Monday, August 17, 2009

இரு சம்பவங்களும் பின்னே என் சபதமும்...

முதலில் ஒரு சிரிப்பான சம்பவம்.

அடுத்த நாள் வீட்டில் நடக்கவிருந்த ஒரு ச்சின்ன விசேஷத்திற்காக, சிற்றுண்டி ஆர்டர் செய்வதற்காக ஒரு ச்சின்ன உணவகத்திற்குப் போயிருந்தேன். ஒரு பத்து பேர் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய ஒரு சிறிய ஹால். அப்போது கடை காலியாகத்தான் இருந்தது. நட்ட நடுவில்
ஒருவர் நின்றுகொண்டிருந்தார். நான் நுழைந்தவுடன்,

அவர்: வாங்க, வணக்கம்.

நான்: நான் ஏழாவது தெருவிலிருந்து வர்றேன்.

அவர்: சரி

நான்: நாளை காலைக்காக பதினைஞ்சு டிபன் சொல்லணும்.

அவர்: சொல்லுங்க. எவ்ளோ மணிக்கு ரெடியா இருக்கணும்? டிபன்னா என்னென்ன வேணும்?

நான்: 4 இட்லி, 1 வடை. சட்னி, சாம்பார் தனியா கொடுத்துடுங்க. ஒரு எட்டு மணிக்கு வந்து வாங்கிக்கறோம். எவ்ளோ ஆகும்னு சொல்லுங்க.

அவர்: ஒரு நிமிஷம் இருங்க. முதலாளி இப்ப வந்துடுவாரு. வந்தவுடனே நீங்களே கேட்டுக்குங்க.

நான்: அப்ப நீங்க?

அவர் (சிரித்தவாறே) : நான் இங்கே சாப்பிட வந்தவன். பாக்கி சில்லறைக்காக நிக்கறேன் அவ்ளோதான்.

(எனக்கு சரியான கடுப்பு)

நான்: அப்போ இவ்ளோ நேரம் எதுக்கு கேள்வியெல்லாம் கேட்டீங்க?

அவர்: என்னை யாருன்னு நீங்கதானே முதல்லே கேட்டிருக்கணும். நீங்க ஏன் கேக்கலே?

நான்: அது வந்து.. நீங்க பாக்கறதுக்கு மேனேஜர் மாதிரி இருந்தீங்க.. .அதான் கேக்கலே...

இதற்குள் கடையிலிருந்து ஆள் வந்துவிடுகிறார். நான் மறுபடி முதலிலிருந்து எல்லாவற்றையும் ஒப்பிக்க, கடைக்காரரோ பதிலை என் பக்கத்தில் நிற்பவரைப் பார்த்து சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர் கடைக்காரரைப் பார்த்து: இதோ பாருங்க. இட்லி வடை இவருக்கு (என்னைக் காட்டி). நான் இங்கே சாப்பிட வந்து, சில்லறைக்காக நிக்கறேன். என்னை முதல்லே வெளியே அனுப்பிட்டு, அவர்கிட்டே கணக்கு பேசிக்குங்க.

கடைக்காரர் சிரித்துக் கொண்டே அவருக்கு சில்லறை கொடுக்க, அவர் என்னைப் பார்த்து - ஏங்க, நான் பாக்கறதுக்கு நிஜமாவே மேனேஜர் மாதிரியா இருக்கேன்?

நான் : நான் அப்படித்தான் நினைச்சேன். நீங்கதான் வெள்ளையும் சொள்ளையுமா இருக்கீங்களே?

அவர்: மறுபடி ஒரு தடவை நல்லா பாத்து சொல்லுங்க..

நான்: அட... ஆமாங்க...

அவர்: உங்களுக்கு தெரியுது. எங்க முதலாளிக்குத் தெரியல. இன்னிக்கே ஆபீஸுக்குப் போய் என்னை மேனேஜர் ஆக்குடான்னு கேக்கப் போறேன்.

இந்த சம்பவம் முழுக்க மனுசன் சிரிச்சிக்கிட்டே இருந்தாரு. அந்த நகைச்சுவை உணர்வு, டைமிங் சென்ஸ், கலகலப்பு - இதெல்லாமே ஸ்வைன் மாதிரி பக்கத்தில் இருப்பவருக்கு டக்குன்னு ஒட்டிக்கிற அளவுக்கு இருந்தது.

வீட்டுக்கு வந்தப்புறம்கூட எல்லார்கிட்டேயும் சொல்லி சொல்லி சிரிச்சிக்கிட்டே இருந்தேன்.

*********

இப்போ ஒரு வருத்தமான சம்பவம். இது நடந்து சில வருடமாயிடுச்சு.

ஒரு தடவை ஒரு ச்சின்ன தெருவில் என் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, எதிரில் வந்த ஒரு கார், என் பக்கத்தில் வரும்போது டக்குன்னு வலது பக்கம் கொஞ்சம் திரும்ப, நான் திடீர் ப்ரேக் அடிச்சி தெருவோரத்தில் நின்றிருந்த ஒருவரை இடித்துத் தள்ளிவிட்டு
வண்டியோடு கீழே விழுந்தேன்.

என் பைக்கின் 'பின்னே பார்க்கும்' கண்ணாடி உடைந்துவிட, எனக்கு கைகளிலும், நான் தள்ளி விட்டவருக்கும் கை, கால்களிலும் சிராய்ப்பு. நான் கஷ்டப்பட்டு எழுந்து வண்டியை எடுத்து நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தால், அவரோ அழுதுகொண்டிருந்தார்.

நான் டென்சனாகி அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்க என்னை மேலும் டென்சனாக்கிய விஷயம் அவர் செய்கையில் பேசியபோதுதான் தெரிந்தது. அவர் வாய்பேச இயலாதவர்.

ஒண்ணுமில்லே. நீங்க போங்கன்னு செய்கையில் காட்டியவாறே அவர் நகர, என் வண்டி நகராமல் அடம் பிடித்தது. அதைப் பார்த்த அவர், நான் மறுப்பதையும் கண்டுகொள்ளாமல் எனக்கு உதவ முற்பட்டார்.

என் வண்டியை தள்ளியவாறே பக்கத்தில் ஒரு மெக்கானிக் கடைக்கு வந்த அவர், கண்ணாடியை சரிசெய்யவும்தான் தெரிந்தது, அவர் ஒரு மெக்கானிக் என்பதும் அது அவரோட கடையென்பதும்.

அன்னிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தே ஆகணும்னு நினைச்ச அவர், வண்டியை சரிசெய்ததற்கு காசு வாங்கமாட்டேன்னு சிறிது நேரம் அடம் பிடித்தாலும், காசை அவர் பாக்கெட்டில் திணித்து, மறுபடி மன்னிப்பு கேட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

அப்படிப்பட்ட ஒரு ஆளை இடித்துத் தள்ளிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அடுத்த ஒரு வாரத்திற்குப் போகவேயில்லை.

அந்த சம்பவத்திற்குப் பிறகுதான் வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவெடுத்தேன். இனிமேல் இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்தால், யாரையும் இடிக்காமல் தனியாக ஒரு இடத்தில் போய்தான் விழவேண்டும் என்று சபதமே செய்துவிட்டேன்.

நாமதான் ஒரு சபதத்தைப் போட்டுவிட்டால், அதை நிரூபிச்சே தீருவோம்ல... தங்கமணி பின்னால் அமர்ந்திருக்க ஓரிரு முறை ( நிறைய தடவை??) யாரையும் இடிக்காமல் நாங்க மட்டும் பைக்லேந்து விழுந்து எழுந்தோம்.

அப்புறம்தான் என் சபதத்தை தங்கமணி நம்பினார்.

அப்ப நீங்க?

********

24 comments:

சென்ஷி August 17, 2009 at 12:35 PM  

சிரிப்பை அடக்க முடியலை.. :))))

Unknown August 17, 2009 at 1:18 PM  

கலக்கிடீங்க

வால்பையன் August 17, 2009 at 1:28 PM  

//இனிமேல் இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்தால், யாரையும் இடிக்காமல் தனியாக ஒரு இடத்தில் போய்தான் விழவேண்டும் என்று சபதமே செய்துவிட்டேன்.//


நான் வண்டி வாங்கியதிலிருந்து அப்படி தான்!

Cable சங்கர் August 17, 2009 at 1:50 PM  

விழுறதுக்காகவே இந்தியா வந்தீங்களா..?

இல்ல தாய் மண்ணே வணக்கமா..?

பரிசல்காரன் August 17, 2009 at 3:10 PM  

கலக்கல் சத்யா..

பின்னது தனிப்பதிவாகவே போட்டிருக்கலாமென்பதாக அருமையாக இருந்தது!

பரிசல்காரன் August 17, 2009 at 3:11 PM  

//வால்பையன் said...

நான் வண்டி வாங்கியதிலிருந்து அப்படி தான்!//

நீ விழறதுக்கு வண்டி தேவையே இல்லையேப்பா....

இராகவன் நைஜிரியா August 17, 2009 at 3:29 PM  

சிரிச்சு, சிரிச்சு வயறு புண்ணாயிடுச்சுப்பா...

அதுவும் அந்த இட்லி கடை விஷயம் சூப்பரோ சூப்பர்.

கார்ல்ஸ்பெர்க் August 17, 2009 at 3:30 PM  

//அன்னிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தே ஆகணும்னு நினைச்ச அவர், வண்டியை சரிசெய்ததற்கு காசு வாங்கமாட்டேன்னு சிறிது நேரம் அடம் பிடித்தாலும்//

- இந்த மாதிரி நல்லவர்கள் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள்..

சின்னப் பையன் August 17, 2009 at 4:18 PM  

வாங்க சென்ஷி, C, வால் -> நன்றி...

வாங்க நட்சத்திர கேபிள் -> ஹாஹா... அண்ணே இது நடந்தது இப்போ இல்லேண்ணே... அஞ்சு வருஷத்துக்கு முந்தி....

வாங்க பரிசல், இராகவன், கார்ல்ஸ்பெர்க் -> நன்றி...

அறிவிலி August 17, 2009 at 8:12 PM  

எனக்கு ஒரு ச்சின்ன ச்சந்தேகம். உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி ச்சுவாரஸியமான விஷயமா நடக்குது.

ச்சிரிச்சு ச்சிரிச்சு ஆபீஸே என்னைய ஒரு மாதிரி பார்க்குது....

நானும் ஒரு ச்சபதம் ச்செய்துவிட்டேன்.இனிமே உங்க பதிவ ஆபீஸ்ல ஒபன் பண்ணக்கூடாது.

Unknown August 17, 2009 at 10:04 PM  

/// (எனக்கு சரியான கடுப்பு) //



எனக்கு பயங்கர சிரிப்பு...... ரொம்ப நல்லவரு நீங்க.......








// அப்ப நீங்க? //


கஷ்ட்டம்தான்.......

Raghav August 18, 2009 at 12:38 AM  

தலைவா, காலையில அலுவலகம் வந்து நல்லா சிரிச்சுகிட்டே கமெண்டுறேன்.. உங்க சபதம் தான் டாப்பு :)

எம்.எம்.அப்துல்லா August 18, 2009 at 2:02 AM  

//அப்ப நீங்க?


//

நல்லவேலை...நான் உங்க வீட்டுக்கு வந்தப்ப வா வெளிய போவோம்னு கூப்புடாம விட்டீங்களே.

//நானும் ஒரு ச்சபதம் ச்செய்துவிட்டேன்.இனிமே உங்க பதிவ ஆபீஸ்ல ஒபன் பண்ணக்கூடாது.

//

நீங்க இப்பதான் சபதம் எடுக்குறீங்களா?? நாங்கள்லாம் அதை கடைபிடிக்க ஆரமிச்சு வருஷமாச்சு...ஹய்யோ...ஹய்யோ..

Unknown August 18, 2009 at 5:02 AM  

1. :)))))))))))))))))))))

2. :((((((((((((((((((((

முத்துலெட்சுமி/muthuletchumi August 18, 2009 at 8:36 AM  

\\அப்புறம்தான் என் சபதத்தை தங்கமணி நம்பினார்.//

அதுக்கப்பறம் அம்மணி சபதம் எடுத்திருப்பாங்களே எடுக்கலயா.. ? :))))

Thamira August 18, 2009 at 9:36 AM  

கலக்கல்ஸ் குரு.. எல்லோரும் ஓட்டுறதுக்கு வண்டி வாங்கினா நீங்க விழுறதுக்குன்னே வாங்குவீங்களா?

எப்பிடி கேட்பீங்க கடையில.? நல்லா விழுற மாதிரி ஒரு வண்டி குடுய்யா என்றா.?

அக்னி பார்வை August 18, 2009 at 9:37 AM  

///விழுறதுக்காகவே இந்தியா வந்தீங்களா..?

இல்ல தாய் மண்ணே வணக்கமா..?

///

rippittikireen

ஸ்வர்ணரேக்கா August 18, 2009 at 11:40 AM  

அந்த இட்லி கடை ஆளு, உங்களுக்கு ஏத்த சோடி தான்..

Unknown August 19, 2009 at 12:11 AM  

பார்பனர்களால் பரவும் பன்றி காய்ச்செல்
because..
1.software ல பாப்பானுங்க தானே அதிகம்.. அவனுங்க பாட்டுக்கு பிளைடுல போயி பன்றி காய்ச்சல் ல நம்ப ஊர்ல பபரானுங்க...
2. Curd Rice thunnu Thunnu.. No imunity... soo.. Naan Enna solla vareen na...

Alla papanungalayum pudichi kattaya kudunba.. chi chi kataya pandri kaichal thadupu oosi podanumm...

Enna ba nan sollarathu..
Itha than vadivelu aasan enna soonar na.. "பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி.....

வால்பையன் August 19, 2009 at 12:16 AM  

புலியம்!

பெரியார் இருந்திருந்தா கூட இப்படி யோசிக்கமாட்டாரு!
மழை வரலைனா பாப்பான் தான்!
மழை வந்தாலும் பாப்பான் தான்!

நடத்துங்க!

நட்புடன் ஜமால் August 19, 2009 at 1:13 AM  

முதல் சிரிப்பை விட

இரண்டாவது சபதம்

ஹா ஹா ஹா

anujanya August 21, 2009 at 6:39 AM  

இன்னிக்கு தான் உங்களோட லாஸ்டு நாலைந்து பதிவுகள் படித்தேன். எல்லாமே செம்ம சுவாரஸ்யம். நிறைய இந்த மாதிரி எழுதுங்க சத்யா.

அனுஜன்யா

மணிஜி August 21, 2009 at 10:08 AM  

நா ஒரு ச்சின்ன ஸ்மைலி...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP