கலைஞர் உண்ணாவிரதம், சரத்பாபு மற்றும் பல...
டிஸ்கி - 1: எப்பவுமே ஏதாவது மொக்கையாதான் எழுதறோமே, ஒரு தடவையாவது உருப்படியா நம்ம அரசியல் நிலவரத்தைப் பற்றிய என் கண்ணோட்டத்தை எழுதலாமேன்னு ஆரம்பிச்ச இடுகைதான் இது.
டிஸ்கி - 2: நான் எல்லோரையும் நண்பனா மதிக்கறவன். யார்கூடவும் சண்டை போட விருப்பமில்லாதவன். என் கருத்தை மட்டும் இங்கே சொல்ல விழைகிறேன். கண்டிப்பா நிறைய பேருக்கு இதில் மாற்றுக் கருத்து இருக்கும். அதுக்கு நான் ஒன்ணும் பண்ண முடியாது. யாரையும் திருத்துறது என் வேலை இல்லை.
டிஸ்கி - 3: இந்த மாதிரி கருத்தை சொல்வதால், என்னை திமுக அனுதாபியாகவோ, அதிமுக அனுதாபியாகவோ நினைத்துக் கொள்ள வேண்டாம். நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. போன தேர்தலில் திமுகவுக்கும், அதற்கு முந்தைய தேர்தலில் அதிமுகவுக்கும் ஓட்டு போட்டவன். (கட்சிகள் மட்டும்தான் ஒவ்வொரு தடவையும் மாத்தி மாத்தி கூட்டணி வெச்சிக்க முடியுமா என்ன?).
டிஸ்கி - 4: இந்த இடுகை முழுக்க முழுக்க என் சுய நினைவோடு எழுதிய இடுகைதான். எனக்கு உ.பா குடிக்கும் பழக்கமே இல்லை. ஊஊஊஊஊஊஊ (வாயை ஊதி காட்டினேன்!)
டிஸ்கி - 5: நான் சரத்பாபுவுக்காக பிரச்சாரம் செய்யவில்லை. என் இடுகையைப் பார்த்து யாரும் அவருக்கு ஓட்டுப் போடப்போவதும் இல்லை. எல்லோரும் ஏற்கனவே ஏதாவது தீர்மானம் செய்திருப்பார்கள். அவரைப் பற்றிய என் வாதத்தை எடுத்துச் சொல்லவே இந்த இடுகை.
டிஸ்கி - 6: ஏதாவது பரபரப்பு ஏற்படுத்தவோ, பின்னூட்டங்களை அள்ளவோ நான் பதிவு போடுவதில்லை. என்னுடைய திருப்திக்காகவே அவ்வப்போது பதிவிடுகிறேன். இந்த இடுகையும் யாரையும் திருப்திப்படுத்தவோ, யாருடனாவது சண்டை போடவோ அல்ல.
டிஸ்கி - 7: வெளிநாட்டுலே இருந்துக்கிட்டு இந்த விஷயங்களை பேசவே உனக்கு அருகதையில்லைன்னு சொல்லாதீங்க. எங்கே வெளியில் இருந்தாலும், என் உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்குன்னு நினைக்கிறவன் நான்.
டிஸ்கி - 8: கலைஞரின் இந்த வார உண்ணாவிரதத்தைப் பற்றி மட்டுமே இங்கு பேசுவோம். இப்படித்தான் 1972லே, 1989லே அப்படின்னு ஆரம்பிச்சி டாபிக்கை மாத்தி பேசாதீங்க. அப்படிப்பட்ட பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்.
டிஸ்கி - 9: அதே போல், அந்தம்மா செய்யாததா, மருத்துவரால் செய்ய முடியாததா என்று இடுகையின் நோக்கத்தை திசை திருப்ப வேண்டாம். அதற்கு நான் பதில் சொல்லப் போவதில்லை.
டிஸ்கி - 10: தனி மனித தாக்குதல், மற்ற பதிவர்களைத் தாக்கி வரும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்.
*****
அப்பாடா, ஒரு வழியா எல்லா டிஸ்கியும் முடிஞ்சிடுச்சு. இனிமே இடுகையை ஆரம்பிச்சிட வேண்டியதுதான்.
அச்சச்சோ, நான் சொல்ல வந்த விஷயமே மறந்து போயிடுத்தே... சரி விடுங்க. யோசிச்சி அப்புறமா இன்னொரு இடுகை போட்டுட்டா போச்சு.
இடுகையை முழுக்க படிச்சிக்கிட்டே வந்தவங்களுக்கும், நேரா இந்த கடைசி வரிக்கு வந்தவங்களுக்கும் மிக்க நன்றி...!!!
31 comments:
//உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்குன்னு நினைக்கிறவன் //
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் இடுகையில்,
மாபெரும் அரசியல் சக்தி
"அகிலா ஆண்ட நாயகன் ஜே.கே.ஆர்" பத்தி ஒண்ணும் சொல்லாததால உங்க ஃபாலோயர்லேருந்து விலகிக்கறேன்.
இப்போ உள்ளேன் அண்ணா!!
//டிஸ்கி - 4: இந்த இடுகை முழுக்க முழுக்க என் சுய நினைவோடு எழுதிய இடுகைதான். எனக்கு உ.பா குடிக்கும் பழக்கமே இல்லை. ஊஊஊஊஊஊஊ (வாயை ஊதி காட்டினேன்!)
//
உய்ய்ய் உய்ய்ய்ய்ய் உய்ய்ய்ய்
விசிலடிச்சேன் :-))
ட்ரைலர் முடிஞ்சது.படம் எப்ப?
என்னாது இது? "டிஸ்கி"லோனா வெளாட்டு...ம்ம்ம்ம்??
என்ன பின்னூட்டம் போடணும்னு நினைச்சது மறந்து போச்சே !!
// Mahesh said...
என்னாது இது? "டிஸ்கி"லோனா வெளாட்டு...ம்ம்ம்ம்??
என்ன பின்னூட்டம் போடணும்னு நினைச்சது மறந்து போச்சே !!
//
ரிப்பி
(திரும்ப சொல்றதுக்கு என்னமோ போடுவாங்களே ஹய்யோ அதுவும் மறந்துப்போச்சே....!
:))))
அட கொக்க மக்க டிஸ்கியே பதிவா அவ் அவ் ...
//உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்குன்னு நினைக்கிறவன் //
உங்கள் எண்ணங்களை மதிக்கிறேன்
டிஸ்கி மட்டும் தான் பதிவுன்னு பாதியில் புரிஞ்சு போச்சு... ஆனாலும் ப்ரச்சனையில்ல ..ஒவ்வொரு டிஸ்கியு்மே ஒரு பதிவு.. :)
ஆஹா... ஏன்னே இப்படி ஆகிட்டீங்க...
காலங்கார்த்தால எழுந்ததுமே மொக்கையோட ஆரம்பிக்க வைச்சுட்டீங்களே :-))
டிஸ்கி 3, டிஸ்கி 4 செம்ம கலக்கல் :-))
நண்பர்களுக்கு:
இது ஒரு மரண மொக்கைப் பதிவுதான். பூச்சாண்டியில் இது மாதிரி பதிவுகள் அடிக்கடி ரிப்பீட்டு ஆகாதுன்னு உறுதி கூறுகிறேன்... நன்றி...
பாஸ் இப்படித்தான் 1989லயும் 1972லயும்
பிளாக் எழுதிட்டு இருந்தப்ப போட்ட மொக்கை தாங்காம 27 மாடு 35 ஆடு அப்புறம் 2 பன்னிக்குட்டி 3 ரித்தீஷ்குமார்லாம் செத்துப்போனாங்க என்பதை இங்கே தெரிவித்துக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.
இந்த பின்னூட்டத்த மட்டுறுத்தி பாருங்க உங்களை கண்டித்து எம்.ஜி.ஆர் சமாதி பக்கத்தில உண்ணாவிரதம் இருந்து உங்களுக்கு சுதந்திரம் வாங்கி தந்திருவேன்
நடத்துங்க நடத்துங்க..
//நேரா இந்த கடைசி வரிக்கு வந்தவங்களுக்கும் மிக்க நன்றி...!!!
//
எப்படிதான் கண்டு பிடிக்கிராய்ங்கலோ? :))))))))
10 டிஸ்கி வரும்போதே நினைச்சேன்! எதோ வில்லங்கமா தான் இருக்கும்னு!
:)))
:) :) :)
டிஸ்கி: 11 நல்ல பதிவு. நல்ல யோசனை.
//டிஸ்கி: 11 நல்ல பதிவு. நல்ல யோசனை.//
டாப்பு! டாப்பு!
கலக்கல்.. எப்படி எல்லாம் யோசனை வருது
Ado pannadai osia blog kidacha ipadithan
வாங்க அறிவிலி -> ஹிஹி... யாருங்க அந்த அகிலா?????.... :-))
வாங்க ரம்யா -> மெதுவா வாங்க...
வாங்க பிரேம்ஜி -> அட நீங்க வேறே.. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் உடம்பே ரணகளமாயிருக்கு.... மேலே சொல்லியிருக்கேன் பாருங்க.. இனிமே இந்த மாதிரி மொக்கை வராதுன்னு... அவ்வ்வ்...
வாங்க மகேஷ்ஜி, ஆயில்யன் -> ஹாஹா....
வாங்க சுரேஷ் -> நன்றி...
வாங்க மு-க அக்கா -> ஆஹா....
வாங்க சென்ஷி -> ரொம்ம்ம்ப டென்சனாயிருந்ததாலே இப்படி ஒரு மொக்கை போடவேண்டியதா போச்சு... :-((
வாங்க அதிஷா அண்ணே, சகோதரி வித்யா -> நன்றி...
வாங்க சுப்பு -> அவ்வ்வ்....
வாங்க வால், வேந்தன், எஸ்கே, பரிசல், வெங்கிராஜா, நசரேயன் -> நன்றி...
வாங்க அனானி -> அவ்வ். ஓசியில்லேண்ணே... 10$ கட்டி வாங்கியிருக்கேன்... சரி விடுங்க. என் மேலே நீங்க வெச்சிருக்கிற நம்பிக்கைய இனிமே காப்பாத்தறேண்ணே... நன்றி...
டிஸ்கி படிச்சு முடிக்கறதுக்குல்லையே மூச்சு முட்டிருச்சு... ஹ்ம்ம்... ஆனா இந்த டிஸ்கி-கள் நீங்க சொல்லி இருக்கற 'கலைஞர் உண்ணாவிரதம்', 'சரத்பாபு' போன்ற தலைப்புகள் எழுதறவங்க copy பண்ணி போட்டுக்கலாம்.. பிரச்சனை வராம இருக்கறதுக்கு... wat u say ?
/*மற்ற பதிவர்களைத் தாக்கி வரும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்.*/
அப்படியென்றால், உங்களைத் தாக்கி வரும் இந்தப் பின்னூட்டத்தை நிச்சயம் மட்டுருத்தக்கூடாது..
ஏஏஏஏஏஏஏஏஏஏஏய்...... டிஷ்யூம்.. டிஷ்யூம்.. டுமீல்.. டிஷ்யூம்.. டமார்.. டுமீல்.. டிஷ்யூம்.. ஓஓஓஓஓய்.. டிஷ்யூம்.. டிஷ்யூம்..
டயர்ட் ஆயிட்டேன்.. ஜூஸ் குடிச்சு ரிஃப்ரெஷ் பண்ணிட்டு வந்து மீதி தாக்குதலைத் தொடர்கிறேன்.
செம.. குரு.!
இந்த பதிவோடு உங்களுக்கு "மொக்கைசாமி" விருது வழங்கப்படுகிறது.
டிஸ்கி 1: லாகிக் ஒதைக்குது.
டிஸ்கி 2: என்னது, மத்தவங்கள திருத்துறதா ? மொத நீங்க திருந்த வழியப் பாருங்க.
டிஸ்கி 3: நல்லாவே தெரியுது. போன தேர்தலில் திமுகவுக்கும், அதற்கு முந்தைய தேர்தலில் அதிமுகவுக்கும் ஓட்டு போட்டீங்கனா, நீங்க பா.ம.க அனுதாபி.
டிஸ்கி 4: சுய நினைவோடு எழுதியே இவ்வளவு மொக்கையா இருக்கு.
டிஸ்கி 5: இல்லைங்க. யாரு நிறைய குடுக்கிறான்களோ, அவங்களுக்கு தானே ஓட்டு போடணும் ?
மீதி அப்புறம்.
மடிப்பாக்கத்தில் ஊசி மற்றும் நூல்கண்டுகள் தட்டுப்பாடு!
ஹாஹா.. நல்ல இடுகை.. :)
//இந்த பின்னூட்டத்த மட்டுறுத்தி பாருங்க உங்களை கண்டித்து எம்.ஜி.ஆர் சமாதி பக்கத்தில உண்ணாவிரதம் இருந்து உங்களுக்கு சுதந்திரம் வாங்கி தந்திருவேன்// :)))
செம்ம குசும்புதான் உங்களுக்கு :)
அனுஜன்யா
Post a Comment