ரெண்டு பேருக்கு கெட்டது பண்ணனும்னா, தோசைகூட சுடலாம்!!!
என்னோட நண்பர்கள் பலருக்கு (வட இந்தியர்கள்) அருமையா சமைக்கத் தெரியும். அடிக்கடி நடக்கும் வாரயிறுதி சந்திப்பு - அவங்க வீட்டிலே நடந்ததுன்னா, அவங்கவங்க மனைவிகளை சமையலறையிலேயே விடமாட்டாங்க. ஆண்களே விதவிதமா சமைச்சிக்கிட்டிருக்க,
மனைவிகள் வெளியே உட்கார்ந்து வம்படிச்சிக்கிட்டிருப்பாங்க.
எனக்கோ சமையல்னா - சிந்துபைரவி படத்துலே சுலட்சணா கேக்கறா மாதிரி - கத்திரிக்கா கிலோ என்ன விலைப்பா?. அதனால், ஒவ்வொரு முறை சந்திப்பிலிருந்து வந்தபிறகும் தங்ஸ் மெல்ல - பாத்தீங்களா உங்க நண்பர்களை. வீட்டுலே எப்படி வேலை செய்யறாங்கன்னு.
நீங்களும் இருக்கீங்களே? - ன்னு ஆரம்பிப்பாங்க.
எதையாவது சொல்லி சமாளிக்கணுமே? அதனால் நானும் - ஹேய். லூஸ்லே விடும்மா. பையன் உங்க எதிரே நல்லா வேஷம் போடுறான். நாமெல்லாம் போயிட்டா எந்த வேலையும் செய்ய மாட்டான். கணிணி,
தொலைக்காட்சின்னே இருப்பான். இதெல்லாம் கண்டுக்காதேன்னு சொன்னாலும் விடமாட்டாங்க.
ஆரம்பத்திலே மெல்லமா கேட்டவங்க, போகப்போக - மெல் - மெ - ச - சத் - சத்த - சத்தமா கேக்க ஆரம்பிச்சிட்டாங்க.
என்னடா இது வம்பா போச்சுன்னு உடனடியா ஒரு மினி சந்திப்பு போட்டு (ஆண்கள் மட்டும்!) - ஏம்பா, இப்படியெல்லாம் பண்றீங்க. உங்களாலே எனக்கு தினமும் வீட்டிலே மண்டகப்படி நடக்குது. கொஞ்சம் பாத்து பண்ணுங்கன்னு சொன்னேன். பயபுள்ளைங்க முடியாதுன்னாட்டாங்க. உன் நிம்மதியை பாத்துக்க, நாங்க எங்க நிம்மதியை கெடுத்துக்கணுமா? மனைவியை வேலை செய்னு சொல்லப்போய், இனிமே நீங்க வெளியேதான் படுக்கணும்னு வீட்டை விட்டு துரத்திட்டா என்ன பண்றது?... ஆள விடுடா சாமின்னு கெளம்பி
போயிட்டாங்க.
நானோ இதுக்கு ஒரு வழி கண்டுபிடிச்சே ஆகணும்னு முடிவோட இருந்தேன். வேலையை விட்டுட்டு வேறே ஊருக்குப் போயிடலாமான்னுகூட யோசிச்சேன். ஆனா அங்கேயும் சமையல் செய்யற ஆம்பளைங்க நண்பர்களா வந்துட்டா மறுபடி இதே பிரச்சினைதானே வரும்னு அந்த
முடிவையும் கைவிட்டேன். சாலையில் நடந்துபோகும்போது, எதிரே யாரோ எதுக்கோ சிரிச்சாக்கூட - ஐயோ, இவனுக்கு சமைக்கத் தெரியாதாம்னு சொல்லி, என்னைப் பார்த்து சிரிக்கறமாதிரியே தோணும். இவ்வளவு ஏன், கனவுலே நமீதா வந்து - வாப்பா ச்சின்னப் பையா, ஒரு பாட்டு பாடலாம்னு சொன்னாக்கூட, அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணும்மா... புளிக்குழம்பு வெச்சிட்டு வந்துடறேன்னு சொல்ற அளவுக்கு சமையல் பிரச்சினை என்னை வாட்டிக் கொண்டிருந்தது.
மெதுவா, சரி - சமையலுக்கு மனசளவுலே நான் இன்னும் தயாராகலை. கொஞ்சம் வயசாகணும். இப்போதைக்கு பாத்திரம் வேணா தேய்ச்சி தர்றேன். ஓகேவா? - அப்படின்னு தங்ஸ்கிட்டே கேட்டு அதை செய்ய ஆரம்பிச்சேன்.
ஆரம்பத்துலே அப்பப்போ செய்துக்கிட்டிருந்த அந்த வேலை, பிறகு அப்பப் - அப் - அடி - அடிக் - அடிக்கடி - தின - தினமும்னு ஆயிடுச்சு.
நீயும் பொம்மை, நானும் பொம்மைன்னு சோகமா பாடிக்கிட்டே பாத்திரம் தேய்ச்சிக்கிட்டு இருந்தவன் - தங்ஸின் குரல் குறைய ஆரம்பித்ததால், சந்தோஷத்தில் - ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறதுன்னு பாட ஆரம்பித்தேன்.
அவ்ளோதான். எல்லா பிரச்சினையும் முடிஞ்சிடுச்சு - சமைக்காமேயே தப்பிச்சிடலாம்னு மனப்பால் குடிச்சிக்கிட்டு நிம்மதியா இருந்தேன். பொறுக்குமா ஆண்டவனுக்கு.
எல்லா பாத்திரங்களையும் பளபளன்னு தேய்ச்சி முடிச்சிட்ட ஒரு நல்ல மாலை வேளையில், ஒரு நண்பன் தொலைபேசினான் - என்னய்யா. இப்படி பண்றே? நீ பண்றது கொஞ்சம் கூட நல்லாவேயில்லைன்னு கதற ஆரம்பிச்சிட்டான்.
இல்லையே.. எல்லாம் பளபளன்னு ஜொலிக்குதே? அங்கேந்து நீ எப்படி நல்லாயில்லேன்னு சொல்லலாம். வேணா இங்கே வந்து பாருன்னு - நானும் பதிலுக்கு கத்தினேன்.
அப்புறம்தான் புரிஞ்சுது - என் வீட்டுவேலையின் திறமைகளை தங்ஸ் - நண்பன் மனைவியிடம் சொல்லி - அங்கே அவனுக்கு பெண்டு நிமித்திட்டாங்க.
உன்னை காட்டி இது நாள்வரைக்கும் நான் தப்பிச்சிட்டிருந்தேன். இப்போ திடீர்னு நீ பாத்திரம் தேய்க்க ஆரம்பிச்சிட்டியாம். அது எனக்கு பிரச்சினையாயிடுச்சுன்னு ஒரே புலம்பல். பையனுக்கும் சமையல் நஹி. வீட்டு வேலையும் செய்யாமே தப்பிச்சிட்டிருந்தான். ஆம்பளையா
பொறந்துட்டு வீட்டு வேலையும் செய்யாமே இருக்கணும்னா முடியுமா? நாந்தான் அவனுக்கு அறிவுரை கூறினேன்.
அதெல்லாம் முடியாது. நீ பாத்திரம் தேய்க்கறத நிறுத்துன்னு கட்டளையிட்டான். நானும் - முடியாது. முதல்லே அவங்கள (மத்த நண்பர்களை) நிறுத்தச் சொல்லு. அப்புறம் நான் நிறுத்தறேன்னு நாயகன் பாணியில் சொன்னேன்.
இப்படியாக, நான் ஒருத்தன் ச்சின்னச்சின்ன வேலைகளை செய்யறதாலே, வேறெங்கேயோ இன்னொருத்தனுக்கு ஆப்பு கிடைக்குதுன்னு நினைச்சிப் பாத்தப்போ ரொம்ப, ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது.
நல்லா தூங்கிக்கிட்டிருந்த தங்ஸை தட்டி எழுப்பி - நாளையிலேந்து நான் தோசை சுட கத்துக்கப் போறேன்னு சொன்னேன்.
ரெண்டு பேருக்கு கெட்டது பண்ணனும்னா, தோசை சுடறதுலே தப்பேயில்லே!!!
*****
20 comments:
கலக்கல்.
ரெண்டு பேருக்கு கெட்டது பண்ணனும்னா, தோசை சுடறதுலே தப்பேயில்லே!!!
ஹா ஹா ஹா
கலக்கல்.
சூப்பர்....:))))
ரெண்டு பேர்ல ஒருத்தன் நானா?
எங்கேர்ந்து எங்க ஆப்பு வெக்கிறாய்ங்கப்பா????
(வூட்டுக்காரம்மா இன்னும் படிக்கல, ப்ளீஸ்... போஸ்ட தூக்கிருங்க)
அடப்போமய்யா... கலக்கல்... அசத்தல்னு சொல்லி சொல்லி போரடிச்சுடுச்சு... அப்பப்ப ஒரு மொக்கையும் போடுங்க. :)))))))))))))))))))))))))))
தமிழ் வலை உலகின் சமீபத்தில் படித்த சிறந்த நகைச்சுவை பதிவு!
தொடரட்டும் உமது பணி.
அடப்பாவிகளா! அடுத்தவன் பொழப்பக் கெடுக்கறதுல அவ்வளவு ஆர்வமா?
(பல வரிகளுக்காக இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன். மகேஷ் கமெண்டுக்கு ஒரு ரிப்பீட்டு)
யோவ் வெளக்கெண்ணை, நீர் பாத்திரம் வெளக்குறதையெல்லாம் யாரு பதிவு எழுதச்சொன்னது. சமயங்களில் முதுகுக்குப்பின்னால் இங்கேயும் தங்கமணி பதிவு படிப்பதுண்டு. சிக்கலாயிரப்போவுது. அப்புறம் நேர்ல வந்தாவது உதைப்பேன். சொல்லிப்புட்டேன்.
அந்த பயம் இருக்கணும் :)))
/
அப்புறம்தான் புரிஞ்சுது - என் வீட்டுவேலையின் திறமைகளை தங்ஸ் - நண்பன் மனைவியிடம் சொல்லி - அங்கே அவனுக்கு பெண்டு நிமித்திட்டாங்க.
/
:))))))))))
நல்லவேளை நம்ப தங்ஸ்ங்க ப்ரெண்ட்ஸா இல்ல
நான் தப்பிச்சேண்டா சாமி
:))))))))))))))
நல்ல புத்திமதியுடன் கூடிய பதிவு! :)
தலைப்பு சூப்பரப்பு!
சூப்பரு சின்னப்பையன் ! கலக்குங்க.
கலக்கல் தலை... நல்லா சிரிச்சேன்..
எனக்கு ரெண்டு தோசை பார்சல் :)
\\போகப்போக - மெல் - மெ - ச - சத் - சத்த - சத்தமா //
எவ்ளோ தெளிவா சொல்லி இருக்கீங்க :)
கோபாலை இந்தப் பதிவைப் படிக்கச் சொல்லி பரிந்துரைச்சேன்.
ஆளு இப்ப அம்பேல்!!!
சீக்கிரம் சப்பாத்தி போடவும் கத்துக்குங்க :)
பளிச் தலைப்பு:)
தோசை மொறு மொறுன்னு இருந்துச்சு:)
தோசை நல்லா வந்ததா ச்ச்ச்சின்னப் பையன்...
Post a Comment