Thursday, July 23, 2009

சிறுவர் அணித் தலைவர்...!!!

இரண்டு நாட்களுக்கு முன்னாடி, தமிழக துணை முதல்வர் ஆலந்தூர் வழியா காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வந்தாராம். அதற்கு கிண்டியிலிருந்தே ஏகப்பட்ட வரவேற்பு பலகைகள், ஃப்ளெக்ஸ் போர்டுகள், சாலையின் நடுவில் தோரணங்கள்னு ஒரே அமர்க்களம்தான்.


வேளச்சேரியிலிருந்து கிண்டி வருவதற்கே இவ்வளவு வரவேற்பு, தடபுடல் அப்படின்னா, எதிர்காலத்துலே இன்னும் என்னல்லாம் நடக்கும்னு யோசிச்சேன். அதுவும் கட்சியின் சிறுவர் அணித் தலைவர் பள்ளியில் படிக்கும்போது, அவரது தொண்டர்கள் அவருக்கு எப்படி வரவேற்பு கொடுப்பாங்கன்னு யோசிச்சதுலே வந்ததுதான் இந்த இடுகை.


எனக்குத் தெரிஞ்சது கொஞ்சம்தான். உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லிட்டுப் போங்க.

*****

ஃபீஸ் கட்ட வரும் ஃபீனிக்ஸ் பறவையே... வருக வருக..

டெர்ம் ஃபீஸ் கட்ட வரும் டெர்மினெட்டரே... வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்...

மந்த்லி டெஸ்ட் எழுத வரும் மகானே... வாங்க வாங்க

அர்ரியர்ஸ் எக்ஸாம் எழுத வரும் அறிஞரே.. நீவிர் நீடூழி வாழ்க...

சயன்ஸ் ப்ராக்டிகல்ஸுக்கு வருகை தரும் சமாதானப் புறாவே... வாழ்த்தி வணங்குகிறேன்...

கணக்கு பரிட்சையில் பாஸ் செய்த கலியுக வள்ளலே... உங்கள் தொண்டர்கள்...

எட்டாம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்ற எட்டாவது அதிசயமே... பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...

தண்ணி குடிக்க வரும் தன்னிகரல்லா தலைவரே... சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.

கடந்த கால வரலாறு படிக்கும் வருங்கால முதல்வரே... வாழ்க வாழ்க...

*****

Read more...

Tuesday, July 21, 2009

என் கவுஜக்கு மனசாட்சியின் உடனடி பதில்!!!

விகடன்
குமுதம்
குங்குமம்

எல்லாத்திலேயும்
ஒரே மாதிரியான
பேட்டிகள்,
செய்திகள்.

அட்டையைக்
கிழித்துவிட்டால்
எது எந்த
பத்திரிக்கைன்னு
தெரியாதாம்..

அட்டைக்குப் பதிலா
புத்தகத்தையே
கிழிச்சிட்டா...

நேரமும் மிச்சம்..
பணமும் மிச்சம்...

*****

சன்
ஜெயா
ராஜ்
சிரிப்பொலி
ஆதித்யா

எல்லாத்திலேயும்
ஒரே மாதிரியான
நகைச்சுவைக் காட்சிகள்,
பாடல்கள்,
விளம்பரங்கள்.

லோகோவைத்
தூக்கிட்டா
எது எந்த
சேனல்னு
தெரியாதாம்.

லோகோக்குப் பதிலா
டிவியையே
தூக்கிட்டா..



...




...




...




டிவியை தூக்கிடுவியா நீ?
மகனே..

அப்புறம் வீட்லே
தங்கமணி கையாலே
உனக்கு
டின்னுதாண்டி..

Read more...

Monday, July 20, 2009

யாரு கால்லே யாரு, அவருக்கு என்ன பேரு?

அலுவலகத்திலே என் அறைக்குப் பக்கத்திலே நீளமான ஒரு பாதை இருக்கு. இந்த அறைக்கு வந்த புதுசுலே அந்த பாதையில் போறவர்றவங்கல்லாம் என் அறைக்குத்தான் வர்றாங்கன்னு பயந்துக்கிட்டிருப்பேன். ஆனா, சில நாட்களாய் செய்த காலடி ஆராய்ச்சியின் முடிவில் அந்த பயம் போயிடுச்சு.


சரி. அது என்ன ஆராய்ச்சி, என்ன முடிவுன்னு யாரும் கேக்கமாட்டீங்கன்னு தெரியும். அதனால், அப்படி ஒரு கேள்வி கேக்காமே நானே அதைப்பத்தி விளக்கிடறேன்.


சரக் சரக் (பாக்கெட்டில் சில்லறை சத்தம்)

சில்லறை சத்தத்தோட காலடி சத்தம் கேட்டாலே கண்டிப்பா அது எங்க தலதான்னு தெரிஞ்சுடும். உடனே தமிழ்மணம், தமிலிஷ், பூச்சாண்டி, ரீடர் அப்படி எல்லா திரையையும் மூடிட்டு, ஒரு குழப்பமான / வண்ணமயமான எக்ஸல் (excel) கோப்பை திறந்து வைத்துக்கொண்டு யோசிக்க ஆரம்பித்துவிடுவேன். என்ன யோசிப்பேன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். அடுத்த இடுகைக்கான ஐடியாதான். வேறென்ன?

டக் டக் (என் பக்கத்தில் வந்து சத்தம் குறைதல்)

என் அறைக்கு பக்கத்தில் வந்து கால் சத்தம் குறைந்தாலே, அடுத்த சத்தம் என்ன வரப்போகுதுன்னு தெரிஞ்சுடும். அது கடலை சத்தம்தான். பக்கத்தில் உட்காந்திருக்கும் ஒரு அக்காவைப் பார்க்க அடிக்கடி யாராவது வருவாங்க. அதனால் நமக்கு ஒண்ணும் பிரச்சினையில்லே. வழக்கம்போல் நம்ம வேலையை(!!) பாக்க வேண்டியதுதான்.

டடக் டடக் (சத்தம் குறையாமல் ஒரே சீராக வருதல்)

காலடி சத்தம் குறையலேன்றதால, இவங்க என் அறைக்கு வர்றவங்களா இருக்கமாட்டாங்க. அதையும் தாஆஆண்டிப் போற புனிதமானவங்களா இருப்பாங்க. அதனால் இவங்களுக்கும் பயப்படத் தேவையில்லை.

டக் டக் (திடீரென்று சத்தம் நின்று போதல்)

இந்த மாதிரி காலடி சத்தம் திடீர்னு நின்னு போனா, இதை உன்னிப்பா கவனிக்கணும். ஒண்ணு அவங்க யாரோடவாவது பேசுவதற்கு நின்றிருக்கணும் அல்லது திரும்பப் போக நினைப்பவரா இருக்கணும். அதனால் சில வினாடிகள் செலவானாலும் பரவாயில்லைன்னு இவங்களை கவனிச்சிட்டு அடுத்த வேலையை பாக்கணும்.

சர்க் சர்க் (காலோட பேண்ட் உராய்கிற சத்தம்)

இது கண்டிப்பா நம்ம நண்பன்தான். காபி சாப்பிட போகலாமான்னு கூப்பிட என் அறைக்கு வர்றான். தொளதொளன்னு பேண்ட் போட்டா இப்படித்தான் உராய்கிற சத்தம் வரும்.

டொக் டொக்

ஹிஹி. இது காலடி சத்தமில்லை. என் அறைக்கதவு தட்டப்படும் சத்தம்தான். இதுக்கு கண்டிப்பா பயந்துதான் ஆகணும். எல்லாத்தையும் மூடிட்டு - ஒரு ராகத்தோட ‘யெஏஏஏஸ்' அப்படின்னு ஒரு குரல் கொடுத்துட்டு, சிரிப்பதற்கு தயாராக உக்காந்திருக்க வேண்டியதுதான்.

*****

இந்த ஆராய்ச்சி உங்களுக்கும் பயன்படும்னு நினைக்கறேன். இல்லே இதே மாதிரி நீங்க வேறே ஆராய்ச்சி செய்திருந்தாலும் அதை பத்தியும் சொல்லுங்க.

*****

Read more...

Friday, July 17, 2009

நொறுக்ஸ் - சென்னையில் முதல் வாரம்!!!

ஊருக்கு வந்த இரண்டாம் நாள் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தவுடன் சஹானா கேட்ட முதல் கேள்வி -- கடைசியில் இருக்கு.

*****


சென்னை நகரம் ஒரு பெரிய்ய்ய வீடியோ கேம்!!!

பைக் மட்டுமில்லே, கார் ஓட்டுறவங்களும் வீடியோ கேம்லே வண்டி ஓட்டறா மாதிரி வளைச்சி வளைச்சி வேகமா ஓட்றாங்க. சைதாப்பேட்டையிலிருந்து ராஜ் பவன் போற சாலையில் ஐந்தாறு லேன்கள் இருக்குன்னு நினைக்குறேன். ஒரு குட்டி கார் சாலையில் வலது பக்கத்திலேந்து சர்ர்ருன்னு இடது பக்கம் வரைக்கும் போய் மறுபடி இந்த பக்கம் வந்து... எங்க கண்லேந்து மறைஞ்சியே போயிடுச்சு. பல பேரு அந்த மாதிரிதான் ஓட்றாங்க.

நீங்க எங்கேயாவது பராக்கு பாத்துக்கிட்டே போவீங்க. எவனாவது வந்து இடிச்சிடுவான். அதனால் இருக்கற ஒரு மாசத்துக்கு பைக்கே எடுக்காதீங்கன்னு சொல்லிட்டாங்க தங்ஸ்.

*****


அப்போ நாந்தான் லூஸா!!!

இன்னொரு சமயம் போயிட்டிருக்கும்போது, பக்கத்துலேந்து அடிக்கடி ஒரு அக்கா எங்க ஆட்டோக்குள்ளே குதிக்க முயற்சி செய்துக்கிட்டிருந்தாங்க. என்னன்னு பாத்தா, அவங்க ஒரு பைக் பின்னாடி உக்காந்து போறாங்க. அந்த பைக் எங்க ஆட்டோவோட தோளோடு தோள் உரசிக்கிட்டு வருது. இந்த அக்காவும் எங்க ஆட்டோக்குள்ளே எட்டிப் பாத்து சினேகமா சிரிக்கிறாங்க, மணி கேக்குறாங்க, பாப்பா அழகா இருக்குன்னு சொல்றாங்க.

அவங்க பாதை மாறிப் போறதுக்கு முன்னாடி சொன்ன அந்த கடைசி வார்த்தைகள் மூலமாதான் நான் ரொம்ப நேரம் தனியா பேசிட்டிருந்தேன்னு புரிஞ்சுது...

அவங்க சொன்னது - “சரி நேர்லே பேசுவோம். வெச்சிரட்டா...”

*****


போன வாரம் ஒரு மினி பதிவர் நண்பர்கள் சந்திப்பு நடத்தி முடிச்ச கையோட இந்த வாரயிறுதியில் கோவை நண்பர்களை சந்திக்கப் போறேன்.

அடுத்த வாரயிறுதி (25,26) சொந்த வேலையா வெளியூர் போறதால், சென்னை நண்பர்கள் ஆகஸ்ட் 1,2 தேதிகள்லே ஒரு சந்திப்பு ஏற்பாடு பண்ணீங்கன்னா எல்லாரையும் பாக்க வசதியாயிருக்கும்.

*****


அனானிகளுக்கு ஆபீஸ்லே ஆணி அதிகமாகணும் ஆண்டவா. அப்பத்தான் அவங்க ஆட்டம் அடங்கும். அனைவருக்கும் அடிப்பதற்கு அருமையான அடுகைகள் அடிக்கும்

(ஹிஹி... எல்லாம் அ, ஆ-லேயே ஆரம்பிக்கணும்னு நினைச்சேன். முடியல. அதனால் வேணும்னே சில ஸ்பெல்லிங் மிஷ்டேக் பண்ணிட்டேன்... டென்சனாகாதீங்க!!!!).

*****


இந்த வண்டியில் ஏன் சீட் பெல்ட் இல்லே? - இதுதான் அந்த கேள்வி... அவ்வ்வ்வ்... முடியல....

*****

Read more...

Tuesday, July 7, 2009

இரவுக் கிறுக்கல்கள்!!!

கொடியில் காய்கிற
சட்டையைவிட அதிகமாய்
பறக்கிறது சுடிதார்..

சிவன் பார்வதி
இருக்கும் காலண்டரில்
பார்வதி சிவனை
தன்பக்கம் இழுத்துக்கொண்டே
பறக்கிறார் காற்றில்..

ங்கொய்யாலே...
இதிலுமாடா
பெண்ணாதிக்கம்?!?!?!


**********


போலீஸ்காரர்கள் தொல்லை
இல்லாத இந்த
நேரத்திலும் ஏன்
இந்த ஒழுங்கு?

சுவரோரம் வரிசையாக
செல்லும் எறும்புகள்..


**********


திருமணமான ஆடவர்களுக்கு
கடவுள் கொடுத்த மாபெரும் பரிசு -- இரவு நேரம்!!

அப்போதானே மனைவிகள்
‘அமைதியாக’ தூங்குறாங்க...


******


மொதல்லே இந்த
ஆளை கால்செண்டர்
வேலை விடச் சொல்லணும்..

இவ்ளோ நேரமா
வீட்டுக்கு வர்றதுக்கு?

-- கணவனுக்குக் காத்திருக்கும் பல்லி...


*******



வீட்டின் எல்லாக்
கதவுகளும், ஜன்னல்களும்
சாத்தியிருந்தாலும்
உள்ளேயிருந்து
என்னால் உலகத்தை
பார்க்கமுடிகிறது - இணையம்..


***********


எந்த ப்ளேன்லே வந்தாலும் ஏன் அதை ‘ஜெட்’ லாக்னு (jetlag) சொல்றாங்கன்னு தெரியல. ஞாயமா எனக்கு வந்திருக்கிறது கத்தார் லாக்தான். அப்படிப்பட்ட கத்தார் லாக் (!!)
முடியாமல் இரவில் தன்னந்தனியாக முழித்திருக்கும்போது கிறுக்கியவை!!!

டோண்டு ஐயா பாணியில் சொல்வதானால் - இவ்விடுகை எழுதத் துவங்கியபோது மணி காலை 2.00. முடியும்போது 3.30. 8.00 மணிக்கு பப்ளிஷ் செய்ய போட்டிருக்கிறேன்...

******

Read more...

Friday, July 3, 2009

மூன்று வருடங்களுக்குப் பிறகு... சென்னை...


"எங்கே போனாலும் வீட்லேந்து சுடு செய்து ஆறிய தண்ணியை எடுத்துப் போங்க. வெளியில் எங்கேயும் தண்ணி வாங்கிக் குடிக்காதீங்க. வெளியே எங்கேயும் சாப்பிடாதீங்க. அதிகமா சாப்பிட்டு வெயிட் போட்டுடாதீங்க".



"அவ்வ்.. டாக்டர், நான் பொறந்து 30 வருஷம் வளர்ந்த ஊருக்குப் போறதுக்கு இவ்ளோ பயமுறுத்தறீங்களே. விட்டா சாப்பிடவே சாப்பிடாதேன்னு சொல்வீங்க போலிருக்கே?"



"இப்போ ஊரெல்லாம் ஜுர பயமாயிருக்கு. அங்கே கொசுத்தொல்லை வேறே. அதனால்தான் இவ்வளவு எச்சரிக்கையா இருங்கன்னு சொல்ல வேண்டியிருக்கு."



"தண்ணியெல்லாம் கொண்டு போய் குடிச்சேன்னா.. மக்கள் ஓட்ட ஆரம்பிச்சிடுவாங்களே?"



"யார் ஓட்டினாலும் பரவாயில்லை. நீங்க கண்டுக்காதீங்க. எவ்ளோ நாளுக்கு, எந்த ஊருக்குப் போறீங்க?"



"அஞ்சு வாரத்துக்கு. சென்னைக்கு. முதல்லே மெட்றாஸ்னு சொல்வாங்க. எதிர்காலத்துலே என்ன சொல்வாங்கன்னு தெரியாது".



"என்னிக்கு கிளம்புறீங்க?"



"இங்கேந்து சனிக்கிழமை இரவு கிளம்பி, இந்திய நேரப்படி திங்கள் காலையில் 4 மணிக்கு சென்னையில் இறங்கறோம்".



"எவ்ளோ நாள் கழிச்சி இந்தியா போறீங்க?"



"ரெண்டு வருஷம் பதினோரு மாசம் ஆயிடுச்சு கடைசியா போயி".



"அதிகமா ஊர் சுத்தாதீங்க. வெயில் ரொம்ப ஜாஸ்தியாயிருக்கும். நிறைய தண்ணி குடிங்க".



"டாக்டர், மறுபடி முதல்லேந்து ஆரம்பிச்சிடாதீங்க. நான் கிளம்பறேன்".



"ஊர்லே எல்லாம் ரொம்ப ஆவலா எதிர்பாப்பாங்களே?"



"இல்லையா பின்னே. இப்ப இணையத்துலே வேறே நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. அவங்களையும் நான் பாக்கணும். I am excited.".



"தொலைபேசி எண் எல்லாருக்கும் கொடுத்துட்டீங்களே ஏற்கனவே?"



"ஆமா. 96001 - 97410 இதை எல்லாருக்கும் கொடுத்துட்டேன். திங்கள் காலையில் 6 மணியிலேந்து மக்கள் இதில் தொலைபேசலாம்னும் சொல்லிட்டேன். என்ன, யாரும் தொலைபேசி, இந்த படத்துலேந்து இந்த பாட்டு போடுங்கன்னு சொல்லக்கூடாது, அவ்ளோதான்".



"சரி. நல்லபடியா போயிட்டு வாங்க. இந்த ஒரே ஒரு ஊசி மட்டும் போட்டுக்கிடுங்க. இதுவும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான்".



"ஆஆஆஆஆ..."



*****

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP