அமெரிக்கர்களின் மாமனார்/மியார் பிரச்சினைகள்!!!
அலுவலகத்தில் ஒரு முக்கியமான மீட்டிங்கின் நடுவில் ஒருவர் தன் மாமனாரைப் பற்றி ஏதோவொன்று பேச, உடனே அறையில் இருந்த எல்லோரும் தங்கள் மாமனார் / மாமியார் பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். அவ்வளவுதான். அடுத்த அரை மணி நேரத்துக்கு மீட்டிங்கின் விஷயத்தை மறந்துவிட்டு, அனைவரும் இதைத்தான் பேசினர். பக்கத்து அறையில் நடப்பதையே ஒட்டுக் கேட்டு நேரத்தைக் கடத்தும் நான், என் அறையிலேயே நடப்பதை கவனிக்காமல் விட முடியுமா?
அவங்க பேசினதையும், நான் நினைச்சதையும்தான் (நீல வண்ணம்) இந்த பதிவில் சொல்லியிருக்கேன்.
*****
ஒருத்தர்: என் மாமனார் எங்க வீட்டுக்கு வந்துட்டார்னா, என் ஃப்ரிஜ்ட்லே இருக்கற பீர், ஸ்காட்ச் எல்லாத்தையும் ராத்திரியோட ராத்திரியா காலி பண்ணிடுவாரு. அதனால், அப்போ மட்டும் செலவு டபுள் ஆகுது.
எங்க ஊர்லே பெரியவங்க சின்னவங்கள, குடிக்காதீங்கன்னு சொல்லி பாட்டிலை எடுத்து உடைச்சிடுவாங்க. இங்கே அவங்களே எடுத்து குடிச்சிடறாங்க. அவ்ளோதான் வித்தியாசம்.
ஒரு வெள்ளையம்மா: என் மாமனார் அவர் வீட்டுக்கு எங்களை அடிக்கடி கூப்பிடுவாரு. என்னடா, பாசமா கூப்பிடறாரேன்னு போனாக்கா, அங்கே இவருக்கு புல்லு புடுங்கறது, மரம் நடறதுன்னு ஏதாவது வேலை வெச்சிருப்பாரு. ரெண்டு நாளு எனக்கும் பெண்டு நிமிந்துடும். பயங்கர கடி.
ச்சின்ன வயசிலே உங்க புருஷனுக்கு தலை வாரி விட்டு, பல் தேச்சியெல்லாம் விட்டாரே அவங்கப்பா. அவருக்காக புல்லு கூட புடுங்க மாட்டீங்களா??? நல்லா இருக்கே கதை!!!
இன்னொரு வெள்ளையம்மா: என் மாமியார் வீட்டுக்கு வந்துட்டா, என்னை சமைக்கவே விடமாட்டாங்க. அவங்க ஸ்டைல்லேதான் எல்லாமே இருக்கணும்னு விரும்புவாங்க. என் பொண்ணுக்குக்கூட அது பிடிக்காது.
ஏம்மா, வெறும் காஞ்சிப் போன பன்னை அடுப்புலே போட்டு திருப்பணும். காய்கறிகளை பச்சை பச்சையா அதுக்கு நடுவிலே வெச்சி சாப்பிடணும். அவ்ளோதானே? இதுக்கு என்னமோ பஞ்சபட்ச பரமான்னங்கள் (புரியுதா?) சமைக்கற மாதிரி அலுத்துக்குறீங்களே?
இன்னொருத்தர்: (வருத்தத்துடன்) என் மாமனார், முதியோர் காப்பகத்துலே ஜாலியா இருக்கார். எங்க வீட்டுக்கு வான்னாக்கூட வரவே மாட்டேங்குறார்.
ம்ஹும். நான் கேள்விப்பட்டது வேறே மாதிரியில்ல இருக்கு. போன தடவை அவரை வரச்சொல்லிட்டு, நீங்க வீட்டை பூட்டிட்டு எஸ்கேப் ஆனதுலேர்ந்துதான் அவர் வரமாட்டேங்குறாராமே.
ஒருத்தர்: என் மாமனார் இருக்கற காப்பகத்துலே வயசானவங்கல்லாம் சேந்து டூர் போறாங்க. நீச்சல், யோகா கத்துக்கறாங்க. நல்லா சமைக்கறாங்க.
இருடி. இன்னும் கொஞ்ச நாள்லே உனக்கும் அதே காப்பகம்தான். வேணும்னா இப்பவே முன்பதிவு செஞ்சி வெச்சிக்கோ. அப்புறம் சாதா நீச்சலென்ன, கடப்பாரை நீச்சலே அடிக்கலாம்.
அடுத்தவர்: என் பொண்டாட்டியும் எங்கம்மாவும் ஒரே அறையில் இருக்கறத என்னாலே தாங்கவே முடியாது. அடுத்து என்ன நடக்குமோன்னு பயம்மா இருக்கும்.
நோ டென்சன். அந்த அறையை விட்டு வெளியே வந்துட்டு கதவை வெளிப்பக்கமா பூட்டிடணும். கொஞ்ச நேரம் கழிச்சி உள்ளே போய் ஒரு அரை நாள் செலவு செய்து அறையை சுத்தம் செய்துட்டா, முடிஞ்சது வேலை.
*****
இவ்வளவும் பேசி முடிச்சிட்டு, கடைசியில் என்னய பாத்து கேட்டாங்க - உங்க ஊர்லேயும் இந்த மாதிரி மாமியார் மாமனார் பிரச்சினையெல்லாம் இருக்கா? எப்படி சமாளிக்கிறீங்கன்னு.
நான் என்னத்த சொல்றது. நம்ம தோட்டத்து மல்லிகை மணக்குதோ நாறுதோ - அது நமக்குள்ளே. அவங்ககிட்டே போய் அதை சொல்ல முடியுமா?. "கண்டிப்பா நிறைய வீட்லே அந்த பிரச்சினைகள் உண்டு"ன்னு மட்டும் சொல்லிட்டு உடனே அறையை விட்டு வெளியே வந்துட்டேன்.
எங்க ஊர்லே இந்த பிரச்சினைய வெச்சித்தான் நிறைய (எல்லா!) தொலைக்காட்சித் தொடர்கள், அதிலே வேலை பாக்குற நடிக நடிகையர், கலைஞர்கள் எல்லாருமே பொழைக்கறாங்க. அதனால், இந்த பிரச்சினைதான் எங்களுக்கு கடவுள் மாதிரி. இது இல்லேன்னா, எங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிடும்.
அட, வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமப்பா!!!
*****
37 comments:
//சாதாரணமப்பா//
அதானே! இதப் போய் பெருசா பேசிகிட்டு. விடுங்க தல.
எவ்வளவுதான் யோசிச்சாலும் புரிய மாட்டேங்குது. நீங்க போட்டிருக்கற போட்டோக்கும் மாமனார் / மாமியாருக்கும் என்னா சம்பந்தம்?
எதுக்கும் திரும்ப ஒருவாட்டி உத்துப் பாத்திட்டு வர்றேன் :))
second :)
//
பஞ்சபட்ச பரமான்னங்கள் (புரியுதா?)
//
புரியல :(
//
இன்னும் கொஞ்ச நாள்லே உனக்கும் அதே காப்பகம்தான். வேணும்னா இப்பவே முன்பதிவு செஞ்சி வெச்சிக்கோ
//
சைக்கிள் கேப்ல மெசேஜ் ஹா :)
//அட, வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமப்பா!!!
//
அண்ணே நீங்க யூத்துண்ணே...
நீங்க போட்றுக்கற ஸ்டில்ல மாட்டுப்பொண்ணோட(உங்க ஊர்ல அது மாமியாரா இருக்கவும் சான்ஸ் இருக்கு)ட்ரெஸ் நல்லா இருக்கு.
நெம்ப அனுபவம் போல இருக்குதே..
இந்த மாதிரி பதிவுகளை படிக்கும் போது ஏதோ புனைவு கதைகளை படிப்பதை போன்ற உணர்வு.. (இன்னும் எனக்கு கண்ணாலம் ஆகலீங்கண்ணா!!!)
எனது இன்றைய முதல் ஓட்டு உங்களுக்கே...!!!
உப்புப் பெறாத விஷயம்னு சொல்லியிருக்கலாமே... அவங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்றதுக்கு ஒரு சான்சை விட்டுட்டீங்களே !!!
:)
வாங்க ஸ்ரீதர் நாராயணன் -> அவ்வ்வ். அந்த படம் மாமியார் மருமக சண்டை போடறத பத்திதானே????? அதுக்குதான் அதை போட்டேன்...
வாங்க ஆளவந்தான் -> கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம் - இந்த பாட்டு நினைவுக்கு வருதா? அதுலே சாப்பிடுவாரு பாருங்க அதுதான் ப.ப.ப... :-))
வாங்க விக்னேஸ் -> ஹாஹா.... சரி சரி.. இதெல்லாம் நமக்குள்ளேயே இருக்கட்டும்....:-)))
வாங்க தங்கச்சி ஸ்ரீமதி -> நன்றி....
வாங்க கடைக்குட்டி -> சரி சரி மாட்டாமலா போயிடுவீங்க... அப்ப சொல்லுங்க... :-)))
அவிங்க ஊர்லயும் இதே கதைதானா...
கேக்கவே சந்தோஷமா இருக்கு.....
அதிசயம் ஆனால் உண்மை... 13வது commentலயே வந்துட்டேன்......
வாங்க மகேஷ்ஜி -> அவ்வ். இது தோணாமே போயிடுச்சே!!!
வாங்க பட்டாம்பூச்சி -> நன்றி...
வாங்க ஸ்வர்ணரேகா -> அவ்வ். இன்னிக்கு கடை நல்லா காத்து வாங்குது... நீங்களாவது வந்தீங்களே... வாங்க வாங்க....:-)))
//
பக்கத்து அறையில் நடப்பதையே ஒட்டுக் கேட்டு நேரத்தைக் கடத்தும் நான், என் அறையிலேயே நடப்பதை கவனிக்காமல் விட முடியுமா?
//
ஆஹா இதெல்லாம் வேறேயா
சூப்பர் ஒ சூப்பர்!!
//
ச்சின்ன வயசிலே உங்க புருஷனுக்கு தலை வாரி விட்டு, பல் தேச்சியெல்லாம் விட்டாரே அவங்கப்பா. அவருக்காக புல்லு கூட புடுங்க மாட்டீங்களா??? நல்லா இருக்கே கதை!!!
//
நச்சுன்னு நினைக்கறீங்க
வாழ்க உங்கள் நினைவு !!
//
ஏம்மா, வெறும் காஞ்சிப் போன பன்னை அடுப்புலே போட்டு திருப்பணும். காய்கறிகளை பச்சை பச்சையா அதுக்கு நடுவிலே வெச்சி சாப்பிடணும். அவ்ளோதானே? இதுக்கு என்னமோ பஞ்சபட்ச பரமான்னங்கள் (புரியுதா?) சமைக்கற மாதிரி அலுத்துக்குறீங்களே
//
புரியுது புரியுது எங்க பாட்டி அடிக்கடி இந்த வார்த்தைகளை சொல்லுவார்கள் :)
//
இன்னொருத்தர்: (வருத்தத்துடன்) என் மாமனார், முதியோர் காப்பகத்துலே ஜாலியா இருக்கார். எங்க வீட்டுக்கு வான்னாக்கூட வரவே மாட்டேங்குறார்.
//
ஐயோ பாவம் :(
//
இருடி. இன்னும் கொஞ்ச நாள்லே உனக்கும் அதே காப்பகம்தான். வேணும்னா இப்பவே முன்பதிவு செஞ்சி வெச்சிக்கோ. அப்புறம் சாதா நீச்சலென்ன, கடப்பாரை நீச்சலே அடிக்கலாம்.
//
ஹா ஹா சூப்பர், கலக்கிட்டீங்க அண்ணா !!
//
அவ்வ். இன்னிக்கு கடை நல்லா காத்து வாங்குது... நீங்களாவது வந்தீங்களே... வாங்க வாங்க....:-)))
//
இது எஙகளை அவமான படுத்துற மாதிரி இருக்கு :))))
இனிமேல் ஈ கூட நுழையமுடியாத அளவுக்கு கும்மியடிச்சா தான் சரியாகும் போல :)
//
நோ டென்சன். அந்த அறையை விட்டு வெளியே வந்துட்டு கதவை வெளிப்பக்கமா பூட்டிடணும். கொஞ்ச நேரம் கழிச்சி உள்ளே போய் ஒரு அரை நாள் செலவு செய்து அறையை சுத்தம் செய்துட்டா, முடிஞ்சது வேலை.
//
ஹையோ ஹையோ சிரிச்சு சிரிச்சு ஒரே வயிறு வலிதான் போங்க !!
//
இவ்வளவும் பேசி முடிச்சிட்டு, கடைசியில் என்னய பாத்து கேட்டாங்க - உங்க ஊர்லேயும் இந்த மாதிரி மாமியார் மாமனார் பிரச்சினையெல்லாம் இருக்கா? எப்படி சமாளிக்கிறீங்கன்னு.
//
ஆரம்பிச்சுட்டாங்கையா கேள்வி கேக்க :)
//
எங்க ஊர்லே இந்த பிரச்சினைய வெச்சித்தான் நிறைய (எல்லா!) தொலைக்காட்சித் தொடர்கள், அதிலே வேலை பாக்குற நடிக நடிகையர், கலைஞர்கள் எல்லாருமே பொழைக்கறாங்க. அதனால், இந்த பிரச்சினைதான் எங்களுக்கு கடவுள் மாதிரி. இது இல்லேன்னா, எங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிடும்.
//
ஆமா ஆமா இல்லேன்னா எதுவுமே இல்லே, T.V. இல்லே, சினிமா இல்லே
அப்புறம் எதுவுமே இல்லே :))
//
ஆளவந்தான் said...
//
அவ்வ். இன்னிக்கு கடை நல்லா காத்து வாங்குது... நீங்களாவது வந்தீங்களே... வாங்க வாங்க....:-)))
//
இது எஙகளை அவமான படுத்துற மாதிரி இருக்கு :))))
இனிமேல் ஈ கூட நுழையமுடியாத அளவுக்கு கும்மியடிச்சா தான் சரியாகும் போல :)
//
வாங்க வாங்க ஆளவந்தான்
நல்ல இருக்கீங்களா??
நான் கூட பதிவு போட்டு இருக்கேன்
வந்த இடத்திலே ஒரு விளம்பரம்தான்:)
ஆளவந்தான் இருக்கீங்களா??
இல்லே
எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஆஆஆஆ????
நான் தனியாதான் ஆடிகிட்டு இருக்கேனா?? சரி நான் வரேன்!!
//RAMYA said...
ஆளவந்தான் இருக்கீங்களா??
இல்லே
எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஆஆஆஆ????
//
இருக்கேன்.. ஆணி கொஞ்சம் பெரிசு.. மானிட்டரையே மறக்குதுன்னா பாத்துக்கஙக்ளேன் :)
ரம்யா..
கும்மிக்கு ரெடியா
எவ்ளோ டார்கெட்’னு சொன்னா கொஞ்சம் ப்ளான் பண்ண வசதியா இருக்கும். ஏன்னா எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும்னு எங்க தல கைப்புள்ள தலையால அடிச்சு சொல்லி இருக்காரு
நீங்களும் எஸ்கேப்பா
சரி வந்ததுக்கு ஒரு ரவுண்ட் போட்டாச்சு
இப்ப எனக்கு கொஞ்சம் பழகி போச்சி மாமியாரு/மருமக பிரச்சனை எல்லாம்
:)-
பதிவின் கடைசி பாராவை மிக ரசிச்சேன்.
அவங்க கிட்ட நம்ம நாட்டு மாமனார்/மாமியார் பிரச்சனையை சொல்லாம விட்டதுக்கு பாராட்டுக்கள்.
அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!..
சான்ஸ்சே இல்ல தல. வுட்டு கலக்கிட்ட போ...இன்னா சொல்றதுனே தெர்லபா....
பட டமாஸாகீது. ஊடால மெசேஜ் வுட்டுக்கின பாரு..அது சோகுபா...
வாய்த்துக்கள் நைனா..
லேட்டா வந்ததுக்கு மன்னாப்பு கேட்டுகிறேன்.
தண்ணி 'தெளிச்சி' விட்டா போறாதுன்னு, குடத்தை அப்படியே தலையிலே கவுத்துட்டாங்க தங்கமணி.
பதிவைப் பார்த்தால் அப்படி தெரியலையே....நேரே நயாகரா ஃபால்ஸ்க்கு அடியிலே நிறுத்தினா மாதிரின்னா இருக்கு
'உச்சத்தை' தொட்டவரே!கூரையையும் பிச்சிகிட்டுப் போவீங்க போல இருக்குதே:)
Post a Comment