Friday, October 2, 2009

உபோஒ - மறுபடியுமா???

ஒரு ச்சின்ன அறிவிப்பு: மக்களே, இந்த இடுகையை படிச்சபிறகு, இதற்கு முந்தைய இடுகைகளையும் பாருங்க. படிக்காமே விட்டிருந்தீங்கன்னா, ஒரு தடவை அவைகளையும் படிச்சிடுங்க... நான் பிரஷர் குக்கர் விக்கலே.. ஆனாலும் சிரிப்புக்கு க்யாரண்டி தர்றேன்.... ஹிஹி...

*****

மொட்டை மாடி. ஒரு மனிதன். கையில் கைப்பேசி மற்றும் கணிணி. உட்கார்ந்து கைப்பேசியில் எண்களை அழுத்துகிறான்.

"ஹலோ, கமிஷனர்?"

"யெஸ். யார் நீ?"

"நான் யாருன்றது அப்புறம் இருக்கட்டும். நான் சொல்றத கவனமா கேளுங்க. இந்த சென்னையில் ஏதோ ஒரு இடத்துலே அஞ்சு பாம் வெச்சிருக்கேன். அது பத்தி பேசணும். மறுபடி பத்து நிமிடம் கழிச்சு கூப்பிடறேன்".

"வெயிட். வெயிட். நீ. தப்பா சொல்றேன்னு நினைக்கிறேன்... அஞ்சு இடத்துலே பாமா? அல்லது ஒரே இடத்துலே அஞ்சு பாமா?"

"ஹாஹா.. வெரி குட். நல்லா கவனிக்கறீங்க. நான் சொன்னது - ஒரே இடத்துலே அஞ்சு பாம்".

டொக்.

*****

மொட்டை மாடி மனிதன் தன் கணிணியை உயிர்ப்பித்து - நடந்து கொண்டிருக்கும் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் மறுஒலிபரப்பை பார்த்துக் கொண்டிருக்கிறான். நடுநடுவே தன் கைக்கடிகாரத்தையும்.

*****

அங்கே கமிஷனர் அலுவலகம் பரபரப்பாகிறது. எல்லோரும் வார் ரூமில். எல்லாக் கதவுகளையும் இழுத்து பூட்டிவிடுகிறார்கள். கமிஷனரின் தொலைபேசி, ஸ்பீக்கரில் பொருத்தப்படுகிறது.

சரியாக பத்து நிமிடம் கழித்து தொலைபேசி அழைப்பு வருகிறது.

இந்த அழைப்பை ட்ரேஸ் பண்ணுங்க - கமிஷனர்.

"ஹலோ. யார் நீ?"

பின்னணியில் கிரிக்கெட் சத்தம் கேட்கிறது.

"நான் யாராயிருந்தா என்ன? நான் சொல்லப் போற மேட்டர்தான் முக்கியம் கமிஷனர். சீக்கிரம் நான் சொல்றத கேளுங்க. நான் மேட்ச் பாக்கணும்.".

"சாம்பியன்ஷிப் போட்டியில்தான் இந்தியா இல்லையே? அப்புறம் ஏன் நீ மேட்ச் பாக்கணும்? நீ என்ன பாகிஸ்தானியா? நியூஸிக்காரனா? ஆஸ்திரேலியனா அல்லது இங்கிலாந்துக்காரனா?"

"நல்லா யோசிக்கிறீங்க.. ஏன் நான் ஒரு இந்தியனாவோ, தமிழனாவோ, சென்னைவாசியாவோ அல்லது மைலாப்பூர்காரனாவோ இருக்கக்கூடாதா என்ன?"

"டேய் விளக்கெண்ணெய்... நீ சொன்ன எல்லாருமே இந்தியந்தாண்டா... அதை ஏன் தனித்தனியா சொல்றே..."

"சரி அதை விடுங்க. நான் வைச்சிருக்கிற அந்த அஞ்சு பாம்களை இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே கண்டுபிடிச்சு உங்க அலுவலகத்துக்கே கொண்டு வந்து பிரிச்சிப் பாத்துட்டீங்கன்னா அது வெடிக்காது. அப்படி செய்யாமே அதை அங்கேயே திறந்துட்டீங்கன்னா, கண்டிப்பா வெடிச்சிடும்."

தொலைபேசியை ம்யூட்டில் போட்டு - "இந்த அழைப்பை ட்ரேஸ் பண்ணிட்டீங்களா? எங்கேந்து வருதுன்னு தெரிஞ்சுதா?"

"சார். சொன்னா ஆச்சரியப்படுவீங்க. இந்த கால் இதே கட்டிடத்திலிருந்துதான் வருது சார்..."

"அப்படியா?"

வார் ரூமில் சுற்றும்முற்றும் பார்க்கிறார்கள். எல்லோரும் படபடவென்று தங்கள் கணிணியில் தட்டிக்கொண்டிருக்க, ஒருவர் மட்டும் தன் கைப்பேசியை காதில் வைத்து - கையால் மூடியவாறே - ஏதோ கேட்டுக்
கொண்டிருக்கிறார்.

கமிஷனர் அவரிடம் போய் டக்கென்று அவர் தொலைபேசியை பிடுங்கி, காதில் வைத்து கேட்கிறார்.

"திடீர்னு வேனை நிறுத்திடறாங்க. பாதிரியார் பதட்டப்பட்டு பார்க்கிறார். வெளியே போலீஸ் வந்து கதவைத் தட்டுது. எல்லாரும் கீழே இறங்கினப்புறம், போலீஸ் வேனுக்குள்ளே ஏறி என்னவோ தேடறாங்க... ஒரு நிமிஷம் இருங்க.. குக்கரை இறக்கிட்டு வந்துடறேன்..."

"என்னய்யா இது? யாரு போன்லே? என்ன சொல்லிட்டு இருக்காங்க?"

"சார் சார்... சாரி சார்... இது என்னோட மனைவிதான் சார். நீங்க நினைக்கிற மாதிரி அந்த குண்டு வைச்ச ஆள் நானில்லே சார்..."

"சரி.. போன்லே என்ன சொல்லிட்டிருந்தாங்க உங்க மனைவி?"

"அது வந்து... அது வந்து.. நேத்திக்கு நான் கோலங்கள் பாக்கலே. அதனால் அதோட கதையை என்கிட்டே சொல்லிட்டிருந்தாங்க. மன்னிச்சிடுங்க சார்.. இனிமே இந்த மாதிரி நடக்காது."

"அடச்சே... மரியாதையா போனை கட் பண்ணிட்டு, வேலைய பாரு.. வேற யாராவது போன் பண்ணி என்கிட்டே விளையாடறதா இருந்தா இப்பவே சொல்லிடுங்க. நானா கண்டுபிடிச்சேன்னா, தொலைச்சிடுவேன்.."

அப்போது ஒரு காவலாளி ஒருவரை இழுத்து வந்து - "சார். நம்ம கட்டிட மொட்டை மாடியில் இவன் உக்காந்திருந்தான் சார். சந்தேகமாயிருக்கவே பிடிச்சி இழுத்துட்டு வந்திருக்கேன்".

"சபாஷ். நல்ல வேலை பண்ணீங்க. டேய், உன் போனைக் குடு" என்று வாங்கி அதிலிருந்து போயிருக்கும் அழைப்புகளை பார்க்கிறார்.

"உனக்கு என்ன தைரியம் இருந்தா, எங்க கட்டிடத்திலிருந்து எனக்கே போன் பண்ணி குண்டு வெச்சிருக்கேன்னு சொல்லுவே. மரியாதையா சொல்லிடு. அந்த அஞ்சு குண்டு எங்கே வெச்சிருக்கே. எத்தனை மணிக்கு வெடிக்கும்?"

"சார். என்னை மன்னிச்சிடுங்க. நான் குண்டெல்லாம் எங்கேயும் வைக்கலே. நான் குரியர் டெலிவரி பண்றவன். உங்க ஆபீஸுக்கு அஞ்சு பெரிய பார்சல் வந்திருக்கு. அதை என்னாலே தூக்கிட்டு இந்த வெயில்லே வரமுடியல. அதனால் இந்த ஐடியா பண்னேன். அதாவது, இந்த இடத்துலே அஞ்சு பாம் இருக்குன்னும், அதை இங்கே கொண்டு வந்துதான் திறந்து பாக்கணும்னும் சொன்னா, நீங்களே போய் உங்க பார்சலை டெலிவரி எடுத்துடுவீங்கன்னு நினைச்சி, இந்த தப்பை பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. இனிமே இந்த மாதிரி தப்பை பண்ணவே மாட்டேன்".

"மொதல்லே இவனை தூக்கி லாக்கப்புலே போடுங்க. அப்பதான் புத்தி வரும். Mission Accomplished. எல்லாருக்கும் நன்றி. நீங்கல்லாம் உங்க வேலையை பாக்கலாம்."

அரை மணி நேரத்தில் பிரச்சினையை தீர்த்த கமிஷனரை பாராட்டி எல்லோரும் எழுந்து நின்று கைதட்ட - தலையாட்டிக் கொண்டே கமிஷனர் வெளியே செல்ல - பின்னணி இசையில் 'சம்பவாமி யுகே யுகே...'.

முற்றும்.

*****

15 comments:

ஆயில்யன் October 2, 2009 at 12:07 PM  

http://www.google.com/sidewiki/entry/kadagam80/id/9eeg47Cy048nFyb0bOB6Kr0_qbw

ஆயில்யன் October 2, 2009 at 12:07 PM  

அவ்வ்வ்வ் பர்ஸ்ட்டு கமெண்ட் சைடுவிக்கியில டெஸ்ட்டு :)))))))))

ஆயில்யன் October 2, 2009 at 12:09 PM  

//"மொதல்லே இவனை தூக்கி லாக்கப்புலே போடுங்க. அப்பதான் புத்தி வரும். Mission Accomplished. //

டக்குபுக்குன்னு முடிஞ்சுப்போச்சே ஒரு ரெண்டு வெகிகிள் பாம்பிளாஸ்ட் காமிப்பீங்கன்னுல்ல கன்னத்துல கை வைச்சுக்கிட்டு குந்தியிருக்கோம் :)

ராஜ நடராஜன் October 2, 2009 at 1:02 PM  

நேத்தைக்கு ஷாப்பிங்க் காம்ப்ளக்சில் மிஸ்டர்.பீன் லாட்டரி டிக்கட் எண் 696ன்னு வாங்கினாரு.யார் நீங்க இடுகை நினைவு சரியா அந்த நேரம் பார்த்து வரணுமா? எனக்கு டபுள் ட்ரீட்:)

Thamira October 2, 2009 at 3:36 PM  

நடுராத்திரியில பேய் புடிச்சா மாதிரி சிரிச்சுக்கிட்டிருக்கேன். அதுவும் குண்டு எங்கே வெடிக்கும்னு சொல்ற டெக்னிக்கும், காரணமும்.. இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் சின்னதாப்போச்சிது தல..

நசரேயன் October 2, 2009 at 5:25 PM  

சிரிச்சி நிப்பாட்ட முடியலை

எம்.எம்.அப்துல்லா October 2, 2009 at 10:49 PM  

:)

ஆமா..இன்னா அண்ணாத்த எம்மாநாளா நம்ப ஊட்டாண்டையே ஆளக்காணோ. ஏதுனா கோவம்னா மன்னுச்சுகபா.

ஈரோடு கதிர் October 2, 2009 at 11:31 PM  

சூப்பர் காமடி

கலக்குங்க

JACK and JILLU October 3, 2009 at 1:21 AM  

இது நல்லா இருக்கு.... லாலேட்டனும் நம்மாளு கூட சேந்து டரியலாகிறார்....


மோனே தினேஷா..... பாவமாயிட்டு உண்டு

வால்பையன் October 6, 2009 at 12:07 AM  

கூரியர் டெலிவரி பண்ண இப்படி ஒரு ஐடியாவா!?

Anonymous,  March 6, 2010 at 2:51 AM  

You were visited with a remarkable idea

Anonymous,  March 13, 2010 at 5:39 PM  

It not absolutely that is necessary for me.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP