Friday, July 3, 2009

மூன்று வருடங்களுக்குப் பிறகு... சென்னை...


"எங்கே போனாலும் வீட்லேந்து சுடு செய்து ஆறிய தண்ணியை எடுத்துப் போங்க. வெளியில் எங்கேயும் தண்ணி வாங்கிக் குடிக்காதீங்க. வெளியே எங்கேயும் சாப்பிடாதீங்க. அதிகமா சாப்பிட்டு வெயிட் போட்டுடாதீங்க".



"அவ்வ்.. டாக்டர், நான் பொறந்து 30 வருஷம் வளர்ந்த ஊருக்குப் போறதுக்கு இவ்ளோ பயமுறுத்தறீங்களே. விட்டா சாப்பிடவே சாப்பிடாதேன்னு சொல்வீங்க போலிருக்கே?"



"இப்போ ஊரெல்லாம் ஜுர பயமாயிருக்கு. அங்கே கொசுத்தொல்லை வேறே. அதனால்தான் இவ்வளவு எச்சரிக்கையா இருங்கன்னு சொல்ல வேண்டியிருக்கு."



"தண்ணியெல்லாம் கொண்டு போய் குடிச்சேன்னா.. மக்கள் ஓட்ட ஆரம்பிச்சிடுவாங்களே?"



"யார் ஓட்டினாலும் பரவாயில்லை. நீங்க கண்டுக்காதீங்க. எவ்ளோ நாளுக்கு, எந்த ஊருக்குப் போறீங்க?"



"அஞ்சு வாரத்துக்கு. சென்னைக்கு. முதல்லே மெட்றாஸ்னு சொல்வாங்க. எதிர்காலத்துலே என்ன சொல்வாங்கன்னு தெரியாது".



"என்னிக்கு கிளம்புறீங்க?"



"இங்கேந்து சனிக்கிழமை இரவு கிளம்பி, இந்திய நேரப்படி திங்கள் காலையில் 4 மணிக்கு சென்னையில் இறங்கறோம்".



"எவ்ளோ நாள் கழிச்சி இந்தியா போறீங்க?"



"ரெண்டு வருஷம் பதினோரு மாசம் ஆயிடுச்சு கடைசியா போயி".



"அதிகமா ஊர் சுத்தாதீங்க. வெயில் ரொம்ப ஜாஸ்தியாயிருக்கும். நிறைய தண்ணி குடிங்க".



"டாக்டர், மறுபடி முதல்லேந்து ஆரம்பிச்சிடாதீங்க. நான் கிளம்பறேன்".



"ஊர்லே எல்லாம் ரொம்ப ஆவலா எதிர்பாப்பாங்களே?"



"இல்லையா பின்னே. இப்ப இணையத்துலே வேறே நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. அவங்களையும் நான் பாக்கணும். I am excited.".



"தொலைபேசி எண் எல்லாருக்கும் கொடுத்துட்டீங்களே ஏற்கனவே?"



"ஆமா. 96001 - 97410 இதை எல்லாருக்கும் கொடுத்துட்டேன். திங்கள் காலையில் 6 மணியிலேந்து மக்கள் இதில் தொலைபேசலாம்னும் சொல்லிட்டேன். என்ன, யாரும் தொலைபேசி, இந்த படத்துலேந்து இந்த பாட்டு போடுங்கன்னு சொல்லக்கூடாது, அவ்ளோதான்".



"சரி. நல்லபடியா போயிட்டு வாங்க. இந்த ஒரே ஒரு ஊசி மட்டும் போட்டுக்கிடுங்க. இதுவும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான்".



"ஆஆஆஆஆ..."



*****

33 comments:

Unknown July 3, 2009 at 8:00 AM  

me the first............!

Unknown July 3, 2009 at 8:02 AM  

appaaaaaaa...............since morning i am waiting for this post...let me read and come back

Unknown July 3, 2009 at 8:07 AM  

welcome back to home......have some good rest...

sure you are going to have great time in india....we will be waiting for all those interesting posts...

Unknown July 3, 2009 at 8:14 AM  

i request you to write..about the changes happened in India in these three years...

also some thing about where India is lagging compare to US....

of course with your humor touch

அறிவிலி July 3, 2009 at 8:18 AM  

அறிவிலி எப்போ கெளம்புவான், அப்பறமா வரலாம்னு வந்தீங்களோ?

எஞ்சாய்....

இராகவன் நைஜிரியா July 3, 2009 at 8:30 AM  

வாழ்த்துகள் ச்சின்னப் பையன். விடுமுறை இனிதாக இருக்க வாழ்த்துகள்.

சின்னப் பையன் July 3, 2009 at 8:36 AM  

வாங்க ராஜ்குமார் -> அவ்வ்வ்.... பாசக்கார பயபுள்ளயா இருக்கீங்களே.... தொலைபேசுங்க... பேசுவோம்.... நன்றி...

வாங்க அறிவிலி -> :-)))) நன்றி..

வாங்க இராகவன் அண்ணே -> நீங்களும் ஊர்லே இருக்கீங்கன்னு படிச்சேன்... சந்திப்போம்ணே...

உண்மைத்தமிழன் July 3, 2009 at 9:46 AM  

வாய்யா வா..

ஏர்போர்ட்ல லேசா தும்மல், இருமல்ன்னு எதையும் செஞ்சிராத..

பன்றிக் காய்ச்சல்ன்னு அப்படியே தூக்கிட்டுப் போயிருவாங்க..

மீதியை போன்ல சொல்றேன்..!

Kumky July 3, 2009 at 9:50 AM  

வெல்கம் டூ டமில்நாட் மிஸ்ட்டர் சின்னபய்யன்.

Unknown July 3, 2009 at 9:57 AM  

வாங்க மச்சி......!! உங்குளுக்காகவே.... நெறையா வைரஸ்ஸ வளத்திகிட்டு வருகிறோம்...!!! நீங்க ஏர்போர்ட் வந்ததும் ... உங்க மேல தூவி வரவேர்க்கப் போகிறோம்...!!


" டேய் ஆல் அல்லகை பாய்ஸ் ...... !!!
கெலம்புங்கடா .... நமக்கு ஒரு அடிம சிக்கீட்டாருடா....."""

Raghav July 3, 2009 at 9:58 AM  

வாங்கப்பு... அப்புடியே பெண்களூர் விசிட்டும் வர்றது :)

சிவக்குமரன் July 3, 2009 at 10:00 AM  

வாங்க வாங்க,பழகலாம்!!

Sanjai Gandhi July 3, 2009 at 10:03 AM  

//நான் பொறந்து 30 வருஷம் வளர்ந்த ஊருக்குப் போறதுக்கு//

அதுக்கு முன்னாடி 20 வருஷம் எங்க இருந்திங்க? :)

சின்னப் பையன் July 3, 2009 at 10:03 AM  

வாங்க சிவா, கும்க்கி அண்ணே -> நன்றி...

வாங்க உ.த அண்ணே -> அதாண்ணே பயமாயிருக்கு...

வாங்க லவ்டேல் மேடி -> அவ்வ்வ்...

வாங்க ராகவ் அண்ணே -> வருவேன்னு நினைக்கிறேன்... முன்னாடியே சொல்றேண்ணே... நன்றி...

வாங்க இரா.சிவக்குமரன் -> நன்றி..

ஒரு காசு July 3, 2009 at 10:32 AM  

தங்களின் பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi July 3, 2009 at 10:53 AM  

என்னது பாட்டு கேட்டா போடமாட்டீங்களா.. தென்னிந்தியாவே அந்த வேலையாவே தானே இருக்காங்க.. ஒன்னு அவங்க என்னப்பாட்டு வேணும்ன்னு கேக்கறவங்களா இருக்காங்க ..இல்லாட்டி பாட்டு போடுங்கன்னு கேக்கறவங்களா இருக்காங்க.. ரெண்டே வகைதானே..:))

Prabhu July 3, 2009 at 11:04 AM  

நீங்க இங்க வந்துட்டா பதிவு வராதா?
அய்யோ...

இருந்தாலும் இங்க வந்தாலும் ஒரு எண்டர்டெயின்மெண்ட்தான்!

Prabhu July 3, 2009 at 11:04 AM  

நீங்க இங்க வந்துட்டா பதிவு வராதா?
அய்யோ...

இருந்தாலும் இங்க வந்தாலும் ஒரு எண்டர்டெயின்மெண்ட்தான்!

Anonymous,  July 3, 2009 at 11:06 AM  

பக்கத்து வீட்டில் கேட்ட உரையாடல்.

“ஏங்க பாப்பா சாப்பிடமாட்டேங்கிறா. பூச்சாண்டியக் கூப்பிடுங்க”

“அவரு திங்கள் கிழமைதான் வருகிறாராம்”

வெல்கம் ”பேக்கு”

T.V.ராதாகிருஷ்ணன் July 3, 2009 at 11:20 AM  

இது உங்களுக்கே நல்லாயிருக்கா....நான் இப்ப இங்க இருக்கறப்போ..நீங்க எப்படி அங்கே போகலாம்?

ராஜ நடராஜன் July 3, 2009 at 11:30 AM  

எஞ்சாய் மெட்சென்னை.

ஜோசப் பால்ராஜ் July 3, 2009 at 12:54 PM  

ஊருக்கு போறியளா,
நல்லபடியா போயிட்டு வாங்க.
சூதனமா இருந்துக்கங்கப்பு.
இல்லன்ன சின்னப் பையன் தானேன்னு ஏமாத்திருவானுங்க.

Thamira July 3, 2009 at 1:20 PM  

வாங்க குரு.! உடன் தங்கமணி பிள்ளைகள் வர்றாங்களா?

நசரேயன் July 3, 2009 at 1:46 PM  

நல்ல படியா போயிட்டு வாங்க

cheena (சீனா) July 3, 2009 at 9:06 PM  

வருக வருக சின்னப்பையன் - பூச்சாண்டி

சென்னைப் பயணம் இனிதே அமைய நல்வாழ்த்துகள்

அலைபேசியில் பேசலாம்

RAMYA July 3, 2009 at 11:44 PM  

அண்ணா வருக வருக!!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்க இடுகைக்கு வந்திருக்கின்றேன்.

இந்த சகோதரியை மன்னிக்கவும். அலுவலக ஆணி :))

இந்தியா உங்களை பச்சை கம்பளம் விரித்து வரவேற்கின்றது.

வருக உங்கள் வரவு நல்வரவு ஆகுக.

உங்கள் அலைபேசி எண்ணை குறித்துக் கொண்டேன்.

மற்றவை அலைபேசியில்.

ராம்.CM July 4, 2009 at 1:52 AM  

வருக..வருக..இந்தியாவுக்கும், நமது தமிழ்நாட்டிற்கும் தங்களை தங்களை வரவேற்கிறேன்.சென்னை இரயில்நிலையம் வந்தால் சந்திக்கலாம்.

ஊர்சுற்றி July 5, 2009 at 12:00 PM  

சின்னப்பையனின் வருகைக்கு வாழ்த்துக்கள்.

ஆளவந்தான் July 6, 2009 at 5:02 PM  

பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் :)

நான் ரொம்ப லேட் போல.. இப்போ ஊர்ல இருக்கீகளா..

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP