வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்புவது எப்படி?
இது ஒரு கொசுவத்தி பதிவு.
*****
காலையிலிருந்து மாங்கு மாங்குன்னு (!!) வேலை செய்திட்டிருந்தாலும், அப்போல்லாம் எங்ககிட்டே பேசவே மாட்டாரு எங்க மேனேஜரு. எந்த சந்தேகமும் கேக்க மாட்டாரு. ஆனா, சாயங்காலம் வீட்டுக்குக் கிளம்பறேன்னு சொல்லப் போனாதான் - அந்த வேலையை முடிச்சிட்டியா, இது எப்போ முடியும்? - அப்படி இப்படின்னு இன்னொரு பத்து நிமிடம் இழுத்துடுவாரு. கிளம்பற நேரத்துலே சரியான கடுப்பா இருக்கும்.
எந்த பிரச்சினையுமில்லாமே, நினைச்ச நேரத்துலே எப்படி வீட்டுக்குக் கிளம்பிப் போறது - அப்படின்ற தலைப்புலே நிறைய ஆராய்ச்சிகள் செய்து, சிலவற்றை நடைமுறைக்குக் கொண்டு வந்து அதில் வெற்றியும் அடைஞ்சிருக்கோம். அந்த மாபெரும் ஆராய்ச்சிகளைப் பற்றிதான் இங்கே சொல்லப் போறேன்.
*****
சொல்லாமலேயே எஸ்கேப்:
இதிலே நிறைய பிரச்சினைகள் இருக்கு. வீட்டுக்குப் போனபிறகோ, அடுத்த நாளோ கூப்பிட்டு - என்னப்பா, சொல்லாமேயே போயிட்டே - எனக்கு ஒரு வேலை செய்யணுமேன்னுவாரு. ரொம்பவே அவசரமான வேலையாயிருந்தா, மறுபடி அலுவலகத்துக்குக் கிளம்பி வர வேண்டியிருக்கும். இல்லேன்னா, அடுத்த நாள் கொஞ்சம் சீக்கிரமா வந்து வேலையை முடின்னு சொல்வாரு.
ஒருவர் சொல்ல, மற்றவர்கள் எஸ்கேப்:
எங்கள் குழுவில் இருந்த ஐந்து பேரும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டோம். அதாவது, வீட்டுக்குக் கிளம்பும் நேரமாக பார்த்து யாராவது ஒருவர், மேனேஜரிடம் போய் வேலை சம்மந்தமாக பேசிக்கொண்டிருக்க வேண்டும். அதாவது ஒருவர் அவரை பிஸியாக வைத்திருக்க, மற்றவர்கள் தூரத்திலிருந்து கை காட்டிவிட்டு எஸ்கேப்.
ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொருவராக முறை வைத்துக்கொண்டு - மற்றவர்களை எந்த பிரச்சினையும் இல்லாமல் தப்ப வைக்க வேண்டும். இந்த திட்டமும் கொஞ்ச நாளைக்கு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.
ஆனாலும் இந்த திட்டத்தில், அவரோட கவனம் நம்மேல் திரும்ப நிறைய வாய்ப்பிருப்பதால், அதை எப்படி சமாளிப்பது என்று ஆலோசித்து, ஒரு சிறு முன்னேற்றம் செய்தோம்.
ஒருவர் சொல்ல, ஒருவர் தொலைபேச, மற்றவர்கள் எஸ்கேப்:
மேலே சொன்ன மாதிரியே ஒருவர் மேனேஜரிடம் பேசிக்கொண்டிருக்க, அதே சமயத்தில் இன்னொருவர் மேனேஜருக்கு தொலைபேசி - "சார், அந்த ___ டீடெய்ல் கொஞ்சம் சொல்லுங்க. அந்த பேப்பர் உங்ககிட்டே இருக்கா பாருங்க" - அப்படின்னு அவரை பிஸியா வைத்திருக்க, மற்றவர்கள் வழக்கம்போல் தூரத்திலிருந்து கைகாட்டிவிட்டு எஸ்.
மேனேஜரை மாட்டிவிட்டு எஸ்கேப்:
தினமும் மாலையில் அனுப்பக்கூடிய ஸ்டேட்டஸ் மின்னஞ்சலில், ஏதாவது பொடி அல்லது வெடி வைத்து, மேனேஜருக்கும் - கூடவே அவரோட மேனேஜருக்கும் அனுப்பி வைத்தால் தீர்ந்தது பிரச்சினை. மின்னஞ்சல் அனுப்பிய பத்தாவது நிமிடம், நம்மாளை அவரோட மேனேஜர் கூப்பிடுவார். இவர் கிளம்பி அவரிடத்துக்குப் போனார்னா, நாங்கல்லாம் கிளம்பி அவங்கவங்க இடத்துக்குப் போய்விடலாம்.
ஆனா, இது தினமும் நடக்க வாய்ப்பில்லை. பத்து நாளைக்கு ஒருமுறைதான். இதில் அபாயமும் உண்டு. அடுத்த நாள் காலையில் வந்தவுடன், நமக்கு சூடு விழும் வாய்ப்பும் அதிகம்.
*****
இப்படியாக பல வழிகளை கையாண்டு, ஒரு வழியா அலுவலகத்திலிருந்து தப்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு. அடுத்து என்ன?
*****
ராமாயணம், மகாபாரதம் இதெல்லாம் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீங்க. யுத்தத்துக்காக ரெண்டு பக்கமும் ஏகப்பட்ட ஆட்கள் நின்றிருப்பாங்க. 'ஆஆக்ரமண்ண்ண்ண்ண்' அப்படின்னு ஒருத்தர் கத்தியவுடன், எல்லோரும் ஓஓன்னு சத்தம் போட்டுக்கிட்டே ஓடி வந்து சண்டை போட ஆரம்பிப்பாங்க.
அதே மாதிரி காட்சியை நினைச்சிக்கங்க. ஒரு பக்கத்துலே நானு. இன்னொரு பக்கத்துலே யாருன்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லே. அலுவலகத்திலிருந்து வந்து வீட்டிற்குள் கால் வைச்சவுடனே, 'ஆஆக்ரமண்ண்ண்ண்ண்'னு சொல்லிட்டு தகராறை ஆரம்பிச்சிடுவாங்க.
"ஏண்டா கொய்யா.. இதுக்காகவா அந்த நல்ல மனுசனை ஏமாத்தி, போக்குவரத்துலே ஏகப்பட்ட பேருக்கு 'கட்' கொடுத்து, வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்கு வந்தே? இதுக்கு இன்னும் கொஞ்ச நேரம் நிம்மதியா அலுவலகத்திலேயே இருந்திருக்கலாமே?"ன்னு கண்ணாடி முன்னாடி நின்னு என்னையே கேட்டுக்குவேன்.
வேறே என்ன பண்றது?
*****
58 comments:
me the 1st.
-- mrs.sathya (chinnappaiyan)
me the 1st.
mrs.sathya (chinnappaiyan)
இது நியாயமா சொல்லுங்க ????
ஒரு பக்கத்துலே நானு. இன்னொரு பக்கத்துலே யாருன்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லே. அலுவலகத்திலிருந்து வந்து வீட்டிற்குள் கால் வைச்சவுடனே, 'ஆஆக்ரமண்ண்ண்ண்ண்'னு சொல்லிட்டு தகராறை ஆரம்பிச்சிடுவாங்க.
:))))))))))
//
Anonymous said...
me the 1st.
-- mrs.sathya (chinnappaiyan)
//
செல்லாது.. செல்லாது :))
ஸ்ரீதர்கண்ணன் தான் ஃபர்ஸ்ட்டு :)))
//
இதுக்கு இன்னும் கொஞ்ச நேரம் நிம்மதியா அலுவலகத்திலேயே இருந்திருக்கலாமே?
//
இது மொத பின்னூட்டத்திற்கு பொறகு மாத்தினீங்க தானே :))
ஆளவந்தான் என்னங்க இப்படி பண்ணிடாங்க அழுகுணி ஆட்டம் ஆடிட்டாங்க
//
இதுக்கு இன்னும் கொஞ்ச நேரம் நிம்மதியா அலுவலகத்திலேயே இருந்திருக்கலாமே?
//
இது மொத பின்னூட்டத்திற்கு பொறகு மாத்தினீங்க தானே :))
முற்றிலும் உண்மை
//
ஸ்ரீதர்கண்ணன் said...
ஆளவந்தான் என்னங்க இப்படி பண்ணிடாங்க அழுகுணி ஆட்டம் ஆடிட்டாங்க
//
இதை எதிர்த்து பின்னூட்ட போராட்டம் நடத்திடுவோமா?
ஒரு கும்மி போட்டு.. செஞ்சுரி அடிச்சா தான் இனிமேல் இந்த மாதிரி தப்பு நடக்காது :)
என்னாதிது ”ச்சின்ன”புள்ள தனமா இருக்கு :))))
ok start music
அப்படி போடு.. போடு.. . :))) இந்த மூஜிக் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா???
11
இதனால ச்சகல மானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.. ஒவ்வொருத்தரும் “மீ த ஃப்ர்ஸ்ட்” ஒரு பத்து தடவ போட்டு தங்கள் எதிர்ப்பை ஜனநாயக முறைப்ப்படி பதிவு செய்யுங்கோ :)))))
ஸ்ஸ்ஸ் சூடா ஒரு சோடா ப்ளீஸ் :)
இதனால ச்சகல மானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.. ஒவ்வொருத்தரும் “மீ த ஃப்ர்ஸ்ட்” ஒரு பத்து தடவ போட்டு தங்கள் எதிர்ப்பை ஜனநாயக முறைப்ப்படி பதிவு செய்யுங்கோ :)))))
ஸ்ஸ்ஸ் சூடா ஒரு சோடா ப்ளீஸ் :)
நாந்தேன் ரவுண்ட் பண்ணேன்
இஃகிஃகி!
மேடைப்பேச்சாளர்களிருந்து எல்லாருமே இப்படி வீட்டை கிண்டல் செய்து பேசினால் தான் செம கைதட்டல் கிடைக்கும்...
:))
என்னதிது ச்சின்னப்புள்ளத் தனமா இருக்கு.. வீட்டுக்குக் கிளம்பும்போது மேனேஜர்கிட்ட சொல்லிட்டு போற கெட்ட பழக்கமால்ல இருக்கு..
ME the first !!
ஒருநாள் இல்லை ஒருநாள் நான் மீ த பர்ஸ்டா வருவேன் வருவேன் வருவேன்..
வழக் கலக்
கலக்கல்:)
நம்ப கம்பெனி ரகசியங்கள இப்படி செதறு தேங்கா உடைக்கிறது கணக்கா உடைச்சு.....
உங்க மேல கம்பெனி சார்பா ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்கிறேன்
இதெல்லாம் உக்காந்து யோசிச்சதா? மல்லாக்கப் படுத்து யோசிச்சதா?
இன்னொரு வீட்டுக்குப் போயிட்டிருந்தேன்.தலைப்பைப் பார்த்ததும் பாதியிலேயே இங்கே ஓடி வந்துட்டேன்.இந்த மாதிரி ஐடியாவைத்தானே தேடிகிட்டு இருந்தேன்:) இப்ப பதிவுக்கு.
//சாயங்காலம் வீட்டுக்குக் கிளம்பறேன்னு சொல்லப் போனாதான் - அந்த வேலையை முடிச்சிட்டியா, இது எப்போ முடியும்? - அப்படி இப்படின்னு இன்னொரு பத்து நிமிடம் இழுத்துடுவாரு. கிளம்பற நேரத்துலே சரியான கடுப்பா இருக்கும்.//
பத்து நிமிடமா?மணி அடிக்கிறது 5.30 PM. சரி கிளம்பலாமுன்னு பாஸ் சொன்னது 7.30 PM.
//சொல்லாமலேயே எஸ்கேப்://
புதுசா சேர்ந்த செக்ரட்டரி ஒரு வாரமா சொல்லிட்டு இது சரிப்பட்டு வராதுன்னு இந்த டெக்னிக்தான் பாலோ பண்ணீகீது.
கடைசி பாரா அதெப்படி கடல் கடந்தும் ரெண்டு பக்கமும் ஒரே மாதிரியா இருக்குது:)
இதெல்லாம் உக்காந்து யோசிச்சதா? மல்லாக்கப் படுத்து யோசிச்சதா?//
குப்புற படுத்து யோசிச்சதாம்..அண்ணேன் நல்லா இருக்கு உங்க பதிவும் ,திட்டமும்..
அலுவலகத்திலிருந்து வந்து வீட்டிற்குள் கால் வைச்சவுடனே, 'ஆஆக்ரமண்ண்ண்ண்ண்'னு சொல்லிட்டு தகராறை ஆரம்பிச்சிடுவாங்க.///
ROTFL.. ஆபிஸ்னு பார்க்காம சிரித்துக் கொண்டிருக்கிறேன்..
"ஏண்டா கொய்யா.. இதுக்காகவா அந்த நல்ல மனுசனை ஏமாத்தி, போக்குவரத்துலே ஏகப்பட்ட பேருக்கு 'கட்' கொடுத்து, வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்கு வந்தே? இதுக்கு இன்னும் கொஞ்ச நேரம் நிம்மதியா அலுவலகத்திலேயே இருந்திருக்கலாமே?"ன்னு கண்ணாடி முன்னாடி நின்னு என்னையே கேட்டுக்குவேன்.//
ஹா ஹா ஹா:)
வாங்க ஸ்ரீதர்கண்ணன், ஆளவந்தான் -> இது நியாயமே இல்லே... இப்படி ஆரம்பத்திலேயே கும்மி அடிக்கலாமா???????
வாங்க பழமைபேசி, ராகி ஐயா -> நன்னி...
வாங்க மு-க அக்கா -> ஏங்க, அதுக்கு முன்னாடி பத்து பத்தி எழுதியிருக்கேனே -- அதை பற்றி ஒண்ணும் சொல்லவேயில்லையே????? நீங்க சொல்றது வெறும் சைட்-டிஷ்தானுங்களே... பதிவோட தலைப்பும், மேட்டரும் வேறேயாச்சே.... :-)))
வாங்க ராகவ் -> ஹாஹா... சரி சரி.. நீங்கதான் பஷ்டு....
வாங்க மு-க அண்ணா, சகோ வித்யா -> நன்றி...
வாங்க அசோசியேட் -> அவ்வ்வ்... வேணாங்கோ... இப்பல்லாம் நான் திருந்திட்டேங்கோ...
வாங்க மகேஷ்ஜி -> ஹிஹி.. ஆபீஸ்லேயெல்லாம் மல்லாக்க படுக்க முடியாதுங்கோ... (என்) முகரக்கட்டையை பாத்துக்கிட்டே யோசிச்சதுதாங்கோ... :-)))
வாங்க ராஜ நடராஜன் -> பாக்கி எல்லா ஐடியாக்களையும் ஃபாலோ பண்ணிட்டு சொல்லுங்க... :-))
வாங்க ஆண்ட்ரூ சுபாசு -> அப்புறம் என்ன? திட்டத்தை அமுல்படுத்திட வேண்டியதுதானே????
எல்லாம் குறிச்சி வச்சி கிட்டேன், நான் பயன் படுத்துறேன்
//
காலையிலிருந்து மாங்கு மாங்குன்னு (!!) வேலை செய்திட்டிருந்தாலும், அப்போல்லாம் எங்ககிட்டே பேசவே மாட்டாரு எங்க மேனேஜரு. எந்த சந்தேகமும் கேக்க மாட்டாரு. ஆனா, சாயங்காலம் வீட்டுக்குக் கிளம்பறேன்னு சொல்லப் போனாதான் - அந்த வேலையை முடிச்சிட்டியா, இது எப்போ முடியும்? - அப்படி இப்படின்னு இன்னொரு பத்து நிமிடம் இழுத்துடுவாரு. கிளம்பற நேரத்துலே சரியான கடுப்பா இருக்கும்.
//
எல்லா இடத்திலேயும் இது போல் ஒரு வில்லன் இருப்பாங்க போல இருக்கே:))
//
எந்த பிரச்சினையுமில்லாமே, நினைச்ச நேரத்துலே எப்படி வீட்டுக்குக் கிளம்பிப் போறது - அப்படின்ற தலைப்புலே நிறைய ஆராய்ச்சிகள் செய்து, சிலவற்றை நடைமுறைக்குக் கொண்டு வந்து அதில் வெற்றியும் அடைஞ்சிருக்கோம். அந்த மாபெரும் ஆராய்ச்சிகளைப் பற்றிதான் இங்கே சொல்லப் போறேன்.
//
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!!
//
இதிலே நிறைய பிரச்சினைகள் இருக்கு. வீட்டுக்குப் போனபிறகோ, அடுத்த நாளோ கூப்பிட்டு - என்னப்பா, சொல்லாமேயே போயிட்டே - எனக்கு ஒரு வேலை செய்யணுமேன்னுவாரு. ரொம்பவே அவசரமான வேலையாயிருந்தா, மறுபடி அலுவலகத்துக்குக் கிளம்பி வர வேண்டியிருக்கும். இல்லேன்னா, அடுத்த நாள் கொஞ்சம் சீக்கிரமா வந்து வேலையை முடின்னு சொல்வாரு.
//
அருமையான எச்சரிக்கை!!
ரம்யா..
மொத பின்னூட்டத்த படிச்சீங்களா?
//
எங்கள் குழுவில் இருந்த ஐந்து பேரும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டோம். அதாவது, வீட்டுக்குக் கிளம்பும் நேரமாக பார்த்து யாராவது ஒருவர், மேனேஜரிடம் போய் வேலை சம்மந்தமாக பேசிக்கொண்டிருக்க வேண்டும். அதாவது ஒருவர் அவரை பிஸியாக வைத்திருக்க, மற்றவர்கள் தூரத்திலிருந்து கை காட்டிவிட்டு எஸ்கேப்.
//
ஏன் இந்த கொல வெறி பேசிகிட்டு இருப்பவரு எப்போ கிளம்புவாறு??
//
ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொருவராக முறை வைத்துக்கொண்டு - மற்றவர்களை எந்த பிரச்சினையும் இல்லாமல் தப்ப வைக்க வேண்டும். இந்த திட்டமும் கொஞ்ச நாளைக்கு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.
//
ஒரு மார்க்கமாத்தான் யோசிக்கறாங்க:))
//
மேலே சொன்ன மாதிரியே ஒருவர் மேனேஜரிடம் பேசிக்கொண்டிருக்க, அதே சமயத்தில் இன்னொருவர் மேனேஜருக்கு தொலைபேசி - "சார், அந்த ___ டீடெய்ல் கொஞ்சம் சொல்லுங்க. அந்த பேப்பர் உங்ககிட்டே இருக்கா பாருங்க" - அப்படின்னு அவரை பிஸியா வைத்திருக்க, மற்றவர்கள் வழக்கம்போல் தூரத்திலிருந்து கைகாட்டிவிட்டு எஸ்.
//
இதுக்கு பேசாமே அவரு காதுலே ஒரு கடுக்கன் மாட்டி விட்டுடுங்கோ:))
//ஸ்ரீதர்கண்ணன் said...
me the 1st.
mrs.sathya (chinnappaiyan)
இது நியாயமா சொல்லுங்க ????
//
இவரோட ஆதங்கமான வருத்ததுக்கு நியாயம் கேளுங்க :)))
//
தினமும் மாலையில் அனுப்பக்கூடிய ஸ்டேட்டஸ் மின்னஞ்சலில், ஏதாவது பொடி அல்லது வெடி வைத்து, மேனேஜருக்கும் - கூடவே அவரோட மேனேஜருக்கும் அனுப்பி வைத்தால் தீர்ந்தது பிரச்சினை. மின்னஞ்சல் அனுப்பிய பத்தாவது நிமிடம், நம்மாளை அவரோட மேனேஜர் கூப்பிடுவார். இவர் கிளம்பி அவரிடத்துக்குப் போனார்னா, நாங்கல்லாம் கிளம்பி அவங்கவங்க இடத்துக்குப் போய்விடலாம்.
//
இது நல்ல ஐடியாவா இருக்கே
முயற்சி பண்ணி பாப்பாங்க இனி
எல்லாரும்!!
//
me the 1st.
-- mrs.sathya (chinnappaiyan)
//
படிச்சேன், இது நிசமாலுமா???
//
ஆனா, இது தினமும் நடக்க வாய்ப்பில்லை. பத்து நாளைக்கு ஒருமுறைதான். இதில் அபாயமும் உண்டு. அடுத்த நாள் காலையில் வந்தவுடன், நமக்கு சூடு விழும் வாய்ப்பும் அதிகம்.
//
ஆமா ஆமா ஆமா ஆமா!!
//
Anonymous said...
me the 1st.
-- mrs.sathya (chinnappaiyan)
//
அண்ணா, இது நிஜமாலுமே அண்ணியா?
//
இப்படியாக பல வழிகளை கையாண்டு, ஒரு வழியா அலுவலகத்திலிருந்து தப்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு. அடுத்து என்ன?
//
இனிமேல் தான் ஆரம்பம் ஆகப்போகுது இருங்க!1
//
அதே மாதிரி காட்சியை நினைச்சிக்கங்க. ஒரு பக்கத்துலே நானு. இன்னொரு பக்கத்துலே யாருன்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லே. அலுவலகத்திலிருந்து வந்து வீட்டிற்குள் கால் வைச்சவுடனே, 'ஆஆக்ரமண்ண்ண்ண்ண்'னு சொல்லிட்டு தகராறை ஆரம்பிச்சிடுவாங்க.
//
ஹையோ ஹையோ!! அண்ணா நீங்க யாரு ஏதாவது வழி வச்சிருப்பீங்களே தப்பிக்க:))
இதை பத்தி அலுவலகத்திலேயே யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க:)))
//
ஏண்டா கொய்யா.. இதுக்காகவா அந்த நல்ல மனுசனை ஏமாத்தி, போக்குவரத்துலே ஏகப்பட்ட பேருக்கு 'கட்' கொடுத்து, வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்கு வந்தே? இதுக்கு இன்னும் கொஞ்ச நேரம் நிம்மதியா அலுவலகத்திலேயே இருந்திருக்கலாமே?"ன்னு கண்ணாடி முன்னாடி நின்னு என்னையே கேட்டுக்குவேன்.
//
இது சூப்பர் சிரிச்சு சிரிச்சு ஒரே வலிக்குது முடியலை...
//
வேறே என்ன பண்றது?
//
வேறே ஒண்ணுமே பண்ண முடியாது.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!
//
ஆளவந்தான் said...
//ஸ்ரீதர்கண்ணன் said...
me the 1st.
mrs.sathya (chinnappaiyan)
இது நியாயமா சொல்லுங்க ????
//
இவரோட ஆதங்கமான வருத்ததுக்கு நியாயம் கேளுங்க :)))
//
You are correct!!
/
"ஏண்டா கொய்யா.. இதுக்காகவா அந்த நல்ல மனுசனை ஏமாத்தி, போக்குவரத்துலே ஏகப்பட்ட பேருக்கு 'கட்' கொடுத்து, வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்கு வந்தே? இதுக்கு இன்னும் கொஞ்ச நேரம் நிம்மதியா அலுவலகத்திலேயே இருந்திருக்கலாமே?"ன்னு கண்ணாடி முன்னாடி நின்னு என்னையே கேட்டுக்குவேன்.
/
:)))))
ஹா ஹா
Next Thamira@Aadimulakrishnan in the making
:)
Anputan
Singai Nathan
காலையிலிருந்து மாங்கு மாங்குன்னு (!!) வேலை செய்திட்டிருந்தாலும், அப்போல்லாம் எங்ககிட்டே பேசவே மாட்டாரு எங்க மேனேஜரு. எந்த சந்தேகமும் கேக்க மாட்டாரு. ஆனா, சாயங்காலம் வீட்டுக்குக் கிளம்பறேன்னு சொல்லப் போனாதான் - அந்த வேலையை முடிச்சிட்டியா, இது எப்போ முடியும்? - அப்படி இப்படின்னு இன்னொரு பத்து நிமிடம் இழுத்துடுவாரு. கிளம்பற நேரத்துலே சரியான கடுப்பா இருக்கும்.
///
எல்லா டேமேஜரும் இப்படித்தானா.
இதிலே நிறைய பிரச்சினைகள் இருக்கு. வீட்டுக்குப் போனபிறகோ, அடுத்த நாளோ கூப்பிட்டு - என்னப்பா, சொல்லாமேயே போயிட்டே - எனக்கு ஒரு வேலை செய்யணுமேன்னுவாரு. ரொம்பவே அவசரமான வேலையாயிருந்தா, மறுபடி அலுவலகத்துக்குக் கிளம்பி வர வேண்டியிருக்கும். இல்லேன்னா, அடுத்த நாள் கொஞ்சம் சீக்கிரமா வந்து வேலையை முடின்னு சொல்வாரு.
////
இது பேஜாரு..
இன்னொரு உத்திய வுட்டுப்புட்டீங்களே அண்ணா..
ப்ராஜக்ட்ல இருக்கும் போது வீக்லி (வீக்கான ரிப்போர்ட்டுன்னும் படிக்கலாம்)ரிபோர்ட் வெள்ளிக்கிழமை வேலையெல்லாம் முடிஞ்சதும் கிளம்பறதுக்கு முன்னாடி அனுப்பறது இப்போ நடைமுறையிலேயே வந்துடிச்சி. ஏன்னா அப்பத்தானே ரிப்போர்ட் மேலே வர்ற டிஸ்கஷன அடுத்த வீக்குக்கு வெச்சிக்கலாம்.
சும்மானாச்சும் காபி ப்ரேக்ல மானேஜர் கிட்ட திருவல்லிக்கேணியிலிருந்து வேப்பம்பட்டு எவ்ளோதூரம் இருக்கும்னு ரொம்ப அப்பாவியா மூஞ்ச வெச்சிகிட்டு கேட்டு, காரணம் கேட்டா..வேறே ஒண்ணுமில்ல ஒரு ரிஸப்ஷன் போகணும்னு அங்கயே சீக்கிரம் கிளம்ப அடிபோடறதுன்னு லிஸ்ட் நீண்டுகிட்டே போகும்...
சரி சரி போய் அடுத்த வாரம் என்ன சொல்லலாம்னு யோசிங்க...நானும் உட்கார்ந்து யோசிக்கறேன்....
வர்ட்டா...
ச்சே பாவங்க நீங்க....
:-))))))
இது நியாயமா
ok ok...where is the next post? (Is there any thing....like...you have to take long break after a good post).....
Post a Comment