Wednesday, March 11, 2009

டாக்டர் விஜய் ரசிகர் மன்றத்தில் சேர விருப்பமா?

கீழ்க்கண்ட கேள்விகளுக்கு சரியான பதில்களை சொல்லிட்டீங்கன்னா, உங்களுக்கு ரசிகர் மன்றத்தில் ஒரு இடமும், 2016 தேர்தலில் அவர் கட்சி சார்பாக ஒரு சீட்டும் பரிசாக
அளிக்கப்படும்.


ஓகே. ரெடியா? இப்போ கேள்விகளுக்குப் போகலாம்.

*****

1. குளிக்கும்போது சோப்பு எங்கு போடுவீர்கள்?

அ. உங்கள் சொந்த முதுகில்
ஆ. மற்றவர்கள் முதுகில்
இ. சோப்பு போடும் பழக்கமில்லை
ஈ. குளிக்கும் பழக்கமேயில்லை.

2. டாக்டருக்குப் பிறகு தலைவருக்கு மிக விரைவில் கிடைக்கப்போகும் அடுத்த பட்டம் என்ன?

அ. ஆஸ்கர் நாயகன்
ஆ. பாஃப்டா நாயகன்
இ. கோல்டன் க்ளோப் நாயகன்
ஈ. மேற்கூறிய அனைத்தும்

3. கீழ்க்கண்டவற்றில் எந்த ஆயுதத்தை - பயன்படுத்தாமல் - வெறும் காட்டியே - மக்களை கொல்ல முடியும்?

அ. அம்பு
ஆ. வில்லு
இ. கல்லு
ஈ. கொம்பு

4. வசீகரா படத்தில் தலைவர் மிகவும் விரும்பி போட்ட வேடம் எது?

அ. சூப்பர்மேன்
ஆ. ஸ்பைடர்மேன்
இ. ஆர்மிமேன்
ஈ. வாக்மேன்

5. தலைவர் இன்னும் எந்த ஆட்டக்காரராய் படங்களில் நடிக்கவில்லை?

அ. கோலி
ஆ. முதுகு பஞ்சர்
இ. பல்லாங்குழி
ஈ. மேற்கூறிய அனைத்தும்

6. 5 கட்டையில் (சவுண்டா) பாடும்போது, பாடுபவர் எதையெல்லாம் மூடிக்கொள்ள வேண்டும்?

அ. கண்
ஆ. காது
இ. மூக்கு
ஈ. வாய்

7. அடுத்த படத்தில் தலைவர், வில்லனை வேகமாக மிதிவண்டியில் துரத்தும் அசத்தல் சீன் ஒன்று வருகிறது. அந்த காட்சியில் வில்லன் எந்த வண்டியை ஓட்ட வேண்டும் என்று
எதிர்பார்க்கிறீர்கள்?

அ. புகைவண்டி
ஆ. விமானம்
இ. சாதா கப்பல்
ஈ. நீர்மூழ்கிக் கப்பல்

8. தலைவர் ஓட்டும் அந்த மிதிவண்டியில் என்னென்ன இருக்க வேண்டும்?

அ. இரண்டு சக்கரங்களும் ஒரு கைப்பிடி (ஹேண்டில் பார்) மட்டும்
ஆ. இரண்டு சக்கரங்கள் மட்டும்
இ. ஒரு கைப்பிடி மட்டும்
ஈ. எதுவுமே தேவையில்லை. அவரே ‘புர்ர்ர்ர்'ரென்று வாயில் சத்தம் செய்து கொண்டே மிதிவண்டி ஓட்டுவது போல் ஓடி வில்லனை துரத்தலாம்.

9. பல படங்களில் புவியீர்ப்பு விசையை எதிர்த்து தலைவர் போட்ட சண்டைக் காட்சிகளை பல படங்களில் பார்த்திருப்பீர்கள். இன்னும் எந்தெந்த விசையை எதிர்த்து அவர்
நடிக்கலாமென்று எதிர்பார்க்கிறீர்கள்?

அ. centripetal விசை
ஆ. centrifugal விசை
இ. நியூட்டனின் விதிகள்
ஈ. மேற்கூறிய அனைத்தும்

10. தலைவரின் அடுத்த பட க்ளைமாக்ஸ் வசனத்தில் உங்கள் உதவி தேவைப்படுகிறது. பின்வருவனவற்றில் உங்களுக்கு பிடித்த ஒன்றை தேர்ந்தெடுத்து 100க்கு குறைவான வார்த்தைகளில் வசனத்தை எழுதுக.

அ. காதல்ன்றது பபுள்கம் மாதிரிங்க...
ஆ. காதல்ன்றது மூக்குசளி மாதிரிங்க...
இ. காதல்ன்றது தேர்தல் மாதிரிங்க...
ஈ. காதல்ன்றது கத்திரிக்கா மாதிரிங்க...

****

அனைத்திற்கும் சரியாக பதில் கூறியவர்களுக்கு மேற்கூறிய பரிசுகள் அளிக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட தவறான பதில் சொல்பவர்களுக்கு தலைவரின் பட டிவிடிக்கள் தபாலில்
அனுப்பி வைக்கப்படும்.


இந்த பதிவிற்கு பதிலே சொல்லாமல் தப்பிப்பவர்களுக்கு - அவர்கள் ஐபி மூலமாக தொலைபேசி எண் கண்டுபிடிக்கப்படும். அவர்களை தொலைபேசியில் அழைத்து தலைவரின் அனைத்து பட வசனங்களும் வரிசையாக சொல்லிக் காட்டப்படும்.

எப்படி வசதியோ செய்ங்க மக்கா....

72 comments:

ஸ்ரீதர்கண்ணன் March 11, 2009 at 9:31 PM  

2016 தேர்தலில் அவர் கட்சி சார்பாக ஒரு சீட்டும் பரிசாக
அளிக்கப்படும்.

ஏன் 2011 ல கிடைக்காதா?

ஆளவந்தான் March 11, 2009 at 9:33 PM  

ஆஹா இன்னைக்கு முடியாம போச்சா ??

பிரேம்ஜி March 11, 2009 at 9:39 PM  

நான் பெயில் ஆகிட்டேன்.தப்பான அட்ரஸ் குடுத்து டிவிடி லிருந்து தப்பிச்சுருவேன்.

ஆளவந்தான் March 11, 2009 at 9:41 PM  

1.ஆ. மற்றவர்கள் முதுகில்

2.ஈ. மேற்கூறிய அனைத்தும்

3.ஆ. வில்லு

4.ஆ. ஸ்பைடர்மேன்

5.ஈ. மேற்கூறிய அனைத்தும்

6.ஆ. காது ( "மேற்கூறிய அனைத்தும்" சாய்ஸ் மிஸ்ஸிங்

7.ஆ. விமானம்

8.ஈ. எதுவுமே தேவையில்லை. அவரே ‘புர்ர்ர்ர்'ரென்று வாயில் சத்தம் செய்து கொண்டே மிதிவண்டி ஓட்டுவது போல் ஓடி வில்லனை துரத்தலாம்.

9.ஈ. மேற்கூறிய அனைத்தும்

10... ஹிஹிஹிஹிஹ்

ஆளவந்தான் March 11, 2009 at 9:56 PM  

//
இந்த பதிவிற்கு பதிலே சொல்லாமல் தப்பிப்பவர்களுக்கு - அவர்கள் ஐபி மூலமாக தொலைபேசி எண் கண்டுபிடிக்கப்படும்.
//
இதுக்கு பயந்துகிட்டு தான் பதில் எழுதினேன்..
மத்தபடி “டாக்டர் விஜய் ரசிகர் மன்றத்தில் சேர விருப்பமா? “னு கேட்டா... .. ஹிஹ்ஹிஹீஹி.. ஒன்னும் சொல்றதுக்கில்லே :))

kichaa March 11, 2009 at 10:03 PM  

10.
(விக்ரமன்: Sound! இங்க கொஞ்சமா echo வையுங்க.. Roll Camera.. Start. Action) காதல்ங்கிறது பக்கத்து வீட்ல பழுக்கிற பலாப்பழம் இல்ல. அது நம்ம வீட்ல காய்க்கிற நாவல்பழம்அது பழுத்தாலும் விழுந்தாலும் நம்ம வீட்லதான்..

Start Music.. ஙெஙெ.. ஙூஙூ..
SA Rajkumar: அப்டியில்லைய்யா, D major இல்லைய்யா D minor ஙேஙே.. ஆங்.. அப்படியே கொஞ்சம் மேலே போங்க.. யோவ்.. மேலயின்னா அந்த மேலயில்லய்ய்ய.. மேல் ஸ்தாயிக்கு போய்யா.. ஆங். correct. ஒருக்கா rehearsal பார்த்திறலாம் OK Start

பலாப்பழங்கிறது..

சார் உங்களயில்ல சார்.. வயலின சொன்னன் சார்.. ஸ்ஸப்பா என்னால முடியல.. pack up

ஸ்ரீதர்கண்ணன் March 11, 2009 at 10:12 PM  

4. ஈ. வாக்மேன்
6. மேற்கூறிய அனைத்தும் (pritning mistake in Answer)
8.ஈ. எதுவுமே தேவையில்லை. அவரே ‘புர்ர்ர்ர்'ரென்று வாயில் சத்தம் செய்து கொண்டே மிதிவண்டி ஓட்டுவது போல் ஓடி வில்லனை துரத்தலாம்.
9. மேற்கூறிய அனைத்தும்

RAMYA March 11, 2009 at 10:15 PM  

//
கீழ்க்கண்ட கேள்விகளுக்கு சரியான பதில்களை சொல்லிட்டீங்கன்னா, உங்களுக்கு ரசிகர் மன்றத்தில் ஒரு இடமும், 2016 தேர்தலில் அவர் கட்சி சார்பாக ஒரு சீட்டும் பரிசாக
அளிக்கப்படும்.
//

சரிங்க அண்ணா கொஞ்சம் ட்ரை பண்ணறோம் சரியா பதில் சொல்லைன்னாலும், ஏதோ ஒரு சின்ன தொகுதியா சிபாரிசு பண்ணி வாங்கி கொடுத்திடுங்க.

கொஞ்சம் யோசிங்க 2016க்கு௨௦௧௬ ரொம்ப வருடங்கள் இருக்கே கொஞ்சம் அட்வான்ஸ் பண்ண முடியாதா???

இல்லே 2011 தேர்தல் cancel ??

RAMYA March 11, 2009 at 10:17 PM  

//
ஆளவந்தான் said...
ஆஹா இன்னைக்கு முடியாம போச்சா ??

//

எப்பவுமே ஸ்ரீதர்கண்ணன் மொதல்லே அதே மாத்த முடியாது.

முயற்சி பண்ணி தோல்வி சந்திக்க வேண்டாம் !!

ச்சின்னப் பையன் March 11, 2009 at 10:23 PM  

வாங்க ஸ்ரீதர்கண்ணன் -> ஹிஹி... அவரு இன்னும் கட்சியே ஆரம்'பிக்கலையே'??????.. இருந்தாலும் பரவாயில்லேன்னு கேட்டுப் பாக்கலாம். என்ன சொல்றீங்க???

நீங்க 4 கேள்விகளுக்குதான் பதில் சொல்லியிருக்கீங்க போல.... பின் விளைவுகளை நினைச்சி பாத்தீங்களா???? ஆஆஆ....

வாங்க ஆளவந்தான் -> இவ்வளவு பொறுமையா பதில் சொல்லிட்டு வந்து கடைசி கேள்வியிலே கோட்டை விட்டுட்டீங்க.... இது வேலைக்காவாது....

வாங்க கிச்சா -> முதல்முறையா வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்... அசத்தலான பின்னூட்டம்.. கலக்கீட்டீங்க போங்க... நன்றி...

ஸ்ரீதர்கண்ணன் March 11, 2009 at 10:24 PM  

//
ஆளவந்தான் said...
ஆஹா இன்னைக்கு முடியாம போச்சா ??

//

எப்பவுமே ஸ்ரீதர்கண்ணன் மொதல்லே அதே மாத்த முடியாது.

முயற்சி பண்ணி தோல்வி சந்திக்க வேண்டாம் !!


அப்படி இல்லைங்க நான் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு திரும்பும் முன் ஒருமுறை பூச்சாண்டியை பார்த்தேன் அவ்வளவுதான் வேறொன்றும் காரணம் கிடையாது :)

RAMYA March 11, 2009 at 10:28 PM  

1. குளிக்கும்போது சோப்பு எங்கு போடுவீர்கள்?

இது உங்க பதில்லே இருந்து சுட்டது
================================
இ. சோப்பு போடும் பழக்கமில்லை

இது என் பதில்
==============
ஐயே இது கூட உங்களுக்கும் தெரியலையே இப்போ பாருங்க நான் சொல்லறேன்.

ஹி ஹி சுவற்றிற்கு போட்டு விட்டு நாங்க குளிச்சதா வெளியே சொல்லிக்குவோம்.

இது ரகசியம் யாருகிட்டேயும் சொல்லாதீங்க.

RAMYA March 11, 2009 at 10:29 PM  

2. டாக்டருக்குப் பிறகு தலைவருக்கு மிக விரைவில் கிடைக்கப்போகும் அடுத்த பட்டம் என்ன?

ஆ. பாஃப்டா நாயகன்!!

RAMYA March 11, 2009 at 10:29 PM  

3. கீழ்க்கண்டவற்றில் எந்த ஆயுதத்தை - பயன்படுத்தாமல் - வெறும் காட்டியே - மக்களை கொல்ல முடியும்?

ஆ. வில்லு

RAMYA March 11, 2009 at 10:32 PM  

4. வசீகரா படத்தில் தலைவர் மிகவும் விரும்பி போட்ட வேடம் எது?


ஈ. வாக்மேன்

எனக்கு இதுக்கு பதில் தெரியலை pinky pinky panky போட்டேன்
இந்த பதில் தான் சொல்லிச்சி பெயில் போட கூடாது.

RAMYA March 11, 2009 at 10:33 PM  

5. தலைவர் இன்னும் எந்த ஆட்டக்காரராய் படங்களில் நடிக்கவில்லை?

இ. பல்லாங்குழி

பினாத்தல் சுரேஷ் March 11, 2009 at 10:33 PM  

:-)))))))))))

மச்சி..

அ. காதல்ன்றது பபுள்கம் மாதிரிடா.. ஆரம்பிக்கும்போது இனிப்பா இருக்கும், அப்பால சவசவன்னு இருக்கும்

ஆ. காதல்ன்றது மூக்குசளி மாதிரிடா..
மூக்குக்குள்ளே இருந்தா மூச்சுகூட விடமுடியாது! வெளிய வந்தாதாண்டா நல்லது!

இ. காதல்ன்றது தேர்தல் மாதிரிடா.. ஜெயிக்கிறோமா தோக்கிறோமா முக்கியமில்லை.. வேட்புமனு தாக்கல் பண்ணிடு!

ஈ. காதல்ன்றது கத்திரிக்கா மாதிரிடா.. கிரீடம் மாதிரி வால் இருந்தாலும் அது மேலேயே முள்ளும் இருக்கு.. நாம்தான் பாத்து பக்குவமா அரியணும்..

நாலும் கொடுத்துட்டதால எனக்கு “கம்பவுண்டர் சுரேஷ்” பட்டத்தை கொடுத்துவிடாதீர்கள். பூமிக்கு ஒரு சந்திரன் தான், டாக்டருக்கு ஒரு கம்பவுண்டர் ச்சின்னப்பையன் தான்!

RAMYA March 11, 2009 at 10:34 PM  

6. 5 கட்டையில் (சவுண்டா) பாடும்போது, பாடுபவர் எதையெல்லாம் மூடிக்கொள்ள வேண்டும்?


ஏன் above all option கொடுக்கலை ??

அ. கண்
ஆ. காது
இ. மூக்கு
ஈ. வாய்

RAMYA March 11, 2009 at 10:35 PM  

7. அடுத்த படத்தில் தலைவர், வில்லனை வேகமாக மிதிவண்டியில் துரத்தும் அசத்தல் சீன் ஒன்று வருகிறது. அந்த காட்சியில் வில்லன் எந்த வண்டியை ஓட்ட வேண்டும் என்று
எதிர்பார்க்கிறீர்கள்?

ஹி ஹி
அ. புகைவண்டி

RAMYA March 11, 2009 at 10:36 PM  

8. தலைவர் ஓட்டும் அந்த மிதிவண்டியில் என்னென்ன இருக்க வேண்டும்?

ஈ. எதுவுமே தேவையில்லை. அவரே ‘புர்ர்ர்ர்'ரென்று வாயில் சத்தம் செய்து கொண்டே மிதிவண்டி ஓட்டுவது போல் ஓடி வில்லனை துரத்தலாம்.

RAMYA March 11, 2009 at 10:36 PM  

9. பல படங்களில் புவியீர்ப்பு விசையை எதிர்த்து தலைவர் போட்ட சண்டைக் காட்சிகளை பல படங்களில் பார்த்திருப்பீர்கள். இன்னும் எந்தெந்த விசையை எதிர்த்து அவர்
நடிக்கலாமென்று எதிர்பார்க்கிறீர்கள்?

ஈ. மேற்கூறிய அனைத்தும்

RAMYA March 11, 2009 at 10:37 PM  

10. தலைவரின் அடுத்த பட க்ளைமாக்ஸ் வசனத்தில் உங்கள் உதவி தேவைப்படுகிறது. பின்வருவனவற்றில் உங்களுக்கு பிடித்த ஒன்றை தேர்ந்தெடுத்து 100க்கு குறைவான வார்த்தைகளில் வசனத்தை எழுதுக.

அ. காதல்ன்றது பபுள்கம் மாதிரிங்க...
ஆ. காதல்ன்றது மூக்குசளி மாதிரிங்க...
இ. காதல்ன்றது தேர்தல் மாதிரிங்க...
ஈ. காதல்ன்றது கத்திரிக்கா மாதிரிங்க...

இவை அனைத்துமே !!!

வெட்டிப்பயல் March 11, 2009 at 10:38 PM  

கலக்கல் பதிவு...

Waiting for Karki :)

வெட்டிப்பயல் March 11, 2009 at 10:38 PM  

//நாலும் கொடுத்துட்டதால எனக்கு “கம்பவுண்டர் சுரேஷ்” பட்டத்தை கொடுத்துவிடாதீர்கள். பூமிக்கு ஒரு சந்திரன் தான், டாக்டருக்கு ஒரு கம்பவுண்டர் ச்சின்னப்பையன் தான்//

ரிப்பீட்டே!

RAMYA March 11, 2009 at 10:42 PM  

அனைத்திற்கும் சரியாக பதில் கூறியவர்களுக்கு மேற்கூறிய பரிசுகள் அளிக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட தவறான பதில் சொல்பவர்களுக்கு தலைவரின் பட டிவிடிக்கள் தபாலில்
அனுப்பி வைக்கப்படும்.

ஆமா!!

நான் கலையிலே வந்து சரியா எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி இருக்கின்றேன்.

எனக்கு சரியான தீர்ப்பா சொல்லலை அண்ணா அப்புறம் அண்ணிகிட்டே சொல்லி...

குழந்தைக்கு ஒரு கதை சொல்ல தெரியலை. கேள்வியா கேக்கறீங்க. அண்ணி கொஞ்சம் எட்டி பாருங்க.

ஓவர் அலம்பலா இருக்கு.

ஹா ஹா மாட்டி விட்டுட்டேனே!!

RAMYA March 11, 2009 at 10:42 PM  

//
பிரேம்ஜி said...
நான் பெயில் ஆகிட்டேன்.தப்பான அட்ரஸ் குடுத்து டிவிடி லிருந்து தப்பிச்சுருவேன்.

//

SUPER !!

RAMYA March 11, 2009 at 10:45 PM  

//
ஸ்ரீதர்கண்ணன் said...
//
ஆளவந்தான் said...
ஆஹா இன்னைக்கு முடியாம போச்சா ??

//

எப்பவுமே ஸ்ரீதர்கண்ணன் மொதல்லே அதே மாத்த முடியாது.

முயற்சி பண்ணி தோல்வி சந்திக்க வேண்டாம் !!

அப்படி இல்லைங்க நான் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு திரும்பும் முன் ஒருமுறை பூச்சாண்டியை பார்த்தேன் அவ்வளவுதான் வேறொன்றும் காரணம் கிடையாது :)

//


இங்கே தான் இருக்கீங்களா? உங்களை வெல்ல யாரு இருக்காங்க ஸ்ரீதர்கண்ணன் :):)

ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்:):)

என்ன ஸ்ரீதர்கண்ணன் நான் சரியா பதில் சொல்லி இருக்கின்றேனா ???
தொகுதி எனக்கு கிடைக்குமா??

ஆளவந்தான் March 11, 2009 at 10:47 PM  

ரம்யா ,

இங்கே தான் இருக்கேன்

RAMYA March 11, 2009 at 10:49 PM  

//
ஆளவந்தான் said...
ரம்யா ,

இங்கே தான் இருக்கேன்
//

நான் கூட இங்கே தான் இருக்கேன்
கேள்வி எல்லாம் ஒரே அலம்பலா இல்லே.

எப்படி எங்க அண்ணன் யோசிக்கராருன்னே தெரியலை ஒரே குளம்பியா:):) இருக்கு

ஆளவந்தான் March 11, 2009 at 10:51 PM  

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.. ஏறகனவே ரெண்டு மூனு தடவை.. ஃப்ர்ஸ்ட் அடிச்சிருக்கேன்

.. எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ணமாட்டோமா..
:))

RAMYA March 11, 2009 at 10:52 PM  

சரி நான் ஆளவந்தான் அலுவலக பணி என்னை அழைக்கின்றது.

காலையிலேயே அண்ணாவோட பதிவிலே ஒரே கும்மி.

மனசுக்கு சந்தோசம் இருக்கு.

நான் வரேன் ஆளவந்தான்!!!

ஆளவந்தான் March 11, 2009 at 10:52 PM  

//
நான் கூட இங்கே தான் இருக்கேன்
கேள்வி எல்லாம் ஒரே அலம்பலா இல்லே.

//
ரூம் போட்டு யோசிப்பாரா இருக்கும்... போற போக்க பாத்தா.. வீரத்த்ள்பதியோட தளபதி ஆனாலும் ஆச்சர்யபடுறதுக்கில்ல
:))

RAMYA March 11, 2009 at 10:53 PM  

//
ஆளவந்தான் said...
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.. ஏறகனவே ரெண்டு மூனு தடவை.. ஃப்ர்ஸ்ட் அடிச்சிருக்கேன்

.. எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ணமாட்டோமா..
:))

//


பண்ணுங்க பண்ணுங்க உங்க முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்!!

நான் essssssssssss...........

ஆளவந்தான் March 11, 2009 at 10:55 PM  

//
சரி நான் ஆளவந்தான் அலுவலக பணி என்னை அழைக்கின்றது.
//
புடுங்கிறது (தேவையில்லாத) ஆணியா இருந்தாலும்.. கெத்துக்கு ஒன்னும் குறைவில்ல :))))

//
காலையிலேயே அண்ணாவோட பதிவிலே ஒரே கும்மி.
//
இஙகே தூங்கிறதுக்கு முன்னே ஒரு கும்மி.. நேத்தே ஒரு கும்மலாம்னு தான் இருந்தென்.. தல பதிவு போடாம ஏமாத்திட்டாரு :)

அப்புறம் யாராவது இருந்தா சொல்லுங்க.. ஒரு ரவுண்ட் அடிக்கலாம் :)))

இப்போதைக்கு அப்பீட்டு

RAMYA March 11, 2009 at 10:55 PM  

//
ஆளவந்தான் said...
//
நான் கூட இங்கே தான் இருக்கேன்
கேள்வி எல்லாம் ஒரே அலம்பலா இல்லே.

//
ரூம் போட்டு யோசிப்பாரா இருக்கும்... போற போக்க பாத்தா.. வீரத்த்ள்பதியோட தளபதி ஆனாலும் ஆச்சர்யபடுறதுக்கில்ல
:))

//

இரெண்டு பேருக்கும் ஏதேனும் உடன் படிக்கை இருக்கா??

இல்லே அடுத்த தளபதியோட படத்துக்கு அண்ணன்தான்
Producer டைரக்டர்........

Anonymous,  March 11, 2009 at 10:58 PM  

Hi Guys! Always give constructive criticism ... it may be for actor,books ,politician , dont directly give bad comments ...

எம்.எம்.அப்துல்லா March 11, 2009 at 11:08 PM  

அண்ணா டாக்டரோட மன்றத்தை கவனிச்சுக்க நிறையபேரு இருக்காங்க.நம்ப மன்ற பணிகள்ல சற்று சுணக்கம் வந்துருச்சு. சீக்கிரம் பொதுக்குழுவ கூட்டுங்க
:)

ஆயில்யன் March 11, 2009 at 11:10 PM  

//கீழ்க்கண்டவற்றில் எந்த ஆயுதத்தை - பயன்படுத்தாமல் - வெறும் காட்டியே - மக்களை கொல்ல முடியும்?//

இந்த கேள்வி ச்சும்மா லொலலொலாவா இருக்கு ஆப்ஷன்ல விஜய் பேரே இல்ல :(((((

ஸ்ரீமதி March 11, 2009 at 11:59 PM  

//இந்த பதிவிற்கு பதிலே சொல்லாமல் தப்பிப்பவர்களுக்கு - அவர்கள் ஐபி மூலமாக தொலைபேசி எண் கண்டுபிடிக்கப்படும். அவர்களை தொலைபேசியில் அழைத்து தலைவரின் அனைத்து பட வசனங்களும் வரிசையாக சொல்லிக் காட்டப்படும்.//

பதிவ படிச்சதுக்கு இப்படி ஒரு தண்டனையா அண்ணா?? :'((( ஆனாலும் ஒரு ச்ச்ச்ச்ச்சின்னப் பொண்ண இப்படி பயமுறுத்தக்கூடாது.. :(((

Mahesh March 12, 2009 at 2:17 AM  

எனக்கு ரொம்ப விருப்பமா இருக்கு... ஆனா எந்தக் கேள்விக்கும் பதில் தெரியலயேப்பா... நான் என்ன பண்ணுவேன்??? :(

நவநீதன் March 12, 2009 at 2:21 AM  

இன்னும் பத்து கேள்விகள் சீசன் முடியலையா...?

அறிவிலி March 12, 2009 at 2:39 AM  

1.டாக்டர்லாம் கைக்கு மட்டும் தான் சோப்பு போடுவாங்க
2. டாக்டருக்கு அப்புறம் MS(Master in surgery) அறுவை சிகிச்சை நிபுணர்.(வசனமே போதும்)
3. ஸ்டெதாஸ்கோப் அல்லது சர்ஜிகல் நைஃப்.
4. சிக் மேன்
5. ரொம்ப கஷ்டமா இருக்கு, டிவிடிக்காக சாய்ஸ்ல வுட்டுட்டேன்.
6.ஆ_ _வாய் ஏன்னா சத்தம் எங்கிருந்து வருது சந்தேகம் வந்துரக்கூடாதில்ல.
7. ஆம்புலன்ஸ்
8. சைரன், மைனஸ் சைன் (நல்ல டாக்டருக்குதான் + சைன்), எலும்புக்கூடு பட எச்சரிக்கை.
9. டார்வினுடையது (மனுஷனுக்கு அப்புறம் குரங்கு)
10. காதல்ன்றது வைத்தியம் பாக்கறது மாதிரிங்க.வைத்தியம் பாக்கலன்னாலும் செத்துருவாங்க. வைத்தியம் பாத்தாலும் (நம்ம டாக்டர்கிட்ட) செத்துருவாங்க.
காதல்ல தோத்தாலும் பிரச்சினை, ஜெயிச்சாலும் பிரச்சினை.

வால்பையன் March 12, 2009 at 3:39 AM  

1.குளிப்பதேயில்லை

2.அதில் எதுமில்லை, இது தான் கிடைக்கும் ”பெரிய டாக்டர்”

3.அதில் எதுமில்லை, அந்த ஆயுதம் விரல். சினிமாவாக இருந்தால் வில்லு தான்

4.அதற்காக ஸ்பைடர்மேன் நான்கு தடவை தூக்கில் தொங்கினாராம்.

5. நான் விருபுவது அடுத்து நொண்டி ஆட்ட நாயகனாக டாக்டர் கடிக்க ஸாரி நடிக்க வேண்டும்

6.வாய்

7.ராக்கெட்

8.என் சாய்ஸ் ஈ

9.இனி மூன்று பரினாமங்களையும் தாண்டி நினைத்த மாத்திரதில் நினைத்த இடதில் ஏற, இறங்க, பறக்க வேண்டும்.

10. ஆ கொஞ்சம் பரவாயில்லை, டீசண்டா இருக்கு

முரளிகண்ணன் March 12, 2009 at 5:27 AM  

வாய்ப்பே இல்லை.

சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் March 12, 2009 at 5:52 AM  

kichaa said...
10.(விக்ரமன்: Sound! இங்க கொஞ்சமா echo வையுங்க.. Roll Camera.. Start. Action) காதல்ங்கிறது பக்கத்து வீட்ல பழுக்கிற பலாப்பழம் இல்ல. அது நம்ம வீட்ல காய்க்கிற நாவல்பழம்அது பழுத்தாலும் விழுந்தாலும் நம்ம வீட்லதான்..

Start Music.. ஙெஙெ.. ஙூஙூ..
SA Rajkumar: அப்டியில்லைய்யா, D major இல்லைய்யா D minor ஙேஙே.. ஆங்.. அப்படியே கொஞ்சம் மேலே போங்க.. யோவ்.. மேலயின்னா அந்த மேலயில்லய்ய்ய.. மேல் ஸ்தாயிக்கு போய்யா.. ஆங். correct. ஒருக்கா rehearsal பார்த்திறலாம் OK Start
பலாப்பழங்கிறது..
சார் உங்களயில்ல சார்.. வயலின சொன்னன் சார்.. ஸ்ஸப்பா என்னால முடியல.. pack up
////

ரிப்பீட்டேய்ய்..
அட்டகாசம் பதிவும் பின்னூட்டங்களும்..

VIKNESHWARAN March 12, 2009 at 7:16 AM  

நான் அல்லா குவஸ்டீனுக்கும் ஈ விடை போட்டுக்கிறேன். சின்ன கரெக்சென் பண்ணிக்குங்க... தலைவருக்கு அடுத்து வக்கில் பட்டம் கொடுக்க போறாங்க... மத்தபடியா ரித்தீஸ் கூட ஒரு சூப்பர் ஹிட் படம் தலைவர் கெடுக்கனும் ச்சே கொடுக்கனும்னு கேட்டுக்குறோம்...

ச்சின்னப் பையன் March 12, 2009 at 9:26 AM  

வாங்க தங்கச்சி ரம்யா -> ஆபீஸ் வேலையை விட்டுட்டு இங்கே கும்மி அடிச்சியிருக்கீங்க காலங்கார்த்தலே... வீட்லே வேறே மாட்டி விடப் பாக்குறீங்க.. டூ பேட்... இதுக்கு உங்களுக்கு பரிசு கொடுத்தே ஆகணும்... மேடம்க்கு நாலு டிவிடி பார்சேல்.........:-))

வாங்க ராகி ஐயா -> நன்றி...

வாங்க பினாத்தல் தல -> ஹாஹா... முடியல... நல்லா சிரிச்சேன் உங்க கமெண்டைப் பாத்து... :-)))

வாங்க வெட்டி -> நன்றி தல...

ச்சின்னப் பையன் March 12, 2009 at 9:32 AM  

Welcome anony -> I didnt do any 'personal' remarks abt him. I hope all the questions are from any one of his film or definitely related to that. Pls tell me which question you felt that was very rude.

வாங்க அப்துல்லா அண்ணே -> அதில்லேண்ணே... ஊரார் நடிப்பை ஊட்டி வளர்த்தா நம் நடிப்பு தானே வளரும்னு சொன்னாங்க... சரி சரி... கோவப்படாதீங்க.. வந்துடறேன்... :-)))

வாங்க ஆயில்ஸ் அண்ணே -> ஏண்ணே வம்புலே மாட்டி விடப்பாக்குறீங்க... அவ்வ்வ்...

வாங்க ஸ்ரீமதி தங்கச்சி -> ஹாஹா... சரி விடுங்க. உங்களுக்கு மட்டும் வெறும் காமெடி வசனங்கள் சொல்லப்படும். ஓகேவா????

அருப்புக்கோட்டை பாஸ்கர் March 12, 2009 at 12:11 PM  

//பதிவிற்கு பதிலே சொல்லாமல் தப்பிப்பவர்களுக்கு - அவர்கள் ஐபி மூலமாக தொலைபேசி எண் கண்டுபிடிக்கப்படும்.//

பதில் சொல்லலைனாலும் விடமாட்டீங்களா ?
என்ன கொடுமை இது சரவணா ?
:-))))))

நசரேயன் March 12, 2009 at 2:21 PM  

நான் தான் கடைசியா வந்து இருக்கேன், விஜய் ரசிகர் மன்றத்திலே சேர

Anonymous,  March 12, 2009 at 3:04 PM  

ஒரு வேலை விஷயமா மும்பை வந்திருக்கேன். உங்க பதிவு பத்தின விஷய்த்த தந்தி போல் பாவித்து SMS வந்திருக்கு. அதனால நம்ம பதிவர் அனுஜன்யா வீட்டுல இருந்து இந்த பின்னூட்டத்தப் போடுகிறேன்.

என்ன விட்டுடுங்க விட்டுடுங்க.

கமல் March 12, 2009 at 6:01 PM  

ம்....சிரிப்புத் தாங்கவே முடியல்லை???

நக்கல் அருமை...பாவம் விஜய் ஆட்கள்....

சந்தாப் பணம் எவ்வளவு??

ச்சின்னப் பையன் March 12, 2009 at 7:04 PM  

வாங்க மகேஷ்ஜி -> சரி விடுங்க... டிவிடி நாலு வருது உங்களுக்கு. அதை ஒரு மண்டலம் பாத்துக்கிட்டு இருங்க. பதில்கள் தானா தெரியும்... :-)))

வாங்க நவநீதன் -> ஆமாங்க...

வாங்க அறிவிலி -> ஹாஹா... சூப்பரா முயற்சி செய்திருக்கீங்க... விடுங்க உங்களுக்கு டிவிடி தேவையில்லை.. தொலைபேசி மட்டும்தான்... :-)))

வாங்க வால் -> வழக்கம்போல கலக்கல் கமெண்ட் போட்டிருக்கீங்க தல...

வாங்க கார்த்திக், மு-க அண்ணா -> மிக்க நன்றி...

ச்சின்னப் பையன் March 12, 2009 at 7:07 PM  

வாங்க ஆதி -> நன்றி... 50 போட்டதுக்கு... ரொம்ம்ம்ம்ப நாள் கழிச்சி 50 வந்திருக்கு... :-)))

வாங்க விக்னேஸ்வரன் -> உங்க ஆசை விரைவில் நிறைவேறட்டும்... :-))

வாங்க பாஸ்கர் -> ஹாஹா... மாட்னீங்களா?????

வாங்க நசரேயன் -> லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்திருக்கீங்க....

வாங்க தமிழ் பிரியன் -> நன்றி...

ச்சின்னப் பையன் March 12, 2009 at 7:11 PM  

வாங்க வேலன் ஐயா -> மிக்க மிக்க நன்றி. வேலைக்காக போன ஊரில் நேரத்தை செலவு செய்து பதிவை படித்ததற்கும், உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கும் நன்றி... ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கு. This means so much to me....

வாங்க கமல் -> ஹாஹா... நல்லா சிரிச்சீங்களா... நன்றி...

ரமேஷ் வைத்யா March 13, 2009 at 4:12 AM  

1. குளிக்கும்போது சோப்பு எங்கு போடுவீர்கள்?

டாக்டரின் முகத்தில், வேகமாக.
2. டாக்டருக்குப் பிறகு தலைவருக்கு மிக விரைவில் கிடைக்கப்போகும் அடுத்த பட்டம் என்ன?

பேராசிரியர்
3. கீழ்க்கண்டவற்றில் எந்த ஆயுதத்தை - பயன்படுத்தாமல் - வெறும் காட்டியே - மக்களை கொல்ல முடியும்?

டாக்டரின் முகம்

Rajkumar March 14, 2009 at 11:16 AM  

Dear CP
Hmmmmmm....every thing in your posts are great except one thing........................................................................................................I am unable to digest..........digest.......................digest..........................digest......................................digest.............................die....gest.................J K Rithish's photos as your mask......though he is funny guy...you are different kind and far far better...you should have reputed person's mask....think about it - Raj

Swarnarekha March 14, 2009 at 1:14 PM  

//
இந்த பதிவிற்கு பதிலே சொல்லாமல் தப்பிப்பவர்களுக்கு - அவர்கள் ஐபி மூலமாக தொலைபேசி எண் கண்டுபிடிக்கப்படும். அவர்களை தொலைபேசியில் அழைத்து தலைவரின் அனைத்து பட வசனங்களும் வரிசையாக சொல்லிக் காட்டப்படும்
//

அடடா.. தெரியாத்தனமா மாட்டிக்கிட்டேனே....
அண்ணே... கில்லி பட வசனம் மட்டும் போடுங்கண்ணே....

விஜயசாரதி March 15, 2009 at 7:23 AM  

2009அ வுட்டுபுட்டீயே தலீவா...

இந்த பதில பிட்சிக்க:

1. ஆ
2. என்ஜீனியருன்னு வட்டாரம் பேசிக்குது
3. நாலுமே இல்ல தல. சொல்லு
4. டாபர்மேன் இல்ல...
5. கப்ளிங்ஸ்
6. தலீவர் பாடினா அவர் வாய பொத்திகணும், நாம காத பொத்திகணும்
7. நீர்மூழ்கிக் கப்பல்
8. ஈ (ஆனா அந்த சவுண்டு கூட தேவி ஸ்ரீப்ரிசாத் பாத்துக்குவார்)
9. அவர் வீட்ல தொங்கற சை(கை)த்தான் விசை
10. காதல்ன்றது நம்ம தலீவர் படம் மாதிரி. அது ஓடினாலும் பிரச்சனை (ஹிட்டுன்னு அடுத்த படம் வந்துரும்) ஓடலைனாலும் பிரச்சனை (ரொம்ப சீக்கிரம் அடுத்த படம் வந்துரும்)

தாரணி பிரியா March 15, 2009 at 1:39 PM  

//இந்த பதிவிற்கு பதிலே சொல்லாமல் தப்பிப்பவர்களுக்கு - அவர்கள் ஐபி மூலமாக தொலைபேசி எண் கண்டுபிடிக்கப்படும். அவர்களை தொலைபேசியில் அழைத்து தலைவரின் அனைத்து பட வசனங்களும் வரிசையாக சொல்லிக் காட்டப்படும்.//

இப்படியெல்லாம் மிரட்டி கூட பின்னூட்டம் வாங்கலாமுன்னு ஐடியா சொல்லி தந்து இருக்கிங்க நன்றி :)

தாரணி பிரியா March 15, 2009 at 1:42 PM  

2016 அமைச்சரவையில் நீங்களும் மந்திரியாமே

பரிசல்காரன் March 15, 2009 at 2:05 PM  

அடங்கொண்ணியா.. 2011 போய்.. இப்போ 2016க்கு ஆரம்பிச்சாச்சா? வெளங்குனாப்லதான்!

ச்சின்னப் பையன் March 16, 2009 at 3:32 PM  

வாங்க ரமேஷ் வைத்யாஜி -> அவ்வ்வ். என்ன கொலவெறி உங்களுக்கு???? :-)))

வாங்க சரவணகுமரன் -> நன்றி..

வாங்க ராஜ்குமார் -> Tஹன்க்ச் fஒர் யொஉர் cஒம்மென்ட். ளெட் மெ சே.... :-))

வாங்க ஸ்வர்ணரேகா -> ஹாஹா... பயந்துட்டீங்களா??? கமெண்ட் போட்டுட்டீங்கல்ல... உங்களுக்கு எந்த பட வசனமும் கிடையாது... :-)))

வாங்க விஜயசாரதி -> ஹாஹா... சரி சரி.. ஃபார்ம்லேதான் இருக்கீங்க...

ச்சின்னப் பையன் March 16, 2009 at 3:34 PM  

வாங்க தாரணி பிரியா -> ஏம்மா சகோதரி, இவ்ளோ நாளா இது தெரியாதா??? சரி சரி இனிமே இப்படி மிரட்டியே பின்னூட்டம் வாங்கிடுங்க.... :-))

வாங்க பரிசல் -> ஹாஹா... அட.. நீங்க வேறே.. யாத்ராக்காக 2026 திட்டமே ரெடியாம்....:-))

kichaa March 16, 2009 at 4:07 PM  

http://www.youtube.com/watch?v=Q7XUYcGmjzw
(Vijay has lost it..)
comment அடிச்சவங்க எல்லாம் ஓடி போய் ஒளிஞ்சுகுங்க
ச்சின்னப்பையன் .. வம்பில மாட்டி விட்டிங்களே.. கொஞ்ச நாளக்கி போய் தல வீட்ல ஒளிஞ்சுகுங்க

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP