வாய் விடாமே (முடிஞ்சா) சிரிங்க...!!!
பக்தன்: கடவுளே, எனக்கு அமைஞ்ச பொண்டாட்டி சரியில்லே. எனக்கு ஏன் இப்படிப்பட்ட பொண்ண குடுத்தே?
கடவுள்: அடங்கொன்னியா, பொண்டாட்டி வேணும்னு நீதானே ‘தலைகீழே' நின்னே?
*****
தொண்டர்-1: என்ன, நம்ம தலைவரு எல்லாத்திலேயும் லேட்டஸ்ட் தொழில் நுட்பத்தைத்தான் பயன்படுத்துவாரா?
தொண்டர்-2: ஆமா, மணல் கடத்தலைக்கூட சாட்டிலைட் துணையுடன் கண்காணிக்கறார்னா பாத்துக்கோ.
*****
” நேத்து எங்க ஹோட்டலே கொரில்லா தாக்குதல் நடந்தது.”
“பக்கத்து நாட்டுலேந்தா?”
“ம்ஹும். பக்கத்து zooலேந்து”.
*****
" நம்ம கட்சியோட கொள்கை பேரு “உள்ளே வெளியே”வா? அப்படின்னா?"
“பிற கட்சியிலேந்து நம்ம கட்சிக்குள்ளே வர்றவங்க, வெளியே தைரியமா சுத்தலாம்.. அதே நம்ம கட்சியிலேந்து வெளியே யாராவது போனாங்கன்னா, அவங்க “உள்ளே”தான் இருக்கணும்.”
*****
”வேலைக்கு சேரும்போது 24 மணி நேரம் வேலை செய்வேன்னீங்களே?”
“ஆமா. நான் ஒரு வாரத்துக்குதானே சொன்னேன்”.
*****
” நீயும் உன் மருமகளும், சண்டை போடப்போறோம்னு சொல்லிட்டு தினமும் எங்கே பஸ்லே போயிட்டு வர்றீங்க?”
“சென்னை உயர் நீதிமன்றதுக்குதான். சண்டையில் ஏதாவது அடிகிடி பட்டுடுச்சுன்னா, அரசு செலவுலேயே வைத்தியம் பண்ணிக்கலாமே!!!”
*****
”என்னது, உன் பொண்டாட்டி எதிரிலேயே இன்னொருத்தி வந்து, என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னாளா?”
“ஆமா”
“எங்கே நடந்தது இது? எப்போ?”
“கணிணி பாக்கும்போதுதான்... tamilmatrimony.com விளம்பரத்திலிருந்து”
*****
கழக ஆட்சி திரும்ப வந்தபிறகு தலைவர் போட்ட முதல் கையெழுத்து தமிழகத்தில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்கின் நிறங்களை மாற்றியமைக்கும் கோப்பில்தான்.
சென்ற ஆட்சியில் சிக்னல் விளக்குகளில் ஒளிர்ந்த - கரும் பச்சை, பச்சை, இளம் பச்சை - ஆகிய நிறங்களை மாற்றி - கரும் மஞ்சள், மஞ்சள், இளம் மஞ்சள் நிறங்களை நிறுவ ஆணை பிறப்பித்துள்ளார்.
*****
36 comments:
me the first :))
//
பக்தன்: கடவுளே, எனக்கு அமைஞ்ச பொண்டாட்டி சரியில்லே. எனக்கு ஏன் இப்படிப்பட்ட பொண்ண குடுத்தே?
கடவுள்: அடங்கொன்னியா, பொண்டாட்டி வேணும்னு நீதானே ‘தலைகீழே' நின்னே?
//
பக்தன்: ஆள்காட்டி விரலை தன் நெற்றிக்கு நேராக நீட்டி.. கேப்பியா.கேப்பியா?? வேணுண்டா உனக்கு
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
தொண்டர்-1: என்ன, நம்ம தலைவரு எல்லாத்திலேயும் லேட்டஸ்ட் தொழில் நுட்பத்தைத்தான் பயன்படுத்துவாரா?
தொண்டர்-2: ஆமா, மணல் கடத்தலைக்கூட சாட்டிலைட் துணையுடன் கண்காணிக்கறார்னா பாத்துக்கோ.
//
Spelling mistake ”மண்காணிக்கிறார்”
//
”வேலைக்கு சேரும்போது 24 மணி நேரம் வேலை செய்வேன்னீங்களே?”
“ஆமா. நான் ஒரு வாரத்துக்குதானே சொன்னேன்”.
//
அதான் தெரியுமே.. ஆனா நீ மாசத்துக்கு கூட 20மணி நேரம் வேலை செய்ய மாட்டேங்குறியே அதான் ஏன்??
//
” நீயும் உன் மருமகளும், சண்டை போடப்போறோம்னு சொல்லிட்டு தினமும் எங்கே பஸ்லே போயிட்டு வர்றீங்க?”
“சென்னை உயர் நீதிமன்றதுக்குதான். சண்டையில் ஏதாவது அடிகிடி பட்டுடுச்சுன்னா, அரசு செலவுலேயே வைத்தியம் பண்ணிக்கலாமே!!!”
//
ஆமா.. அப்டியே டிவிலேயும் வரலாம் ‘ல..
//
”என்னது, உன் பொண்டாட்டி எதிரிலேயே இன்னொருத்தி வந்து, என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னாளா?”
“ஆமா”
“எங்கே நடந்தது இது? எப்போ?”
“கணிணி பாக்கும்போதுதான்... tamilmatrimony.com விளம்பரத்திலிருந்து”
//
அதானே பாத்தேன்.. நேர்ல பாத்திருந்தா உவ்வ்வே :))))
//
கழக ஆட்சி திரும்ப வந்தபிறகு தலைவர் போட்ட முதல் கையெழுத்து தமிழகத்தில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்கின் நிறங்களை மாற்றியமைக்கும் கோப்பில்தான்.
சென்ற ஆட்சியில் சிக்னல் விளக்குகளில் ஒளிர்ந்த - கரும் பச்சை, பச்சை, இளம் பச்சை - ஆகிய நிறங்களை மாற்றி - கரும் மஞ்சள், மஞ்சள், இளம் மஞ்சள் நிறங்களை நிறுவ ஆணை பிறப்பித்துள்ளார்.
//
ஏன் அவருக்கு மஞ்சள் காமாலையா?
சரி வந்தது வந்துட்டோம்.. ரவுண்டா ஒரு பத்து அடிச்சு போய்டுவோம்
//
" நம்ம கட்சியோட கொள்கை பேரு “உள்ளே வெளியே”வா? அப்படின்னா?"
//
இதைபடிச்சவுடனே ஐஸ்வர்யா(லட்சுமி மகள் ) ஞாபகம் வந்து என்ன பொரட்டி போட்டதுனால அதுக்கடுத்து என்னால ஒன்னும் படிக்க முடியல :))))
சரி.. ரவுண்டா.. சுளையா பத்து.. ஸ்ஸ் அப்பா.. ஒரு டீ பார்சல் சொல்லுங்க சின்னபையன் :)
(கடையில தான்.. வீட்டுல இருந்து கேட்டா உங்களோட சேர்ந்து நானும் அடி வாங்க வேண்டி இருக்கும்:))))) இது தேவையா எனக்கு? )
ஆ ஆளவந்தான் -> எல்லோரும் பத்து பத்துன்னு பதிவு போடறாங்க... நீங்க ஜாலியா பத்து பின்னூட்டம் போட்டுட்டீங்க...
நல்ல மொக்கை மூடுலேதான் இருக்கீங்க போல....
ஹிஹி...
இஃகிஃகி! இஃகிஃகி!!
:-))))
//கழக ஆட்சி திரும்ப வந்தபிறகு தலைவர் போட்ட முதல் கையெழுத்து தமிழகத்தில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்கின் நிறங்களை மாற்றியமைக்கும் கோப்பில்தான்.
சென்ற ஆட்சியில் சிக்னல் விளக்குகளில் ஒளிர்ந்த - கரும் பச்சை, பச்சை, இளம் பச்சை - ஆகிய நிறங்களை மாற்றி - கரும் மஞ்சள், மஞ்சள், இளம் மஞ்சள் நிறங்களை நிறுவ ஆணை பிறப்பித்துள்ளார்.//
:-)))))))))
கடைசி கழ(ல)க மேட்டர் ROTFL:)
HA HA HA.......
”வேலைக்கு சேரும்போது 24 மணி நேரம் வேலை செய்வேன்னீங்களே?”
“ஆமா. நான் ஒரு வாரத்துக்குதானே சொன்னேன்”.//
இது நீங்க தானே!
//சென்ற ஆட்சியில் சிக்னல் விளக்குகளில் ஒளிர்ந்த - கரும் பச்சை, பச்சை, இளம் பச்சை - ஆகிய நிறங்களை மாற்றி - கரும் மஞ்சள், மஞ்சள், இளம் மஞ்சள் நிறங்களை நிறுவ ஆணை பிறப்பித்துள்ளார்.//
ஹா ஹா ஹா
வாழ்க பகுத்தறிவு சிங்கங்கள்
:-)
:-)
:-)
ஹிஹி...ஹிஹி...
முதல் ஜோக் சூப்பர்ண்ணே..
வாங்க இளா, பழமைபேசி, ராகி ஐயா, ஸ்ரீதர்கண்ணன் -> நன்றி...
வாங்க இயற்கை, சகோதரி வித்யா, நான் -> மிக்க நன்றி..
வாங்க வால் -> அவ்வ்... அது நானில்லைங்கோ.....:-))
வாங்க நவ நீதன், அன்பு, தாமிரா -> அனைவருக்கும் நன்றி... மீண்டும் வருக... :-))
வாய் விட்டே சிரிக்கலாம். எல்லாமே அருமை. சிலதுல உங்க அனுபவமும் இருக்கு போல?
see here
jkrfanclub.blogspot.com
வாய் விட்டு சிரிக்காம இருக்க முடியலை
all jokes are nice- and especially aalavandhan replied are super !! siripuku maela siripu :-) - Mona
வாங்க வேலன் ஐயா -> ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு?????
வாங்க அப்துல்லா அண்ணே -> தலக்கு வாழ்த்துகள் சொல்லிட்டேண்ணே!!!
வாங்க நசரேயன் -> நன்றி...
வாங்க மோனா -> நன்றி...
me the last???
//
பக்தன்: கடவுளே, எனக்கு அமைஞ்ச பொண்டாட்டி சரியில்லே. எனக்கு ஏன் இப்படிப்பட்ட பொண்ண குடுத்தே?
கடவுள்: அடங்கொன்னியா, பொண்டாட்டி வேணும்னு நீதானே ‘தலைகீழே' நின்னே?
//
பக்தன்: நின்னேன் அதுக்காக இப்படியா யாருமே வேனாம்னும் சொன்ன பொண்ணை என் தலைய்லே கட்டி வச்சுட்டீங்களா???
//
”வேலைக்கு சேரும்போது 24 மணி நேரம் வேலை செய்வேன்னீங்களே?”
“ஆமா. நான் ஒரு வாரத்துக்குதானே சொன்னேன்”.
//
சும்மா, வேலை கிடைக்கனும்னு ஒரு பில்டப் கொடுத்தேன். அதுக்கு இப்போ என்னா???
நான் இப்போ senior ஆகிவிட்டேன், ரொம்ப பேசினா அப்புறம் தெரியும் சேதி.
பாத்து நடந்துக்கணும் சரியா???
சின்னபையன் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்ன்னு சொல்லுவாங்க.
அதை நீங்க தினமும் எல்லாரையும் செய்ய வைக்கறீங்க.
உங்க பதிவுக்கு எப்போ வந்தாலும் நல்ல சிரிப்பு வருது.
அலுவலக ஆணிதான் சில சமயம் தாமதம் ஆகின்றது.
கலக்கல் ச்சின்ன பையன். இனிமே உங்க பதிவுக்கு அடிக்கடி வரணும். எப்படியோ இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டேன்.
//
மணிகண்டன் said...
கலக்கல் ச்சின்ன பையன். இனிமே உங்க பதிவுக்கு அடிக்கடி வரணும். எப்படியோ இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டேன்
//
பொறுமையா உக்காந்து படிங்க மணி. எந்த சூழலுக்கும் ஒத்து போற மாதிரி தான் இருக்கும் எல்லா பதிவும்..
எதாவது டவுட்’னாலும் கேளுங்க.. கூட்ப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவாரு.. ஆனா டீ.. காபி மட்டும் கேட்டுடாதீங்க :)))))
தொண்டர்-1: என்ன, நம்ம தலைவரு எல்லாத்திலேயும் லேட்டஸ்ட் தொழில் நுட்பத்தைத்தான் பயன்படுத்துவாரா?
தொண்டர்-2: ஆமா, மணல் கடத்தலைக்கூட சாட்டிலைட் துணையுடன் கண்காணிக்கறார்னா பாத்துக்கோ.//
என்ன கறபனை...
நகைச்சுவை தூக்கல்...
தொடருங்கோ...
அண்ணே! ஜோக்கெல்லாம் சூப்பரண்ணே.
சிரிப்பு வர்றது முக்கியமில்லை. ஆனா நீங்க சொந்தமா எழுதியிருக்கீங்க பாருங்க. உண்மையிலேயே மகிழ்ச்சியா இருக்கு. அந்த சிக்னல் ஜோக்கு டாப்புங்கோவ்...
என்ன நம்ம வலைப்பக்கம் ஆளையே காணும். நெம்ப பிஸியா?
பார்த்தசாரதி ஸ்வாமி சபாவ படிச்சிட்டு கருத்துரையிடறேன்.
வாங்க சகோதரி ரம்யா -> உங்க ஊக்கப்படுத்தும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி... வாழ்க...
வாங்க மணிகண்டன் -> பரவாயில்லே விடுங்க... இப்போ தெரிஞ்சிக்கிட்டீங்க இல்லே... அடிக்கடி வாங்க... நன்றி...
ஆளவந்தான் -> நான் நினைச்சதை அட்டகாசமா சொல்லிட்டேப்பா... மிக்க நன்றி... ஆமா... இனிமே குளம்பின்னுதான் சொல்லணும்... ஓகேயா???
வாங்க கமல் -> நன்றி...
வாங்க விஜயசாரதி -> சனி, ஞாயிறு நான் தலையை வேறே பக்கம் வெச்சி படுப்பேங்க... (இணையம் பக்கம் வெக்க மாட்டேன்னு சொல்ல வந்தேன்).. கவலைப்படாதீங்க. நீங்க என் ரீடர்லே இருக்கீங்க... ரெண்டு மூணு நாள் லேட்டானாலும் விடாமே வந்துடுவேன்... :-)))
Post a Comment