Tuesday, March 31, 2009

தொலைபேசி லொள்ளுகள்!!!


வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் / உறவினர்களிடம் தொலைபேசுதலில் உள்ள பிரச்சினைகள் என்னன்னு இங்கே பாப்போம்.

*****

போட்டுக் கொடுத்தல்:

ஒரு உதாரணத்திற்கு, xம் yம் நம் உறவினர்கள். x கிட்டே சில தடவை பேசின நான், y கிட்டே பேசலைன்னு வைங்க - என்ன ஆகும், yயை பார்க்கும்போது x போட்டு வைப்பார். "என்ன, உங்க நெருங்கிய உறவினர்னு சொல்றீங்க. அவன் உங்ககிட்டே பேசவேயில்லையா? என்கிட்டேயே நிறைய தடவை பேசிட்டானே?". ஏதோ நம்மாலானதுன்னு பத்த வெச்சிட்டு போயிடுவாங்க.

பொகஞ்சிக்கிட்டே இருக்கற yயிடம் அடுத்த தடவை பேசும்போது - "நீங்கல்லாம் பெரிய
மனுசங்க. நம்மகூடல்லாம் பேச நேரமிருக்குமா?"ன்னுதான் பேச்சே ஆரம்பிக்கும்.

நமக்கும் காடுவெட்டி மாதிரி வாயிலே கெட்ட கெட்ட வார்த்தைகளா வரும். ஆனா, வெளிப்படையா பேசமுடியாது. ஹிஹின்னு வழிஞ்சிக்கிட்டு பேச்சை மாத்தி வேறே ஏதாவது பேச ஆரம்பிக்கணும்.

பயங்கர பிஸி:

நேரில் பார்த்தால் கண்டபடி பாசம் காட்டும் பயபுள்ளைங்க, கண்ணிலிருந்து மறைந்துவிட்டால், நம்மை அப்படி மறந்துடுவாங்க. மின்னஞ்சல் அனுப்பினால், அதற்கும் பதில் வராது. கேட்டால், "மாப்ளே - ஆபீஸ்லே பயங்கர பிஸிடா"ன்னுவாங்க.

மாசத்துக்கு ஒரு மின்னஞ்சல்கூட அனுப்பமுடியாமே அவ்ளோ பிஸியா இருக்கீங்களாடேன்னு கேக்க முடியாது. அப்போ நான் மட்டும்தான் இங்கே சும்மா உக்காந்திருக்கேனான்னும் கோபம் வரும்.

அப்புறம் உண்மை(!) தெரிஞ்சதும் மனம் தெளிவடைஞ்சிடும்(!).

நோ மேட்டர்:

இன்னும் சில பேர் இருக்காங்க. பேசி கொஞ்ச நாள் ஆனா போறும் - வீட்லே கம்ப்ளெய்ண்ட் பண்ணிடுவாங்க. "பையன் தொலைபேசி ரொம்ப நாளாச்சு. உங்ககிட்டே பேசும்போது எனக்கும் அடிக்கடி பண்ணச் சொல்லுங்க".

சரின்னு தொலைபேசினா - ஒரு நிமிடம்கூட இருக்காது - அதிலேயே பல தடவை - ம். அப்புறம், அப்புறம் என்ன விஷயம் - இப்படிதான் பேச்சு இருக்கும். மேட்டர் என்னன்னா, பேசறதுக்கு விஷயமே இருக்காது. அப்புறம் என்னதுக்கு வெங்காயம் என்னை தொலைபேசச் சொன்னே? இப்படி கேக்கமுடியுமா? கண்டிப்பா முடியாது.

மொக்கை படமாத்தான் இருக்கும்னு முன்னாடியே தெரிஞ்சாலும், நாமும் விடாமே டாக்டர் விஜய் படங்களையெல்லாம் திரையரங்கத்துக்குப் போய் பாக்கறதில்லையா, அதே போல இந்த மாதிரி ஆட்களுக்கும் அடிக்கடி தொலைபேசி மொக்கையை பொறுத்துக்கணும். அவ்ளோதான் விஷயம்.

ரிச்சி ஸ்ட்ரீட்:

சில பேருக்கு ரிச்சி ஸ்ட்ரீட்டோ அல்லது ஏதாவது எலக்ட்ரானிக்ஸ் கடைக்கோ போனாதான் எங்க நினைவே வரும். உடனே ஒரு மின்னஞ்சல் தட்டி விடுவாங்க - "அர்ஜண்ட் மேட்டர். உடனே தொலைபேசு".

நாமளும், பாசக்கார பய, நம்மள தொலைபேசச் சொல்றானேன்னு பேசினா - "எப்ப ஊருக்கு வர்றே. வரும்போது ஒரு எம்.பி3 ப்ளேயர், ஒரு லேப்டாப் இதெல்லாம் வாங்கி வரணும். இங்கே வந்ததும் காசு கொடுத்துடறேன். நீ கவலைப்படாதே" - அப்படி இப்படின்னு ஒரு பட்டியல் வெச்சிக்கிட்டு பேசுவாங்க.

தேர்தல் முடியற வரைக்கும்தான் நம்மகிட்டே தொங்குவாரு, அதுக்கப்புறம் இடம் மாறிடுவாருன்னு மருத்துவரைப் பத்தி தெரிஞ்சாலும் பொறுமையா அவரோட கேள்விக்கெல்லாம் பதில் சொல்ற அம்மா மாதிரி நாமும் சிரிச்சிக்கிட்டே பதில்
சொல்லணும் - "சரி வாங்கிட்டு வர்றேன்".

*****

இன்னும் இதே மாதிரி நிறைய பிரச்சினைகள் இருந்தாலும், நம்ம பாலிஸி

இன்னிக்கு _____

நாளைக்கு பால்

நாளன்னிக்கு தயிர்

அதுக்கடுத்த நாள் மோர்

அதுக்கடுத்த நாள் புளித்த மோருங்கறதாலே

அப்படியே துடைச்சிக்கிட்டு போக வேண்டியதாயிருக்கு.

*****


37 comments:

பிரேம்ஜி March 31, 2009 at 10:08 PM  

//இன்னிக்கு _____

நாளைக்கு பால்
நாளன்னிக்கு தயிர்
அதுக்கடுத்த நாள் மோர்
அதுக்கடுத்த நாள் புளித்த மோருங்கறதாலே
அப்படியே துடைச்சிக்கிட்டு போக வேண்டியதாயிருக்கு//

அருமையான தத்துவம்..

ரிஷி (கடைசி பக்கம்) March 31, 2009 at 10:17 PM  

eppadinga ippadiyellam yosikkiringa

but wht u said is true

:-))

kadaisipakkam

RAMYA March 31, 2009 at 10:32 PM  

உள்ளேன் போட்டுக்கறேன் அப்புறம் வாரேன்!!

Raghav March 31, 2009 at 11:07 PM  

தொலைபேசி லொள்ளுகள் கலக்கல்ஸ்... இன்னும் நிறைய இருக்கே, ஒவ்வொரு பகுதியா போடுறது :)

அறிவிலி March 31, 2009 at 11:10 PM  

அவுக எல்லாம் இதை படிக்க மாட்டாகளா...

துளசி கோபால் March 31, 2009 at 11:32 PM  

அடுத்த பகுதி எப்போ?

:-))))

துளசி கோபால் March 31, 2009 at 11:34 PM  

எப்பவும் உறவினர்களுக்குன்னா, அங்கே இருந்து இங்கே பேச லைனே இல்லை. ஒன்வே ட்ராஃபிக்தான். இங்கிருந்து அங்கேதான் வொர்க் பண்ணும்:-)

சதீஸ் கண்ணன் March 31, 2009 at 11:42 PM  

ஒக்காந்து யோசிப்பிங்க‌லோ...

Vidhya Chandrasekaran March 31, 2009 at 11:51 PM  

கேப்பில ரெண்டு டாக்டர்களையும் வாரிய்யிருக்கும் உங்க நுண்ணரசியலை ரசித்தேன்:)

Thamiz Priyan March 31, 2009 at 11:51 PM  

எப்ப ஊருக்கு வர்றீங்க?. வரும்போது ஒரு Ipod , ஒரு லேப்டாப் இதெல்லாம் வாங்கி வரணும். இங்கே வந்ததும் காசு கொடுத்துடறேன். நீங்க கவலைப்படாதீங்க

Unknown April 1, 2009 at 1:47 AM  

எப்போ அண்ணா ஊருக்கு வரீங்க?? ;)))

வால்பையன் April 1, 2009 at 3:26 AM  

:))))

என்ன தருகிறோமோ! அதுவே நமக்கு திரும்ப கிடைக்கும்!

இராகவன் நைஜிரியா April 1, 2009 at 6:06 AM  

எல்லாத்துக்கும் மேல ஒரு முக்கியமான விசயத்தை விட்டுட்டீங்க..

போன்ல பேசும் போது உங்க ஊர்ல இப்ப மணி என்ன?

நான் போன் பண்ணும் போது எல்லோரும் கேட்கும் கேள்வி இது.

தங்ஸ் பேசினாங்கன்னா, எல்லோரும் கேட்கிற கேள்வி, இன்னிக்கு என்ன சமைச்ச, அங்க எல்லா காய்கறிகளும் கிடைக்கின்றதா?

குசும்பன் April 1, 2009 at 6:47 AM  

//அப்புறம், //

நான் அடிக்கடி சொல்லும் வார்த்தை அதை பேச்சை முடிக்க சொல்வதாக இருக்கும் அப்படி சொல்லாதீங்க பேசும் பொழுது கண்ட்ரோல் செய்யுங்க என்று மனைவி சொல்லிக்கிட்டு இருக்கும் பொழுது “அப்புறம்” சொல்லி அடிவாங்கி பாவி நான்.

ஆகையால் என்னிடம் பேசும் பொழுது அப்புறம் அதிகம் வரும் தப்பா எடுத்துக்காதீங்க!

தராசு April 1, 2009 at 7:37 AM  

கலக்கல், ரொம்ப நொந்து போயிருக்கறீங்க போலிருக்குது.

சின்னப் பையன் April 1, 2009 at 8:19 AM  

வாங்க ராகி ஐயா, பரிசல், முரளி அண்ணா, பிரேம்ஜி -> நன்றி..

வாங்க கடைசி பக்கம் -> அட... இதெல்லாம் நிஜமாவே நடந்ததுங்க...

வாங்க ரம்யா -> மெல்லமா வாங்க...

வாங்க ராகவ், அறிவிலி -> ஆமாங்க. இதுக்கே அடிவிழும்னு பாக்கறேன்.. இன்னும் அதிகமா எழுதினேன்னா... அவ்ளோதான்... :-(

வாங்க துளசி அம்மா -> ஹாஹா... அடுத்த பகுதியெல்லாம் இல்லீங்கோ... அவ்ளோதான்... :-))

சின்னப் பையன் April 1, 2009 at 8:23 AM  

வாங்க சதீஸ்கண்ணன் -> :-)))

வாங்க சகோ வித்யா -> ஹாஹா... சரியா புடிச்சிட்டீங்க... :-))

வாங்க தமிழ் பிரியன், ஸ்ரீமதி, வால் -> அவ்வ்வ்...

வாங்க இராகவன் அண்ணே -> ஹாஹா.. இப்போ என்ன வெதர்?..

வாங்க செந்தில் -> இல்லைங்க.. முடிஞ்சிடுச்சு... :-))

Prabhu April 1, 2009 at 10:15 AM  

ச்சின்னப் பையன்,
உங்களோட ஒவ்வொரு பதிவும் சூப்பரா இருக்கே! என்னைக்காவது சொதப்புவாருன்னு(யானைக்கும் அடி சறுக்கும், பூனைக்கும் சளி பிடிக்குமில்லயா!) பாத்தா, சிக்க மாட்டேங்குறீங்க!

Mahesh April 1, 2009 at 10:18 AM  

உங்க பாலிஸி சூப்பரா இருக்கே...

எவ்வளவு பிரிமியம் கட்டறீங்க?

சின்னப் பையன் April 1, 2009 at 11:06 AM  

வாங்க நட்சத்திர குசும்பனாரே -> சரி சரி அப்புறம்!!!!..:-)))

வாங்க சுரேஷ் -> நன்றி...

வாங்க தராசு -> அதை ஏன் கேக்கறீங்க...

வாங்க பப்பு -> ஹாஹா.. மிக்க நன்றிங்க.. போடறதுக்கு சிரிப்பு மேட்டர் எதுவுமேயில்லேன்னா, பத்து நாள் ஆனாக்கூட கவலையேபடாமே லீவ் விட்டுடுவேன்... :-))

வாங்க மகேஷ் அண்ணே -> ஹாஹா... ப்ரிமியம் ஒரே ஒரு பால் பாக்கெட்தாங்க... :-))

மணிகண்டன் April 1, 2009 at 12:30 PM  

பதிவு சூப்பர். லேபிள்ல உங்க சமூக அக்கறைய காட்டி இருக்கீங்க. ஆனா இதுக்காக தான் forwarded mail அப்படின்னு ஒண்ணு ஆண்டவன் கொடுத்து இருக்கான். பேச ஒண்ணும் இல்லாட்டியோ, இல்ல பேசி ரொம்ப நாள் ஆகி இருந்தாலோ அத யூஸ் பண்ணலாம்.

ராம்.CM April 1, 2009 at 1:22 PM  

எங்க ஊரு பயப்புள்ளங்க ...நல்லவங்க... நம்மள தொந்தரவு பண்ணுரதே இல்லிங்கோ...

Jackiesekar April 1, 2009 at 1:27 PM  

நாமளும், பாசக்கார பய, நம்மள தொலைபேசச் சொல்றானேன்னு பேசினா - "எப்ப ஊருக்கு வர்றே. வரும்போது ஒரு எம்.பி3 ப்ளேயர், ஒரு லேப்டாப் இதெல்லாம் வாங்கி வரணும். இங்கே வந்ததும் காசு கொடுத்துடறேன். நீ கவலைப்படாதே" - அப்படி இப்படின்னு ஒரு பட்டியல் வெச்சிக்கிட்டு பேசுவாங்க.///



சொல்லறதுக்கு வாயே வலிக்காது சுமந்துக்குனு வர்றவனுக்குதான் அந்த வலி தெரியும்

நல்ல பதிவு

RAMYA April 1, 2009 at 2:04 PM  

அண்ணா! உங்க பதிவை படிச்சிட்டு சிரித்தாலும், சிறிது சிந்திக்கவும் வைத்தது.

நீங்க கூறி இருக்கும் அவ்வளவு மேட்டரும் சிரிக்க மட்டும் இல்லை.
சரிதானே.

ஒவ்வொருவர் மானதிலும் குமுறிக்கொண்டிருக்கும் உண்மைகள்.

இன்னொன்றையும் விட்டு விட்டீர்களே!

நாம் எப்போ போன் செய்தாலும், அட இப்போதான் உன்னைய பத்தி பேசிகிட்டு இருந்தோம். போன் மணி அடிச்சது பார்த்தா நீதான். பரவா இல்லையே என்று அசடு வழிவார்கள்.

நாம் ஏதோ தப்பு பண்ணின மாதிரி கொஞ்சம் வழிய வேண்டும்.

ஒரு நாள் மனிதர்களின் மனதை படம் பிடிச்சி காட்டுறீங்க.

ஒரு நாள் சிரிக்கமட்டும் வைக்கறீங்க.
ஒரு நாள் சிந்திக்க மற்றும் சிரிக்கவும் வைக்கறீங்க.

சூப்பர்தான் நீங்க அண்ணா. .

Thamira April 1, 2009 at 2:29 PM  

தமிழ் பிரியன் said...
எப்ப ஊருக்கு வர்றீங்க?. வரும்போது ஒரு Ipod , ஒரு லேப்டாப் இதெல்லாம் வாங்கி வரணும். இங்கே வந்ததும் காசு கொடுத்துடறேன். நீங்க கவலைப்படாதீங்க
//

யோவ், இத இங்கயிருக்கிற நாங்க சொல்லணூம்..

சின்னப் பையன் April 1, 2009 at 4:31 PM  

வாங்க மணிகண்டன் -> சரியா சொன்னீங்க... ஃபார்வேர்ட் மெயில் ஒருவிதத்துலே பிரச்சினையா இருந்தாலும், நண்பன் மறக்கலேன்னு ஒரு நிம்மதி கொடுக்குது... :-))

வாங்க ராம்.CM, ஜாக்கி, ரம்யா -> நன்றி..

வாங்க ஆதி -> ஹாஹா....

கிரி April 1, 2009 at 5:59 PM  

//நம்மை அப்படி மறந்துடுவாங்க. மின்னஞ்சல் அனுப்பினால், அதற்கும் பதில் வராது.//

why blood same blood

//மாசத்துக்கு ஒரு மின்னஞ்சல்கூட அனுப்பமுடியாமே அவ்ளோ பிஸியா இருக்கீங்களாடேன்னு கேக்க முடியாது. அப்போ நான் மட்டும்தான் இங்கே சும்மா உக்காந்திருக்கேனான்னும் கோபம் வரும்.

அப்புறம் உண்மை(!) தெரிஞ்சதும் மனம் தெளிவடைஞ்சிடும்(!).//

ஹா ஹா ஹா கலக்கல்

//மொக்கை படமாத்தான் இருக்கும்னு முன்னாடியே தெரிஞ்சாலும், நாமும் விடாமே டாக்டர் விஜய் படங்களையெல்லாம் திரையரங்கத்துக்குப் போய் பாக்கறதில்லையா//

:-)))) பாவம் அவரை விட்டுடுங்க

//எப்ப ஊருக்கு வர்றே. வரும்போது ஒரு எம்.பி3 ப்ளேயர், ஒரு லேப்டாப் இதெல்லாம் வாங்கி வரணும்//

ஹா ஹா ஹா ரொம்ப அனுபவம் போல இருக்கு உங்களுக்கு

அசத்தல் பதிவு

நசரேயன் April 1, 2009 at 6:22 PM  

உண்மைதான் மறுக்க வில்லை

முத்துலெட்சுமி/muthuletchumi April 2, 2009 at 12:56 AM  

:( இந்த சோகமெல்லாம் எனக்கும் நடக்குது.

sindhusubash April 2, 2009 at 2:22 AM  

உண்மையிலும் உண்மை.

சின்னப் பையன் April 2, 2009 at 9:28 AM  

வாங்க கிரி, நசரேயன், மு-க அக்கா, சிந்துசுபாஷ் -> அனைவருக்கும் நன்றி.. .மீண்டும் வருக...

Anonymous,  March 4, 2010 at 6:51 AM  

http://markonzo.edu http://aviary.com/artists/Singulair-side http://riderx.info/members/allegra-side-effects-allegra.aspx http://www.netknowledgenow.com/members/Amlodipine-Side-Effects.aspx http://www.netknowledgenow.com/members/Buy-Butalbital.aspx http://aviary.com/artists/Zyprexa http://www.netknowledgenow.com/members/Metformin-Side-Effects.aspx trisha blades

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP