Tuesday, September 29, 2009

நொறுக்ஸ் - செவ்வாய் - 09/29/09

இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஜோதா அக்பர் திரைப்படம் பார்க்க வரமாட்டேன்னு சொல்லிட்டிருந்த நண்பரை மிகவும் வற்புறுத்தி அழைத்துச் சென்றேன். போகும்போது, போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த நண்பர் கார் மீது மற்றொரு கார் இடித்து விபத்து. அன்றிலிருந்து, எங்கு சென்றாலும் என்னை அழைப்பதை குறைத்துக் கொண்டார் அந்த நண்பர். அந்த விபத்துக்கு நானும் ஒரு காரணம்தான் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.


அதே போல், சென்ற மாதம் சஹானாவின் பிறந்த நாள் விழாவுக்காக, பக்கத்து ஊரிலிருந்து ஒரு நண்பரை அழைத்திருந்தோம். வர்றேன், வந்துட்டே இருக்கேன்னு சொன்ன நண்பர் கடைசி வரை வரவேயில்லை. பிறகு பார்த்தால், எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போது - விபத்து. கவனக்குறைவால் இவர் வேறொரு வண்டியில் போய் இடித்துவிட்டாராம்.


இந்த விபத்துக்கு நீ பொறுப்பு கிடையாது. உங்க வீட்டுக்கு வரும்போது நடந்திருந்தாலும், என்னுடைய தப்புதான் அது - என்று நண்பர் கூறிக்கொண்டிருந்தாலும், மனதுக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது. சில நாட்களுக்கு என்ன செய்வதென்றும் புரியவில்லை...:-((


*********


தினமும் காலையில் நடக்கும் 5.30 மணி மீட்டிங்கில், கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் கலந்து கொள்ளவில்லை. தூக்கத்தில் 6.15 மணியைப் பார்த்து, 5.15தானே ஆகுது, இன்னும் பத்து நிமிடம் தூங்கலாம்னு தூங்கி, எழுந்து பாத்தா, மணி 6.45 ஆகிவிட்டிருந்ததே காரணம்.


பஞ்சும் நெருப்பும் பக்கத்து பக்கத்துலே இருந்தாக்கூடப் பரவாயில்லே... இந்த அஞ்சும் ஆறும் ஒரே மாதிரி இருக்கிறதை - ஒரு அரசாணை போட்டு மாத்தமுடியுமான்னு கேட்டு சொல்லுங்கப்பா.... அவ்வ்வ்..


*********


ரொம்ப நாள் கழிச்சி தங்ஸுக்கு மிகவும் முக்கியமான ஒரு சந்தேகம் வந்தது. எங்களுக்கு தாலி, மெட்டி இந்த மாதிரியெல்லாம் இருக்குற மாதிரி, ஆம்பளைங்களுக்கு ஒண்ணும் இல்லையே? அவங்களுக்கு கல்யாணமாயிடுச்சுன்னு எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு கேட்டுட்டாங்க..


பொம்பளைங்க ஷாப்பிங் போனாலோ, அல்லது சும்மாவே வெளியே போனாலோ தனியா போறீங்க. அப்போ உங்களுக்கு கல்யாணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்கத்தான் அதெல்லாம். ஆம்பளைங்களை கொஞ்ச நேரமாச்சும் தனியா விடறீங்களா? இல்லையே? எங்கே போனாலும் கூடக்கூட வந்துடறீங்கல்லே... அப்புறம் எங்களுக்கு எதுக்கு தனியே ஒரு குறியீடு? பொண்டாட்டி கூட இருந்தா, கல்யாணமாயிடுச்சுன்னு நினைச்சிக்க வேண்டியதுதான் - அப்படின்னு சொன்னேன்.


சரிதானே?


*********


சஹானா பாட்டுக்கு பாடகி சின்மயிக்கு விருது கிடைத்திருக்காம். இதில் எனக்கு ஆச்சரியமேயில்லை. சஹானாவுக்குதான் பரிசு கிடைக்கும்னு முன்னாடியே தெரியும். பின்னே சத்யா இல்லேன்னா மகேஷ்னு பாட்டு எழுதியிருந்தா அதுக்கெல்லாம் பரிசு கிடைக்குமா என்ன?... :-))

என்ன மகேஷ் அண்ணே, சரிதானே?

********

இந்தியாவிலிருந்து திரும்பி வரும்போது பத்து கிலோவுக்கு புத்தகங்கள் வாங்கி வந்திருந்தேன். சுஜாதா, சாரு, ஜெயமோகன், பாரா, ஜெஃப்ரி ஆர்ச்சர் இவங்களையெல்லாம் விமானத்தில் படிக்க ஆரம்பித்து, இங்கே வீட்டில் ஓய்வறைக்கு உள்ளே, வெளியே, துணி துவைக்கப் போகும் இடத்தில் கிடைக்கும் ஒரு மணி நேரத்தில் - இங்கெல்லாம் படித்துப் படித்து, முடித்தேன்.

இனிமே 'உள்ளே' சுடோகுதான் போடணும்.... :-((

******

டாக்டர் விஜய் மட்டும்தான் அவரோட அரசியல் பிரவேச முடிவை மாத்திக்க முடியுமா என்ன?... நான்கூட சென்ற இடுகையில் கூறியபடி - நபோஒ - பதிவர்களின் பார்வையில் - இடுகையை நேரமின்மையால்
எழுதவில்லையென்று அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன்.


இருந்தாலும், அடுத்த வருடம் தமிழக அரசின் சார்பில் சிறந்த படமாக உபோஒ தேர்ந்தெடுக்கப்படப்போவதால், அதைப் பற்றி எழுதலேன்னாலும், அதோட உல்டா நபோஒ -வைப் பற்றி ஏதாவது எழுதியே
ஆகவேண்டுமென்பதால் ... இப்படியெல்லாம் பின்னூட்டம் வந்திருந்தால் எப்படியிருக்கும்னு ஒரு சிறு கற்பனை...


**


இது ஒரு சிறந்த ஆணாதிக்கப் பதிவு. இதையேதான் நாங்க ஆட்டோகிராஃப் படத்துலேந்து சொல்லிட்டு வர்றோம். இதையே ஒரு பெண் தொலைபேசி, வீட்டிலே ஆம்பளை இருக்கறதா பதிவு எழுதக்கூடாதா... இல்லே அப்படி எழுதினாதான் நல்லா இருக்காதா...


ஹாஹா... நண்பா.. மத்தியானம் 12 மணிக்கு எந்த பெண் வீட்டு வேலை பாக்கறாங்க... அப்பதான் டிவிலே சீரியல் ஓடிட்டிருக்குமே.... ஒரு வேளை விளம்பர இடைவேளையில் அப்படி நடக்கும்னு எழுதியிருந்தீங்கன்னா... ஓகே...


சுத்தமா ஒத்துக்கவே முடியாத பதிவு... ஒரு புருஷன் எப்படிப்பட்ட கொம்பனா இருந்தாலும், எப்படித்தான் குரலை மாத்தி பேசினாலும், அவனோட மனைவியால் உடனடியா கண்டுபிடிக்கப் படுவான். இங்கே
அந்தப் பெண் அப்படி கண்டுபிடிக்கலேன்றதாலே, இந்த பதிவே டோட்டல் பீலா.... வர்ட்டா...


தலைவா... அவன் வீட்டு சமையல்லேந்து ஒரு நாளைக்கு தப்பிச்சிட்டான்... ஆனா மறுபடி அடுத்த நாள் மாட்டித்தானே ஆகணும்... என்னவோ போங்க...


அவரை எங்க வீட்டுக்கும் தொலைபேசி இப்படியே செய்யச் சொல்லுங்களேன்...


பொம்பளைங்கன்னாலே வீட்டு வேலை செய்யத்தான்னு முடிவு பண்ணிட்டீங்களா... இது வேலைக்காகாத பதிவு...


இந்த பதிவுலே அந்த எதிர் வீட்டு ஜன்னலுக்கு என்ன வேலைன்னே தெரியல. கடைசி வரை, அவங்களுக்கு இதனால் என்ன நன்மைன்னே புரியல... சும்மா அவங்க கால்ஷீட் கிடைச்சிடுச்சுங்கறதால் அவங்களையும் கதையில் சேத்துக்கிட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.... சரிதானே?

************

13 comments:

வால்பையன் September 30, 2009 at 12:46 AM  

அஞ்சு, ஆறு மேட்டர் சூப்பர்!
ஏனா நானும் பலமுறை அப்படி பல்பு வாங்கியிருக்கேன்!

அறிவிலி September 30, 2009 at 2:26 AM  

//என்ன மகேஷ் அண்ணே, சரிதானே?//
சஹானாக்களோட அப்பாவெல்லாம் சேந்து சங்கம் வெச்சிருக்கீங்களா???

pudugaithendral September 30, 2009 at 2:44 AM  

வந்தேன் படித்தேன்

எம்.எம்.அப்துல்லா September 30, 2009 at 3:09 AM  

மனதுக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது. சில நாட்களுக்கு என்ன செய்வதென்றும் புரியவில்லை...:-((

//

யோவ்..லூசு அண்ணே. நீங்க கூப்பிட்டு உங்க வீட்டுக்கு வந்தேனே. நல்லாத்தான வந்துட்டுப் போனேன்?

மணிகண்டன் September 30, 2009 at 4:02 AM  

****

யோவ்..லூசு அண்ணே. நீங்க கூப்பிட்டு உங்க வீட்டுக்கு வந்தேனே. நல்லாத்தான வந்துட்டுப் போனேன்?
****

அண்ணேன்,

அதையும் சேர்த்து தான் மனசு கஷ்டமா இருக்குன்னு சொல்றாரான்னு கேக்கறீங்களா :)-

வேந்தன் September 30, 2009 at 5:50 AM  

நொறுக்ஸ் நல்லா இருந்துச்சு.:)

Cable சங்கர் September 30, 2009 at 6:11 AM  

அருமையான நொறுக்ஸ்..

Mahesh September 30, 2009 at 7:13 AM  

//பின்னே சத்யா இல்லேன்னா மகேஷ்னு பாட்டு எழுதியிருந்தா அதுக்கெல்லாம் பரிசு கிடைக்குமா என்ன?.//

சரியாச் சொன்னீங்க.... அவ்வ்....

Thamira October 2, 2009 at 9:35 AM  

சரிதானே?// ரெண்டு சரிதானேவுக்கும் பதில் சரிதான்.

அப்புறம் துணி துவைச்சுக்கிட்டே எப்பிடி படிக்கிறீங்கன்னு ஒரு பதிவு போடவும்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP