Thursday, July 23, 2009

சிறுவர் அணித் தலைவர்...!!!

இரண்டு நாட்களுக்கு முன்னாடி, தமிழக துணை முதல்வர் ஆலந்தூர் வழியா காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வந்தாராம். அதற்கு கிண்டியிலிருந்தே ஏகப்பட்ட வரவேற்பு பலகைகள், ஃப்ளெக்ஸ் போர்டுகள், சாலையின் நடுவில் தோரணங்கள்னு ஒரே அமர்க்களம்தான்.


வேளச்சேரியிலிருந்து கிண்டி வருவதற்கே இவ்வளவு வரவேற்பு, தடபுடல் அப்படின்னா, எதிர்காலத்துலே இன்னும் என்னல்லாம் நடக்கும்னு யோசிச்சேன். அதுவும் கட்சியின் சிறுவர் அணித் தலைவர் பள்ளியில் படிக்கும்போது, அவரது தொண்டர்கள் அவருக்கு எப்படி வரவேற்பு கொடுப்பாங்கன்னு யோசிச்சதுலே வந்ததுதான் இந்த இடுகை.


எனக்குத் தெரிஞ்சது கொஞ்சம்தான். உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லிட்டுப் போங்க.

*****

ஃபீஸ் கட்ட வரும் ஃபீனிக்ஸ் பறவையே... வருக வருக..

டெர்ம் ஃபீஸ் கட்ட வரும் டெர்மினெட்டரே... வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்...

மந்த்லி டெஸ்ட் எழுத வரும் மகானே... வாங்க வாங்க

அர்ரியர்ஸ் எக்ஸாம் எழுத வரும் அறிஞரே.. நீவிர் நீடூழி வாழ்க...

சயன்ஸ் ப்ராக்டிகல்ஸுக்கு வருகை தரும் சமாதானப் புறாவே... வாழ்த்தி வணங்குகிறேன்...

கணக்கு பரிட்சையில் பாஸ் செய்த கலியுக வள்ளலே... உங்கள் தொண்டர்கள்...

எட்டாம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்ற எட்டாவது அதிசயமே... பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...

தண்ணி குடிக்க வரும் தன்னிகரல்லா தலைவரே... சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.

கடந்த கால வரலாறு படிக்கும் வருங்கால முதல்வரே... வாழ்க வாழ்க...

*****

22 comments:

Anonymous,  July 23, 2009 at 11:01 PM  

//கடந்த கால வரலாறு படிக்கும் வருங்கால முதல்வரே..//

ஆகா இப்படி இல்ல வாழ்த்தணும். :)

cheena (சீனா) July 23, 2009 at 11:32 PM  

நகைச்சுவையின் உச்சம்

நாமக்கல் சிபி July 24, 2009 at 12:08 AM  

//கடந்த கால வரலாறு படிக்கும் வருங்கால முதல்வரே... வாழ்க வாழ்க...//

கடந்த கால வரலாறு படிக்கும் வருங்கால வரலாறே... வாழ்க வாழ்க...

Mahesh July 24, 2009 at 12:34 AM  

பீஸ் பீஸாய்க் கிழிக்கும் பெருந்தகையே.... நீவிர் வாழ்க !! நும் நகைச்சுவை வளர்க !!

மங்களூர் சிவா July 24, 2009 at 1:09 AM  

ஒன்னுக்கு அடிக்க வரும் ஒப்பற்ற தலைவனே வருக வருக

இது பாத்ரூம் வாசல்ல
:))))

Raghav July 24, 2009 at 1:50 AM  

இலவச மிட்டாய் வழங்க வரும் இளஞ்சிங்கமே வருக !!

SUBBU July 24, 2009 at 3:01 AM  

பங்களாவில் வசிக்காத இரண்டாவது முதல்வரே வருக வருக

மணிகண்டன் July 24, 2009 at 4:48 AM  

கலக்கறீங்க பாஸ். சிவாவோட பின்னூட்டமும் சூப்பர்.

அஹோரி July 24, 2009 at 5:32 AM  

எதிர்காலத்தை கணிக்கும் உங்கள் திறமை அபாரம்.

Anonymous,  July 24, 2009 at 9:46 AM  

ச்சின்னப் பையங்கிறதால, சிறுவர் அணித்தலைவரா?

pappu July 24, 2009 at 12:12 PM  

இதுக்கே இப்படின்னா இங்க மதுரையில அவர் வீட்டுல இருக்குறவருக்கே ஊரு முழுக்க ஒட்டுறத என்னன்னு சொல்வீங்க?

ஆதிமூலகிருஷ்ணன் July 25, 2009 at 1:21 PM  

இருந்தாலும் கிண்டியிலிருந்து வெளச்சேரிக்கு அலப்பரை கொஞ்சம் ஓவர்தான் இல்ல..

அறிவிலி July 26, 2009 at 5:24 AM  

பல்லு புடுங்க வந்த பாலகனே பல்லாண்டு வாழ்க

சைட் அடிக்க வந்த சிங்கமே, நீவீர் சீரும் சிறப்புமாக வாழ்வீர்.

பிரேம்ஜி July 26, 2009 at 12:04 PM  

//டெர்ம் ஃபீஸ் கட்ட வரும் டெர்மினெட்டரே... வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்//

ROFL. :-))))))))))))))))))))

ஸ்வர்ணரேக்கா July 26, 2009 at 12:36 PM  

//எட்டாம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்ற எட்டாவது அதிசயமே.//

நல்ல கற்பனை... இல்ல இல்ல தீர்க்கதரிசனம்.... நக்கல் நையாண்டியுடன் கூடிய உங்கள் தொலைநோக்கு பார்வை நச்...

வண்ணத்துபூச்சியார் July 28, 2009 at 3:52 AM  

தினமும் இந்த கண்ராவிகளை பார்த்து கொண்டே தான் போவேன்.

இனிமே பார்த்தால் சிரிப்பு தான் வரும்.

கலக்கல்.

" உழவன் " " Uzhavan " July 29, 2009 at 7:35 AM  

//அர்ரியர்ஸ் எக்ஸாம் எழுத வரும் அறிஞரே//
 
பள்ளிக்கூடத்தில கூட அரியர்ஸ் எக்ஸாம் இருக்கா :-))
எல்லாமே சூப்பர் :-))))

உமாஷக்தி July 30, 2009 at 6:19 AM  

//கடந்த கால வரலாறு படிக்கும் வருங்கால முதல்வரே..// அருமையான பதிவு.

Rajkumar August 3, 2009 at 2:57 PM  

when will be the next post?....see per day at least there are 75 visits...you can not disappoint us know....(chummmmmaaaaaaaaaa....angry vantha maathri act kuduthane)

Rajkumar August 5, 2009 at 10:15 AM  

today 5th aug 2009, wednesday

Rajkumar August 6, 2009 at 6:27 AM  

today 6th aug 2009..Thursday...no new posts...

Rajkumar August 8, 2009 at 12:43 AM  

yesterday was 7th Aug Friday (holiday....jollyyyyy).....tried to open you blog form my personal laptop....google said "unable to open this site from this computer due to some traffic problem"....(my wife felt much happy to see that message)

Today 8th Aug Saturday..posting this comment from office laptop

Hope you are busy with last min pack ups....

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP