யாரு கால்லே யாரு, அவருக்கு என்ன பேரு?
அலுவலகத்திலே என் அறைக்குப் பக்கத்திலே நீளமான ஒரு பாதை இருக்கு. இந்த அறைக்கு வந்த புதுசுலே அந்த பாதையில் போறவர்றவங்கல்லாம் என் அறைக்குத்தான் வர்றாங்கன்னு பயந்துக்கிட்டிருப்பேன். ஆனா, சில நாட்களாய் செய்த காலடி ஆராய்ச்சியின் முடிவில் அந்த பயம் போயிடுச்சு.
சரி. அது என்ன ஆராய்ச்சி, என்ன முடிவுன்னு யாரும் கேக்கமாட்டீங்கன்னு தெரியும். அதனால், அப்படி ஒரு கேள்வி கேக்காமே நானே அதைப்பத்தி விளக்கிடறேன்.
சரக் சரக் (பாக்கெட்டில் சில்லறை சத்தம்)
சில்லறை சத்தத்தோட காலடி சத்தம் கேட்டாலே கண்டிப்பா அது எங்க தலதான்னு தெரிஞ்சுடும். உடனே தமிழ்மணம், தமிலிஷ், பூச்சாண்டி, ரீடர் அப்படி எல்லா திரையையும் மூடிட்டு, ஒரு குழப்பமான / வண்ணமயமான எக்ஸல் (excel) கோப்பை திறந்து வைத்துக்கொண்டு யோசிக்க ஆரம்பித்துவிடுவேன். என்ன யோசிப்பேன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். அடுத்த இடுகைக்கான ஐடியாதான். வேறென்ன?
டக் டக் (என் பக்கத்தில் வந்து சத்தம் குறைதல்)
என் அறைக்கு பக்கத்தில் வந்து கால் சத்தம் குறைந்தாலே, அடுத்த சத்தம் என்ன வரப்போகுதுன்னு தெரிஞ்சுடும். அது கடலை சத்தம்தான். பக்கத்தில் உட்காந்திருக்கும் ஒரு அக்காவைப் பார்க்க அடிக்கடி யாராவது வருவாங்க. அதனால் நமக்கு ஒண்ணும் பிரச்சினையில்லே. வழக்கம்போல் நம்ம வேலையை(!!) பாக்க வேண்டியதுதான்.
டடக் டடக் (சத்தம் குறையாமல் ஒரே சீராக வருதல்)
காலடி சத்தம் குறையலேன்றதால, இவங்க என் அறைக்கு வர்றவங்களா இருக்கமாட்டாங்க. அதையும் தாஆஆண்டிப் போற புனிதமானவங்களா இருப்பாங்க. அதனால் இவங்களுக்கும் பயப்படத் தேவையில்லை.
டக் டக் (திடீரென்று சத்தம் நின்று போதல்)
இந்த மாதிரி காலடி சத்தம் திடீர்னு நின்னு போனா, இதை உன்னிப்பா கவனிக்கணும். ஒண்ணு அவங்க யாரோடவாவது பேசுவதற்கு நின்றிருக்கணும் அல்லது திரும்பப் போக நினைப்பவரா இருக்கணும். அதனால் சில வினாடிகள் செலவானாலும் பரவாயில்லைன்னு இவங்களை கவனிச்சிட்டு அடுத்த வேலையை பாக்கணும்.
சர்க் சர்க் (காலோட பேண்ட் உராய்கிற சத்தம்)
இது கண்டிப்பா நம்ம நண்பன்தான். காபி சாப்பிட போகலாமான்னு கூப்பிட என் அறைக்கு வர்றான். தொளதொளன்னு பேண்ட் போட்டா இப்படித்தான் உராய்கிற சத்தம் வரும்.
டொக் டொக்
ஹிஹி. இது காலடி சத்தமில்லை. என் அறைக்கதவு தட்டப்படும் சத்தம்தான். இதுக்கு கண்டிப்பா பயந்துதான் ஆகணும். எல்லாத்தையும் மூடிட்டு - ஒரு ராகத்தோட ‘யெஏஏஏஸ்' அப்படின்னு ஒரு குரல் கொடுத்துட்டு, சிரிப்பதற்கு தயாராக உக்காந்திருக்க வேண்டியதுதான்.
*****
இந்த ஆராய்ச்சி உங்களுக்கும் பயன்படும்னு நினைக்கறேன். இல்லே இதே மாதிரி நீங்க வேறே ஆராய்ச்சி செய்திருந்தாலும் அதை பத்தியும் சொல்லுங்க.
*****
18 comments:
தட தட.... (எல்லாரும் ஓடற சத்தம்)
யாருக்காவது பர்த்டே இருக்கும்... கேக் வெட்டுவாங்க... பந்திக்கு முந்தணும்...
நல்லா ஆராச்சி பண்றீங்கய்யா :)))))
டக் டக் டக் டக்...
பொறாமையா இருக்குங்க சத்யா! எப்படி இப்படியெல்லாம் யோசிக்கறீங்கன்னு!
இதச் சொல்லத்தான் வந்தேன். கெளம்பறேன்..
ட்டக் ட்டக் ட்டக் டடக்..
உக்காந்து யோசிக்கிறாய்ங்கப்பா..
தட தட.... (எல்லாரும் ஓடற சத்தம்)
யாருக்காவது பர்த்டே இருக்கும்... கேக் வெட்டுவாங்க... பந்திக்கு முந்தணும்...
இது சூப்பர் அப்புறம் உங்களுக்கு கேக் கிடைச்சுதா இல்லையா :))
வந்துட்டேன் வந்துட்டேன், இப்போ கேட்டிருக்குமே டக் டக்...
சென்னைக்கு வந்தும் உங்க அயராது உழைப்பு தெரியுது.
என்ன உங்க மனசு அமெரிக்காலே தான் இன்னும் இருக்கு :))
விரிவான விளக்கம், பாவம் அந்த அக்கா இப்படி எல்லாரும்
கடலைபோட்டால் அவங்க வேலையை எப்படி கவனிப்பாங்க.
கொஞ்சம் கடலை போடறவங்களை கொஞ்சமா..:-) கண்டிக்கப்பிடாதா :))
ஆஃபிஸ் ரொம்ப அமைதியா இருக்குமா இல்ல உங்க காது பாம்புக்காதா.. :)) இப்படி உன்னிப்பா கவனிக்கும் போது கண்ணை மூடிக்கிட்டு கவனிப்பீங்களா.. ??
சூப்பரா இருந்தது பதிவு.
வாங்க மகேஷ்ஜி -> ஹாஹா.. சூப்பரா இருக்கு நீங்க சொன்னது.... :-))
வாங்க பரிசல், கேபிள், ரம்யா மற்றும் மு-க அக்கா -> அனைவருக்கும் நன்றி..
ஆஹா... அருமையான ஆராய்ச்சி... இதற்கு உங்களுக்கு ஒரு முனைவர் பட்டமே கொடுக்கலாம்...
Mahesh, July 21, 2009 7:42 AM
தட தட.... (எல்லாரும் ஓடற சத்தம்)
யாருக்காவது பர்த்டே இருக்கும்... கேக் வெட்டுவாங்க... பந்திக்கு முந்தணும்...
//
கிரியேட்டிவ் பின்னூட்டக்காரர் என்பதற்கான மற்றுமொரு நிரூபணம்.!
அசத்திட்டீங்க..
தல போட்டோ இன்னும் வரலையே!
ha ha ha...
Super
ஜீப்பருண்ணா :)
ஆஹா... அருமையான ஆராய்ச்சி...
ஆபீசுக்கு ஆபீஸ் வாசப்படி.
HAAAA....HAAAAAA......SOO GOOD
சூப்பர்.
//சிரிப்பதற்கு தயாராக உக்காந்திருக்க வேண்டியதுதான்//
அருமையா.. :-)
Post a Comment