Showing posts with label திட்டாதீங்க. Show all posts
Showing posts with label திட்டாதீங்க. Show all posts

Tuesday, May 22, 2012

உட்காருங்க. உட்காருங்க.

முக்கிய டிஸ்கி: வழக்கம்போல் லேபிளை முதலில் படித்து விடவும். பின்னர் வருத்தப்படக் கூடாது.

அடடே. வாங்க வாங்க.

வந்துட்டேன். நலமா?

நலமே. நீங்க?

நானும் நலமே.

உட்காருங்க.

இல்லே முதல்லே நீங்க உட்காருங்க.

ம்ஹூம். நீங்கதான் முதல்லே உட்காரணும்.

அட சொல்ற பேச்சை கேளுங்க. மரியாதையா உட்காருங்க.

என்னங்க. நீங்க பெரியவங்க. நீங்கதான் முதல்லே உட்காரணும்.

எனக்கு வேலை வாங்கித் தந்த தெய்வம் நீங்க. நீங்கதான் முதல்லே உட்காரணும்.

வேலை சரி. எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து என் வாழ்க்கையை மங்களகரமா துவக்கி வெச்ச நீங்கதான் முதல்லே உட்காரணும்.

இது சரிப்படாது. இப்ப உட்காரறீங்களா இல்லையா?

முடியாதுங்க. நீங்கதான் முதலில்.

இத பார்றா. சொன்னா கேளு.

டேய் @#, நீ கேளுடா மொதல்லே.

டேய் வெண்ணை, முன்னாடி இருந்த வேலையில் நான் நிம்மதியா இருந்தேண்டா. நீ வாங்கிக் குடுத்தே பாரு ஒரு வேலை, @#$ என் நிம்மதியே போச்சு. இவ்வளவும் பண்ணிட்டு இங்கே உட்காரவும் மாட்டேன்னா என்னடா அர்த்தம்?

வெளக்கெண்ணை, சிவனேன்னு தனியா இருந்த எனக்கு ஒரு பொண்ணை.. பொண்ணா அவ... கட்டி வெச்சியே, என்ன பாடு படுத்தறா தெரியுமா? அன்னிலேர்ந்தே நீ என்னிக்கு என்கிட்டே மாட்டுவேன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். இப்போ இங்கே வந்து உட்காரவும் மாட்டேன்னு வம்பு பண்றே?

சரி சரி விடுங்க. சமாதானமா போயிடுவோம்.

ஆமா. நான் கொஞ்சம் அதிகமா பேசிட்டேன். மன்னிச்சிடுங்க.

சே. ச்சே. இதென்ன பெரிய பெரிய வார்த்தையா சொல்லிக்கிட்டு.

சரி. உட்காருங்க.

ம்ஹூம். நீங்கதான் முதல்லே உட்காரணும்.

***

Read more...

Saturday, March 3, 2012

ட்விட்டர் லிஸ்ட் எப்படி உருவாக்கலாம்?




முக்கியமான டிஸ்கி : இது யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே. ஏன்னா, இதில் நானே சில பிரிவுகளில் வருவேன்!! அதனால், படிச்சிட்டு, டென்சனாகாமே மறந்துடுங்க. (லேபிளையும் ஒரு முறை பார்த்து விடவும்!)


***

ட்விட்டர் TL-ஐ லிஸ்ட் போட்டு பிரித்து வைத்தால், அனைத்து டிவிட்டுகளும் படிப்பதற்கு சுலபமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனா, அந்த லிஸ்ட்களை எப்படி உருவாக்குவது? கீழ்க்கண்டவாறு செய்தால், பலன் இருக்குமான்னு பாத்து சொல்லுங்க.

லிஸ்ட்களின் லிஸ்ட் :


1. இசை-ராசா

2. இசை-ரகுமான்


3. கிரிக்கெட்-சச்சின்

4. கிரிக்கெட்-அசச்சின்


5. கர்நாடக இசை

5a.கர்நாடக இசை-TMK மட்டும்


6. பண்பலையில் பாட்டு போடுபவர்கள் / கேட்பவர்கள் / பாட்டு போடச் சொல்லி கேட்பவர்கள்.

7. இணையத்தில் / யூட்யூபில் பாட்டு கேட்பதை அறிவிப்பவர்கள்.


8. யாஹூ chat (ரெண்டு பேர் மட்டும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பர்.)

9. ரயில் வண்டி (ஒரு ஐந்தாறு பேர் தொடர்ந்து பேசுவர். வண்டி பெரியதாகிவிட்டால் twitlongerல் பேசுவர்).


10. போஸ்டர் பாய்ஸ் - புது பதிவு போட்டால் மட்டும் இங்கு வரும் விளம்பரம் ஒட்டுபவர்கள்.

11. Drupal - இதற்கு விளக்கம் தேவையில்லை.


12. தத்துவவாதிகள். (தத்ஸ் எண் போட்டு தொடர்ந்து தாக்குபவர்கள்).

13. இலக்கியவாதிகள் - ஒண்ணும் சொல்றதுக்கில்லை.


இது ஒரு சாம்பிள் பட்டியல்தான். மல்லாக்க விட்டத்தைப் பார்த்து யோசிச்சா இன்னும் பல லிஸ்ட்கள் தோன்றும். பிறகென்ன, அவற்றை உருவாக்கி, அனைத்தையும் படித்து ஜென்ம சாபல்யம் பெறுங்க. அஷ்டே.



***



Read more...

Wednesday, September 29, 2010

எந்திரன் ரிலீஸன்று தினப்பலன்!

கலைஞர் குழுமத்தில் ஏதோவொரு தொலைக்காட்சி:

இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் நல்லுள்ளங்களுக்கு மிகவும் பொன்னான நாள். ஏழு கிரகங்களும் ஒரே வரிசையில் வந்தால் எப்படியொரு அதிசய, நல்ல தினமோ அதை விட மிகவும் அதிர்ஷ்டகரமான நாள். அதனால், ஒவ்வொரு ராசிக்கும் பலன் சொல்லாமல் இன்று மொத்தமாய் அத்தனை பேருக்கும் ஒரே பலன்தான்.

இன்று முழுவதும் நேர்மறையாக சிந்தித்து, நேர்மறையான வார்த்தைகளையே பேசவேண்டியது அவசியம். சூப்பர், அருமை, அற்புதம், வாய்ப்பே இல்லை - ஆகிய சொற்களை தொடர்ந்து சொல்வது சாலச்சிறந்ததாகும். அதை விடுத்து எதிர்மறையான வார்த்தைகளைப் பேசுபவர்களுக்கு கெட்டபயன் உடனேயே கிட்டும் என்பது உறுதி.

உங்களுக்கு உகந்த திசை - ‘மேல்’. மலை, மேடு, உயர்ந்த கட்டிடம் அல்லது கட்டவுட்டுகள் எதன் மீதாவது ஏறுவது நல்லது.

இன்று உங்களுக்கு உகந்த நிறம் - வெள்ளை. வெள்ளை நிறத்திலான பொருட்களை வாங்கி பயன்படுத்துவது மிகவும் நல்லது.

கற்சிலைகளுக்கு மட்டுமல்லாமல், மரச்சிலைகளுக்கும் அபிஷேகம் செய்ய அற்புதமான நாள் இன்று. உங்களுக்கு உகந்த வெள்ளை நிறத்திலுள்ள பால், தயிர், வெண்ணை ஆகியவற்றால் உயரமான மரச்சிலைகளுக்கு அபிஷேகம் செய்தால், ஏழேழு ஜென்மங்களுக்கும் உங்களுக்கு மோட்சம் கிட்டும். நீங்கள் தொலைக்காட்சியில் தோன்றும் வாய்ப்பும் அதிகமாகும்.

வெளியில் செல்ல முடியாத வயதானவர்கள், நோயாளிகள் வீட்டிலிருந்தபடியே சன் டிவி பார்த்தால் தனலட்சுமியின் அருள் கிட்டும்.

***********

ஜெயா டிவி:

இன்று உங்களுக்கு ரொம்பவே ஆகாத நாள். வரலாற்றில் கரித்துண்டினால் கூட பொறிக்கக்கூடாத நாள். இப்பேற்ப்பட்ட கெட்ட நாளில் தமிழர்கள் தங்கள் தோஷம் தீர்க்க செய்ய வேண்டிய செயல் - ஒன்றுமேயில்லை. வீட்டை விட்டு வெளியே வராமல், வீட்டிலேயே அடைந்து கடவுள் வழிபாடு செய்ய வேண்டியதுதான்.

அப்படி வீட்டிலிருக்கும்போது, தொலைக்காட்சி போன்ற மின்சார உபகரணங்களை பயன்படுத்தாமல் இருந்தால் உத்தமம்.

ஒரு வேளை கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்காக தொலைக்காட்சி பயன்படுத்த வேண்டியிருந்தால், ஜெயா டிவியில் பக்திமாலை பார்த்தால், அடுத்த வருடம் தமிழர்களுக்கு நல்லாட்சி கிட்டும்.

********

மக்கள் டிவியில் ஒரு நிரந்தர அறிவிப்பு:

மக்கள் டிவி நேயர்கள் இன்றிலிருந்து ஒரு நாள் சன் டிவியும் ஒரு நாள் ஜெயா டிவியும் மாறிமாறி பார்க்கவும். அடுத்த தேர்தல் உடன்பாடு ஏற்படும்வரை இந்த அறிவிப்பு தொடரும். அதற்குப் பிறகே உங்களுக்கு நல்ல நேரமா, கெட்ட நேரமா என்பது கணித்து சொல்லப்படும்.

*****

Read more...

Wednesday, September 15, 2010

விளையும் இலக்கியவாதியை...

விளையும் இலக்கியவாதியை...

அக்கம்பக்கம் பேசியதிலிருந்து
ட்விட் போடுவேன்...

இருபது ட்விட் ஆனபிறகு அதை வைத்து
இடுகை போடுவேன்...

பல இடுகைகள் போட்டபிறகு அதை வைத்து
புத்தகம் போடுவேன்...

ஓரிரு புத்தகங்கள் போட்டபிறகு அதை வைத்து
ஒரு தொகுப்பு போடுவேன்..

பல தொகுப்புகள் போட்டபிறகு..
போட்டபிறகு...

உள்ளேயிருந்து குரல் கேட்டது...

அதைத் தூக்கி பரண் மேலே போடுங்க.

இப்போதைக்கு இந்த தோசையை வாயிலே போடுங்க..
வயிறாவது ரொம்பும்..

விளையும் இலக்கியவாதியை
முளையிலே கிள்ளிட்டாங்க!

**********

இது கண்டிப்பா நான் இல்லை!!!

கஷ்டப்பட்டு யோசித்து(!!)
ஒரு இடுகையை வெளியிட்டேன்...

இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும்
இணைத்தேன்...

புது இடுகைன்னு டிவிட்டரிலும், பஸ்சிலும்
புலம்பினேன்...

ஆர்குட்டிலும், முகநூலிலும்
அலறினேன்.

நெருங்கிய நண்பர்களுக்கு
தொலைபேசி கூறினேன்.

தூரத்து சொந்தங்களுக்கு எஸ்.எம்.எஸ்
தூது அனுப்பினேன்..

யாஹூ, கூகிள் குழுமங்களுக்கு
யாராவது பாருங்கப்பான்னு மின்னஞ்சல் செய்தேன்..

மற்றவர்களுக்கு பின்னூட்டம் போடும்போது
மறக்காமல் இடுகையின் உரலையும் கொடுத்தேன்...

இவ்வளவும் செய்த பிறகு,
இருபதே நிமிடத்தில் என்
இடுகையை தூக்கிவிட்டேன்...

யாராவது screenshot எடுத்து
போடமாட்டாங்களான்னு பார்க்கிறேன்.

அப்படியாவது bigshot
ஆகமுடியுதான்னு யோசிக்கிறேன்.


*****

Read more...

Tuesday, December 8, 2009

பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது...

பெண்களைப் பற்றிய செய்திகளில் நாம் பார்ப்பதுதான் இந்த வாக்கியம் - "சம்மந்தப்பட்ட பெண்ணின் பெயர்/வயது மாற்றப்பட்டுள்ளது). பேரு மட்டும்தான் மாத்தணுமா, அந்த செய்தியிலே இன்னும் எதையெல்லாம் மாத்தலாம்னு யோசிச்சப்போ உதிச்சதுதான்(!!) இந்த இடுகை. படிச்சிட்டு உதைக்க வராதீங்க.

*****

நேற்று காலை சுமார் 8 மணியிருக்கும் (நேரம் மாற்றப்பட்டுள்ளது).

திருவல்லிக்கேணியில் பெரிய தெரு (தெரு மாற்றப்பட்டுள்ளது).

தன் வீட்டில் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இட்லி, கெட்டி சட்னியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

"ஏண்டி, இது என்ன கெட்டி சட்னியா? இந்த இட்லியை மனுசன் சாப்பிடுவானா?" என்று மனைவியை பார்த்து கத்தினார். (சத்தம் அதிகரிக்கப்பட்டுள்ளது).

"ஏங்க. இதுக்கென்ன குறைச்சல்". உள்ளே ஒரே ஒரு பாத்திரம் உருளும் சத்தம் கேட்டது. (பாத்திரங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது).

"நீ இங்கே வாடி முதல்லே." (மரியாதை குறைக்கப்பட்டுள்ளது).

"நான் வர்றது இருக்கட்டும். முதல்லே இதுக்கு பதில் சொல்லுங்க." உள்ளேயிருந்து ஒரு ஸ்பூன் பறந்து வந்தது. (ஆயுதம் சைஸ்/எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது).

சுரேஷ் அதை தடுக்கும்முன் அந்த ஸ்பூன் அவர் தலையில் பட்டு, ச்சின்ன காயம் உண்டானது. (காய அளவு குறைக்கப்பட்டுள்ளது).

அந்த காயத்தைப் பார்த்த அவர் மனைவி, உள்ளேயே மெல்ல சிரிக்கும் ஓசை கேட்டது. (சிரிப்பொலி குறைக்கப்பட்டது).

சுரேஷ் வலிதாங்க முடியாமல் "ஆ" என்ற ஒரு எழுத்தையே நீளமாக சொன்னார். (டெசிபல் குறைக்கப்பட்டது).

"சாரிம்மா. இனிமே நான் இப்படி சொல்ல மாட்டேன். என்னை மன்னிச்சிடு" - சுரேஷ் தழுதழுத்தார். ( அழுகை குறைக்கப்பட்டது).

"சரி பரவாயில்லை விடுங்க. ஆனா, இப்போ என்னை திட்டினதுக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித் தந்தே ஆகணும்". (புடவை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது).

"அதுக்கு நீ என்னை இன்னும் நல்லாவே அடிச்சிருக்கலாம்" - மனதில் பேசினார் சுரேஷ் (குரலோசை குறைக்கப்பட்து).

"அப்போ இந்தாங்க." உள்ளேயிருந்து ஒரு குச்சி வெளிப்பட்டு சுரேஷை தட்டியது. (ஆயுதம் / எஃபெக்ட் குறைக்கப்பட்டது).

"ஐயய்யோ.. என்னை விட்டுடு". சுரேஷ் வீட்டை விட்டு வெளியேறி நடந்தார். (ஓட்டம் குறைக்கப்பட்டது).

*****

பின்குறிப்பு : இது என் டயரியில் எழுதவேண்டியது. (இடம் மாற்றப்பட்டுள்ளது).

Read more...

Tuesday, November 17, 2009

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்!!!






மேலே இருக்குற படங்களையெல்லாம் பாத்தீங்கல்லே! எப்படி டெர்ரரா இருக்குதுன்னு. பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்னு சொன்னா, யாரு கேக்குறாங்க.

அந்த படங்கள் சொல்றத இங்கே பாட்டா படிச்சிருக்கேன் பாருங்க. எல்லாம் ஏதோ ஒரு சினிமா பாட்டோட உல்டாதான் (அது சரி, ஒரிஜினல் பாட்டு எழுதத் தெரிஞ்சா, நான் ஏன் இங்கே பொட்டி தட்டிட்டிருக்கேன்!!). என்னென்ன பாட்டுன்றத நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க.

நல்லாயிருந்தா நாலு வார்த்தை சொலிட்டு உங்க மன பாரத்தை இறக்கி வெச்சிட்டு போங்க!!!

*********

தாக்காதே என்னை தாக்காதே
ஜல்லி கரண்டியால என்னை தாக்காதே
இழுக்காதே என்னை இழுக்காதே
லுங்கி கிழியப்போது என்னை இழுக்காதே

வேணாம் வேணான்னு நான் அழுதேன்
நீ தானே என்ன சாத்திப்புட்டே!
போடா போடான்னு என்னை விரட்டி
சந்துல நீ தானே மொத்திப்புட்டே !

நல்லா இருந்த என் சட்டையை
நாராக கிழிச்சிபுட்டே!
கறுப்பா இருந்த என் கண்களை
கலரா மாத்திபுட்டே !
***********
பார்த்து பார்த்து கண்கள் பயந்திருக்கு
நீ வருவாய் என
பயந்து பயந்து கண்கள் சிவந்திருக்கு
நீ வருவாய் என

பேசிக்கிட்டே நீ வருவாயா - காதை கொடுக்கிறேன்
சாந்தமாக நீ வருவாயா - ஜோக்கு அடிக்கிறேன்
வேகமாக நீ வருவாயா - காப்பி தருகிறேன்
கோபமாக நீ வருவாயா - சாம்பல் ஆகிறேன் (நீ வருவாய் என)
**********
சப்பாத்தி கட்டை உடையும் நேரமிது
தங்கமணி அழைக்குது ஆஆஆஆஆஆ
கருப்பு சட்டை கிழியும் நேரமிது
லுங்கியும் கிழியறதுக்குள்ளே வாஆஆஆஆ

தரையிலே தூக்கிப் போட்டு மிதித்திடவே
இரு காலும் துடிக்குது
தரதரன்னு இழுக்கையில்
புது சுகம் பிறக்குது (சப்பாத்தி)

********
அம்மாடி... இதுதான் உதையா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அட ராமா... இது எப்போ முடியுமோ?

முதுகுலே ஏதோ டம்டமுன்னு கேட்குது
தலையிலே ஏதோ லொட் லொட்டுன்னு விழுகுது

போடுங்க போடுங்க இன்னும் போடுங்க
வேணும் நல்லா வேணும்
சொல்ற பேச்சை கேட்டு நடந்துக்காட்டி
மண்டை ரெண்டா உடையும்
ஆஆஆஆஆ
***********

Read more...

Wednesday, September 23, 2009

நம்மைப் போல் ஒருவன்...!!!


நண்பகல் 12 மணி. அந்த உயர்ந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஒருவன் ஏறிக் கொண்டிருக்கிறான். கையில் மதிய உணவுப் பொட்டலம், தண்ணீர் பாட்டில், கைப்பேசி மற்றும் ஒரு சிறிய கணிணி. மாடியில் கிடக்கும் ஒரு கிழிந்த பாயில் உட்கார்ந்து - சுற்றும் முற்றும் பார்த்து - சோம்பல் முறித்தவாறே - கைப்பேசியில் எண்களை அழுத்துகிறான்.




அதே வேளையில், நகரில் ஒரு வீட்டில் ஒரு பெண் வீட்டுவேலை செய்துகொண்டிருக்கிறார். அப்போது தொலைபேசி அடிக்கிறது. எடுத்துப் பேசினால் - "உங்க புருஷனைப் பத்தி ஒரு விஷயம் சொல்லப் போறேன். அதை கேக்கறதுக்கு நீங்க தயாரா இருக்கீங்களான்னு நான் பாக்கணும். உங்க வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு வாங்க. ஒரு பத்து நிமிஷம் கழிச்சி மறுபடியும் கூப்பிடறேன்". அந்தப் பெண் - ஹலோ, ஹலோவென்று சொல்லச் சொல்ல, தொலைபேசி வைக்கப்படுகிறது.




மொட்டை மாடி மனிதன், தண்ணீர் குடித்தவாறே தன் கைப்பேசியில் இணையத்தை மேய்ந்து கொண்டிருக்கிறான். பத்து நிமிடம் கழித்து - மறுபடி கைப்பேசியில் எண்களை அழுத்துகிறான்.



"நீ யாரு? என் புருஷனைப் பத்தி எனக்குத் தெரியாத எதை சொல்லப் போறே?"



"நான் யாருன்றது முக்கியமில்லே. நான் சொல்லப் போற விஷயம்தான் முக்கியம். ஆனா அதுக்கு முன்னாடி கவனமா கேளு. நான் சொல்ற இந்த நாலு பொருட்களை எடுத்து உங்க வீட்டு காம்பவுண்ட் சுவற்றுக்கு வெளியே வைக்கணும். உன்னுடைய கைப்பையிலிருந்து கைக்குட்டை, அலமாரியிலிருந்து உன் சென்ட் - அதாவது நாத்தமருந்து, இன்னிக்கு காலையில் நீ செய்த சாம்பார் மற்றும் உன் புருஷனோட ஒரு பழைய பனியன் - இந்த நாலு பொருட்களையும் வெளியே வெச்சிட்டு வா. அடுத்து 30 நிமிஷம் கழிச்சி மறுபடி கூப்பிடுறேன்."



"நீ சொல்றத கேக்கலேன்னா?"



"எனக்கு ஒண்ணும் நஷ்டம் கிடையாது. உன் புருஷனைப் பத்தி ஒரு நல்ல விஷயம் சொல்லலாம்னு பாத்தேன். அப்புறம் அந்த ரகசியம் உனக்குத் தெரியாமலேயே போயிடும். பரவாயில்லையான்னு முடிவு பண்ணிக்கோ."



டொக்.



"ஹலோ, ஹலோ"



*****



மொட்டை மாடி. இப்போது வேறொரு எண்ணை அழுத்துகிறான்.



"ஹலோ"



"உன் வாழ்நாளிலேயே உனக்குப் பிடிச்ச செய்தி ஒண்ணு சொல்றேன். கேட்டுக்க தயாரா இருக்கியா?"



"யார் நீ? என்ன செய்தி அது?"



"உடனே உன் வீட்டு ஜன்னலிலிருந்து வெளியே எட்டிப் பார். எதிர் வீட்டிலிருந்து ஒருவர் சில பொருட்களை எடுத்து வந்து வெளியே வைப்பாங்க. அடுத்த பத்து நிமிடங்களுக்கு அப்படியே பாத்திட்டு இரு. நீ ரொம்ப நாளா எதிர்பார்த்தது நடக்கும்."



*****



எழுந்து போய் வெளியே நகரத்தைப் பார்க்கிறான். மொட்டை மாடியிலிருந்து நல்ல வியூ. ஆனால், உச்சி வெயில் மண்டையை பொளக்கவே, மறுபடி வந்து நிழலில் உட்கார்ந்து - படபடவென்று நெட்டி முறித்தவாறே - மதிய உணவுப் பொட்டலத்தை பிரித்து நிதானமாக சாப்பிட ஆரம்பிக்கிறான்.



*****



முதலில் பார்த்த பெண் வீடு.



"தொலைபேசியிலே பேசினது யாருன்னே தெரிய்லியே. இவரோட பேசலாம்னா ஸ்விச்ட் ஆஃப்னு வருது. எங்கே போய் தொலைஞ்சாரோ தெரியலே. சரி, அவன் சொல்றத கேக்குறத தவிர வேறே வழி தெரியல. அந்த நாலு பொருட்களையும் எடுத்து வெளியில் வெச்சிடுவோம்."

பொருட்களை சேகரிக்க ஆரம்பிக்கிறார்.



*****



இரண்டாவதாக பார்த்த பெண் (எதிர்) வீடு:



"ஹலோ.."



"ஆமா. நீங்க சொன்ன மாதிரியே எதிர் வீட்லே அவங்க பொருட்களை எடுத்து வெளியே வெச்சாங்க. அந்த பொருட்கள் கிட்டே வந்த தெரு நாய்கள், வாசனை பார்த்தவுடன், அலறி அடித்து ஓடிடுச்சுங்க. இனிமே அதுங்க இந்த தெருவுக்கே வராதுன்னு நினைக்கிறேன்".



டொக்.



*****



மறுபடி முதல் வீடு:



"நான் சொன்ன மாதிரியே செஞ்சதுக்கு நன்றி".



"உனக்கு எப்படி தெரிஞ்சுது."



"ஹாஹா.. நடக்கறதை நான் பாத்துக்கிட்டே இருக்கேன்".



"நீ யாருன்னு சொல்லு. நாய்களை ஏன் இந்த தெருவை விட்டு துரத்தினே?"



"பொதுமக்களுக்கு பிரச்சினை பண்ணுதுன்னு நகராட்சியே நாய்களை பிடிச்சிட்டு போகுது. நானோ வெறும் துரத்தித்தானே விட்டேன். அவங்க பண்ணா சரி. அதுவே நான் பண்ணால் தப்பா?"



"அது சரிதான். நாய்ங்களால் எங்களுக்கு பிரச்சினைதான். அதுக்கு எதுக்கு எங்க வீட்டை செலக்ட் பண்ணே? நீ யாரு"



"கடைத் தெருவுலே, சூப்பர் மார்க்கெட்லே ஜோடியா ஷாப்பிங் பண்ணும்போது புருஷனை பொண்டாட்டி திட்டிக்கிட்டே வருவாங்களே - அவனை மாதிரி நானும் ஒரு அப்பாவி மனுஷந்தான். நாய்களால் நான் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கேன். அவங்களை துரத்த என்ன வழின்னு யோசிக்கும்போதுதான், இந்த ஐடியா எனக்கு தோணிச்சு. நான் யாருன்னு உங்களுக்கு தெரிய வேண்டியதில்லே. இனிமே நீங்க கொஞ்ச நாளைக்கு தெருவுலே பயமில்லாமே நடமாடலாம். சம்பவாமி யுகே யுகே..."



டொக்.



*****



"அப்பாடா. அந்த மூணு பொருட்களால் வீட்லே பயங்கர கப்பு. என்னாலேயே தாங்கவே முடியல. பாவம் அந்த நாய்ங்க என்ன பண்ணும். ஓடியே போயிடுச்சுங்க. ஒரே கல்லுலே ரெண்டு மாங்கா. எல்லாம் அவளோட பொருளாவே எடுத்துப் போட்டா, என் மேலே சந்தேகம் வந்துடும்னுதான், என்னோட பனியனையும் எடுத்துப் போடச் சொன்னேன். இனிமே நிம்மதியா வீட்டுலே இருக்கலாம். ஐயய்யோ.. லஞ்ச் அவர் முடிஞ்சிடுச்சே. கீழே மேனேஜர் கத்துவாரே. போய் வேலையை ஆரம்பிக்கணும்".



ட்ரிங்.. ட்ரிங்..



"என்னங்க. சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவீங்கல்லே. வரும்போது உங்களுக்கு புது பனியன் வாங்கிட்டு வந்துடுங்க. இன்னிக்கு இன்னொரு சமாச்சாரம் நடந்துச்சு. சாயங்காலம் சொல்றேன். வெச்சிரட்டா"



டொக்.



மாடியிலிருந்து மெதுவாக கீழிரங்கிப் போக, காமிரா அவர் பின்னால் zoom out ஆகிறது.



சுபம்.



*****



பின்குறிப்பு : இந்த கதையை பதிவர்கள் விமர்சனம் பண்ணா எப்படி இருக்கும். அதுதான் என்னோட அடுத்த இடுகை.... விரைவில்...



*****

Read more...

Tuesday, July 21, 2009

என் கவுஜக்கு மனசாட்சியின் உடனடி பதில்!!!

விகடன்
குமுதம்
குங்குமம்

எல்லாத்திலேயும்
ஒரே மாதிரியான
பேட்டிகள்,
செய்திகள்.

அட்டையைக்
கிழித்துவிட்டால்
எது எந்த
பத்திரிக்கைன்னு
தெரியாதாம்..

அட்டைக்குப் பதிலா
புத்தகத்தையே
கிழிச்சிட்டா...

நேரமும் மிச்சம்..
பணமும் மிச்சம்...

*****

சன்
ஜெயா
ராஜ்
சிரிப்பொலி
ஆதித்யா

எல்லாத்திலேயும்
ஒரே மாதிரியான
நகைச்சுவைக் காட்சிகள்,
பாடல்கள்,
விளம்பரங்கள்.

லோகோவைத்
தூக்கிட்டா
எது எந்த
சேனல்னு
தெரியாதாம்.

லோகோக்குப் பதிலா
டிவியையே
தூக்கிட்டா..



...




...




...




டிவியை தூக்கிடுவியா நீ?
மகனே..

அப்புறம் வீட்லே
தங்கமணி கையாலே
உனக்கு
டின்னுதாண்டி..

Read more...

Tuesday, July 7, 2009

இரவுக் கிறுக்கல்கள்!!!

கொடியில் காய்கிற
சட்டையைவிட அதிகமாய்
பறக்கிறது சுடிதார்..

சிவன் பார்வதி
இருக்கும் காலண்டரில்
பார்வதி சிவனை
தன்பக்கம் இழுத்துக்கொண்டே
பறக்கிறார் காற்றில்..

ங்கொய்யாலே...
இதிலுமாடா
பெண்ணாதிக்கம்?!?!?!


**********


போலீஸ்காரர்கள் தொல்லை
இல்லாத இந்த
நேரத்திலும் ஏன்
இந்த ஒழுங்கு?

சுவரோரம் வரிசையாக
செல்லும் எறும்புகள்..


**********


திருமணமான ஆடவர்களுக்கு
கடவுள் கொடுத்த மாபெரும் பரிசு -- இரவு நேரம்!!

அப்போதானே மனைவிகள்
‘அமைதியாக’ தூங்குறாங்க...


******


மொதல்லே இந்த
ஆளை கால்செண்டர்
வேலை விடச் சொல்லணும்..

இவ்ளோ நேரமா
வீட்டுக்கு வர்றதுக்கு?

-- கணவனுக்குக் காத்திருக்கும் பல்லி...


*******



வீட்டின் எல்லாக்
கதவுகளும், ஜன்னல்களும்
சாத்தியிருந்தாலும்
உள்ளேயிருந்து
என்னால் உலகத்தை
பார்க்கமுடிகிறது - இணையம்..


***********


எந்த ப்ளேன்லே வந்தாலும் ஏன் அதை ‘ஜெட்’ லாக்னு (jetlag) சொல்றாங்கன்னு தெரியல. ஞாயமா எனக்கு வந்திருக்கிறது கத்தார் லாக்தான். அப்படிப்பட்ட கத்தார் லாக் (!!)
முடியாமல் இரவில் தன்னந்தனியாக முழித்திருக்கும்போது கிறுக்கியவை!!!

டோண்டு ஐயா பாணியில் சொல்வதானால் - இவ்விடுகை எழுதத் துவங்கியபோது மணி காலை 2.00. முடியும்போது 3.30. 8.00 மணிக்கு பப்ளிஷ் செய்ய போட்டிருக்கிறேன்...

******

Read more...

Sunday, June 14, 2009

அடுத்த 32 கேள்விகள் என்னவாக இருக்கும்?

சமீப காலமாக, இணையத்தில் தொடர் விளையாட்டாக உலவிக் கொண்டிருப்பது - 32 கேள்வி பதில்கள்.


அந்த கேள்விகளை தயாரிச்சவரு அதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு யோசித்திருப்பார்னு நினைச்சிப் பார்த்தபோது, என் உடல் பயங்கரமாக சிலிர்த்தது. அப்புறம் பாத்தா, அது வேறே ஒண்ணுமில்லே - வீட்டு ஜன்னலிலிருந்து சாரல் அடிச்சிண்டிருந்தது. உடனே எல்லாத்தையும் மூடிட்டு, என் சொந்தக்கண் மற்றும் அறிவுக்கண்ணை மட்டும் திறந்து வெச்சிண்டு - கணிணியைப் பார்த்தேன்.


நம் பொது அறிவை வளர்த்துக் கொள்ள மிகவும் முக்கியமான கேள்விகள் அந்த 32ல் பல இருந்தன. நம் நண்பர்கள் பலர் படு சீரியஸாக அவற்றிற்கெல்லாம் பதில் சொல்லியிருப்பதால், நான் அந்த கேள்விகளை அடையாளம் காட்டப்போவதில்லை. ஆனா, அதே மாதிரி கேள்விகள் பலவற்றை அதன் தயாரிப்பாளர் விட்டுட்டார்னு மட்டும் புரிஞ்சுது. அதனால், நானும் - மல்லாக்க, பக்கவாட்டில், தலைகுப்புற - எப்படியெல்லாமோ படுத்து யோசிச்சி, அடுத்த 32 கேள்விகளை தயார் செய்யலாம்னு பாத்தேன். ஆனால் எவ்வளவு யோசித்தாலும் எனக்கு தோணினது வெறும் பத்து மட்டுமே.


இவற்றையும் யாராவது தொடராக எண்ணிக்கொண்டு பதிலளிக்க ஆரம்பித்தால், அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.

சரி.. கேள்விகளுக்குப் போகலாமா?

*****

உங்க மூக்கு உங்களுக்கு பிடிக்குமா?

உங்க பக்கத்துலே யாரு இருக்கறதுக்காக வருத்தப்படறீங்க?

கண்ணாடி முன்னாடி நின்னு உங்க பற்களை எண்ணியிருக்கீங்களா? எவ்வளவு தேறுது?

(திருமணமான ஆண்களுக்கு மட்டும்) நீங்க கடைசியா சிரித்தது எப்போது?

சுடுதண்ணீரில் குளிக்க விருப்பமா அல்லது ஜில் தண்ணீரிலா?

படிக்கட்டில் ஏறும்போதும் இறங்கும்போதும் - ஒவ்வொரு படிகளாக போவீர்களா அல்லது இரண்டிரண்டு படிகளாக தாண்டிப் போவீர்களா?

இட்லிக்கு எதை தொட்டுக்கொண்டு சாப்பிட பிடிக்கும்? (தரையை / சுவற்றை தொட்டுக் கொள்வேன் என்று அறுக்க வேண்டாம்!!).

மோதிரம் போட்டுப்பீங்களா? எந்த விரலில் போட்டுப்பீங்க?

உங்க தலையில் வகிடு எந்தப்பக்கம் எடுப்பீங்க? இடது, வலது அல்லது நடு?

எந்த விரலில் நகம் கடிக்க அதிகம் விரும்புவீர்கள்?

*****

Read more...

Sunday, June 7, 2009

நான் ரொம்ம்ம்ம்ப பிஸி!!!


முகு: இடுகையில் எங்கேயுமே முழுப்புள்ளியே கிடையாது. அதனால் நீங்களும் - மூச்சு விடாமே எஸ்.பி.பி பாட்டு பாடறா மாதிரி - முழு இடுகையையும் படிச்சிடுங்க.



*****



காலங்கார்த்தாலே எழுந்ததும்



என்னோட யாஹூவில்
மனைவியோட யாஹூவில்
எங்களோட ஹாட்மெயிலில்
மனைவிக்குத் தெரியாத என் ஜிமெயிலில்
எங்கள் நிறுவன மெயிலில்
வேலை பார்க்கும் க்ளையண்ட் மெயிலில்



இப்படி எல்லாத்துலேயும் ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கான்னு பாத்துட்டு



செய்திகளுக்காக



தட்ஸ்தமிழ்
தினமலர்
தினமணி
யாஹூ தமிழ்
மைக்ரோசாஃப்ட் தமிழ்
சி என் என்



இங்கேயெல்லாம் ஒரு தடவை போய் பாத்துட்டு



அலுவலகம் வந்தபிறகு



இந்தியாவில் எங்கள் வீடு
மாமியார் வீடு
யாராவது நண்பர்கள் வீடு
ஏதாவது ஒரு ராங் நம்பர்



இப்படி எல்லோருக்கும் தொலைபேசி எல்லார் நலனையும் விசாரிச்சிட்டு



ரீடரில் இருக்கோ இல்லையோ ஒரு தடவை



இட்லிவடை
சாரு
ஜெயமோகன்
பாரா
எஸ்ரா
லக்கிலுக்



இங்கேயெல்லாம் ஒரு தடவை போய் தரிசனம் செய்துட்டு



நண்பர்களைத் தேடி

முதல் மாடி
ரெண்டாவது மாடி
மூணாவது மாடி
நாலாவது மாடி



ஆக மாடிமாடியா ஏறி இறங்கி மொக்கை போட்டுட்டு



இருக்கையில் வந்து உக்காந்தவுடன்,


கணிணியில்

சுடோகு
சதுரங்கம்
கோல்ஃப்
சாலிடைய்ர் (solitaire)
ஃப்ரீசெல் (freecell)
ப்ரிக் ப்ரேக் (brick break)



ஆகிய விளையாட்டுக்களை கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு



நடுநடுவே




தண்ணி
காபி
தண்ணி காபி
டீ



இதெல்லாம் குடிச்சிட்டு




சாயங்காலமா வீட்லே எல்லாரையும் கூட்டிட்டு



வால்மார்ட்
டார்கெட்
மால்
இந்திய மளிகைக் கடை



இப்படி எல்லா கடைகளுக்கும் போய் எதுவுமே வாங்காமே வெறும்னே பாத்துட்டு



வீட்டுக்கு வந்து சஹானாவுடன்



டோரா
பார்னி
எல்மோ
டாம் அண்ட் ஜெர்ரி
மேக்ஸ் அண்ட் ரூபி



ஆகிய எல்லாத்தையும் பாத்துட்டு




அக்கடான்னு படுத்தா போதும்னு இருக்கும்போது, புது இடுகைக்காக யோசிக்கறதுக்கு நேரம் எங்கே இருக்கு?



*****


Read more...

Thursday, March 26, 2009

ஆரம்ப முடிவு.. கவுஜ கவுஜ!!!



என்னதான் கவுஜ எழுதற திறமையை உள்ளுக்குள்ளேயே மறைத்து வைத்திருந்தாலும், ஆயிரக்கணக்கான(!!!) ரசிகர்கள் அவர்களின் தொடர்ச்சியான முயற்சியால், தம் கட்டி இழுத்து
அதை வெளியே கொண்டு வந்துடறாங்க.

நேத்திக்கு ராத்திரி வலது பக்கக் காதுலே மருந்து ஊத்திக்கிட்டு, இடது பக்கமா சாஞ்சிக்கிட்டு படுத்து யோசிச்சதுலே உதயமானதுதான் இந்த கவுஜ.

சரவணபவன் இட்லிய தின்றாமாதிரி கடகடன்னு படிச்சிடாமே, ஒவ்வொரு வரியையும் ஆழ்ந்து அனுபவிச்சி படிங்க.

இப்பவே ஒரு ரகசியத்த சொல்லிப்புடறேன்.. கவுஜயோட கடைசி பத்திலேதான் மேட்டரே அடங்கியிருக்கு. அதுக்காக நேரா அங்கே போயிடாதீங்க மக்கா.. முதல்லேந்தே படிங்க...
எஞ்சாய்.....

*****



ஆரம்பம் சீக்கிரமே
ஆரம்பித்துவிட்டால்
முடிவும் சீக்கிரம்
முடிந்துவிடுமா?


*****

ஆரம்பத்தின் முடிவில்
அதை
ஆரம்ப முடிவென்பதா
முடிவின் ஆரம்பமென்பதா?

இல்லை
முடிவின் ஆரம்பத்தில்
அதை
முடிவாரம்பம் என்றுதான் அழைக்க
முடியுமா?

*****

ஆரம்பிப்பதற்குள்
முடிந்துபோவதை
எப்படி ஆடிவு
என்று சொல்லமுடியாதோ - அதே போல்

முடிந்தபிறகு
மீண்டும் ஆரம்பிப்பதற்கு
மும்பம் என்றும்
சொல்லமுடியாது


*****

ஆரம்பிக்கும்போதே
முடிவை
முடிவெடுத்துடற மாதிரி

முடிந்தபிறகு
ஆரம்பத்தில் இதைத்தான்
முடிவெடுத்தோமான்னு
பாக்கணும்.


*****

ஆரம்பிக்காமலேயே
ஆரவாரம் செய்யறவனவிட
முடிச்சிட்டு
முக்காபுலா பாடுறவந்தான்
முழுமனிதன்

*****

முடிவா ஒண்ணு சொல்லி
முடிச்சிக்கறேன்.
ஆரம்பத்திலிருந்து
ஆராவது இந்த கவுஜய
ஆராய்ஞ்சி எனக்கு விளக்குங்க.

*****


Read more...

Tuesday, March 24, 2009

ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன்!!!

எவ்ளோ நாள்தான் இந்த மாதிரி ச்சின்னச்சின்ன பதிவுகளா எழுதிட்டிருக்கறது. அதனால், நானும் ஒரு பெரிய்ய்ய நாவல் - சுமார் ஐநூறு பக்கம் வர்றா மாதிரி எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

அந்த நாவல் எழுதறதுக்கு முன்னாடி - ஒரு வரிக் கதை ஒண்ணை கொஞ்சம் பெருஸ்ஸ்ஸ்ஸ்ஸா எழுதலாமேன்னு முடிவு செய்து, அதை இங்கே எழுதியிருக்கேன்.

நீங்க இந்த கதையை பாத்து ஓகே பண்ணிட்டீங்கன்னா, இதே மாதிரி - அட, இதே மாதிரி என்ன, இதே கதையை - ஐநூறு பக்கத்துக்கு இழுத்த்த்த்த்த்து எழுதலாம்னு இருக்கேன்.

கொஞ்சம் பாத்து சொல்லுங்க.

*****

ஒரு ஊர்லே ஒரு பாட்டி இருந்தாங்க.

அவங்களுக்கு நாலு பசங்க, மூணு பொண்ணுங்க. எல்லாப் பொண்ணுங்களுக்கும் நல்லபடியா கல்யாணம் செய்து கொடுத்துட்டாங்க அந்த பாட்டி.

அந்த நாலு பசங்களும் வேலை வெட்டி இல்லாமே சும்மா ஊர் சுத்திக்கிட்டிருந்தாங்க. சரி வெட்டியாதானே இருக்கோம்னு என்ன பண்ணாங்க - திடீர்னு எல்லோரும் ரௌடி ஆயிட்டாங்க. அந்த ஏரியா முழுக்க அவங்க ராஜ்ஜியம்தான். ஆளுக்கொரு கத்தி வெச்சிக்கிட்டு, கத்தி கத்தி பேசிக்கிட்டு ஜாலியா இருந்தாங்க.

வெய்யில் ஜாஸ்தியாயிருக்கேன்னு ஒரு நாளு எதேச்சையா டாக்டர் விஜய் படம் ஓடுற ஒரு தியேட்டர்லே நுழைஞ்சாங்க. அவரோட ஆட்டம், பாட்டம், நடிப்பு, சண்டை எல்லாத்தையும் பாத்துட்டு அன்னிலேந்து அவரோட அதி தீவிர ரசிகர்களாயிட்டாங்க. ஏதோ ஒரு சரத்குமார் படத்துலே ஒரு பாட்டிக்கு வடிவேலு போட்ட '10' மாதிரி இவங்களும் - 'உடல் மண்ணுக்கு உயிர் விஜய்க்கு' அப்படின்னு பச்சை குத்திக்கிட்டாங்க.

தலைவரோட எல்லா விழாக்களிலேயும் கலந்துக்குவாங்க. பேனரெல்லாம் கட்டுவாங்க. பாலாபிஷேகம், தயிராபிஷேகம், பீராபிஷேகம் எல்லாமே பண்ணுவாங்க. கடைசியா அவங்க தலைவரோட ஏதோ ஒரு விழாவுலே கலந்துக்கிட்டு கலாட்டா செய்திட்டிருக்கும்போது - இவங்களோட தொல்லை பொறுக்காமே அந்த அபிமான தலைவரே - 'பேசிக்கிட்டிருக்கேன்ல... சைலன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்' - அப்படின்னு கத்திட்டாரு.

அன்னிக்கு மனசு ஒடைஞ்சவங்கதான், அந்த சம்பவத்துக்கப்புறம் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. பாவம் அந்த பாட்டிதான் தனியொரு ஆளா நாள் முழுக்க உழைச்சி சம்பாதிச்சி எல்லாருக்கும் சாப்பாட்டுக்கு வழி செய்துட்டிருந்தாங்க.

பேதை (7 வயது) , பெதும்பை (11 வயது) , மங்கை (13 வயது) , மடந்தை (19 வயது) , அரிவை (25 வயது) , தெரிவை (31 வயது) , பேரிளம்பெண் (40 வயது) - ஆகிய பெண்களின் ஏழு நிலைகளையும் தாண்டி வந்துவிட்ட அந்த பாட்டி அவங்க வீட்டுக்குப் பக்கத்துலேயே உட்கார்ந்து - உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு - இந்த மூணையும் கொஞ்ச நேரம் ஊறவைத்து வடிகட்டி - அதை பச்சை மிளகாய், இஞ்சி, தேவையான அளவு உப்பு
சேர்த்து கரகரவென்று நீர் விடாமல் அரைத்துக் கொண்டு - அந்த விழுதை எடுத்து கருவேப்பிலை, சிறிது மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி கலந்து - அரைக்காத பருப்புக்களையும் கொஞ்சமாக சேர்த்துக் கொண்டு - பிளாஸ்டிக் பேப்பரில் தட்டி எண்ணையில் பொரித்தெடுத்து - அருமையான வெங்காய வடை செய்து - அதை மக்களுக்கு விற்று சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

பக்கத்து மரத்து மேலே ஒரு காக்கா பசியுடன் உட்கார்ந்திருந்தது.

1330 குறள்களை எழுதிய திருவள்ளுவர் - 490வது குறளாக - 'காலமறிதல்' அதிகாரத்திலே சொல்லியிருக்கிறது என்னன்னா - கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து. அதாவது காலங்கருதி ஒரு கொக்கு தன் இரைக்காக அசையாமல் வாடி இருப்பதைப் போல் கலங்காமல் இருந்து - தக்க சமயம் வாய்த்தவுடன் பாய்ந்து தன் இரையை கொத்திக்கொள்வது போல் சட்டென்று செய்துவிடவேண்டும்.

இதே அறிவுரையின்படி, அந்த காக்காவும் மரத்தின் மேல் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து - ஒரு பெரிய வடைக்காக காத்திருந்தது. அப்படி கிடைத்தவுடன், பறந்து வந்து டக்கென்று அந்த வடையை அபகரித்து திரும்ப மரத்தின் மேல் போய் உட்கார்ந்தது.

நரி இடப்பக்கம் போனா என்ன, வலப்பக்கம் போனா என்ன - மேலே விழுந்து புடுங்காமே இருந்தா சரின்ற பழமொழியில் வர்ற அந்த நரி ஒண்ணு அந்தப்பக்கமா வந்துச்சு.

அவ்வை ஷண்முகி படத்துலே - காதலி காதலி பாட்டு பாடும்போது கமல் வேணும்னே பக்கவாட்டு போஸ்லே - தன் ஓட்டைப் பல்லு காட்டி சிரிப்பாரு. அதே மாதிரி நரியை பாத்த காக்காவும் சைட்லே திரும்பி போஸ் குடுத்துச்சு.

கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க வர்றவங்க எல்லாம் - ஏதோ கச்சேரி செய்யப்போறவங்க போல - ஒரு பாட்டு பாடுங்கன்னு பொண்ணைக் கேக்கறது மாதிரி - நரியும் காக்காவைப் பாத்து - உன் பாடலைக் கேட்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே - பாடு காக்கா, பாடுன்னு கேட்டதால், காக்காவும் பாட தயாரானது.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே....ஏஏஏ.. ஏஏஏ... மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே... .... ...

சுத்தி இருந்த காக்காங்கல்லாம் இப்படி அடி எடுத்துக் கொடுக்க, நம்ம காக்காவும் 'ராக்கம்மா கையத் தட்டு' அப்படின்னு பாட ஆரம்பிச்சது பாருங்க...

ஒரு பெரிய மண்டபத்துலே ரெண்டு பக்கமும் ஏகப்பட்ட பேர் உட்கார்ந்து கைதட்டி பஜனை செய்துகொண்டிருக்கும்போது, நடுவில் வர்ற அவரோட வாயிலிருந்து டக்குன்னு சிவலிங்கம் விழுவதைப்போல், இந்த காக்கா பாட ஆரம்பிச்சவுடனே, அதன் வாயிலிருந்து அந்த வடை கீழே விழுந்தது.

தேர்தலில் எதிர்பாராத விதமா வெற்றி அடைஞ்சிட்டா, அடுத்த தேர்தல் வரும்வரை தொகுதி பக்கமே தலைகாட்டாத அரசியல்வாதிங்க மாதிரி - அந்த நரியும் வடை கிடைச்சது வரை லாபம் - இனிமே அடுத்து பசிக்கும்வரை இந்த பக்கம் வரவேகூடாதுன்னு முடிவு செய்து ஓஓஓடிப்போச்சுது.

அவ்ளோதான் கதை.

*****
கதையைப் பற்றி 'புகழ்ந்து' மறுமொழி எழுதறதுக்கு முன்னாடி ஒரு தடவை லேபிளை பாத்துக்கிடுங்கப்பூ!!!


Read more...

Wednesday, March 4, 2009

வாய் விடாமே (முடிஞ்சா) சிரிங்க...!!!


பக்தன்: கடவுளே, எனக்கு அமைஞ்ச பொண்டாட்டி சரியில்லே. எனக்கு ஏன் இப்படிப்பட்ட பொண்ண குடுத்தே?

கடவுள்: அடங்கொன்னியா, பொண்டாட்டி வேணும்னு நீதானே ‘தலைகீழே' நின்னே?

*****

தொண்டர்-1: என்ன, நம்ம தலைவரு எல்லாத்திலேயும் லேட்டஸ்ட் தொழில் நுட்பத்தைத்தான் பயன்படுத்துவாரா?

தொண்டர்-2: ஆமா, மணல் கடத்தலைக்கூட சாட்டிலைட் துணையுடன் கண்காணிக்கறார்னா பாத்துக்கோ.

*****

” நேத்து எங்க ஹோட்டலே கொரில்லா தாக்குதல் நடந்தது.”
“பக்கத்து நாட்டுலேந்தா?”
“ம்ஹும். பக்கத்து zooலேந்து”.


*****

" நம்ம கட்சியோட கொள்கை பேரு “உள்ளே வெளியே”வா? அப்படின்னா?"

“பிற கட்சியிலேந்து நம்ம கட்சிக்குள்ளே வர்றவங்க, வெளியே தைரியமா சுத்தலாம்.. அதே நம்ம கட்சியிலேந்து வெளியே யாராவது போனாங்கன்னா, அவங்க “உள்ளே”தான் இருக்கணும்.”

*****

”வேலைக்கு சேரும்போது 24 மணி நேரம் வேலை செய்வேன்னீங்களே?”

“ஆமா. நான் ஒரு வாரத்துக்குதானே சொன்னேன்”.

*****

” நீயும் உன் மருமகளும், சண்டை போடப்போறோம்னு சொல்லிட்டு தினமும் எங்கே பஸ்லே போயிட்டு வர்றீங்க?”

“சென்னை உயர் நீதிமன்றதுக்குதான். சண்டையில் ஏதாவது அடிகிடி பட்டுடுச்சுன்னா, அரசு செலவுலேயே வைத்தியம் பண்ணிக்கலாமே!!!”

*****

”என்னது, உன் பொண்டாட்டி எதிரிலேயே இன்னொருத்தி வந்து, என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னாளா?”
“ஆமா”
“எங்கே நடந்தது இது? எப்போ?”
“கணிணி பாக்கும்போதுதான்... tamilmatrimony.com விளம்பரத்திலிருந்து”

*****

கழக ஆட்சி திரும்ப வந்தபிறகு தலைவர் போட்ட முதல் கையெழுத்து தமிழகத்தில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்கின் நிறங்களை மாற்றியமைக்கும் கோப்பில்தான்.

சென்ற ஆட்சியில் சிக்னல் விளக்குகளில் ஒளிர்ந்த - கரும் பச்சை, பச்சை, இளம் பச்சை - ஆகிய நிறங்களை மாற்றி - கரும் மஞ்சள், மஞ்சள், இளம் மஞ்சள் நிறங்களை நிறுவ ஆணை பிறப்பித்துள்ளார்.

*****

Read more...

Tuesday, February 17, 2009

சில மொக்கை ஹைக்கூகளும் பின்னே ஒரு கவிதையும்...!!!


இன்னிக்கு முழுக்க மொக்கை மூடுலே இருந்ததாலே ( நீ என்னிக்குதாண்டா சீரியஸ் மூடுலே இருந்திருக்கேன்னு நிறைய பேர் தட்டச்ச தயாராவது தெரியுது!!!), மனசுலே கவிதை மழையா
பொழிஞ்சுது. அதை அப்படியே பிழிஞ்சி சிலதை மட்டும் இங்கே போட்டிருக்கேன். பாக்கி அப்பப்போ வரும்!!! எஞ்சாய் பண்ணுங்க.... அவ்வ்வ்....


புத்தூர் மருத்துவமனை


பின்னவீனத்துவ
எழுத்தாளரின்
கட்டு உடைக்கப்படுகிறது...


வலைப்பதிவாளன்


கடனட்டைக்காக
தொலைபேசுபவரிடம் --
“உங்க பேர் என்ன?”


கொள்ளுப்பேத்தி அழுகை


கோடிக்கணக்கில்
பிங்க் டிரஸ்
அனுப்பும் போராட்டம்.


கொள்ளுப்பேரன் பதவியேற்பு


ஜ்யாமெண்ட்ரி பாக்ஸ்
திறக்கும் மாபெரும்
விழா..


பேசும்படம் - II (விளக்கம் கீழே...)


சந்தானத்தின்
முழு நீள
நகைச்சுவைப் படம்...


குடும்பஸ்தரின் வாரயிறுதி


எங்கு போறதுன்னு முடிவு பண்றதிலே சண்டை...
அங்கு போகும்போதும் வழியிலே சண்டை...
தின்னும் இடத்துலே திட்டிக்கிட்டே சண்டை...
திரும்பி வரும்போது தாறுமாறா சண்டை...
வீட்லே நுழைஞ்சதும் விடாமே சண்டை...
போறுண்டா சாமி..
சண்டே வந்தாலே காயுது மண்டை

-----


பேசும்படம் - II வின் விளக்கம்!!!


சஹானாவுக்கு ஆங்கிலம் சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தபோது, silent எழுத்துகளைப் பற்றிய சர்ச்சை(!!!) வந்தது. உதாரணத்திற்கு :- queue.


அவரின் கேள்வி என்னன்னா - அந்த உபரி எழுத்துக்கள் தேவையில்லேன்னா, விட்றவேண்டியதுதானே... எதுக்கு வீணா அதையும் சேர்த்து எழுதிக்கிட்டு??? இப்படில்லாம் கேட்டா என்னன்னு பதில் சொல்றது சொல்லுங்க... நான் வழக்கம்போல் ‘பே'ன்னு முழிச்சிட்டிருந்தேன்.


இதாவது பரவாயில்லை...


அதன் பிறகு தமிழ் படிக்கும்போது -- இதில் ஏன் silent எழுத்துக்கள் இல்லைன்னு ஒரு கேள்வி... என்னோட ‘ரசம்' என்னன்னுதான் உங்களுக்கு தெரியுமே!!!


பிறகு தட்டுத்தடுமாறி நான் சொன்னது இதுதான்.


”எனக்குத் தெரிஞ்சி தமிழ்லே அந்த மாதிரி இல்லை. ஆனா, நம்ம நகைச்சுவை நடிகர்களோட சீன்லே பல இடங்கள்லே, அவங்க பேசறப்போ பல வார்த்தைகளை - பின்னால் அதிகப்படியா இசை அமைத்தோ அல்லது வெறும் காத்தடித்தோ - சென்சார்லே அமுக்கிடுவாங்க.”


இந்த விவாதம் செய்துகொண்டிருக்கும்போதுதான் மேற்கூறிய ஹைக்கூ(???) தோன்றியது... எப்படி????


Read more...

Wednesday, January 21, 2009

30 வகை சாம்பார், ரசம் மற்றும் போராட்டம்...!!!

சென்ற வாரம் இணையத்தில் 30 வகை சாம்பார், ரசம், சப்பாத்தி இன்னும் பலவற்றைப் பார்த்தேன். (ஹிஹி. எதெல்லாம் செய்யலாம்றதுக்கு இல்லே... எதெல்லாம் சாப்பிடலாம்னு ஒரு ஐடியாக்குதான்!!!).

இதே மாதிரி 30 வகை போராட்டம்னு இருந்து, ஒரு நாளைக்கு ஒரு போராட்டம் வீதம் மாசம் முழுக்க என்னென்ன போராட்டம் செய்யலாம்னு ஒரு பட்டியல் போட்டேன். அந்த பட்டியல்தான் இது.

1. கோடிக்கணக்கில் தந்தி அனுப்பும் போராட்டம்

2. கோடிக்கணக்கில் போஸ்ட் கார்ட் அனுப்பும் போராட்டம்

3. கோடிக்கணக்கில் உள்ளூர் தபால் (இன்லாண்ட் லெட்டர்) அனுப்பும் போராட்டம்

4. தொலைபேசியில் பேசி போராட்டம்

5. ஈமெயில் அனுப்பும் போராட்டம்

6. குளிக்காமல் போராட்டம்

7. பச்சைத் தண்ணீர் குளிப்பு போராட்டம்

8. வென்னீர் குளிப்பு போராட்டம்

9. தீக்குளிப்பு போராட்டம்

10. தொலைக்காட்சி பார்க்கும் போராட்டம்

11. தொலைக்காட்சி பார்க்காமல் போராட்டம்

12. திரைப்படம் பார்க்கும் போராட்டம்

13. திரைப்படம் பார்க்காமல் போராட்டம்

14. நடைப்பயிற்சி போராட்டம்

15. மிதிவண்டி ஊர்வலம்

16. பைக் ஊர்வலம்

17. மாட்டு வண்டி ஊர்வலம்

18. மகிழூந்து ஊர்வலம்

19. மூவுருளி ஊர்வலம்

20. சிறைச்சாலை நிரப்பும் போராட்டம்

21. பேருந்து நிரப்பும் போராட்டம்

22. புகைவண்டி நிரப்பும் போராட்டம்

23. விளக்கு எரிக்கும் போராட்டம்

24. விளக்கு அணைக்கும் போராட்டம்

25. சாகும்வரை தண்ணீர் குடிக்கா விரதம்

26. சாகும்வரை காபி/டீ குடிக்கா விரதம்

27. சாகும்வரை உணவு உண்ணா விரதம்

இப்போ ஒரு கேள்வி:

30 நாட்களுக்குண்டான போராட்டம்னு சொல்லிட்டு 27தான் சொல்லியிருக்கேன். அது ஏன்னு சொல்லுங்க. கண்டிப்பா யாராவது பதில் சொல்லிடுவீங்க(!!), இல்லேன்னா நாளைக்கு காலையில் எழுந்து நான் பதில் போடறேன்...


இது பிப்ரவரி மாததுக்கான போராட்டப் பட்டியல், விடுமுறை நாட்களில் போராட்டம் கிடையாது - இதெல்லாம் சரியான பதில் இல்லை(!!!!!!).


கேள்விக்கான பதில்:
27ம் நாள் செய்யும் 'சாகும்வரை உணவு உண்ணா போராட்டம்' நாலு நாள் வரை போகும். அதாவது 27,28,29,30 நாட்கள். இதில் பிஸியாக இருப்பதால், வேறு எந்த போராட்டமும் செய்ய முடியாது.

சரியா சொன்னவங்களுக்கு 1000 பின்னூட்டம் போடலாம்னு பாத்தேன். ஆனா யாருமே சரியா சொல்லலே.. அப்பாடா...!!!

Read more...

Wednesday, December 31, 2008

எனது டைரியிலிருந்து ஒரு பக்கம்

காலை 5.00am : விஜய் டிவியில் மந்த்ராலய மகான் பற்றி ஒலிபரப்பினார்கள். ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.


6.00am : பக்கத்து கோயிலில் ஏதோ திருவிழாவாம். பத்து நாட்களாய் மைக் செட் போட்டு பாட்டு போடறாங்களாம். இன்னிக்குதான் கேள்விப்பட்டேன். எனக்கு எதுவும் கேட்கவில்லை.


8.00am : பக்கத்தில் இருக்கும் ஒரு கோயிலுக்கு போயிருந்தேன். தொன்னையில் வைத்து அருமையான பொங்கல் கொடுத்தார்கள். அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு, சிறிது நேரம் கழித்து கொடுத்த தயிர் சாதமும் சாப்பிட்டேன். கடவுளை ஒரு முறையாவது பார்க்க வேண்டுமென்று நினைத்தேன். மறந்து விட்டேன்.


10.30am : சன் டிவியில் மெகாத்தொடர்கள் ஆரம்பம். எல்லாமே அருமையாக இருந்தது. அடுத்த மூணு மணி நேரம் போனதே தெரியவில்லை.


மதியம்
12.00 noon: தங்கமணி அருமையாக சமைத்திருந்தார். எப்போதும் சமைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.


1.00pm: 'ஃபேவரைட்ஸில்' வைத்திருக்கும் - வீக் எண்ட் ஜொள்ளு - பதிவு போடும் பதிவர்கள் யாரும் இன்றைக்கும் பதிவே போடவில்லை. பழைய பதிவுகளையே இன்னொரு முறை பார்த்தேன்.


2.00pm: தூக்கம் கண்ணை சுழற்றியதால், சிறிது கண்ணயர்ந்தேன்.


4.30pm: பக்கத்து வீட்டிலிருந்து முறுக்கு கொடுத்தனுப்பியிருந்தார்கள். பாக்கு குத்தும் உரலில் வைத்து இடித்து, பொடி செய்து சாப்பிட்டேன். அருமையாக இருந்தது.


7.00pm: எங்கள் வீட்டு விளக்கு மிகவும் மங்கலாக இருக்கிறதே என்று சொல்லி தங்கமணியிடம் திட்டு வாங்கினேன். இதை விட வெளிச்சம் அதிகமாக விளக்கு போட்டால், பக்கத்து வீட்டிலிருந்து வந்து திட்டுவார்கள் என்று சொன்னார்.


10.30pm: இப்போல்லாம் மிட் நைட் மசாலாவில் சரியான பாட்டே போடுவதில்லை. நாளைக்கு டிவி சேனலுக்கு கடிதம் எழுதணும்.


தேதி: டிசம்பர் 26, 2048

-------------

பிகு: அ. இப்போ எனக்கு டைரி எழுதும் பழக்கமில்லை. ஒரு வேளை வருங்காலத்தில் நான் டைரி எழுதினால் கற்பனை செய்து பார்த்தேன். ஹிஹி... லேபிளை பாத்துட்டேளா!!!

ஆ. இந்த வருஷத்தை ஒரு மொக்கையோட முடிக்கலாமேன்ற நல்ல எண்ணம்தான் இந்த பதிவு. எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Read more...

Friday, August 22, 2008

பொழுது போகலேன்னா என்ன செய்யலாம்?

நேற்று மகளுக்கு தமிழ் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று தோன்றியது இந்த பதிவுக்கான ஐடியா.
இங்கே இணைத்திருக்கும் படத்தில் (தமிழ் எழுத்துக்கள் அட்டவணை) ஆங்காங்கே பல வார்த்தைகள் தென்பட்டன. அவற்றை கட்டம் போட்டுக் காட்டியிருக்கிறேன்.
இவற்றில்:
-- அழகான தமிழ் வார்த்தைகள்
-- ஆங்கில வார்த்தைகள்
--இந்தி வார்த்தைகள்
--குழந்தைகளிடம் பேசும் வார்த்தைகள்
--மற்றும் நாம் சாதாரணமாக பேசும் வார்த்தைகள்
என எனக்குத் தெரிந்த வார்த்தைகள் பலவற்றை கட்டம் போட்டுக் காட்டியிருக்கிறேன்.
தலைப்பில் சொன்னாமாதிரி - என்னைப் போலவே - இருக்கறவங்க, மேலும் முயற்சித்து பல பெரிய வார்த்தைகளைக் கண்டுபிடிக்கலாம்.


Read more...

Thursday, August 14, 2008

பதிவர்கள் எல்லாருக்கும் அவசரக் கடிதம்!!!


Read more...

Friday, July 18, 2008

நண்பனைக் கழற்றிவிட 10 மொக்கை காரணங்கள்!!!

ஒரு நண்பனை கழற்றி விடணும்னு ஒருத்தர் நினைக்கிறார். அதுக்கு என்ன காரணம் சொல்லலாம்னு நினைச்சப்போ, சமீபத்திலே ஒரு கட்சி இன்னொரு கட்சியை கழற்றி விட்டதற்கு சொன்ன காரணத்தையே சொல்லிடலாம்னு முடிவு பண்றாரு.


அதாவது - எப்போவோ நடந்த ஒரு நிகழ்ச்சியை அல்லது பேச்சை காரணம் காட்டி - நண்பனை கழற்றி விட்டுடலாம்னு நினைக்கிறாரு.


கீழ்க்கண்ட காரணங்களை பாருங்க. இதைத்தவிர வேறே ஏதாவது ஒரு காரணம் உங்களுக்குத் தெரிஞ்சா அதையும் சொல்லுங்க...அவ்வ்வ்...


10 மாசத்துக்கு முன்னாடி - எங்கள் வீட்டுக்கு வந்தபோது இரண்டாவது கப் காபி கேட்டாய்.

9 மாசத்துக்கு முன்னாடி - நான் என் ஆளு கூட இருக்கும்போது, வேணும்னே 'பபிள்கம்'மிற்கும் 'ச்யூவிங்கம்'மிற்கும் 6 வித்தியாசங்கள் சொல்லுன்னு என்னை வெறுப்பேற்றினாய்.

8 மாசத்துக்கு முன்னாடி - தண்ணி அடிக்கலாம்னு வீட்டுக்கு வரச்சொல்லி சொன்னதாலே உங்க வீட்டுக்கு வந்த எனக்கு, குடத்தை கையில் கொடுத்து 'பம்ப்'பில் தண்ணி அடிச்சிக் கொடுக்கச் சொன்னே...

7 மாசத்துக்கு முன்னாடி - நான் அனுப்பின 'Forward mail' லை அதில் சொன்னமாதிரி நீ ஐந்து பேருக்கு அனுப்பவேயில்லை.

6 மாசத்துக்கு முன்னாடி - ஆங்கிலத்துலே லவ் லெட்டர் எழுதித்தாடான்னா, லீவ் லெட்டர் எழுதி தந்துட்டே.

5 மாசத்துக்கு முன்னாடி - ஞாயிறு வீட்டுக்கு வா, யாரும் இருக்கமாட்டாங்கன்னு சொல்லி நான் உங்க வீட்டுக்கு வந்தபோது, உங்க வீடு பூட்டியிருந்துச்சு. என்னை நல்லா ஏமாத்திட்டே.

4 மாசத்துக்கு முன்னாடி - நான் உங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது, கொடுத்த காபியில் சக்கரையே போடவில்லை.

3 மாசத்துக்கு முன்னாடி - என் ஆளு கூட இருக்கும்போது, கற்பூர பாக்கெட்டை என்கிட்டே வாசனை காட்டி, அது என்னன்னு கண்டுபிடிக்க முடியுதான்னு பாக்கச் சொன்னாய்.

2 மாசத்துக்கு முன்னாடி - 'பக்தி' பட சிடின்னு நீ கொடுத்த சிடி 'நிஜமாகவே' பக்தி பட சிடிதான்.

போன மாசம் - ரொம்ப நல்ல படம் என்று சொல்லி என்னை டாக்டர் விஜய் படத்துக்குக் கூட்டிப்போனாய்.

டிஸ்கி: மக்கள்ஸ்.. நீங்க இவ்ளோ நேரம் படிச்சதுகூட முக்கியமில்லை. இனிமே படிக்கப் போறதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். 'லேபிளை' ஒரு தடவை படிச்சுடுங்க.... அவ்வ்வ்வ்...

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP