யார் நீங்க? யார் நீங்க?
மருத்துவமனை. அறை எண் 46. ஒருவர் முழுவதுமாக போர்த்திக் கொண்டு படுத்திருக்கிறார். பக்கத்தில் ஒரு பெண் - கண்களில் கண்ணீரை துடைத்தவாறே அமர்ந்திருக்கிறார். அப்போது கதவைத்
தட்டியவாறே ஒருவர் அறைக்குள் நுழைகிறார். (இவரை பார்வையாளர் என்று அழைப்போம்).
பார்வை: என்ன ஆச்சு இவருக்கு?
பெண்: ஒண்ணும் ஆகலே. இப்பத்தான் போனாரு.
பார்வை: ஐயய்யோ. என்னங்க இவ்ளோ சாதாரணமா சொல்றீங்க? என்ன பிரச்சினை?
பெண்: அவரு ஒரு வாரமா போகாததுதான் பிரச்சினை. டாக்டர்கிட்டே சொல்லி, அவர்தான் மாத்திரை கொடுத்து இவரை போக வெச்சிருக்காங்க. நீங்க உக்காருங்க.
பார்வை: அடச்சே. மாத்திரை கொடுத்து மேட்டரை முடிச்சிட்டீங்களா? ஏங்க உங்களுக்கு இதயமே இல்லையா? கொடுத்துட்டு ஏன் இப்படி அழுதுட்டு உக்காந்திருக்கீங்க?
பெண்: ம். அதுவா. அது வேறே விஷயம்.
பார்வை: அப்படியா. கொஞ்சம் இருங்க. வெளியே போய் போலீஸை கூப்பிட்டு, உங்களையும், மாத்திரை கொடுத்த அந்த டாக்டரையும் பிடிச்சி உள்ளே போட வைக்கிறேன்.
பெண்: நீங்க என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க. நான் சொல்ல வந்தது என்னன்னா...
அவர் சொல்வதற்குள், அறைக்குள் டாக்டர் வருகிறார். எல்லோருக்கும் ஒரு ஹலோ சொல்லிவிட்டு, படுத்திருப்பவரின் கால் பக்க போர்வையை மட்டும் விலக்கி, ஒரு ச்சின்ன சுத்தியலால் முட்டியின் கீழ் தட்டிப் பார்க்கிறார்.
பார்வை: தட்டவேண்டியது அவரையில்லே டாக்டர். போலீஸ்கிட்டே சொல்லி, உங்களையும் இந்த பெண்ணையும்தான் முட்டிக்கு முட்டி தட்டச் சொல்லணும்.
சுத்தியல் அடி, கிச்சு கிச்சு மூட்டியதால், படுத்தவர் போர்வையை விலக்கி, எழுந்து உட்காருகிறார்.
பார்வை: (படுத்திருப்பவரைப் பார்த்து) : யார் நீங்க?
டாக்டர்: (படுத்திருப்பவரைப் பார்த்து): யார் நீங்க?
படுத்திருப்பவர்: (பெண்ணைப் பார்த்து, பார்வையாளரை காட்டி): யார் இவரு?
பெண் (பார்வையாளரைப் பார்த்து): ஆமா, யார் நீங்க?
டாக்டர் : இது என்னோட மருத்துவமனை. இங்கே நாந்தான் முதல்லெ கேள்வி கேப்பேன். (படுத்திருப்பவரைப் பார்த்து) உங்ககிட்டேந்து ஆரம்பிக்கிறேன். யார் நீங்க? இங்கே ஏன் படுத்திருக்கீங்க?
படு: டாக்டர், என் பேர் சுரேஷ். நான் ரமேஷை பார்க்க வந்தவன். ரொம்ப டயர்டா இருந்ததால், படுத்தவுடன் தூங்கிட்டேன். மன்னிச்சிடுங்க.
டாக்டர்: அப்போ பேஷண்ட் ரமேஷ் எங்கே?
பார்வை: ஆஹா.. ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்காதீங்க டாக்டர். ரமேஷை நீங்களும் இந்த பொண்ணும்தானே மாத்திரை கொடுத்து தீர்த்து கட்டினீங்க? மரியாதையா எல்லா உண்மையையும் சொல்லிடுங்க.
டாக்டர்: யாரு இவரு? வந்ததிலேந்து ஏடாகூடமா ஏதேதோ சொல்லிட்டு இருக்காரு?
பார்வை: யாரை ஏமாத்தப் பாக்குறீங்க? ஏம்மா, நீயாவது இவர்கிட்டே உண்மையை சொல்லிடு.
பெண்: டாக்டர், இவரு யாருன்னே எனக்குத் தெரியல. இப்பத்தான் உள்ளே வந்தாரு. வந்ததிலேந்து உளறிக்கிட்டே இருக்காரு.
பார்வை: நான் உளர்றேனா? அட்றா அட்றா... உங்க மேலே தப்பில்லேன்னா... ரமேஷ் எங்கே? நீங்க எதுக்கு அழுதுட்டிருக்கீங்க? அதையாவது சொல்லுங்க.
பெண்: நான் ஒண்ணும் அழலே. கண்ணுலே தூசி விழுந்து, போகவே மாட்டேங்குது. அவ்ளோதான்.
பார்வை: பாத்தீங்களா.. கடைசி வரைக்கும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லவே மாட்றாங்க. ரமேஷ் எங்கே? பாடியை என்ன பண்ணீங்க?
அறைக்குள் இருக்கும் ஓய்வறையின் கதவு திறந்து, ஒருவர் வெளியே வருகிறார்.
பார்வை: டாக்டர். இந்த சதியில் இன்னொருத்தருக்கும் பங்கு இருக்கா? இவருக்கு ஏன் பேஷண்ட் ட்ரஸ் மாட்டியிருக்கிங்க? ஆள் மாறாட்டம் பண்றீங்களா? எனக்கு இப்பவே எல்லா உண்மையும் தெரிஞ்சாகணும்.
டாக்டர்: இவரு இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே பேசிட்டிருந்தாருன்னா எனக்கு பைத்தியமே பிடிச்சிடும்.
சுரேஷ்: டாக்டர், இவரு யாரு?
டாக்டர், ரமேஷ், பெண் மூவரும்: (ஒரே குரலில்): அதைத்தான் நாங்க கடந்த பத்து நிமிஷமா கேட்டுட்டிருக்கோம். அவர் சொல்லவே மாட்டேங்குறாரு.
பார்வை: நான் யாருங்கறது இருக்கட்டும். (சுரேஷைப் பார்த்து) நீங்க யாரு? இந்த அறையில் என்ன பண்றீங்க?
சுரேஷ்: இது என்னோட அறை. நான் இந்த அறையில்தான் அட்மிட் ஆகியிருக்கிறேன். இப்ப சொல்லுங்க. உங்களுக்கு என்ன வேணும்?
பார்வை: (பாக்கெட்டை துழாவிக் கொண்டே) எனக்கு அப்பவே சந்தேகம் வந்தது. இருந்தாலும் ஒரு தடவை செக் பண்ணிடறேன். ஒரு நிமிஷம் இருங்க.
டாக்டர்: இதான் உங்களுக்கு லாஸ்ட் சான்ஸ். இப்பவாச்சும் நீங்க யாருன்னு சொல்லலேன்னா நடக்கறதே வேறே.
பார்வை: உங்க பேர் ரமேஷ்குமார்தானே? இது அறை 64தானே?
சுரேஷ்: இல்லே. என் பேர் ரமேஷ். இது 64 இல்லே... 46ம் அறை.
பார்வை: ஓ அப்படியா.. ஐ ஆம் சாரி. நாந்தான் அறை மாறி வந்துட்டேன்னு நினைக்கிறேன்...
ஆளாளுக்கு கையில் கிடைத்ததை எடுத்து அடிக்கும்முன், கதவைத் திறந்து பார்வையாளர் எஸ்கேஏஏஏப்.
*****
18 comments:
நான் இனிமேல் சினிமா நகைச்சுவையெல்லாம் எதுக்குப் பார்க்கப் போறேன்:)
வீட்டை விட்டு வெளிய போயும் முடியல சிரிப்பு:)
:)
:)))))))
நல்ல சிச்சுவேசன் காமெடி.
இந்தமாதிரி படத்துல வர்ற மாதிரி காமெடி எல்லாம் எழுதுற ஒரே ஆளு நீங்க தான். எப்படி இதெல்லாம்?
நல்ல கொமடி ...............சிரிச்சேன்...
ஐயோ! ஐயோ! சிரிச்சி வயறு வலிச்சி போச்சு
சூப்பர்ரா எழுதி இருக்கீங்க!
நான் யாருன்னே தெரியலை, சிரிச்சதுலே என்னை நான் மறந்தேன் அண்ணா, அதான் உங்க இடுகையோட தலைப்பே அதானே!! நான் யார் என்ற கேள்வியுடன் கிளம்பறேன் :-)
kalakkal chinnapaiyan.
இஃகி... இஃகி...
தாங்க முடியலடா சாமி...
முடியல....
:-) :-) :-) :-) :-)
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
அடப் போங்கப்பா...
வயிறு வலிக்குது
இதே வேலையாப்போச்சு
எப்பப்பாரு சிரிப்பு மூட்டறதுஅ
தலை சுத்துது!
லஞ்சம் வாங்குபவர்கள் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவு.
http://ulalmannargal.blogspot.com/
நானும் கையில் கிடைச்சதைக்கொண்டு அடிக்கப்போறேன்.. பார்வை'யை அல்ல உம்மை..!!
Post a Comment