எனது டைரியிலிருந்து ஒரு பக்கம்
காலை 5.00am : விஜய் டிவியில் மந்த்ராலய மகான் பற்றி ஒலிபரப்பினார்கள். ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.
6.00am : பக்கத்து கோயிலில் ஏதோ திருவிழாவாம். பத்து நாட்களாய் மைக் செட் போட்டு பாட்டு போடறாங்களாம். இன்னிக்குதான் கேள்விப்பட்டேன். எனக்கு எதுவும் கேட்கவில்லை.
8.00am : பக்கத்தில் இருக்கும் ஒரு கோயிலுக்கு போயிருந்தேன். தொன்னையில் வைத்து அருமையான பொங்கல் கொடுத்தார்கள். அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு, சிறிது நேரம் கழித்து கொடுத்த தயிர் சாதமும் சாப்பிட்டேன். கடவுளை ஒரு முறையாவது பார்க்க வேண்டுமென்று நினைத்தேன். மறந்து விட்டேன்.
10.30am : சன் டிவியில் மெகாத்தொடர்கள் ஆரம்பம். எல்லாமே அருமையாக இருந்தது. அடுத்த மூணு மணி நேரம் போனதே தெரியவில்லை.
மதியம்
12.00 noon: தங்கமணி அருமையாக சமைத்திருந்தார். எப்போதும் சமைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.
1.00pm: 'ஃபேவரைட்ஸில்' வைத்திருக்கும் - வீக் எண்ட் ஜொள்ளு - பதிவு போடும் பதிவர்கள் யாரும் இன்றைக்கும் பதிவே போடவில்லை. பழைய பதிவுகளையே இன்னொரு முறை பார்த்தேன்.
2.00pm: தூக்கம் கண்ணை சுழற்றியதால், சிறிது கண்ணயர்ந்தேன்.
4.30pm: பக்கத்து வீட்டிலிருந்து முறுக்கு கொடுத்தனுப்பியிருந்தார்கள். பாக்கு குத்தும் உரலில் வைத்து இடித்து, பொடி செய்து சாப்பிட்டேன். அருமையாக இருந்தது.
7.00pm: எங்கள் வீட்டு விளக்கு மிகவும் மங்கலாக இருக்கிறதே என்று சொல்லி தங்கமணியிடம் திட்டு வாங்கினேன். இதை விட வெளிச்சம் அதிகமாக விளக்கு போட்டால், பக்கத்து வீட்டிலிருந்து வந்து திட்டுவார்கள் என்று சொன்னார்.
10.30pm: இப்போல்லாம் மிட் நைட் மசாலாவில் சரியான பாட்டே போடுவதில்லை. நாளைக்கு டிவி சேனலுக்கு கடிதம் எழுதணும்.
தேதி: டிசம்பர் 26, 2048
-------------
பிகு: அ. இப்போ எனக்கு டைரி எழுதும் பழக்கமில்லை. ஒரு வேளை வருங்காலத்தில் நான் டைரி எழுதினால் கற்பனை செய்து பார்த்தேன். ஹிஹி... லேபிளை பாத்துட்டேளா!!!
ஆ. இந்த வருஷத்தை ஒரு மொக்கையோட முடிக்கலாமேன்ற நல்ல எண்ணம்தான் இந்த பதிவு. எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
25 comments:
me the 1st:)
புத்தாண்டு வாழ்த்துக்கள் பாஸ்:)
உங்கள் தங்கமணிக்கும், சஹானாக்கும் சொல்லிடுங்க:)
\\மதியம்
12.00 noon: தங்கமணி அருமையாக சமைத்திருந்தார். எப்போதும் சமைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.\\
இப்ப கிச்சன் கேபினட் உங்ககிட்டதானா?
புத்தாண்டு வாழ்த்துக்கள்...
தொங்கிகிட்டு இருங்க...பதிவ படிச்சுட்டு வர்றேன்
//
பக்கத்து வீட்டிலிருந்து முறுக்கு கொடுத்தனுப்பியிருந்தார்கள். பாக்கு குத்தும் உரலில் வைத்து இடித்து, பொடி செய்து சாப்பிட்டேன். அருமையாக இருந்தது.
//
எது உரலா?
ஹய்யோ ஹய்யோ...
உங்கள் சஹானாவுக்கு புத்தாண்டு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்...
செம மொக்கை, புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்களுக்கும் தங்கமணிக்கும் சஹானாவுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
//கடவுளை ஒரு முறையாவது பார்க்க வேண்டுமென்று நினைத்தேன். மறந்து விட்டேன்.//
அட 2048லயும் நீங்க் இப்படித்தானா
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..
அய்யய்யய்யய்யய்யய்யய்யய்ய
நல்ல நாளும் அதுவுமா...
புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணோவ் :)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
உங்கள் தங்கமணிக்கும், சஹானாக்கும் சொல்லிடுங்க
புத்தாண்டு வாழ்த்துக்கள்
8.00am : பக்கத்தில் இருக்கும் ஒரு கோயிலுக்கு போயிருந்தேன். தொன்னையில் வைத்து அருமையான பொங்கல் கொடுத்தார்கள். அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு, சிறிது நேரம் கழித்து கொடுத்த தயிர் சாதமும் சாப்பிட்டேன். // இதுதான் இருப்பதிலேயே டாப்பு தல..
புத்தாண்டு வாழ்த்துக்கள்...
//ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.//
மற்ற மணி நேரங்கள் போவது மட்டும் தெரியுமாக்கும்!
//தங்கமணி அருமையாக சமைத்திருந்தார். //
உப்புமா தானே!
//தேதி: டிசம்பர் 26, 2048//
2030?
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
:)
மூணு நாள் கழிச்சி இன்னிக்குத்தான் இணையத்துக்கு வந்தேன்.
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி..
இனிய பிறந்த நாள் ... ஐ ஆம் சாரி... புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நன்றி...
அன்பின் ச்சின்னப் பையன்,
இப்பதிவினைப் பார்க்கவும்... :)
//http://blogintamil.blogspot.com/2009/01/blog-post_6945.html
உங்கள் சேவை தொடரட்டும் நண்பரே !
புத்தாண்டு வாழ்த்துக்கள்
:))
புத்தாண்டு வாழ்த்துக்கள்...
//'ஃபேவரைட்ஸில்' வைத்திருக்கும் - வீக் எண்ட் ஜொள்ளு - பதிவு போடும் பதிவர்கள் //
--யார்பா அது....????
//'ஃபேவரைட்ஸில்' வைத்திருக்கும் - வீக் எண்ட் ஜொள்ளு - பதிவு போடும் பதிவர்கள் //
தலைவா நமக்கும் சொல்லுங்க...
Post a Comment