Tuesday, April 21, 2009

விமானத்தில் விமானிகள் தூங்காமலிருக்க...இது போன வாரமே வந்திருக்க வேண்டிய இடுகை. அப்போ நம்ம கடை மூடியிருந்ததால் தாமதமாக வருகிறது.

*****

இந்தியன் விமானத்தில் விமானிகள் அடிக்கடி தூங்கிடறாங்கன்னு ஒரு செய்தி வந்திருந்தது. எல்லாருமேதானே தூங்கறாங்க. லூசுத்தனமா இது என்ன செய்தி. நான்கூடதான் நேத்திக்கு தூங்கினேன் அப்படின்றவங்க, கீழே இருக்கும் உரலில் ஒரு தடவை போய் பாத்துடுங்க. அவங்க வீட்டுக்குள்ளே தூங்கலே. விமானம் ஓட்டும்போது தூங்கிட்டாங்க.

http://thatstamil.oneindia.in/news/2009/04/15/business-pilots-have-slept-on-flight-admits-dgca.html

என்ன செய்தா அவங்கள தூங்காமே வண்டி ஓட்ட வெக்கலாம்னு, ராத்திரியெல்லாம் நான் தூங்காமே யோசிச்சதோட விளைவுதான் இந்த இடுகை. கீழே படிங்க.

கருத்துக்கணிப்பு:

கருத்துக்கணிப்புன்னாலே என்ன நடக்கும்னு எல்லோருக்கும் தெரியும். அடிதடி ரகளைதான். விமானம் போயிட்டிருக்கும்போது, ஏதாவது ஒரு தலைப்பு கொடுத்து, அதில் ஒரு கருத்துக்கணிப்பும் நடத்தணும். அதன் ரிசல்ட் வந்தபிறகு - யாரும் தூங்கவே முடியாது. எந்த நேரத்துலே என்ன நடக்குமோன்னு தெரியாமே எல்லாரும் நடுங்கிக்கிட்டே உக்காந்திருக்க வேண்டியதுதான். அப்புறம் விமானி மட்டும் எப்படி தூங்குவார்? கண்டிப்பா மாட்டார்.


மேகமாட முகிலாட:

மேலே பறக்கற கொஞ்ச நேரம்கூட ஏதாவது ஒரு நாட்டிய நிகழ்ச்சி, அதில் ஒரு போட்டி, கூடவே சில திட்டல், அழுகை இதெல்லாம் இல்லேன்னா மக்கள் ரொம்பவே கஷ்டப்படறாங்க. அதனால் என்ன பண்ணலாம்னா, விமானத்துலே 'மேகமாட முகிலாட'ன்னு ஒரு போட்டி நடத்தலாம். நம்ம விமானியையும் ஒரு ஜட்ஜா உக்கார வெச்சிட்டா, போட்டியாளர்கள் மேலே வெச்ச கண் வாங்காமே பாத்துக்கிட்டேயிருப்பாரு. அப்புறம் எங்கேந்து தூக்கம் வரும்?

அப்பப்ப விளம்பரதாரர் இடைவேளையிலே உள்ளே போய் - ஸ்டியரிங்க்லே வெச்ச குச்சியை அட்ஜஸ்ட் செய்துட்டு வந்துட்டார்னா (மெட்ராஸ் டு பாண்டிச்சேரியில் நாகேஷ் செய்வாரே, பாத்திருக்கீங்களா?), விமானம் பாட்டுக்கு ஜாலியா போயிட்டே இருக்கும்.


தேர்தல்:

பறந்துக்கிட்டிருக்கற எல்லோரையும் மிகவும் பரபரப்பா வெச்சிருக்கணும்னா, ஒரு மினி தேர்தல் நடக்கப்போகுதுன்னு சொல்லிட்டு, பெரிய பரிசு ஒண்ணு அறிவிச்சிடணும். மக்கள் பல குழுக்களா பிரிஞ்சி, கூட்டங்கள், கோஷங்கள், ஊர்வலங்கள், ஓட்டுப்பதிவு, எண்ணிக்கை இதெல்லாம் செய்வாங்க. அப்புறம் அந்த கலாட்டாலே விமானி எப்படி தூங்க முடியும்? விமானமும் நல்லபடியா பறக்கும்.


பாம்பு:

பாம்புன்னா ரஜினியே நடுங்குவார் - இந்த பழமொழியை தெரியாதவங்க யாருமே இருக்க முடியாது. அப்படி இருக்கும்போது விமானி நடுங்காமே என்ன செய்வார்? பேசாமே (அல்லது பேசிக்கிட்டே) ஒவ்வொரு விமானத்துக்கும் ரெண்டு பாம்பு வீதம் விட்டுட்டா, மொத்த மக்களும், விமானியும் அமைதியா தலைகுனிஞ்சிக்கிட்டே உக்காந்து வருவாங்க. (சீட் கீழே பாம்பை தேடுறாங்களாம்!).

இதிலேயும் ஒரு பிரச்சினை இருக்கு, விமானி கீழே பாத்துக்கிட்டே வண்டியை வேற எங்கேயாவது விட்டுட்டார்னா...


மாமியார் / மருமகள்:

இது எல்லாத்தையும் விட யாருமே தூங்காமலிருக்க ஒரு சூப்பர் யோசனை. ஒவ்வொரு விமானத்துலேயும் ஒரு மாமியார் ஒரு மருமகளை விட்டுட வேண்டியதுதான். அப்புறமென்ன, ஒரு மினி பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்க, எல்லாரும் அதை சுற்றி உக்காந்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். விமானியாவது, தூங்கறதாவது.


முக்கியமான அதிரடி தீர்வு:

இதுவரைக்கும் சொன்ன தீர்வுகள்லேயெல்லாம் தூங்கற பிரச்சினை தீருமாங்கறதுலே உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்துதுன்னா, அதை உடனடியா எச்சி போட்டு அழிச்சிட்டு, கீழே இருக்கற தீர்வை படிங்க. ரெண்டு கையையும் தூக்கிக்கிட்டு ‘ஜெய் ஹோ' பாட ஆரம்பிச்சிடுவீங்க.

அகிலாண்ட நாயகன், வருங்கால ஆஸ்கர் கதாநாயகன், என் அபிமான நடிகர், வருங்கால எம்.பி அண்ணன் ஜே.கே.ஆர் நடிச்ச, நடிக்கப் போற படங்கள் எல்லாத்தையும் முப்பரிமாண (3D) முறையில் மாத்திடணும். விமானத்தில் பறக்கும்போது திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப அந்த படங்களை போட்டு காட்டிக்கிட்டிருந்தா, எவன் தூங்கப் போறான். அண்ணன் மக்களைப் பார்த்து துப்பாக்கியை நீட்டும் போதும், எகிறி எகிறி குதித்து சண்டை போடும்போதும், பக்க்க்க்க்க்கத்தில் வந்து ‘பாபா ப்ளாக் ஷீப்' பாட்டு பாடும்போதும் - அவனவன் பேஸ்து (அப்படின்னா?) அடிச்சா மாதிரி நாற்காலியை இறுக்க பிடித்துக்கொண்டு உக்காந்திருக்க - தூக்கம் எங்கிருந்து வரும்?

*****

31 comments:

ஆளவந்தான் April 21, 2009 at 9:16 PM  

படிச்சுட்டு வர்றேன்

ஆளவந்தான் April 21, 2009 at 9:29 PM  

//
அகிலாண்ட நாயகன், வருங்கால ஆஸ்கர் கதாநாயகன், என் அபிமான நடிகர், வருங்கால எம்.பி அண்ணன் ஜே.கே.ஆர்
//
மினிஸ்டர் ... பிரைம் மினிஸ்டர் ரேஞ்சுல பேசிகிட்டு இருக்கோம் ..நீங்க என்னடான்னா எம்.பி யோட நிறுத்திட்டீங்க

ஆளவந்தான் April 21, 2009 at 9:32 PM  

//
எவன் தூங்கப் போறான்.
//
தூங்க மாட்டான் சரி.. ஆனா மயங்கிடுவானுங்களே

கிரி April 21, 2009 at 11:03 PM  

//ஒரு மினி பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்க, எல்லாரும் அதை சுற்றி உக்காந்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்//

வழக்கமான சண்டையின்னு தூங்கிட்டா :-))))

இரா.சிவக்குமரன் April 22, 2009 at 12:11 AM  

உங்க எழுத்து அளவை கூட்டுங்க அல்லது ஒரு நல்ல ஃபான்டா போடுங்க! படிக்கிறதுக்குள்ள கண்ணு வலியெடுத்துக்குது.

Mahesh April 22, 2009 at 12:31 AM  

எப்பிடிண்ணே... ஒரு வாரம் கடைய மூடிட்டு ரூம் போட்டு யோசிச்சீங்களா?

அது போக... அந்த செய்தியைப் படிச்சா... ஜெய்பூர் மும்பை 1 மணி நேரம் கூட ஆகாது. அதுலயே தூங்கறாங்களா? அதுவும் ரெண்டு பேரும்?? ரொம்பப் பொறுப்பான விமானிகள்...

narsim April 22, 2009 at 12:39 AM  

மேகமாட முகிலாட:

மேலே பறக்கற கொஞ்ச நேரம்கூட ஏதாவது ஒரு நாட்டிய நிகழ்ச்சி, அதில் ஒரு போட்டி, கூடவே சில திட்டல், அழுகை இதெல்லாம் இல்லேன்னா மக்கள் ரொம்பவே கஷ்டப்படறாங்க. அதனால் என்ன பண்ணலாம்னா, விமானத்துலே 'மேகமாட முகிலாட'ன்னு ஒரு போட்டி நடத்தலாம். நம்ம விமானியையும் ஒரு ஜட்ஜா உக்கார வெச்சிட்டா, போட்டியாளர்கள் மேலே வெச்ச கண் வாங்காமே பாத்துக்கிட்டேயிருப்பாரு. அப்புறம் எங்கேந்து தூக்கம் வரும்?
//

hahahahahaha

kalakkal thala

லோகு April 22, 2009 at 1:02 AM  

//ஆளவந்தான் said...

//
அகிலாண்ட நாயகன், வருங்கால ஆஸ்கர் கதாநாயகன், என் அபிமான நடிகர், வருங்கால எம்.பி அண்ணன் ஜே.கே.ஆர்
//
மினிஸ்டர் ... பிரைம் மினிஸ்டர் ரேஞ்சுல பேசிகிட்டு இருக்கோம் ..நீங்க என்னடான்னா எம்.பி யோட நிறுத்திட்டீங்க
//

அதானே... ரிப்பீட்டு

ஸ்ரீமதி April 22, 2009 at 1:07 AM  

Anna super ideas.. :)))))))))))))

ராசா April 22, 2009 at 3:42 AM  

அண்ணே.. இதோட "தேர்தல் 2009" னு தலைவர்கள் பேசுனது எல்லாத்தையும் சிடி யா ரெடி பன்னி flight க்கு ஒரு கேசட் குடுத்துடுவோம் யாரும் தூங்க மாட்டாங்க சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க..
நம்ம கேப்டன் சிடி இருந்தா இன்னும் நல்லா இருக்கும்..

முரளிகண்ணன் April 22, 2009 at 4:09 AM  

அருமை தலைவரே. வழக் கலக் போட பயமாய் இருக்கிறது

ராஜ நடராஜன் April 22, 2009 at 4:21 AM  

இன்னும் கொஞ்சம் சுருதி ஏத்துக்குங்க:)மறுபடியும் வாரேன்.

கைப்புள்ள April 22, 2009 at 4:51 AM  

அவங்க வண்டி ஓட்ட ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அவங்க சீட்ல ஒரு பக்கெட் தண்ணி ஊத்தி வச்சிடலாம். சிலுசிலுன்னு அந்த ஈரத்துல தூக்கமே வராது. ஈரம் காய்ஞ்சிடுச்சுன்னாலும் மறுபடியும் தண்ணி ஊத்தறதுக்கு ஒரு ஆளைச் சம்பளம் குடுத்து வச்சிக்கலாம்.
இது எப்படி இருக்கு :)

வால்பையன் April 22, 2009 at 5:27 AM  

இத படிக்கும் போது எனக்கு தூக்கம் வருதே!

அத பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க!

ச்சின்னப் பையன் April 22, 2009 at 5:50 AM  

வாங்க ஆளவந்தான் -> அவ்வ்.. சரி சரி இனிமே பி.மினிஸ்டர்னே சொல்றேன்....

வாங்க சஞ்சய் அண்ணே -> மிக்க நன்றி...

வாங்க கிரி -> ஓ. வழக்கமான கதை கொண்ட சீரியல்களையே நீஈஈஈஈஈண்ட காலமா பாக்கற மக்களைப் பாத்து கேக்கற கேள்வியா இது?????

வாங்க சிவக்குமரன் -> கண்டிப்பாங்க. நாளையிலேந்து பாருங்க. கொஞ்சம் பெரிய ஃபாண்ட்லே போடறேன்... இடுகையைப் பற்றிய தங்கள் கருத்து?

வாங்க மகேஷ்ஜி -> ஹாஹா.. பாருங்க. எப்படியெல்லாம் தூங்கறாங்கன்னு...

குசும்பன் April 22, 2009 at 5:50 AM  

//‘பாபா ப்ளாக் ஷீப்' பாட்டு பாடும்போதும் //

இருடி எங்க தலைவரு செயிச்சு பார்லிமெண்ட் போய் பாட்டு பாடும் பொழுது தெரியும் எங்க ஆளு பவர் என்னான்னு! அப்பவே பார்லிமெண்டுக்கு குண்டு வைக்க வந்த தீவிரவாதிகளை அனுமதிச்சு இருக்கலாம் என்று நினைக்க போறீங்களா இல்லையான்னு பாருங்க!

Suresh April 22, 2009 at 6:09 AM  

ஹ ஹ ஹ கடைசி ஐடியா சூப்பார்

ச்சின்னப் பையன் April 22, 2009 at 6:35 AM  

வாங்க நர்சிம் அண்ணே, தங்கச்சி ஸ்ரீமதி -> மிக்க நன்றி..

வாங்க லோகு -> அவ்வ்வ்...

வாங்க ராசா -> ஹாஹா... பயங்கர காமெடியா இருக்குமே அது....:-))

வாங்க மு-க அண்ணா -> அவ்வ்வ்... இனிமே எங்கேயும் ‘வழக் கலக்'கை கலாய்க்க மாட்டேன். கவலைப்படாதீங்க.... :-))))

வாங்க ராஜ நடராஜன் -> அட்டெண்டன்ஸ் போட்டீங்களா - இடுகை நல்லாயில்லேன்றீங்களா... தல, புரியல.... அவ்வ்வ்...

அறிவிலி April 22, 2009 at 7:34 AM  

எல்லா விமானிகளையும் பதிவுகளுக்கு பழக்கப்படுத்திட்டா, போஸ்ட் போட்டுட்டு ஹிட் வருதா.. பின்னூட்டம் வருதான்னு தூங்காம பாத்துட்டே இருப்பாங்க. பாதி பதிவர்கள் ஆபீஸ்ல தூங்காம நல்ல பேர் வாங்கறதே இதனாலதான்.

ச்சின்னப் பையன் April 22, 2009 at 9:32 AM  

வாங்க பட்டாம்பூச்சி -> நன்றி.

வாங்க கைப்புள்ள -> ஹாஹா... 'எல்ல்ல்லாமே' ஜிலுஜிலுன்னு இருக்கும்போது தூக்கம் வரவே வராதுதான்.... !!!!!!!!!

வாங்க வால் -> அவ்வ்வ்.. இடுகை ரொம்ப பெரிசா இருக்குன்றீங்களா???? ஆஆஆஆஆ!!!

வாங்க குசும்பன் -> அங்கே போயும் பாடவாவது வாயத் தொறக்கராறான்னு பாப்போம். நம்மாளுங்கதான் அங்கே வாயே தொறக்கறதில்லேன்னு சொல்றாங்களே!!!!!

வாங்க சுரேஷ் -> நன்றி...

வாங்க அறிவிலி -> ஹிஹி. நானெல்லாம் நிமிடத்துக்கு நாப்பது தடவை F5 அடிக்கறது உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா!!!!!

jackiesekar April 22, 2009 at 11:14 AM  

பைலட் தூங்கற படத்தை விட கடைசி படம் அந்த தூப்பாக்கி வச்சிக்கினு கம்பியில் பறக்கர சாட்டு ரொம்ப சூப்பர் தலை

ஜோசப் பால்ராஜ் April 22, 2009 at 11:54 AM  

//அகிலாண்ட நாயகன், வருங்கால ஆஸ்கர் கதாநாயகன், என் அபிமான நடிகர், வருங்கால எம்.பி அண்ணன் ஜே.கே.ஆர் //

வருங்கால மத்திய அமைச்சர் என்பதை சொல்லமல் விட்டமைக்கு என் கடுமையான கண்டணங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

pappu April 22, 2009 at 4:52 PM  

அப்ப கூட எங்க தங்கத் தலைவர் தேவைப் படுறாரு பாத்தீங்களா?

RAMYA April 23, 2009 at 1:08 PM  

//
அகிலாண்ட நாயகன், வருங்கால ஆஸ்கர் கதாநாயகன், என் அபிமான நடிகர், வருங்கால எம்.பி அண்ணன் ஜே.கே.ஆர்
//


எங்களுக்கும் அபிமான நாயகன்தான் :))

RAMYA April 23, 2009 at 1:09 PM  

//ஒரு மினி பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்க, எல்லாரும் அதை சுற்றி உக்காந்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்
//


இதுதான் உங்களோட நக்கல்
அருமை அருமை :))

ஆதிமூலகிருஷ்ணன் April 23, 2009 at 1:38 PM  

என்ன பிரமாதம்.! அதுவும் கிளைமாக்ஸ் சூப்பர்.. என்ன ரசனையான ஆளுய்யா நீரு.!

ச்சின்னப் பையன் April 23, 2009 at 2:44 PM  

வாங்க ஜாக்கி -> ஹாஹா... நீங்களும் அவரோட ரசிகர்தானா?????...:-)))

வாங்க ஜோசப் அண்ணே -> அவ்வ்வ்...

வாங்க சிவா -> ஆமாங்க. ரொம்ப சீரியஸான விஷயந்தான் அது....:-((

வாங்க பப்பு -> எங்கன்னு சொல்லுங்க... நம்மன்னு சொல்லுங்க... அப்போதான் உதடு ஒட்டும்... :-))

வாங்க தங்கச்சி ரம்யா -> ஹிஹி...

வாங்க ஆதி அண்ணே -> நம்ம தலயோட அருமை யாருக்குமே தெரியலேண்ணே... அதுக்குதான் இப்படி ஒரு பதிவு... :-)))

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP