Tuesday, July 7, 2009

இரவுக் கிறுக்கல்கள்!!!

கொடியில் காய்கிற
சட்டையைவிட அதிகமாய்
பறக்கிறது சுடிதார்..

சிவன் பார்வதி
இருக்கும் காலண்டரில்
பார்வதி சிவனை
தன்பக்கம் இழுத்துக்கொண்டே
பறக்கிறார் காற்றில்..

ங்கொய்யாலே...
இதிலுமாடா
பெண்ணாதிக்கம்?!?!?!


**********


போலீஸ்காரர்கள் தொல்லை
இல்லாத இந்த
நேரத்திலும் ஏன்
இந்த ஒழுங்கு?

சுவரோரம் வரிசையாக
செல்லும் எறும்புகள்..


**********


திருமணமான ஆடவர்களுக்கு
கடவுள் கொடுத்த மாபெரும் பரிசு -- இரவு நேரம்!!

அப்போதானே மனைவிகள்
‘அமைதியாக’ தூங்குறாங்க...


******


மொதல்லே இந்த
ஆளை கால்செண்டர்
வேலை விடச் சொல்லணும்..

இவ்ளோ நேரமா
வீட்டுக்கு வர்றதுக்கு?

-- கணவனுக்குக் காத்திருக்கும் பல்லி...


*******வீட்டின் எல்லாக்
கதவுகளும், ஜன்னல்களும்
சாத்தியிருந்தாலும்
உள்ளேயிருந்து
என்னால் உலகத்தை
பார்க்கமுடிகிறது - இணையம்..


***********


எந்த ப்ளேன்லே வந்தாலும் ஏன் அதை ‘ஜெட்’ லாக்னு (jetlag) சொல்றாங்கன்னு தெரியல. ஞாயமா எனக்கு வந்திருக்கிறது கத்தார் லாக்தான். அப்படிப்பட்ட கத்தார் லாக் (!!)
முடியாமல் இரவில் தன்னந்தனியாக முழித்திருக்கும்போது கிறுக்கியவை!!!

டோண்டு ஐயா பாணியில் சொல்வதானால் - இவ்விடுகை எழுதத் துவங்கியபோது மணி காலை 2.00. முடியும்போது 3.30. 8.00 மணிக்கு பப்ளிஷ் செய்ய போட்டிருக்கிறேன்...

******

21 comments:

எம்.எம்.அப்துல்லா July 8, 2009 at 1:17 AM  

ரைட்டு...

நடத்துங்க..நடத்துங்க..

அறிவிலி July 8, 2009 at 1:50 AM  

யப்பாடி.. ஒரு நாள் முளிச்சு கிடந்ததுக்கே இத்தனயா? தெனம் முளிச்சாக்கா வைரமுத்துக்கெல்லாம் வேலையில்லாம போயிரும் போல இருககே...

♫சோம்பேறி♫ July 8, 2009 at 2:12 AM  

/* Labels: திட்டாதீங்க */

ஓக்கே.. ஓக்கே.. மிஸ்டர் ஸ்மால் பாய். நீங்க ரொம்ப தெகிரியமான ஆணியவாதி..

Mahesh July 8, 2009 at 4:20 AM  

//யப்பாடி.. ஒரு நாள் முளிச்சு கிடந்ததுக்கே இத்தனயா? தெனம் முளிச்சாக்கா வைரமுத்துக்கெல்லாம் வேலையில்லாம போயிரும் போல இருககே...
///

ஆத்தாடி.... கொலசாமி அய்யனாரு ஒங்களுக்கு தூக்கத்தை குடுக்கட்டும்னு வேண்டிக்கிறேன்....

கலையரசன் July 8, 2009 at 6:01 AM  

பாஸூ.. நானும் தூங்காம இருந்தா,
இதுபோல பதிவு எழுத முடியுமா?

அருமையான மற்றும் சுவாரசியமான பதிவு!!

லவ்டேல் மேடி July 8, 2009 at 12:30 PM  

// கொடியில் காய்கிற
சட்டையைவிட அதிகமாய்
பறக்கிறது சுடிதார்.. //ஒரு வேல லேடீஸ் ஹாஸ்டலா இருக்குமோ........???
// சிவன் பார்வதி
இருக்கும் காலண்டரில்
பார்வதி சிவனை
தன்பக்கம் இழுத்துக்கொண்டே
பறக்கிறார் காற்றில்.. //பம்மல் - K - சம்பந்தம் பட போஸ்ட்டரா இருக்கும்.....???
// ங்கொய்யாலே...
இதிலுமாடா
பெண்ணாதிக்கம்?!?!?! //


இது சிவனோட டையலாக்கா......???
//
போலீஸ்காரர்கள் தொல்லை
இல்லாத இந்த
நேரத்திலும் ஏன்
இந்த ஒழுங்கு?

சுவரோரம் வரிசையாக
செல்லும் எறும்புகள்.. ///அவிகளுக்கும் பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை தராங்களாம்....!!!
// திருமணமான ஆடவர்களுக்கு
கடவுள் கொடுத்த மாபெரும் பரிசு -- இரவு நேரம்!!

அப்போதானே மனைவிகள்
‘அமைதியாக’ தூங்குறாங்க... ///
ஆவ்வ்வ்வ்....!! நோ கமெண்ட்ஸ்......

// வீட்டின் எல்லாக்
கதவுகளும், ஜன்னல்களும்
சாத்தியிருந்தாலும்
உள்ளேயிருந்து
என்னால் உலகத்தை
பார்க்கமுடிகிறது - இணையம்.. //
முடியல.........
ஊருக்கு கெலம்பும்போது நல்லாத்தான இருந்தீக.........

pappu July 8, 2009 at 12:40 PM  

ராத்திரி நல்லா தூங்குங்க அண்ணே! ராத்திரி தூங்கலைனா இப்படித்தான் புலம்ப ஆரம்பிச்சிடுவீங்க!

RAMYA July 8, 2009 at 1:50 PM  

தூக்கம் முளிச்சாலே இப்படித்தானோ?

அதுவும் சென்னைக்கு வந்தவுடனேவா :))

சரி சரி நடக்கட்டும் நடகட்டும் :)

டயலாக் எல்லாம் நல்லா இருக்கு!

RAMYA July 8, 2009 at 1:50 PM  
This comment has been removed by the author.
Rajkumar July 8, 2009 at 3:14 PM  

1. *****
2. ******
3. ***
4. *
5. ****
6. *

ஒரு காசு July 8, 2009 at 9:52 PM  

சரியான தலைப்பு தான்.

ம்ம்ம்... நடக்கட்டும், நடக்கட்டும்.

வெட்டிப்பயல் July 8, 2009 at 10:19 PM  

ஊருக்கு போயிம் ஆரம்பிச்சாச்சா?

இந்தியாக்கு போனா தைரியம் தானா வந்துடுமா?

மங்களூர் சிவா July 9, 2009 at 1:30 AM  

/
லவ்டேல் மேடி said...

// கொடியில் காய்கிற
சட்டையைவிட அதிகமாய்
பறக்கிறது சுடிதார்.. //ஒரு வேல லேடீஸ் ஹாஸ்டலா இருக்குமோ........???
/

:)))))))))
ROTFL

ரமேஷ் வைத்யா July 11, 2009 at 6:30 AM  

நடத்துங்க கேப்டன் நடத்துங்க... (கவிதையிலும் ஜோக்கா? யாரையாவது திட்டவேண்டியிருந்தாலும் ஜோக்காத்தான் திட்டுவீங்களா?

பாசகி July 11, 2009 at 8:39 AM  

//கொடியில் காய்கிற
சட்டையைவிட அதிகமாய்
பறக்கிறது சுடிதார்..//

சட்டையவிட சுடிதார் நீளமா(பொதுவா சொல்றேன்:) ) இருக்கறதால அப்படி பறக்குது...

கிறுக்கல்கள் நல்லாருக்குங்க :)

ஆதிமூலகிருஷ்ணன் July 14, 2009 at 5:04 AM  

அறிவிலி, July 8, 2009 11:20 AM
யப்பாடி.. ஒரு நாள் முளிச்சு கிடந்ததுக்கே இத்தனயா? தெனம் முளிச்சாக்கா வைரமுத்துக்கெல்லாம் வேலையில்லாம போயிரும் போல இருககே..//

ரிப்பீட்டு.!

கொலவெறிக் கவுஜகள்.!

Rajkumar July 15, 2009 at 1:01 PM  

BOSS.....HOPE YOU ARE HAVING FUN IN HOME TOWN...TRY TO SPEND SOME TIME FOR US...WE ALSO STARTED TO MISS YOU MISTER

ஆப்பு July 18, 2009 at 2:12 AM  

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP