கடையோட மாப்பிள்ளை - பகுதி 2
முதல் பகுதி இங்கே இருக்கு.
காட்சி -2 : ஜோசியர் வருகை. (ஜோசியர் பேரு மோகன். இனிஷியல் கி. நாம ஜோசியர்னே கூப்பிடுவோம்.)
(மாது வீட்டில் அழைப்பு மணி அடிக்கிறது)
அப்பா: மாது, யாருன்னு பாரு வெளியே.
ஜோ: இது ஆறாம் நம்பர் வீடுதானே? நாந்தான் ஜோசியர் மோகன்.
மாது: ஜோசியர்ன்றீங்க.. ஆறாம் நம்பர் வீடுன்னு நீங்களாவே கண்டுபிடிச்சிக்க மாட்டீங்களா? இன்னொருத்தர் சொன்னாதான் தெரியுமா?
ஜோ: இது நல்லாயிருக்கே கதை!!! உங்களுக்கு வயித்து வலின்னு டாக்டரேவா கண்டுபிடிச்சி வைத்தியம் பாக்கறாரு? நீங்க சொன்னாதானே அவருக்கு தெரியும்? அதே மாதிரிதான் இதுவும்.
மாது: மாட்டு டாக்டர்கிட்டே எந்த மாடு போய் எனக்கு வயித்து வலின்னு சொல்லும்? அவர் தானாதானே கண்டுபிடிக்கறாரு.
ஜோ: சபாஷ். சரியான போட்டி! நான் மாட்டு ஜோசியர் இல்லையே? மனுசங்களுக்கு மட்டும் தானே பாக்கறேன். அதனால் என்கிட்டே வாயத் தொறந்து எல்லாத்தையும் சொல்லித்தான் ஆகணும். நேத்து ராத்திரி என்ன சாப்பிட்டீங்க... ச்சீ. டாக்டர்னவுடனே இந்த கேள்வி தானா வந்துடுச்சு. அம்மா இருக்காங்களா?
மாது: சரி சரி. ஏதோ சொல்லி சமாளிச்சிட்டீங்க. உள்ளே வாங்க... அப்பா யார் வந்திருக்காங்கன்னு பாரு. மனுசங்களுக்கு ஜாதகம் பாக்கற ஜோசியர் வந்திருக்கார்.
அப்பா: என்னடா தத்துபித்துன்னு உளர்றே? ஜோசியர்னாலே மனுசங்களுக்கு மட்டும்தான். மிருகங்கல்லாம் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு இன்னும் ஜாதகப் பொருத்தம் பாக்க ஆரம்பிக்கலை. வாங்க வாங்க ஜோசியரே. எப்படியிருக்கீங்க. தொழில்லாம் எப்படி போகுது?
ஜோ: நான் நல்லாயிருக்கேன். தொழில் வழக்கம்போல இந்த மாதிரி கல்யாணமாகாத பசங்க தயவுலே ஓடிட்டிருக்கு. அம்மா இல்லையா?
மாது: தேர்தல் வேறே வருதே. நிறைய பேர் ஜோசியம் கேக்க வருவாங்களே?
ஜோ: அதுக்கெல்லாம் பெரிய பெரிய ஜோசியர் இருக்காங்க. எனக்கு வழக்கமா வர்ற பத்து பேர்தான்.
மாது: நீங்க எப்போ அந்த மாதிரி பெரிய ஜோசியரா வருவீங்கன்னு யார்கிட்டேயாவது ஜோசியம் பாக்க வேண்டியதுதானே?
ஜோ: என்னை விடுப்பா. இப்போ நான் வந்தது உன் கல்யாண விஷயத்தைப் பத்தி பேசத்தான். அம்மா இல்லையா?
மாது: என்ன, வந்ததிலேந்து அம்மா இல்லையா, அம்மா இல்லையான்னு கேக்கறீங்க.. ஐயாகிட்டே பேசமாட்டீங்களா?
ஜோ: எல்லா இடத்திலேயும் அம்மாதானே முக்கியமான முடிவுகளை எடுக்கறது? அம்மான்னா சும்மாவா?
மாது: அது சரி. இப்போ ஐயாவும் அம்மாகிட்டேதானே இருக்கார். அதனால், அம்மாகிட்டே பேசினா போதும்றீங்க.
ஜோ: ஆமா. ஆனா அது இன்னும் கொஞ்ச நாளைக்குதான். அப்புறம் என்ன ஆகுமோ யாருக்கு தெரியும்?
(அம்மா, ஸ்வீட்டோட எண்ட்ரி)
அம்மா: ஜோசியரே. என்ன வார்த்தை சொல்லிட்டீங்க... அப்படின்னா, சீக்கிரத்துலே எனக்கு டைவோர்ஸ் வாங்கிக் கொடுத்திடுவீங்களா?. இந்தாங்க, ஸ்வீட் எடுத்துக்குங்க.
மாது: பாத்தீங்களா. கொஞ்ச நாள் கழிச்சி டைவோர்ஸ் வாங்கித் தர்றேன்னு சொன்னதுக்கே, ஸ்வீட் கொடுக்கறாங்க. இன்னிக்கே வாங்கித் தர்றேன்னு சொல்லுங்க, பஞ்சாமிர்த அபிஷேகமே பண்னுவாங்க.
ஜோ: அப்படியெல்லாம் சொல்லக்கூடாது மாது. அப்புறம் எனக்குத்தான் ஈ மொய்க்கும். உடம்பெல்லாம் வழவழ கொழகொழன்னு ஆயிடும்.
அப்பா: ஒரு பேச்சுக்கு சொன்னா, உடனே நம்பிடுவீங்களா? சரி. வந்த விஷயத்தை பேசவே மாட்டீங்களா?
அம்மா: ஆமா. ஜோசியரே. சொல்லுங்க. ஒரு ஜாதகம் கொண்டு வர்றேன்னு சொன்னீங்களே.
ஜோ: கொண்டு வந்திருக்கேன். அருமையான குடும்பம். ரெண்டு பேரோட ஜாதகமும் பொருந்தியிருக்கு. அவங்களோடையும் பேசிட்டேன். நாளைக்கே பொண்ணு பாக்க வரச்சொல்லிட்டாங்க.
மாது: ஏன், இன்னிக்கு அவங்க ரொம்ப பிஸியாமா?
அப்பா: அவசரப்படாதேடா. ஜோசியரே, பொண்ணோட அப்பா ஏதோ கடை வெச்சிருக்காருன்னீங்களே. என்ன கடை அது?
ஜோ: சாப்பாட்டுக் கடை ஒண்ணு வெச்சிருக்காரு. தமிழ்லே ஹோட்டல்னு சொல்லலாம். தன் பொண்ணை கட்டிக்கிறவன், அந்த கடையையும் சேத்து பாத்துக்கணும்னு விருப்பப்படுறாரு.
மாது: அப்பாடா.. இனிமே அம்மாவோட சமையல்லேந்து விடுதலை கிடைச்சிடும். தினமும் ஹோட்டல் சாப்பாடுதான். அப்பா, நீயும் சாப்பிட அங்கேயே வந்துடு. உனக்கு 50% டிஸ்கவுண்ட் தந்துடறேன். ஆனா, அதிலே இன்னொரு பிரச்சினையும் இருக்கு. ஹோட்டல் வெச்சிருக்கிறவங்க எல்லாம் பக்கத்து ஹோட்டல்லேதான் சாப்பிடுவாங்க. நானும் அந்த மாதிரிதான் ஏதாவது பண்ணனும்.
ஜோ: அதெல்லாம் ஒண்ணுமில்லே. பொண்ணோட அப்பா, தினமும் தன் ஹோட்டலிலேயேதான் சாப்பிடறாராம்.
மாது: தன் வீட்டு சாப்பாட்டை விட ஹோட்டல் சாப்பாடே மேல்னு நினைச்சிட்டாரோ என்னவோ? நமக்கென்ன தெரியும்?
அம்மா: சரி சரி. அதெல்லாம் நமக்கெதுக்கு. நாம நாளைக்கு பொண்ணு பாக்கப் போறோம். அவ்வளவுதான்.
மாது: ஆமாமா. எனக்கு நிறைய வேலை இருக்கு. பொண்ணுகிட்டே கேக்கறதுக்கு கேள்விகளை தயார் பண்ணனும். நான் என் ரூமுக்குப் போறேன்.
ஜோ: ஏதாவது கேள்வி கேக்கறேன்னு தத்தக்கா பித்தக்கான்னு உளறி காரியத்தை கெடுத்துடாதே. இதுக்கப்புறம் என்னாலே உனக்கு பொண்ணே தேடமுடியாது.
மாது: ஜோசியரே, இப்பதான் ஞாபகம் வருது. இன்னொரு சின்ன வேலை பண்ணனுமே எனக்கு.
ஜோ: நீ எதுக்கும் கவலைப்படாதே மாது. நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன்.
மாது: இந்த 'எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்', 'எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்'னு சொல்றதெல்லாம் நான் தாலி கட்டுற வரைக்கும்தான். அதுக்கப்புறம் நானே எல்லாத்தையும் பாத்துக்குவேன். நான் கேக்க நினைச்சது வேறே.
ஜோ: என்ன அது, சொல்லுப்பா.
மாது: இப்படி சும்மா இருந்து பயங்கர போரடிக்குது. நானும் அரசியல்லே இறங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். என்னோட ஜாதகத்தை ராஜயோக ஜாதகமா மாத்திக் கொடுப்பீங்களா? நான் எம்.பி ஆனவுடனே உங்களுக்கு ஏதாவது காண்ட்ராக்ட் எடுத்து தர்றேன்.
ஜோ: என்னை விட்ருப்பா. நான் வரலே இந்த விளையாட்டுக்கு. ஆமா, ஜெயிச்சப்புறம் உன் ஜாதகம் தப்புன்னு கண்டுபிடிச்சுட்டா என்ன பண்ணுவே?
மாது: அதுக்கெல்லாம் பயப்பட்டா முடியுமா? வீட்லே எல்லா கலர்லேயும் துண்டு வெச்சிருப்பேன். ஒருத்தர்கிட்டே அடிவாங்கறா மாதிரி இருந்ததுன்னா, டக்குன்னு துண்டு கலரை மாத்திக்கிட்டு இன்னொருத்தர் கிட்டே போயிக்கிட்டே இருப்பேன். அவ்ளோதான்.
ஜோ: சரி சரி. நீ ஏதோ முடிவோடதான் இருக்கே. முதல்லே இந்த கல்யாணத்தை பண்ணிண்டுடு. அப்புறம் என்ன வேணா பண்ணிக்கோ. நாளைக்கு 4 மணிக்கு அவங்க வீட்டுக்கு வந்துடுங்கோ. நானும் அங்கே வந்துடறேன். இப்போ கிளம்பறேன்.
(காட்சி 2 முடிவு)
24 comments:
மீ த பர்ஸ்ட்டு.... ஜாலி...
இனி நாடகத்தைப் பாத்துட்டு வந்து கமெண்ட்டுறேன். ஹி ஹி
நல்ல ப்லொவ் அண்ணா... :)))) ஆனாலும், முதல் பாகத்தைவிட என்னவோ குறையிற மாதிரி இருக்கு :)))))) ஆனால் இந்த பகத்துக்கு என்ன தேவையோ அதிருக்கு :))))
Visualize செய்து பார்க்க முடியுது with their expression.. Too good anna... Keep rocking.. :)))
///: அது சரி. இப்போ ஐயாவும் அம்மாகிட்டேதானே இருக்கார். அதனால், அம்மாகிட்டே பேசினா போதும்றீங்க.///
பேச்சு வாக்கில அரசியல இழுக்குறீங்களே.
இதுவும் நல்லாருக்கு. ஆனா, முதல் காட்சி டாப்பு!
நல்லாருக்கு..இருந்தாலும் இன்னும் சிரிப்பு எதிர்பார்க்கிறோம் :)
:))
நல்லாருக்கு. ஆனா, முதல் காட்சி டாப்பு
ரொம்ப கிச்சு கிச்சு மூட்றீங்க...
:))))))))))))))))))))
தலை, இந்தப் பகுதி நாடகத்தினை கண் முன்னால் கொண்டு வந்தது.. ஆங்காங்கே சிரிப்பு மத்தாசு ஜோர்..
GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD GOOD VERY GOOD
//
ஜோ: இது ஆறாம் நம்பர் வீடுதானே? நாந்தான் ஜோசியர் மோகன்.
மாது: ஜோசியர்ன்றீங்க.. ஆறாம் நம்பர் வீடுன்னு நீங்களாவே கண்டுபிடிச்சிக்க மாட்டீங்களா? இன்னொருத்தர் சொன்னாதான் தெரியுமா?
ஜோ: இது நல்லாயிருக்கே கதை!!! உங்களுக்கு வயித்து வலின்னு டாக்டரேவா கண்டுபிடிச்சி வைத்தியம் பாக்கறாரு? நீங்க சொன்னாதானே அவருக்கு தெரியும்? அதே மாதிரிதான் இதுவும்.
//
நல்லா கேள்வி கேக்கறாங்கப்பா
எல்லாம் ஒரு மார்க்கமாவே
இருப்பாங்க போல :)
//
மாது: மாட்டு டாக்டர்கிட்டே எந்த மாடு போய் எனக்கு வயித்து வலின்னு சொல்லும்? அவர் தானாதானே கண்டுபிடிக்கறாரு.
//
மாது எப்பவுமே ரொம்ப அறிவாளி
சரியா கேள்வி கேட்டு மடக்குராறு
பாருங்க :))
//
ஜோ: சபாஷ். சரியான போட்டி! நான் மாட்டு ஜோசியர் இல்லையே? மனுசங்களுக்கு மட்டும் தானே பாக்கறேன். அதனால் என்கிட்டே வாயத் தொறந்து எல்லாத்தையும் சொல்லித்தான் ஆகணும். நேத்து ராத்திரி என்ன சாப்பிட்டீங்க... ச்சீ. டாக்டர்னவுடனே இந்த கேள்வி தானா வந்துடுச்சு. அம்மா இருக்காங்களா?
//
ஹா ஹா நல்லா ஹாஸ்யம் :)
நாடகம் பார்க்கும் பொது இது போல்
டயலாக் டெலிவரிதான் சூப்பர்ஆ இருக்கும்.
இங்கேயும் அதேதான் சிரிக்கவைக்கின்றது :)
//
மாது: நீங்க எப்போ அந்த மாதிரி பெரிய ஜோசியரா வருவீங்கன்னு யார்கிட்டேயாவது ஜோசியம் பாக்க வேண்டியதுதானே?
//
அருமை அருமை சரியான கேள்விதான்!
//
ஜோ: சாப்பாட்டுக் கடை ஒண்ணு வெச்சிருக்காரு. தமிழ்லே ஹோட்டல்னு சொல்லலாம். தன் பொண்ணை கட்டிக்கிறவன், அந்த கடையையும் சேத்து பாத்துக்கணும்னு விருப்பப்படுறாரு.
//
சட்டுன்னு சரின்னு சொல்லிட வேண்டியதுதான் :)
மாது: நீங்க எப்போ அந்த மாதிரி பெரிய ஜோசியரா வருவீங்கன்னு யார்கிட்டேயாவது ஜோசியம் பாக்க வேண்டியதுதானே?//
ஆபீஸுன்னும் பார்க்காம சத்தமாக சிரிக்க வைத்தது.. கலக்கிட்டீங்க..
ஒரு வழியா கடைக்கு வர முடிஞ்சுதுங்க :)
பூச்சாண்டிக்கும் , வாழ்க்கைபயணத்திற்கு (விக்கி )போறது தான் எனக்கு இப்போ இருக்கிற பெண்டிங் டாஸ்க்
:))
//
சரி. வந்த விஷயத்தை பேசவே மாட்டீங்களா?
//
ஹெஹெஹெஹி. இவரும் ”மொக்க” கோஷ்டி போல
//
தமிழ்லே ஹோட்டல்னு சொல்லலாம்.
//
ஒலக நக்கலு :)
அரசியல் வாடை பயங்க்ரமா அடிக்குது.. சிச்சுவேசனுக்காகவோ :)
//
பொண்ணுகிட்டே கேக்கறதுக்கு கேள்விகளை தயார் பண்ணனும்.
//
இடிக்குதே.. பதில் தானே தயார் பண்ணனும் :))
வெளுத்து வாங்குங்க தல :))
நான் அப்படியே விக்கி கடைக்கும் ஒரு விசிட் அடிச்சுடுறேன் :)
நல்ல வேளை வீட்டில படிக்கிறேன். ஆபிசில படிச்சு இருந்தா சிரிச்ச சிரிப்புக்கு எங்க மேனேஜர் முறைக்க ஆரம்பிச்சு இருப்பார்
/
'எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்'னு சொல்றதெல்லாம் நான் தாலி கட்டுற வரைக்கும்தான். அதுக்கப்புறம் நானே எல்லாத்தையும் பாத்துக்குவேன்
/
:)))))))))))
ROTFL
நல்லா வந்திருக்கு.
Post a Comment