Sunday, October 25, 2009

ச்சின்னப் பையன் 25

பிரபலங்கள்தானே 25 போடணும் நாம எதுக்காக போடணும்னு ஒரு கேள்வி இருந்தாலும் - நம்மை பற்றி நமக்கே சரியாக தெரியாத போது வேறே யார் எழுதமுடியும்னு நினைச்சதாலும் - பதிவு போட்டே ரொம்ப நாளாச்சு, எதையாவது போடணும்றதாலும் - ட்விட்டரில் 104 பேர் பின் தொடர்ந்தாலும் தனியா புலம்பற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோமோன்னு நினைக்கற
அளவுக்கு பொலம்பறதாலும் - அங்கே உளர்னதுலே எனக்கு பிடிச்ச நான் போட்ட 25 ட்விட்டுகளை இங்கே பதிவா போட்டுட்டேன்!!! (யப்பா. ஒரு வழியா அந்த வாக்கியம்
முடிஞ்சிடுச்சு!!!).

*****

1. ச்சின்ன வயசிலே நான் ரொம்ப brightஆ இருந்தேன்னு சொல்வாங்க. அது சரிதான். நான் அப்பவே ujalaவுக்கு மாறிட்டேன்னு அவங்களுக்கு தெரியாது!

2. நானும் ஒரு பேராசிரியர்தான். அவர் அறையிலும் நான் ட்விட்டரிலும் தனியா பேசிட்டிருக்கோம். யாரும் கேக்கறா / படிக்கறா மாதிரி தெரியல!!!

3. கொடை வள்ளல்னு கேள்விப்பட்டு வந்தவங்களுக்கு குடை கிடைத்தது. அது குடை வள்ளல்தாங்க. தப்பா ப்ரிண்ட் பண்ணிட்டாங்க என்றார். காலை வணக்கம்

4. காலை வணக்கம்! வலது கால் செருப்பை வலது காலிலும், இடதை இடதிலும் போட்டுட்டு போனா, இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் இனிய நாளே!!!

5. As I am suffering from lot of work in Office, I am applying for leave for 2 days - Thurs & Friday. Will update everything on Monday. Thanks

6. ஆபீஸ் நேரத்தை பயனுள்ளதாய் கழிக்க, கொஞ்ச நேரம் வெளியே ஷாப்பிங் போறேன்... மறுபடி 1.5 மணி நேரம் கழித்து சந்திப்போம்... நன்றி வணக்கம்

7. காலை வணக்கம். கலைஞர் கடிதம் எழுதறாரா? அம்மா ஓய்வெடுக்கறாங்களா? மருத்துவர் அடுத்த போராட்டமா? அப்போ எல்லாம் asusualதான்.

8. கலைஞர் தாட்ஸ் - படிப்பை குடும்பத்தோட படிச்சா கட்டணத்துலே ஏதாவது தள்ளுபடி கிடைக்குமா????

9. குளிர்காலம் ஆரம்பிச்சிடுச்சு. காலையில் எழுந்துக்கவே சோம்பலா இருக்கு. ஒரு ஆறு மாசம் லீவ் போடமுடியுமான்னு பாக்கணும்!!!

10. #delayedtweets ச்சே அப்பா ரொம்ப மோசம். குடும்பத்தில் யாரும் பதவிக்கு வந்தா முச்சந்தியில் வெச்சி அடிங்கன்றாரே. நான் அமைச்சர் ஆகவே முடியாதா?

11. கலைஞர் தாட்ஸ் - பரிட்சையின் கேள்வித்தாள் முரசொலியில் 'அவுட்' ஆயிடுமா?

12. கலைஞர் தாட்ஸ் - படிப்பை குடும்பத்தோட படிச்சா கட்டணத்துலே ஏதாவது தள்ளுபடி கிடைக்குமா????

13. #delayedtweets மெகா சீரியல்னு ஏதோ ஒண்ணு ஆரம்பிக்கிறாங்களாம். அதை எவன் பாக்கப் போறான்.. நாடகம்னா 13 எபிசோட்தானே வரணும்?

14. நாளைக்கு தலைவர் தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டம் பண்ணப்போறாராம். என்ன ஆகுமோ தெரியலியே!!! #delayedtweets

15. 10.40am. இன்னிக்கு வீட்லேதானே இருக்கேன். அப்புறமும் ஏன் தூக்கம் தூக்கமா வருது?

16. ராஜபக்சேவுக்கு திருக்குறள் மட்டும்தானா? உளியின் ஓசை குறுந்தகடு கிடையாதா? எ கொ கலைஞர் இது?

17. ஒரு பு.அடுப்பு ஊதுகிறது -> ஒரு ஃபுல்லுக்கே இப்படியா உளர்றது? #sequelsthatwillneverbe

18. 1000 த.வா.அ.சிகாமணி -> 1000 தடவை உதை வாங்கினாலும் திருந்தாத ரங்கமணி #sequelsthatwillneverbe

19. எனக்கு 20 உனக்கு 18 -> எனக்கு சரக்கு உனக்கு சைட்டிஷ் #sequelsthatwillneverbe

20. ச்சின்னப்பையன் தாட்ஸ் - இதை ஏதாவது நர்சரி பள்ளியிலாவது ஒரு பாடமா வைக்கமுடியுமான்னு பாக்கணும்

21. நாலே வரின்னாலும் ஆங்கிலப்படத்தில் தமிழ்ப் பாடல். கேட்டீங்களா? நம்ம ஏஆர்ஆர் கலக்கல். குறுகுறு பார்வையிலே http://couplesretreatsoundtrack.com/

22. அமெரிக்கர்களை விடுங்க.. வட இந்தியர்களையே நம்மாட்கள் கடவுள் போலதான் பாக்கறாங்க... இந்த தாழ்வு மனப்பான்மை எப்பத்தான் போகுமோ???

23. இன்னிக்கு 6 மணி நேரம் மீட்டிங். நிறைய பேரு தொடர்ச்சியா பேசுவாங்க. பார்வையை அவங்க மேலே விட்டுட்டு, மனசை இந்தியாவுலே விட்டுட வேண்டியதுதான்...

24. "வயிற்றுக்கும் தொண்டைக்கும்...உருளுதடி"... "அம்மா.. நீ பண்ண சீடையெல்லாம் காணாமே போச்சுன்னியே... அப்பாதான் அதை சாப்பிட்டிருக்காரு"

25. 3000lb capacity கொண்ட மின்தூக்கியில் 140lb மட்டுமே உள்ள நான் தனியா பயணம் செய்தா, மின்தூக்கி திட்டுமா? திட்டாதா?

********

14 comments:

Anonymous,  October 25, 2009 at 9:06 PM  

ஒரு சிலது நமக்கு நாமமே திட்டத்தில போட்ட மாதிரி இருக்கு :)

ஆயில்யன் October 25, 2009 at 10:58 PM  

அவ்வ்வ் மறுபடியும் இங்கேவா ? :))

தொகுப்பா இருக்கிறதால கண்டினியூவா சிரிக்க முடியுது!

அப்பா ரொம்ப மோசம்- lol :))))

Mahesh October 26, 2009 at 12:51 AM  

ரொம்ப நாள்ளைக்கப்பறம்.....ம்ம்ம்

இந்த ட்விட்டர் எனக்கு இன்னும் புரியவே இல்லை.... அதனலயே இன்னும் சேரலை :(

Unknown October 26, 2009 at 1:37 AM  

ஹா ஹா ஹா அண்ணா கலக்கல். :))

ரோஸ்விக் October 26, 2009 at 2:04 AM  

//7. காலை வணக்கம். கலைஞர் கடிதம் எழுதறாரா? அம்மா ஓய்வெடுக்கறாங்களா? மருத்துவர் அடுத்த போராட்டமா? அப்போ எல்லாம் asusualதான்.

24. "வயிற்றுக்கும் தொண்டைக்கும்...உருளுதடி"... "அம்மா.. நீ பண்ண சீடையெல்லாம் காணாமே போச்சுன்னியே... அப்பாதான் அதை சாப்பிட்டிருக்காரு"//

அருமை நண்பா....மிக மிக ரசித்தேன்...வாழ்த்துக்கள்.


http://thisaikaati.blogspot.com

வால்பையன் October 26, 2009 at 4:18 AM  

//இன்னிக்கு வீட்லேதானே இருக்கேன். அப்புறமும் ஏன் தூக்கம் தூக்கமா வருது?//


:)

http://urupudaathathu.blogspot.com/ October 26, 2009 at 7:03 AM  

///பதிவு போட்டே ரொம்ப நாளாயிடுச்சு மக்கள் ஜாலியா இருக்கற மாதிரி தெரியுது அதனால் இந்த வாரம் ரெண்டு பதிவு போட்டுடலாம்னு எழுதிட்டிருக்கேன்///


முக்கியமா இந்த டிவிட்ட விட்டுட்டீங்களே!!! ( எப்புடிடி...)

http://urupudaathathu.blogspot.com/ October 26, 2009 at 7:04 AM  

25 க்கு பதில் நீங்க 100ஏ போடலாம் தலீவா... ( நல்லா கூவுனனா?? அப்படின்னா $ 100000 என்னோட அக்கவுண்ட்ல போட்டுடுங்க)

Thamira October 26, 2009 at 7:16 AM  

வழக்கம்போல ஜிவ்வுனு இல்லை, ஒரு சில பாயிண்ட்ஸ் தவிர.

அறிவிலி October 26, 2009 at 8:28 AM  

பன்னெண்டு எட்டோட ரிப்பீட்டு, அப்போ மொத்தம் 24தான்.


தப்பு கண்டுபிடிச்சே வாழ்வோர் சங்கம்.
சிங்கை கிளை.

எம்.எம்.அப்துல்லா October 26, 2009 at 12:10 PM  

"ச்சின்னப் பையன் 25" ல 25வது
பின்னூட்டம் நம்மளோடது!!

எப்பூடி :))

வால்பையன் October 27, 2009 at 3:26 AM  

அப்துல்லா அண்ணே!

நீங்க வேலையில்லாம சும்மா இருக்குறத இப்படி காட்டணுமா!?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP