Sunday, April 19, 2009

நொறுக்ஸ் - ஞாயிறு - 4/19/2009


ஏதோ ஒரு பிரச்சினையால் கடையை மூடிவிட்டேன் என்று போன பதிவில் கூறியதற்கு, பின்னூட்டத்தில்/மெயிலில் விசாரித்த நண்பர்களுக்கும், அடாது பெய்த மழையில் விடாது நெடுந்தூரம் வண்டி ஓட்டி வந்து மூடை மாற்றிய அண்ணன் மருதநாயகத்திற்கும் எனது நன்றிகள் பல!


நான் தனி மனிதனில்லை. என் பின்னாடி ஆறு கோடி மக்கள் இருக்காங்கன்னு வருங்கால முதல்வர்கள் (நிகழ்கால நடிகர்கள்) மாதிரி சொல்ல முடியலேன்னாலும், நம் அலைவரிசையில் சில நல்ல நண்பர்களைக் கண்டுபிடிக்க உதவிய இணையத்திற்கு நன்றி.

சரி. வளவளன்னு பேசாமே மேட்டருக்கு வாப்பான்னு யாரோ சொல்றது கேக்குது.

காண்டாமிருகத்துக்கே கோன் ஐஸ்க்ரீம் கொடுத்தவனுக்கு எந்த பிரச்சினையும் ரொம்ப சாதாரணம்தான்னு சொல்லிட்டு... அட.. ரெண்டு வருஷம் முன்னாலே நடந்த அந்த ஐஸ்க்ரீம் கதையை உங்ககிட்டே சொல்லவேயில்லையா இதுவரைக்கும்.... சரி. விவரம் பதிவில்.

*****

பதிவுலக நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும்போது, கடைசியில் 'சத்யா எ ச்சின்னப் பையன்' என்று அனுப்பிக் கொண்டிருந்தேன். யாரும் ஒன்றும் சொல்லாத நிலையில், ஒருவரிடம் பேசும்போது - பாத்துப்பா, அவசரத்துலே யாராவது 'எச்சிப் பையன்'னு படிச்சிடப் போறாங்கன்னு சொன்னாரு. அன்னிலேர்ந்து மாத்தி எழுத ஆரம்பிச்சிட்டேன் - 'ச்சின்னப் பையன் எ சத்யா'.

அப்படி சொன்னது யாருன்னா.....

வேலன் அண்ணாச்சி. வணக்கம்...

*****

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் அல்லது சித்திரை மாத ஒண்ணாம் தேதி நல்வாழ்த்துகள். அதுவும் கிடையாது - ஒத்துக்க மாட்டேன் - அப்படின்னா, சரி, சும்மாவே வாழ்த்துகள்.

*****

ஒரு(ரே) மாதிரி குறள்கள் சில...

எல்லா இட்லியும் இட்லியல்ல சான்றோர்க்கு
குஷ்பு இட்லியே இட்லி

எல்லா பொம்மையும் பொம்மையல்ல பாப்பாக்கு
நண்பனின் பொம்மையே பொம்மை

எந்த புடவையும் அழகல்ல பெண்களுக்கு
கடையிலில்லா புடவையே அழகு

எல்லா பல்டியும் பல்டியல்ல மாண்புமிகு
-----* அடிக்கும் பல்டியே பல்டி

* இந்த இடத்திலே கலைஞர், ஜெ, மருத்துவர், ரஜினி யார் பேர் வேணும்னாலும் போட்டு படிக்கலாம்.

*****

காலுறை நாற்றமடிக்காமல் இருக்க, டெட்டால் ஒரு சொட்டு போட்டுக்குங்கன்னு நண்பர் டாக்டர் புரூனோ ஒரு தடவை சொல்லியிருந்தார்.

போன வாரம் திடீர்னு அது நினைவுக்கு வரவே, கொஞ்ஞ்ஞ்சம் அதிகம் போட்டுக்கிட்டு போனேன் பாருங்க, அலுவலகத்துலே பயங்கர வாசனை. எவனோ ஒருத்தன் நல்ல நாத்த மருந்து போட்டுக்கிட்டு வந்திருக்கான்னு ஒருத்தரு, எனக்கு தலை வலிக்குதுன்னு ஒரு அம்மா, புதுசா யூகலிப்டஸ் செடி எங்கேயோ வெச்சிருக்காங்கன்னு ஒருத்தரு - அன்னிக்கு நாள் முழுக்க இதேதான் பேச்சு.

ஹிஹி. அதுக்கு நாந்தான் காரணம்னு நான் ஏன் சொல்றேன்? அவங்க பேச்சுலேயே கலந்துக்காமே படுபிஸியா(!!) வேலை செய்துக்கிட்டே இருந்தேன்.

அதுக்கப்புறம் காலுறை வழக்கம்போல் நாத்தம் அடிச்சாகூட பரவாயில்லை, யாருக்கும் தெரியாதுன்னு டெட்டால் போடறதை விட்டுட்டேன்.

*****

44 comments:

ஆளவந்தான் April 19, 2009 at 9:12 PM  

இன்னைக்கு 19 தானே.. ஒஹோ தாயகத்தோட டைம்ஸோனை ஃபாலோ பண்றீங்களா

ஆளவந்தான் April 19, 2009 at 9:13 PM  

சரி பதிவ படிச்சுட்டு வர்றேன்

Suresh April 19, 2009 at 9:32 PM  

வாங்க அப்புறம் அந்த சத்யா எ ச்சின்ன பையன் ஹா ஹா சூப்பர் மெட்டர்

அறிவிலி April 19, 2009 at 9:52 PM  

போட்டோல ஐஸ்க்ரீம் குடுக்கறது நீங்களா?

நம்பவே முடியல!!!

ஆளவந்தான் April 19, 2009 at 9:54 PM  

//
காண்டாமிருகத்துக்கே கோன் ஐஸ்க்ரீம் கொடுத்தவனுக்கு
//
புறாவுக்கு பெல் அடிச்சவர் ஒருத்தர் இருக்காரு தெரியும் தானே

ஆளவந்தான் April 19, 2009 at 9:56 PM  

//
அதுக்கப்புறம் காலுறை வழக்கம்போல் நாத்தம் அடிச்சாகூட பரவாயில்லை, யாருக்கும் தெரியாதுன்னு டெட்டால் போடறதை விட்டுட்டேன்.
//

பொழச்சது ஒரு கூட்டம் :)

ஆளவந்தான் April 19, 2009 at 9:58 PM  

//
அவங்க பேச்சுலேயே கலந்துக்காமே படுபிஸியா(!!) வேலை செய்துக்கிட்டே இருந்தேன்.
//
ஐயோ..இங்க பாரேன் இங்க ஒருத்தர் யாருமே இல்லாத கடையில யாருக்கோ டீ ஆத்துறாருனு மைண்ட் வாய்ஸ் ஒன்னு எடக்கு மொடக்கா கேட்டிருக்கனுமே

ஆளவந்தான் April 19, 2009 at 10:00 PM  

//
அன்னிலேர்ந்து மாத்தி எழுத ஆரம்பிச்சிட்டேன் - 'ச்சின்னப் பையன் எ சத்யா'.
//
முதலெழுத்து மெய்யழ்த்தா இருக்க கூடாது தெரியும் தானே.. எதாவது ”உயிர்” சேக்கனும், “எ” சேக்கலாமா?

ஆயில்யன் April 19, 2009 at 10:31 PM  

//அதுக்கப்புறம் காலுறை வழக்கம்போல் நாத்தம் அடிச்சாகூட பரவாயில்லை, யாருக்கும் தெரியாதுன்னு டெட்டால் போடறதை விட்டுட்டேன்//


நார்மலா போயிக்கிட்டிருக்கிற விசயத்தை நாம ஏன் பாஸ் மாத்தணும் :)))

ஆயில்யன் April 19, 2009 at 10:31 PM  

//ஆளவந்தான் said...
//
காண்டாமிருகத்துக்கே கோன் ஐஸ்க்ரீம் கொடுத்தவனுக்கு
//
புறாவுக்கு பெல் அடிச்சவர் ஒருத்தர் இருக்காரு தெரியும் தானே
///

பாஸ் புறாவுக்கு பெல் அடிச்சவரா? இல்ல புறாவை பெல்லால் அடிச்சவரா?

:)))

முத்துலெட்சுமி/muthuletchumi April 19, 2009 at 11:01 PM  

:) கொடுத்தா சாப்பிடற காண்டாமிருகத்துக்கிட்டல்லா குடுத்திருக்கனும்..

Thamiz Priyan April 19, 2009 at 11:16 PM  

///எந்த புடவையும் அழகல்ல பெண்களுக்கு
கடையிலில்லா புடவையே அழகு///
இந்த குறளில் நிறைய அனுபவ வெளிப்பாடு இருக்கே!.. ;-))

Anonymous,  April 19, 2009 at 11:20 PM  

இது சத்யா.

இத விட்டுட்டு கடைய மூடுறேன். லீசுக்கு விடுறேன்னுட்டு.

மீண்டு(ம்) வந்ததற்கு வாழ்த்துக்கள்.

//எந்த புடவையும் அழகல்ல பெண்களுக்கு
கடையிலில்லா புடவையே அழகு//

அம்புட்டுச் சேதாரமாப்பா?

பரிசல்காரன் April 20, 2009 at 12:11 AM  

கடைய மூடற டெக்னிக்கெல்லாம் பழசு சத்யா. இப்பல்லாம் இந்த மாதிரி ஃபீல் பண்ணினா வந்து மொத்தி கடைய தொறந்து வியாபாரத்தை ஆரம்பிச்சு வைக்கற நண்பர்கள் நிறைய பேர் இருக்காங்க. (அனுபவஸ்தன் சொல்றேன்!)

முத்துலெட்சுமி மேடத்தோட பின்னூட்டத்தை வழிமொழியறேன்.

Mahesh April 20, 2009 at 12:47 AM  

அண்ணன் back with a bang !! வாங்க வாங்க.... கடைக்கு வெள்ளையடிச்சு முடிஞ்சுதா?

Vidhya Chandrasekaran April 20, 2009 at 2:12 AM  

போட்டோவ பார்த்ததும் ஒரு கவிதை தோணுது. வேணாம் நீங்க கோச்சுப்பீங்க:)

கைப்புள்ள April 20, 2009 at 2:39 AM  

கடைசி போட்டோ, குறள், சாக்ஸ் மேட்டர் மொத்த பதிவு எல்லாமே சூப்பருங்க. இதையெல்லாம் விட்டுட்டு கடையை மூடறேன் கடையைத் தொறக்கறேன்னு என்ன இது சின்னப்பில்லத்தனமா?
:)

Thamira April 20, 2009 at 2:40 AM  

என்னடா தலைய கொஞ்ச நாளா காணோம்னு நெனச்சுக்கிட்டிருந்தா.. இப்பதான் பார்க்குறேன் போன பதிவ.. அடடா என்ன ஆச்சு.?

எப்டியோ வந்துட்டீங்கள்ல.. வுடு, தல.!

Unknown April 20, 2009 at 2:43 AM  

Anna welcome back.. :)))

Asusual super post.. :))

மங்களூர் சிவா April 20, 2009 at 3:18 AM  

எல்லாமே கலக்கல்

எச்சிப்பையன் செம கலக்கல்

ROTFL
:))

லோகு April 20, 2009 at 3:42 AM  

எல்லா பிகரும் பிகர்அல்ல எனக்கு
எங்கவூர் பிகரே பிகர்.

Anonymous,  April 20, 2009 at 5:33 AM  

காண்டா மிருகத்துக்கு ஐஸ் கிரீம் குடுக்கறீங்களா இல்ல அல்வா குடுக்கறீங்களா

anujanya April 20, 2009 at 5:40 AM  

வெல்கம் பாக். நொறுக்ஸ் நல்லா இருக்கு.

அனுஜன்யா

எம்.எம்.அப்துல்லா April 20, 2009 at 6:30 AM  

வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே
வாண்ணே

:)))

சின்னப் பையன் April 20, 2009 at 6:34 AM  

வாங்க ஆளவந்தான் -> நாம எங்கிருந்தாலும், நமக்கு base எப்பவுமே தாயகம்தானே??? நன்றி..

வாங்க சுரேஷ் -> நன்றி..

வாங்க அறிவிலி -> அவ்வ்வ்... ஏங்க நம்பவே முடியல... தனியா எனக்கு மட்டும் சொல்லுங்க...

வாங்க ஆயில்ஸ் -> ஹிஹி... அவங்களுக்கு அந்த ‘ நாற்றமே' பழகிப் போச்சு... ( நாற்றம் = மணம்!!!)

வாங்க ராகி ஐயா -> நன்றி..

வாங்க மு-க அக்கா -> அவ்வ்... அப்புறம் கடையோட மாப்பிள்ளை அடுத்த பாகங்களை யார் எழுதறது?????

ஆளவந்தான் April 20, 2009 at 7:14 AM  

//
வித்யா said...

போட்டோவ பார்த்ததும் ஒரு கவிதை தோணுது. வேணாம் நீங்க கோச்சுப்பீங்க:)
//
போடலைன்னா நாங்க கோவிச்சுப்போம் ... பரவாயில்லையா ?

ஆளவந்தான் April 20, 2009 at 7:18 AM  

//
பாஸ் புறாவுக்கு பெல் அடிச்சவரா? இல்ல புறாவை பெல்லால் அடிச்சவரா?

:)))
//

ஆஹா... நீங்க இப்புடி கேட்டு புட்டீங்க.. நான் எதாவது பதில் சொல்ல போயி.. அவரு “சைலன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பேசிகிட்டு இருக்கோம்ல”னு கத்திட்டாருனா. எனக்கு பயந்து வருதுங்க.. :)))

ராஜ நடராஜன் April 20, 2009 at 7:54 AM  

வந்திட்டீகளா!மகிழ்ச்சி.

பழமைபேசி April 20, 2009 at 8:39 AM  

//போன பதிவில் கூறியதற்கு//

போன இடுகையில்...

பழமைபேசி April 20, 2009 at 8:42 AM  

//காலுறை நாற்றமடிக்காமல் இருக்க, டெட்டால் ஒரு சொட்டு போட்டுக்குங்கன்னு நண்பர் டாக்டர் புரூனோ ஒரு தடவை சொல்லியிருந்தார்.//

கனவான்களே, தங்காள்களே, note the point...

பழமைபேசி April 20, 2009 at 8:42 AM  

இஃகிஃகி! நான் வாறேன்...

சின்னப் பையன் April 20, 2009 at 9:37 AM  

வாங்க தமிழ் பிரியன், வேலன் அண்ணாச்சி -> அவ்வ்... இப்போ இல்லீங்க.. ஊர்லே இருந்தபோது பட்டது அது... :-))

வாங்க கிரி, மகேஷ்ஜி, கைப்புள்ள -> நன்றி...

வாங்க பரிசல் -> சரி சரி. 'கொஞ்ச' நாளைக்குதானே மூடறேன்னு சொல்லியிருந்தேன்.... அவ்வ்வ்...

வாங்க சகோதரி வித்யா -> அவ்வ்வ்.. எவ்வளவோ பாத்துட்டோம். இத பாக்க மாட்டோமா? தைரியமா போடுங்க கவுஜய....

வாங்க ஆதி, சகோதரி ஸ்ரீமதி, சிவா -> நன்றி...

சின்னப் பையன் April 20, 2009 at 12:03 PM  

வாங்க லோகு -> ஹிஹி... உங்க ஊர் எதுங்க????

வாங்க சின்ன அம்மிணி -> அவ்வ்வ்...

வாங்க அனுஜன்யா, அப்துல்லா, ராஜ நடராஜன் -> நன்றி அண்ணே...

வாங்க பழமைபேசி -> இனிமே திருத்திக்கறேண்ணே....

RAMYA April 20, 2009 at 1:11 PM  

மீண்டும் எழுத ஆரம்பித்ததிற்கு நன்றி அண்ணா


//
காண்டாமிருகத்துக்கே கோன் ஐஸ்க்ரீம் கொடுத்தவனுக்கு
//

அண்ணா இது சூப்பர், நீங்களா அது??

RAMYA April 20, 2009 at 1:13 PM  

//
அதுக்கப்புறம் காலுறை வழக்கம்போல் நாத்தம் அடிச்சாகூட பரவாயில்லை, யாருக்கும் தெரியாதுன்னு டெட்டால் போடறதை விட்டுட்டேன்.
//

மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கலாமில்லே
இதே பேச்சா வேறே இருந்திச்சாம் ;-)

காரணம் நீங்கதானா??

RAMYA April 20, 2009 at 1:15 PM  

எங்களை மாதிரி ஆளுங்க கிட்டே ஐஸ்கிரீம் கொடுத்திருந்தா தெரியும்
ஆனா சாப்பிடாத ஒருத்தங்க கிட்டே கொடுக்கிறமாதிரி கொடுத்து
ஏமாத்திடீங்களே அண்ணா :))

RAMYA April 20, 2009 at 1:16 PM  

//
அவங்க பேச்சுலேயே கலந்துக்காமே படுபிஸியா(!!) வேலை செய்துக்கிட்டே இருந்தேன்.
//

இது super ஐடியா !!

சரவணகுமரன் April 20, 2009 at 2:18 PM  

//எவனோ ஒருத்தன் நல்ல நாத்த மருந்து போட்டுக்கிட்டு வந்திருக்கான்னு ஒருத்தரு, எனக்கு தலை வலிக்குதுன்னு ஒரு அம்மா, புதுசா யூகலிப்டஸ் செடி எங்கேயோ வெச்சிருக்காங்கன்னு ஒருத்தரு - அன்னிக்கு நாள் முழுக்க இதேதான் பேச்சு.//

ஐயோ! செம காமெடி பாஸு அது...

சின்னப் பையன் April 21, 2009 at 2:22 PM  

வாங்க தங்கச்சி ரம்யா -> ஆமாம்மா. அது நானேதான்... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி....

வாங்க சரவணகுமரன் -> நன்றி..

வால்பையன் April 22, 2009 at 5:38 AM  

தொப்பை குறைஞ்சா மாதிரி இருக்கு!
ஜிம்முக்கு போறிங்களா?

புருனோ Bruno June 25, 2009 at 1:44 PM  

சார்

நான் மூன்று சொட்டுக்கள் மட்டுமே விடச்சொன்னேன்

அதில் டெட்டால் வாசம் வராதே

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP