Monday, December 1, 2008

வட அமெரிக்க பதிவர் சந்திப்பு - பகுதி 1 of 2


(இ-வ): சுதன் (பார்வையாளர்) இளா (விவசாயி), சம்சுதீன் (மருத நாயகம்) மற்றும் இலவசம்.(இ-வ): கேயாரெஸ், நசரேயன், மோகன் கந்தசாமி, சத்யராஜ்குமார்(இ-வ): மேலே குறிப்பிட்டபடி(இ-வ): சஹானா (பார்வையாளர்), ரோஹன் (பார்வையாளர்), சத்யா (ச்சின்னப் பையன்)

(இ-வ): ஜெய் (பார்வையாளர்), மொக்கைச்சாமி
-----

மேலே குறிப்பிட்ட (இ-வ) அப்படின்னா இட்லிவடையோ, இ.வாயோ இல்லே... சரியா படிங்க.. இடமிருந்து வலம்.
------
சிறப்பு விருந்தினர் திரு.பாஸ்டன் பாலா சந்திப்புக்கே வராமல் மட்டம் போட்டுவிட்டார். அவரைக் காணவேண்டுமென்று ஆவலுடன் காத்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சார்பாக மென்மையாக ஒரு கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
-----
5.15 மணிக்கு முதல்முதலா நாந்தான் போய் கதவை திறக்காத உணவகத்தின் முன் தர்ணா செய்து, கடையை திறக்கச் செய்தேன். மெதுவாக 5.45 மணியிலேர்ந்து மக்கள் வர ஆரம்பித்தனர்.
6.30 மணிக்கு மும்பை பிரச்சினையில் பலியானவர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலியுடன் ஆரம்பித்த சந்திப்பில் பல்வேறு சூடான பிரச்சினைகள் அலசப்பட்டன.
இரவு உணவில் கண்டிப்பாக போண்டா இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.
-----
இன்னொரு முக்கியமான நபர் இருக்கிற படம் காமிராலேந்து வரமாட்டேங்குது... நாளைக்கு அதை பிச்சிப் போட்டு, சந்திப்பின் மத்த விவரங்களையும் சொல்றேன்.

34 comments:

வெண்பூ December 1, 2008 at 5:23 AM  

மீ த பஷ்டூ.. !!!:)))

வெண்பூ December 1, 2008 at 5:27 AM  

நல்ல ஜாலியா? கலக்கிட்டீங்க.. புகைப்படங்களுக்கு நன்றி..

சஹானாவையும் கூட்டிட்டு போயாச்சா? பார்வையாளர்னு போடுறதுக்கு பதிலா "வருங்காலப் பதிவர்"னு போடலாமே.. பதிவுக்கு பேர் கூட "ச்சின்னப்பொண்ணு D/o ச்சின்னப்பையன்" அப்படின்னு வெச்சிக்கலாம்... :))))

பரிசல்காரன் December 1, 2008 at 6:57 AM  

//பார்வையாளர்னு போடுறதுக்கு பதிலா "வருங்காலப் பதிவர்"னு போடலாமே.. பதிவுக்கு பேர் கூட "ச்சின்னப்பொண்ணு D/o ச்சின்னப்பையன்" அப்படின்னு வெச்சிக்கலாம்...//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

பரிசல்காரன் December 1, 2008 at 6:57 AM  

என்னா பேசினீங்கப்பா... வெளக்கமா எழுதுங்க...

Mahesh December 1, 2008 at 8:40 AM  

ஆஹா... ஆரம்பிச்சுடுட்டாங்கய்யா...

கலக்குங்க.... நசரேயனை பார்த்ததில் மகிழ்ச்சி.

சஹானா.. என்ன அப்ரென்டிஸா?

ச்சின்னப் பையன் December 1, 2008 at 9:30 AM  

வாங்க பஷ்டு (அபிஷ்டு இல்லே!!!) வெண்பூ -> :-))) அதுக்கு பதிலா ச்சிச்சின்னு ச்செல்லமா கூப்பிட்டிருக்கலாம்.... :-)))

வாங்க பரிசல் -> ஆமா ஆமா போடத்தானே போறோம்... (இதை வெச்சி ஒரு ரெண்டு நாள் பதிவை ஓட்டலாம்னு பாத்தா அவசரப்படறீங்களே!!!)

வாங்க மகேஷ் -> அப்போ என்னெ பாத்தா அமகிழ்ச்சியா!!! அவ்வ்வ்.....

Anonymous,  December 1, 2008 at 10:08 AM  

ச்சின்னப்பையன் உங்க மொக்கைய வீட்லதான் தாங்க முடியல. சஹானாவ பதிவர் சந்திப்புக்கும் கூட்டீட்டுப் போனுமா?
ஐயோ பாவம்.

kannabiran, RAVI SHANKAR (KRS) December 1, 2008 at 10:59 AM  

வந்த அத்தனை பேரிலும் மொக்கை போடாம ஒழுங்கா நடந்துகிட்டது ரெண்டே பேரு தான்!
1. சஹானா
2. கேஆரெஸ்
:)

kannabiran, RAVI SHANKAR (KRS) December 1, 2008 at 11:01 AM  

//பதிவுக்கு பேர் கூட "ச்சின்னப்பொண்ணு D/o ச்சின்னப்பையன்" அப்படின்னு வெச்சிக்கலாம்... :))))//

வெண்பூ
ஒரு ச்-சை விட்டுட்டீங்க
ச்சின்னப்பொண்ணு D/o ச்ச்சின்னப்பையன்
அல்லது
ச்ச்சின்னப்பையன் f/o ச்சின்னப்பொண்ணு

:)

kannabiran, RAVI SHANKAR (KRS) December 1, 2008 at 11:02 AM  

//பரிசல்காரன் said...
என்னா பேசினீங்கப்பா... வெளக்கமா எழுதுங்க...//

ஐயோ
வேண்டாஞ் சாமீ! வேண்டாம்! :)

தாரணி பிரியா December 1, 2008 at 12:41 PM  

நான்காவது போட்டாவுக்கான விளக்கம்

சஹானா; ஏப்பா நாந்தான் அவ்வளவு விளக்கமா வீட்டுல உங்களுக்கு எப்படி பேசணும் அப்படின்னு கிளாஸ் எடுத்தேனே? எல்லாத்தையும் மறந்துட்டு இங்க வந்தும் அவ்வ்வ்வ்வ்வ்வ் அப்படின்னு சிரிக்கிறீங்களே? உங்களை என்ன செய்யலாம்?

rapp December 1, 2008 at 4:04 PM  

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நாளைக்கும் வெறும் படங்கள் மட்டுமா? என்ன பேசுனீங்கன்னு சொல்ல மாட்டீங்களா?

rapp December 1, 2008 at 4:07 PM  

சிங்கம் தூங்கும்போது, ஈ வெளையாண்டா மாதிரி, நான் ஊர்ல இல்லாதப்போ மீ த பர்ஸ்ட் அடிச்சி யாரும் பீத்திக்க வேணாம்னு, சொல்லிக்கிறேன்:):):)

ச்சின்னப் பையன் December 1, 2008 at 4:28 PM  

வாங்க வேலன் ஐயா -> ஒரு தடவை 'டிக்கெட்' கட்டினபிறகு, ரொம்ப தூரம் வண்டியிலே தனியா போறதுக்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது... அதை எதிர்த்து ... என்னால் ஒண்ணும் செய்ய முடியல... அதான்... ஹிஹி..

வாங்க கேயாரெஸ் -> அப்படி சொல்லுங்க... அந்த 'ச்'சை வெச்சித்தாங்க என்னை ரொம்ப பேரு அடையாளம் கண்டுபிடிக்கறாங்க... (சொல்லிக்க வேண்டியதுதான்!!!!)...

வாங்க தாரணி பிரியா -> அவ்வ்வ். நீங்க குசும்பனோட பதிவுகளை விடாமே படிக்கறீங்களா??? இப்படி தாக்குறீங்களே????

ச்சின்னப் பையன் December 1, 2008 at 4:30 PM  

வாங்க பாபாஜி -> அவ்வ்.. எல்லாரும் கொல வெறியோட காத்துண்டிருந்தா... இங்கே வந்து சும்மா சிரிச்சிட்டு போயிட்டீங்களே????

வாங்க ராப் -> அட.. விஷயத்தை சொல்றேங்க... அது வரைக்கும் தாங்க மாட்டீங்கன்னா, மோகன் பதிவுல போய் ஒரு தடவை பாத்துக்கங்க...

இலவசக்கொத்தனார் December 1, 2008 at 9:29 PM  

இப்படி அபாண்டமா பொய் சொல்லறீங்களே. நானும் கணேஷ் அண்ணாவும் சரியா 5:30 மணிக்கு வந்தோமே...

நசரேயன் December 1, 2008 at 10:49 PM  

/*
வந்த அத்தனை பேரிலும் மொக்கை போடாம ஒழுங்கா நடந்துகிட்டது ரெண்டே பேரு தான்!
1. சஹானா
2. கேஆரெஸ்
:)
*/
இதுல நீங்க சஹானா
அப்பாவையும் சேத்துக்கலாம்.

அப்ப அதிகமா மொக்கை பதிவர் விருது யாருக்கு ?

நசரேயன் December 1, 2008 at 10:52 PM  

/*
வாங்க மகேஷ் -> அப்போ என்னெ பாத்தா அமகிழ்ச்சியா!!! அவ்வ்வ்.....
*/
நினைச்சதை விட ரெம்ப கேவலமா இருந்திருப்பேன் அதுக்கு தான் அது(கொசு வத்தி .. வின்னர் வடிவேலு காமெடி)

நசரேயன் December 1, 2008 at 10:56 PM  

/*
சஹானா; ஏப்பா நாந்தான் அவ்வளவு விளக்கமா வீட்டுல உங்களுக்கு எப்படி பேசணும் அப்படின்னு கிளாஸ் எடுத்தேனே? எல்லாத்தையும் மறந்துட்டு இங்க வந்தும் அவ்வ்வ்வ்வ்வ்வ் அப்படின்னு சிரிக்கிறீங்களே? உங்களை என்ன செய்யலாம்?
*/
அவரு சிரிச்சதே அந்த படத்துக்குத்தான், என்னை பொறுத்த வரையில் அவருக்கு சஹானா கிளாஸ் எடுத்த மாதிரி தெரியலை!!!!

நசரேயன் December 1, 2008 at 11:01 PM  
This comment has been removed by the author.
ச்சின்னப் பையன் December 2, 2008 at 9:27 AM  

வாங்க கொத்ஸ் -> அவ்வ்வ்.. வரலாறு ரொம்ம்ம்ப முக்கியம்ன்றீங்களா!!!!! சரி சரி.... 5.30க்குதான் வந்தீங்க........ சொல்லிட்டேன்.....:-))

வாங்க நசரேயன் -> ஆஆஆ.. என்ன ஒரு கமெண்ட் போட்டுட்டு எடுத்துட்டீங்க... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...

பழமைபேசி December 2, 2008 at 11:29 AM  
This comment has been removed by the author.
பழமைபேசி December 2, 2008 at 11:30 AM  

மாட்டுக்கார வேலன் அண்ணன் குடுகுடுப்பையாரும், நானும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தோம். அதை பொதுக் குழுவுலயோ, செயற்குழுவுலயோ வாசிச்சதாக செய்தியும் இல்ல. புகைப் படமும் இல்ல. ஏன்? வட தென் கிழக்கு அமெரிக்க பதிவர்களை கண்டுக்காதது ஏன்? அடுத்த கூட்டத்துல இதை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவோம்.

குடுகுடுப்பை December 2, 2008 at 11:36 AM  

பழமைபேசி said...

மாட்டுக்கார வேலன் அண்ணன் குடுகுடுப்பையாரும், நானும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தோம். அதை பொதுக் குழுவுலயோ, செயற்குழுவுலயோ வாசிச்சதாக செய்தியும் இல்ல. புகைப் படமும் இல்ல. ஏன்? வட தென் கிழக்கு அமெரிக்க பதிவர்களை கண்டுக்காதது ஏன்? அடுத்த கூட்டத்துல இதை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவோம்.
//

நானும் வழிமொழிகிறேன், வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது.

கிரி December 2, 2008 at 12:06 PM  

விளக்கமா ஒரு பதிவு போடுங்க :-)

Muthukumar December 2, 2008 at 12:24 PM  

ஆமா எந்த ஊருல நடந்துச்சி ?

மொக்கைச்சாமி December 2, 2008 at 12:25 PM  

குடுகுடுப்பை மற்றும் பழமைபேசி படங்களை போட்டு (enlarged) உடனே பிரச்னையை சரிசெய்யுமாறு ச்சின்னப்பையனை கேட்டுகொள்கிறேன்... :-)

நசரேயன் December 2, 2008 at 12:38 PM  

/*
வாங்க நசரேயன் -> ஆஆஆ.. என்ன ஒரு கமெண்ட் போட்டுட்டு எடுத்துட்டீங்க... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...
*/
நகைசுவைன்னு நினைச்சு நக கடி சுவை ஆக ௬டாதுன்னு எடுத்துபுட்டேன்

நசரேயன் December 2, 2008 at 12:46 PM  

/*
மாட்டுக்கார வேலன் அண்ணன் குடுகுடுப்பையாரும், நானும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தோம். அதை பொதுக் குழுவுலயோ, செயற்குழுவுலயோ வாசிச்சதாக செய்தியும் இல்ல. புகைப் படமும் இல்ல. ஏன்? வட தென் கிழக்கு அமெரிக்க பதிவர்களை கண்டுக்காதது ஏன்? அடுத்த கூட்டத்துல இதை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவோம்.
*/
செய்தியை கொண்டு வந்த குடுகுடுப்பை மாடுகள் மந்தையில் இருந்து பிரிந்து வேறு வேறு திசைகளுக்கு சென்று விட்டது, அவைகள் மீண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே

ச்சின்னப் பையன் December 2, 2008 at 8:55 PM  

வாங்க நட்சத்திர பழமைபேசி -> அந்த வாழ்த்துச் செய்தியை என்கிட்டே சொல்லியிருந்தீங்கன்னா மானாட மயிலாட ச்சீச்சீ மாநாட்டு மடல்லே போட்டுருப்பேனே.... :-))

வாங்க கிரி -> அடுத்த பதிவும் போட்டாச்சுங்க... 2 of 2 பாருங்க...

வாங்க முத்துகுமார் -> Somerset, NJ ன்ற இடத்துலே நடந்துதுங்க.. நீங்க எங்கன இருக்கீங்க?

வாங்க மொக்கைச்சாமி -> கவலைய விடுங்க.. போட்டோதானே.. போட்டுடுவோம்.... :-))

மோகன் கந்தசாமி December 3, 2008 at 11:13 PM  

உங்க படமும் ரோகன் படமும் எனக்கு கிடைக்கல! அதான் வெளியிடல,

பொம்ம, கப்ப, என பதிவ ரெண்டா பிரிச்சி போட்டுடீங்க போல!

RAMYA December 4, 2008 at 1:39 AM  

இவ்வளவு பேருதான் வந்தாங்களா. குடு குடு தாமதமாக வந்தார் போல. எல்லார் படத்தையும் போடுங்கப்பா.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP