Monday, August 10, 2009

Lemon Tree திரைப்படம் - தமிழ் நடிகர்களின் பார்வையில்!!!

சென்ற மாதம் மொட்டை மாடியில் Lemon Tree உலகத் திரைப்படம் திரையிடப்பட்டது. சுமார் 40 பேர் வந்திருப்பார்கள். படம் ஓடிக்கொண்டிருந்தபோதே சில பேர் வருவதும், போவதுமாக இருந்ததால் யார் யார் வந்தார்கள் என்று அப்போது தெரியவில்லை. ஆனால், இருட்டில் சில தமிழ் நடிகர்களும் அங்கு வந்து படத்தைப் பார்த்திருக்கின்றனர். அது எப்படி எனக்குத் தெரியும்னு பாக்குறீங்களா? இந்த இடுகையை படிங்க.

படத்தைப் பாத்துட்டு வந்த சில நடிகர்கள் பக்கத்துலே இருக்குற ஜுஸ் கடையில் எலுமிச்சை ஜூஸ் குடிச்சிக்கிட்டே, அந்த படத்தை எப்படி உல்டா செய்யலாம்னு பேசிக்குறாங்க. நடிகர்கள் பேரை இங்கே சொல்லவில்லை. ஆனா நீங்க கண்டுபிடிச்சிட மாட்டீங்களா என்ன?!!!

படத்தோட கதை தெரியாதவங்க, எஸ்ரா எழுதிய இந்த விமர்சனத்தை பார்த்துவிடவும்.

*****

”படத்தோட முக்கிய பாத்திரங்கள் மொத்தமே மூணு நாலு பேர்தான். எல்லாத்தையும் நானே பண்ணிடுவேன்”.

”அது சரி. உங்க லெவலே வேறே. ஆமா.. எனக்கு ஒரு சந்தேகம். படத்துலே ரெண்டு பேர் முத்தம் கொடுக்கிற மாதிரி ஒரு காட்சி வருதே. அதெப்படி எடுப்பீங்க? உங்களை நீங்களே முத்தம் கொடுத்துப்பீங்களா?”

”இதோ பாருங்க. நான் நடிக்க ஆரம்பிச்சிட்டா”..

”உங்க நடிப்பை நீங்களே பாக்கமாட்டீங்களா?”

”அட.. அது உங்க டயலாக். எனக்கு கோத்து விடாதீங்க. நான் நடிக்க ஆரம்பிச்சிட்டா பாத்திரத்தோட ஒன்றிப்போயிடுவேன். அப்போ இதெல்லாம் பிரச்சினையேயில்லை. உங்களுக்குத்தான் பயங்கர பிரச்சினை.”

”ஏன்?”

”பறக்கறா மாதிரி ஒரு சீனும் இல்லையே படத்துலே. என்ன பண்ணுவீங்க?”

”அட இதென்னங்க கேள்வி. அந்த அமைச்சர் வீட்டுக்கும், எலுமிச்சை தோட்டத்துக்கும் நடுவே வேலி இருக்கில்லே, அதை பறந்து பறந்து தாண்டறா மாதிரி சில சீன்ஸ் போட்டு, சண்டை காட்சியும் வெச்சிட்டா... பூந்து விளையாடிடுவேன்ல..”

”சண்டைன்னதும்தான் ஞாபகம் வருது. அமைச்சரை தீர்த்துக் கட்ட தீவிரவாதிங்க வர்றாங்கன்னு ஒரு சீன் வெக்கணும். எனக்கு ஒரு பெரிய மழைக்கோட்டும், ரெண்டு பெரிய துப்பாக்கியும் ஏற்பாடு பண்ணிக்கறேன். என்ன, ரெண்டு நாள் தூங்காமே இருந்து கண்ணு ரெண்டையும் சிவப்பாக்கிக்கணும். அவ்ளோதான்.”

”அண்ணே.. உங்களுக்கு இன்னொரு பிரச்சினையும் இருக்கு.”

”என்னப்பா?”

”உலகத்துலே எவ்ளோ எலுமிச்சை மரங்கள் இருக்கு... அதுலே எவ்ளோ காய்கள் காய்க்குது. எவ்ளோ எலுமிச்சையை ஊறுகாய்க்குப் பயன்படுத்தறாங்க.. எவ்ளோ எலுமிச்சையை தலைக்குத் தேய்ச்சிக்க பயன்படுத்தறாங்க... அப்புறம் ஜூஸ் போட, லாரிக்கு முன்னாடி மாட்ட எவ்ளோ தேவைப்படுது... அப்படி இப்படின்னு நிறைய புள்ளிவிவரங்களை எடுத்து வெச்சிக்கோங்க... ஒரு பத்து நிமிடம் தொடர்ச்சியா பேசணுமில்லே..”

”யப்பா. நல்லவேளை சொன்னே.. நான் இப்பவே போய் இந்த தகவல்களையெல்லாம் சேகரிக்கிறேன்... வர்ட்டா...”

”இந்த படத்துலே எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் புரியல...”

”ஏண்டா இந்த படத்தை பாக்க வந்தோம்னா?”

”அட அதில்லே... அடுப்பு (கேஸ்) பத்தவைக்க ஏன் லைட்டரை பயன்படுத்தறாங்க... ஒரு தடவை அதை முறைச்சி பாத்தா போதுமே... சும்மா பத்திக்குமில்லே..”

”சரி சரி தலைவா. என்னை அப்படி முறைச்சி பாக்காதீங்க... பயமா இருக்கு. ”

”என்கிட்டே சூப்பர் ஐடியா இருக்கு.”

”என்ன அது?”

”எலுமிச்சை சாம்பார், எலுமிச்சை ரசம், எலுமிச்சை கறி இப்படியெல்லாம் செய்து சாப்பிட்டா, ‘அது'க்கு நல்லது அப்படின்னு ஒரு செய்தியை படத்துலே சொல்லி, படத்தோட பேரு ‘எலுமிச்சை முடிச்சு' அப்படின்னு வெச்சிட்டா தமிழ்லே படம் பிச்சிக்கிட்டு ஓடும்.”

”என்ன ஆனாலும் சரி. இந்த படத்தை அப்படியே சுட்டு தமிழ்லே எடுத்தா நான் நடிக்க மாட்டேன்.”

”ஏம்பா? நடிக்கறதையே விட்டுடப் போறியா?”

”இல்லீங்ணா. நான் தெலுங்கு படங்களை மட்டும்தான் சுடுவேன்னு சத்தியமே செஞ்சிருக்கேன். அதனால் எலுமிச்சை மரமோ, மாங்கா மரமோ முதல்லே அதை தெலுங்குக்கு அனுப்பிட்டு அப்புறம் அதோட தமிழ் பதிப்புலேதான் நான் நடிப்பேன்.”

”விளங்கிடும். இந்த படத்தை நான் எடுத்தேன்னா அதோட டைட்டில் ‘எங்க ஊரு எலுமிச்சைக்காரன்'. மரங்களுக்கு நடுவே ஓடி ஆடி ஒரு காதல், ரெண்டு காமெடி, நாலு பாட்டு - அவ்ளோதான்.. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு.”

*****

இப்படியே இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூஸ் கடைக்காரர் - ”மொத்தம் இருநூறு ரூபா ஆச்சு. யாரு கொடுக்கப் போறீங்க” - அப்படின்னதும், டக்குன்னு எல்லோரும் தங்கள் கைப்பேசியை எடுத்து காதில் வைத்தவாறே - “அப்படியா.. ஓகே ஓகே.. ரெடியாயிருங்க. இப்பவே வர்றேன்..” என்றவாறே எஸ்கேப்பாக - ஜூஸ் கடைக்காரர் @#$$@#%%#%@.

****

20 comments:

Anonymous,  August 10, 2009 at 11:10 PM  

நானும் ஸ்மைலி போட்டுக்கறேன். :)

அறிவிலி August 11, 2009 at 12:07 AM  

பின்னூட்டத்துல நெறய ஃபாலோயர்ஸ் வராங்கப்பா.. ப்ளாகுக்குத்தான் வரமாட்டேங்கறாங்க
:)

முத்துலெட்சுமி/muthuletchumi August 11, 2009 at 12:35 AM  

:) எல்லாரையும் கண்டுபிடிச்சாச்சு..

வால்பையன் August 11, 2009 at 12:52 AM  

கலக்கல் ரிட்டர்ன்!

(கொரியர் வந்தடைந்தது! நன்றி)

வால்பையன் August 11, 2009 at 12:53 AM  

// அறிவிலி said...

பின்னூட்டத்துல நெறய ஃபாலோயர்ஸ் வராங்கப்பா.. ப்ளாகுக்குத்தான் வரமாட்டேங்கறாங்க//

நாம் என்ன கொடுக்கிறோமோ அதான் திரும்ப கிடைக்கும் என்பது ப்ளாக்விதி!

Mahesh August 11, 2009 at 2:10 AM  

சென்னை வெயில் உங்களை ரொம்ப பாதிச்சுருச்சு போல.... எதுக்கும் ஒரு எலுமிச்சம் பழத்தை....

சின்னப் பையன் August 11, 2009 at 6:19 AM  

வாங்க அறிவிலி, வெட்டி, சி.அம்மிணி, கேபிள், மு.க அக்கா -> நன்றி...

வாங்க வால் -> எஞ்சாய் பண்ணுங்க.. :-))

வாங்க சுப்பு, அக்னி பார்வை, நாஞ்சில் நாதம், தாரிணி பிரியா -> நன்றி...

வாங்க மகேஷ்ஜி -> அவ்வ்வ்...

இராகவன் நைஜிரியா August 11, 2009 at 10:57 AM  

ஆஹா... கற்பனை அபாராம்.

சென்னையில் தான் இருக்கீங்களா... ஊருக்கு கிளம்பியாச்சா?

Thamira August 11, 2009 at 12:38 PM  

செட்டில் ஆயாச்சா குரு?

இது நம்ம ஆளு August 12, 2009 at 4:50 AM  

அருமை தொடருங்கள்

கார்ல்ஸ்பெர்க் August 12, 2009 at 5:23 PM  

வெல்கம் பேக் டு ஸ்கொயர் ஒன்..

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP