ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன்!!!
எவ்ளோ நாள்தான் இந்த மாதிரி ச்சின்னச்சின்ன பதிவுகளா எழுதிட்டிருக்கறது. அதனால், நானும் ஒரு பெரிய்ய்ய நாவல் - சுமார் ஐநூறு பக்கம் வர்றா மாதிரி எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
அந்த நாவல் எழுதறதுக்கு முன்னாடி - ஒரு வரிக் கதை ஒண்ணை கொஞ்சம் பெருஸ்ஸ்ஸ்ஸ்ஸா எழுதலாமேன்னு முடிவு செய்து, அதை இங்கே எழுதியிருக்கேன்.
நீங்க இந்த கதையை பாத்து ஓகே பண்ணிட்டீங்கன்னா, இதே மாதிரி - அட, இதே மாதிரி என்ன, இதே கதையை - ஐநூறு பக்கத்துக்கு இழுத்த்த்த்த்த்து எழுதலாம்னு இருக்கேன்.
கொஞ்சம் பாத்து சொல்லுங்க.
*****
ஒரு ஊர்லே ஒரு பாட்டி இருந்தாங்க.
அவங்களுக்கு நாலு பசங்க, மூணு பொண்ணுங்க. எல்லாப் பொண்ணுங்களுக்கும் நல்லபடியா கல்யாணம் செய்து கொடுத்துட்டாங்க அந்த பாட்டி.
அந்த நாலு பசங்களும் வேலை வெட்டி இல்லாமே சும்மா ஊர் சுத்திக்கிட்டிருந்தாங்க. சரி வெட்டியாதானே இருக்கோம்னு என்ன பண்ணாங்க - திடீர்னு எல்லோரும் ரௌடி ஆயிட்டாங்க. அந்த ஏரியா முழுக்க அவங்க ராஜ்ஜியம்தான். ஆளுக்கொரு கத்தி வெச்சிக்கிட்டு, கத்தி கத்தி பேசிக்கிட்டு ஜாலியா இருந்தாங்க.
வெய்யில் ஜாஸ்தியாயிருக்கேன்னு ஒரு நாளு எதேச்சையா டாக்டர் விஜய் படம் ஓடுற ஒரு தியேட்டர்லே நுழைஞ்சாங்க. அவரோட ஆட்டம், பாட்டம், நடிப்பு, சண்டை எல்லாத்தையும் பாத்துட்டு அன்னிலேந்து அவரோட அதி தீவிர ரசிகர்களாயிட்டாங்க. ஏதோ ஒரு சரத்குமார் படத்துலே ஒரு பாட்டிக்கு வடிவேலு போட்ட '10' மாதிரி இவங்களும் - 'உடல் மண்ணுக்கு உயிர் விஜய்க்கு' அப்படின்னு பச்சை குத்திக்கிட்டாங்க.
தலைவரோட எல்லா விழாக்களிலேயும் கலந்துக்குவாங்க. பேனரெல்லாம் கட்டுவாங்க. பாலாபிஷேகம், தயிராபிஷேகம், பீராபிஷேகம் எல்லாமே பண்ணுவாங்க. கடைசியா அவங்க தலைவரோட ஏதோ ஒரு விழாவுலே கலந்துக்கிட்டு கலாட்டா செய்திட்டிருக்கும்போது - இவங்களோட தொல்லை பொறுக்காமே அந்த அபிமான தலைவரே - 'பேசிக்கிட்டிருக்கேன்ல... சைலன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்' - அப்படின்னு கத்திட்டாரு.
அன்னிக்கு மனசு ஒடைஞ்சவங்கதான், அந்த சம்பவத்துக்கப்புறம் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. பாவம் அந்த பாட்டிதான் தனியொரு ஆளா நாள் முழுக்க உழைச்சி சம்பாதிச்சி எல்லாருக்கும் சாப்பாட்டுக்கு வழி செய்துட்டிருந்தாங்க.
பேதை (7 வயது) , பெதும்பை (11 வயது) , மங்கை (13 வயது) , மடந்தை (19 வயது) , அரிவை (25 வயது) , தெரிவை (31 வயது) , பேரிளம்பெண் (40 வயது) - ஆகிய பெண்களின் ஏழு நிலைகளையும் தாண்டி வந்துவிட்ட அந்த பாட்டி அவங்க வீட்டுக்குப் பக்கத்துலேயே உட்கார்ந்து - உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு - இந்த மூணையும் கொஞ்ச நேரம் ஊறவைத்து வடிகட்டி - அதை பச்சை மிளகாய், இஞ்சி, தேவையான அளவு உப்பு
சேர்த்து கரகரவென்று நீர் விடாமல் அரைத்துக் கொண்டு - அந்த விழுதை எடுத்து கருவேப்பிலை, சிறிது மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி கலந்து - அரைக்காத பருப்புக்களையும் கொஞ்சமாக சேர்த்துக் கொண்டு - பிளாஸ்டிக் பேப்பரில் தட்டி எண்ணையில் பொரித்தெடுத்து - அருமையான வெங்காய வடை செய்து - அதை மக்களுக்கு விற்று சம்பாதித்துக் கொண்டிருந்தார்.
பக்கத்து மரத்து மேலே ஒரு காக்கா பசியுடன் உட்கார்ந்திருந்தது.
1330 குறள்களை எழுதிய திருவள்ளுவர் - 490வது குறளாக - 'காலமறிதல்' அதிகாரத்திலே சொல்லியிருக்கிறது என்னன்னா - கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து. அதாவது காலங்கருதி ஒரு கொக்கு தன் இரைக்காக அசையாமல் வாடி இருப்பதைப் போல் கலங்காமல் இருந்து - தக்க சமயம் வாய்த்தவுடன் பாய்ந்து தன் இரையை கொத்திக்கொள்வது போல் சட்டென்று செய்துவிடவேண்டும்.
இதே அறிவுரையின்படி, அந்த காக்காவும் மரத்தின் மேல் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து - ஒரு பெரிய வடைக்காக காத்திருந்தது. அப்படி கிடைத்தவுடன், பறந்து வந்து டக்கென்று அந்த வடையை அபகரித்து திரும்ப மரத்தின் மேல் போய் உட்கார்ந்தது.
நரி இடப்பக்கம் போனா என்ன, வலப்பக்கம் போனா என்ன - மேலே விழுந்து புடுங்காமே இருந்தா சரின்ற பழமொழியில் வர்ற அந்த நரி ஒண்ணு அந்தப்பக்கமா வந்துச்சு.
அவ்வை ஷண்முகி படத்துலே - காதலி காதலி பாட்டு பாடும்போது கமல் வேணும்னே பக்கவாட்டு போஸ்லே - தன் ஓட்டைப் பல்லு காட்டி சிரிப்பாரு. அதே மாதிரி நரியை பாத்த காக்காவும் சைட்லே திரும்பி போஸ் குடுத்துச்சு.
கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க வர்றவங்க எல்லாம் - ஏதோ கச்சேரி செய்யப்போறவங்க போல - ஒரு பாட்டு பாடுங்கன்னு பொண்ணைக் கேக்கறது மாதிரி - நரியும் காக்காவைப் பாத்து - உன் பாடலைக் கேட்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே - பாடு காக்கா, பாடுன்னு கேட்டதால், காக்காவும் பாட தயாரானது.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே....ஏஏஏ.. ஏஏஏ... மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே... .... ...
சுத்தி இருந்த காக்காங்கல்லாம் இப்படி அடி எடுத்துக் கொடுக்க, நம்ம காக்காவும் 'ராக்கம்மா கையத் தட்டு' அப்படின்னு பாட ஆரம்பிச்சது பாருங்க...
ஒரு பெரிய மண்டபத்துலே ரெண்டு பக்கமும் ஏகப்பட்ட பேர் உட்கார்ந்து கைதட்டி பஜனை செய்துகொண்டிருக்கும்போது, நடுவில் வர்ற அவரோட வாயிலிருந்து டக்குன்னு சிவலிங்கம் விழுவதைப்போல், இந்த காக்கா பாட ஆரம்பிச்சவுடனே, அதன் வாயிலிருந்து அந்த வடை கீழே விழுந்தது.
தேர்தலில் எதிர்பாராத விதமா வெற்றி அடைஞ்சிட்டா, அடுத்த தேர்தல் வரும்வரை தொகுதி பக்கமே தலைகாட்டாத அரசியல்வாதிங்க மாதிரி - அந்த நரியும் வடை கிடைச்சது வரை லாபம் - இனிமே அடுத்து பசிக்கும்வரை இந்த பக்கம் வரவேகூடாதுன்னு முடிவு செய்து ஓஓஓடிப்போச்சுது.
அவ்ளோதான் கதை.
*****
கதையைப் பற்றி 'புகழ்ந்து' மறுமொழி எழுதறதுக்கு முன்னாடி ஒரு தடவை லேபிளை பாத்துக்கிடுங்கப்பூ!!!
50 comments:
I am first..
me the second :)
ஹைய்யோ ப்ர்ஸ்ட் ரெண்டு இடத்த மிஸ் பண்ணிட்டேன். ஆனா, பரவாயில்ல, மொத ஓட்டு நான் தாண்ணே. கத பிச்சுருக்கீங்க. இந்த மாதிரி தான் எழுதனும்னு பாக்குறேன். வொர்க் அவுட் ஆக மாட்டேங்குது. மூந்தின பதிவுல நான் எழுதினதுகூடஒரு சீரியஸ் கதையா போச்சு! நாம ஜோக் சொன்னாக் கூட அப்புறம் கேக்குறானுக. குருவே நீங்க தான் ட்யூசன் எடுத்து என்ன பெரிய ஆளாக்கனும்.
உள்ளேன் அண்ணா!!
மீதி படிச்சிட்டு வாரேன்!!
//
எவ்ளோ நாள்தான் இந்த மாதிரி ச்சின்னச்சின்ன பதிவுகளா எழுதிட்டிருக்கறது. அதனால், நானும் ஒரு பெரிய்ய்ய நாவல் - சுமார் ஐநூறு பக்கம் வர்றா மாதிரி எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
//
சரி உங்க முடிவை கெடுக்கறதா இல்லை
ஆனா ஒன்னு, கொஞ்சம் மறு பரிசீலனை...
ஏன் இந்த கஞ்சத்தனம் ஒரு ஆயிரம் :))
//
நீங்க இந்த கதையை பாத்து ஓகே பண்ணிட்டீங்கன்னா, இதே மாதிரி - அட, இதே மாதிரி என்ன, இதே கதையை - ஐநூறு பக்கத்துக்கு இழுத்த்த்த்த்த்து எழுதலாம்னு இருக்கேன்.
//
அது சரி இழுத்த இழுப்பிலே இவ்வளவு நேரம் பிஞ்சி போயி இருக்குமே பாத்து அண்ணா பாத்து :)
//
அந்த நாலு பசங்களும் வேலை வெட்டி இல்லாமே சும்மா ஊர் சுத்திக்கிட்டிருந்தாங்க. சரி வெட்டியாதானே இருக்கோம்னு என்ன பண்ணாங்க - திடீர்னு எல்லோரும் ரௌடி ஆயிட்டாங்க.
//
இப்படி எல்லாம் ஆக முடியுமா??
அப்போ வேலை இல்லேன்னா :))
//
'உடல் மண்ணுக்கு உயிர் விஜய்க்கு'
//
Super o Super!!
//
பாலாபிஷேகம், தயிராபிஷேகம், பீராபிஷேகம் எல்லாமே பண்ணுவாங்க.
//
இதெல்லாம் வேறேயா ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்லை!!
//
கடைசியா அவங்க தலைவரோட ஏதோ ஒரு விழாவுலே கலந்துக்கிட்டு கலாட்டா செய்திட்டிருக்கும்போது - இவங்களோட தொல்லை பொறுக்காமே அந்த அபிமான தலைவரே - 'பேசிக்கிட்டிருக்கேன்ல... சைலன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்' - அப்படின்னு கத்திட்டாரு.
//
இல்லையா பின்னே, அவ்வாறு எவ்வளவு சீரியஸ் மேட்டர் பேச வந்திருப்பாரு கொஞ்சம் உஷாரா இருந்திருக்க வேண்டாம்??
//
அன்னிக்கு மனசு ஒடைஞ்சவங்கதான், அந்த சம்பவத்துக்கப்புறம் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. பாவம் அந்த பாட்டிதான் தனியொரு ஆளா நாள் முழுக்க உழைச்சி சம்பாதிச்சி எல்லாருக்கும் சாப்பாட்டுக்கு வழி செய்துட்டிருந்தாங்க.
//
பாட்டி பாவம் அவங்க அட்ரஸ் கொஞ்சம் குடுக்க முடியுமா :)
//
பேதை (7 வயது) , பெதும்பை (11 வயது) , மங்கை (13 வயது) , மடந்தை (19 வயது) , அரிவை (25 வயது) , தெரிவை (31 வயது) , பேரிளம்பெண் (40 வயது) -
//
ஆஹா சூப்பர் நிலைகளை இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க
அசத்திட்டீங்க போங்க :))
நீங்க அசத்தல் மன்னன் எங்களுக்கு :))
ஓ இது தான் பின் நவீனத்துவ கதையா? நடக்கட்டும்.. நடக்கட்டும்.
//
உட்கார்ந்து - உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு - இந்த மூணையும் கொஞ்ச நேரம் ஊறவைத்து வடிகட்டி - அதை பச்சை மிளகாய், இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து கரகரவென்று நீர் விடாமல் அரைத்துக் கொண்டு - அந்த விழுதை எடுத்து கருவேப்பிலை, சிறிது மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி கலந்து - அரைக்காத பருப்புக்களையும் கொஞ்சமாக சேர்த்துக் கொண்டு - பிளாஸ்டிக் பேப்பரில் தட்டி எண்ணையில் பொரித்தெடுத்து - அருமையான வெங்காய வடை செய்து - அதை மக்களுக்கு விற்று சம்பாதித்துக் கொண்டிருந்தார்.
//
ஒரு வடைக்கு இவ்வளவு பில்ட்பா சரி சரி அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா!!
எல்லாரும் என்னை சொல்லுவாங்க வீட்டுலே எப்படி சமாளிக்கறாங்க உன்னை வச்சுக்கிட்டுன்னு..
ஆனா உங்களை பார்த்தவுடன் அந்த கேள்வி மாறிப் போகும்ன்னு நினைக்கிறேன்.
சரிதானே அண்ணா :))
நிஜமாலுமே எங்க அண்ணி பாவம்!!
//
நரி இடப்பக்கம் போனா என்ன, வலப்பக்கம் போனா என்ன - மேலே விழுந்து புடுங்காமே இருந்தா சரின்ற பழமொழியில் வர்ற அந்த நரி ஒண்ணு அந்தப்பக்கமா வந்துச்சு.
//
சஹானா கதை கேட்டா சொல்ல முடியலை என்னா நடக்குது இங்கே :))
ஹும் ஒன்னும் சொல்றதுக்கில்ல. எதுக்கும் எழுதறதுக்கு முன்னாடி ஒரிஜினல் கதைக்கு சொந்தக்காரனான என்கிட்ட மரியாட்தக்காகவாச்சும் ஒரு வார்த்த சொல்லி இருக்கலாம். பரவாயில்ல.
//
அவ்வை ஷண்முகி படத்துலே - காதலி காதலி பாட்டு பாடும்போது கமல் வேணும்னே பக்கவாட்டு போஸ்லே - தன் ஓட்டைப் பல்லு காட்டி சிரிப்பாரு. அதே மாதிரி நரியை பாத்த காக்காவும் சைட்லே திரும்பி போஸ் குடுத்துச்சு.
//
கற்பனை சும்மா சொல்லக்கூடாது போங்க பின்னிட்டீங்க :))
//
கதையைப் பற்றி 'புகழ்ந்து' மறுமொழி எழுதறதுக்கு முன்னாடி ஒரு தடவை லேபிளை பாத்துக்கிடுங்கப்பூ!!!
//
அதெ மொதல்லே பார்த்துட்டோமில்லே
எதுக்கும் இந்த கதையோட
"Copy Rights" உங்களோடதுன்னு சொல்லிடுங்க, இல்லைன்னா அவங்க அவங்க உரிமை கொண்டாடிடப் போறாங்க :))
உஷாரு உஷாரு அண்ணா உஷாரு!!
யோவ் ஏன் இந்தக் கொலவெறி :) காலங்கார்த்தால 8 மணிக்கெல்லாம் எந்திரிச்சு பாத்தா.. ம்ம்ம்ம்
ஆமா பாட்டி ஏன் இன்னும் வடையே சுட்டுகிட்டு இருக்கணும் மாத்தி யோசிங்கப்பா.. ஒரு தோசை, இட்லி.. இப்புடி சுட்டா தான் என்ன்வாம்
முடியல முடியல :)
நான் ஏன் அண்ணா உங்கள திட்ட போறேன்?? உங்கள இப்படி ப்ளாக் பக்கம் அனுப்பிட்டு தனக்கு தொல்லை விட்டுதேன்னு நிம்மதியா சமையல் செய்யற அன்னியதான் தேடறேன்... :(((
ரொம்ப நீளம் ...காக்கா கேரக்டர் உள்ள வரும் போது நான் கதைய விட்டு வெளியே வந்துட்டேன்.. இதுல ஐநூறு பக்கமா சான்ஸேஇல்லை..
//"ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன்!!!"//
இதுக்கொண்ணும் கொறச்சல் இல்ல.. :(( இப்படி எழுதினா ஐந்நூறு பக்கமென்ன ஐய்யாயிரம் பக்கமே எழுதலாம்... ஆனா படிக்கறவங்க நிலைமையும் கொஞ்சம் மனசுல வெச்சிக்கோங்க.. :((
உடனடியாக ஒரு பெரிய தொகை மணிட்ரான்ஸ்ஃபர் மூலம் அனுப்பவும்.
உங்க பதிவைப் படிச்சு நான் முட்டிகிட்டதுல ஆஃபீஸ் தூண் ஒடஞ்சுபோச்சு..
கதை அவ்வளவுதானா...
ஏதோ கதையை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் முடிச்சமாதிரி தெரியுது :)
வடையை இழந்த பாட்டி மற்றும் காக்கா பற்றி எழுதவில்லையே...
போட்டோ வுல
தலைவர் சுடுற கொடுமை பத்தாதுன்னு
நரி வேற வடைய சுட்டுருச்சா ?
இது
பின் நவீனத்துவ கதையும் இல்லை
முன் நவீனத்துவ கடையும் இல்லை
நடு நவீனத்த்டுவ கதை...
இந்த கதையை எழுதியதன் மூலம் நீங்க
ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பெரிய்யப்பையன் ஆயிட்டீங்க .
வாழ்த்துகள் ...
அநேகமா கமலஹாசன் அடுத்த படத்துக்கு
கதை விவாதத்துக்கு கூப்ட்டாலும் கூப்டுவாரு
ரெடியா இருங்க .
(கூட்டம் கூட்டமா தேடிட்டு இருக்காங்களாம் . ஜாக்கிரதையா இருங்க )
முடியல
என்னதான் சொல்லுங்க பாட்டி வடை சுடுற கதையில இருக்கிற ஃப்ளோ, நீதி இதெல்லாம் வேற எந்த கதையிலயும் இல்லை. என் பையன் இப்போல்லாம் தூங்க போறப்ப "அப்பா கோ ஸ்டொயி" (க்ரோ ஸ்டோரி என்று புரிந்து கொள்க) அப்படின்னு கேட்டு நான் அவனுக்கு புரியற மாதிரி கதைய சொல்லி முடிச்சப்புறம்தான் சார் தூங்குறாரு... :)))))
கண்டிப்பா நீங்க நாவல் எழுதலாம்.
கதையின் நடை நகைச்சுவையாக இருந்தது. அருமை
//ஒரு பெரிய மண்டபத்துலே ரெண்டு பக்கமும் ஏகப்பட்ட பேர் உட்கார்ந்து கைதட்டி பஜனை செய்துகொண்டிருக்கும்போது, நடுவில் வர்ற அவரோட வாயிலிருந்து டக்குன்னு சிவலிங்கம் விழுவதைப்போல், இந்த காக்கா பாட ஆரம்பிச்சவுடனே, அதன் வாயிலிருந்து அந்த வடை கீழே விழுந்தது.//
கதை(யா?)ல எனக்கு ரொம்ப புடிச்சது இதுதான்.
//ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன்!!!//
மரங்கள் மனித வாழ்க்கைக்கு ஆதாரங்கள்!
அதை அழித்து தான் புகழடைய வேண்டுமா?
அதுக்கு ஐநூறு பேர்த்த கொலை பண்ண போறேன்னு சொல்லுங்க வாழ்த்தி வழியனுப்புவோம்.
//அருமையான வெங்காய வடை செய்து - அதை மக்களுக்கு விற்று சம்பாதித்துக் கொண்டிருந்தார்.//
ஏம்பா இதுக்கு வடை சுட்டு வித்தாங்கன்னு சொல்லிட்டு போயிருக்கலாமே!
நானும் என்னவோ எதோன்னு சீரியஸா படிச்சிகிட்டு வர்றேன்
அந்த காக்கா திருவள்ளுவர் சொன்னதை கேட்டு தான் உட்காந்துகிட்டு இருந்ததா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வாங்க சசிகுமார், ஆளவந்தான் -> முதல் ரெண்டு இடத்தை பிடிச்சிட்டு அதுக்கப்புறம் பதிவைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே!!!! மேட்டரே இல்லையா பதிவுலே!!!
வாங்க பாப்பு (அல்லது பப்பு) : ஹாஹா... ஜோக்குக்கு 'அப்புறம்' கேட்டாங்கன்னா, இன்னொரு மரண மொக்கையா போட்டு தாக்கவேண்டியதுதானே!!!
வாங்க சகோதரி ரம்யா -> காலையில் ஆபீஸ்லே ஆணி எதுவும் இல்லையா????? இப்படி போட்டு விளையாடியிருக்கீங்களே!!!!!
வாங்க பிரேம்ஜி -> அட, இதுதானா அது!!!!!
வாங்க சிவக்குமரன் -> ஹாஹா.... இதுக்கு முன்னாடி இந்த கதையை யாரு வெச்சிருந்தாங்கன்னு கவுண்டமணிகிட்டே கேட்டிருக்கணும்... என் தப்புதான்... :-((
வாங்க ராகவ் -> ஹாஹா... மண்டை காஞ்சு போச்சா!!! சரி விடுங்க.. இனிமே பிஸ்ஸா, பர்கர் அப்படின்னு மாத்திடுவோம்.... :-))
வாங்க ஸ்ரீதர்கண்ணன் -> என்ன முடியல... எல்லாம்தான் முடிஞ்சிடுச்சே!!!
வாங்க ஸ்ரீமதி -> அவ்வ்வ்.. ஆள் இல்லேன்னா விடவேண்டியதுதானே!!! கூப்பிட்டு கம்ப்ளெயிண்ட் பண்ணுவீங்களா!!!!
ஆமாங்க. அந்த நாலு பசங்களுக்கும், மூணு பொண்ணுங்களுக்கும் தனித்தனியா ஒரு கதை சொல்லி, அதை ஒரு ஆயிரம் பக்கத்துக்கு இழுக்கலாமே!!!!
வாங்க மு-க அக்கா -> அந்த இடத்துலே கதையை பிடிச்சிடுவீங்கன்னு தெரியும்... :-(( அதுக்காக, காக்காவை எவ்ளோ நேரம்தான் கதைக்கு கொண்டு வராமே இருக்க முடியும் சொல்லுங்க... :-)))
வாங்க பரிசல் -> உங்க பின்னூட்டத்தை பெற என்னென்னல்லாம் எழுத வேண்டியிருக்கு பாருங்க... :-))
வாங்க வேந்தன் -> ஆஹா.. மாட்டி விட்ருவீங்க போலிருக்கே... மக்கள் இதுக்கே தூணையெல்லாம் உடைச்சிருக்காங்க பாருங்க... :-))
வாங்க மோனி -> ஹாஹா... ட்ட்ட்ட்ட்டில்லிக்கே ர்ர்ர்ர்ர்ர்ராஜான்னாலும் ப்ப்ப்ப்ப்பாட்டிக்கு ப்ப்ப்பேரந்தானே... அதே மாதிரி நானும் ச்ச்ச்ச்ச்சின்னப்பையந்தான்... :-)))
வாங்க முரளிகண்ணன் அண்ணா -> ஹாஹா... :-)))
வாங்க வெண்பூ -> ஓகே ஓகே.. டாக்டர் விஜய் நடிப்பு(??) மாதிரி உங்க கதையும் மாறவே மாறாதுன்னு சொல்லுங்க... :-)))
வாங்க ராஜேஸ்வரி -> மிக்க நன்றி...
வாங்க அறிவிலி -> சரியான மேட்டரை புடிச்சிட்டீங்க... :-))
வாங்க வால் -> ஹாஹா... சீரியஸா கதையை படிச்சிட்டு வந்தீங்களா???????
நேர்ல வந்து உதைக்க மாட்டோம்ங்கிற தெகிரியம்தானே?
No Blogs..சைலன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்'
//நேர்ல வந்து உதைக்க மாட்டோம்ங்கிற தெகிரியம்தானே?//
அதேதான்.... :))))
\\அந்த இடத்துலே கதையை பிடிச்சிடுவீங்கன்னு தெரியும்... :-(( அதுக்காக, காக்காவை எவ்ளோ நேரம்தான் கதைக்கு கொண்டு வராமே இருக்க முடியும் சொல்லுங்க... :-)))//
அட்டகாசம்..
ஆனா இப்படி சொல்லிட்டதாலேயே அந்த நாவலை வாங்கிப்படிப்பேன்னு மட்டும் நினைச்சிரவேண்டாம்..
புதுமையான கதை.. இந்த லைன் எங்க புடுச்சீங்க..
very good build up....the way you said is very funny....you can builllllllllllllllllllllllllllllllllllllllllllddddddddddddddddddddddd upppp that to 500 pages...but..one page per day...
அடுத்த ஜே கே ரௌலிங் நீங்கதாண்ணே !!
ராயல்டி கிடைக்கும்போது பாத்து எதாவது போட்டுக் குடுங்க..
அடுத்த நாவல் : "தாத்தா முறுக்கு சுட்ட கதை" ஓகே?
சன் டிவியில உங்களுக்கு 9.00 to 9.30 ஸ்லாட் ரெடி. சூட்டிங் ஆரம்பிச்சுரலாமா. சொந்த தயாரிப்பா இருக்கட்டும். அப்பதான் எல்லா லாபமும் உங்களுக்கே வரும்
thankave mudiyala
வாங்க வேலன் ஐயா, இளா, பட்டாம்பூச்சி -> அவ்வ்வ்... எல்லோருமே கொலவெறிலே இருக்கீங்கன்னு தெரியுது.... கூல் கூல்... :-))
வாங்க மு-க அக்கா -> அட... அந்த நாவலுக்கு அணிந்துரை எழுதப்போவதே நீங்கதானே???? (ஹை... அப்போ படிச்சுதானே ஆகணும்!!!)
வாங்க லோகு -> ஒரு நல்ல அதிகாலை வேளையிலே, தோட்டத்திலே உலாத்திக்கிட்டிருக்கும்போது 'டக்'குன்னு என் மூளையில் உதிச்சதுதாங்க இந்த கதையோட கரு... ஹிஹி..
வாங்க ராஜ்குமார் -> சொல்லிட்டீங்கல்ல... செய்துடுவோம்... :-))
வாங்க மகேஷ்ஜி, தாரணி பிரியா -> அவ்வ்வ். ஒரு முடிவோடதான் இருக்கீங்க நீங்க...
பல ஹாலிவுட் கதைகள் கைவசம் இருக்கு போல !!
என்ன ஒரு திறமை!!
Post a Comment