சென்னையில் இரண்டாவது வாரம் (கோவை, திருப்பூர் விசிட்!)
வடிவேலுவை நல்ல்ல்ல்லவன்னு சொன்னவங்க மாதிரி - மொதல்லே ஒரு ஆறு பேரு திருப்பூர்லே... சுத்தி நின்னு பேசிக்கிட்டிருந்தாங்க... அப்புறம் பக்கத்து ஊர்லே (கோவை) இருக்கறவருக்கு தொலைபேசி - நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா. இங்க ஒருத்தன் மாட்டியிருக்கான்னாங்க. அவங்களும் - நாங்க எல்லாரும் இங்கேதாம் இருக்கோம். அவரை பஸ் ஏத்தி விடுங்க. நாங்க பாத்துக்குறோம்னாங்க. சரின்னு இவங்களும் பஸ்(லே) ஏத்தி அவங்களே டிக்கெட்டும் எடுத்து அனுப்பி வெச்சாங்க.. சரின்னு அங்கே போய் இறங்கினா.. அங்கே ஒரு பத்து பேரும்மா... மாத்தி மாத்தி பேசறாங்க...
இப்படி நகைச்சுவையா சொன்னாலும் நேர்லே பார்த்தேயிராத ஒருத்தனுக்காக (ஏன் பாக்க முடியல, கழுத்து வலியான்னு கேக்கப்படாது!), ஞாயிறிலும் வேலையில் பிஸியாயிருந்த திருப்பூர் நண்பர்கள் மற்றும் ஓய்வு நாளிலும் ஓய்வுக்கு ஓய்வு கொடுத்த கோவை நண்பர்கள் - எனக்காக சில மணி நேரங்கள் செலவழித்தது மனது நெகிழ்ந்தது.
இவர்களைப் பற்றி சில பாயிண்டுகள்... கோர்வையா எழுதாமே பின்னே முன்னேன்னு எழுதியிருக்கேன். ஏதாவது வித்தியாசம் காட்டணுமே!!!
பாசக்கார மனுசங்க. அப்படியே அன்பாலே நனைச்சிட்டாங்க... ஹிஹி அப்புறம் மழையிலும்.
விருந்தோம்பலுக்கு மறுபெயர் இவங்கதான். இவங்கள பாக்க வர்றவங்க தங்கள் பர்ஸை வீட்லேயே வெச்சிட்டு வந்துடலாம்... வெளியே எடுக்க விடவே மாட்டாங்க... :-)
கம்பங்கூழ். கேள்விப்பட்டு மட்டும் இருந்த இதை குடிக்கச் சொன்னாங்க. ஆஹா ஆஹா.. அற்புதமான சுவை. மறக்கவே முடியல.(செய்முறை இணையத்தில் கிடைக்குதான்னு பாக்கணும்!).
நான் பழகுவதற்கு ரொம்ப இனிப்பானவன்னு கோவையில் எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு. சந்திப்பு ஏற்பாடு செய்திருந்த பூங்காவில் ஏகப்பட்ட எறும்பு எங்களை சுத்தி!!! 'அவங்களாலேயே' வேறே இடம் தேடிப் போக வேண்டியதாயிற்று.
சஞ்சய் சுக்கு காப்பி(ன்னு) கொடுப்பாரு. (ஆனா அதை யாரும், இது உப்புமாவான்னு கேக்கப்படாது!!).
எனக்கு அல்வா கொடுக்கணும்னு கடைகளில் தேடியிருக்காங்க ஒரு சகோதரி. கருணை உள்ளம் கொண்ட கடைக்காரர் அதற்கு மறுத்துவிட்டதால், வேறு இனிப்பு ஐட்டங்களை வாங்கி வந்துட்டாங்க... அவ்வ்வ்... அடுத்த முறை வந்தா வீட்டுக்கே வரச்சொல்லியிருக்காங்க.. ஸ்பெஷல் அல்வா கொடுப்பாங்களாம்...
வந்துடறேம்மா... வந்துடறேம்மா... - இதையே ஒரு நூறு தடவை சொல்லிப்பாருங்க. என்னைப் பார்க்க ஊர் விட்டு ஊர் வந்திருந்த வால்பையன் அவரோட தங்ஸ்கிட்டே இப்படித்தான் வாங்கிக் கட்டிண்டிருந்தாரு.
திருப்பூர் மக்கள் - பதிவர் சந்திப்புக் குழுன்னே ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க.. அதுக்கு தலைவர், பொருளாளர் அப்படின்னெல்லாம் ஆட்களை நியமிச்சி, சந்திப்பின்போது பில் செட்டில் பண்ண பொருளாளர் பர்ஸில் கை வைச்சிடறாங்க!!!
எல்லாத்துக்கும் மேலே - (கோவை) பதிவர் சந்திப்பில் மொக்கையான விஷயங்களை பேசாமே - பல ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வழிமுறைகளை விவாதிக்கிறார்கள். விரைவில் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளின் அறிவிப்பை எதிர்ப்பார்க்கலாம். வாழ்த்துக்கள் நண்பர்களே!
கடைசியானாலும் குறைவில்லாத ஹிஹி.. last but not least... பின்னிரவானாலும் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லையென்றால் மற்றவர்கள் உதவுவதும், யாராவது ஒருவருக்கு தொலைபேசினால் மற்ற நண்பர்களுக்கு கான்ஃபரன்ஸ் போட்டு உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக் கொள்வதுமாக - கோவை பதிவர்கள் ஒரு நல்ல குழுவாக செயல்பட்டுக் கொண்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதொரு விஷயமே.
*****
13 comments:
//வந்துடறேம்மா... வந்துடறேம்மா... - இதையே ஒரு நூறு தடவை சொல்லிப்பாருங்க. என்னைப் பார்க்க ஊர் விட்டு ஊர் வந்திருந்த வால்பையன் அவரோட தங்ஸ்கிட்டே இப்படித்தான் வாங்கிக் கட்டிண்டிருந்தாரு.//
பயங்கரமா வாச் பண்ணியிருக்கிங்க தல!
அல்வா வாங்கி வந்தது மயில் என்ற பெயரில் ப்ளாக் எழுதிய விஜிராம்!
\\திருப்பூர் மக்கள் - பதிவர் சந்திப்புக் குழுன்னே ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க.. அதுக்கு தலைவர், பொருளாளர் அப்படின்னெல்லாம் ஆட்களை நியமிச்சி, சந்திப்பின்போது பில் செட்டில் பண்ண பொருளாளர் பர்ஸில் கை வைச்சிடறாங்க!!!\\
சங்கத்தின் சார்பாக நன்றியும் வாழ்த்தும்:))
திருப்பூர் பதிவர்கள் சங்கம்
அதென்னவோ உண்மைதான் கோவை பதிவர்கள் பாசக்கார பயபுள்ளைங்கதான். நம்ம சஞ்செய், அண்ணாச்சி, செல்வேந்திரன்.. கிருஷ்ணா டிபன் செண்டர் போனீங்களா..//
சரியாகச் சொன்னீர்கள் சத்யா...
கோவையிலும் சரி, திருப்பூரிலும் சரி, அவ்வளவு பாசமாக பழகுகின்றனர்.
நானும் இதைப் பற்றி விரிவாக எழுத உள்ளேன்.
//இராகவன் நைஜிரியா said...
சரியாகச் சொன்னீர்கள் சத்யா...
கோவையிலும் சரி, திருப்பூரிலும் சரி, அவ்வளவு பாசமாக பழகுகின்றனர்.
நானும் இதைப் பற்றி விரிவாக எழுத உள்ளேன்.//
ஒரு க்ரூப்பாத்தான் கிளம்பீருக்கீங்க போல....
ரொம்ப தூரமா இருக்கோம்.. இங்க வரவா போறாய்ங்கங்கற தைரியம்தான் உங்களை இப்படியெல்லாம் எழுத வைக்குது?
வெச்சுக்கறேன்!
paaaaaaaraaaaaaa.....last month our readers were looking for new post......our CP was busy with wine and dine......
சூப்பர்!
ச்சின்னபபையன் சார், கவிநயா அவர்கள் அன்பு கூர்ந்து அடியேனின் வலைப்பூவிற்க்கு சுவையான வலைப்பூ என்னும் விருது கொடுத்து கௌரவித்தாத். அடியேன் அதை தங்களுக்கு அளிக்கின்றேன். மேலும் விவரம் அட்ரா சக்கை நமக்கும் கூட விருது ! ! ! பதிவில் சென்று காணுங்கள்.
// திருப்பூர் மக்கள் - பதிவர் சந்திப்புக் குழுன்னே ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க.. அதுக்கு தலைவர், பொருளாளர் அப்படின்னெல்லாம் ஆட்களை நியமிச்சி, சந்திப்பின்போது பில் செட்டில் பண்ண பொருளாளர் பர்ஸில் கை வைச்சிடறாங்க!!! //
திருப்பூர் வலைப்பதிவர் பேரவையின் பொருளாளர் ஈரவெங்காயம் - சாமிநாதன் வாழ்க!!! :)
வெயிலான்....வேணாம்...அழுதுருவேன்...!!!!
//கோவையிலும் சரி, திருப்பூரிலும் சரி, அவ்வளவு பாசமாக பழகுகின்றனர்.
//
athu... by the way, I will be visiting your place next month...
பழம பேசியுடன் நானும் வருகிறேன்.
திருப்பூர் நண்பர்கள் டி சர்ட் தயார் செய்யவும்.
கோவை நண்பர்கள் கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல் சந்திப்பு நடத்த வேண்டும்.
தயார் ஆகிக்குங்க
Post a Comment