ஒரு நாடகம் போடறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?
நாடகம்னு சொன்னவுடன் - ஒரு முழு நீள நகைச்சுவை நாடகமோ அல்லது ஜவ்வாக இழுக்கப்படும் தொலைக்காட்சி சீரியலோ - போட்டேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க. ஒரு பத்து நிமிடமே வரக்கூடிய ஒரு சிறிய நாடகத்தை, ஒரு விழாவில் போட முயற்சி செய்து, எப்படியல்லாம் கஷ்டப்பட்டேன்னு இங்கே சொல்லியிருக்கேன்.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு எங்கள் நிறுவனத்தின் சார்பில் ஒரு விழா கொண்டாடலாம்னு தீர்மானிச்சாங்க. சரி நமக்குத்தான் (வீட்லே) சுதந்திரமில்லே, அட்லீஸ்ட் நாட்டோட சுதந்திரத்தையாவது கொண்டாடுவோம்னு திருமணமான ஆண்கள் எல்லாம் மேற்படி விழாவில் கலந்துக்கலாம்னு முடிவெடுத்தோம்.
விழான்னு சொன்னவுடனேயே - தங்ஸ், நீங்க எந்த போட்டியிலேயும் கலந்துக்காதீங்க. எங்க பேரையும் கொடுத்து தொலைச்சிடாதீங்க. வெறும்னே போய் சாப்பிட்டு வந்தா போதும்னு சொல்லிட்டாங்க. இனிமே அமைதியா இருந்து பிரயோஜனமில்லே. பொங்கி எழுடா ச்சின்னப்பையான்னு சொல்லி - நேரா விழாக்குழுவினர்கிட்டே போய் - எனக்கு ஒரு பத்து நிமிட
ஸ்லாட் கொடுங்க. ஒரு நாடகம் போடப்போறேன்னு சொல்லி நேரத்தை வாங்கிட்டேன்.
நாலு பேர் நடிக்கக்கூடிய அந்த நாடகத்துக்காக, மூணு பேரை தயார் செய்ய (ஹிஹி அந்த நாலாவது ஆள் நாந்தான்!) ஒவ்வொருத்தராய் கேட்க ஆரம்பித்தேன். அப்பத்தான் தெரிஞ்சுது... உலகத்திலே நிறைய பேர் என்னைப் போலவே கூச்ச சுபாவமுள்ளவங்கன்னு... மூணு பேர் கிடைக்கவேயில்லை. சரி வேறே வழியில்லாமே நானே நாலாவதாரம் ( நன்றி: உலக நாயகன்)
போட்டுடலாம்னு முடிவு செய்தேன். விழா ஏற்பாடு செய்தவரோ - இந்த ஊர்லே கடலே இல்லேன்னாலும், நீங்க நாலாவதாரம் போட்டா, கண்டிப்பா சுனாமிதான் - அப்படின்னு எச்சரிக்கை செய்தவுடன், முயற்சியை கைவிட்டேன்.
இப்படி நான் ஒரு நாடகம் போட முட்டி மோதிக் கொண்டிருக்கும்போது, போட்டியாக இன்னொரு குழு - மூணு பேர் நடிக்கக்கூடிய சிறிய நாடகம் போடப்போறோம்னு கிளம்பியது. மேட்டர் என்னன்னா அவங்களுக்கும் ஒரு ஆள் கிடைக்காமே, என்னை நடிக்க முடியுமான்னு கேட்டாங்க. என்னடா, நாமே தனி கம்பெனி வைத்து நாடகம் போடலாம்னு பாத்தோம்,
அப்படியிருக்கும்போது மத்தவங்க நாடகத்தில் நம்மால் நடிக்க முடியுமா - அப்படி நடிச்சா நம்ம திறமைக்கு ஏதாவது பங்கம் வந்துடுமா என்று ஆயிரமாயிரம் கேள்விகள் மனசுக்குள் சுழன்றி சுழன்றி அடித்தது. கடைசியில், என்ன ஆனாலும் பரவாயில்லை, அவங்க நாடகத்தில் நடித்துவிடலாம்னு முடிவு செய்தேன்.
அடுத்தது ஒத்திகை.
சொந்த வேலைகளைச் செய்வதற்கு ஏற்ற நேரம் - ராகு காலமோ, யமகண்டமோ கிடையாது - அலுவலக நேரம்தான்றது என் கொள்கை. சில பேருக்கு அது புரிவதேயில்லை. நாடக ஒத்திகையை மாலை நேரத்தில்தான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
அலுவலக நேரத்தையே குடும்பத்தோடு செலவு செய்யவேண்டுமென்ற உயர்ந்த கொள்கை உடைய நான், மாலை நேரங்களில் அவர்களை பிரிந்து எப்படி ஒத்திகைக்குப் போவேன்? ஆனாலும், பூனைக்கு வாழ்க்கைப்பட்டா மியாவ்னு சொல்லித்தானே ஆகணும்? ரெண்டு நாள் மாலையில் நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போய் நாடக ஒத்திகை பார்த்தோம். என் நடிப்பைப்
பார்த்த அந்த வீட்டு/பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பயத்தில் அரண்டு போய்விட்டதாய் அடுத்த நாள் நண்பர் சொன்னார். பாத்திரத்தில் ஒன்றிப் போயிருந்ததால், நான் எதையும் கவனிக்கவில்லை.
அந்த நாடகத்தின் ஸ்க்ரிப்ட் மேல் நாங்கள் வைத்த அபார (அவ)நம்பிக்கையால், விழாவின்போது உரக்க சிரித்து, கைதட்ட நாலைந்து பேரை தயார் செய்தும் வைத்திருந்தோம். ஆமா.. கரகாட்டக்காரன்லே - இவரு வாசிக்கறத பாத்தா தில்லானா மோகனாம்பாள் சிவாஜி மாதிரியும் - அந்தம்மா ஆடறத பாத்தா பத்மினி மாதிரியும்னு வருமே - அதே மாதிரிதான் ஆனா
இங்கே பணமெல்லாம் கொடுக்கலே. சும்மாவே கைதட்டுங்கன்னு சொல்லிட்டோம்.
ஆயிற்று. சுதந்திர தின விழா நாளும் வந்தது.
எங்கள் நாடகம் போட்டபிறகு அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். ஒரே ஆரவாரம்தான். புகைப்பட வெளிச்சத்தில் அந்த மாலை நேரத்திலேயே முழு நிலவு வந்ததுபோல் அந்த அறை முழுக்க வெள்ளை வெளிச்ச மழை.
இப்படியெல்லாம் எழுதணும்னு எனக்கும் ஆசைதான். ஆனால், எங்கள் ஸ்லாட்டுக்கு முன்னர் இருந்த நிகழ்ச்சிகள் தாமதமாகிவிட்டதால், கடைசி நேரத்தில் எங்கள் நாடகத்தையே போடவிடாமல் விழாக்குழுவினர் தடுத்துவிட்டார்கள்.
சரி சரி.. .படிக்கிற எல்லாரும் உச்.. உச்.. என்று வருத்தப்படுவது எனக்கு தெரியுது. என்ன பண்றது சொல்லுங்க... அவங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான்.
இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்கு முன்னரே தெரியுமாததால், நான் இன்னொரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துகொண்டு, அதை வெற்றிகரமாக (!!) செய்தும் முடித்தேன்.
அது என்னன்றீங்களா, நம்ம கடை ஆரம்பிச்ச புதுசுலே நிறைய எழுதின - இன்னார் மென்பொருள் நிபுணரானால் - அதே மாதிரி வட இந்தியர்களுக்காக ‘முன்னாபாய் PMP'ன்னு பேர் மாற்றம் செய்து தயாரித்த ஒரு சிறிய கான்செப்ட் ( நன்றி க.போவது யாரு, அ.போவது யாரு...).
அந்த கான்செப்ட் செய்து முடித்தபிறகு தட்டினாங்க பாருங்க - தட்டோ தட்டுன்னு தட்டுறாங்க... கல்யாணப்பரிசு தங்கவேலு மாதிரி நினைச்சிக்காதீங்க. நிஜமாவே கைதான் தட்டினாங்க... நான் பேசினதுக்கு ஆதாரமா ஒரு புகைப்படத்தைப் போட்டுட்டு (அவங்க கைதட்டினதுக்கு ஆதாரம் கிடையாது. நீங்க நம்பித்தான் ஆகணும்!) இந்த சிறிய பதிவை முடிச்சிக்கிறேன்.
வருங்காலத்திலே நாடகம் போடணும்னா யாரையும் நம்பாமே நாலாவதாரமோ அஞ்சாவதாரமோ நானே போட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன். என்ன சொல்றீங்க?
20 comments:
அன்ணே எங்கண்ணே போயிருந்தீங்க இவ்வளவு நாளா???
காலை நேரத்தில் மனசுவிட்டு சிரிக்கவைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி :)
//அன்ணே எங்கண்ணே போயிருந்தீங்க இவ்வளவு நாளா???//
அப்துல்லா அண்ணே , நீங்க எங்கண்ணே இருக்கீங்க இப்போ
நாடகம் போடறதுக்கு காரணமா இருந்த தங்கமணிகளுக்கு நாடகத்தை டெடிகேட் செஞ்சீங்களா :)
:)
\\பாத்திரத்தில் ஒன்றிப் போயிருந்ததால், நான் எதையும் கவனிக்கவில்லை.//
ஒத்திகை வீட்டுல சாப்பாடெல்லாம் குடுத்தாங்களா..? :))
//பாத்திரத்தில் ஒன்றிப் போயிருந்ததால், நான் எதையும் கவனிக்கவில்லை//
பக்கத்துல இருந்து கிளறி விட்டுகிட்டே இருக்கணும். இல்லாட்டி இபடித்தான் அடி பிடிக்கும்.
தலைவா, காலையில அலுவலகம் வந்தவுடனே நல்லா சிரிச்சேன்.. உங்க நகக்கண்ணுல கூட நகைச்சுவை பொதிந்திருக்கும் போல :)
//Raghav said...
தலைவா, காலையில அலுவலகம் வந்தவுடனே நல்லா சிரிச்சேன்.. உங்க நகக்கண்ணுல கூட நகைச்சுவை பொதிந்திருக்கும் போல :)//
அதே அதே.. :)) (தலைவாவ எடுத்துட்டு அண்ணான்னு போட்டு படிச்சிக்கோங்க..;))))
காலையில அலுவலகம் வந்தவுடனே..//
தலைவர் மாதிரியே வேலையை ஆரம்பிச்சுட்டீங்களா ராகவ்?
நிறைய கமெண்ட வேண்டியிருக்குது. அப்பாலிக்கா வர்றேன். வேல செய்ய சொல்றாய்ங்கப்பா..
அலுவலக நேரத்தையே குடும்பத்தோடு செலவு செய்யவேண்டுமென்ற உயர்ந்த கொள்கை // தலைவர் கொள்கையை நினைச்சு புல்லரிச்சுப்போய் அழுதிகிட்டிருக்கேன்.
கேள்விகள் மனசுக்குள் சுழன்றி சுழன்றி அடித்தது//
ஒண்ணு சுழன்று அடிக்கணும். இல்லைன்னா சுழற்றி அடிக்கணும்.. அதென்ன சுழன்றி.? ஹிஹி.. ஹிஹி..
சூப்பர்....
//அறிவிலி, September 7, 2009 11:52 PM
//பாத்திரத்தில் ஒன்றிப் போயிருந்ததால், நான் எதையும் கவனிக்கவில்லை//
பக்கத்துல இருந்து கிளறி விட்டுகிட்டே இருக்கணும். இல்லாட்டி இபடித்தான் அடி பிடிக்கும்.//
சூப்பரோ சூப்பர்.....
நம்பிட்டேன்!
நல்ல வேளை தப்பிச்சாங்க.
யப்பா..
க.பி.ன்னு சிரிச்சேன் சத்யா. ரொம்ப தேங்க்ஸ்!
நடிக்கறதுன்னு ஆய்ட்டா நீங்க நம்ம வூட்டு அல்வா மாதிரி ஆய்டறீங்கன்னு நெனைக்கறேன்..
(அதான் பார்த்திரத்துல ஒன்றிப்போறது..!)
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
வாங்க அப்துல்லா அண்ணே -> இங்கேயேதாண்ணே இருக்கேன்... இப்பல்லாம் எழுதற மூடே இல்லேண்ணே... ஹிஹி.. அப்படியே மூடு வந்துட்டாலும்... அப்படின்னு நிறைய பேர் முணுமுணுக்கறது கேக்குது... :-))
வாங்க சின்ன அம்மிணி -> நாடகம் மட்டுமில்லே. நாங்கல்லாம் எது செஞ்சாலும் அவங்களுக்கு டெடிகேட் செஞ்சிட்டுதான் மறுவேலை பாக்கறது... ஓகேவா... :-))
வாங்க மு-க அக்கா -> ஆமா ஆமா... அதுக்குதானே நாம மத்தவங்க வீட்டுக்கு போறதே!!!
வாங்க அறிவிலி -> அவ்வ்வ்... நீங்க இன்னும் சமையல் மூட்லேயே இருக்கீங்கன்னு நினைக்கிறேன்...
வாங்க ராகவ், சகோ ஸ்ரீமதி -> நன்றி...
worth waiting for such good (funny) article....
I am wondering about the way you bring jokes from day to day life
சொந்த வேலைகளைச் செய்வதற்கு ஏற்ற நேரம் - ராகு காலமோ, யமகண்டமோ கிடையாது - அலுவலக நேரம்தான்றது என் கொள்கை.....humour by correlating a serious topic with another serious topic
அலுவலக நேரத்தையே குடும்பத்தோடு செலவு செய்யவேண்டுமென்ற உயர்ந்த கொள்கை உடைய நான், மாலை நேரங்களில் அவர்களை பிரிந்து எப்படி ஒத்திகைக்குப் போவேன்?......this is bitu (ice to your family) humour
பூனைக்கு வாழ்க்கைப்பட்டா மியாவ்னு சொல்லித்தானே ஆகணும்?......humour out of experience
இப்படியெல்லாம் எழுதணும்னு எனக்கும் ஆசைதான். ஆனால், எங்கள் ஸ்லாட்டுக்கு முன்னர் இருந்த நிகழ்ச்சிகள் தாமதமாகிவிட்டதால், கடைசி நேரத்தில் எங்கள் நாடகத்தையே போடவிடாமல் விழாக்குழுவினர் தடுத்துவிட்டார்கள்.
....humour by twist....
அவங்க கைதட்டினதுக்கு ஆதாரம் கிடையாது...humour from your modesty...
வருங்காலத்திலே நாடகம் போடணும்னா யாரையும் நம்பாமே நாலாவதாரமோ அஞ்சாவதாரமோ நானே போட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன். என்ன சொல்றீங்க?...humour from caution...
how you are brining "humour" in most of your day to day activities..?
ennamoo poonga Mr. CP.....
சரி நமக்குத்தான் (வீட்லே) சுதந்திரமில்லே, அட்லீஸ்ட் நாட்டோட சுதந்திரத்தையாவது கொண்டாடுவோம்னு
பூனைக்கு வாழ்க்கைப்பட்டா மியாவ்னு சொல்லித்தானே ஆகணும்?
.....after reading these most of married wo(men) will feel....ok..ok..SAME BLOOD EVERY WHERE...and their heart feels light...the objective of comedy fulfill here...!
thanks for making us laugh.
எங்க கால்ஷீட் வேணுமா தலைவா!
சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வருதுங்க. சூப்பர்
Post a Comment