வீட்டு வேலை செய்யாமல் ரங்கமணிகள் தப்பிப்பது எப்படி?
என்னதான் பிஸியாக காட்டிக் கொண்டாலும் சில சமயங்களில் ரங்கமணிகள் வீட்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. பதிவை படிக்கும் நிகழ்கால / வருங்கால ரங்கமணிகளுக்காக - அந்த சிற்சில வேலைகளையும் செய்யாமல் தப்பிப்பது எப்படி என்பதைத்தான் இங்கே பார்க்கப் போறோம். இந்த யோசனைகளை அமுல்படுத்தும் ரங்கமணிகள் - தங்கள் முயற்சியில் வெற்றியடைந்தால் என்னை வாழ்த்தி பதிவிடவும். மாறாக ஏதேனும் 'பின்விளைவுகளை' சந்திக்க நேர்ந்தால், அதற்கு கம்பெனி பொறுப்பாகாது. பாத்திரம் தேய்த்தல்: திருமணமான ரங்கமணிகளுக்கு முதன்முதலில் கொடுக்கப்படும் வேலை இதுவாகத்தான் இருக்கும். குழாயடியில் நின்று பாத்திரம் தேய்ப்பது ரொம்பவே கஷ்டமான செயல். அதுவும் ஒவ்வொரு பாத்திரத்தையும் நன்றாக தேய்த்தபிறகு அதில் ஏதாவது கறை இருக்கா இல்லே எல்லாம் போய் சுத்தமாயிடுச்சான்னு கவனமாக பார்க்க வேண்டியிருக்கும். அப்படி ஏதாவது ஒரு கறை இருந்துச்சுன்னா, கஷ்டப்பட்டு எல்லா வேலையும் செய்தபிறகும் திட்டு வாங்கும் வாய்ப்பு நிறையவே உண்டு. அதனால் நாம் செய்ய வேண்டியது என்னன்னா - ஒரு உதாரணத்தோட சொல்றேன். நம்ம நடிகைகள் மணிக்கணக்குலே மேக்கப் போட்டுக்குவாங்க. ஆனா கடைசியில் உதடுக்கு மேலே அல்லது கீழே, கறுப்பா சின்ன மச்சம் ஒண்ணு வெச்சுக்குவாங்க. கேட்டா திருஷ்டி பொட்டுன்னுவாங்க. அதே மாதிரி, பாத்திரங்கள நல்லா சுத்தம் செய்தபிறகு - தேர்ந்தெடுத்த சில பாத்திரங்களில் அங்கங்கே சின்ன திருஷ்டி பொட்டு இருக்கறா மாதிரி பாத்துக்கங்க. அவ்வளவுதான். குக்கரில் அரிசி, பருப்பு அல்லது காய்களை வைத்து - விசில்களை எண்ணி சரியாக அடுப்பை அணைப்பது - கேட்பதற்கு சுலபமாகத்தான் தெரியும். ஆனால், அப்படி விசில்களை கவனமாக எண்ண வேண்டும் என்பதால் அந்த ஐந்து/பத்து நிமிடங்களுக்கு வேறெந்த வேலையும் செய்ய முடியாது. நண்பர்களின் பதிவுகளில் ஒரு பின்னூட்டமோ, ஓட்டோ போட முடியாது. அதே மாதிரி, சில சமயங்களில் கேஸ்கட் (gaskette) பழுதாகி விடும். அப்போது குக்கர் மூடியை காற்று வெளியேறாமல் அழுத்தமாக பிடித்துக் கொள்ள வேண்டும். உள்ளே சரியான அளவில் தண்ணீர் போட வேண்டும். இவ்ளோ பிரச்சினைகளிருக்கும் இந்த வேலையிலிருந்து தப்பிப்பது மிகவும் சுலபம். கீழே படிங்க. அ. ஒரு தடவை அரிசியுடன் போடும் தண்ணீர் அளவை சற்று அதிகரிக்கவும். உதாரணத்திற்கு - 5 டம்ளர் தண்ணீர் போடவேண்டுமென்றால், சரியாக 8 அல்லது 9 டம்ளர் போடுங்கள் போதும். ஆ. அதே மாதிரி விசில் எண்ணிக்கை. ஐந்து விசிலில் குக்கரை இறக்க வேண்டும் என்று சொன்னால், முதல் விசில் வந்தவுடன் காதை மூடிக்கொள்ளவும். குத்து மதிப்பாக அடுத்த பத்து நிமிடம் கழித்து குக்கரை இறக்கவும். இ. அரிசியே போடாமலும் (வெறும் தண்ணீரோடு) குக்கர் வைக்கலாம். அதெல்லாம் உங்கள் தைரியத்தைப் பொறுத்து நீங்களே முடிவு செய்துகொள்ள வேண்டியது. மேற்கூறிய மூன்றினையும் ஒன்று அல்லது இரண்டு தடவை செய்தால் போதும் - வாழ்க்கையில் இனிமேல் நீங்கள் குக்கர் வைக்கவே வேண்டியிருக்காது. எல்லாவற்றையும் தங்கமணியே பார்த்துக் கொள்வார்கள். வீட்டை பெருக்கி, ஒட்டடை அடித்தல்: என்னிக்காவது ஒரு நாள் லீவில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்தாலோ, சமீபத்தில் 1980யில் நடந்த ஒரு கிரிக்கெட் மேட்சை (வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா) பரபரப்பாக பார்த்துக் கொண்டிருந்தாலோ - அப்போதுதான் வீட்டை பெருக்க வேண்டுமென்றும், ஒட்டடை அடிக்க வேண்டுமென்றும் தங்கமணிகளுக்கு நினைவு வரும். வேறு வழியில்லாமல் ரங்கமணிகள் அந்த வேலைகளை செய்தாலும், போஸ்ட் மார்டம் ரிப்போர்டில் நிறைய குற்றங்கள் இடம்பெற்றிருக்கும். இப்போ இந்த வேலையிலிருந்து தப்பிப்பது எப்படின்றத பாப்போம். இதுக்கு சரியான உதாரணம் நம்ம ஊர் குப்பை வண்டி. அதாவது ஒரு இடத்திலே இருக்கற குப்பையை பல இடங்களுக்கும் பரப்புவது. புரிஞ்சிக்கிட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஒட்டடை அடிக்கணும்னா சுவத்திலே ஒரு மூலையில் இருக்கறதை, அப்படியே கோடு மாதிரி பல இடங்களுக்கும் இழுத்துடணும். இந்த மாதிரி செய்யத் தெரியலேன்னா கவலைப்பட வேண்டாம். இதுக்கெல்லாம் எங்கேயும் க்ராஷ்-கோர்ஸ் கிடையாது. நீங்களே ஓரிரு முறை முயற்சி செஞ்சா செய்துடலாம்.
இந்த பதிவில் ரங்கமணிகளிடம் ஒப்படைக்கப்படும் மிகவும் முக்கியமான டாப்-3 வேலைகளை மட்டும்தான் பாக்கப் போறோம். மக்களின் ஆதரவுக்கேற்ப இதே தலைப்பில் அடுத்தடுத்த பதிவுகள் வெளியிடப்படும்.
"எதையும் உருப்படியா செய்யமாட்டீங்க. இனிமே உங்ககிட்டே சொல்லி பிரயோஜனமில்லே. நானே பாத்திரத்தை தேய்ச்சிக்கறேன்" - அப்படின்னு தங்கமணிகள் காரியத்தில் இறங்கிடுவாங்க. நீங்க - வேறென்ன - ஒரு தடவை காதை துடைச்சிக்கிட்டு - ஜாலியா தொலைக்காட்சியோ கணிணியோ ஆன் பண்ணிடுங்க. அவ்வளவுதான். கொஞ்ச நாளைக்கு பாத்திரமே தேய்க்க வேண்டாம்.
குக்கர் வைப்பது:
அதுக்கப்புறம் கவலையே கிடையாது. ரஞ்சிக்கோப்பை மேட்சிலிருந்து பழைய மேட்ச் எதுவாயிருந்தாலும், கால் மேல் கால் போட்டு பார்த்துக்கொண்டே இருக்கலாம். ‘யாரும்' தொந்தரவே செய்ய மாட்டார்கள்.
28 comments:
குருவே... உங்க அனுபவத்தால் இந்த தலைமுறையினருக்கும் வருங்கால தலைமுறையினருக்கும் பெரிதும் உதவுகிறீர்கள்... மிக்க நன்றி... உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க சிபாரிசு செய்கிறேன் :p
மீ த பஸ்ட்டு & செக்கண்டு...
me the 3rd
படிச்சிட்டு வரேன்
ட்ரிங் ட்ரிங் தங்கமணி
கொஞ்சம் இங்கே வாங்க
உங்க ராங்கமனியை
இங்கே வந்து பாருங்க
உங்க வேலை கொஞ்சம் கூட
குறையற மாதிரி தெரியலை
உஷாரு உஷாரு உஷாரு
இக்கால மற்றும் வருங்கால தங்கமணிகளே
என் அருமை சகோதரிகளே
உங்களுக்காவே இந்த ரம்யா கொஞ்சம்
அக்கறையுடன் சில டிப்ஸ் கொடுத்துள்ளேன்
பாருங்க.
1. பாத்திரம் எப்படி இருந்தாலும் ஒன்னும் கண்டுக்காதீங்க
2. குக்கர் விசில் எண்ணிக்கை மறந்தாலும் கண்டுக்காதீங்க
3. சரியா வீடு வாசல் கூட்டலைன்னாலும் திட்டாதீங்க
பி. கு.
இதெல்லாம் சரியா டைபிடிச்சீங்கன்னா
உங்க வேலை பளு கொஞ்சம் குறையும்.
இல்லேன்னா வேலை பளு அதிகம் ஆகும் இன்னொரு விஷயம்,
வேலை முடியும் வரை வேறு எதிலும் கவனத்தை செலுத்தாமல் இருக்க
முதலில் செய்ய வேண்டியது
கம்ப்யூட்டர் வேலை செய்யாத மாதிரி
Hardware Engg. கூட பேச்சுவார்த்தை
நடத்தி காரியத்தை கச்சிதமா முடிக்க கத்துக்குங்க
இவைகள் தான் இந்த ரம்யா டீச்சரின் அறிவுரைகள் .........
ஆமா சொல்லிப்புட்டேன்.....
//அதெல்லாம் உங்கள் தைரியத்தைப் பொறுத்து நீங்களே முடிவு செய்துகொள்ள வேண்டியது //
உங்களுக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்த்தி...!
ஆனா, பல ரங்க மணிகளுக்கு இல்ல....!
ஹி... ஹி..!
என்னாங்க சின்னப்பையன்
இப்படி ஒரே அறிவுரை
சொல்லி இந்த ரம்யா
பொண்ணு தங்கமணிகளை
உசுபேத்தி விட்டுடுச்சே
அவ்வளவுதானா ?????
உங்க வீட்ல தங்கமணி இதைப் படிச்சுட்டாங்களா? அப்ப அடுத்த பதிவு "ரங்கமணிகளை சரியாக வேலை செய்ய வைப்பது எப்படி?" தானே? :)
வாங்க விக்னேஸ்வரன் -> ஆஹா... டாக்டர் விஜய்கூட நானா... என் தலக்கு கிடைச்ச பட்டமே எனக்கா.... நான் போன ஜென்மத்துலே செஞ்ச பாக்கியம்தான்... சீக்கிரம் கொடுங்க.... :-)))
வாங்க ரம்யா -> கொலவெறியோடத்தான் இருக்கீங்க... :-))
ஆனா முக்கியமான விஷயத்தை ரங்கமணிகளாகிய நாங்கள் தெரிஞ்சி வெச்சிருக்கோம். அது என்னன்னா, தங்கமணிகளுக்கு க்வாலிட்டிதான் முக்கியம்.... அதனால் நீங்க சொல்றதெல்லாம் சரிப்படாது.... ஹெஹெ....
வாங்க நவ நீதன் -> ரங்கமணிகளின் தைரியத்தை வளர்க்க இன்னும் பல பதிவுகள் போட்டா போச்சு... நீங்க கவலையை விடுங்க... :-)))
வாங்க தில்லாலங்கடி -> மனச தளர விட்டுடாதீங்க... பொது வாழ்க்கைக்கு வந்தாச்சுன்னா இதெல்லாம் ஜகஜம்தான். நாமளும் ஒரு கை பாத்துடுவோம்.. என்ன ???
வாங்க மகேஷ்ஜி -> ஹிஹி... கூடியமட்டும் அதை தடுக்க பாப்போம். இல்லேன்னா வேறே வழி??????? :-))))
வெளிநாட்டுல இருக்க தைரியத்துல இதெல்லாம் ஓக்கே.
உள்ளூர்னா,மாமியார் வீட்டுக்குப் போய் தங்கமணியக் கிளப்பீட்டு வர்ர கஷ்டத்துக்கு வாய மூடீட்டு இதச் செஞ்சுர்றது பெட்டர்.
உங்கள் யோசனைகள் மிக அழகானவை. கண்டிப்பாக செயல்படுத்திட வேண்டியதுதான். துணி தோய்ப்பதற்கு ஒரு நல்ல யோசனை சொல்லவும். அதுதான் "..முடியல.."
நீங்க பூரி கட்டைக்கு வேலை கொடுத்துருவிங்க போல தெரியுதே!
//வாழ்க்கையில் இனிமேல் நீங்கள் குக்கர் வைக்கவே வேண்டியிருக்காது. எல்லாவற்றையும் தங்கமணியே பார்த்துக் கொள்வார்கள்.//
இப்ப்டி தான் ஒரு முறை செய்து ஹோட்டல் சாப்பாட்டிற்கு 200 ருபாய் பழுத்து விட்டது
வாங்க வேலன் ஐயா -> ஹாஹா... இதுலே உள்ளூர் பிரச்சினை வெளியூர் பிரச்சினை வேறே இருக்கா.... சூப்பர்...
வாங்க தாமிரா -> அடுத்த பாகம் போட்டேன்னா கண்டிப்பா அதிலே துணி தோய்ப்பதையும் சேத்துடறேன்... ஓகேவா.... :-)))
வாங்க வால் -> ஹாஹா... சரி சரி.... எல்லாத்தையும் ஏற்கனவே முயற்சி செய்து பாத்துட்டீங்கன்னு நினைக்கிறேன்... :-)))
நீங்க ஒரு அறிவு களஞ்சியம்
அப்படியே இந்த காய்கறி நறுக்க வேண்டியுள்ளது.. அதுக்கும் எதனாச்சும் வழி கண்டு பிடியுங்களேன்..
இங்க ரொம்ப உசாரா இருக்காங்க..
நீங்கதான் அழகா காய் நறுக்கி கொடுக்கிறீங்க.. அதனால நீங்களே நறுக்கி கொடுத்திடுங்க அப்படின்னு 10 ஐஸை தூக்கி தலையில வச்சு நம்மள வேலை வாங்கிடுவாங்க..
இத எப்படி சமாளிக்கிறதுன்னு புரியல..
இங்க குக்கர் இல்லை.. இந்த கேஸ்கெட் ப்ராப்ளம் எல்லாம் கிடையாது.. எலெக்டிரிக் குக்கர் தான்.. இந்த டம்ளர் அரிசி கணக்கெல்லாம் சரியா வரமாட்டேங்குது.. நீங்க சொன்ன மாதிரி ரொம்ப தண்ணி வச்சு ஒரு தடவ டபாய்ச்சா.. அடுத்த தடவ போகும் போதே, 3 டம்ளர் தண்ணி வைங்க போதும், போன தடவ மாதிரி 5 டம்ளர் வைக்காதீங்க அப்படின்னு, ஒவ்வொரு தடவையும் சொல்றாங்க்..
ரொம்ப ஈஸியா எழுதிபுட்டீங்க..
சொல்றது ஈஸி, செய்யறதுதான் கஷ்டம்..
//
அரிசியே போடாமலும் (வெறும் தண்ணீரோடு) குக்கர் வைக்கலாம். அதெல்லாம் உங்கள் தைரியத்தைப் பொறுத்து நீங்களே முடிவு செய்துகொள்ள வேண்டியது
//
முடியல.. நம்ம தகிரியம் எப்புடி?
//
Labels: டமாஸ் மாதிரி
//
இது தான் டாப்
ஆபிஸ் ல இருந்து லேட்டா வந்தா பிரச்னையும் சேர்ந்து வருமாமே? அதெல்லாம் எப்டி சமைக்கிறது.. ச்ச் சே.. சமாளிக்கிது
வாங்க நசரேயன் -> நன்றிங்கோ.... ஆமா. அது என்ன ஒரு கமெண்டை தூக்கிட்டீங்க?... என்ன திட்டலியே!!!
வாங்க இராகவன் -> அடடா. இந்த பதிவோட சாராம்சமே ‘எதை சரியா செய்தாலும் மறுபடி அந்த வேலையே நமக்கு வரும்'றதுதான். இதை புரிஞ்சிக்கிட்டா இந்த நாள் மட்டுமில்லே - எல்லா நாளும் இனிய நாள்தான்... ஓகேவா????... :-)))
வாங்க ஆளவந்தான் -> அவ்வ். டமாஸ் 'மாதிரி' தான்னு சொல்றீங்களா????
இந்த ஐடியாக்களை ஏற்கனவே முயற்சி பண்ணி பார்த்ததில் எல்லாமே Backfire ஆகி ஒழுங்கா இந்த வேலைகளை செய்யும்வரைக்கும் திரும்ப திரும்ப செய்ய சொல்லிட்டாங்க தங்கமணி...
டாக்டர்.ச்சின்னப்பையன் இதுக்கு ஒரு வழி சொல்லுங்க.
ஓஓ - இப்படி எந்த வேளையும் எந்த வேலையும் செய்யாம பதிவு போடறதுக்கு அனுமதி வழங்கறாங்களா தங்க்ஸ் - ம்ம்ம்ம்ம் - பரவா இல்ல
- கொடுத்து வச்ச ஆளு
நீங்க என்ன எட்டப்பனுக்கு பக்கத்து வீடா, காந்தி தெருவா, அரிச்சந்திரன் நண்பனா, .................................... நல்ல இருங்கயா நல்ல இருங்க, எந்த எந்த தங்கமணிங்க சாமியாட போகுதோ இரங்கமணிக்கே வெளிச்சம். இன்னும் 10 நாளைக்கு வேலை வேலைன்னு சொல்லிகொண்டு 10, 11க்கு தான் வருவார்களாக்கும்............
பனிமலர்.
இப்படியெல்லாம் பண்ணினா ரங்கமணி இல்ல - Wrong-mani :)
வாங்க பிரேம்ஜி -> ஹாஹா... கொஞ்ச நாள் டைம் கொடுங்க. நான் முதல்லே ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.... ஹிஹி..
வாங்க சீனா ஐயா -> நான் பட்ட கஷ்டங்கள் ஊர் படக்கூடாதுன்னு சொல்றதுதாங்க இதெல்லாம்.... அவ்வ்வ்வ்...
வாங்க பனிமலர் -> ஹாஹா.... என் கடன் கலகமூட்டிக் கிடப்பதே.... :-)))
வாங்க சின்ன அம்மிணி -> அவ்வ். இங்கே கூட அப்படித்தான் சொல்றாங்க....
//உங்க அனுபவத்தால் இந்த தலைமுறையினருக்கும் வருங்கால தலைமுறையினருக்கும் பெரிதும் உதவுகிறீர்கள்... மிக்க நன்றி... உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க சிபாரிசு செய்கிறேன்//
நானும் வழிமொழிகிறேன் !
Post a Comment