e-சண்டை!!!
சமைக்க நேரமின்மையால் தங்ஸ் இன்று வெறும் ரசம் சாதம் செய்திருந்தார். இதையெல்லாம் மனுசன் சாப்பிடுவானா என்று கேட்டதற்கு, அதனால்தான் உங்களுக்குக் கொடுக்கிறேன் என்று 'ஜோக்' அடித்தார்.
கூட்டு செய்து ரொம்ப நாளாச்சேம்மா என்றதற்கு, கேப்டன் பாணியில் எனக்கு கூட்டு பிடிக்காது என்றும் கடித்தார்.
இதற்கு மேல் பேசிப் பயனில்லை என்பதால், புறப்பட்டு அலுவலகம் வந்துவிட்டேன்.
நிறைய வேலை இருப்பதால், இவ்வளவுதான் இன்றைய பதிவு.
Posted by சுரேஷ் at 9.00am
***********
Anonymous said...
மீ த பஷ்ட்...
9:05am
*****
அம்மா said...
ஏண்டா இப்படி கஷ்டப்படணும்னு என்ன தலயெழுத்து உனக்கு. இங்கே இருந்தா நான் நல்லா சமைச்சி கொடுத்திருப்பேன்ல?
9:10am
*****
கார்க்கி said...
சூப்பர் சகா.
9:15am
*****
அப்பா said...
எதுவாயிருந்தாலும் நாமதான் அட்ஜஸ்ட் செய்துகிட்டு போகணும்பா. பாத்து நடந்துக்க.
9:20am
*****
முரளிக்கண்ணன் said...
வழக் கலக்
9:25am
*****
தங்ஸ் said...
ஏங்க. ரசத்துலே உப்பு போட மறந்துட்டேன். ஆபீஸ்லே உப்பு இருக்கும்ல. கொஞ்சம் போல போட்டுக்குங்க.
9:30am
*****
நண்பன் said...
டேய். உனக்காவது ரசத்துலே உப்பு இல்லே. எனக்கு எதுவுமே இல்லே. லஞ்சுக்கு பக்கத்து ஹோட்டலுக்குத்தான் போகப் போறேன். நீயும் வரியா?
9:35am
*****
சுரேஷ் said...
வாங்க அனானி -> ஆமா. நீங்கதான் பஷ்டு... :-))
வாங்க அம்மா -> சரி விடும்மா. இன்னும் கொஞ்ச நாள்தான். அதுக்கப்புறம் அங்கேதான் வரணும்.
வாங்க கார்க்கி சகா -> நன்றி.
வாங்க அப்பா -> கண்டிப்பாப்பா. நன்றி..
வாங்க முரளிகண்ணன் -> மிக்க நன்றிண்ணே...
வாங்க தங்ஸ் -> இங்கே உப்பு இருக்கும்மா. நான் போட்டுக்கறேன்.. கவலைப்படாதே.. நன்றி..
வாங்க நண்பா -> நான் வரலேப்பா. எனக்கு இந்த சாப்பாடே போதும். நாளைக்கு முடிஞ்சா பாப்போம். சரியா?
9:40am
*****
பழமைபேசி said...
இஃகி இஃகி
9:45am
*****
தங்ஸ்-அம்மா said...
ஏண்டி. வேலைக்குப் போற மனுசனுக்கு வயிராற எதுவும் செஞ்சி போடமாட்டியா? ரசம் சாதம்தானா செய்ய முடிஞ்சுது உன்னாலே. போன இடத்துலே எனக்கு கெட்ட பேர் வாங்கிக் கொடுத்துடுவே போலிருக்கே.
9:50am
*****
பரிசல் said...
Present sir
9:55am
*****
தங்ஸ் said...
அம்மா. இதிலே நீ தலையிடாதே. கட்டி கொடுத்துட்டேல்லே. நானாச்சு அவராச்சு. நாங்களே பாத்துக்கறோம்.
10:00am
*****
தம்பி said...
அம்மா. அவங்களுக்குள்ளே என்னமோ செய்துகிட்டு சாப்புடறாங்க. உனக்கென்ன வம்பு? எதுக்கு அவங்க விஷயத்துலே போய் தலையிடறே?
10:05am
*****
அக்கா said...
தம்பி.. நீ அடங்கு.. உனக்குன்னு ஒருத்தி வராமலேயா போயிடுவா? அப்போ நீ என்ன பண்றேன்னு பாக்கறேன்...
10:10am
*****
நர்சிம் said...
நச்
10:15am
*****
சுரேஷ் said...
வாங்க பழமைபேசி -> இஃகி இஃகி..
வாங்க அம்மா (மாமியார்) -> அட பரவாயில்லை விடுங்கம்மா. எனக்கு ஒண்ணும் பிரச்சினையில்லை.
வாங்க பரிசல் -> உங்க தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி...
வாங்க தங்ஸ் -> அம்மாவை அப்படி சொல்லாதேம்மா. அவங்க என்ன பண்ணுவாங்க சொல்லு.
வாங்க தம்பி, அக்கா -> ஹாஹா.. பாப்போம் அவன் என்ன பண்ணறான்னு... :-))
வாங்க நர்சிம் அண்ணே -> நன்றி...
10:20am
*****
தங்ஸ் said...
என்னங்க. வரும்போது இணையத்திலிருந்து '30 வகை சாம்பார்', '30 வகை கூட்டு' இத மாதிரி புத்தகத்தையெல்லாம் ப்ரிண்ட் அவுட் கொண்டு வாங்க. நாளையிலிருந்து ஒழுங்கா சமைச்சி போடறேன்.
10:25am
*****
சுரேஷ் said...
வாங்க தங்ஸ் -> கண்டிப்பா கொண்டு வர்றேம்மா. மிக்க நன்றி...
எல்லோருக்கும் -> சாப்பாட்டுப் பிரச்சினை இனிதே முடிந்தது. பின்னூட்டத்தில் விவாதித்த அனைவருக்கும் நன்றி...
10:30am
*****
47 comments:
மீ த பஷ்ட்...
9:05am
தலைவா செமை இன்னொவேட்டிவ் பதிவு.
அசத்தல் ரகம்
yeh dil monge more
:-)))
தல... எப்படியெல்லாமோ யோசிக்கிறீங்க... கலக்கல் பதிவு!!
//அதனால்தான் உங்களுக்குக் கொடுக்கிறேன் என்று 'ஜோக்' அடித்தார்.
//
உண்மையைச் சொன்னார் :)
//தலைவா செமை இன்னொவேட்டிவ் பதிவு.
அசத்தல் ரகம்
yeh dil monge more
//
வரிக்கு வரி வழிமொழிகிறேன்.
(முரளி கண்ணன் சொன்னதே ஒரே ஒரு வரி...அத வரிக்கு வரி வேற வழி மொழியிரியோ )
:)
Super imaginaton:)
ஆஹா என்னா இது புது மாதிரி அசத்தல் பின்னிட்டீங்க.
அப்புறமா வாரேன்!!!
அசத்தல்...
இதென்ன ச்சின்னப் புள்ள தனமாயில்ல இருக்கு...........
ஓ... இது ச்சின்னப்பையன் ல்ல
ஜே.கே.ஆர் ஆதரவு வேற இருக்கு..
கலக்குறீங்களே! ம்ம் கண்டினியூ!
கலக்கல்
:)))
//தங்ஸ் said...
ஏங்க. ரசத்துலே உப்பு போட மறந்துட்டேன். ஆபீஸ்லே உப்பு இருக்கும்ல. கொஞ்சம் போல போட்டுக்குங்க.
///
:)))))))))))))))))))))))
:)))))))
ஆமா யாரும் "ரிப்பீட்டே" போடமாட்டாங்களா...
athu sari.. vaasagarkalaiye oru thaaku thaakitteega :)
nice post :)
அண்ணா இன்னைக்கு உங்களுக்கு கஞ்சிதான் ;)))
சினிமா க்ளைமேக்ஸ் மாதிரி திடீர்ன்னு மனம் மாறி பிரிண்ட் எடுத்துவாங்கன்னு அவங்க சொல்லி நீங்க இனிதே போட்டு முடிப்பது ... லாஜிக்காவே இல்லையே.. :)))
அவங்க என்னமோ சமைக்க நேரமில்லாம ரசம் வச்சதா சொல்றீங்க.. பின்ன ப்ரிண்ட் அவுட் ஏன் கேக்கறாங்க.. சமைக்கத்தெரியாதுங்கறீங்களா..
( இன்னைக்கு உங்களுக்கு கஞ்சியும் கிடைக்குமான்னு சந்தேகமா இருக்கே)
//சமைக்க நேரமின்மையால் தங்ஸ் இன்று வெறும் ரசம் சாதம் செய்திருந்தார்.//
அதாவது கிடைச்சதேன்னு சந்தோஷப்படுங்க..
//நிறைய வேலை இருப்பதால்//
நானும் இந்தப் பொய்யை தினம் வீட்ல சொல்றேன்.. யாரும் நம்ப மாட்றாங்க... உங்களுக்கு எப்புடியோ
உங்க பெயரும் சுரேஷா ... அதான் இந்த கலாய்ப்பு
இதே தான் எல்லா பதிவுலயும் நடக்குது!
சில பிரபல பதிவர்களை நீங்கள் கிண்டல் செய்த தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு
அம்மா,அப்பா,தங்க்ஸ்,தம்பி,அக்கா,நண்பன் கூடவே இஃகி!இஃகின்னு சிரிக்க எத்தனை பேரு சொல்லியும் கேட்கமாட்டீங்கறிங்களே!
:))
சூப்பர் சகா
வாங்க அனானி -> ஹாஹா... சூப்பரா காபி/பேஸ்ட் பண்ணீங்க... :-))
வாங்க முரளி அண்ணே, ராகி ஐயா, ஜி, அப்துல்லா அண்ணே, சகோதரி வித்யா -> நன்றி...
வாங்க தங்கச்சி ரம்யா -> மெல்லமா வாங்க....
வாங்க அறிவிலி -> நன்றி..
வாங்க SUREஷ் -> ஹாஹா. முதல்லே எனக்கு புரியல.. அப்புறம் அந்த பேருக்காகத்தான் சொல்றீங்கன்னு புரிஞ்சுது... :-)))))
வாங்க தமிழ் பிரியன், ஆயில்ஸ் -> நன்றி..
வாங்க தமிழன் கறுப்பி -> ஹாஹா...
வாங்க ஆளவந்தான் -> வொய் தங்க்லிஷ்யா?
வாங்க சகோதரி ஸ்ரீமதி -> அவ்வ்வ்.... இது கதைம்மா... சொந்த கதை இல்லே....
வாங்க மு-க அக்கா -> அவ்வ்வ். எந்த கணவன் தன் பொண்டாட்டிக்கு சமையல் தெரியலேன்னு ஒத்துப்பான். அதுக்காகத்தான் பப்ளிக்லே சொல்லும்போது பாலிஷா - நேரமில்லைன்னு சொல்றார் சுரேஷ். அப்புறம் அம்மா திட்டினப்புறம் அந்த தங்ஸ் மனம் மாறி கத்துக்கறேன்னு சொல்றார்... அவ்ளோதான்...
(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. முடியல சாமி.. எப்படியெல்லாம் லாஜிக் பாக்கறாங்க.....)!!!!!!!
வாங்க ராகவ் -> நன்றி...
வாங்க சுரேஷ் -> யாரை கேக்கறீங்க? என்னையா? ஹாஹா.. என் பேர் சுரேஷ் இல்லேங்க...
வாங்க வால் -> அச்சச்சோ... அதை கிண்டல்னு தப்பா எடுத்துப்பாங்களா????? பத்த வெச்சிட்டியே பரட்டை!!!!!
வாங்க ராஜ நடராஜன், விக்னேஸ், கார்க்கி -> நன்றி!
கலக்கிட்டீங்க!!!
சூப்பர் பதிவு ஏன் தமிழிஷ் ஓட்டு போடமாட்டேங்கறாங்க.
//குடுகுடுப்பை said...
சூப்பர் பதிவு ஏன் தமிழிஷ் ஓட்டு போடமாட்டேங்கறாங்க.
//
அதேதான்...
ஃபுல் ஃபார்ம்ல கலக்கிட்டு இருக்கிறீங்க.
செம செம செம :)
//தங்ஸ்-அம்மா said...
ஏண்டி. வேலைக்குப் போற மனுசனுக்கு வயிராற எதுவும் செஞ்சி போடமாட்டியா? ரசம் சாதம்தானா செய்ய முடிஞ்சுது உன்னாலே. போன இடத்துலே எனக்கு கெட்ட பேர் வாங்கிக் கொடுத்துடுவே போலிருக்கே.
9:50am
*****
//
இதை ரொம்ப ரசிச்சேன்.
:)
Excellent, Outstanding, Brilliant, Supreme, Admirable, Superb, Exceptional, Dazzling, Marvelous, Terrific, Luminous, Sparkling, Shining, Stupendous, Fantastic,ச்சின்னப் பையன்...flowla vanthudichi....
வாங்க விஜய் ஆனந்த் -> நன்றி.. ரொம்ம்ம்ப பிஸிங்களா????? ஆள பிடிக்கவேமுடியலியே???
வாங்க குடுகுடுப்பை, பழமைபேசி -> ஒரு பத்து வோட்டாவது வரும்னு எதிர்ப்பார்த்தேன். சரி விடுங்க... :-((
வாங்க ஒரு காசு, கைப்ஸ் அண்ணே -> மிக்க நன்றி...
வாங்க ராஜ்குமார் -> தன்யனானேன். மிக்க மிக்க நன்றிண்ணே...
அண்ணா எப்போ ஒட்டு போட முயற்சி பண்ணினாலும்
error on page. இந்த வரிகள் தான் டிஸ்ப்ளே ஆகுது
என்னைக்காவது ஒருநாள் தான் ஒட்டு போட முடியுது.
இதை படித்த பிறகாவது tamilsh ஏதாவது முயற்சி செய்வாங்களா பார்க்கலாம்.
கலக்கலா யோசிச்சு கலக்கலாவும், புதுமையாகவும் எழுதி இருக்கீங்க.
தினம் தினம் ஒரு புதுமைதான்.
ரொம்ப வித்தியாசமா யோசிக்கறீங்க.
யாரவது சினிமா டைரக்டர் வந்து உங்களை கொத்திகிட்டு போகப் போறாங்கன்னு எனக்கு தோனுது.
கலக்கல் பதிவு
aha super
அருமையான கற்பனை தோழர்.
வாங்க பாபாஜி, நசரேயன், சத்யராஜ்குமார் அண்ணே, தாரணி பிரியா, அதிஷா -> ஆஹா.. பெரியவங்க எல்லாம் வரிசை கட்டி வந்திருக்கீங்க... நன்றி...
ஹா..ஹா... ரொம்பவும் ரசிக்க முடிகிற வித்தியாச சிந்தனை.
செம்ம ஐடியா.. சூப்பர்.!
haa haa
கலக்கல் கமெண்ட்ஸ்
:))))))))
its been a longtime since i came to ur blog- had a good time reading this blog! Amazing-ur creativity ku oru salute :-) - Mona
Post a Comment