கடையோட மாப்பிள்ளை!!! - மேடை நாடகம் மாதிரி - பகுதி 1
ரொம்ப நாளா ஒரு நாடகம் (மாதிரி!) எழுதணும்னு ஒரு ஆசை.
இதுலே என்ன பிரச்சினைன்னா, எஸ்.வி.சேகர், கிரேசி மோகன், காத்தாடி, சோ, ஆர்.எஸ்.மனோகர் - அப்படின்னு எல்லாருடைய நாடகங்களையும் பார்த்திருந்தாலும் - வீட்லேயும் சரி,
நண்பர்கள்கிட்டேயும் சரி - சாதாரணமா பேசும்போதிலிருந்து இந்த நாடகம் (மாதிரி) பதிவு போடுற வரைக்கும் - அந்த முதல் ரெண்டு பேருடைய பாதிப்பு ரொம்பவே ஜாஸ்தியாயிருக்கு.
இருந்தாலும் பரவாயில்லேன்னு எழுத ஆரம்பிச்சிட்டேன்.
இது முதல் பகுதி. வாரத்துக்கு ஒரு பகுதின்னு எழுதி மூணு பகுதியில் முடிச்சிடலாம்னு நினைக்கறேன். எப்படி இருக்குன்னு படிச்சி சொல்லுங்க.
*****
(காட்சி 1 துவக்கம்)
காலை மணி ஏழு. ஒரு வீட்டின் வரவேற்பறை. "கோசலையின் குமரா ஸ்ரீராமா..." என்று அழகிய தமிழில் சுப்ரபாதம் கேட்கின்றது.
மாது - 30 வயது வாலிபன் - பி.காம் படித்தவன் - பெரிய்ய்ய வேலையில் இருக்கிறான் என்று சொல்லத்தான் அவன் அப்பா விருப்பப்படுகிறார். ஆனால் தற்போதைக்கு
வேலையில்லாமல்தான் இருக்கிறான். அம்மாவுக்கோ மாதுவுக்கு திருமணம் செய்துவிட வேண்டும் என்று ஆசை.
*****
அப்பா: "ஆண்டவா.. எல்லாரையும் நல்லபடியா காப்பாத்துப்பா."
(சோபாவில் சாய்ந்து படுத்து குமுதம் படித்துக்கொண்டிருக்கும் மாதுவை பார்க்கிறார்).
அப்பா: "ஏண்டா, இவ்ளோ பெரிய பையனா வளர்ந்திருக்கே. காலங்கார்த்தாலே வெட்டியா உக்காந்து குமுதம் படிச்சிண்டிருக்கியே?"
மாது: "அப்பா. இப்பல்லாம் குமுதம் மாதிரி பத்திரிக்கைகளை பெரியவங்க மட்டும்தான் பாக்கவோ படிக்கவோ முடியும். ஆமா. இந்த வாரம் நடுப்பக்கத்தை கிழிச்சது நீதானா? ஒழுங்கா
சொல்லிடு. இல்லேன்னா அம்மாகிட்டே போட்டு கொடுத்துடுவேன்."
அப்பா: "கர்மம் கர்மம். நான் ஏண்டா அதையெல்லாம் கிழிக்கிறேன்?"
மாது: "இல்லே சித்த முன்னாடி டாய்லெட்லேந்து ரகசியமா குமுதத்தை கொண்டு வந்து இங்கே வெச்சியே. நீதான் இதை கிழிச்சிருப்பியோன்னு நினைச்சேன்".
அப்பா: "வேறே வேலையே இல்லே பாரு எனக்கு. ஆமா. வேலைக்குப் போறாமாதிரி ஏதாவது ப்ளான் இருக்கா இல்லையா?"
மாது: "கொஞ்ச நாழி இரு. எல்.ஐ.சி ஆபீஸுக்கு ஃபோன் பண்ணி கேட்டு சொல்றேன். அவங்கதான் குழந்தைலேந்து தாத்தா ஆகற வரைக்கும் எல்லாருக்கும் ஒரு ப்ளான்
வெச்சிருப்பாங்க".
அப்பா: "அதை சொல்லலேடா. உனக்கு வேலைக்கு போறாமாதிரி ஐடியா இருக்கா இல்லையான்னு கேட்டேன்".
மாது: " நான் என்னிலேந்தோ ரெடியாதான் இருக்கேன். வேலைதான் யாரும் தரமாட்டேங்கறா. இப்பதான் எங்கே பாத்தாலும், ரிசஷன், ரிசஷன்றாங்களே. நம்ம வீட்டுக்கு பால் ஊத்தற
கோபாலை நேத்து பாத்தேன். நாலு மாடு வெச்சிருந்தான். அதிலே ரெண்டு மாட்டை வேலையை விட்டு துரத்திட்டானாம். என்னடான்னா, ரிசஷன்றான். அடடா. நல்லவேளை
ஞாபகப்படுத்தினேப்பா. இல்லேன்னா நான் மறந்தே போயிருப்பேன்".
அப்பா: "என்னடா. ஏதாவது இன்டர்வியூ வந்திருக்கா. எங்கேயாவது வேலைக்கு கூப்பிட்டாங்களா? எதை மறந்தே?"
மாது: "கார்த்தாலேந்து நான் காபிகூட குடிக்கலை. இப்பதான் ஞாபகமே வருது. அம்மா.. அம்மா.. காபி ரெடியாம்மா?.."
அப்பா: ம். இதை மட்டும் நல்லா ஞாபகம் வெச்சிக்கோ. எப்போ நீ வேலைக்கு போய், எப்போ உனக்கு கல்யாணம் பண்ணி என் பேரன் பேத்திகளை பாக்கப்போறேனோ, எனக்கு
தெரியல.
அம்மா: (காபியோடு என்ட்ரி) "சும்மா காலங்கார்த்தாலே பையனை கரிச்சு கொட்டாதீங்கோ. இந்தாடா காபி. இவன் ஜாதகத்தை பாத்த ஜோசியர் அன்னிக்கே சொல்லிட்டாரு. இவனுக்கு
வேலை கிடைக்காதுன்னு."
அப்பா: "இவனுக்கு வேலை கிடைக்காதுன்னு சொல்றதுக்கு ஜோசியர் எதுக்கு? அவருக்கு காபி, டிபன் வேறே கொடுத்துக்கிட்டு. அதை என்கிட்டே கேட்டா நானே சொல்லியிருக்க
மாட்டேனா?”
அம்மா: "அட, அதில்லேன்னா. இவன் ஜாதகப் பிரகாரம், இவனுக்கு கல்யாணமானாதான் வேலையே கிடைக்குமாம்".
அப்பா: "இவ ஒருத்தி எவனோ சொன்னான்னு. வேலை இல்லாதவனுக்கு பொண்ணு குடுக்க ஜனங்க என்ன அவ்ளோ முட்டாள்களா?"
மாது: "அப்பா, அனாவசியமா அரசாங்க ஊழியர்களோட மாமனார்களை இப்படி திட்டாதீங்க. அவங்களே பாவம் இப்பதான் ரெண்டு மூணு வருஷமா நிம்மதியா இருக்காங்க."
அப்பா: "எனக்கு என்னமோ நம்பிக்கையில்லே. இவனுக்கு வேலையும் கிடைக்கப்போறதில்லே. கல்யாணமும் ஆகப்போறதில்லே. ஏண்டா. இவ்ளோ வயசாறதே. யாரையாவது காதலிச்சு
வீட்டை விட்டாவது ஓடக்கூடாதா?"
மாது: "ஒரு பையனை பாத்து அப்பா பேசற பேச்சா இது? உனக்கு கொஞ்சமாச்சும் ஏதாச்சும் இருக்கா? அம்மாவை விட்டுட்டு நான் எப்படி வீட்டைவிட்டு...?"
அம்மா: "ஏன்னா, என்ன கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாமே இப்படி கேட்டுட்டேள்?. குழந்தை பாருங்கோ எவ்ளோ வருத்தப்படறான்னு".
மாது: "ஆமா. என்னை யாரோ ஒருத்தியை இழுத்துட்டு ஓடிப்போகச் சொல்றேளே. அவளுக்கு சமைக்கத் தெரியலேன்னா நான் புவ்வாவுக்கு என்ன பண்ணுவேன்?. வேணும்னா,
அம்மாவையும் எங்களோட அனுப்பு. அம்மா, நீ நல்லா ஓடிவியோன்னோ?"
அப்பா: "பாத்தியாடி பாத்தியா.. குழந்தை குழந்தைன்னியே. அவன் பேசற பேச்சைப் பாரு".
அம்மா: "என்னடா கண்ணா, அப்பாவை விட்டுட்டு நான் எப்படிடா உங்களோட ஓடி வர்றது? நீயே யோசிச்சி பாரு இது சரிவருமான்னு?"
மாது: "ம். அப்படியா. அதுவும் சரிதான். நம்மளையெல்லாம் துரத்திட்டு இவர் மட்டும் ஜாலியா இங்கே எப்படி இருக்கலாம். ம்? அது சரிப்படாது. வேணா இப்படி செய்வோமா? நாம
மூணு பேரு வீட்டை விட்டு ஓடறதுக்கு பதிலா, அப்பாவை துரத்திடுவோம். அவராவது கொஞ்ச நாளைக்கு உன் தொல்லையில்லாமே நிம்மதியா இருக்கட்டும்".
அப்பா:"அடேய் அடேய்.. உன்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னதுக்கு, என்னை ஏண்டா வீட்டை விட்டு துரத்தறே?"
மாது: "அப்போ இனிமே குமுதம் நடுப்பக்கத்தை கிழிக்க மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக்குடு. முதல்லே நான் பாத்துட்டு, எனக்குத் தேவையானதை கிழிச்சதுக்கப்புறம், நீ
எதையாவது கிழிச்சிக்கோ”.
அம்மா: “சும்மா ரெண்டு பேரும் சண்டை போட்டுண்டே இருக்காதீங்கோ. இன்னிக்கு சாயங்காலம் ஜோசியர் மறுபடி வர்றேன்னிருக்கார். ஒரு அருமையான ஜாதகம் வந்திருக்காம்.
பொண்ணோட அப்பா ஒரு கடை வெச்சிருக்காராம். கடையோட மாப்பிள்ளையா இருக்கறதுக்கு ஒரு ஆள் தேடறாங்களாம். பாத்து முடிச்சிடலாம்னு சொல்லியிருக்கார். எனக்கென்னவோ
இது செட்டாயிடும்னு தோண்றது. பாப்போம்”.
(காட்சி 1 முடிவு)
*****
41 comments:
மொத :)
//
நாலு மாடு வெச்சிருந்தான். அதிலே ரெண்டு மாட்டை வேலையை விட்டு துரத்திட்டானாம். என்னடான்னா, ரிசஷன்றான்.
///
நல்லா இருக்கே கதை :)
//
அனாவசியமா அரசாங்க ஊழியர்களோட மாமனார்களை இப்படி திட்டாதீங்க.
//
லொள்ளூ :)
கதை மிக மிக அற்புதம்
கிரேசி மோகன் நாடகம் பார்த்த மாதிரி இருக்கு...
me the 6th :):)
நல்லா இருக்கு அண்ணா.. :))) இன்னும் நிறைய உங்ககிட்ட இருந்து எதிர்ப்பார்க்கிறோம்.. :)))
//
அனாவசியமா அரசாங்க ஊழியர்களோட மாமனார்களை இப்படி திட்டாதீங்க.
//
Good comedy!
நா உங்ககிட்ட இன்னும்...இன்னும் ரொம்ப எதிர்பாக்குறே. அப்பிடியே போற வழியில மெக்டொனால்ஸ்ல ரெண்டு பர்கரும், கொஞ்சம் கெட்டிச் சட்னியும் சொல்லிட்டு போய்டுங்க
:)
உங்களுக்கு திரைகதை எழுத நல்லா வருது!
ஏற்கனவே முழுக்கதை ரெடி பண்ணிட்டிங்க தானே!
சீக்கிரம் வாங்க நாடகம் போட்டுடலாம்
ம்ம்ம்... நன்னா இருக்கே... உஷா, ஜானகி, சீனு எல்லாம் எப்ப எண்ட்ரி?
அண்ணேய்ய் கலக்கிப்புட்டீக.. நாடகம் மாதிரி இல்ல நாடகமே தான்..
ஓ! நாடகமாவே போட்டுட்டியா! அப்ப நானும்...
அதான் அதேதான்... நாடகம்.. ஒன்ன நெனச்சு பாக்கயில ரம்பம் ரம்பமா கவித வருது, ஆனா அறுக்கணும்னு நெனக்கறப்ப எழுத்துதான், வார்த்தை வராம படுத்துது.
ராமா, அடராமா!
நீங்க சின்னப் பையன் இல்லை பெரிய ஆள் நாடகத்துல
நாடக ஸ்க்ரிப்டை குடுத்தீங்கன்னா இதுல மாதுக்ரேஸியே நிஜம்மா நடிச்சு அரங்கு நிறைஞ்சு ஓடும்..
அதும் அந்த அம்மா கேரக்டர் .. எப்படிடா அப்பாவை விட்டுட்டு நீயே சரிவருமா பாருன்னு ... கலக்கல்..
மாதுன்னாதுமே டக்குன்னு அவுரு கேரக்டாரா வந்து மனசுல ஒட்டிக்கிட்டாரு !
டயலாக் டெலிவரியும் படிச்சும்,மனசுக்குள்ள காட்சிகள் அமைச்சும் ஒரு குட்டி நாடகம் பார்த்து படிச்ச திருப்தி :)))
சூப்பரூ கண்டினியூ !
ச்சின்னப்பையன் ச்சின்னப்பையன்,
யாரு வந்திருக்கேன் பாரூ...
Good one...
வாங்க ஆளவந்தான், லாவண்யா, தீபக் -> நன்றி...
வாங்க தங்கச்சி ஸ்ரீமதி -> அவ்வ்.. நீங்க இப்படி சொன்னதை அப்துல்லா அண்ணன் எப்படி கலாச்சிட்டாரு பாருங்க... :-))
வாங்க ஜோ, அப்துல்லா அண்ணே, சகோதரி வித்யா -> மிக்க நன்றி...
வாங்க வால் -> நன்றிண்ணே.. கதையோட அவுட்லைன் மட்டும்தான் ரெடி. வசனத்தை இனிமேதான் எழுதணும்.. :-)))
வாங்க மகேஷ் அண்ணே -> ஹாஹா... இப்போதைக்கு ஜானகி மட்டும்தான்.. மத்தவங்கல்லாம் வருவாங்களான்னு தெரியாது.. :-))
வாங்க ராகவ் -> நன்றி..
வாங்க சத்தியமூர்த்தி -> அவ்வ்வ்.. எனக்கும் வா.. வா.. வார்த்தை... வரலே... :-)))
வாங்க முரளிகண்ணன் -> ஆஹா... மிக்க நண்றிண்ணே...
வாங்க மு-க அக்கா -> மிக்க நன்றிங்க. அடடா.. அடுத்தடுத்த பகுதிகளை இன்னும் சிறப்பா எழுதணுமே... பாப்போம் எப்படி போகுதுன்னு... :-))
//இது முதல் பகுதி. வாரத்துக்கு ஒரு பகுதின்னு எழுதி மூணு பகுதியில் முடிச்சிடலாம்னு நினைக்கறேன்//
::::::::::::::::::::::::::::::
உண்மையதானே சொல்லுறிங்க அண்ணே ? சின்னதிரையா ஆக்கிட மாட்டிங்களே?
கத நன்னாயிருக்கு.
ரொம்ப நாளா நான் மிஸ் பண்ணிண க்ரேஸியையும், மெரீனாவையும் ஞாபகப்படுத்தும் அளவுக்கு இருகிறது.
வாழ்த்துகள்
:)))))))))))))
நன்னா இருக்கு
சும்மாவே கிரேஸி நாடகம் பாத்தா மாதிரி இருக்குது. பத்தாததுக்கு பேர வேற வெச்சிட்டீங்க.. பெயரில்லாமல் வெளியானால் பாராட்டுகள் கிரேஸிக்கு சென்றுவிடும். மைதிலியை எதிர்பார்க்கிறோம்.
//ஆண்டவா.. எல்லாரையும் நல்லபடியா காப்பாத்துப்பா//
அனைத்து sv சேகர் நாடகங்களிலும் முதலில் வரும் வசனம் இல்லையா :)
நீங்கள் சொன்னது போலவே அந்த இருவரின் பாதிப்பு இருந்தாலும் பதிவு அருமையாக வந்துள்ளது .
நல்ல முயற்சி.தொடருங்கள் :).
ஆளவந்தான் முந்திட்டாரு அண்ணா!
அன்னைக்கு திட்டினது நல்லதா போச்சு :))
ஆனா நான்தான் ரொம்ப லேட் ஹி ஹி ஹி!
//
நாலு மாடு வெச்சிருந்தான். அதிலே ரெண்டு மாட்டை வேலையை விட்டு துரத்திட்டானாம். என்னடான்னா, ரிசஷன்றான்.
//
அண்ணா மாட்டையுமா ???
//
அனாவசியமா அரசாங்க ஊழியர்களோட மாமனார்களை இப்படி திட்டாதீங்க.
//
லொள்ளு கொஞ்சம் அதிகமா தான் தெரியுது :))
நாடகம், இல்லே கதை, இல்லே மாது
என்ன அச்சு எனக்கு ஒரே குழப்பம்?
அண்ணா சூப்பர் முயற்சி.
சபாவிலே மாதுவோட
குட்டி நாடகம் பார்த்த
effect இருந்தது படிக்கும்போது
இன்னும் இரெண்டு அல்லது மூணு பதிவு எழுதிடுங்க.
கிரேசி மோகனை சந்தித்து முழு நாடகம் என்று சொல்லி
வித்துடலாம் என்ன சொல்லறீங்க இப்போ ??
இல்லே மௌலி கிட்டே முயற்சி பாணலாம்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கலக்கறீங்க அண்ணா.
ஆமா அந்த குமுதம் நடுபக்கத்தை யாருதான் கிழிச்சாங்க??
சூப்பர்! சிரிச்சி சிரிச்சி வயறு வலியே எடுத்திடுச்சு :))
வாங்க ஆயில்ஸ் -> ஊக்கப்படுத்தும் பின்னுக்கு நன்னி... :-))
வாங்க ரமேஷ் அண்ணே -> பாத்துட்டேண்ணே.. பாத்துட்டேன்.... வாங்க வாங்க...
வாங்க பிரேம்ஜி, ராகி ஐயா -> நன்றி...
வாங்க கலை - இராகலை -> ஹாஹா... சின்னத்திரை ஆயிடாதுன்னு நினைக்கிறேன்.. பாப்போம்... அவ்வ்வ்...
வாங்க அறிவிலி -> ரொம்ப மகிழ்ச்சி... நன்றி...
வாங்க நல்லதந்தி, நசரேயன் -> நன்றி..
வாங்க ஆதி -> அதென்னங்க மைதிலியை ஸ்பெஷலா எதிர்பார்க்குறீங்க???????
வாங்க பட்டாம்பூச்சி -> மிக்க நன்றி...
வாங்க தங்கச்சி ரம்யா -> இன்னும் ரெண்டு பதிவுலே முடிஞ்சிடும் இந்த கதை... நன்றி...
நல்லா இருக்கு.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.
ஆபிசுக்கும் போயிட்டு, குடும்பத்தையும் கவனிச்சிக்கிட்டு, இதுக்கெல்லாம் உங்களுக்கு எப்படி டைம் கெடைக்குது ? ஆச்சர்யமா இருக்கு.
உங்க ஆபிஸ்லே எதாவது வேலை காலியா இருந்த சொல்லுங்கப்பு - நானும் வந்து ஒரு டிராமா மாதிரி எதையாவது எழுதுறேன்.
இது நாடகம் மாதிரி இல்லைங்க. நாடகமேதான். சூப்பரா இருக்குங்க. அதுவும் மாது பாலாஜி பேசறது போலவே இருக்கு
சூப்பர் காமெடிங்க! சிரிச்சிக்கிட்டே சீரியஸா சொல்றேன்!
நன்றாக உள்ளது. அடுத்தடுத்த பகுதிகளைப் படிக்க ஆவலுடன் இருக்கிறோம்.
Simply superb:)
//மாது: "அப்பா. இப்பல்லாம் குமுதம் மாதிரி பத்திரிக்கைகளை பெரியவங்க மட்டும்தான் பாக்கவோ படிக்கவோ முடியும். ஆமா. இந்த வாரம் நடுப்பக்கத்தை கிழிச்சது நீதானா? ஒழுங்கா
சொல்லிடு. "//
//மாது: "முதல்லே நான் பாத்துட்டு, எனக்குத் தேவையானதை கிழிச்சதுக்கப்புறம், நீ
எதையாவது கிழிச்சிக்கோ”.//
'ச்சின்னப் பையன்' நடுப்பக்கம் எல்லாம் பாக்கக்கூடாது! பெரியவன் ஆனப்புறம் பாத்துக்கலாம். இப்ப அப்பாகிட்ட குடுத்துடு.
வாங்க ஒரு காசு -> ஹாஹா.. அட வாரத்துக்கு மூணு / நாலு பதிவுதாங்க போடறேன்.. மீதி நாலு நாள் இருக்கே ரெடி பண்றதுக்கு... :-))
வாங்க தாரணி பிரியா -> மிக்க மகிழ்ச்சி. அடுத்தடுத்த பகுதிகளிலேயும் இதை மெயின்டெயின் பண்ணமுடியுதான்னு பாக்குறேன்... :-))
வாங்க பப்பு, பாலராஜன் கீதா ஐயா, அனானி -> மிக்க நன்றி...
வாங்க மெனக்கெட்டு -> :-))))))
so far soooooooooooooooooooooooooooooooo good
ரொம்ப நல்லா வந்திருக்கு.
Post a Comment