Monday, March 16, 2009

இனிமே யாரையும் வெறுப்பேத்தக் கூடாது...


நான் ஏற்கனவே பார்த்த சினிமா பற்றியோ, கேள்விப்பட்ட சம்பவத்தைப் பற்றியோ யாராவது என்னிடம் விமர்சனம் செய்து கொண்டிருந்தால், அப்போதுதான் முதன்முதலாக
கேள்விப்படுவதைப் போல் கேட்டுக் கொண்டிருப்பேன். அவர் பேசி முடித்ததும் - அந்த படத்தை நான் ஏற்கனவே பார்த்து விட்டேன்னு சொல்லி விடுவேன்.


”அதை ஏண்டா முதல்லேயே சொல்லலே?. நான் கஷ்டப்பட்டு பத்து நிமிடமா கத்திட்டிருக்கேன். இப்போ வந்து மெள்ளமா நான் முதல்லேயே அந்த படத்தை பாத்துட்டேன்னு
சொல்றியே?”ன்னு ரொம்பவே டென்சனாயிடுவாங்க. “ நீங்க ரொம்ப ஆர்வமா கதை சொல்லிட்டிருக்கும்போது, நான் அந்த ஆர்வத்தை நடுவில் புகுந்து தடுக்க மாட்டேன். அதைத் தவிர, நீங்க ஒழுங்காத்தான் கதை சொல்றீங்களா - இல்லே உங்க சொந்த கற்பனையையும் சேர்த்து கதை விடறீங்களான்னு நான் பாக்க வேண்டாமா”ன்னு சொல்லி கொலைவெறியை தூண்டி விடுவேன்.


இப்படியே மத்தவங்களை வெறுப்பேத்தறது கொஞ்ச நாளைக்கு நல்லபடியா போயிட்டிருந்தது.
ஒரு நாள், The Bucket List அப்படின்னு ஒரு படத்தை பார்த்தேன். அதில் ரெண்டு பெருசுங்க உலகச் சுற்றுலாக்குப் போறாங்க. இந்தியாவுக்குக் கூட வர்றாங்க. இந்தியான்ன்னாலே, எல்லோரும் முதல்லே கேக்கறது - தாஜ்மஹால்தான். அந்த தாஜ்மஹாலுக்கு வர்றாங்க. அவங்க அதை சுற்றிப் பார்த்துக்கிட்டிருக்கும்போது, பின்னணியில் இந்திய இசை இசைக்கிறது.


இப்படியாக படத்தைப் பார்த்து முடித்தபிறகு, சமையலறையில் நின்றிருந்த தங்கமணியிடம் - “ஏம்மா, இந்த படத்தைப் பாரு. இந்தியாலேல்லாம் படப்பிடிப்பு நடத்தியிருக்காங்க.
தாஜ்மஹால் காட்றாங்க. நல்லா இருக்கு படம்”.


நான் படத்தின் கதையை சொல்லிக்கிட்டே இருக்க - அவங்க வெறும் ‘ம்', ‘ம்'னு சொல்லிக்கிட்டே வந்தாங்க.


ம்ஹும். எங்கேயோ பிரச்சினை இருக்கு. நான் சொல்றதை இவங்க கேக்கறாங்களா இல்லையான்னே தெரியலேன்னு நினைச்சிக்கிட்டு - எங்கே, நான் சொன்னதை திரும்ப
சொல்லுன்னுன்னேன். அவங்க - ” இந்த குக்கர் சத்தத்துலே நீங்க சொன்னது என் காதுலேயே விழலே. உங்க மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு, இவ்ளோ நேரம் வெறும்னே ‘ம்'
சொல்லிக்கிட்டிருந்தேன்” அப்படின்னுட்டாங்க... அவ்வ்வ்..


”அப்போ இவ்ளோ நேரமா நான் தனியாத்தான் பேசிக்கிட்டிருந்தேனா? ஏன், காதுலே விழலேன்னா முதல்லேயே சொல்ல வேண்டியதுதானேன்னு” கேட்டா - ” நீங்கதான் கத்தி பேசணும். கடவுள் எனக்கு ரெண்டு காதுதான் கொடுத்திருக்காரு. நான் என்ன ரசூல் பூக்குட்டியா, அங்கங்கே மைக்ரோஃபோன் வெச்சி எல்லா சத்தத்தையும் கேக்க”ன்னுட்டாங்க. அவ்வ்வ்வ்..


சரி சரி தப்பு என்மேலேதான். இனிமே சத்தமாதான் பேசணும்னு ஒத்துக்கிட்டேன். வேறே வழி?


அதோட இன்னொரு முக்கியமான விஷயம் - இனிமே யாரையும் வெறுப்பேத்தக் கூடாதுன்னு முடிவு செய்துட்டேன்.


30 comments:

Prabhu March 16, 2009 at 9:10 PM  

வாழ்க்கைல முதல் முறையா முதல் பின்னூட்டம். அப்படி ஒண்ணும் வித்தியாசமா தெரியலயே. அப்புறம் ஏன் அந்த 'me the first'. என்னவோ?

ச்சின்னப் பையன் வழக்கம் போல நல்ல காமெடி. இதுக்குதான் அடுத்தவங்க வயித்தெரிச்சல கொட்டிக்காதீங்க. அப்புறம் ச்சின்னப் பையன் என போட்டு என்ன மாதிரி ரியல் ச்சின்ன பையன் வ்யித்தெரிச்சல ஏன் கொட்டிகிறீங்க?

பிரேம்ஜி March 16, 2009 at 9:36 PM  

//நீங்கதான் கத்தி பேசணும். கடவுள் எனக்கு ரெண்டு காதுதான் கொடுத்திருக்காரு. நான் என்ன ரசூல் பூக்குட்டியா, அங்கங்கே மைக்ரோஃபோன் வெச்சி எல்லா சத்தத்தையும் கேக்க”ன்னுட்டாங்க. அவ்வ்வ்வ்..//

:-)))))))))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் March 16, 2009 at 10:35 PM  

//தப்பு என்மேலேதான்//

:-)))

ராம்.CM March 17, 2009 at 12:35 AM  

- ” இந்த குக்கர் சத்தத்துலே நீங்க சொன்னது என் காதுலேயே விழலே. உங்க மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு, இவ்ளோ நேரம் வெறும்னே ‘ம்'
சொல்லிக்கிட்டிருந்தேன்” ////

நல்லா சொன்னார்கள்!

Unknown March 17, 2009 at 2:24 AM  

ஹா ஹா ஹா நல்ல முடிவு அண்ணா :))))

Anonymous,  March 17, 2009 at 3:17 AM  

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

Mahesh March 17, 2009 at 3:32 AM  

நல்ல முடிவுதான் !!!

எம்.எம்.அப்துல்லா March 17, 2009 at 3:34 AM  

//இனிமே யாரையும் வெறுப்பேத்தக் கூடாது //

பதிவு எழுதுறத விடப்போறேன்னு சொல்ல வர்றீங்கன்னு நினைச்சு சந்தோசமா வந்தேன். போங்கண்ணே...

:))

சின்னப் பையன் March 17, 2009 at 6:36 AM  

வாங்க பப்பு -> அவ்வ். சரிங்க. இனிமே நல்லபுள்ளையா இருக்க முயற்சி பண்றேங்க... அப்புறம் மீ த பர்ஸ்ட்... அது நண்பர்களால் நண்பர்களுக்காக போடப்படுவதுதாங்க. அதில் பெரிய மேட்டர் ஒண்ணுமில்லை. ஜாலிக்காக அவ்வளவுதான்... நன்றி...

வாங்க பிரேம்ஜி -> நன்றி..

வாங்க ராகி ஐயா -> அந்த ஒரு வாக்கியத்தை சொல்லிட்டோம்னா, எந்த பிரச்சினையும் இல்லே பாருங்க... அதான்... ஹிஹி...

வாங்க தமிழ் பிரியன், தல சிபி, ராம்.CM, சகோதரிகள் காயத்ரி, ஸ்ரீமதி, மகேஷ்ஜி -> நன்றி..

வாங்க அப்துல்லா அண்ணே -> அவ்வ்வ்.. ஏண்ணே இந்த பச்சபுள்ளைய இந்த மாதிரி கொலவெறியோட பாக்கறீங்க?? :-)))

Thamira March 17, 2009 at 8:23 AM  

அதோட இன்னொரு முக்கியமான விஷயம் - இனிமே யாரையும் வெறுப்பேத்தக் கூடாதுன்னு முடிவு செய்துட்டேன்.
// அப்ப இனி பதிவே எழுதப்போவதில்லையா? ஏன் இப்படி?

ரசனையான பதிவு பாஸ்.!

அறிவிலி March 17, 2009 at 8:36 AM  

என்னமோ சொன்னா மாதிரி இருக்கு. ஆமா.. என்ன சொன்னீங்க?

ராஜ நடராஜன் March 17, 2009 at 11:41 AM  

//நீங்க ஒழுங்காத்தான் கதை சொல்றீங்களா - இல்லே உங்க சொந்த கற்பனையையும் சேர்த்து கதை விடறீங்களான்னு நான் பாக்க வேண்டாமா”ன்னு சொல்லி கொலைவெறியை தூண்டி விடுவேன்.//

வில்லங்கமா இருக்குதே:)

ராஜ நடராஜன் March 17, 2009 at 11:43 AM  

//நீங்கதான் கத்தி பேசணும். கடவுள் எனக்கு ரெண்டு காதுதான் கொடுத்திருக்காரு. நான் என்ன ரசூல் பூக்குட்டியா, அங்கங்கே மைக்ரோஃபோன் வெச்சி எல்லா சத்தத்தையும் கேக்க”ன்னுட்டாங்க. அவ்வ்வ்வ்..//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வேதான்.

வால்பையன் March 17, 2009 at 11:52 AM  

ஆளில்லாத கடையில டீ ஆத்துனாலும் கிண்டல் பண்ணலாம், ஆனா இது வேற மாதிரியில இருக்கு!

கார்த்திகைப் பாண்டியன் March 17, 2009 at 12:06 PM  

எதுலயோ படிச்சதா ஞாபகம்.. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.. முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்.. எல்லாம இப்போ ஞாபகம் வருது.. ஐயோ.. ஐயோ..

சரவணகுமரன் March 17, 2009 at 12:41 PM  

உங்களுக்கு அவுங்கத்தான் சரி...

RAMYA March 17, 2009 at 1:33 PM  

//
நான் ஏற்கனவே பார்த்த சினிமா பற்றியோ, கேள்விப்பட்ட சம்பவத்தைப் பற்றியோ யாராவது என்னிடம் விமர்சனம் செய்து கொண்டிருந்தால், அப்போதுதான் முதன்முதலாக
கேள்விப்படுவதைப் போல் கேட்டுக் கொண்டிருப்பேன். அவர் பேசி முடித்ததும் - அந்த படத்தை நான் ஏற்கனவே பார்த்து விட்டேன்னு சொல்லி விடுவேன்.
//

அண்ணா இது போல் நடந்து கொள்வதற்கு ரொம்ப பெரிய மனது வேண்டும்.

நான் இந்த வார்த்தைகளை மேலெழுந்த வாரியாக சொல்லவில்லை.

என் அடிமனதில் ஏற்பட்ட பெருமையுடன் சொல்லுகின்றேன்.

இப்போது இந்த குணங்கள் எல்லாம் வழக்கொழிந்து விட்டன என்றே கூற வேண்டும்.

படிக்கவே ரொம்ப சந்தோஷமா இருந்தது.

RAMYA March 17, 2009 at 1:36 PM  

//
நீங்க ரொம்ப ஆர்வமா கதை சொல்லிட்டிருக்கும்போது, நான் அந்த ஆர்வத்தை நடுவில் புகுந்து தடுக்க மாட்டேன். அதைத் தவிர, நீங்க ஒழுங்காத்தான் கதை சொல்றீங்களா - இல்லே உங்க சொந்த கற்பனையையும் சேர்த்து கதை விடறீங்களான்னு நான் பாக்க வேண்டாமா”ன்னு சொல்லி கொலைவெறியை தூண்டி விடுவேன்.
//


ரொம்ப சமத்து அண்ணான்னு வாழ்த்தி முடிக்குமுன்னே இப்படியா??

அது சரி ரொம்பதான் பாவம் அவரு.

இந்த மாதிரி டென்ஷன் படுத்தும் போது எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நின்று கொள்ளவும்.

RAMYA March 17, 2009 at 1:37 PM  

//
இப்படியே மத்தவங்களை வெறுப்பேத்தறது கொஞ்ச நாளைக்கு நல்லபடியா போயிட்டிருந்தது.
//

சூப்பர்!! சிரிச்சி சிரிச்சி எனக்கு வயிற்று வலி தாங்கலை.

RAMYA March 17, 2009 at 1:39 PM  

//
ம்ஹும். எங்கேயோ பிரச்சினை இருக்கு. நான் சொல்றதை இவங்க கேக்கறாங்களா இல்லையான்னே தெரியலேன்னு நினைச்சிக்கிட்டு - எங்கே, நான் சொன்னதை திரும்ப
சொல்லுன்னுன்னேன். அவங்க - ” இந்த குக்கர் சத்தத்துலே நீங்க சொன்னது என் காதுலேயே விழலே. உங்க மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு, இவ்ளோ நேரம் வெறும்னே ‘ம்'
சொல்லிக்கிட்டிருந்தேன்” அப்படின்னுட்டாங்க... அவ்வ்வ்..
//

ஆஹா அண்ணி சரியா பழி வாங்கிட்டாங்க.

:-):-):-):-):-):-):-):-):-)

RAMYA March 17, 2009 at 1:41 PM  

//
”அப்போ இவ்ளோ நேரமா நான் தனியாத்தான் பேசிக்கிட்டிருந்தேனா?
//

அட போங்க அண்ணா நீங்களும் என்னோட லிஸ்ட்லே வந்துட்டீங்களா ??

இப்போ எல்லாம் எல்லாருக்குமே ரொம்ப சோகமா நடக்குது!!

ஹையோ ஹையோ ஹையோ!!

RAMYA March 17, 2009 at 1:44 PM  

//
ஏன், காதுலே விழலேன்னா முதல்லேயே சொல்ல வேண்டியதுதானேன்னு” கேட்டா - ” நீங்கதான் கத்தி பேசணும். கடவுள் எனக்கு ரெண்டு காதுதான் கொடுத்திருக்காரு. நான் என்ன ரசூல் பூக்குட்டியா, அங்கங்கே மைக்ரோஃபோன் வெச்சி எல்லா சத்தத்தையும் கேக்க”ன்னுட்டாங்க. அவ்வ்வ்வ்..
//

அண்ணா அண்ணி ரொம்ப நல்லவங்க.

உங்க மனசு கஷ்டப் படாக் கூடாதுன்னு எவ்வளவு கஷ்டப் பட்டு ம்ம் கொட்டி இருக்காங்க??

இந்த அண்ணிக்கு ஒரு ஓ போடுங்கப்பா!!!

RAMYA March 17, 2009 at 1:46 PM  

//
சரி சரி தப்பு என்மேலேதான். இனிமே சத்தமாதான் பேசணும்னு ஒத்துக்கிட்டேன். வேறே வழி?
//

ஐயோ!! இல்லே அண்ணா மடிக்கணினி தானே போயி கிச்சென்லே உக்காந்துடுங்க.

அங்கேயே படிச்சி காட்டினா வேறே வழியே இல்லை. ரசிச்சுதான் ஆகணும்.
:-))))

RAMYA March 17, 2009 at 1:48 PM  

//
அதோட இன்னொரு முக்கியமான விஷயம் - இனிமே யாரையும் வெறுப்பேத்தக் கூடாதுன்னு முடிவு செய்துட்டேன்.
//

ஒத் அப்படி சொல்லறீங்களா??

இந்த மாதிரி நானும் நிறைய செய்வேனே!!

நசரேயன் March 17, 2009 at 4:04 PM  

அப்படியெல்லாம் சட்டு புட்டுனு முடிவுக்கு வர புடாது

ILA (a) இளா March 17, 2009 at 5:04 PM  

நீங்க போன வாரம் பார்த்த கதைய சொல்லுங்க,., கேக்குறோம்

சின்னப் பையன் March 17, 2009 at 5:26 PM  

வாங்க ஆதி -> ஹிஹி. இது அரசியல்வாதிங்க வாக்கு மாதிரி... உடனுக்குடனே மறந்துடுவேன்... :-))

வாங்க அறிவிலி -> அவ்வ்... ஒண்ணும் கேக்கலியா???

வாங்க பாஸ்கர், ராஜ நடராஜன், வால் -> நன்றி..

வாங்க பாண்டியன் -> ஹாஹா... அதேதான்... அதேதான்...

வாங்க சரவணகுமரன் -> ஆமாங்க....

வாங்க ரம்யா -> வழக்கம்போல் கலக்கிட்டீங்க... நன்றி சகோதரி..

வாங்க நசரேயன் -> இது.. இதைத்தான் எதிர்பார்த்தேன்...

வாங்க இளா -> அவ்வ்வ்.... சரி சரி... புரிஞ்சிடுச்சு....

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP