கடையோட மாப்பிள்ளை - பகுதி 3
முதல் பகுதி இங்கே... இரண்டாம் பகுதி இங்கே...
*****
பெண் பார்க்கும் படலம். பெண்ணின் பெயர் ஜானகி.
*****
ஜானகி அப்பா: மொதல்ல காபி டிபன் சாப்பிடலாம்.
மாது: டிபன்லாம் வீட்லே பண்ணீங்களா? இல்லே ஹோட்டல்லேர்ந்து வரவழைச்சிட்டீங்களா?
ஜா.அப்பா: என்ன இப்படி கேட்டுட்டீங்க? ஜானகியே...
மாது: தனிய்ய்ய்யா கடைக்குப் போய் வாங்கி வந்துட்டாங்களா?
ஜா.அப்பா: இல்லே. ஜானகியே...
மாது: எல்லாத்தையும் தின்னு தீர்த்துட்டாங்களா? எங்களுக்கு எதுவுமே இல்லையா?
அப்பா: அட. மாது. அவரை கொஞ்சம் பேச விடுப்பா. நீங்க சொல்லுங்க சார்.
ஜா.அப்பா: ஜானகியே கூடமாட உதவி செஞ்சு, அவங்கம்மா செஞ்சதுன்னு சொல்ல வந்தேன்.
மாது: எனக்கு மானாட, மயிலாட தெரியும். அதென்ன கூடமாட?
அப்பா: சரி அதை விடுங்க. வந்த விஷயத்தை பத்தி பேசுவோம்.
ஜா.அப்பா: எனக்கு இருக்கறது ஒரே பொண்ணு ஜானகி. அவ பேர்லே ஜானகி ஹோட்டல் நடத்திண்டு வர்றேன். இனிமே மாதுதான் ஜானகியையும், ஹோட்டலையும் நல்லபடியா காப்பாத்தணும்.
மாது: ஜானகிய விடுங்க சார். நம்ம ஹோட்டலை முன்னேத்தறதுக்கு நான் நிறைய ஐடியாஸ் வெச்சிருக்கேன். ஒண்ணொண்ணா சொல்றேன் கேளுங்க.
அப்பா: ஷ்ஷு. மாது..
மாது: அட சும்மாயிருப்பா. கொஞ்சம் என்னை பேச விடு. அதாவது சார், நாள் வாடகையிலே நிறைய ஆட்களை பிடிச்சி வந்திரணும். சில பேரை சாப்பிடச் சொல்லிட்டு, மத்த பேரை டேபிள் சுத்தி நிக்க வெச்சி, “தம்பி, சாருக்கு மோரு”, “தம்பி,இன்னொரு அப்பளம்” அப்படி இப்படின்னு குரல் குடுத்துக்கிட்டு ஹோட்டல்லே நிறைய கும்பல் இருக்கறா மாதிரி காமிக்கணும். அப்பதான் சாப்பாடெல்லாம் நல்லா இருக்குன்னு நினைச்சி, மக்கள் நிறைய பேர் வருவாங்க. விலையைக்கூட அதிகமாவே வெக்கலாம். யாரும் கண்டுக்க மாட்டாங்க.
அப்பா: ஷ்ஷூ. மாது.
ஜா.அப்பா: ம். அப்புறம்?
மாது: இன்னும் என்ன பண்ணலாம்னா, ”உங்கள்லே அடுத்த அறுசுவை நடராஜன் யாரு?” அப்படின்னு ஏதாவது ஒரு டிவியிலே போட்டி ஒண்ணு நடத்தலாம். தமிழும் தெரியாத, சமைக்கவும் தெரியாத யாராவது மூணு பேரை ஜட்ஜஸா போட்டு, நம்ம ஹோட்டல் விளம்பரங்களுக்கு நடுநடுவே அந்த ப்ரோக்ராமையும் கொஞ்சம் காட்டலாம். அப்பதான் மக்கள் மனசுலே ஹோட்டல் பேரு நினைவிருக்கும்.
ஜா.அப்பா: இப்படியெல்லாம் செய்து ஹோட்டல் நல்லா பெரிசா வளர்ந்திடுச்சுன்னா, அப்புறம் அதை யாரு பாத்துக்கறது?
மாது: அதைப்பத்தி நீங்க கவலையேபடாதீங்க. நீங்க ஏதாவது ஒரு பிரச்சினையில் மாட்டிக்கிட்டு ஜெயிலுக்குப் போயிட்டாலும், நாந்தான் இருக்கேனே பாத்துக்கறதுக்கு.
அப்பா: ஷ்ஷு. மாது.
மாது: அட சும்மாயிருப்பா. இது என்ன பத்திரிக்கையாளர் சந்திப்பா? சும்மா ஷூ, ஷூன்னு சொல்லிக்கிட்டு. நான் ஷூ தூக்கிப் போடப்போறேன்னு சார் பயந்துடப்போறாரு.
அப்பா: அவரு எதுக்கு பயப்படணும்? நீ பேசற பேச்சுக்கு ஷு எடுத்து அவர் நம்மை அடிக்காமே இருந்தா சரிதான்.
ஜோசியர்: மாது, கல்யாணத்துக்கு முன்னாடியே மாமனார் ஆகப்போறவரை இப்படி கலாய்க்கிறியே... கல்யாணத்துக்கு அப்புறமா என்னல்லாம் பண்ணுவே?
மாது: சார். ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க. மாப்பிள்ளைன்ற ஸ்தானத்தை கடவுள் எதுக்கு உருவாக்கியிருக்கார்னா, மாமனார் அப்படின்றவரை கலாய்க்கத்தான். கொஞ்சம் வெளியே போய் நின்னு மாமனாரை கலாய்க்காதவங்க யாராவது இருக்காங்களான்னு கேட்டுப் பாருங்க. ஒருத்தன்கூட கிடைக்கமாட்டான் உங்களுக்கு.
(காபியுடன் ஜானகி என்ட்ரி)
ஜா.அப்பா: இதுதான் என் பொண்ணு ஜானகி.
(தம்தனனம்தன தம்தனனம்தன...)
மாது: அம்மா, எதுக்கு இப்ப திடீர்னு பாடறே?
அம்மா: டேய், நான் எங்கேடா பாடினேன்.
மாது: அதானே, குரல் அழகா இருந்ததேன்னு பாத்தேன்.
(தம்தனனம்தன தம்தனனம்தன...)
ஜோசியர்: மாது, பொண்ணை நல்லா பாத்துக்கப்பா. ஏதாவது கேள்வி கேக்கணும்னா இப்பவே கேட்டுக்கோ.
மாது: கல்யாணத்துக்கு அப்புறம் ஹனிமூனுக்கு எங்கே போகலாம்? ஊட்டியா? கொடைக்கானலா?
அப்பா: இன்னிக்கு உனக்கு ஷூதான். கன்ஃபர்ம்டா தெரிஞ்சி போச்சு.
மாது: சரி சரி. ஒழுங்காவே கேக்கறேன். உங்களுக்கு சமைக்கத் தெரியுமா?
ஜானகி: தெரியாது.
மாது: ரொம்ப நல்லது. எனக்கும் தெரியாது. அட்லீஸ்ட் மாவாட்டவாவது தெரியுமா?
ஜானகி: ஏன். நான் ஏன் மாவாட்டணும்?
மாது: ஹோட்டல்லே போய் சாப்பிட்டபிறகு காசு இல்லேன்னா மாவு ஆட்டிதானே ஆகணும்? நம்மாலே தர்ம அடி வாங்கமுடியாதும்மா.
ஜா.அப்பா: அப்பலேர்ந்து பாக்கறேன். மாப்பிள்ளை ரொம்ப தமாஷா பேசறாரு.
ஜானகி: அப்பா. அவரை மாப்பிள்ளைன்னு சொல்லாதீங்க. எனக்கு இந்த கல்யாணத்துலே இஷ்டமில்லை.
ஜா.அப்பா: என்னம்மா இப்படி சொல்லிட்டே? அவர்கிட்டே என்ன குறை கண்டே நீ?
ஜானகி: பெரியவங்கன்ற மரியாதையே இல்லாமே பேசறாருப்பா அவரு. உங்களை ஜெயிலுக்குப் போவீங்கன்னு வேறே சொல்றாரு. எனக்கு வேண்டாம் இந்த மாப்பிள்ளை. சார், என்னை மன்னிச்சிடுங்க. நீங்க போகலாம்.
அம்மா: சரி. பொண்ணு ரொம்ப கோவமா இருக்கறாப்பல தெரியுது. நாங்க போய் போன் பண்றோம். எதுக்கும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசிச்சி வெச்சிக்கம்மா. மாது, காபி குடிச்சது போதும். டம்ளரை வெச்சிட்டு வாடா. போகலாம்.
மாது: போறதுக்கு முன்னாலே கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்லிக்க விரும்பறேன்.
ஜானகி: என் முடிவுலே எந்த மாற்றமும் கிடையாது.
மாது: அது எப்படியோ இருந்துட்டு போகட்டும். நான் சொல்ல வந்தது, காபியிலே சக்கரை கம்மியா இருக்கு. அடுத்த தடவையிலிருந்து எனக்கு மட்டும் கொஞ்சம் ஜாஸ்தியா போடுங்க. அவ்ளோதான். நான் வர்றேன்.
*****
21 comments:
nimmathiya sappittu vanthu.. mmm... sappittu nimmathyaa vanthu.. padikkiren :D
//அது எப்படியோ இருந்துட்டு போகட்டும். நான் சொல்ல வந்தது, காபியிலே சக்கரை கம்மியா இருக்கு. அடுத்த தடவையிலிருந்து எனக்கு மட்டும் கொஞ்சம் ஜாஸ்தியா போடுங்க. அவ்ளோதான். நான் வர்றேன்//
அதிகம் குழப்பமில்லாத கேரக்டர்கள் (ஏற்கனவே நினைவுகளில் நிறைந்திருப்பதால்)
துடுக்குதனமான மாது
அப்படியே மனக்கண்ணில் நாடக காட்சிகளோடு உங்களின் வசனங்களை வைத்து கற்பனை செய்துக்கொண்டே படிக்கின்றேன்! - நடுநடுவே பயங்கரமான சிரிப்பு சப்தத்தோடு
கலக்குங்க நிறைய பகுதிகள் வரணும்!
// ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க. மாப்பிள்ளைன்ற ஸ்தானத்தை கடவுள் எதுக்கு உருவாக்கியிருக்கார்னா, மாமனார் அப்படின்றவரை கலாய்க்கத்தான். கொஞ்சம் வெளியே போய் நின்னு மாமனாரை கலாய்க்காதவங்க யாராவது இருக்காங்களான்னு கேட்டுப் பாருங்க. ஒருத்தன்கூட கிடைக்கமாட்டான் உங்களுக்கு.
//
செம கலக்கல் + கலாய்த்தல் :))))
super thalai...appadiye namma sitekkum vanthu etti parthu oru vote pottudanga
http://aveenga.blogspot.com/2009/04/blog-post_19.html
இப்போ உள்ளேன் அப்புறம் வாரேன்!!
:))))))))))))))))
ஆனா இப்பிடி திடீர்னு சீரியசாவெல்லாம் ஆக்காதீங்க... :(
:) அருமை.. முதல்பகுதியின் கலகலப்பு தொடர்கிறது..
ஹை சூப்பர் அண்ணா... :))) ஆனா, இந்த பகுதியோட முடியுதா என்ன?? தொடரும் காணோம்... :((
me the 10th mattum pottukkarene plz anna.. :((
வாங்க ஆளவந்தான் -> என்ன.. ராத்திரி முடிஞ்சி கார்த்தாலாகூட ஆயிடுச்சே... இன்னும் சாப்பிட்டு முடிக்கலியா????? கமெண்ட்ஸே காணோமே???
வாங்க ஆயில்ஸ் -> ஊக்குவித்ததற்கு மிக்க நன்றிபா...
வாங்க ராஜா -> நன்றி...
வாங்க மகேஷ்ஜி -> கதையிலே ஒரு twist வேணுமே? அதுக்குதான் இப்படி. :-))
வாங்க மு-க அக்கா -> மிக்க நன்றி...
வாங்க சகோதரி ஸ்ரீமதி -> ஓ... 'தொடரும்' போட மறந்துட்டேன்... இன்னும் ரெண்டு பகுதிகள் வரும்னு நினைக்கிறேன்!!!!!!!!!
:))))))))
அருமை அருமை.ஒரு நல்ல காமெடி டிராமா பார்த்த திருப்தி.
//
ச்சின்னப் பையன் said...
வாங்க ஆளவந்தான் -> என்ன.. ராத்திரி முடிஞ்சி கார்த்தாலாகூட ஆயிடுச்சே... இன்னும் சாப்பிட்டு முடிக்கலியா????? கமெண்ட்ஸே காணோமே???
//
வைரஸ் (காதல் வைரஸ் இல்லீங்க) வந்து பொறியின் உயிரையும் என் உயிரையும் சேத்து எடுக்குது...
அதான் அப்பவே பின்னூட்டம் போட முடியாம போச்சு.
ஜானகிய “ஜானு” சொல்லியிருந்தா இன்னும் அருமையா இருந்திருக்கும் :)
//
ஜானகி அப்பா: மொதல்ல காபி டிபன் சாப்பிடலாம்.
//
பாவம்.. பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்குறாரு :)
//
மாது: எனக்கு மானாட, மயிலாட தெரியும். அதென்ன கூடமாட?
//
எனக்கு நமீதா மட்டும் தான் தெரியும் :)))
//
மாது: அதைப்பத்தி நீங்க கவலையேபடாதீங்க. நீங்க ஏதாவது ஒரு பிரச்சினையில் மாட்டிக்கிட்டு ஜெயிலுக்குப் போயிட்டாலும், நாந்தான் இருக்கேனே பாத்துக்கறதுக்கு.
//
”அவர” விடுறதா இல்ல போல
//
(தம்தனனம்தன தம்தனனம்தன...)
//
வெள்ளை உடை தேவதையும் தானே :))
கலக்கல் :))
SUPER OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO SUPER
வாங்க வினோத், பிரேம்ஜி -> நன்றி...
ஆளவந்தான் -> 'ஜானு' மாற்றான் தோட்டத்து மல்லிகையாச்சே... நாம் எப்படி அப்படி கூப்பிட முடியும்?... ஹிஹி...
வாங்க ராஜ்குமார் -> கடைய தொறக்கற கவுண்டவுன்லாம் போட்டுட்டு ரெண்டு நாளா ஆளே காணோமேன்னு பாத்தேன்... :-))
/
(தம்தனனம்தன தம்தனனம்தன...)
/
மீஜிக்கு ?
இருக்கட்டும் இருக்கட்டும்.
:)
Post a Comment