சென்னையில் 3வது வாரம் - போளி டோண்டு பாக்கமுடியல!!!
சரி சரி. தலைப்பைப் பாத்துட்டு வந்தவங்க எல்லாம் வாங்கப்பா... உங்களுக்கான மேட்டர் இந்த இடுகையில் எங்கேயோ இருக்கு. அப்பத்தானே முழுக்க படிப்பீங்க?
****
உண்மைத்தமிழன் அண்ணாச்சி மற்றும் சில பதிவர்களை மாதிரியே - எங்க வீட்டிலும் ஹாத்வே இணைய இணைப்பு இருந்தது. ஒரு சுபமுஹூர்த்த நன்னாளில் அவர்கள் தொழிலையே விட்டுவிட்டு ஓடிவிட - அடுத்த இணைப்பு கொடுக்க 10-15 நாட்கள் ஆகும்னு மற்றவர்கள் சொல்லிவிட - நான் தினமும் அரை மணி நேரத்துக்கு மட்டுமே கடைக்குப் போய் இணையத்தை மேய வேண்டியதாயிற்று. நெம்ப கஷ்டம்!!!
********
சென்னையில் இருக்கும்போது, ஒரு பதிவர் நண்பர் என்னை கைப்பேசியில் கூப்பிட்டு - எங்கே இருக்கீங்க, பின்னணியில் இவ்ளோ அமைதியா இருக்கே... தூங்கிட்டிருந்தீங்களா? - அப்படி இப்படின்னு கேட்டுட்டே இருந்தாரு. பொய் சொல்லவே பிடிக்காத எனக்கு அப்போ பொய் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயம். அடுத்த பத்தி படிச்சீங்கன்னா, நான் எங்கே இருந்தேன்னு புரியும்.
அலுவலகத்தில் ஒரு பெரிய மீட்டிங். தொலைபேசியிலும் (கான்ஃபரென்ஸில்) நிறைய பேர் இருந்தாங்க. ஒருவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று தொலைபேசியில் - ஓய்வறையில் தண்ணீர் ஃப்ளஷ் (flush) செய்யும் சத்தம் கேட்டது. யாரோ ஒருவர் ஓய்வறையில் இருந்துகொண்டே மீட்டிங்கில் கலந்துகொண்டிருந்தார் போல.
எங்க தலைவர் எங்களிடம் - நல்லவேளை, எல்லாரையும் வீடியோ கான்ஃப்ரன்ஸில் வாங்கன்னு நாம கூப்பிடலே. நாறிப்போயிருக்கும் - அப்படின்னவுடன், சிரித்து சிரித்து சிரித்துக் கொண்டேயிருந்தோம்.
வெ*பூ, இப்ப தெரிஞ்சுதா, அப்ப நான் எங்கே இருந்தேன்னு!!!
*****
திருச்சி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு அறிவிப்பு பலகை வெச்சிருக்காங்க. அந்த பலகையில் - தஞ்சாவூருக்கு இன்னும் இவ்ளோ தூரம் இருக்கு, இப்போ இந்த ஊர்லே இருக்கோம் - இப்படியெல்லாம் விஷயம் இருக்கும்னு நினைச்சீங்கன்னா, எச்சி போட்டு உடனே அதை அழிச்சிடுங்க. அப்படி ஒரு 'தூர வழிகாட்டி' எங்கேயுமே காணலே.
அப்படின்னா அந்த பலகையில் என்ன எழுதியிருக்காங்கன்னு கேக்குறீங்களா - “ நான், நீ என்றால் உதடு ஒட்டாது. நாம் என்று சொன்னால் மட்டுமே உதடு ஒட்டும். நெடுஞ்சாலைத் துறை” அவ்வளவுதான். இதையே திரும்பத் திரும்ப நெடுஞ்சாலை முழுக்க மஞ்ச கலர்லே எழுதி வெச்சிருக்காங்க.
எனக்கு தோன்றிய கேள்விகள்:
1. குடும்பக் கட்டுப்பாடு, பெண் சிசுக்கொலை, மரம் வளர்ப்போம் - இதைப் பற்றி ஒரு வாக்கியத்தை எழுதி வைத்தாலாவது ஏதாவது பயன் கிடைத்திருக்குமென்று நம்பலாம்.
2. கலைஞர் மொத்தமே இந்த ஒரு பொன்மொழியைதான் சொல்லியிருக்கிறாரா? நாம் தெரிந்து கொள்வதற்காக வேறு எதையுமே சொல்லவில்லையா?
3. இதே அறிவிப்பு பலகைகளில், அடுத்த ஊர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று ஒரு ச்சின்ன எழுத்திலாவது எழுதியிருக்கலாமே?
4. இவ்வளவு செலவு செய்து வைத்த இந்த பலகைகளை - நாளை ஒரு வேளை ஆட்சி மாற்றம் வந்தால், விட்டு வைப்பார்களா?
5. இதே பழமொழியை ஒரு வேளை அம்மா ஆட்சிக்கு வந்தால் எப்படி உல்டா செய்து வைப்பாங்கன்னு ஒரு கற்பனை. ”சென்னை, பெங்களூர்லே ஓய்வு எடுத்தால் அது ஓய்வு கிடையாது. கோட நாட்டில் ஓய்வெடுத்தால் மட்டுமே அது ஓய்வு”.
*****
ஊருக்கு வந்தப்பிறகு எந்த பதிவரை தொலைபேசி எங்க ஏரியா நங்கநல்லூர்னு சொன்னாலும், உடனே அவங்க கேட்பது - டோண்டு ஐயாவை பாத்தீங்களா?
சரின்னு ஒரு நாள் அவருக்கு தொலைபேசினேன். அடுத்த நாள் நடைப்பயிற்சிக்கு வரும்போது வீட்டுக்கு வந்துடறேன்னு சொன்னவர், அதே மாதிரி காலை சுமார் 7.45க்கு வந்துவிட்டார்.
திருவல்லிக்கேணி, நங்கநல்லூர், நோய்டா, எங்கே பிராமணன், மொழிபெயர்ப்பு, ஃப்ரெஞ்ச், இஸ்ரேல் - அப்படி இப்படின்னு பல்வேறு விஷயங்களைத் தொட்டு படபடவென்று பேசிக் கொண்டிருந்தார் இந்த 60+ வாலிபர். பல்வேறு பதிவுகளில் படித்த மாதிரியே - செய்யும் தொழிலிலும், பதிவுகளிலும் நல்ல ஈடுபாட்டோடு இயங்கி வரும் இவரிடம் பேசும்போது - இவருடைய உற்சாகம் கண்டிப்பாக நம்மையும் பற்றிக்கொள்ளும்.
என்ன ஒரே ஒரு ஆசை இருந்தது. அவர் வரும்போது ‘போளி' (ஒரு இனிப்பு சாப்பாட்டு ஐட்டம், தெரியும்தானே?) வாங்கி அவர்கையில் கொடுத்து - ஹையா ஐயா, நான் ‘போளி' டோண்டுவை பாத்துட்டேன்னு சொல்ல நினைத்தேன்.
ஹிஹி.. உலகமறிந்த நம் ஞாபகமறதியால் அதை வாங்கி வைக்க மறந்துவிட்டேன்...
அதனால் என்ன ... அடுத்த தடவை வரும்போது இதை செய்துவிட வேண்டியதுதான்.
*****
14 comments:
//2. கலைஞர் மொத்தமே இந்த ஒரு பொன்மொழியைதான் சொல்லியிருக்கிறாரா? நாம் தெரிந்து கொள்வதற்காக வேறு எதையுமே சொல்லவில்லையா?//
அவா நெறையா சொல்லிருக்களே.. " மழை நின்னாலும் தூவானம் நிற்ப்பதில்லை" இந்த மாதிரி..
ஊருக்கே திரும்பி போயாச்சா..?
மை காட்.. போன் பண்ணுவீங்கன்னு எதிர்பார்த்தேன்..
சரி.. சரி.. நன்னா இருங்கோ..!
சூப்பர்...
/
நல்லவேளை, எல்லாரையும் வீடியோ கான்ஃப்ரன்ஸில் வாங்கன்னு நாம கூப்பிடலே. நாறிப்போயிருக்கும்
/
ROTFL
:)))))))
மொதல்லே உள்ளேன் ஐயா!
அண்ணா போளி வேணும் :))
நல்லா எழுதி இருக்கீங்க கலக்கல்:))
திருவல்லிக்கேணி, தில்லி (முனீர்க்கா), நங்கநல்லூர் என்று நான் எங்கெல்லாம் இருந்தேனோ அதே இடங்களில் நீங்களும் இருந்திருக்கிறீர்கள் என்பது சுவாரசியமாகவே இருந்தது.
அதிலும் பட்டு பட்டாக தோசைகள் அமர்க்களம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//வெ*பூ, இப்ப தெரிஞ்சுதா, அப்ப நான் எங்கே இருந்தேன்னு!!!//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))))
//வெ*பூ, இப்ப தெரிஞ்சுதா, அப்ப நான் எங்கே இருந்தேன்னு!!!//
மனுசன் நிம்மதியா ரிலாக்ஸா 'இருக்கிற' ஒரே ஸ்தலம் (?!) அது மட்டும் தான். இப்பவெல்லாம் அங்கயும் இந்த தொ(ல்)லைபேசி தலையிட்டா??...ரொம்ப பாவம் தான் நீங்க.
//கலைஞர் மொத்தமே இந்த ஒரு பொன்மொழியைதான் சொல்லியிருக்கிறாரா? நாம் தெரிந்து கொள்வதற்காக வேறு எதையுமே சொல்லவில்லையா?//
இதுக்கே இந்தபாடு இன்னும் சொன்னா தமிழ்நாடு அவ்வளவுதான்!
:))) பதிவு அருமை.. :)) இப்போ எங்க அண்ணா?
//கலைஞர் மொத்தமே இந்த ஒரு பொன்மொழியைதான் சொல்லியிருக்கிறாரா? நாம் தெரிந்து கொள்வதற்காக வேறு எதையுமே சொல்லவில்லையா?//
இது சொன்னதே அதிகம்ங்க....
HI CP....IT SEEMS...NOW A DAYS YOU ARE POSTING THE ARTICLES IN HURRY...LOT YOUR PERSONAL TOUCHES ARE MISSING...THINK YOU ARE BUSY WITH YOUR WORK....
(BUT....WHAT EVER IT MAY BE...I WILL COME AND READ....READ...READ.....R...E..A..D......REGULARLY)
APPPAAAAAAAAAAAA...NEGATIVE COMMENT POOTAACHI....
ஊருக்கே திரும்பி போயாச்சா..?
கலக்கல்
Post a Comment