நம்மைப் போல் ஒருவன்...!!!
நண்பகல் 12 மணி. அந்த உயர்ந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஒருவன் ஏறிக் கொண்டிருக்கிறான். கையில் மதிய உணவுப் பொட்டலம், தண்ணீர் பாட்டில், கைப்பேசி மற்றும் ஒரு சிறிய கணிணி. மாடியில் கிடக்கும் ஒரு கிழிந்த பாயில் உட்கார்ந்து - சுற்றும் முற்றும் பார்த்து - சோம்பல் முறித்தவாறே - கைப்பேசியில் எண்களை அழுத்துகிறான்.
அதே வேளையில், நகரில் ஒரு வீட்டில் ஒரு பெண் வீட்டுவேலை செய்துகொண்டிருக்கிறார். அப்போது தொலைபேசி அடிக்கிறது. எடுத்துப் பேசினால் - "உங்க புருஷனைப் பத்தி ஒரு விஷயம் சொல்லப் போறேன். அதை கேக்கறதுக்கு நீங்க தயாரா இருக்கீங்களான்னு நான் பாக்கணும். உங்க வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு வாங்க. ஒரு பத்து நிமிஷம் கழிச்சி மறுபடியும் கூப்பிடறேன்". அந்தப் பெண் - ஹலோ, ஹலோவென்று சொல்லச் சொல்ல, தொலைபேசி வைக்கப்படுகிறது.
மொட்டை மாடி மனிதன், தண்ணீர் குடித்தவாறே தன் கைப்பேசியில் இணையத்தை மேய்ந்து கொண்டிருக்கிறான். பத்து நிமிடம் கழித்து - மறுபடி கைப்பேசியில் எண்களை அழுத்துகிறான்.
"நீ யாரு? என் புருஷனைப் பத்தி எனக்குத் தெரியாத எதை சொல்லப் போறே?"
"நான் யாருன்றது முக்கியமில்லே. நான் சொல்லப் போற விஷயம்தான் முக்கியம். ஆனா அதுக்கு முன்னாடி கவனமா கேளு. நான் சொல்ற இந்த நாலு பொருட்களை எடுத்து உங்க வீட்டு காம்பவுண்ட் சுவற்றுக்கு வெளியே வைக்கணும். உன்னுடைய கைப்பையிலிருந்து கைக்குட்டை, அலமாரியிலிருந்து உன் சென்ட் - அதாவது நாத்தமருந்து, இன்னிக்கு காலையில் நீ செய்த சாம்பார் மற்றும் உன் புருஷனோட ஒரு பழைய பனியன் - இந்த நாலு பொருட்களையும் வெளியே வெச்சிட்டு வா. அடுத்து 30 நிமிஷம் கழிச்சி மறுபடி கூப்பிடுறேன்."
"நீ சொல்றத கேக்கலேன்னா?"
"எனக்கு ஒண்ணும் நஷ்டம் கிடையாது. உன் புருஷனைப் பத்தி ஒரு நல்ல விஷயம் சொல்லலாம்னு பாத்தேன். அப்புறம் அந்த ரகசியம் உனக்குத் தெரியாமலேயே போயிடும். பரவாயில்லையான்னு முடிவு பண்ணிக்கோ."
டொக்.
"ஹலோ, ஹலோ"
*****
மொட்டை மாடி. இப்போது வேறொரு எண்ணை அழுத்துகிறான்.
"ஹலோ"
"உன் வாழ்நாளிலேயே உனக்குப் பிடிச்ச செய்தி ஒண்ணு சொல்றேன். கேட்டுக்க தயாரா இருக்கியா?"
"யார் நீ? என்ன செய்தி அது?"
"உடனே உன் வீட்டு ஜன்னலிலிருந்து வெளியே எட்டிப் பார். எதிர் வீட்டிலிருந்து ஒருவர் சில பொருட்களை எடுத்து வந்து வெளியே வைப்பாங்க. அடுத்த பத்து நிமிடங்களுக்கு அப்படியே பாத்திட்டு இரு. நீ ரொம்ப நாளா எதிர்பார்த்தது நடக்கும்."
*****
எழுந்து போய் வெளியே நகரத்தைப் பார்க்கிறான். மொட்டை மாடியிலிருந்து நல்ல வியூ. ஆனால், உச்சி வெயில் மண்டையை பொளக்கவே, மறுபடி வந்து நிழலில் உட்கார்ந்து - படபடவென்று நெட்டி முறித்தவாறே - மதிய உணவுப் பொட்டலத்தை பிரித்து நிதானமாக சாப்பிட ஆரம்பிக்கிறான்.
*****
முதலில் பார்த்த பெண் வீடு.
"தொலைபேசியிலே பேசினது யாருன்னே தெரிய்லியே. இவரோட பேசலாம்னா ஸ்விச்ட் ஆஃப்னு வருது. எங்கே போய் தொலைஞ்சாரோ தெரியலே. சரி, அவன் சொல்றத கேக்குறத தவிர வேறே வழி தெரியல. அந்த நாலு பொருட்களையும் எடுத்து வெளியில் வெச்சிடுவோம்."
பொருட்களை சேகரிக்க ஆரம்பிக்கிறார்.
*****
இரண்டாவதாக பார்த்த பெண் (எதிர்) வீடு:
"ஹலோ.."
"ஆமா. நீங்க சொன்ன மாதிரியே எதிர் வீட்லே அவங்க பொருட்களை எடுத்து வெளியே வெச்சாங்க. அந்த பொருட்கள் கிட்டே வந்த தெரு நாய்கள், வாசனை பார்த்தவுடன், அலறி அடித்து ஓடிடுச்சுங்க. இனிமே அதுங்க இந்த தெருவுக்கே வராதுன்னு நினைக்கிறேன்".
டொக்.
*****
மறுபடி முதல் வீடு:
"நான் சொன்ன மாதிரியே செஞ்சதுக்கு நன்றி".
"உனக்கு எப்படி தெரிஞ்சுது."
"ஹாஹா.. நடக்கறதை நான் பாத்துக்கிட்டே இருக்கேன்".
"நீ யாருன்னு சொல்லு. நாய்களை ஏன் இந்த தெருவை விட்டு துரத்தினே?"
"பொதுமக்களுக்கு பிரச்சினை பண்ணுதுன்னு நகராட்சியே நாய்களை பிடிச்சிட்டு போகுது. நானோ வெறும் துரத்தித்தானே விட்டேன். அவங்க பண்ணா சரி. அதுவே நான் பண்ணால் தப்பா?"
"அது சரிதான். நாய்ங்களால் எங்களுக்கு பிரச்சினைதான். அதுக்கு எதுக்கு எங்க வீட்டை செலக்ட் பண்ணே? நீ யாரு"
"கடைத் தெருவுலே, சூப்பர் மார்க்கெட்லே ஜோடியா ஷாப்பிங் பண்ணும்போது புருஷனை பொண்டாட்டி திட்டிக்கிட்டே வருவாங்களே - அவனை மாதிரி நானும் ஒரு அப்பாவி மனுஷந்தான். நாய்களால் நான் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கேன். அவங்களை துரத்த என்ன வழின்னு யோசிக்கும்போதுதான், இந்த ஐடியா எனக்கு தோணிச்சு. நான் யாருன்னு உங்களுக்கு தெரிய வேண்டியதில்லே. இனிமே நீங்க கொஞ்ச நாளைக்கு தெருவுலே பயமில்லாமே நடமாடலாம். சம்பவாமி யுகே யுகே..."
டொக்.
*****
"அப்பாடா. அந்த மூணு பொருட்களால் வீட்லே பயங்கர கப்பு. என்னாலேயே தாங்கவே முடியல. பாவம் அந்த நாய்ங்க என்ன பண்ணும். ஓடியே போயிடுச்சுங்க. ஒரே கல்லுலே ரெண்டு மாங்கா. எல்லாம் அவளோட பொருளாவே எடுத்துப் போட்டா, என் மேலே சந்தேகம் வந்துடும்னுதான், என்னோட பனியனையும் எடுத்துப் போடச் சொன்னேன். இனிமே நிம்மதியா வீட்டுலே இருக்கலாம். ஐயய்யோ.. லஞ்ச் அவர் முடிஞ்சிடுச்சே. கீழே மேனேஜர் கத்துவாரே. போய் வேலையை ஆரம்பிக்கணும்".
ட்ரிங்.. ட்ரிங்..
"என்னங்க. சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவீங்கல்லே. வரும்போது உங்களுக்கு புது பனியன் வாங்கிட்டு வந்துடுங்க. இன்னிக்கு இன்னொரு சமாச்சாரம் நடந்துச்சு. சாயங்காலம் சொல்றேன். வெச்சிரட்டா"
டொக்.
மாடியிலிருந்து மெதுவாக கீழிரங்கிப் போக, காமிரா அவர் பின்னால் zoom out ஆகிறது.
சுபம்.
*****
பின்குறிப்பு : இந்த கதையை பதிவர்கள் விமர்சனம் பண்ணா எப்படி இருக்கும். அதுதான் என்னோட அடுத்த இடுகை.... விரைவில்...
*****
23 comments:
சிம்ப்ளி சூப்பர்ப்..!
அட்டகாசம் ச்சின்னப் பையன்.. அசத்திட்டீங்க..!
உங்களுக்கு கற்பனை வளம் ஜாஸ்தி போலிருக்கு..!
:)
கலக்கல்!
அருமை..அடுத்த பதிவினை படிக்க ஆவல்...
தலைவா !!
இந்த உலகில்
உன்னைப் போல் ஒருவன் இல்லை !! :)
அடுத்த பதிவு எப்ப போடுவீங்க ??
கலக்கல்!
சூப்பர்.
அடுத்த பதிவை எதிர் பார்க்கின்றேன்.
-----------------
நம்மைப் போல் ஒருவன் விமர்சனம்.
நாத்தம் எண்டா அது பெண்களின் பொருளாதான் இருக்க வேண்டுமா? ஆணின் பழைய பனியன் சும்மா இடைச்செருகல். இது ச்சின்னப் பையனின் பெண்கள் மீதான வெறுப்பைக் காட்டுது. ஹிஹிஹி :)))))
குரு.. உங்க ஏரியா. அடி பின்றீங்க.. இதவிடவும் இதில இருந்த நுண்ணியரசியலை எழுதப்போகும் அடுத்த பதிவுக்கு வெயிட்டிங். அதுதான் முக்கியம்.! ஹிஹி..
அடுத்த பதிவுக்கு வெயிட்டிங். ithu super.
இத இத இதத்தான் எதிர்பார்த்தேன், :)))))))))))))))))))))))))))))
//குரு.. உங்க ஏரியா. அடி பின்றீங்க.. இதவிடவும் இதில இருந்த நுண்ணியரசியலை எழுதப்போகும் அடுத்த பதிவுக்கு வெயிட்டிங். அதுதான் முக்கியம்.! ஹிஹி..
//
ரிப்பீட்டேடேடேய்ய்ய்.
:)
இது நல்லாருக்கு!
அடுத்த பதிவுல என்னமோ இருக்கும் போலயே!
ஐயா... இப்படி தனியா சிரிக்க வச்சுட்டீங்களே...
நல்ல பார்ம்ல இருக்கிறீங்க.
தொடர்ந்து அட்டகாசமான இடுகைகள்.
கலக்குங்க
உங்களோட ஆணாதிக்க மனப்பான்மையை இத விட கேவலமா சித்தரிக்க முடியாது. பெண்ணுரிமைக் கழகங்கள் இதைப் படிச்சுட்டு வாளாவிருப்பாங்கன்னு மட்டும் தப்ப்க் கணக்கு போடாதீங்க.
அது ஏங்க உங்க பனியனை போனாப் போகுதுன்னு சேத்துக்கிட்டீங்க? சொல்லப் போனா உங்க சாக்ஸையும் சேத்துருக்கணும். கொஞ்ச நாள் முன்னால நீங்களே ஒத்துக்கிட்ட விஷயம் நீங்க சாக்ஸ்ல பாடிஸ்ப்ரே அடிச்சுக்கறது. இப்ப பெண்களை, அவங்க உடைமைகளைப் பத்தி பகிடி பண்றீங்க.
ம்ம்ம்... இந்த ஆணாதிக்க(ரப்பான் பூச்சி) மனப்பான்மை எப்ப ஒழியுமோ?
அப்பாடி... மூச்சு வாங்குது...
நல்லாருக்கு... :))
சொன்னால் கேள் ! ஆஸ்கர் தூரமில்லை !!!
நான் ஒன்னும் விமர்சனம் பண்ணல.காரணம் அதான் அடுத்து நான் விமர்சனம் பண்ணுனா எப்பிடி இருக்கும்னு நீங்களே சொல்ல போறீங்களே :))
எக்ஸ்ட்ரா ஒரு பைய எங்க வைக்கிறதுன்னு கமல் யோசிச்சிகிட்டு இருக்கார்:)
Excellent Timing..
//பின்குறிப்பு : இந்த கதையை பதிவர்கள் விமர்சனம் பண்ணா எப்படி இருக்கும். அதுதான் என்னோட அடுத்த இடுகை.... விரைவில்...
//
ippavee thalaya suththuthee..ithu veeraiyaa..
waiitng for next ....
இத்தனை நாள் நீங்கள் போட்ட வேஷம் கலைந்தது. உங்கள் ஆணீய சிந்தனை வெளி்ப்பட்டுவிட்டது.
:)))))))
அப்படியே போன பதிவுல போட்ட தோசையையும் சேத்து ரோட்ல வெச்சிருந்தா நாயெல்லாம் ஊர விட்டே ஓடியிருக்குமில்ல.
இந்தக் கதையில் முற்போக்கு ஆணாதிக்கமும் பிற்போக்கு பெண்ணாதிக்கமும் தலைவிரித்தாடுகிறது. அப்புறம். ம், மறந்து போச்சே.
சரி விடுங்க. நல்லாயிருக்கு.
Post a Comment