நொறுக்ஸ் - சென்னையில் முதல் வாரம்!!!
ஊருக்கு வந்த இரண்டாம் நாள் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தவுடன் சஹானா கேட்ட முதல் கேள்வி -- கடைசியில் இருக்கு.
*****
சென்னை நகரம் ஒரு பெரிய்ய்ய வீடியோ கேம்!!!
பைக் மட்டுமில்லே, கார் ஓட்டுறவங்களும் வீடியோ கேம்லே வண்டி ஓட்டறா மாதிரி வளைச்சி வளைச்சி வேகமா ஓட்றாங்க. சைதாப்பேட்டையிலிருந்து ராஜ் பவன் போற சாலையில் ஐந்தாறு லேன்கள் இருக்குன்னு நினைக்குறேன். ஒரு குட்டி கார் சாலையில் வலது பக்கத்திலேந்து சர்ர்ருன்னு இடது பக்கம் வரைக்கும் போய் மறுபடி இந்த பக்கம் வந்து... எங்க கண்லேந்து மறைஞ்சியே போயிடுச்சு. பல பேரு அந்த மாதிரிதான் ஓட்றாங்க.
நீங்க எங்கேயாவது பராக்கு பாத்துக்கிட்டே போவீங்க. எவனாவது வந்து இடிச்சிடுவான். அதனால் இருக்கற ஒரு மாசத்துக்கு பைக்கே எடுக்காதீங்கன்னு சொல்லிட்டாங்க தங்ஸ்.
*****
அப்போ நாந்தான் லூஸா!!!
இன்னொரு சமயம் போயிட்டிருக்கும்போது, பக்கத்துலேந்து அடிக்கடி ஒரு அக்கா எங்க ஆட்டோக்குள்ளே குதிக்க முயற்சி செய்துக்கிட்டிருந்தாங்க. என்னன்னு பாத்தா, அவங்க ஒரு பைக் பின்னாடி உக்காந்து போறாங்க. அந்த பைக் எங்க ஆட்டோவோட தோளோடு தோள் உரசிக்கிட்டு வருது. இந்த அக்காவும் எங்க ஆட்டோக்குள்ளே எட்டிப் பாத்து சினேகமா சிரிக்கிறாங்க, மணி கேக்குறாங்க, பாப்பா அழகா இருக்குன்னு சொல்றாங்க.
அவங்க பாதை மாறிப் போறதுக்கு முன்னாடி சொன்ன அந்த கடைசி வார்த்தைகள் மூலமாதான் நான் ரொம்ப நேரம் தனியா பேசிட்டிருந்தேன்னு புரிஞ்சுது...
அவங்க சொன்னது - “சரி நேர்லே பேசுவோம். வெச்சிரட்டா...”
*****
போன வாரம் ஒரு மினி பதிவர் நண்பர்கள் சந்திப்பு நடத்தி முடிச்ச கையோட இந்த வாரயிறுதியில் கோவை நண்பர்களை சந்திக்கப் போறேன்.
அடுத்த வாரயிறுதி (25,26) சொந்த வேலையா வெளியூர் போறதால், சென்னை நண்பர்கள் ஆகஸ்ட் 1,2 தேதிகள்லே ஒரு சந்திப்பு ஏற்பாடு பண்ணீங்கன்னா எல்லாரையும் பாக்க வசதியாயிருக்கும்.
*****
அனானிகளுக்கு ஆபீஸ்லே ஆணி அதிகமாகணும் ஆண்டவா. அப்பத்தான் அவங்க ஆட்டம் அடங்கும். அனைவருக்கும் அடிப்பதற்கு அருமையான அடுகைகள் அடிக்கும்
(ஹிஹி... எல்லாம் அ, ஆ-லேயே ஆரம்பிக்கணும்னு நினைச்சேன். முடியல. அதனால் வேணும்னே சில ஸ்பெல்லிங் மிஷ்டேக் பண்ணிட்டேன்... டென்சனாகாதீங்க!!!!).
*****
இந்த வண்டியில் ஏன் சீட் பெல்ட் இல்லே? - இதுதான் அந்த கேள்வி... அவ்வ்வ்வ்... முடியல....
*****
24 comments:
//இந்த வண்டியில் ஏன் சீட் பெல்ட் இல்லே?//
சாய்ச்சுப்புட்டியே சஹானா.. :)
ச்சென்னை எப்புடி இருக்கு தலைவா?
முடிஞ்சா பெங்களூர்லயும் கொஞ்சம் கால் வைங்க..
//
சென்னை நகரம் ஒரு பெரிய்ய்ய வீடியோ கேம்!!!//
ஹைய்யோ ஹைய்யோ:-)))))))
சுவாரசிய ப்ளாக் அவார்ட் குடுத்திருக்கேன் வாங்கி வச்சிக்குங்க..:)
அடுகை ! :)))
வீடியோ கேம் :))))
சூப்பர் பாஸ்.. சென்னை பத்தின குறிப்பு சூப்பர். வழக்கமா நீண்ட நாள் கழிச்சு வரவங்க இந்தியாவை ரெண்டு குறையாவது சொல்லிட்டி அப்புறம்தான் மத்ததை எழுதுவாங்க..நீங்க சென்னை ஒரு ஹைடெக் சிட்டின்னு சொல்லாம சொல்லிட்டீங்க :)
ஆனால் ஹைலைட் இதுதான்
//அவங்க சொன்னது - “சரி நேர்லே பேசுவோம். வெச்சிரட்டா...”//
:)))))))))))))))))))))))))))))))
சஹானா இதுதான் முதல் முறையா.. இல்ல விவரம் தெரிஞ்சதும் முதல் ட்ரிப்பா? எப்படீன்னாலும் போக்குவரத்து அமைச்சர்ட்ட சொல்லி ஆட்டோவிலயும் ச்சீட் பெல்ட் வச்சிருவோம்.. போராடுவோம்..
\\சென்னை நகரம் ஒரு பெரிய்ய்ய வீடியோ கேம்!!!//.
இல்ல இல்ல இது நிஜ விளையாட்டு. கொஞ்சம் அசந்தாலும் ஆட்டம் குளோஸ்
//சரி நேர்லே பேசுவோம். வெச்சிரட்டா//
:-))))))
/இந்த வண்டியில் ஏன் சீட் பெல்ட் இல்லே? - இதுதான் அந்த கேள்வி... அவ்வ்வ்வ்... முடியல....//
:-)))))))))))
// இந்த வண்டியில் ஏன் சீட் பெல்ட் இல்லே? - இதுதான் அந்த கேள்வி... அவ்வ்வ்வ்... முடியல.... //
சீட்டு பெல்ட்டு என்னோ.....!!!! சைதாபேட்டையில ஏறி.... தாம்பரம் போரதுக்குள்ள ... ஆட்டோ.... ஆட்டோன்னு ஆட்டி....... நம்ப நாடி .. நரம்பு பெல்ட்டு எல்லாம் ஒரு ஆடம் ஆடிபோயிருமுங்.....!!!
// சர்ர்ருன்னு இடது பக்கம் வரைக்கும் போய் மறுபடி இந்த பக்கம் வந்து... எங்க கண்லேந்து மறைஞ்சியே போயிடுச்சு. //
அப்போ அந்த ரோடு உங்குளுக்கு நெம்ப புதுசுங்கோ தலைவரே.....!!
அது ஜிக்.. ஜாக்... பைவ் லேன் வே .... !! அதுல அப்புடித்தேன் போவனுமுங்....!!!
// அவங்க பாதை மாறிப் போறதுக்கு முன்னாடி சொன்ன அந்த கடைசி வார்த்தைகள் மூலமாதான் நான் ரொம்ப நேரம் தனியா பேசிட்டிருந்தேன்னு புரிஞ்சுது...
அவங்க சொன்னது - “சரி நேர்லே பேசுவோம். வெச்சிரட்டா...” //
அட பாவமே......!!
அதான் ச்சத்யா ச்சிங்காரச் ச்சென்னை !!!
:-))))))))
;-))))
சென்னை இப்படித் தான் தல.. பல விசித்திரமான போக்குவரத்து விதிகளைக் கொண்டது.. ;-)
வாங்க ராகவ், துளசி மேடம் -> நன்றி..
வாங்க மு-க அக்கா -> உங்க அவார்டுக்கு மிக்க மிக்க நன்றிங்க....
வாங்க புபட்டியன் -> 2 வயசுலே வெளியே போனவங்க 5 வயசுலேதாங்க ரீ-எண்ட்ரி கொடுக்கறாங்க சென்னையில்... அதான் அப்படி... :-))
வாங்க நாஞ்சில் நாதம் -> ஆமா ஆமா..
வாங்க கிரி, பிரேம்ஜி, ராகி ஐயா, லவ்டேல் மேடி, மகேஷ்ஜி, பாஸ்கர் -> நன்றி.
வாங்க தமிழ் பிரியன் -> :-))
ஹை கோவை வர்றீங்களா வாங்க வாங்க. கோவை உங்களை வரவேற்கிறது :)
//அவங்க சொன்னது - “சரி நேர்லே பேசுவோம். வெச்சிரட்டா...”//
:))))))))))))))
//அப்போ நாந்தான் லூஸா!!!//
கைப்புண்ணுக்கு கண்ணாடி அதுக்கு சத்யா?
//“சரி நேர்லே பேசுவோம். வெச்சிரட்டா...”//
அதான் தல கோவையில!
//இந்த வண்டியில் ஏன் சீட் பெல்ட் இல்லே?//
:))
கலக்கல்!
எனக்கு கார்ல போறதவிட ஆட்டோதான் ரொம்ப பிடிச்சிருக்குப்பா என்றான் என் பையன். முக்கியமாக அவர்கள் வளைத்து வளைத்து சிறு சிறு சந்துகளில் புகுந்து புறப்படுவதை அவன் மிகவும் சுவாரஸியமாக ரசித்தான்.
அடடா...நீங்க ஊர்லயா இருக்கீங்க??? நீங்க வர்றீங்கன்னு சொன்னத நானும் மறந்துட்டேன்.இங்கயும் ஒரு பயபுள்ள சொல்லலையே...
அனானிகளுக்கு ஆபீஸ்லே ஆணி அதிகமாகணும் ஆண்டவா. அப்பத்தான் அவங்க ஆட்டம் அடங்கும். அனைவருக்கும் அடிப்பதற்கு அருமையான அடுகைகள் அடிக்கும் //
ரசித்துச்சிரித்தேன்.!
/*அனானிகளுக்கு ஆபீஸ்லே ஆணி அதிகமாகணும் ஆண்டவா. அப்பத்தான் அவங்க ஆட்டம் அடங்கும். அனைவருக்கும் அடிப்பதற்கு அருமையான அடுகைகள் அடிக்கும் */
ஹா ஹா ஹா.. :)
சென்னை வீடியோ கேம்-ஆ.. ????
Post a Comment