார்க்க வேண்டுமென்று நினைத்தேன். மறந்து விட்டேன்.


10.30am : சன் டிவியில் மெகாத்தொடர்கள் ஆரம்பம். எல்லாமே அருமையாக இருந்தது. அடுத்த மூணு மணி நேரம் போனதே தெரியவில்லை.


மதியம்
12.00 noon: தங்கமணி அருமையாக சமைத்திருந்தார். எப்போதும் சமைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.


1.00pm: 'ஃபேவரைட்ஸில்' வைத்திருக்கும் - வீக் எண்ட் ஜொள்ளு - பதிவு போடும் பதிவர்கள் யாரும் இன்றைக்கும் பதிவே போடவில்லை. பழைய பதிவுகளையே இன்னொரு முறை பார்த்தேன்.


2.00pm: தூக்கம் கண்ணை சுழற்றியதால், சிறிது கண்ணயர்ந்தேன்.


4.30pm: பக்கத்து வீட்டிலிருந்து முறுக்கு கொடுத்தனுப்பியிருந்தார்கள். பாக்கு குத்தும் உரலில் வைத்து இடித்து, பொடி செய்து சாப்பிட்டேன். அருமையாக இருந்தது.


7.00pm: எங்கள் வீட்டு விளக்கு மிகவும் மங்கலாக இருக்கிறதே என்று சொல்லி தங்கமணியிடம் திட்டு வாங்கினேன். இதை விட வெளிச்சம் அதிகமாக விளக்கு போட்டால், பக்கத்து வீட்டிலிருந்து வந்து திட்டுவார்கள் என்று சொன்னார்.


10.30pm: இப்போல்லாம் மிட் நைட் மசாலாவில் சரியான பாட்டே போடுவதில்லை. நாளைக்கு டிவி சேனலுக்கு கடிதம் எழுதணும்.


தேதி: டிசம்பர் 26, 2048

-------------

பிகு: அ. இப்போ எனக்கு டைரி எழுதும் பழக்கமில்லை. ஒரு வேளை வருங்காலத்தில் நான் டைரி எழுதினால் கற்பனை செய்து பார்த்தேன். ஹிஹி... லேபிளை பாத்துட்டேளா!!!

ஆ. இந்த வருஷத்தை ஒரு மொக்கையோட முடிக்கலாமேன்ற நல்ல எண்ணம்தான் இந்த பதிவு. எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Read more...

Tuesday, December 30, 2008

நொறுக்ஸ் - செவ்வாய் - 12/30/08


பிறந்த அன்னிக்கே கடகடன்னு பேசின ஒரு அதிசய குழந்தையை உங்களுக்குத் தெரியுமா? விவரம் பதிவில்.

--------

சென்ற வாரம் நண்பர் குடும்பத்துடன் பேசிக்கொண்டிருந்தோம். நண்பர் மனைவி கேட்டார் - "இரவுக்கு என்ன சமையல்?". என் தங்கமணி சொன்னார் - "தோசை". நண்பர் - "என்ன இந்த ஊருக்கு வந்துட்டு இன்னும் இட்லி தோசைன்னுட்டு. பீட்சா, பர்கர்னு ஏதாவது சாப்பிட வேண்டியதுதானே. எங்கே
போறோமோ அந்த இடத்துக்கு தகுந்தா மாதிரி நம்மை மாத்திக்கணும்" அப்படி இப்படின்னு அட்வைஸ் பண்ணிக்கிட்டிருந்தார்.


என் தங்கமணி "நான் அந்த மாதிரியெல்லாம் இல்லை. ஆனா இவரு அப்படித்தான். எந்த இடத்துக்கு போறாரோ அப்படியே தன்னை மாத்திக்குவார்"
அப்படின்னாங்க. நண்பரும் ஆச்சரியத்துடன் "பலே பலே" என, தங்கமணி தொடர்ந்து சொன்னார் - "ஆமாம். போன வருஷம் இங்கே மிருகக்காட்சி
சாலைக்குப் போனோம். அப்பத்திலேந்து இவர் அப்படியேயிருக்கார்".

-------

தானியங்கி கார் கழுவும் இடத்தில் வண்டியை விடப் போயிருந்தோம். வண்டி தண்டவாளத்தில் வரவர வெவ்வேறு கருவிகள் வந்து சுத்தம் செய்வதால், பத்து நிமிடத்தில் வண்டி பளபளாவென்று வெளியே வந்துவிடுகிறது.
வீட்டுக்கு வரும்போது தங்கமணியிடம் என்னுடைய புதிய தொழில்நுட்பத்தைப் பற்றி சொன்னேன்.

அதாவது இதே மாதிரி மனிதர்களை குளிப்பாட்டும் கருவி ஒன்று கண்டுபிடிக்க வேண்டும். ஆசாமி ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டால், முதலில் ஒரு கருவி வந்து உடம்பில் எண்ணைய் தேய்த்துவிட வேண்டும். பிறகு அந்த நாற்காலி மெதுவாக நகர்ந்து தடத்தில் வரும்போது, இன்னொரு கருவி தலையில் சீயக்காய் தேய்த்தும், பிறகு வென்னீரால் குளிப்பாட்டிய பிறகு அடுத்த கருவி சோப் / ஷாம்பூ தடவி, மறுபடி தண்ணீரால் கழுவி, மின்விசிறியால் ஈரத்தை காயவைத்து வெளியே வரும்போது அந்த
ஆளுக்கு சாம்பிராணி / நாத்த மருந்து ஏதாவது அடித்து பத்து நிமிடத்தில் அவனை ஒரு புது மனிதனாக மாற்ற வேண்டும்.


இந்த மாதிரி ஒரு கருவியை நான் கண்டிப்பாக கண்டு பிடிப்பேன் என்று சொன்னதால் அன்றைக்கு கொஞ்சம் அதிகமாகவே திட்டு விழுந்தது.
----------------

நேத்து வால்மார்ட் போய் ஒரு உடற்பயிற்சிக்காக ஒரு ச்சின்ன கருவி வாங்கிட்டு வந்தோம். நாற்காலியில் உட்கார்ந்து மிதிவண்டி ஓட்டறது போல் பயிற்சி செய்வதற்காக வாங்கியது. வாங்கும்போதே தங்ஸ் சொன்னாங்க - “ஒரு நாள் ரெண்டு நாள் ஓட்டுவீங்க, அதுக்கெதுக்கு இதெல்லாம்?” - அதையெல்லாம் மீறி இதை வாங்கியாச்சு. என்ன ஆகுதுன்னுதான் பாக்கணும்.


---------

போன வாரம் வருடாந்திர செக்கப்புக்காக மருத்துவமனை போயிருந்தபோது, பிறந்த தேதி எழுத வேண்டிய இடத்தில் போன வாரத்துத் தேதியே
எழுதிவிட்டேன். அதைப் பார்த்த அந்த நர்ஸுக்கு வாயெல்லாம் சிரிப்பு. இன்னிக்குதான் பிறந்தீங்களான்னு கேள்வி வேறே. அப்படியே கொஞ்ச நேரம் சிரிச்சி பேசிக்கிட்டிருந்தோம்.

ஒரே ஒரு கூடுதல் தகவலை சொல்லி இந்த நொறுக்ஸை முடிக்கறேன். அந்த நர்ஸ் கண்டிப்பா எங்க பாட்டியை விட ஓரிரு வயசு கம்மியாத்தான் இருப்பாங்க...

Read more...

Monday, December 29, 2008

வீட்டு வேலை செய்யாமல் ரங்கமணிகள் தப்பிப்பது எப்படி?

என்னதான் பிஸியாக காட்டிக் கொண்டாலும் சில சமயங்களில் ரங்கமணிகள் வீட்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. பதிவை படிக்கும் நிகழ்கால / வருங்கால ரங்கமணிகளுக்காக - அந்த சிற்சில வேலைகளையும் செய்யாமல் தப்பிப்பது எப்படி என்பதைத்தான் இங்கே பார்க்கப் போறோம்.


இந்த பதிவில் ரங்கமணிகளிடம் ஒப்படைக்கப்படும் மிகவும் முக்கியமான டாப்-3 வேலைகளை மட்டும்தான் பாக்கப் போறோம். மக்களின் ஆதரவுக்கேற்ப இதே தலைப்பில் அடுத்தடுத்த பதிவுகள் வெளியிடப்படும்.

இந்த யோசனைகளை அமுல்படுத்தும் ரங்கமணிகள் - தங்கள் முயற்சியில் வெற்றியடைந்தால் என்னை வாழ்த்தி பதிவிடவும். மாறாக ஏதேனும் 'பின்விளைவுகளை' சந்திக்க நேர்ந்தால், அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.

பாத்திரம் தேய்த்தல்:

திருமணமான ரங்கமணிகளுக்கு முதன்முதலில் கொடுக்கப்படும் வேலை இதுவாகத்தான் இருக்கும். குழாயடியில் நின்று பாத்திரம் தேய்ப்பது ரொம்பவே கஷ்டமான செயல். அதுவும் ஒவ்வொரு பாத்திரத்தையும் நன்றாக தேய்த்தபிறகு அதில் ஏதாவது கறை இருக்கா இல்லே எல்லாம் போய் சுத்தமாயிடுச்சான்னு கவனமாக பார்க்க வேண்டியிருக்கும். அப்படி ஏதாவது ஒரு கறை இருந்துச்சுன்னா, கஷ்டப்பட்டு எல்லா வேலையும் செய்தபிறகும் திட்டு வாங்கும் வாய்ப்பு நிறையவே உண்டு.

அதனால் நாம் செய்ய வேண்டியது என்னன்னா - ஒரு உதாரணத்தோட சொல்றேன். நம்ம நடிகைகள் மணிக்கணக்குலே மேக்கப் போட்டுக்குவாங்க. ஆனா கடைசியில் உதடுக்கு மேலே அல்லது கீழே, கறுப்பா சின்ன மச்சம் ஒண்ணு வெச்சுக்குவாங்க. கேட்டா திருஷ்டி பொட்டுன்னுவாங்க. அதே மாதிரி, பாத்திரங்கள நல்லா சுத்தம் செய்தபிறகு - தேர்ந்தெடுத்த சில பாத்திரங்களில் அங்கங்கே சின்ன திருஷ்டி பொட்டு இருக்கறா மாதிரி பாத்துக்கங்க. அவ்வளவுதான்.


"எதையும் உருப்படியா செய்யமாட்டீங்க. இனிமே உங்ககிட்டே சொல்லி பிரயோஜனமில்லே. நானே பாத்திரத்தை தேய்ச்சிக்கறேன்" - அப்படின்னு தங்கமணிகள் காரியத்தில் இறங்கிடுவாங்க. நீங்க - வேறென்ன - ஒரு தடவை காதை துடைச்சிக்கிட்டு - ஜாலியா தொலைக்காட்சியோ கணிணியோ ஆன் பண்ணிடுங்க. அவ்வளவுதான். கொஞ்ச நாளைக்கு பாத்திரமே தேய்க்க வேண்டாம்.


குக்கர் வைப்பது:

குக்கரில் அரிசி, பருப்பு அல்லது காய்களை வைத்து - விசில்களை எண்ணி சரியாக அடுப்பை அணைப்பது - கேட்பதற்கு சுலபமாகத்தான் தெரியும். ஆனால், அப்படி விசில்களை கவனமாக எண்ண வேண்டும் என்பதால் அந்த ஐந்து/பத்து நிமிடங்களுக்கு வேறெந்த வேலையும் செய்ய முடியாது. நண்பர்களின் பதிவுகளில் ஒரு பின்னூட்டமோ, ஓட்டோ போட முடியாது.

அதே மாதிரி, சில சமயங்களில் கேஸ்கட் (gaskette) பழுதாகி விடும். அப்போது குக்கர் மூடியை காற்று வெளியேறாமல் அழுத்தமாக பிடித்துக் கொள்ள வேண்டும். உள்ளே சரியான அளவில் தண்ணீர் போட வேண்டும். இவ்ளோ பிரச்சினைகளிருக்கும் இந்த வேலையிலிருந்து தப்பிப்பது மிகவும் சுலபம். கீழே படிங்க.

அ. ஒரு தடவை அரிசியுடன் போடும் தண்ணீர் அளவை சற்று அதிகரிக்கவும். உதாரணத்திற்கு - 5 டம்ளர் தண்ணீர் போடவேண்டுமென்றால், சரியாக 8 அல்லது 9 டம்ளர் போடுங்கள் போதும்.

ஆ. அதே மாதிரி விசில் எண்ணிக்கை. ஐந்து விசிலில் குக்கரை இறக்க வேண்டும் என்று சொன்னால், முதல் விசில் வந்தவுடன் காதை மூடிக்கொள்ளவும். குத்து மதிப்பாக அடுத்த பத்து நிமிடம் கழித்து குக்கரை இறக்கவும்.

இ. அரிசியே போடாமலும் (வெறும் தண்ணீரோடு) குக்கர் வைக்கலாம். அதெல்லாம் உங்கள் தைரியத்தைப் பொறுத்து நீங்களே முடிவு செய்துகொள்ள வேண்டியது.

மேற்கூறிய மூன்றினையும் ஒன்று அல்லது இரண்டு தடவை செய்தால் போதும் - வாழ்க்கையில் இனிமேல் நீங்கள் குக்கர் வைக்கவே வேண்டியிருக்காது. எல்லாவற்றையும் தங்கமணியே பார்த்துக் கொள்வார்கள்.

வீட்டை பெருக்கி, ஒட்டடை அடித்தல்:

என்னிக்காவது ஒரு நாள் லீவில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்தாலோ, சமீபத்தில் 1980யில் நடந்த ஒரு கிரிக்கெட் மேட்சை (வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா) பரபரப்பாக பார்த்துக் கொண்டிருந்தாலோ - அப்போதுதான் வீட்டை பெருக்க வேண்டுமென்றும், ஒட்டடை அடிக்க வேண்டுமென்றும் தங்கமணிகளுக்கு நினைவு வரும்.

வேறு வழியில்லாமல் ரங்கமணிகள் அந்த வேலைகளை செய்தாலும், போஸ்ட் மார்டம் ரிப்போர்டில் நிறைய குற்றங்கள் இடம்பெற்றிருக்கும்.

இப்போ இந்த வேலையிலிருந்து தப்பிப்பது எப்படின்றத பாப்போம். இதுக்கு சரியான உதாரணம் நம்ம ஊர் குப்பை வண்டி. அதாவது ஒரு இடத்திலே இருக்கற குப்பையை பல இடங்களுக்கும் பரப்புவது. புரிஞ்சிக்கிட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஒட்டடை அடிக்கணும்னா சுவத்திலே ஒரு மூலையில் இருக்கறதை, அப்படியே கோடு மாதிரி பல இடங்களுக்கும் இழுத்துடணும். இந்த மாதிரி செய்யத் தெரியலேன்னா கவலைப்பட வேண்டாம். இதுக்கெல்லாம் எங்கேயும் க்ராஷ்-கோர்ஸ் கிடையாது. நீங்களே ஓரிரு முறை முயற்சி செஞ்சா செய்துடலாம்.


அதுக்கப்புறம் கவலையே கிடையாது. ரஞ்சிக்கோப்பை மேட்சிலிருந்து பழைய மேட்ச் எதுவாயிருந்தாலும், கால் மேல் கால் போட்டு பார்த்துக்கொண்டே இருக்கலாம். ‘யாரும்' தொந்தரவே செய்ய மாட்டார்கள்.

Read more...

Thursday, December 25, 2008

எனது வாழ்க்கையில் Morse Code

முன்னுரை:



நேற்றைய பதிவில் மொக்கை கொஞ்சம் ஓவராவே இருந்துச்சுன்னு நினைக்கிறேன் - அதை சரிப்படுத்துவதற்காக இன்றைய பதிவு கொஞ்சம்
டாகுமெண்டரி டைப்பில் எழுதியிருக்கேன்.


--------


ச்சின்ன வயசில் சாரணர் இயக்கத்தில் இருந்தபோது சொல்லிக் கொடுத்த ஒரு மேட்டர் - மோர்ஸ் கோட்.




சாமுவேல் மோர்ஸ் என்பவர் கண்டுபிடுத்த இந்த முறையைக் கொண்டு பழைய காலத்தில் தந்தி தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்தனர். எல்லா ஆங்கில எழுத்துகளையும் மற்றும் 0 முதல் 9 வரை உள்ள எண்களையும் குறியீடுகள் மூலம் மொழிபெயர்த்து அதை குறிப்பிட்ட அலைவரிசையில் அனுப்பி இத்தகைய தகவல் பரிமாற்றங்கள் நடந்து வந்தன. தற்போதும் ஹாம் எனப்படும் அமெச்சூர் ரேடியோ பயன்படுத்துபவர்கள் இந்த மோர்ஸ் கோட் மூலம் பேசுகிறார்கள்.




ஹாம் எப்படி இருக்கும்னா - பழைய திரைப்படங்களில் வில்லன் அலமாரியின் கதவைத் திறந்து - ஹெட்செட்டை எடுத்து மாட்டிக்கொண்டு - ஹலோ ஹலோ 305 ஹியர் - அப்படின்னுவாரே, அதே மாதிரிதான் இருக்கும். விக்ரம் படத்தில் கமல் கூட அந்த மாடி வீட்டில் இப்படி ஒரு கருவியை கண்டுபிடிப்பார்.




எல்லா ஆங்கில எழுத்துக்களையும் - டிட் (புள்ளி), டா (கோடு) - இந்த இரண்டு குறியீடுகளின் மூலம் வகைப்படுத்தி உள்ளனர். உதாரணத்திற்கு, A என்பதை
ஒரு டிட், ஒரு டா (சொல்லும்போது : டிட் டா) எனவும் B என்பதை ஒரு டா, மூன்று டிட் (சொல்லும்போது: டா டிட் டிட் டிட்) எனவும் சொல்ல வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம்.




இந்த மோர்ஸ் கோட் - மேலே சொன்ன மாதிரி அமெச்சூர் ரேடியோ பயன்படுத்தும் ஆட்களுக்கோ அல்லது ராணுவத்தில் தந்தி தகவல் பரிமாற்றத்தில் இருப்பவர்களோதான் பயன்படும் - எங்களுக்கு எதுக்கு இதை சொல்லித் தருகிறீர்கள்னு கேட்டதற்கு - "ஏதாவது ஒரு காட்டுலே இரவிலே வழிதெரியாமே மாட்டிக்கிட்டாலோ, ஆபத்து காலத்திலோ இது உங்களுக்கு உதவும்" அப்படின்னு சொன்னாங்க.




நம்ம வடிவேலு ஜோக் அப்பவே வந்திருந்ததுன்னா நான் கேட்டிருப்பேன் - "நான் ஏண்டா நடுராத்திரியிலே (சுடு)காட்டுக்குப் போகணும்? அவ்வ்வ்".
இருந்தாலும் அப்ப நல்ல பிள்ளையா இருந்ததால் அப்படியெல்லாம் கேக்காமே ஒழுங்கா அவங்க சொன்னதை கேட்டுக்கிட்டேன்.




அதன்பிறகு பள்ளியில் 9வது படிக்கும்போது நடைபெற்ற ஒரு அறிவியல் கண்காட்சியில் இதை பயன்படுத்தப் போறேன்னு ஆசிரியரிடம் சொன்னேன். ஒரு switch boardல் இரண்டு பல்ப் மாட்டினோம். அதன் மேல் வெவ்வேறு நிற காகிதங்களை ஒட்டினோம். ஒரு பல்பை டிட் (புள்ளி) ஆகவும், மற்றொரு பல்பை டா (கோடு) ஆகவும் பயன்படுத்தி செய்தியை அனுப்ப முயற்சி செய்தோம். என் நண்பன் அதை இயக்கி மோர்ஸ் கோட் மூலம் செய்தியை அனுப்ப, நான் சற்று தூரத்திலிருந்து அந்த செய்தியை கண்டுபிடித்து சொல்வேன். அந்த கண்காட்சிக்காக ஒரு வாரம் பயிற்சி எடுத்திருந்தாலும், கடைசியில் சிறப்பு விருந்தினர் கொடுத்த செய்தியை நான் சரியாக கண்டறியாமல் வழிந்தது தனி கதை...




அதன் பிறகு வேறெங்கும் உதவாத அந்த மோர்ஸ் கோட் எனக்கு திருமணமான பிறகுதான் மிகவும் பயன்பட்டது. அது எப்படின்னு கேக்கறவங்களுக்காக - மோர்ஸ் கோட் பயன்படுத்தி நான் இன்னிக்கு அனுப்பின செய்தியை கொடுக்கிறேன்.




"டிட்டிட்டிட் இன்னிக்கு டிட்டா காபியிலே டிட்டிட் சர்க்கரை டாடா கொஞ்சம் டிட்டிட் கம்மியாயிருக்கே டாடாடா????"



பின்குறிப்பு:

என்னாச்சு, இன்னிக்கு இந்த மாதிரி ஒரு சீரியஸ் பதிவுன்னு கேக்கறவங்களுக்கு - நான் பதிவு எழுத ஆரம்பிச்சி இன்னியிலேந்து ரெண்டாவது வருஷம் ஆரம்பிச்சிடுச்சு... அதுக்குதான் இப்படி...

Read more...

Wednesday, December 24, 2008

வேண்டாம் வேண்டாம் எதுவுமே வேண்டாம்...!!!

போன வாரம் ஒரு நாள் தூங்கும்போது அமர்க்களம் படத்தில் எஸ்.பி.பி பாடும் 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டை கேட்டுக்கிட்டே படுத்தேன்.


படுத்தா தூக்கத்திலேயும் அதே பாட்டு சுத்தி சுத்தி அடிக்குது. சரி நல்ல பாட்டுதானேன்னு கனவிலே கேட்டுக்கிட்டு இருந்தா, திடீர்னு அந்த பாட்டோட உல்டா கேக்குது - அதுவும் என்னோட குரல்லே. வேறே வழியில்லே
- அதையும்தான் கேப்போம்னு கேட்டுட்டு உங்களுக்காக இந்த பதிவுலே போடறேன். நீங்களும் பாத்து படிச்சி சந்தோஷப்படுங்க.


இனிப்பா இருக்கற காபி வேண்டாம்
இனிப்பே இல்லாத சர்க்கரை வேண்டாம்


எழுத முடியாத பேனா வேண்டாம்
ஏற முடியாத ஏணி வேண்டாம்


காலை கடிக்கிற செருப்பும் வேண்டாம்
பல்லை உடைக்கிற லட்டு வேண்டாம்


சுட முடியாத தோசை வேண்டாம்
சூடாகாத பதிவும் வேண்டாம்


பத்த முடியாத தீப்பெட்டி வேண்டாம்
பாக்கெட் இல்லாத சட்டை வேண்டாம்

முடி இல்லாத தலையும் வேண்டாம்
முடிவே இல்லாத பாதை வேண்டாம்


திறக்க முடியாத ஃப்ரிட்ஜும் வேண்டாம்
மூட முடியாத குழாயும் வேண்டாம்


லொள்ளு பண்ணற நண்பர்கள் வேண்டாம்
லொள்ளு பண்ணாத நாயும் வேண்டாம்


ரௌண்டா இல்லாத பாலும் (ball) வேண்டாம்
ரௌண்டா இருக்கற அமௌண்டும் வேண்டாம்


இப்படி நான் பாடிக்கிட்டே வரும்போது ஒரிஜினல் பாட்டு மாதிரியே இந்த பாட்டுலேயும் டெம்போ மேலே மேலே போயிட்டே இருக்கு. நானும் விடாமே உச்சஸ்தாயியில் சஞ்சாரம் செய்து பாடிக்கொண்டே வரும்போது - குறட்டை சத்தம் ஜாஸ்தியாயிட்டே போகுதுன்னு அம்மாவும் பொண்ணும் சேந்து என்னை அடிச்சி எழுப்பிட்டாங்க. நான் அருமையா பாடினது இவங்களுக்கு குறட்டையா கேட்டிருக்கு. என்ன பண்றது. அவங்க கொடுத்து வெச்சது அவ்ளோதான்.


பாட்டு நடுவிலே என்னை எழுப்பிட்டதாலே, அந்த பாட்டை என்னால் கம்ப்ளீட் செய்ய முடியலே. அதனாலே இந்த பதிவுலே அதை போட முடியல. என்னை
தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க. அடுத்த தடவை முழு பாட்டையும் போடறேன்.


பிகு: கனவுலே என்னாலே சரியா கம்போஸ் பண்ணமுடியாததாலே அங்கங்கே தளை தட்டும். கண்டுக்காதீங்க..ஓகேவா..

Read more...

Tuesday, December 23, 2008

குளிர் காலத்தின் நன்மை தீமைகள்:

இங்கே பயங்கரமா குளிர் வாட்டி எடுக்குது. எங்களுக்கு இது மூன்றாவது குளிர் சீசனாகும். குளிரை பல பேர் வெறுத்தாலும் எனக்கு மிகவும் பிடித்த இந்த காலத்தின் நன்மை தீமைகளை இங்கே பட்டியலிடுகிறேன். இந்த பட்டியலில் உள்ளதைத் தவிர உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லவும்.


நன்மைகள்:


1. தினமும் சட்டையை அயர்ன் செய்ய வேண்டாம். அப்படியே போட்டுட்டு ஆபீசுக்குப் போயிடலாம். ஏன்னா, அதுக்கு மேல்தான் ஒரு குளிராடை
(ஸ்வெட்டர்) போடப்போறோமே.


2. அங்கங்கே சற்றே கிழிந்திருந்த சட்டைகளுக்கெல்லாம் நல்ல மவுசு வர்ற காலம் இது. ஸ்வெட்டர்தான் அதையெல்லாம் மறைச்சிடுமே.


3. மேலே குறிப்பிட்ட அதே காரணங்களுக்காக தொள தொள சட்டை மற்றும் ச்சின்னதாகிப் போன சட்டைகளையும் வெளியே எடுத்திடலாம்.


4. தனுஷ் மாதிரி ஒல்லியாக இருக்கற நானெல்லாம் மூன்று/ நான்கு அடுக்கு ஆடை அணிந்து கொண்டால்தான் கொஞ்சமாவது பார்க்கும்படி இருக்கும்.


5. தினமும் குளிக்கத் தேவையில்லை. இவ்ளோ அடுக்கைத் தாண்டியா வாசனை (கப்புன்னும் சொல்வாங்க!!!) வரப்போகுது?


6. குளிர் போட்டுத் தாக்கறதாலே குடும்பத்தோட வெளியே போறது குறைஞ்சிடும். அதனால் செலவும் கம்மியாயிடும்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?


7. வெளியே போகத் தேவையில்லாததாலே, நாம கணிணியே கதின்னு கிடக்கலாம். கண்டதையும் (காணாததையும்) படிக்கலாம்.


தீமைகள்:


மேலே சொன்ன ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும், குளிர் காலத்துலே சிற்சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யுது. அது என்னன்னா:


1. body sprayக்காக செலவழிக்கும் காசு ஜாஸ்தியாகும்.


2. தினமும் ஒரே அறையில் தங்கமணியோட அடைஞ்சி கிடப்பதால், ஏற்படும் போரும் (சண்டைன்னும் சொல்வாங்க!!!) அதனால் ஏற்படும் விழுப்புண்களும்
ஜாஸ்தியாகற காலமிது.


3. வீட்லே எவ்ளோ நாள்தான் சும்மா கணிணி முன் உக்காந்திருக்க விடுவாங்க. அப்பப்போ வீட்டு வேலைகளும் செய்ய வேண்டியிருக்கும்.


4. பத்து நிமிஷ தூரத்திலிருக்கிற ஆபீஸுக்குக் கிளம்பறதுக்கு அரை மணி நேரமாவது ஆகும். வீட்டுக்குத் திரும்ப வந்தபிறகும், ஆடையை மாத்தறதுக்கு
ரொம்ப நேரமாகும். (அந்த நேரத்துலே ஒரு பதிவாவது ஏற்பாடு செய்யலாம்!!!).


-----


மேலே சொன்னதெல்லாம் கற்பனைதான் என்னோட சொந்த கதையில்லேன்னு ஒரு தடவைக்கு ரெண்டு தடவை சொல்லிட்டு, இந்த பதிவை முடிச்சுக்கறேன்.. நன்றி.. வணக்கம்.

Read more...

Monday, December 22, 2008

ஆத்தா, நான் அமெரிக்காவுக்குக் கிளம்பறேன்!!!

இதுவரைக்கும் நான் இரண்டு தடவை சென்னையிலிருந்து அமெரிக்காவுக்குக் கிளம்பி வந்திருக்கிறேன். அந்த இரண்டு தடவையும் நான் பட்ட பிரச்சினைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதைத்தான் இங்கே சொல்லவிருக்கிறேன். மெதுவா படிங்க...

முதல் தடவை தனியாக பயணம்:

மூன்று மாதத்துக்கு மட்டுமே இந்த பயணமாகையால் குடும்பமில்லாமல் தனியாக (ஜாலியாக!!!) பயணம். விடிகாலை 2 மணிக்கு சென்னையில் விமானம். முதல் நாள் இரவு 10 மணிக்கு விமான நிலையத்திற்கு புறப்படணும். பெட்டியெல்லாம் கட்டியாகிவிட்டது.


அன்றைக்கு அலுவலகத்தில் வழியனுப்பு விழா நடத்திவிட்டார்கள். நண்பர்களுக்கு "நன்னீர்" பார்ட்டி முடிந்துவிட்டது. மாமனார் குடும்பத்திலிருந்து அனைவரும் ஆஜர். எல்லா ஊரிலிருந்தும் உறவினர்கள் / நண்பர்கள் தொலைபேசி வாழ்த்திவிட்டனர். நம் குடும்பத்தில் (பரம்பரையில்!!!) முதல்முதலாக வெளிநாடு போற பையன் அப்படின்னு எல்லாருக்கும் பெருமிதம். அக்கம் பக்கத்து வீட்டிலும் விஷயம் சொல்லியாகிவிட்டது.


இரவு 9 மணிக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு தொலைபேசி. என் மேனேஜர்தான். கூப்பிட்டு - இன்னும் எவ்வளவு நேரத்தில் விமான நிலையத்துக்குக் கிளம்பணும் - என்றார். சொன்னேன் "ஒரு மணி நேரம்". சொன்னார் " நான் மறுபடி தொலைபேசறேன். அது வரை கிளம்பாதே!!!".


வீட்டில் ஒரு பத்து பேர் கூடிய சிறு கும்பல் என்னை வழியனுப்பத் தயாராக இருந்தது. நான் யாரிடமும் தொலைபேசி வந்ததை சொல்லவில்லை. என்னதான் ஆகிறதென்று பார்ப்போமென்று விட்டுவிட்டேன்.


மறுபடி 9.30 மணிக்கு வந்த தொலைபேசியில் - அமெரிக்கா, நோய்டா, சென்னை - இந்த இடங்களிலிருந்து தலா 2 பேர் இருந்தார்கள். ஒரு பத்து நிமிடம் காரேபூரேவென்று பேசியபின் அனைவரும் முடிவு செய்தது - "சத்யா இன்னிக்கு கிளம்ப முடியாது. க்ளையண்ட் தகராறு பண்றார்".


முடிஞ்சது அமெரிக்கக் கனவு!!!


வீட்டில் எல்லோரும் என் கம்பெனியை திட்டித் தீர்த்தனர். உறவினர்களுக்கு தொலைபேசி இந்த விஷயம் சொல்லப்பட்டது. அடுத்த நாள் அலுவலகத்தில் மக்கள் முகத்தில் நான் எப்படி முழிப்பேன் என்று தெரியவில்லை என்று வீட்டில் சொன்னால் - என் அம்மாவோ - "அதை விடு. நான் அக்கம் பக்கத்து வீட்டில் என்ன சொல்வேன். எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்ப்பார்களே?" என்று கூறினார். எல்லோருக்கும் அவரவர் கவலை!!!.


பத்து நாள் கழித்து பிரச்சினைகள் தீர்ந்து மறுபடி நான் கிளம்பி அமெரிக்கா வந்த பிறகுதான் அனைவருக்கும் நிம்மதி...


இரண்டாவது தடவை குடும்பத்துடன் பயணம்:


முதல் தடவை பயணம் தடைபட்டதுபோல் ஆகிவிடக்கூடாது என்று எல்லோரும் எல்லாக் கடவுளையும் வேண்டிக் கொண்டிருந்திருந்தனர். நாங்கள் விமான நிலையத்துக்கு புறப்பட்டு வரும்வரை எங்கிருந்தும் எந்த தொலைபேசியும் வரவில்லை.


மறுபடி ஒரு 15 பேர் கொண்ட கும்பல் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். சிறிது நேரம் கழித்து நாங்கள் 3 பேர் மட்டும் உள்ளே போக, அனைவரும் விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போய் விட்டனர்.


விமான நிலையத்தில் செக்-இன் செய்வதற்காக நின்றிருந்தோம். நின்றிருந்தோம். ரொம்ப நேரம் நின்றிருந்தோம். பிறகுதான் தெரிந்தது - விமானம் நிரம்பிவிட்டது. எங்கள் மாதிரியே ஒரு 25 பேருக்கு அதில் இடமில்லையென்று. அங்கேயே எல்லோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் எந்த பிரயோஜனமில்லை. அடுத்த இரண்டு நாட்களுக்கு வேறெந்த விமானத்திலும் இடமில்லையென்று சொல்லிவிட்டனர்.


வேறு வழியில்லாமல் அங்கிருந்து வீட்டுக்குத் தொலைபேசி - நாங்கள் அமெரிக்கா போகவில்லை, வீட்டுக்குத் திரும்ப வருகிறோம் என்று சொல்லி - வீட்டுக்கு வந்து - அடுத்த இரண்டு நாள் யாருக்கும் தலைகாட்ட முடியாமல் வீட்டிலேயே கிடந்து - மறுபடி புறப்பட்டு வந்தோம்.

--------

இப்படியாக நாங்க கிளம்பி கிளம்பி திரும்ப வர்ற விளையாட்டு இரண்டு தடவை நடந்துடுச்சு...
அப்பவே சொல்லிட்டாங்க மக்கள் - "இன்னொரு தடவை ஊருக்குக் கிளம்பறேன்னா, முதல் தடவை நான் விமான நிலையத்துக்கு வரமாட்டேன். அடுத்த தடவை வர்றேன்"... அவ்வ்வ்....

Read more...

Monday, December 8, 2008

நொறுக்ஸ் - திங்கள் - 12/08/08


நேற்று தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சேனலில் extreme sportsல் - மேடு பள்ளம் பாறை சகதி இவற்றுக்கு நடுவில் விழுந்து வாரி பைக் ஓட்டியதைப் பார்த்து எங்களுக்கும் அதில் பங்கேற்க வேண்டும் என்ற ஆவல் பிறந்துவிட்டது. அதற்கான தயார் முயற்சியில் சஹானா. படம் கீழே.


----


ஒரு வாரமாக எங்கள் வீட்டில் எல்லோரும் புதுசா கல்யாணம் ஆன பொண்ணைப் போல் இருக்கோம். விவரம் கடைசியில்.


----


இங்கே அமெரிக்க மேனேஜர்கள் தினமும் வீட்லே 6 மணிக்கெல்லாம் எழுந்து 1.5 மணி நேரம் வண்டி ஓட்டிக்கிட்டு 8 மணிக்கு அலுவலகத்துக்கு வந்துடுவாங்க. நமக்கு இவ்ளோ சீக்கிரமெல்லாம் போய் பழக்கமேயில்லை. நான் ஆர அமர 9 மணிக்கு சஹானாவை பள்ளியில் விட்டுவிட்டு 9.30 மணிக்குத்தான் போவேன்.


இதுவே சாயங்கலாம் அவங்க 4.30 மணிக்கு வாக்குலே கிளம்பும்போது, சரியா 15 நிமிஷம் கழிச்சி நானும் கிளம்புவேன். அது எதுக்கு 15 நிமிஷம் கழிச்சுன்றீங்களா.. அதுலே ஒரு சின்ன கணக்கு இருக்கு... பை எடுத்துக்கிட்டு மேனேஜர் வெளியே போனார்னா, ஓய்வறையில் ஒரு 5 நிமிஷம், கார் நிறுத்துமிடத்துக்கு நடந்து போக ஒரு 5 நிமிஷம், காரை எடுத்துக்கிட்டு மலை மேலேயிருந்து கீழிறங்கி போக ஒரு 5 நிமிஷம் - ஆக மொத்தம் 15 நிமிஷம். (எங்க ஆபீஸ் ஒரு குட்டி மலைமேலே இருக்கு!!!).


ரொம்ப நாளா இந்த கேல்குலேஷன் சரியா போயிட்டிருந்தது. போன வாரம் என்ன ஆச்சுன்னா, மேனேஜர் கிளம்பி போய் 15 நிமிஷம் கழிச்சி (மணி 4.40) நான் வெளியே வரும்போது - எதையோ மறந்து வெச்சிட்ட மேனேஜர் திரும்பி வந்துக்கிட்டிருந்தாரு. என்னைப் பாத்து - "என்ன, நான் கிளம்பிப் போயிட்டேன்னு நினைச்சியா? ஹாஹாஹா"ன்னாரு. நான் "அதில்லே ஸ்டீவ், 5 மணிக்குத்தான் எப்பவும் கிளம்புவேன் (!!). இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் போறேன். அவ்வளவுதான்" அப்படின்னேன்.


"சரி சரி.. சும்மாத்தான் கேட்டேன். என் மேனேஜர் கிளம்பிப் போய் ஒரு மணி நேரமாயிடுச்சு. நான் இன்னும் இங்கே என்ன பண்றேன்னு எனக்கே தெரியலே"ன்னார். அவ்வ்.. எல்லோருமே இப்படித்தானாடான்னு நினைச்சிக்கிட்டு "பை" சொல்லிட்டு ஜூட் விட்டுட்டேன்...


-------------


மக்கள்ஸ், இன்னியிலேந்து ஒரு வாரத்துக்கு வலைச்சரத்துலே எழுதறேன்... அங்கே வந்து பாத்துடுங்க... நன்றி... தவிர கொஞ்சம் பிஸியாக இருப்பதால் பூச்சாண்டியில் அடுத்த பதிவு அடுத்த வாரம்தான் இருக்கும்.


-----


எல்லோருக்கும் தொண்டையில் கிச்கிச். அதனால் புதுசா கல்யாணம் ஆன பொண் - புருஷனை கூப்பிடறாப்போல் அடிக்கடி 'ம்கூம். ம்கூம்' அப்படின்னு கனைச்சிக்கிட்டிருக்கோம். இப்பல்லாம் எந்த பொண்ணும் அப்படி யாரும் கூப்பிடறதில்லைன்னு சொன்னீங்கன்னா, நான் விடு ஜூட்.
-----




Read more...

Friday, December 5, 2008

சந்தில் சிந்து...!!! பகுதி 2 of 2...!!!


கைனடிக் சேலஞ்சர்:



ஒரு கைப்பேசி ஓசியில் கிடைக்குதுன்றதுக்காக என் பழைய கம்பெனியில் இந்த வண்டியை எனக்கு வாங்கிக் கொடுத்தாங்க. சென்னையில் மிகச்சிலரே வைத்திருக்கும் அபூர்வ மாடல் வண்டி இது. நிற்க. வழக்கமான வழக்கப்படி வண்டி வாங்கி பூஜை போட்டவுடன் செய்த முதல் காரியம் அந்த ரெண்டு கண்ணாடியையும் கழற்றியதுதான்.


ஒரு முறை தங்கமணி பின்னாலிருக்க, அவரை அலுவலகத்திற்கு விடப்போய்க்கொண்டிருந்தேன். கத்திப்பாரா - போரூர் ரோடில் கிண்டி அருகிலேயே ஒரு சந்தில் க்ராஸ் செய்ய வேண்டும். சரியான ட்ராஃபிக். பல்வேறு வண்டிகளுக்கிடையே புகுந்து புறப்பட்டு ரோட்டை க்ராஸ் செய்தபோது சடாரென்று ஒரு ஆட்டோ வந்துவிட்டது. சிந்து பாட முயற்சித்தபோது சாலையோரத்தில் இருந்த மணல் வழுக்கி சர்ர்ர்ர்ரென்று போய் விழுந்தோம்.


சமாளித்து எழுந்து நின்று, ஆடைகளில் மட்டுமல்ல, மீசையிலும்கூட மண் ஒட்டவில்லையென்று சொல்லிக்கொண்டு போனோம்.

கார் (இந்தியாவில்):

நங்கநல்லூர் ஆஞ்சனேயா பள்ளியில் கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும்போது ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது முதலில் நம்மிடம் சுத்தமாக இல்லாத ஒன்றைத்தான். அது காரோட்டும்போது பொறுமையா இருக்கணும்றது.

ஒரு முறை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தபோது எனக்கு முன்னால் ஒரு ஆட்டோ மிகவும் மெதுவாக போய்க்கொண்டிருந்தது. எதிர்ப்பக்கத்திலிருந்து ஒரு பேருந்து வந்துகொண்டிருந்தது. இப்போ பதிவோட தலைப்பை மறுபடி பாத்துக்குங்க... அப்படி செய்றேன்னு சொல்லி சர்ருன்னு ஒரு க்ளோஸ் ப்ராக்கெட் (")") போட்டா மாதிரி வண்டி ஓட்டி, ஆட்டோவுக்கும் பேருந்துக்கும் நடுவில் போய் அந்தப் பக்கம் நின்னேன்.

வண்டியில் அமர்ந்திருந்த சக கற்றுக்கொள்பவர்கள் படபடவென்று கைதட்ட, கூட இருந்த ஆசிரியரோ வழக்கம்போல் #$@#$ இது உங்கப்பன் வீட்டு வண்டியா, நீ கார் ஓட்டறியா இல்லே ப்ளேன் ஓட்டறியா அப்படி இப்படின்னு திட்டி தீர்த்துட்டார்.

இந்த ஆட்டோ-பேருந்து போல் பல காம்பினேஷன்களுக்கு 'நடுவில்' வண்டி ஓட்டி (மாடு-மாடு, மாடு-சைக்கிள், பேருந்து-சுவர்) கொஞ்சம்போல கற்றுக் கொண்டு அமெரிக்கா வந்து சேர்ந்தேன்.


கார் (அமெரிக்காவில்):


இங்கே சந்துலே சிந்தெல்லாம் பாட முடியாது. ஒருத்தர் பின்னாலே ஒருத்தர்தான் போகணும். அதெல்லாம் நாம விட்டுடுவோமா.. மேலே படிங்க.


ஒரு வாரயிறுதியில் ஊர் சுற்றிப்பார்க்கப் போன இடத்தில் வண்டியை நிறுத்த முற்பட்டபோது... ஏற்கனவே அங்கு நின்றிருந்த காருக்கும், சுவருக்கும் நடுவே இருந்த இடைவெளியில் புகுந்து போயிடலாம்னு நினைச்சி... அந்த கார் மேலே இடிக்கக்கூடாதுன்னு கவனமா இருந்து... வலது பக்கம் சுவற்றில் 'சர்ர்ர்ர்'ன்னு என் காரை தேச்சிட்டேன்.


மிகச்சிறிய டேமேஜே ஆயிருந்தாலும், எனக்கு மேரேஜ் ஆகியிருந்த காரணத்தால், அன்னிக்கு திட்டு அதிகமா விழுந்தது...:-((


அன்னியிலேர்ந்து வழியில் மிகப் பெரிய இடைவெளி இருந்தாலும், நின்னு நிதானமா போறதால் - சந்தில் சிந்து பாடறேன்னு யாரும் என்னை சொல்ல முடியாது.


ரெயில்:


பதிவுக்காக இவ்ளோ விஷயத்தையும் எழுதியபிறகு - தங்ஸிடம் எல்லாத்தையும் சொன்னேன். அதுக்கு அவங்க - "நல்ல வேளை. நீங்க இன்னும் ரெயில் ஓட்டலே. அப்படியே ரெயில் ஓட்ட உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சாலும், இப்படித்தான் குறுக்கும் நெடுக்குமா போய் ஏதாவது பிரச்சினை பண்ணிக்கிட்டே இருப்பீங்க" - அப்படின்னு நல்லபடியா வாழ்த்துனாங்க...!!!


Read more...

Thursday, December 4, 2008

சந்தில் சிந்து...!!! பகுதி 1 of 2...!!!


சந்தில் சிந்து பாடறியா? - நீங்க மத்தவங்களையோ / மத்தவங்க உங்களையோ வாழ்க்கையில் ஒரு தடவையாவது சொல்ல கேட்டிருப்பீங்க.

ஒரு நாள் மல்லாக்க படுத்து விட்டத்தைப் பாத்துக்கிட்டு இருந்தபோது, நான் சைக்கிள் கத்துக்கிட்ட நாள்லேந்து கார் ஓட்டற இந்த நாள் வரைக்கும் எப்பல்லாம்/எப்படியெல்லாம் சந்துலே சிந்து பாடியிருக்கேன்னு யோசிச்சேன். அதன் விளைவுதான் இந்த தொடர் பதிவு. ரெண்டு பகுதிகளா இன்னிக்கும் நாளைக்கும் வருது.

தவறாம படிச்சி உங்க பொன்னான வாக்குகளை / பின்னூட்டங்களை அள்ளி வீசுங்க.

ச்சின்ன சைக்கிள்:

ச்சின்ன வயசுலே ச்சின்ன சைக்கிள் விட கத்துக்கிட்டப்போ, சந்தே தேவையில்லை. பெரிய தெருவில் போகும்போதுகூட வளைச்சி வளைச்சி
ஓட்டி யார் மேலேயாவது இடித்துவிடுவேன். அட, கத்துக்கும்போது இதெல்லாம் சகஜம்தானே...


ஒரு நாள் எங்க பெரியப்பா வெள்ளையும் சொள்ளையுமா அலுவலகத்துக்கு நடந்து போய்க்கொண்டிருந்தார். அவர் கிட்ட்ட்ட்டே போய் சைக்கிள் ஓட்டி காட்டறேன் பேர்வழின்னு அவர் மேலேயே இடிச்சி, வேட்டியில் டயர் டிசைன் போட்டுவிட்டேன். எதுவுமே திட்டாமே சிரிச்சிக்கிட்டே அவர் திரும்ப வீட்டுக்குப் போய் வேட்டி மாத்திகிட்டாலும் - இப்போ நினைச்சிப் பாத்தா கண்டிப்பா அன்னிக்கு மனசிலே ஏதாவது திட்டியிருப்பார்னு தோணுது.


பெரிய சைக்கிள்:




சென்னையிலிருந்த தண்ணீர் கஷ்டத்தினால் வாரம் இருமுறை பீச்சுக்கு சென்று அங்கிருக்கும் கிணற்றிலிருந்து குடிநீர் எடுத்து வருவோம். சைக்கிள் கேரியரின் இருபக்கத்திலும் ப்ளாஸ்டிக் குடமும், மேலே ஒரு எவர்சில்வர் குடமும் கட்டிக்கொண்டு போவோம்.


அப்படி ஒரு தடவை தண்ணீர் நிரப்பிக்கொண்டு மூன்று குடத்துடன் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தேன். வீட்டுக்கருகில் ஒரு கன்றுக்குட்டி நின்றுக் கொண்டிருந்தது. அதற்கும் வீட்டு ப்ளாட்பாரத்துக்கும் சிறிய இடைவெளியே இருந்தது. நம்ம சைக்கிளுக்கு அந்த சின்ன கேப் போதும்னு நினைச்சி அதில் போக - நம்மை தாக்க வருகிறான் என்றெண்ணி அந்த கன்றுக்குட்டி டக்கென்று திரும்பியது.

சரி மொத்தமாக சைக்கிளோடு நான் கீழே விழுந்திருப்பேன்னு நினைச்சீங்களா. அதுதான் இல்லே. நான் ஸ்டெடியா நின்றிருக்க, பின்னாலிருந்த எவர்சில்வர் குடம் தண்ணீரோடு 'டம்'. எங்க அம்மாவுக்கு அந்த குடம் சப்பையானதுகூட பரவாயில்லை - ஆனா அவ்ளோ தண்ணியும்
வீணாப் போச்சேன்னுதான் கவலை...:-((

டிவிஎஸ் சாம்ப்:




ஓட்டிப்பார்றான்னு நண்பன் கொடுத்தபோது சிலபல பேரை அன்னிக்கு தட்டப்போறேன்னு நினைக்கவில்லை. புது வண்டி. சீப்பா கிடைக்குதேன்னு ரெண்டு பக்கமும் 'பின் பக்கம் பார்க்கும்' கண்ணாடியை வாங்கி மாட்டியிருந்தான் அவன். நிறைய வருஷம் சைக்கிள் ஓட்டிய
முன்னனுபவம் இருந்ததால், நீ பின்னாடி உக்காரு நான் ஓட்டறேன்னு சொல்லிட்டு ஓட்ட ஆரம்பித்துவிட்டேன்.


எல்லாம் நல்லாத்தான் போயிட்டுயிருந்தது. 'திடீர்னு' நடுவில் ஒரு காய்கறி மார்க்கெட் வந்துவிட்டது. நம்ம ஊர்லே மார்க்கெட்லே கும்பலுக்கு
கேக்கணுமா.. எங்க வண்டி கண்ணாடி, வண்டியை விட கொஞ்சம் வெளியே நீட்டி இருந்ததால், ஒரு நாலஞ்சு பேரை தட்டி விட்டுக்கிட்டே
போயிட்டிருந்தேன். அதுலே சில பேர் நல்லாவும், பல பேர் நல்ல்ல்லாவும் திட்ட, திட்டத்தெரியாத ஒரு மாடு அதன் கொம்பின் உதவியால்,
எங்கள் வண்டியை முட்டி நிறுத்தியது.


கண்ணாடி இருந்தா இனிமே உன் வண்டியே ஓட்டமாட்டேன்னு சத்தம் போட்டு முதல்லே அவன் வண்டியிலிருந்து அந்த ரெண்டு
கண்ணாடியையும் கழட்ட வெச்ச பெருமை என்னைத்தான் சேரும்.

-------

பைக்கிலிருந்து பெரிய வண்டிகளில் சந்தில் சிந்து - நாளைய பதிவில்!!!

Read more...

Wednesday, December 3, 2008

தங்கமணியிடம் எப்போல்லாம் பேசலாம்?

1. கணிணி restart ஆகும் அந்த ஐந்து நிமிடம் சும்மாத்தானே இருப்போம். அப்போ பேசலாம்.

2. தொலைக்காட்சியில் ஏதாவது பார்க்கும்போது, விளம்பர இடைவேளையில் போரடிக்கும். அப்போ பேசலாம்.

3. வண்டி போக்குவரத்து சிக்னலில் நிற்கும்போது, செய்வதற்கு எந்த வேலையும் இல்லை. அப்போ பேசலாம்.

4. மின் தூக்கியில் ஏறும்போதோ இறங்கும்போதோ ஓரிரு நிமிடங்கள் தப்பித்து ஓடமுடியாது. அப்போது கொஞ்சம் பேசலாம்.

5. கோவிலிலோ வேறெங்காவதோ வரிசையில் நிற்கும்போது பேசியே ஆகவேண்டும்.

6. சுடச்சுட சாதம் தட்டில் இருக்கும்போது சாப்பிட முடியாது. அது ஆறும் வரைக்கும் ஏதாவது பேசலாம்.

7. வேறு யாரிடமாவது தொலைபேசியில் கடலை போடும்போது, அவர்கள் நம்மை holdல் போட்டுவிட்டால், அந்த ஒரு நிமிடம் வேறே என்ன
செய்ய முடியும் சொல்லுங்க? அப்போ தங்கமணியிடம் பேசலாம்.

8. ஏதாவது ஒரு உணவகத்துக்குப் போய் போண்டா ஆர்டர் செய்து - அது வர நேரமானா, அந்த இரண்டு நிமிடம் பேசலாம்.

9. அலுவலகத்துலே ஏதாவதொரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டால் - தங்ஸுக்கு தொலைபேசி பேசலாம். அப்போது அந்த பிரச்சினை சிறியதாக தோன்ற வாய்ப்பிருக்கிறது.

10. ஆற்காட்டார் தயவு செய்தார்னா, அந்த சமயமா பாத்து வேறே எதுவும் புத்தகம் கைவசம் இல்லேன்னா, அந்த சிறிது நேரம் தங்ஸிடம் பேசலாம். என்ன? ஆற்காட்டார் என்னிக்கு 'சிறிது' நேரமா தயவு பண்ணியிருக்காருன்றீங்களா? நான் வரலே இந்த விளையாட்டுக்கு.


யாராவது மேலே சொன்ன இந்த சமயங்களைத் தவிர வேறே எப்பவாவது 'வளவள'ன்னு பேசுவீங்களா என்ன?

Read more...

Tuesday, December 2, 2008

வட அமெரிக்க பதிவர் சந்திப்பு - பகுதி 2 of 2





ட்விட்டர்: நம்ம ஊருலே குட் மார்னிங், குட் நைட்ன்னு எஸ்.எம்.எஸ் பண்ணிக்கிட்டேயிருப்பாங்க. அதே மாதிரி இங்கே 'பெருந்தலைகள்' எல்லாரும் ட்விட்டர்லேயே இருக்காங்க. ப்ளாக்கிங்க ஒரு நாள் போட்டின்னா - ட்விட்டரை 20 - 20 மேட்ச் மாதிரி நினைக்கறாங்க. இளா எல்லா பதிவர்களையும் ட்விட்டருக்கு வாங்கன்னு அழைப்பு விடுச்சாரு. நமக்கு அலுவலக நெட்வர்க்லே ட்விட்டர் வேலை செய்யலே. அதனால் அங்கே எதையும் படிக்க முடியறதில்லே. கு.ப வீட்லேயிருக்கும் போதாவது ஏதாவது பாக்கணும்.


குழுப்பதிவுகள்: வலைப்பதிவுகளில் குழுப்பதிவுகள் ஏன் தோல்வி அடைகின்றன - என்று அலசப்பட்டது. பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டினர். accountability இல்லாதது, கமெண்ட் மாடரேஷன் மற்றும் குழுவில் எழுதறதுக்கு நம்ம சொந்த பதிவுலேயே எழுதிடலாம்ன்ற மனப்பான்மைதான் குழுப்பதிவுகள் தோல்வியடையறதுக்கு காரணங்கள் என்று கூறப்பட்டது.


சமூகசேவை: வலைப்பதிவுகளில் புதிதாக வருபவர்களுக்கு - இங்கு என்ன சமூகசேவை நடக்கிறது, எதில் பங்கு கொள்ளலாமென்ற தகவலே தெரியவில்லை - இதற்கு தமிழ்மணத்தில் தனியாக இடம் ஒதுக்கலாமா? என்றெல்லாம் மொக்கைச்சாமி கேட்டார். இதற்கு பதிலளித்த கேயாரெஸ்/இளா - பல உதவிகள் செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினர். அதை தனிப்பட்ட முறையில் யாராவது எடுத்து செய்கிறார்களே ஒழிய, ஒரு குழுவாக எடுத்து செய்யமுடியவில்லை என்று கூறினர்.


மோகன் கந்தசாமி -> புதிதாக வருபவர்களின் பதிவுகளை, பெருந்தலைகள் விமர்சித்து எழுதி அவர்களை ஊக்கப்படுத்தலாமே என்று கேட்டார். செய்யலாம் என்று பதில் வந்தது. மோகன் -> 'ச்சும்மா டமாஷ்'னு இல்லாமே, இதை எப்படி செய்யலாம்னு பாருங்க... காத்து வாங்கிட்டிருக்கற பல புதிய நல்ல கடைகளை விமர்சனம் செய்ய வைங்க.. நல்லா இருக்கும்....:-)


நசரேயன் -> இவரு பயங்கரமான ஆளா இருக்காரு (பாக்கறதுக்கு இல்லே!!!). திருநெல்வேயில் இருந்தபோது - இரண்டரை மணி நேரமுள்ள நாடகத்துக்கெல்லாம் காமெடி ட்ராக் எழுதியிருக்காரு. அந்த மாதிரி இங்கே பதிவுலேயும் நிறைய எழுதுங்கன்னு அவர்கிட்டே வேண்டுகோள் வைக்கப்பட்டது.


சத்யராஜ்குமார்: ஏகப்பட்ட சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதிய எழுத்தாளர். இவரை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. அவரது கதைகளில் பெரும்பாலும் அமெரிக்க வாழ்க்கையை எதிர்மறையாகவே சொல்வதன் காரணம் என்ன என்று கேட்டபோது - இந்தியாவில் இருப்பவர்கள் அமெரிக்க வாழ்க்கை என்றால் சொர்க்கம் என்றே நினைக்கின்றனர். ஊடகங்களும் இங்கே இருக்கும் பிரச்சினைகளை சொல்வதில்லை. அதை என் கதைகளின் மூலம் சொல்கிறேனென்று சொன்னார். இதை நான் அமெரிக்கா வருவதற்கு முன்னாலேயே ஏன் சொல்லவில்லை என்று நினைத்தேன். சொல்லவில்லை.... :-)


தமிழோவியம் கணேஷ் மற்றும் ஜெய்: இவங்க ரெண்டு பேரும் நிறைய படிக்கறாங்க. எல்லாவற்றையும் படிக்கறாங்க... மொக்கைப் பதிவுகளைத் தவிர்த்து... அதனாலே என்னோட பதிவுகளையும் படித்ததில்லைன்னு நினைக்கிறேன்... ச்சின்னப் பையனின் இருக்கும் அந்த 'ச்' போட்டு எழுதுவது நீங்கதானா? அப்படின்னு கொலவெறியோட பாத்தாங்க.... அவ்வ்வ்...


மேலே படத்துலே இடது பக்கத்திலிருந்து இருப்பவர்கள்தான் முறையே கணேஷ் சந்திரா மற்றும் ஜெய்.


மருத நாயகம்: பல நல்ல பதிவுகள் எழுதவேண்டுமென்று வந்த இவர் கடை பயங்கரமாக காத்து வாங்கியதால், இவர் மொக்கை போடும் நிலமைக்கு வந்துவிட்டார் - இதை அவரே சொன்னார். (எஸ்.வி.சேகர் நாடகத்துலே வருமே - இவர் பேரு ஏகலைவன். பெரிய எழுத்தாளராம். அவரே சொன்னார் - அப்படி படிங்க!!!). அப்படி எழுதிய மொக்கையொன்று உடனே 'சூடாகி' விட்டதையும் சொல்லி 'சந்தோஷப்பட்டார்'. ஹிஹி..


கொத்ஸ் குறுக்கெழுத்து: விடைகள் தெரிந்தபிறகே கேள்விகள் புரிவதாக இளா குறிப்பிட்டார். அதனால் அந்த பக்கமே போகவில்லை என்றும் தெரிவித்தார். குறுக்கெழுத்துக்கு '+' குத்தாவிட்டாலும் பரவாயில்லை யாரோ '-' குத்திவிட்டனர் என்று கொத்ஸ் சொன்னதற்கு, இளா பாய்ந்து சொன்னார் ' அது நானில்லை.. அது நானில்லை'. எல்லோரும் நம்பிவிட்டனர். இனிமேல் 'க்ளூ'வை சுலபமாக வைப்பதாகவும், இந்த சந்திப்புக்கு வந்தவர்களுக்கு மட்டும் விடைகளை முன்கூட்டியே அனுப்பி வைப்பதாகவும் (!!!) கொத்ஸ் சொன்னார்.


இன்னும் இதே மாதிரி பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன.


என்னைத் தவிர எல்லோரும் லோக்கல் ஆளுங்க என்பதால் (லோக்கல் = உள்ளூர். தப்பர்த்தம் பண்ணிக்காதீங்க!!!) - நாந்தான் 'மீ த பஷ்ட் எஸ்கேப்' என்று கிளம்பியபோது மணி 9.00. போக்குவரத்தில் சிக்கி வீட்டுக்கு வந்தபோது மணி சரியாக நள்ளிரவு 12.


இதைத்தவிர சுவாரசியமாக நம்ம மோகன் ஏற்கனவே பதிவு போட்டுட்டார். அங்கேயும் போய் படிச்சிடுங்க.

Read more...

Monday, December 1, 2008

வட அமெரிக்க பதிவர் சந்திப்பு - பகுதி 1 of 2


(இ-வ): சுதன் (பார்வையாளர்) இளா (விவசாயி), சம்சுதீன் (மருத நாயகம்) மற்றும் இலவசம்.



(இ-வ): கேயாரெஸ், நசரேயன், மோகன் கந்தசாமி, சத்யராஜ்குமார்



(இ-வ): மேலே குறிப்பிட்டபடி



(இ-வ): சஹானா (பார்வையாளர்), ரோஹன் (பார்வையாளர்), சத்யா (ச்சின்னப் பையன்)

(இ-வ): ஜெய் (பார்வையாளர்), மொக்கைச்சாமி
-----

மேலே குறிப்பிட்ட (இ-வ) அப்படின்னா இட்லிவடையோ, இ.வாயோ இல்லே... சரியா படிங்க.. இடமிருந்து வலம்.
------
சிறப்பு விருந்தினர் திரு.பாஸ்டன் பாலா சந்திப்புக்கே வராமல் மட்டம் போட்டுவிட்டார். அவரைக் காணவேண்டுமென்று ஆவலுடன் காத்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சார்பாக மென்மையாக ஒரு கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
-----
5.15 மணிக்கு முதல்முதலா நாந்தான் போய் கதவை திறக்காத உணவகத்தின் முன் தர்ணா செய்து, கடையை திறக்கச் செய்தேன். மெதுவாக 5.45 மணியிலேர்ந்து மக்கள் வர ஆரம்பித்தனர்.
6.30 மணிக்கு மும்பை பிரச்சினையில் பலியானவர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலியுடன் ஆரம்பித்த சந்திப்பில் பல்வேறு சூடான பிரச்சினைகள் அலசப்பட்டன.
இரவு உணவில் கண்டிப்பாக போண்டா இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.
-----
இன்னொரு முக்கியமான நபர் இருக்கிற படம் காமிராலேந்து வரமாட்டேங்குது... நாளைக்கு அதை பிச்சிப் போட்டு, சந்திப்பின் மத்த விவரங்களையும் சொல்றேன்.

Read more...

Friday, November 28, 2008

நொறுக்ஸ் - வெள்ளி - 11/27/08


கார்லே போகும்போது என்னல்லாம் செய்யலாம் அப்படின்னு கொஞ்ச நாள் முன்னாலே பார்த்தோம். மக்களும் நிறைய ஐடியா சொன்னாங்க. ஆனா எதுவுமே செய்யாமே வெறும் சிந்தனை மட்டும் செஞ்சிண்டே போனா என்ன ஆகும்னு பாத்ததிலே, தனியா சிரிச்சிண்டு போனதுதான் மிச்சம். சரி, அப்படி என்னதான் சிரிக்கமாதிரி சிந்தனை பண்ணேன்னு கேக்கறீங்களா? கீழே படிங்க..

என் தம்பி ஆதர்ஷோட (தெரியாதவங்களுக்கு: குட்டி வெண்பூ) ஸ்கூலுக்கு போகணும். அந்த நடிகையை பாக்கறதுக்கு இல்லே.. ஸ்கூல் எப்படி நடத்தறாங்கன்னு பாக்கறதுக்காகத்தான்.

ஏதாவது பெரிய நடிகர் படம் வெளியாகுற அன்னிக்கு அடிச்சிபிடிச்சு கூட்டத்தில் போய் முதல் ஆளா டிக்கெட் வாங்க முயற்சி பண்ணனும். அப்படி போய், கவுண்டர் திறந்துவுடனே அவர்கிட்டே நூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கான்னோ அடையாறுக்கு எந்த பஸ்லே போகணும் அப்படின்னு கேக்கணும்.

சென்னையில் ஏதாவது ஒரு ட்ராபிக் போலீஸ்காரரிடம் போய் - "சார், நீங்க செய்ற சேவை மிக மகத்தானது. உங்களோட ஒரு போட்டோ எடுத்துக்கணும்" அப்படின்னு சொல்லிட்டு நண்பன் "சே, சீஸ்ஸ்ஸ்ஸ்" அப்படின்னு சொல்லும்போது, திடீர்னு ஒரு 50 ரூபாய் எடுத்து அந்த போலீஸ்கிட்டே "சார், இத பிடிங்க" அப்படின்னு குடுக்கணும்.

என் மாமனாரை ஒரு திரைப்படம் எடுக்கச் சொல்லணும். அந்தப் படத்துக்காக பாட்டு எடுக்கற சாக்குலே ஒரு 25 நாடுகளுக்கு போயிட்டு வந்துடணும்.

------------

எங்கேயோ கேட்ட ஜோக் ஒன்று:

மாட்டுச் சந்தையில் ஒருவர் மாடு வாங்க வருகிறார்.

ஏங்க, இந்த மாடு எவ்வளவு?

எது கேக்கறீங்க, வெள்ளையா அல்லது பழுப்பா?

வெள்ளை மாடே சொல்லுங்க.

அது 5000ரூ.

அப்ப பழுப்பு?

அதுவும் 5000ரு தான்.

இந்த மாடுங்க எவ்ளோ பால் கறக்கும்?

எது கேக்கறீங்க, வெள்ளையா அல்லது பழுப்பா?

வெள்ளை மாடே சொல்லுங்க.

அது நாளைக்கு ஒரு பத்து லிட்டர் கறக்கும்.

அப்ப பழுப்பு?

அதுவும் நாளைக்கு ஒரு பத்து லிட்டர் கறக்கும்.

இந்த மாடுங்களுக்கு எவ்ளோ வயசாச்சு?

எது கேக்கறீங்க, வெள்ளையா அல்லது பழுப்பா?

வெள்ளை மாடே சொல்லுங்க.

அதுக்கு ஆச்சு அஞ்சு வயசு.

அப்ப பழுப்புக்கு?

அதுக்கும் அஞ்சு வயசுதான் ஆகுது.

(இதே மாதிரி பல கேள்விகள் கேட்டபிறகு)

என்னங்க, எது கேட்டாலும் முதல்லே வெள்ளையா பழுப்பான்றீங்க... ஆனா பதில் ரெண்டுதுக்கும் ஒண்ணுதானே சொல்றீங்க?

ஏன்னா, வெள்ளை மாடுங்க என்னுது.

அப்ப பழுப்பு மாடுங்க?

அதுவும் என்னுதுதான்.

(கேள்வி கேட்டவர் அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறார்).

--------------

நாளைக்கு வட அமெரிக்கா பதிவர் சந்திப்பு நியூ ஜெர்ஸியில் திட்டமிட்டபடி நடைபெறுகிறது. அறிவிப்புக்கு இங்கே செல்லவும். இந்த பக்கம் இருக்கும் பதிவர்கள், அனானிகள் கண்டிப்பாக வரவும்.

------------

சென்ற வாரம் ஒரு குழந்தையின் பிறந்த நாள் விழாவுக்கு சென்றிருந்தோம். அங்கு வந்திருந்த இன்னொரு தமிழ் தெரியாத தமிழ் சிறுமியிடம் தங்ஸ் "கத்தக்கூடாதும்மா. பாப்பா தாச்சி" என்றார். அந்த சிறுமி "what is தாச்சி?" என கேட்க, தங்ஸோ "பாப்பா தாச்சி means பாப்பா sleeping" என்றார். அப்போது நான் "அப்போ புள்ள தாச்சின்னா?" என்று கேட்டேன். அது புரியாமல் அந்த சிறுமி ஓடிவிட, தங்ஸின் பார்வையை பார்க்க முடியாத நானும் வேறுபக்கம் ஓடினேன்.


----------


Read more...

Thursday, November 27, 2008

கேப்டன் மென்பொருள் நிபுணரானால்!!!

கேப்டன் மேனேஜரா இருந்து செய்த ஒரு மென்பொருள்லே ஒரு பெரிய பிரச்சினை. போட்டுத் தாக்கறதுக்கு கம்பெனி முதலாளி கூப்பிட்டனுப்புகிறார்.

இனி கேப்டன் - முதலாளி பேச்சு.

ஏன் இந்த மென்பொருள்லே இவ்ளோ தவறுகள் வந்துச்சு?

செய்தவனை (developer)ஐ கேளுங்க.

இவ்ளோ தவறுகள் வரும்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?

தெரியும்.

ஏன் அப்பவே எங்களுக்கு சொல்லலே?

முதல்லே எனக்கு பதவி உயர்வு கொடுங்க. அப்போதான் சொல்வேன்.
இப்பவே சொன்னா, அதை என்னோட மேனேஜர் தன்னோட ஐடியான்னு
சொல்லிடுவாரு.

ஆனாலும், சில அருமையான தவறுகளை கண்டுபிடிச்சிருக்கீங்க. எப்படி?

testerஐ கேளுங்க.

க்ளையண்ட் சொல்றதெல்லாம் உங்களுக்கு புரியுதா இல்லையா?

requirement வாங்குனவன கேளுங்க.

எதைக் கேட்டாலும் வேறே யாரையோ கேளுன்றீங்களே, உங்க டீம்லே இப்போ எவ்ளோ பேரு இருக்காங்க. அவங்க யார்யாரு?

இப்போதைக்கு என் டீம்லே ரெண்டு பேர்தான். அவங்க என் மனைவி, மச்சான் தான். எல்லாத்தையும் அவங்கதான் பாத்துக்கறாங்க.

எல்லாத்தையும் அவங்கதான் பாத்துக்கறாங்கன்னா, உங்களுக்கு இந்த மென்பொருளைப் பத்தி என்னதான் தெரியும்?

முன்னாடியே சொன்னா மாதிரி எனக்கு பதவி கொடுங்க. அதுக்கப்புறம்தான் நான் எதுவும் வெளிப்படையா சொல்வேன்.

பதவி உயர்வு, பதவி உயர்வுன்றீங்களே, அப்படி பதவி உயர்வு கொடுத்தா வேறே என்னதான் செய்வீங்க?

இந்த ப்ராஜெக்ட்லேந்து வரக்கூடிய ரிப்போர்ட்ஸ், மெயில்ஸ் எல்லாத்தையும் உங்க வீட்டுக்கே வந்து கொடுப்பேன். நீங்க அலுவலகத்துக்கே
வரவேண்டாம்.

சுத்தம். அப்பகூட மென்பொருள் தவறுகளை குறைப்பேன்னு சொல்ல மாட்டீங்க. இனிமே உங்க கிட்டே பேசி பிரயோஜமில்லை. நீங்க பேசாமெ
ராஜீனாமா செய்துட்டு போயிடுங்க.

தமிழ்லே எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை - ராஜீனாமா.

பேசாதீங்க. ராஜீனாமான்றது தமிழ் வார்த்தையா இல்லையான்னே உங்களுக்கு தெரியல. இந்தாங்க கடிதம். உங்களை வேலையை விட்டு தூக்கிட்டோம். போயிட்டு வாங்க. அக்குங்....( நாக்கை மடக்கி கண்ணடிக்கிறார்)... ச்சீ.. உங்ககூட சேந்து எனக்கும் இந்த பழக்கம் வந்துடுச்சு...

Read more...

Wednesday, November 26, 2008

டேய்!! தண்டவாளத்தை நடந்து கடக்காதீங்கடா!!!

பலமான எச்சரிக்கை:

நக்கலும், நையாண்டியும் எப்போதும் இருக்கும் பூச்சாண்டியில் முதல்முறையாக ஒரு சோகப்பதிவு. பல நாட்களாக போடலாமா, வேண்டாமா என்றெண்ணி மனதில் உள்ள சோகத்தை கொட்டிவிட முடிவு செய்து போடப்படும் பதிவு. இன்னிக்கு சந்தோஷமா இருக்கறவங்களும், இருக்கப் போறவங்களும் மற்றும் இளகிய மனசுக்காரங்களும் தயவு செய்து படிக்கவேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

---------

டேய். இங்கே வாடா. நீயும் வாடி. கையை பிடிங்க. தண்டவாளத்தைத் தாண்டி அந்தப்பக்கம் வீட்டுக்குப் போகணும்.

அப்பா... அப்பா... இந்தப் பக்கம் பாருங்கப்பா.. ரெயில் வந்துடுச்சுப்பா...

தடக்.. தடக்... தடக்... தடக்..

-------------

செய்தி: 2007ல் ரெயிலில் அடிபட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை - தமிழ் நாட்டில் 1979 - சென்னையில் 870.

-------------

சென்னையில் எங்கள் அடுக்கு மாடி வீட்டில் பின்பக்கம், சஹானாவுக்கு இரண்டு குட்டி நண்பர்கள் இருந்தார்கள். இரண்டு வயது வித்தியாசத்தில் அழகான அண்ணன் தங்கை. பள்ளி முடிந்தபிறகு எங்கள் வீட்டுக்கு வந்து விளையாடிக்கொண்டு இருப்பார்கள். சஹானாவின் பொம்மைகளை வீடு பூராவும் பரத்தி, தினமும் நாங்கள் பலமுறை சுத்தம் செய்யவேண்டியிருக்கும்.

--------------

தினமும் இணையத்தில் தினமலர், தினகரன் படிக்கும்போது பார்க்கும் செய்தி - தண்டவாளத்தைக் கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இன்னார்
மரணம்ன்றது. சென்னை புறநகரில் அடிக்கடி நடக்கும் விபத்து இது. யார் இறந்தார்கள், எந்த ஊர் என்று மட்டும் பார்த்துவிட்டு அடுத்த
செய்திக்கு போய்விடும் அளவுக்கு பழகிப்போய்விட்ட ஒரு செய்தி. இது எனக்கு மட்டுமல்ல, அந்தப்பக்கம் இருப்பவர்களுக்கும், புறநகர்
ரெயில் பயன்படுத்துவோருக்கும் அப்படித்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

-----------

சென்ற வருடத்தில் ஒரு நாள் வழக்கம்போல் அலுவலகத்திலிருந்து அம்மாவுக்கு தொலைபேசியிருந்தேன். தொலைபேசி எடுத்தவுடன், அம்மா -
ஓ வென்று அழ ஆரம்பித்து விட்டார்கள்.

"என்னம்மா ஆச்சு, உடம்பு சரியில்லையா?. சொல்லுங்க. எனக்கு ஒண்ணும் புரியல".

" நம்ம __குட்டி... நம்ம _குட்டி.... நேத்து ரெயில்லே அடிபட்டு.... ராத்திரியே..... ".... இன்னிக்கு தினகரன்லே வந்துருக்கு பாரு" -

அழுதுகொண்டே தொலைபேசியை வைத்துவிட்டார்கள்.

----------

அலுவலகத்தில் நுழைந்த அரை மணியில் இந்த செய்தி. உடனே லீவ் போட்டுவந்து, சஹானாவின் பழைய ஆல்பத்தைத் தேடி எடுத்து
__குட்டியைப் பார்த்து அழுது மயக்கம் போடாத குறைதான். என் தந்தை மறைந்தபோதுகூட நாங்கள் அவ்வளவு அழுததில்லை.

அந்த விபத்து நடந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இன்றைக்கும் அந்த ஆல்பத்தைப் புரட்டும்போதும், __குட்டியை பார்க்கும்போதும்
அழாமல் இருக்கமுடியவில்லை. அப்படியே அடுத்த இரண்டு நாளுக்கு மூட் அவுட்டாவதையும் தடுக்க முடியவில்லை.

--------

டேய்.. ஒரு அஞ்சு நிமிஷத்தில் ஒண்ணும் குடிமுழுகிப் போகாதுடா... தண்டவாளத்தை நடந்து கடக்காமே, படியிலோ சுரங்கப்பாதையிலோ
போய் பழகுங்கடா...

Read more...

Tuesday, November 25, 2008

கெட்டி மேளம்... கெட்டி மேளம்!!!

சிறிய வயதில் உறவினர்களின் திருமணத்திற்குப் போவது படுகுஷியாக இருக்கும். பள்ளிக்கு மட்டம் போட்டுவிடலாம், படிக்கவும் வேண்டாம்.
அதுமட்டுமல்லாமல் திருமண மண்டபத்தில் நம்மை யாரும் கண்டுக்க மாட்டாங்க. நம்ம இஷ்டத்துக்கு சாப்பிட்டு நம்ம இஷ்டத்துக்கு
சுத்திக்கிட்டே இருக்கலாம்.


என்னோட இதே வேவ்லெங்தில் (வார்த்தை நன்றி: பரிசல்) இன்னொரு உறண்பனும் இருந்தான். (உறண்பன் = உறவினன் + நண்பன்). அவனும்
அதே திருமணத்திற்கு வந்துவிட்டால், அப்புறம் எங்களை யாரும் பிடிக்கவேமுடியாது. அப்படி என்னதான் செய்வீங்கன்றீங்களா, அதைத்தான்
இங்கே சொல்லியிருக்கேன். பொறுமையா படிங்க.


ஞானும் அவனும் நடுவில் இன்னொருவரும்:


திருமணத்தை பார்வையிட வந்தவர் யாராவது ஒருவர் தனியாக உட்கார்ந்திருந்தால், நாங்கள் இருவரும் ஒவ்வொருவராக போய் அவரின்
இரண்டு பக்கங்களிலும் உட்கார்ந்து விடுவோம். ஒரு ஐந்து நிமிடம் கழித்து, ஒருவரையொருவர் திடீரென்று பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டு -
'டேய், எப்படிடா இருக்கே. பாத்து ரொம்ப நாள் ஆச்சு' என்று ஒருவன் ஆரம்பிக்க, இன்னொருவனும் 'ஹேய்' என்று பேச ஆரம்பிப்பான்.


நடுவில் உட்கார்ந்திருக்கும் அந்த நபர் எங்கள் தொல்லை பொறுக்க முடியாமல் எழுந்து போகும் வரை - நாங்கள் பார்த்த சினிமா,
தொலைக்காட்சி விளம்பரம் என்று சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் எதையாவது பேசிக்கொண்டிருப்போம்.


மனிதர் பயங்கர பொறுமைசாலியாக இருந்து, பத்து நிமிடங்களுக்கு மேல் எழுந்துபோகாமல் இருந்துவிட்டால், நண்பன் பயங்கர டென்சனாகிவிடுவான். அவன் திறமையை நிரூபிக்கும் சவாலில் அவன் தோற்றுப்போனதுபோல் ஆவேசப்பட்டு - நான் தமிழில் கேட்கும் கேள்விகளுக்கு - ஆங்கிலம், இந்தி என்று வெவ்வேறு மொழிகளில் பேச/உளற ஆரம்பித்து விடுவான். எங்களுக்கு நடுவில் அமர்ந்திருப்பவர், அதற்கு மேல் அந்த அறுவையை தாங்கமுடியாமல் கண்டிப்பாக எழுந்து போய்விடுவார்.


தொலைபேசுதல்:


தொலைபேசுதல் அப்படின்னா - ஃபோன்லே பேசுதல் இல்லீங்க. தொலைவிலிருந்து பேசுதல். ஒரு படத்தில் மணிவண்ணன் பேருந்து
நிலையத்தில் நின்றுகொண்டு அங்கிருக்கும் ஒரு பேருந்தில் ஒவ்வொருவராக முன்னால் இருக்கும் நபரை கூப்பிடச்சொல்வாரே, அப்படி
கூப்பிட்டு பேசுவது.


மண்டபத்தில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் ஒரே வரிசையில் வெவ்வேறு மூலையில் உட்கார்ந்திருப்போம். நான் எழுந்து அதே
வரிசையில் நடுவில் உள்ள இன்னொருவரை கூப்பிட்டு - "ப்ளீஸ், அவரை கூப்பிடுங்களேன்" - அப்படின்னு பக்கத்தில் இருப்பவரை காட்டி, அப்படியே கூப்பிட்டு கூப்பிட்டு வரிசையின் கடைசியில் உள்ள நண்பன் பார்த்தவுடனே, வழக்கம்போல் "டேய், எப்படிடா இருக்கே. பாத்து ரொம்ப நாள் ஆச்சு' - என்று ஆரம்பிப்பேன்.


மற்ற விஷயங்கள் எல்லாம் மேலே சொல்லியிருக்கிறா மாதிரிதான். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், இங்கே ' நடுவில்' இருக்கும் ஆட்கள் அதிகம். அதனால், எல்லோரும் எழுந்து போவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சிறிது நேரம் கழித்து நாங்களே விளையாட்டை முடித்துக் கொண்டு எழுந்து போய்விடுவோம்.


படுபிஸியாக காட்டிக்கொள்ளுதல்:


அந்த திருமணமே எங்க உழைப்பில்தான் நடக்கிற மாதிரி பயங்கர பிஸியாக நடந்து கொண்டிருப்போம். கல்யாண மேடை, பார்வையாளர்
உட்கார்ந்திருக்கும் இடம், சமையலறை ஆகிய எல்லா இடங்களிலும் இப்படியே நாங்கள் நடையா ஓடிக்கொண்டிருப்பதால், பார்ப்பவர்கள்
அனைவரும் நாங்கள் ஏதோ திருமண வேலையாகத்தான் சுற்றிக்கொண்டிருக்கிறோம் என்று எண்ணுவர்.


அப்படியும் சில பேர் எங்களை நம்பாமல் ஏதாவது வேலை செய்ய கூப்பிடும்போது, நண்பன் படுசீரியஸாக - அந்த மாமா வெற்றிலை வாங்கி
வரச்சொன்னார், இந்த மாமி சுண்ணாம்பு வாங்கி வரச்சொன்னார் - ஒரு ரெண்டு நிமிஷம் இருங்க. கொடுத்துட்டு வந்துடறேன் - அப்படி ஏதாவது சொல்லிவிட்டு எஸ்ஸாயிடுவான்.


சிறிது நேரம் இப்படி 'திருமண வேலைகளை' செய்தபிறகு - முதல் பந்தியில் சாப்பிட்டுவிட்டு - மண்டபத்தில் ஏதாவது ஒரு மூலையில் படுத்திருந்தாலும் - பார்ப்பவர்கள் - "நல்ல வேலை போலிருக்கு. பாவம் சின்னபுள்ள டயர்டாகி படுத்துவிட்டான்" என்று கூறுமளவிற்கு எங்கள் நடிப்பு அப்போதே ஜே.கே.ரித்தீஸுக்குப் போட்டியாக இருந்தது.


பதிவு ஓவர். இனி பின்குறிப்பு மட்டும்தான் பாக்கி.


அதெல்லாம் அந்த காலம். கல்யாணம் ஆனப்பிறகு - இந்தியாவில் நான் கலந்துகொண்ட திருமணங்களில் அங்கே இங்கே சுற்றாமல் மனைவி
பின்னாடியே வாலை (பதிவர் வாலை இல்லீங்க, என் வாலை) சுற்றி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்ததுதான் அதிகம்.

Read more...

Monday, November 24, 2008

ஆற்காடு வீராசாமி மென்பொருள் நிபுணரானால்!!!


1. என் இருக்கைக்குப் பக்கத்தில் இருக்கும் ஜன்னலிலிருந்து காத்தே வரமாட்டேங்குது. அதனால் என்னால் சென்ற ஆறு மாதங்களாக சரியாக வேலை செய்ய முடியவில்லை.


2. இந்த அலுவலகத்தில் முதல் மாடியில் வேலை செய்பவர்களுக்கு வாரந்தோறும் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும். மேல் மாடியில் இருப்பவர்களுக்கு 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டும்.


3. நான் வேலை செய்யற இந்த ப்ராஜெக்ட் தோல்வி அடைஞ்சதாலே, இந்த கம்பெனிய ஊத்தி மூடிடுவாங்களான்னு யோசிச்சி யோசிச்சே, ராத்திரியெல்லாம் தூக்கம் வர்றதில்லே.


4. எங்க ப்ராஜெக்ட்லே கடந்த ரெண்டு மாசத்துலே 300 தவறுகள்தான் செய்திருக்கிறோம். அதே அந்த ப்ராஜெக்ட்லே 54,234 தவறுகள் செய்திருக்காங்க.

5. ஒரு வாரம் நல்ல மழை பெஞ்சா போதும். இந்த ப்ராஜெக்டை உடனே முடித்து விடலாம். (மனதில்: ஒரு வாரம் மழை பெஞ்சா ஊரே குளமாயிடும். மக்களை வீட்டுக்கு அனுப்பாமே, ஆபீஸ்லேயே பூட்டி வெச்சி வேலை வாங்கிடுவேன்!!!).

6. கோடையில்தான் எல்லாரும் லீவ் போட்டுண்டு ஊருக்குப் போயிடுவாங்க. அதனால் வேலை பாதிக்கும். ஆனால், இந்த தடவை குளிர் காலத்துலேயே நல்ல வெயில் அடிச்சதால், லீவ் போட்டுட்டாங்க. ஆள் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கப் படுகிறது.

7. இந்த ப்ராஜெக்ட் எவ்ளோதான் சொதப்பலா போனாலும் எனக்கு பிரச்சினையில்லை. நானா ராஜீனாமா பண்ண மாட்டேன். எங்க தலைவர் என்ன சொல்றாரோ அதன்படிதான் செய்வேன்.

8. மென்பொருளில் வரும் தவறுகள் குறித்து க்ளையெண்டே ஒண்ணும் சொல்றதில்லை. சிலர் வேண்டுமென்றே அவர்களை தூண்டி விடுகின்றனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தொடர்ந்து கவனித்து வருகிறோம்.

9. நான் வேலையே செய்யாமே எப்பவும் மேனேஜர்கூடவே இருக்கறேன்றதெல்லாம் அபாண்டமான குற்றச்சாட்டு. சனி, ஞாயிறுகளில் நான் எப்பவும் எங்க வீட்லேதான் இருப்பேன். அவர்கூட இருக்க மாட்டேன்.

10. இந்த கம்பெனியில் மாசத்துக்கு ஐநூறுக்கு குறைவா தவறுகள் செய்றவங்களுக்கு தினமும் மூணு கப் காப்பி வழங்கப்படும். அதுக்கு மேலே ஒவ்வொரு நூறு தவறுகளுக்கும் ஒரு காபி குறைக்கப்படும். ஆயிரம் தவறுகள் செய்றவங்க, அவங்க வீட்லேந்து காபி கொண்டுவந்து இங்கே இருக்கறவங்களுக்கு கொடுக்கணும்.

11. அடுத்த ஜூன் 30க்கு மேல் நம்ம மென்பொருள்லே எந்த பிரச்சினையும் வராது.

12. எங்க டீம்லே இருக்கற ஒருத்தர் இப்போதான் இன்னொரு கம்பெனிக்கு போயிட்டு வந்தார். அங்கெல்லாம் நம்மை விட மோசமா மென்பொருள் பண்றாங்களாம். நாம எவ்வளவோ பரவாயில்லை.

Read more...

Thursday, November 13, 2008

வட அமெரிக்க பதிவர்கள் தேசிய மாநாடு 2008!!!

வட அமெரிக்கப் பதிவர்கள் சார்பில் ஒரு மாபெரும் தேசிய மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் நாள்: நவம்பர் 29, 2008 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு

இடம்: நியூ ஜெர்ஸி. (இப்போதைக்கு மாநாட்டுத் திடல் இருக்கும் இடம் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது - அடுத்த ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்).

தலைமை வகிப்பவர்: திரு. பாஸ்டன் பாலா

முன்னிலை: திரு. இலவசக்கொத்தனார்

வரவேற்புரை: திரு. கே.ஆர்.எஸ்

மக்கள் தொடர்பு: திரு. இளா

மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இன்னும் சிலரை சாட்டிங்கில் அழைக்க ஏற்பாடு நடந்துகொண்டிருக்கிறது.

சிரஞ்சீவிகாரு கூட்டத்தில் போட்டதைப்போல் முட்டை வீசத் தயாராக இருப்பவர்கள், தயவுசெய்து அந்த முட்டைகளை முன்கூட்டியே எங்களுக்கு அனுப்பிவிட்டால் உபயோகமாக இருக்கும். (அழுகாத) தக்காளி கிடைத்தாலும் நலம்.

மேலும், மாநாட்டை வாழ்த்தி குறைந்த பட்சம் ஒரு லட்சம் தந்திகளாவது எதிர்பார்க்கிறோம்.

அனைவரும் வருக!!! ஆதரவு தருக!!!

Read more...

நொறுக்ஸ் - வியாழன் - 11/13/2008

ரெண்டு வடை வாங்க 50 ரூபாய் கொடுக்கலாம் அல்லது 100 ரூபாய் கொடுக்கலாம். ஆனா யாராவது 1300 ரூபாய் கொடுப்பாளோ???? கொடுத்துட்டாளே.... விவரம் பதிவின் கடைசி செய்தியாக...

-------------

நாம சுவாசிக்கறது பிராண வாயு. மரங்கள் சுவாசிக்கறது கரி அமில வாயு. நமக்கும் மரங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள்னு எனக்கு சின்ன வயசுலே தெரிஞ்சதுலே இந்த பாயிண்ட்தான் முக்கியமானது.


இந்த ஊர்லே வந்து தெரிஞ்சிக்கிட்ட இன்னொரு வித்தியாசம் - குளிர் காலம் வரவர நாம உடுத்தற துணியோட தடிமன் (or தடிப்பு) அதிகமாயிட்டே போகுது; ஆனா, மரத்தோட ஆடையான இலை குறைஞ்சிக்கிட்டே போய் மொட்டையாயிடுது. (சரி சரி, கை
தட்டாதீங்கப்பா!!!).


இவைகளைத் தவிர இன்னும் பல வித்தியாசங்கள் இருந்தாலும், நம்மை 'யாராவது' - மசமசன்னு மரம் மாதிரி நிக்காதீங்க - அப்படின்னு 'பாசமா' சொல்லும்போது கோபம் வராமே, சந்தோஷமா இருக்கே - ஏன்னு யாராவது சொல்றீங்களா????

-------------------

ஓட்டுனர் உரிமம் வாங்கிய அனுபவம்:


சென்னை ஆலந்தூரில்:

ஒரே காரில் ஒரு பத்து பதினைந்து பேர் ஓட்டிக் காண்பிக்கணும். ஒருவர் வண்டியை ஓட்ட, மற்றவர்கள் தங்கள் பைக்கிலோ, வேறொரு காரிலோ பின்னாலேயே தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு சின்ன ஊர்வலம் மாதிரி எல்லோரும் போய்க்கொண்டிருந்தோம். வண்டி ஓட்டுவதற்கு என் முறை வந்தபோது - பக்கத்தில் அமர்ந்திருந்த கண்காணிப்பாளர் - வண்டியை ஸ்டார்ட் பண்ணி போங்க - என்றார்.

நானும் வண்டியை ஸ்டார்ட் செய்ய முற்பட்டபோது - வண்டியிலிருந்து ஒரு மாதிரி புர்புர்ரென்று சத்தம் வந்தது. அமைதியாக அவர் சொன்னார் - வண்டி ஸ்டார்ட் ஆகித்தான் இருக்கு. "இதை ஏன்யா முன்னாடியே சொல்லலே" - அப்படின்னு நான் சொல்லியிருப்பேன்னு நினைக்கிறீங்க... கரெக்ட்.. நானும் அப்படியேதான் நினைச்சேன். ஆனா சொல்லலே... :-)


அவரோ ரோட்டையே பாக்கலே. தன் கையில் இருந்த நோட்டில் ஏதோ எழுதிக்கிட்டே இருந்தார். நான் கியர் மாத்தி 1,2,3,4 போனவுடன், வண்டியை ஓரம் கட்டுங்க என்று கூறிவிட்டார். அவ்வளவுதான். ஆத்தா, நான் பாஸ் ஆயிட்டேன்.


அமெரிக்காவில்:

ஒரு பத்து நிமிடம் சந்து பொந்தாக சுற்றிவிட்டு திரும்ப புறப்பட்ட இடத்துக்கே வந்தோம். இப்போது கண்காணிப்பாளர், வண்டியை பின்பக்கமாக ஓட்டி நிறுத்துங்க (back parking) என்றார். நானும் ஸ்டைலாக பின்பக்கம் போய் வண்டியை நிறுத்தினேன்.


சரியாக இரண்டு கோடுகளுக்கு நடுவில் நிறுத்தவேண்டும். நானும் வண்டியை நிறுத்தியபிறகு கோட்டை பார்த்தேன். இரண்டு பக்கமும் இரு கோடுகளும் சிறிது தூரம் தள்ளி இருந்தது. சரி, ஒரு பெரிய லாரி நிறுத்தவேண்டிய இடத்துலே நாம வண்டியை நிறுத்தியிருக்கோம்.
அதனால்தான், இரண்டு பக்கமும் கோடு தள்ளியிருக்கு அப்படின்னு நினைச்சிக்கிட்டு ஒரு மிதப்போட அந்த கண்காணிப்பாளரைப் பார்த்தேன்.


"ம்ஹும். நீங்க ஃபெயில். பத்து நாள் கழிச்சி மறுபடி வாங்க" - அப்படின்னுட்டார். என்னடான்னு பாத்தா, கீழே இருக்கற படத்தை பாருங்க. அதே மாதிரி நான் சரியா கோட்டு மேலேயே வண்டியை நிறுத்திட்டேன். அவ்வளவுதான்.




--------------

ஒரு முறை அலுவலக விஷயமாக என்னையும் சேர்த்து நண்பர்கள் மூன்று பேர் சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்தோம். ரயில் புறப்பட்டு செக்கிங், இரவு சாப்பாடு எல்லாம் ஆனது. படுக்கப்போகும்போது வண்டி ஏதோவொரு நிறுத்தத்தில் நின்றபோது, நண்பன் பசிக்கிறதென்று போய் எல்லோருக்கும் வடை வாங்கி வந்தான்.

சிறிது நேரம் கழித்து டிடிஆர் இரண்டாவது தடவை செக்கிங் செய்வதற்கு வந்துவிட்டார். இந்த மாதிரி இரண்டு தடவை செக்கிங் செய்வது அன்று மட்டுமா அல்லது தினமுமா என்று தெரியவில்லை.


வடை வாங்கிய நண்பன் பரபரவென்று தன் பர்ஸை நோண்டிக்கொண்டிருந்தான் - "மாப்ளே, டிக்கெட் தொலைஞ்சு போச்சுடா!!!". அதன்பிறகு டிடிஆரிடம் கெஞ்சி கூத்தாடி, பேரம் பேசி ஒரு வழியாக பிரச்சினையை தீர்த்தோம்.


மறு நாள் காலை நண்பன் சொன்னான். " நான் ரெண்டு பத்து ரூபாய் நோட்தான் வைத்திருந்தேன். அவை இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அப்படின்னா, நான் நம்ம டிக்கெட்டை கொடுத்துத்தான் வடை வாங்கியிருக்கேன் போல!!!".

Read more...

Wednesday, November 12, 2008

கனவு... கனவு... கனவு...

என்னுடைய கனவில் என்னுடைய குடும்பம் தவிர, நடிக(??) நடிகையர், கூட வேலை பார்க்கும் அமெரிக்க இந்திய நண்பர்கள், பரிசல் மற்றும் அறிமுகமாகி போன வாரம்தான் முகத்தைப் பார்த்த சிங்கை நாதன் வரைக்கும் அனைவரும் முறை வைத்துக்கொண்டு வந்து போவார்கள்.

நான் விடும் குறட்டையால் (தங்கமணியும், சஹானாவும்தான் அப்படி சொல்வார்கள், ஆனால் நானாவது குறட்டை விடுவதாவது என்று மறுத்துவிடுவேன்!!!) என் கனவில் சிறிய ஜெர்க் எப்பவும் இருக்கும். ஆனாலும், அந்த ஜெர்க்கை பொருட்படுத்தாமல், நண்பர்களும், உறவினர்களும் என்னுடன் பேசிக்கொண்டிருப்பர்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மேற்கூறிய அனைத்து நண்பர்களுடனும் - நான் பிறந்து வளர்ந்து 25 வருடம் வாழ்ந்த வீட்டில்தான் பேசிக்கொண்டிருப்பேன். அந்த வீட்டை விட்டு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டாலும், கனவில் அந்த வீட்டில் இருக்கும்போது, அங்கிருந்த மாடிப்படிக்கட்டுகள், எங்கள் அறையில் இருந்த அலமாரிகள், பெரிய பெஞ்சு, கோலி விளையாடிய குழிகள் எல்லாமே தெள்ளத்தெளிவாக வந்து போகும்.




பதிவு போட ஆரம்பித்தபிறகு, ரொம்ப நேரம் (நாள்) யோசித்து ஒரு மேட்டரை எப்படி முடிப்பது என்று தெரியாமல் இருக்கும்போது திடீரென்று ஒரு நாள் கனவில் அந்த ஃபினிஷிங் டச் கிடைத்துவிடும். (ரொம்ப டூ மச்சா இருக்குன்றீங்களா, ஆனா இது நிஜம்தாங்க!!!). ஆனா, காலையில் எழுந்தவுடன் அவை மறந்துவிடும். பிறகு எதையோ மொக்கையாக எழுதி பதிவை வெளியிடுவது வழக்கம்.

வேறெங்கேயோ கூட படித்திருக்கிறேன் (ஒருவேளை சுஜாதாவோ) - அதாவது, தூங்கும்போது பக்கத்தில் ஒரு நோட்டும் பேனாவும் வைத்துக்கொண்டு, தூக்கத்திலேயே எழுந்து - நாம் காணும் கனவை அதில் எழுதுவதாக. சரி, நாமும் அப்படியே செய்வோமென்று சில நாட்கள் நோட்/ பேனா இரண்டையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்கினேன்.

மொட்டை மாடியில் (கனவில்) விளையாடும் கோலி மற்றும் கிரிக்கெட்டில் இருந்த ஆர்வத்தினால் - காலையில் எழுந்து பார்த்தால் - பக்கத்திலிருந்த நோட்டில் ஒன்றுமே இருக்காது. இரவில் கண்ட கனவும் கொஞ்சமாய் நினைவில் இருக்கும் அந்த நேரத்தில் எழுத சோம்பேறித்தனப்பட்டு சிறிது நேரம் கழித்து யோசித்தால், சுத்தமாய் எதுவுமே நினைவிலிருக்காது.
இப்படியாக போயிட்டிருக்கும்போது, திடீர்னு ஒரு நாள் அந்த நோட்டைப் பார்த்தேன். ஏதேதோ எழுதியிருந்தது. ஆஹா, நாம்கூட இரவு கனவு முடிந்ததும் உடனேயே எழுந்து எழுதிவிட்டிருக்கிறோமென்று சந்தோஷப்பட்டுக்கொண்டே அந்த நோட்டைப் பார்த்தால் - அவ்வ்வ்.... எதுக்காக அப்படி எழுதியிருக்கிறேனென்றே தெரியவில்லை.

அதாவது எழுதியது இருக்கு - கனவு மறந்து போச்சு. அப்படி நான் எழுதியதைத்தான் மேலே படத்தில் உள்ளது. உங்களுக்கு ஏதாவது புரிஞ்சா, அதைப் பத்தி நீங்களே ஒரு பதிவு எழுதிடுங்க.... அவ்வ்வ்வ்..

Read more...

Tuesday, November 11, 2008

நொறுக்ஸ் - செவ்வாய் - 11/11/2008


இந்த கேள்விகள் ரங்கமணிகளுக்கு:

வாரயிறுதியில் குடும்பத்தில் அமைதியா சண்டை, சச்சரவில்லாமே இருக்கணுமா?
இரண்டு நாளும் நீங்க அமைதியா கணிணியில் அமர்ந்தாலும், 'யாரும்' உங்களை #%$% திட்டாமே இருக்கணுமா?

நிறைய பேர் ஆமா, ஆமான்னு குதிக்கறது தெரியுது... பதில் பதிவின் கடைசியில்...

-----------------

தினமும் வகுப்பறையில் நுழைந்தவுடன் சஹானா நேராக ஆசிரியையிடம் சென்று, 'குட் மார்னிங்' சொன்னபிறகு, வீட்லே நடந்த ஏதாவது ஒரு விஷயத்தைப் பத்தி சொல்லிவிட்டுதான் தன் நண்பர்களைப் பாக்கப்போவாங்க.

ஒரு நாள், நண்பர்களைப் பார்த்த குஷியில், ஆசிரியையை மறந்துவிட்டு ஓட, ஆசிரியையோ கூப்பிட்டு, "சஹானா, கேன் யூ சே குட் மார்னிங்?(குட் மார்னிங் சொல்ல தெரியுமா?) என்று கேட்டார்.

ஓடிக்கொண்டிருந்த சஹானா, ஒரு நொடி நின்று திரும்பி "யெஸ்" (தெரியும்) என்று கூறிவிட்டு மறுபடி ஓடிவிட்டார்.

ஆசிரியை என்னிடம், "தப்பு என்னுதுதான். நான் குட் மார்னிங்னு சொல்லியிருக்கணும். தெரியுமான்னதுக்கு அவ தெரியும்னு சொல்லிட்டு ஓடிட்டா" என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

-----------------

இப்போ எந்த நிலமையில் இருந்தாலும்,
பழசை மறக்கவேகூடாதுன்னு சொன்னாங்க.
நானும் ச்சின்ன வயசில் இருந்தா மாதிரி -
வெறும் **ட்டியோட வெளியே போனேன்.
அதுக்குப்போய் என்னை லூசுன்னு சொல்றாங்க.

பிகு: இது எழுதினது மட்டும்தான் நான். 'அது' நானில்லை.

------------------

உங்க எல்லாருக்கும் ஒரு கேள்வி:
CFL விளக்குகள். இதன் பயன்களைப் பற்றி நிறைய பேர் நிறைய பதிவுகளை போட்டிருப்பீங்க / படிச்சிருப்பீங்க... எல்லா பதிவுகளிலேயும் இந்த CFL விளக்குகளை, குண்டு விளக்குகளோடு ஒப்பிட்டு வருகின்றனர். என்னோட கேள்வி என்னன்னா, இந்த CFLஐயும் நீளமா நம்ம வீடுகள்லே இருக்கும் 'ட்யூப் லைட்'ஐயும் ஒப்பிடறா மாதிரி எங்கேயாவது படித்திருக்கிறீர்களா? இருந்தா, அதோட உரல் கொஞ்சம் கொடுங்க. நன்றி...

-------------------

'யாரும்' சொல்றதுக்கு முன்னாடியே, வெள்ளி இரவோ, சனி காலையிலோ ஒரு தடவை, மாமனார் வீட்டுக்கு தொலைபேசி எல்லார்கிட்டேயும் "எப்படி இருக்கீங்க? என்ன விஷயம்?" அப்படி இப்படின்னு ஒரு ரெண்டு நிமிஷம் பேசிடுங்க... அவ்ளோதான்.

கவனத்துடன் ஒரு டிஸ்கி : இது என்னுடைய அனுபவமல்ல...!!!

Read more...

Monday, November 10, 2008

நொறுக்ஸ் - திங்கள் 11/10/08

நிறைய குட்டி குட்டி மேட்டர்கள் கையில் இருப்பதால் (NO வெண்பூ, NO Bad Meaning!!!), இந்த வாரம் பூச்சாண்டியில் நொறுக்ஸ் வாரமாக (கு.ப. 3 பதிவுகள்) கொண்டாடப்படுகிறது.
----------------------

எல்லா குழந்தைகளையும் போல், சஹானாவும் இரண்டு வயது இருக்கும்போது பேச ஆரம்பித்திருந்தார். நமக்குத் தெரிந்தது ஏதாவது கற்றுக்கொடுப்போம் என்றெண்ணி நானும் அவரிடம் பேச முற்பட்டபோது, அவருக்கு நான் எதுவும் சொல்லித் தரக்கூடாது என்று எங்கள் வீட்டில் எனக்குத் தடை போட்டுவிட்டார்கள். ஏன்னு கேக்கறீங்களா?. காரணம் பதிவின் கடைசியில்.
---------------------

மனைவி: ஏங்க, நடிகர் சூர்யாவே "என்னை கொஞ்சம் மாற்றி"ன்னுதான் பாடறார். நீங்க என்னடான்னா, உங்க பழக்கவழக்கங்களை கொஞ்சம்கூட மாத்திக்காமே, எப்பவும் என்னையே மாறச் சொல்றீங்களே?
கணவன்: ஜோதிகா மாதிரி ஒரு மனைவி கிடைச்சான்னா, கொஞ்சம் என்ன, நான் முழுசாவே என்னை மாத்திக்கிட்டிருப்பேன்.
(டம், டம், டமால், டப்)

பிகு: இது என் அனுபவமல்ல. ஒரு ஜோக்தான்.
---------------------

என்னுடன் வேலை பார்க்கும் நான்கைந்து அமெரிக்க நண்பர்களிடம் கண்ட பழக்கம் இது.

காலையிலிருந்து எல்லோரும் சேர்ந்தே உட்கார்ந்து மீட்டிங்கில் பேசியிருப்போம். ஆனாலும், சிறிது நேரம் கழித்து எதிரெதிரே பார்க்க நேர்ந்தால் - "ஹாய், சத்யா, ஹவ் ஆர் யூ?" - என்பார்கள். அடப்பாவிகளா, இவ்ளோ நேரம் சேர்ந்துதானே பேசிக்கிட்டிருந்தோம். மறுபடியும் முதல்லேர்ந்து ஆரம்பிக்கிறீங்களா என்று நினைத்தாலும், "ஃபைன், ஹவ் அபௌட் யூ?" என்று சொல்லுவேன்.

மத்த நாடுகள்லேயும் இப்படித்தான் நலம் விசாரிக்கறாங்களான்னு தெரியல.
----------------------

பெண்களுக்கு ஞாபகசக்தி அதிகமாணுமா?

உடனே திருமணம் செய்துவிடுங்கள்.

திருமணமான பெண்கள்தான் ச்சின்னச்சின்ன விஷயங்களை

ரொம்ப நாள் ஞாபகம் வைத்துக்கொள்கிறார்கள்.

பிகு: இப்போ நான் சொன்னது. இதுக்கு முன்னால் வேறே யாராவதுகூட சொல்லியிருக்கலாம்.
----------------------

யார் வந்து "உன் பேர் என்ன?" என்று கேட்டாலும், இரண்டு கைகளை தரையிலோ, மேஜையிலோ ஊன்றிக்கொண்டு - "என் பேர் சஹானா... எனக்கு... இன்னொரு பேரு இருக்கு... வர்ஷா... வர்ஷா..." (... போட்ட இடத்திலெல்லாம் சிறிய இடைவெளி விட்டு படிக்கவும்) - இதைத்தான் நான் சஹானாவுக்கு சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். ஒரு வாரமாக சொல்லியதில், தத்தக்கா புத்தக்கா என்று சொல்ல ஆரம்பித்திருந்தார். ஆனால், வீட்டில் எல்லோரும் என்னை #$%#$ திட்டி சஹானாவுக்கு வேறெதுவும் சொல்லித்தராதே என்று கூறி என் கட்டுக்கடங்காத ஆவலை கட்டுப்படுத்தி விட்டனர்... :-(((

Read more...

Tuesday, November 4, 2008

தொதொ பார்ப்பதற்குமுன் செய்ய வேண்டிய செயல்கள் 10!!!

தொதொன்னா என்னன்னு குழம்பிடாதீங்க. தொதொ = தொலைக்காட்சித் தொடர். இப்போ தலைப்பை இன்னொரு தடவை படித்துவிட்டு பதிவுக்கு போயிடுங்க...

1. வீட்டிலுள்ள தொலைபேசியை, கைபேசியை அணைத்து விடவேண்டும். தொலைபேசியை அணைக்க முடியாத பட்சத்தில், மிமிக்ரி செய்யத் தெரிந்தால் நலம். அப்போதுதான் - நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும் - என்று சொல்லி தேவையில்லாத அழைப்புகளை உடனே வெட்டிவிட முடியும்.



2. சமையலறையில் பாதியில் விட்ட வேலைகளை விரைவில் முடித்துவிடவும். துவக்காத வேலைகளை தொதொக்குப் பிறகு துவக்கவும். இதில் குக்கர்தான் முக்கியம். அதன் ஒலி தொதொவின் ஒலியை கேட்கவிடாமல் செய்துவிடும்.


3. தொலைக்காட்சியின் ரிமோட்டை பார்வையிலேயே வைத்துக்கொள்ளவும். ரிமோட் தேடுவதற்கு ஒரு கருவியே இருக்கிறது - முடிந்தால் அதையும் வாங்கி வைத்துக்கொள்ளவும். இதனால் நேரவிரயத்தை தவிர்க்கமுடியும்.


4. கைப்பை, பர்ஸ், சில்லறை ஆகிய எல்லாவற்றையும் பக்கத்திலேயே வைத்துக்கொள்ளவும். வீட்டிலுள்ளவர்களோ அல்லது கோவில் போன்ற விழாக்களுக்கு கலெக்ஷன் செய்ய வருபவர்களுக்கோ கொடுக்கத் தேவைப்படும். இதனால், தொதொ அதிக நேரம் தவறவிடாமல் பார்க்கலாம்.


5. குடிக்க தண்ணீர், பேனா -> இவற்றையும் அருகிலேயே வைத்துக்கொள்ளவும். தொதொ பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் கொரியர் ஆள் வருவார். கடிதம் நமக்கு இல்லையென்றாலும், குமார் வீடு இதுவா /மாடிக்கு எப்படி போவது என்று கேட்பார் அல்லது குடிக்க தண்ணீர் கேட்பார்.


6. மின்சார அட்டை, கேபிள் அட்டை, பால் அட்டை, காஸ் (gas) அட்டை போன்ற எல்லாவற்றையும் உடனே எடுக்கக்கூடிய இடத்தில் வைக்கவும். இந்த ஆட்கள் வந்தால், அவர்களை உடனடியாக பேசி அனுப்ப வசதியாக இருக்கும்.


7. வீட்டில் பெரியவர்கள் இருந்தால், அவர்களுக்கான மருந்து/தண்ணீரை எடுத்து வைத்துவிடவும். படிக்கும் வயதினர் இருந்தால், அவர்கள் தங்கள் வீட்டுப்பாடத்தை செய்துவிட்டார்களா என்று பார்த்துக்கொள்ளவும். சரியாக தொதொ பார்க்கும்போது அவர்களுக்கு நினைவு வந்துவிட்டு, உங்களை உதவிக்குக் கூப்பிட்டால் தொதொ புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....


8. தொதொவின் தன்மைக்கேற்ப கைக்குட்டையோ டிஷ்யூ காகிதமோ ஒன்றை பக்கத்தில் வைத்துக்கொள்ளவும். இவையில்லாமல் தொதொ பார்ப்பது அபாயகரமானது.


9. இயற்கையின் அழைப்புகள் - அவை அழைக்காவிட்டாலும் நீங்கள் அழையா விருந்தாளியாக 'போய்' முடித்துவிடவும். பிறகு, தண்ணீர் குடிப்பதை குறைத்துக்கொள்ளவும். தொதொக்கு நடுவில் மீண்டும் அழைப்பு வந்துவிட்டால் கஷ்டம்.


10. தொதொ ஆரம்பிக்குமுன்பே, அன்றைய செய்தித்தாள், அந்த வாரத்திய விகடன், குமுதம் இவற்றை தேடி பக்கத்தில் வைத்துக்கொள்ளவும். என்னேரமும் பக்கத்து ஃப்ளாட்டிலிருந்தோ, வீட்டிலிருந்தோ யாராவது வந்து ஓசியில் படிக்க கேட்கலாம்.





------------------

இவ்ளோ முன்னேற்பாடுகள் செய்தபிறகும் ஆற்காட்டார் தயவில் தொதொ பார்க்கமுடியாமல் போய்விட்டால், கவலையேபடாமல் காத்திருந்து அடுத்த நாள் பாருங்கள். கதை என் வலைப்பூ கௌண்டர் (counter) போல் நகராமல் அங்கேயே இருக்கும்.

Read more...

Monday, November 3, 2008

ச்சின்னப் பையன் மென்பொருள் நிபுணரானால்!!!

கடலையால் துறை மாறின கதையை ஏற்கனவே சொல்லியிருக்கேன். அப்படி மென்பொருள் உலகுக்கு வந்தபிறகு நான் செய்த முதல் ப்ராஜெக்ட் - சென்னையில் ஒரு முன்னணி பள்ளிக்கு மென்பொருள் செய்ததுதான்.


அந்த பள்ளிக்கு கல்விக் கட்டணம் (ஃபீஸ்), கணக்கு வழக்கு, சம்பளப் பட்டுவாடா, நூலகம் மற்றும் பல துறைகளுக்கு மென்பொருள் செய்து கொடுப்பதாக ஏற்பாடு. அங்கிருந்த ஒரு ஆசிரியர்தான் எங்களுக்குண்டான முக்கிய தொடர்பு. அவரின் உதவியோடும் பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களின் துணையோடும், மூன்று மாதங்கள் உழைத்து மென்பொருள் செய்துவிட்டோம்.


புது கல்வியாண்டில் பள்ளி திறக்கும்போது கல்விக் கட்டணம் வாங்க எங்கள் மென்பொருளையே பயன்படுத்த வேண்டுமென்று பள்ளியில் கூறிவிட்டதால், இரவு பகலாக வேலை செய்து தயாராக இருந்தோம்.



முதல் நாள் காலை 8 மணிக்கு கட்டணம் வாங்கும் வேலையை துவக்க வேண்டும். நாங்கள் 7 மணிக்கே பள்ளிக்குச் சென்று எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்திருந்தோம். மென்பொருள் பயன்படுத்தப்படும் முதல் நாளைப் பார்ப்பதற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், மற்றும் எங்களுக்கு படியளக்கும் முதலாளி ஆகிய அனைவரும் ஆஜர்.



8 மணிக்கு முன்பாகவே சுமார் பத்து பேர் கட்டணம் கட்டுவதற்கு வந்துவிட்டிருந்தனர். கட்டணம் கட்டிவிட்டு அலுவலகம் போக வேண்டிய அவசரம் அவர்களுக்கு. சரி, துவங்கலாம் என்று முதல் ஆளிடம் கட்டணம் வாங்க ஆரம்பித்தோம்.



எடுத்தவுடனே மென்பொருளில் ஒரு பிரச்சினை. ரிசீப்ட் (Receipt) எண் ஒன்றுக்குப் பதிலாக பத்து என்று பதிவானது. அந்த தாளைப் பார்த்த தலைமை ஆசிரியர் அந்த தவறை உடனே திருத்தி அந்த நபருக்கு இன்னொரு ரிசீப்ட் கொடுக்க வேண்டுமென்று சொல்லி - தற்காலிகமாக கட்டணம் வாங்கும் பணியை நிறுத்தி விட்டார். சரியென்று நாங்கள் அங்கேயே வேலை செய்ய ஆரம்பிக்க, அப்போது கட்டணம் கட்ட வரிசையில் நின்றிருந்த மக்களின் எண்ணிக்கை - அதிகமில்லை ஜெண்டில்மேன் - சுமார் 25 இருக்கும்.


பிரச்சினையை கேள்விப்பட்டு அங்கு வந்த - எங்களுக்கு ஆர்டர் வாங்கிக்கொடுத்த - அந்த ஆசிரியர், கோபத்தில் கண்கள் சிவந்துபோய் நம் கேப்டன் போல் நின்றிருந்தார்.



காலையிலேயே வந்துவிட்டதால், சிற்றுண்டிகூட சாப்பிடாமலிருந்த நானும் என் நண்பனும் வேர்க்க விறுவிறுக்க வேலை பார்த்துக்கொண்டிருக்க, எங்களை சுற்றி நின்றிருந்த எல்லோரும் தேனீர் குடித்துக்கொண்டிருந்தனர்.



ஒரு பத்து நிமிடத்தில் எல்லாவற்றையும் சரிசெய்து விட்டு மறுபடி வேலையை துவக்கலாம் என்று நாங்கள் சொன்னோம். சத்தம் போட்டுக்கொண்டே இருந்த - ஏற்கனவே கட்டணம் கட்டிவிட்ட அந்த நபருக்கு - மறுபடி புதுசா ஒரு ரிசீப்ட் போட்டுக் கொடுக்கலாம் - என்று போகும்போது ப்ரிண்டரில் ஒரு பிரச்சினை ஏற்பட்டுவிட்டது.



இவ்வளவு நேரமும் மெதுவாக சலசலத்துக் கொண்டிருந்த அந்த மக்கள் கூட்டம், இப்போது தைரியமாக கத்த ஆரம்பித்துவிட்டனர். தலைமை ஆசிரியர், அவரே முன்சென்று மென்பொருளில் ஏற்பட்டுவிட்ட சிறு பிரச்சினையை, அந்த கூட்டத்திற்கு விளக்கிக்கூறி, கொஞ்ச நேரம் பொறுமை காக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்.



இப்படியாக ஒரு அரை மணி நேரம் சண்டை போட்டு மென்பொருள்/ப்ரிண்டர் இரண்டிலும் வந்த பிரச்சினைகளை களைந்த பின், பயந்துகொண்டே மறுபடி கட்டணம் வாங்க ஆரம்பித்தோம். யார் செய்த புண்ணியமோ (சத்தியமாய் நாங்கள் செய்ததில்லை!!!) அதற்கு பிறகு நாங்களே ஆச்சரியப்படும் விதமாக அந்த மென்பொருள் வேலை செய்ய ஆரம்பித்தது.


இவ்வளவு நேரம் பேசாமலிருந்த எங்க முதலாளி, இன்னும் இழுக்கறதுக்கு எங்களுக்கு நாக்கே இல்லைன்ற அளவுக்கு, நாக்கை பிடிங்கிக்கற மாதிரி கேள்விகள் கேட்டு திட்டினார். அவர் நன்றாகத் திட்டி முடித்தபிறகு, இங்க ஒருத்தன் மாட்டியிருக்காண்டா என்று சொல்லி, அந்த 'கேப்டன்' ஆசிரியரிடம் அனுப்பினார். ஒரு பத்து நிமிஷங்க, அவரும் திட்டு திட்டுன்னு திட்டிட்டு, தலைமை ஆசிரியடம், 'சார், நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா? இங்க ஒரு நல்லவன் சிக்கியிருக்கான்' அப்படியென்று எங்களை அவரிடம் அனுப்பி வைத்தார். எல்லா அர்ச்சனையும் முடிய அன்னிக்கு 10 மணி ஆயிடுச்சு.


அதற்கு பிறகு அந்த ஆசிரியரே பல பள்ளிகளிலும், வேறு பல நிறுவனங்களிலும் எங்களை அறிமுகப்படுத்தியதும், எங்கள் மென்பொருள் வழக்கம்போல் எல்லா இடத்திலும் முதலில் சொதப்பி - பின்னர் சரியாக வேலை செய்ததும் வரலாறு.

Read more...

Friday, October 31, 2008

2008 புத்தாண்டு தீர்மானங்கள் - ஒரு பின்னோட்டம்

போன வருஷம் வரைக்கும் புத்தாண்டுத் தீர்மானங்கள் அப்படின்னு எதையும் நினைத்ததில்லை. சரி, இந்த வருஷம் இரண்டு விஷயங்கள் செய்யலாம்னு ஆரம்பத்திலே நினைச்சதும், இன்னியோட முடிஞ்ச இந்த பத்து மாசம் வரைக்கும் அந்த
இரண்டு விஷயங்களையும் ஒழுங்கா செய்துட்டு வர்றதாலேயும், இனிமே வருஷா வருஷம் ஏதாவது தீர்மானம் போட்டு அதை நிறைவேற்ற முயற்சிக்கலாம்னு ஒரு தைரியம் பிறந்திருக்கு.


முதல் தீர்மானம்: பூச்சாண்டி


போன வருஷம் மத்தியிலே தமிழ்மணம் பாக்க ஆரம்பிச்சாலும், டிசம்பர் இறுதியில் நாமும் ஏதாவது எழுதுவோம்னு ஆரம்பிச்சேன். டிசம்பர் 24ம் தேதியிலிருந்து பல ஆரம்பகட்ட பிரச்சினைகளைத் தாண்டி, தமிழ்மணத்தில் இணைந்து, முதல் பின்னூட்டம் பெற்ற நாள் ஜனவரி 8.


வாரம் ஒண்ணு அல்லது இரண்டு சிரிப்பு பதிவு போட்டு, இந்த வருஷம் முழுதும் எழுதணும் - தினமும் இரண்டு பேராவது நல்லா சிரிக்கறதுக்கு நாம காரணமா இருக்கணும்னு நினைச்சி ஆரம்பிச்சது, வேகம் பிடிச்சி இன்னியோட 165+ பதிவுகளாயிடுச்சு.

அரை மணி நேரத்துலே அஞ்சு மேட்டர் உருவாகி, ரெண்டு மணி நேரத்துலே டைப் செய்து, அந்த வாரம் முழுக்க பதிவு போட்ட நாட்களும் உண்டு; ஒரே மேட்டரை ஒரு மாசம் வரைக்கும் முடிக்கத் தெரியாமல் இழுத்தடிச்சி வெளியிட்ட நாட்களும் உண்டு.

இந்த தீர்மானத்தாலே சாதிச்ச பெரிய விஷயம் என்னன்னா - உலகமெங்கும் பல இடத்தில் இருந்தாலும், மனம் விட்டு சிரிச்சி பேசக்கிடைத்த நண்பர்கள்.முதல் தடவை பேசும்போதே பலப்பல நாட்கள் பேசியதைப் போல் ஒரு உணர்வை பெற்றுத் தந்ததற்காக இந்த இணையத்துக்கு ஒரு நன்றி.

இதே மாதிரி யாரையும் புண்படுத்தாத நகைச்சுவையோட (மொக்கையோட- ந்னு நீங்க சொல்றது கேக்குது!!!) எழுதணும்னு நினைச்சாலும், வருங்காலத்துலே உருப்படியா எதையாவது எழுதணும்னு நினைக்கறதுண்டு.

இரண்டாவது தீர்மானம் : ஒரு வெளிநாட்டு மொழி

ரொம்ப வருஷமாவே ஏதாவது ஒரு வெளிநாட்டு மொழி கத்துக்கணும்னு இருந்த ஒரு ஆசை, இந்த வருஷம் புத்தாண்டு தீர்மானமாவே ஆயிடுச்சு.


அர்னால்டும், ஜாக்கி சானும் நமக்கு பிடிச்ச வெளிநாட்டு நடிகர்கள். இதிலே அர்னால்ட் பேசும்
ஆங்கிலம் நமக்குத் தெரியும்றதாலே, ஜாக்கி பேசும் சைனீஸ் கத்துக்கணும்னு ஆசை வந்துடுச்சு.


இங்கே நூலகத்திலிருந்து மாண்டரின் CD வாங்கி காரில் போகும்போதெல்லாம் கேட்க ஆரம்பித்தேன். ஒரு நாலு மாசம் வரைக்கும் மெதுவாக போன அந்த பழக்கம், நம்ம வழக்கமான வழக்கப்படி மெதுவாக குறைந்துகொண்டே வந்தது. யாராவது ஒருவரிடத்தில் பணம் கட்டிப் படித்தாலேயொழிய எதையும் கற்றுக்கொள்ள முடியாது என்றென்ணி இங்கே சைனீஸ் கற்றுக்கொடுக்க யாரையாவது தேடினேன்.


ஆள், பணம், நேரம் இந்த மூன்று காரணிகளில் ஏதோ ஒன்று சரிப்படாமலேயே போனதால், தொடர்ந்து காரிலேயே கேட்டு கற்றுக்கொள்ள முயற்சித்து வந்தேன். இப்படியே போய்க்கொண்டிருந்தபோது சென்ற மாதம் ஒரு ஆள் கிடைத்தார்.


உடனே பயிற்சியில் பணத்தைக் கட்டி சேர்ந்துவிட்டேன்.வாரம் ஒரு நாள் 1.5 மணி நேர வகுப்பு - 2 மாதத்துக்கு இந்த பயிற்சி வகுப்பு. எப்படியும் இந்த வருட முடிவில், மாண்டரின் மொழியில் சரளமாக (இல்லாவிட்டாலும், மெதுவாக) பேச முடியும் என்ற நம்பிக்கை இப்போது வந்திருக்கிறது. பேசுவதற்கு மட்டும்தான் இந்த பயிற்சி. எழுத, படிக்க கிடையாது. அதனால், அடுத்த புதுவருட தீர்மானம் ஒன்று ஏற்கனவே ரெடியாயிடுச்சு.... :-)

பிகு: நானும் ஏதாவது ஒரு சங்கிலித் தொடரை ஆரம்பிக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டிருந்தேன். இதை படிக்கும் மக்களில் ஒரு மூணு பேராவது தங்கள் 2008 தீர்மானங்களின் பின்னோட்டத்தைப் பற்றி ஒரு பதிவு போட்டால் நல்லாயிருக்கும்.

Read more...

Thursday, October 30, 2008

இனிமே எந்த ஆயாவுக்கும் ஹாய் சொல்லமாட்டேன்!!!

வருடத்தில் ஒரு நான்கைந்து தடவையாவது நடைப்பயிற்சிக்குப் போறேன்னு கிளம்பறது வழக்கம். ஒரு வாரம் வரைக்கும் போகும் அந்த பயிற்சி மெதுவாக அப்படியே மறக்கப்பட்டுவிடும். அப்படி போன மாதம் ஒரு வாரம் விடியற்காலையில்
நடந்தபோது, தினமும் பார்த்த ஒரு ஆயாவைப் பற்றிய பதிவுதான் இது.

அந்த ஆயா, காலை 6.30 மணிக்கெல்லாம் சுறுசுறுப்பாக எழுந்து வேலைக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்றுகொண்டிருப்பார். ஒரு கையில் காபி கோப்பை. காதல் தேசம் படத்தில் ஒரு பாட்டில் வினீத்தும் அப்பாஸும் ஆவி பறக்க காபி குடிப்பார்களே, அந்த மாதிரி இந்த ஆயா கையில் இருக்கும் சாயா (காபி?) கப்பிலிருந்து ஆவி பறந்துகொண்டிருக்கும்.

சுமார் 60 வயசுக்கு மேலிருக்கும் அந்த ஆயாவை பார்க்கும்போதெல்லாம், எங்க பாட்டி ஞாபகம் வந்துவிடும். நடந்துகொண்டே கொசுவத்தி சுத்திவிட்டாலும், கால்கள் மட்டும் தன்னிச்சையாக சரியான பாதையில் போய், மறுபடியும் சரியாக எங்க வீட்டுக்கே வந்து விட்டுவிடும். வீட்டுக்கு வந்த பிறகுதான் சுயநினைவு திரும்பி, கொசுவத்தியை ஆஃப் செய்வது வழக்கம்.



ச்சின்ன வயசில் (எங்க ச்சின்ன வயசில்தாங்க, பாட்டியோட ச்சின்ன வயசில் இல்லே!!!), நானும் என் தம்பியும் எப்போது பாட்டி வீட்டிற்குப் போனாலும், 5 பைசா கொடுப்பார்கள் - திரும்பி வரும்போது கடையில் பிஸ்கட் அல்லது சாக்லெட் வாங்கி சாப்பிடுவதற்கு. இப்போ மாதிரியே அப்போ இருந்த நிதி அமைச்சரிடமும் மந்திரக்கோல் இல்லாததாலும், பிஸ்கட்/சாக்லெட் விலை ஏறிக்கொண்டே போனதாலும், பாட்டி கொடுக்கும் அந்த 5 பைசா - 10, 25, 50ஆகி அதிகபட்சமாக 1 ரூபாயில் வந்து நின்றது.


கொஞ்ச நாளைக்குப்பிறகு - காசெல்லாம் வேண்டாம், நான் திரைப்படத்திற்கு கூட்டிப்போகிறேன் என்று சொல்லிவிட்டார். அதே மாதிரி என்னையும், தம்பியையும் நிறைய பக்திப் படங்களுக்கும் கூட்டிச் சென்றார். சென்னையில் பாரகன், ப்ளாசா, பைலட், ஸ்டார் ஆகிய அரங்கங்களில் நிறைய படம் பார்த்திருக்கிறோம். அப்படிப் பார்த்ததில் ஒரே ஒரு சம்பவம் இன்றும் நினைவில் இருக்கிறது.அதை மட்டும் சொல்லிவிட்டு, கொசுவத்தியை முடிச்சிடறேன்.

ஒரு முறை ராயப்பேட்டை பைலட் தியேட்டரில் 'பக்த துருவ மார்க்கண்டேயா' படம் பார்க்கப் போயிருக்கிறோம். பயங்கரக்கூட்டம். பாட்டி என்னையும், என் தம்பியையும் கைகளில் பிடித்துக்கொண்டு பெண்கள் வரிசையில் டிக்கட் வாங்க நின்றிருக்கிறார்கள். அப்போவும் என்னால் 'மீ த பஷ்டு' சொல்லமுடியவில்லை.... 'மீ த லேட்' என்று நீண்ட வரிசையில் 25 அல்லது 30 ஆளாக நின்றிருந்தோம்.

எப்போதும் எங்கேயும், நாம் நிற்கும் வரிசையைத் தவிர மற்ற எல்லா வரிசையும் வேகமாக முன்னேறும் - என்ற விதிப்படி எங்கள் வரிசையில் யாரோ தாய்க்குலம் தகராறில் ஈடுபட - ஆண்கள் வரிசை மெதுவாக முன்னேறிக்கொண்டிருந்தது.

நானோ தவித்துக்கொண்டிருந்தேன். காரணம், முதல் நாளே பள்ளியில் நான் பாட்டியுடன் படம் பார்க்கப்போவதாகவும், திங்கட்கிழமை வந்து கதை சொல்வதாகவும் பக்கத்து சீட் பையனிடம் சொல்லியிருந்தேன். இப்படி டிக்கட் கிடைக்காமல் போய்விட்டால், அந்த நண்பன் முகத்தில் எப்படி முழிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். பிறகு ஒரு வழியாக எங்கள் வரிசையும் முன்னேறி, பாட்டி எங்களுக்கு டிக்கெட் வாங்கினார்கள்.

நானும் பயங்கர சந்தோஷத்துடன் தம்பியிடம் - "அப்பாடா, ஒரு வழியா படம் பாத்துடுவோம். இனிமே பிரச்சினையில்லே...!!!" என்று கூற, போட்டுக்குடுத்தே பேர் வாங்கும் அவனோ பாட்டியிடம் "இவன் ஏற்கனவே இந்த படம் பாத்தாச்சாம்" என்று கூறிவிட்டான். பாட்டியும் - "என்ன, இந்த படத்தை முன்னாடியே பார்த்துவிட்டாயா?" என்று கேட்க நான் தம்பியை முறைத்தபடி - "இல்லை பாட்டி, நாம்தான் இப்போ டிக்கட் வாங்கிவிட்டோமே. அதனால், படம்
பார்த்தா மாதிரிதான்" என்று கூறி சமாளித்தேன்.



அன்றும் அதே ஆயா அதே இடத்தில் நின்றிருந்தார். பக்கத்தில் வரும்போது பார்த்தால், அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். நானும், சரி, இவ்ளோ பக்கத்துலே வந்தும் பார்த்துண்டே இருக்காரேன்னு 'ஹாய்' சொன்னேன்.

அவரும் ஏதோ சொன்னா மாதிரி இருந்தது ஆனால் ஒன்றும் புரியவில்லை. சரி ஹாய்தான் சொல்லியிருப்பார் என்று நினைத்துகொண்டு அவரை தாண்டி போகும்போதுதான் கவனித்தேன் - காதில் ஐபாட் வைத்துக்கொண்டு பாட்டு கேட்டுக்/பாடிக்கொண்டிருந்தார்.தனக்குத்தானே பாட்டு கேட்டுக்கொண்டிருந்த ஒரு ஆயாவிடம் போய் ஒரு ஹாய் வேஸ்ட் பண்ணிட்டோமேன்னு எனக்கு அன்னிக்கு தூக்கமே வரலை.

சூப்பர் ஸ்டார், கட்சி ஆரம்பிக்கலாமா வேணாமான்னு முடிவெடுக்கமுடியாமே கஷ்டப்படறா மாதிரியெல்லாம் கஷ்டப்படாமே, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முடிவை நான் உடனே எடுத்துவிட்டேன் --- இனிமே எந்த ஆயாவுக்கும் ஹாய் சொல்லமாட்டேன் - அப்படின்னு.

Read more...

Wednesday, October 29, 2008

சமைக்கப் போறீங்களா? GPS வாங்குங்க!!!

புதுசா சமையல் செய்றவங்க - அது பேச்சிலர்களின் சொ(நொ)ந்த சமையலாகட்டும் அல்லது புதிதாக திருமணமாகி புருஷனுக்கு சமைச்சுப் போட முயற்சி செய்யும் தங்கமணிகளாகட்டும் - என்ன செய்வாங்கன்னா, அடுப்பு பத்தவச்சப்புறம்தான் சமையலுக்குத் தேவையான பொருட்களை தேடுவாங்க.


ஒரு முறை பயன்படுத்திய பொருளை மறுபடி அதே இடத்தில் வெச்சாத்தான் அடுத்த முறை கிடைக்கும்ன்றது மனசுக்குத் தெரிஞ்சாலும் புத்திக்கு எட்டாததாலே, தினமும் இந்த தேடல் படலம் தொடர்ந்துக்கிட்டேதான் இருக்கும்.


இந்த மாதிரி ஆட்களுக்காகத்தான் ஒரு புதிய கருவி கண்டுபிடிக்கலாம்னு இருக்கேன். அது பேரு GPS - Grocery Positioning System. இந்த கருவி, மளிகை சாமான்கள் வீட்லே எங்கெங்கே இருக்குன்னு சொல்றதோட, சமையல் செய்யும் முறையையும் சொல்லிக் கொடுக்கும்.


நீங்க கீழே படிக்கப்போற 10 பாயிண்டுகளும், பேச்சிலர்களுக்கான வெர்ஷனாகும். பேச்சிலி (பெண்பால்) அல்லது தங்கமணிகளுக்கான வெர்ஷன் எப்படியிருக்கும்னு படிக்கறவங்க யாராச்சும் சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்.


1. ஃப்ரிட்ஜைத் திறந்து மேல்தட்டில் கை விடவும். முதலில் இருக்கும் பெரிய வெள்ளை டப்பாவை வெளியே இழுக்கவும். அதுதான் பால் டப்பா.


2. அலமாரியில் முதலில் தெரியும் சிகப்பு டப்பாவை எடுக்கவும். உள்ளே ச்சின்னச்சின்ன சதுரமாக வெள்ளைப் பொருள் தென்பட்டால், அதுதான் சர்க்கரை டப்பா. அல்லது வெள்ளைப் பொடியாக இருந்தால் அது உப்பு டப்பா.


3. பக்கத்தில் இருக்கும் கூடையில் கைவிடவும். பச்சையாய், நீளமாய் இருக்கும் பொருள்தான் பச்சை மிளகாய். கூடையில் பச்சை மிளகாய் கிடைக்காவிட்டால், மேஜைக்கு கீழே உள்ள குப்பைத்தொட்டியில் பார்க்கவும். உள்ளே கிடக்கும் பச்சை மிளகாய்களில் இரண்டை சட்டென்று எடுத்து, யாரும் பார்க்குமுன் கழுவிவிட்டு, அதை பயன்படுத்தவும்.


4. கண்ணில் தெரியும் சிறிய கிண்ணத்தை எடுத்துக்கொள்ளவும். வீட்டை விட்டு வெளியே போய், பக்கத்து வீட்டு கதவை தட்டி, காப்பிப்பொடி கேட்கவும். நாம் சிறிது நாட்களாய் காப்பிப்பொடியே வாங்குவதில்லை.


5. கொறிப்பதற்காக முந்திரி பருப்பு தேடுகிறீர்களா? பின்பக்க அலமாரியில் கீழ்த்தட்டில் சிகப்பு மூடியுடைய டப்பாவை எடுக்கவும். டப்பா கிடைக்கவில்லையெனில், வீட்டிற்குள் சோபா (sofa) பக்கத்தில் கிடைக்கும். நேற்று சைட்டிஷ்க்கு பயன்படுத்தியிருப்பீர்கள்.


6. இந்த நேரத்துலே உப்புமாவா? அதெல்லாம் வேணாம். போய் டிவி போடுங்க. மானாட மயிலாட ஓடிக்கிட்டிருக்கும். அதை பார்த்தாலே பசி அடங்கிவிடும்.


7. அலமாரியில் உருண்டையாக பசுமாடு படம் போட்ட டப்பா இருந்தால் அதுதான் வெண்ணெய். அதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். எலி படம் போட்டிருந்தால், அது எலி பாஷாணம். கவனமாக கையாளவும்.


8. இப்போ எதுக்கு மேக்கி? ஃப்ரிட்ஜ்லே இந்த வாரம் செய்த சாதமும், போன வாரம் செய்த குழம்பும் அப்படியேயிருக்கு. அதை அவனில் சுடவைத்து சாப்பிடவும்.


9. பச்சை ப்ளாஸ்டிக் டப்பாவில் இருப்பது கடலை பருப்பு. அது கையிருப்பு குறைவாக இருப்பின், நீல ப்ளாஸ்டிக் டப்பாவில் இருக்கும் துவரம் பருப்பைப் போட்டு அட்ஜஸ்ட் செய்யவும். பிரச்சினை ஒன்றுமில்லை. நாம்தானே சாப்பிடப் போகிறோம்.

10. சாதத்துக்கு வைக்கப்போறீங்களா? குழம்பு சாதம் சாப்பிடணும்னா, குக்கர்லே இரண்டு டம்ளர் தண்ணீர் போட்டா போதும். குழம்பு சாதம் குடிக்கணும்னா, நாலு டம்ளர் தண்ணீர் போடுங்க.

Read more...

Thursday, October 23, 2008

நடைப்பயிற்சி செய்வது ரங்கமணிகளுக்கு மிகவும் நல்லது!!!

தினமும் நடைப்பயிற்சி செய்வது எல்லோருக்கும் - குறிப்பாக ரங்கமணிகளுக்கு மிகவும் நல்லது.

ரங்கமணிகளுக்கு மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல் நல்லது?? ரங்கமணியா (திருமணமான ஆணா) இருக்கறவங்க மட்டும் அடுத்த பாராவை படிங்க. அப்படி இல்லாதவங்க பாயிண்ட் #1லேந்து ஆரம்பிங்க...

கீழே பத்து பாயிண்டுகள் கொடுத்திருக்கேன். ஒவ்வொரு பாயிண்டும் 'அதே...'ன்னு முடிஞ்சிருக்கும். நீங்க செய்ய வேண்டியது என்னன்னா... ஒவ்வொரு 'அதே...'வுக்கு பிறகும் 'ரங்கமணி வீட்லே இருந்தா...' அப்படின்னு சேத்து படிச்சிட்டு, சித்த நேரம் விட்டத்தை பார்த்து சிந்தனை பண்ணுங்கோ... அப்புறம் ஒரு பெரிய பெருமூச்சு விட்டுட்டு, அடுத்த பாயிண்டை படிங்கோ...


1) எதிர்லே நடந்துவர்ற எந்த பெண்ணும் - தன்னோட அல்லது தன் அப்பாவோட பிறந்த நாள் நினைவில் இருக்கா? அது என்னிக்கி? - அப்படின்னு கேக்கமாட்டாங்க. அதே...

2) தெருவுலே கிடக்கிற குப்பையை யாரும் சுத்தம் செய்ய சொல்லமாட்டாங்க. அதே...

3) எதிர்லே நடந்துவர்ற எந்த பெண்ணும் - நம்மோட லொடலொடன்னு பேசமாட்டாங்க. அதே...

4) ரெண்டு மூணு நாளா ஷேவ் செய்யலேன்னாக்கூட - எதிர்லே வர்ற யாரும் நம்மை திட்டமாட்டாங்க. அதே...

5) எதிர்லே நடந்துவர்ற எந்த பெண்ணும் - நம்மை சினிமாவுக்கோ, உணவகத்துக்கோ கூட்டிப்போக வேண்டுமென்று வற்புறுத்த மாட்டார்கள். அதே...

6) வழியில் இருக்கும் உணவகத்திலோ, டீக்கடையிலோ - பத்துப் பாத்திரம் தேச்சிட்டுப் போங்க - அப்படின்னு யாரும் தொந்தரவு செய்யமாட்டாங்க. அதே...

7) எதிர்லே நடந்துவர்ற எந்த பெண்ணும் - தன்னோட தலைவகிடு, மேக்கப் இதெல்லாம் சரியாயிருக்கான்னு கேட்டு தொந்தரவு பண்ணமாட்டாங்க... அதே...

8) வழியில் நாம் பார்க்கும் எந்த குழந்தைக்கும் நாம் தலை வாரிவிடவோ, *ட்டி போட்டுவிடவோ, ஆடை மாற்றவோ தேவையில்லை. அதே...

9) எதிர்லே நடந்துவர்ற எந்த பெண்ணும் நம்மகிட்டே - உப்பு, புளி, மிளகாய் இதெல்லாம் ஆயிடுச்சு. வாங்கிட்டு வாங்கன்னு சொல்ல மாட்டாங்க. அதே...

10. எதிர்லே நடந்துவர்ற எந்த பெண்ணும் நம்மகிட்டே - "வெளியே வந்தாகூட என்ன எப்போ பாத்தாலும் தொலைபேசிலே பேசிட்டிருக்கீங்க?. என்கிட்டே கொஞ்ச நேரம் பேசுங்க" - அப்படின்னு சொல்லமாட்டாங்க. அதே...

இப்போ சொல்லுங்க... நடைப்பயிற்சி ரங்கமணிகளுக்கு ரொம்ப நல்லதுதானே???



Read more...

Wednesday, October 22, 2008

பதிவர் சந்திப்பு - சிறப்பு படங்களுடன்!!!



மேலே படத்தில் தோன்றுபவர்கள் - ஒண்ணு நான், இன்னொண்ணு சில நாட்கள் முன்பு வரை பதிவு போட்டு கலக்கிட்டிருந்த - பதிவர் நண்பர் பிரேம்ஜி. இரண்டு பேரில் எது நான், எது பிரேம்ஜிங்கறது பதிவின் கடைசியில் சொல்றேன்.


பிரேம்ஜி அடுத்த வாரம் சென்னைக்கு திரும்பறார். லீவுக்கு இல்லே. அமெரிக்காவை விட்டுட்டு. ரொம்ப நாளா மொக்கை போட்டிருக்கோமே, சரி ஊருக்கு போறதுக்கு முன்னாடி ஒரு தடவை பாத்துக்கிடுவோம்னு சென்ற 5ம் தேதி (சென்னை பதிவர் சந்திப்பு நடைபெற்ற தினம்) எங்க
ஊரிலேருந்து புறப்பட்டு அவர் ஊருக்கு (120 மைல்கள்) சென்றோம்.


போய் சிறிது நேரம் பேசி முடித்தபிறகு - சாப்பாடு. பிரேம்ஜியின் தங்கமணி அருமையாக சமைத்திருந்தார். நல்ல்ல்ல்ல்ல்லா சாப்பிட்ட பிறகு, அங்கிருந்து புறப்பட்டு பக்கத்திலிருந்த ஒரு கோயிலுக்குச் சென்றோம். அங்கேயே புகைப்படமெல்லாம் எடுத்துக்கொண்டு - (பிரேம்ஜி ஒரு
அருமையான SLR காமிரா வைத்திருக்கிறார். அதனால், அங்கே என்னோட ச்சின்ன காமிராவை நான் வெளியே எடுக்கவேயில்லை!!!)


அவர்களை புகைவண்டி நிலையத்தில் இறக்கிவிட்டு, நாங்கள் மறுபடி 120 மைல்கள் பயணித்து வீடு வந்து சேர்ந்தோம்.


----

வீட்டுக்கு திரும்ப வரும்போது, நானும் தங்கமணியும் பேசிக்கொண்டது.

நான்: ஏம்மா, பிரேம்ஜியோட படமெல்லாம் எடுத்திருக்கோம். நானும் என் படத்தை இணையத்திலே போடலாம்னு இருக்கேன்.

என் தங்க்ஸ்: எதுக்கு படத்தை போடணும்?

நான்: சில நண்பர்கள் கேட்டிருக்காங்க. அதைத்தவிர லட்சக்கணக்கான பேர் கேக்காம தினமும் நினைச்சிட்டிருக்காங்க. அதுக்காகத்தான். அது தவிர, நான் என்ன இட்லிவடையா, அஞ்சு வருஷம் மூஞ்சியையே காட்டாமே இருக்கறதுக்கு...

என் தங்க்ஸ்: எதுக்கும் ஒரு தடவை பின்விளைவுகளை நினைச்சி பாத்துக்கங்க.

நான்: என்ன சொல்ல வர்றே?

என் தங்க்ஸ்: இவ்ளோ நாளா உங்க முகம் தெரியாமே உங்களை அஜீத், சூர்யா ரேஞ்சுக்கு நினைச்சிருந்தாங்கன்னு வைங்க - நாளைக்கு படத்தை பாத்தபிறகு - இதை பாக்கவா நாம் படத்தை கேட்டோம்னு நொந்துக்கற அளவுக்கு அவங்களை கொண்டு வந்து விட்றாதீங்க.
அவ்ளோதான் நான் சொல்லுவேன்.

நான்: சேச்சே.. அவ்ளோ மோசமா நினைக்க மாட்டாங்கம்மா. ஒரு வேளை அப்படி நினைச்சாலும், யாரும் வெளிப்படையா பின்னூட்டத்திலே சொல்ல மாட்டாங்கன்ற நம்பிக்கையிலே நான் படத்தை போடத்தான் போறேன்.

என் தங்க்ஸ்: என்னமோ செய்ங்க.

நான்: ரொம்ப நன்றிம்மா..

----




அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

Read more...

Monday, October 20, 2008

கடைசிப் பெயர் அல்லது Last Name!!!

அர்னால்ட் ஸ்வாஜ்ஜெனிகருக்கு பெரிசாயிருக்கும்...
மடோன்னாவுக்கு இருக்காது...

இப்படி இன்னும் சில நபர்களைக் குறித்து சொல்லப்படும் இந்த ஜோக்குக்கு விடை என்ன என்பது உங்களுக்குத் தெரிந்தேயிருக்கும். அதுதான் இந்த பதிவின் தலைப்பில் இருக்கும் - கடைசிப் பெயர் அல்லது sur name அல்லது Last name.

கடைசிப் பெயர் - நம்ம ஊர்லே இதைக் கண்டுக்கவே மாட்டாங்க. ஆனா, இங்கே எங்கே போனாலும் முதல்லே உங்க பேர் என்னன்னு கேக்காமே, உங்க கடைசிப் பேர் என்னன்னுதான் கேக்கறாங்க. அதுக்கு என்ன இப்போன்னு நீங்க கேக்கலாம். இருங்க. சொல்றேன்.

என் பெற்றோர் எனக்குப் பேர் வைக்கும்போது - ரொம்ப பெரிசா வெச்சது மட்டுமில்லாமே, அதை வார்த்தை வார்த்தையா பிரிச்சி வேறே வெச்சிட்டாங்க. முதல் பேர்லே ரெண்டு பகுதியும், கடைசிப் பேர்லே ரெண்டு பகுதியும், ஆக மொத்தம் நாலு வார்த்தைகள். அதாவது,
6+9+10+8=33 ஆங்கில எழுத்துக்களைக் கொண்டது என் முழுப்பேரு.

என்னோட முதல் பேரோட முதல் பகுதி (சத்யா) உங்க சில பேருக்கு தெரிந்திருக்கும். கடைசிப் பேர்லே முதல் பகுதி ஒரு ஊரில் உள்ள இடத்தின் பேரு (கடைசி பேர்ன்றதாலே அதை இந்த பதிவின் கடைசியிலே சொல்றேன்!!!). இரண்டாம் பகுதி எங்கப்பா பேரு.

நிற்க. (ஏற்கனவே நின்றிருந்தால் உட்கார்க). இப்போ இந்த கடைசிப் பேராலே என்னென்ன பிரச்சினை வந்திருக்குன்னு பாக்கலாம்.

ஒரு தடவை, இங்கே ஒரு அரசாங்க அலுவலகத்துக்கு போய் வேலையை முடிச்சிட்டு, என் பேர் சொல்லிக் கூப்பிடுவாங்கன்னு உட்காந்திருந்தேன். வழக்கம்போல், கண்ணை ஏதோ ஒரு இடத்திலே குத்தி வெச்சிட்டு, மனசை இந்தியாவிலே எங்கேயோ சுத்தவிட்டிருந்தேன்.
அந்த ஆள் என்னோட கடைசி பேரை (முதல் பகுதியை) சொல்லி கூப்பிட்டுக் கொண்டிருந்தார் நானோ - ஆஹா, நாம பொறந்த இடத்தை யாரோ ஒருத்தர் எவ்ளோ அழகா சொல்றாரு பாருப்பா - அப்படின்னு சும்மா உக்காந்திருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சிதான் தெரிஞ்சுது -
அடடா, நம்ம பேரை சொல்றதுக்கு பதிலாதான் ஐயா அப்படி சொல்லிக்கிட்டிருக்காருன்னு. எழுந்து அவர்கிட்டே போனேன். அவரும் 'இது உங்க பேருதானே. ஏன் சும்மா முறைச்சிக்கிட்டு உக்காந்திருந்தீங்க?'ன்னாரு. எனக்கு பயங்கர வெக்கமா போயிடுச்சு. நம்ம கேப்டனுக்கு
தமிழ்லே பிடிக்காத அந்த ஒரு வார்த்தையை சொல்லிட்டு வெளியே வந்துட்டேன்.

அதே மாதிரி இன்னொரு தடவை ஒரு மருத்துவமனைக்குப் போயிருக்கும்போது, அங்கிருந்த நர்ஸம்மா - "உன்னோட கடைசி பேரு (முதல் பகுதி) உச்சரிக்க ரொம்ப கஷ்டமாயிருக்கு. அதுக்கு பதிலா முதல் பேரை (முதல் பகுதி) - சத்யான்னு - சொல்லி கூப்பிடவா" அப்படின்னாங்க. அடக்கஷ்ட காலமே, அதான்மா என் பேரு - அப்படின்னு நினைச்சிக்கிட்டு, "ஓ, அதுக்கென்ன, தாராளமா கூப்பிடுங்க" - அப்படின்னேன்.

இன்னொரு சந்தர்ப்பத்துலே நடந்தது இது. மேஜைக்கு அந்தப்பக்கத்திலிருந்து கேக்குறாரு ஒருத்தரு. "குடும்பத்துலே நீங்க மூணு பேரு ( நான், மனைவி மற்றும் குழந்தை). ஆனா, மூணு பேரோட கடைசி பேரும் வெவ்வேறா இருக்கே. அது எப்படி. குடும்பப்பேரு ஒண்ணுதானே
இருக்கணும்".

நானும் தொண்டையை கனைச்சிக்கிட்டு - "ஐயா, கடைசிப் பேருன்றது எங்களைப் பொருத்தவரை குடும்பப்பேரு கிடையாதுங்க. அது, அவங்கவங்க அப்பா பேருதான். எனக்கு - எங்கப்பா பேரு. என் மனைவிக்கு - அவங்கப்பா பேரு. என் பொண்ணுக்கு - என்னோட முதல்
பேரு. அதனால்தான், எல்லாமே வெவ்வேறா இருக்கு" - அப்படின்னேன்.

"இல்லையே. இந்தியாலே ஷர்மா, குப்தா அப்படின்னு குடும்பப்பேர் இருக்கே. அது எப்படி?" என்றார்.

சரி. இன்னிக்கு இது ஆவறதில்லே அப்படின்னு நினைச்சிக்கிட்டு - இந்திய பழக்கவழக்கங்கள், வட-தென்னிந்தியர்களின் பெயர்களில் உள்ள வித்தியாசங்கள் அனைத்திலும் ஒரு சிறிய சொற்பொழிவு நிகழ்த்தவேண்டியதாயிற்று.

அதன்பிறகுதான் அவர் சமாதானமாகி எங்களை வெளியே போகவிட்டார்.

----

சரி இவ்ளோ சொல்லிட்டு என்னோட கடைசி பேர்லே முதல் பகுதி என்னன்னு சொல்லாமே இருக்க முடியுமா? அது 'Triplicane'.

ஐந்தாவது படிக்கும்போது, என்னோட பேர் மற்றும் அதே இனிஷியலோட இன்னொருவன் வந்துவிட, என்ன பண்றதுன்னு தெரியாம, இனிஷியல்லே கூட ஒரு எழுத்து சேர்க்கறேன்னு பெற்றோர்கள் சேத்துவிட்டதுதான் இந்த 'Triplicane'.

தற்போது சென்னையில் வருமானவரி அலுவலகத்தில் வேலை செய்யும் அந்த சத்யாவை பார்க்கும்போதெல்லாம் - உன்னாலே என் பேரையே மாத்திக்கிட்டேனே? எனக்கு மட்டும் வருமான வரி போடாமே இருக்கக்கூடாதா? என்று வேண்டுகோள் வைப்பது வழக்கம்.

அவரும் வழக்கம்போல் சிரித்துக்கொண்டே - "வேணும்னா ஒரு சாப்பாடு வாங்கித் தர்றேன் - அவ்ளோதான் என்னாலே முடியும்" அப்படின்னு அங்கிருக்கும் கேண்டீனுக்கு கூட்டிப்போய்விடுவார்.



Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP