Tuesday, March 3, 2009

ஸ்ரீ பார்த்தசாரதி சபா நாடகத்தில் நடித்த அனுபவம்...!!!


எச்சரிக்கை:

நாடகத்தில் நடித்திருக்கிறேன்னவுடனே, எஸ்.வி.சேகர் அல்லது கிரேஸி மோகன் ரேஞ்சுலே நினைச்சிக்காதீங்க. நான் சொல்ல வந்தது படிக்கும்போது பள்ளியின் ஆண்டு விழாவில்
நடித்ததைப் பற்றிதான். எங்க பள்ளியின் விழாக்களெல்லாம் சென்னை திருவல்லிக்கேணியில் இருந்த ஸ்ரீ பார்த்தசாரதி சபா வளாகத்தில்தான் நடத்துவார்கள்.

*****

ஐந்தாவது படிக்கும்போது ஒரு நாள் ரொம்ப வற்புறுத்தி என்னையும் ஒரு நாடகத்துலே நடிக்கச் சொன்னாங்க. எல்லாருக்குமே மிகவும் தெரிந்த வசனங்களைக் கொண்ட ‘வீர பாண்டிய கட்டபொம்மன்' நாடகம்தான். ஆரம்பத்திலிருந்தே எனக்கு சந்தேகமா இருந்தது, நம்ம பர்சனாலிட்டிக்கு க.பொ வேடம் சரியாயிருக்குமான்னு. இருந்தாலும் பரவாயில்லே ஒத்துக்கிடலாம்னு பாத்தா அந்த வேடம் எனக்கில்லேன்னுட்டாங்க. அட்லீஸ்ட் ஜாக்சன் துரை வேடமாவது கிடைக்கும்னு நம்பிக்கையோடு இருந்த எனக்கு அவர்கள் கொடுத்ததோ ஒரு காவலாளி வேடம்.


ஜா.துரை உக்காந்திருக்கும்போது, நான் அங்கே வந்து - அவரை வணங்கி, வாழ்க வாழ்க அப்படின்னெல்லாம் சொல்லிட்டு, க.பொ வந்திருக்காக - அப்படின்னு ஒரு வசனம்
சொல்லிட்டு, நாடகம் முடியறவரை ஒரு ஓரத்துலே போய் நின்னுடணும். சரி இதுவும் ஒரு முக்கியமான வேடம்தான்னு மனசை தேத்திக்கிட்டேன். எப்படி முக்கியம்னு கேட்டீங்கன்னா,
நான் (காவலாளி) மட்டும் இல்லேன்னா க.பொ வந்திருக்கிற விஷயமே ஜா.துரைக்குத் தெரியாதே. அப்புறம் சரித்திரப்புகழ் பெற்ற அந்த சந்திப்பே நடக்காமேயே போயிருக்குமே.
இதைவிட முக்கியமான விஷயம் என்னன்னா, இப்படி துக்கடா வேடத்தில் நடிக்க ஆரம்பிச்சாதான், அப்படியே பிக்கப் ஆகி, தொலைக்காட்சி, சினிமா, அரசியல்னு படிப்படியா
முன்னேறி, முதலமைச்சர் பதவி வரைக்கும் போகமுடியும்னு அப்பவே எனக்கு தோணிப்போச்சு. ஒருவழியா ஆசிரியைகிட்டே போய் ‘ஓகே' சொல்ல தயாரானேன்.


இவ்வளவிற்குப் பிறகும் எனக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. துரையா நடிக்க இருந்தது ஒரு பொண்ணு. நூத்துக்கணக்கான பேர் முன்னால் போய் ஒரு பொண்ணை நாம
வணங்குவதா, அப்புறம் எதிர்காலத்துலே சுயசரிதை எழுதும்போது இதை அப்படியே வெளிப்படையா எழுதமுடியுமான்னெல்லாம் என் மனசுக்குள்ளே ஆயிரமாயிரம் கேள்விகள் பிறந்தன. பிறகு அந்த காவலாளி வேடத்திற்கும் போட்டி அதிகரிக்குதுன்னு கேள்விப்பட்டதால், நானே பண்றேன்னு பெரியமனசோடு ஒத்துக்கிட்டேன்.


அதோட பிரச்சினை முடிஞ்சுதான்னு கேக்காதீங்க. இதுவரை சொன்னதைவிட பெரிய்ய பிரச்சினை ஒண்ணு காத்திருந்தது. அது என்னன்னா - காவலாளியோட உடை. அந்த காலத்து
காவலாளிகளெல்லாம் சட்டை, ட்ராயர் போடமாட்டாங்களாமே... அதனால் எனக்கும் ஒரு கவுன் மாதிரி ஏதோ ஒண்ணு கொடுத்துட்டாங்க. சரி வரலாற்றுலே இடம்பெறணும்னா என்ன
வேணா செய்யத் தயாரா இருக்கணும்னு முடிவு பண்ணி, அவங்க சொன்ன எல்லாத்துக்கும் தலையாட்டிவிட்டு, அந்த நாடகத்தில் வெற்றிகரமாக நடித்துக் கொடுத்தேன்.


அந்த ஒரே ஒரு வசனம் பேசினப்பிறகு, சபையில் ஒரு ஓரத்திலிருந்து பலத்த கைதட்டல். இன்னுமா இந்த ஜனங்க நம்மளை நம்பறாங்கன்னு கண்ணீருடன் திரும்பிப் பாத்தா, அது வேறே யாருமில்ல, என் பெற்றோர்கள்தான். நான் நாடக அரங்கேற்றம் பண்ணி வெற்றிகரமா முதல் வசனம் பேசினதுலே உணர்ச்சி வசப்பட்டு கை தட்டிட்டாங்க. இப்படியாக ஒரு வழியா அந்த நாடகம் முடிஞ்சுது.


எந்த வேலையை செய்தாலும், feedback கேட்டு நம்மை முன்னேத்திக்கணும்னு சொன்னதாலே, நண்பர்கள்கிட்டே - நம்ம நடிப்பு எப்படி இருந்ததுன்னு கேட்டதுக்கு என்மேலே அபாண்டமான குற்றச்சாட்டு ஒண்ணு சொன்னாங்க. அது என்னன்னா - அந்த நாடகத்திலே நான் கண்மூடித்தனமா நடிச்சிருக்கேனாம்.


மேடையில் நடிக்கும்போது ‘பளீர்'னு விளக்குகள் போட்டு கண்கூசறா மாதிரி இருந்ததாலே, 'வேல்' பிடிச்சிக்கிட்டு சும்மாதானே நிக்கறோம்னு, கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கிட்டு
நின்னுக்கிட்டிருந்தேன். என் மேல் இருந்த பாசத்திலே, பயபுள்ளைக அதைக்கூட உன்னிப்பா கவனிச்சி என்னை விமர்சனம் செய்து ஓட்டிக்கிட்டிருந்தானுவ.


*****


இப்படி திரும்பினா போட்டோ, அப்படி திரும்பினா போட்டோன்னெல்லாம் இப்போ எடுத்திட்டிருக்கிற மாதிரி அப்போ நினைச்சி பாக்க முடியுமா? அதனால், நான் நடிச்சதுக்கு ஆதாரமா எந்த போட்டோவும் என்கிட்டே இல்லே. அதைவிட, அந்த பார்த்தசாரதி சபா கட்டிடமே இப்போ இல்லே. சில வருடங்களுக்கு முன்னால், அதை இடிச்சி அந்த இடத்திலே அடுக்கு மாடி வீடுகள் கட்டிட்டாங்க.

*****


24 comments:

பரிசல்காரன் March 3, 2009 at 9:32 PM  

அட.. இதப்பார்றா.. சொல்லவேல்ல?

மணிரத்னத்துக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா அவரு தளபதில அரவிந்த்சாமிய கூப்பிட்டிருக்கமாட்டார்ல... ஒரு ஃபோட்டோ எடுத்து வெச்சுக்கறதில்லயா..? என்னங்க நீங்க? தமிழகம் ஒரு நல்ல நடிகனை இழந்துடுச்சே!!! (வட போச்சே!!!)

சின்னப் பையன் March 3, 2009 at 9:43 PM  

யாராவது இந்த பதிவை தமிழ்மணத்திலே சேர்த்து விடுங்கப்பூ!! ரொம்ப நேரமா பிரச்சினை பண்ணுது சேராமே... http://boochandi.blogspot.com

தாரணி பிரியா March 3, 2009 at 10:53 PM  

அஞ்சாவது படிக்கும் போதே நடிச்சு வரலாறுல இடம்பிடிச்ச ச்சின்னப்பையன் வாழ்க :)

T.V.ராதாகிருஷ்ணன் March 3, 2009 at 11:07 PM  

சென்னை வந்தால்..என் நாடகத்தில் நடிக்க சந்தர்ப்பம் கொடுக்கலாம் என எண்ணியிருந்தேன்..ஆனால் சிவாஜி ரேஞ்சுக்கு இருக்கும் உங்களுக்கு நானா....

வால்பையன் March 4, 2009 at 2:09 AM  

//நான் (காவலாளி) மட்டும் இல்லேன்னா க.பொ வந்திருக்கிற விஷயமே ஜா.துரைக்குத் தெரியாதே. //

அட அட அட
என்ன அறிவு ஞானம்

வால்பையன் March 4, 2009 at 2:09 AM  

//துக்கடா வேடத்தில் நடிக்க ஆரம்பிச்சாதான், அப்படியே பிக்கப் ஆகி, தொலைக்காட்சி, சினிமா, அரசியல்னு படிப்படியா
முன்னேறி, முதலமைச்சர் பதவி வரைக்கும் போகமுடியும்னு அப்பவே எனக்கு தோணிப்போச்சு.//

அடுத்த முதல்வர் ரெடி

வால்பையன் March 4, 2009 at 2:10 AM  

//எதிர்காலத்துலே சுயசரிதை எழுதும்போது//

இந்த நிகழ்காலம் தான் நீங்க சொல்ற எதிர்காலமா?

வால்பையன் March 4, 2009 at 2:12 AM  

தமிழ் திரையுலகம் ஒரு நல்ல நடிகரை இழந்துவிட்டது!

நீங்க நடிக்கவரலைனா மென்பொருள் வல்லுனரா ஆயிருப்பிங்களான்னு கேட்க தகுதியான ஆள் நீங்கள் ஒருவர் தான்

Suresh March 4, 2009 at 3:31 AM  

oru periya nadigana sorry cheif minister a elanthuduchu pa tamilnadu :-)

Vidhya Chandrasekaran March 4, 2009 at 3:58 AM  

அடுத்த தபா இந்தியா வரும்போது சொல்லு தலீவா. கட் அவுட், அதுக்கு பாலாபிஷேகம்னு பட்டைய கிளப்பிறலாம். ஆனா இனிமேற்கொண்டு நடிக்கக்கூடாது. அப்புறம் தலைவருக்கு டஃப் காம்படீஷன் ஆகிடும்ல:)

கார்க்கிபவா March 4, 2009 at 4:17 AM  

//அட.. இதப்பார்றா.. சொல்லவேல்ல?

மணிரத்னத்துக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா அவரு தளபதில அரவிந்த்சாமிய கூப்பிட்டிருக்கமாட்டார்ல... ஒரு ஃபோட்டோ எடுத்து வெச்சுக்கறதில்லயா..? என்னங்க நீங்க? தமிழகம் ஒரு நல்ல நடிகனை இழந்துடுச்.(வட போச்சே!!!)//

எங்க தலையை ஆமை வடை என்று கிண்டல் செய்யும் பரிசலைக் கண்டிக்கிறோம்

முரளிகண்ணன் March 4, 2009 at 4:49 AM  

:-)))

\\அடுத்த தபா இந்தியா வரும்போது சொல்லு தலீவா. கட் அவுட், அதுக்கு பாலாபிஷேகம்னு பட்டைய கிளப்பிறலாம். ஆனா இனிமேற்கொண்டு நடிக்கக்கூடாது. அப்புறம் தலைவருக்கு டஃப் காம்படீஷன் ஆகிடும்ல:)\\

:-)))

சின்னப் பையன் March 4, 2009 at 7:24 AM  

வாங்க பரிசல் -> அவ்வ்வ்... முடியல சாமி.. என்னெ விட்ருங்க.... :-))

வாங்க தாரணி பிரியா -> வாழ்க போட்ட சகோ வாழ்க.... :-))

வாங்க ராகி ஐயா -> யூ டூ ஐயா??? அவ்வ்வ்...

வாங்க வால் ( நட்சத்திரம்), சுரேஷ் -> நன்றி...

Mahesh March 4, 2009 at 8:05 AM  

இப்பல்ல தெரியுது ரித்தீஷ் மன்றத்துக்கு உங்களை ஏன் தலைவராப் போட்டாங்கன்னு !! ஒரு அகில உலக நாயகன் இன்னொரு அகிலாண்ட நாயகனுக்கு... ஆஹா... ஆஹா...

Thamira March 4, 2009 at 11:03 AM  

சூப்ப‌ரா எழுதுறீங்க‌ பாஸ்.. என‌க்கும் இப்பிடி ஒரு (ஒரே ஒரு) அனுப‌வ‌ம் இருக்குது பாஸ்.. எழுத‌லாமான்னு யோசிச்சிக்கினு இருக்கேன். எப்பிடி பாஸ் எடுத்து வுட்டுகினே இருக்கீங்க‌..

ஆளவந்தான் March 4, 2009 at 12:12 PM  

//
இப்படி திரும்பினா போட்டோ, அப்படி திரும்பினா போட்டோன்னெல்லாம் இப்போ எடுத்திட்டிருக்கிற மாதிரி
//
ஸேம் பிளட் :)))

ஆளவந்தான் March 4, 2009 at 12:13 PM  

என்னையும் உருவத்த பாத்து தருமி வேசம் குடுத்தானுவ.. அதுல என்ன நடிச்சேனு எனக்கு இன்னும் ஞாபகம் இல்ல :(((

ஒரு காசு March 4, 2009 at 12:47 PM  

சரி, அன்னிக்கு நீங்க அந்த நாடகத்திலே மட்டும் நடிகாம இருந்திருந்தா இப்போ என்னவா ஆயிருப்பீங்க?

ஹீ ஹீ... கேட்டுட்டோம்லே ?

ILA (a) இளா March 4, 2009 at 1:13 PM  

வெள்ளை காயிதத்த காட்டி டேசன் இருக்கு, மக்கள் இருக்காங்கன்னு சொன்ன கதையாட்டம்ல இருக்கு..

சின்னப் பையன் March 4, 2009 at 4:14 PM  

வாங்க சகோதரி வித்யா -> அவ்வ்வ்... ஒரு பிறவி நடிகனை இப்படி முடக்கிப் போட பாக்கறீங்களே????? இது நியாயமா????

வாங்க கார்க்கி -> நம்ம சண்டையிலே ஏம்பா 'அஜித்'தை இழுக்கறீங்க??????

வாங்க முரளிகண்ணன் -> வழக்கமான சிரிப்பானுக்கு நன்றி... :-))))

வாங்க மகேஷ்ஜி -> அவ்வ்வ்வ்...

வாங்க தாமிரா -> அதையும் எடுத்து வுடுங்க... நாங்க இருக்கோம்ல படிக்கறதுக்கு... :-)))

சின்னப் பையன் March 4, 2009 at 4:16 PM  

வாங்க ஆளவந்தான் -> யோசிச்சி பாருங்க... பதிவ போடுங்க... :-)))

வாங்க ஒரு காசு -> 'ம். வெல்.. யோசிச்சி பாத்தா.. ஒரு வேள... நானு..' இப்படியெல்லாம் சினிமாக்காரங்க மாதிரி பேசுவேன்னு பாத்தீங்களா?????? ஹாஹா.....

வாங்க இளா -> அ(ட)ப்பாவிகளா... அப்போ இந்த பதிவை நம்பவே மாட்டீங்களா??????? அவ்வ்வ்வ்...

ஸ்ரீதர்கண்ணன் March 4, 2009 at 7:54 PM  

இதைவிட முக்கியமான விஷயம் என்னன்னா, இப்படி துக்கடா வேடத்தில் நடிக்க ஆரம்பிச்சாதான், அப்படியே பிக்கப் ஆகி, தொலைக்காட்சி, சினிமா, அரசியல்னு படிப்படியா
முன்னேறி, முதலமைச்சர் பதவி வரைக்கும் போகமுடியும்னு அப்பவே எனக்கு தோணிப்போச்சு.

:))))))

பிரேம்ஜி March 4, 2009 at 8:29 PM  

//எப்படி முக்கியம்னு கேட்டீங்கன்னா,
நான் (காவலாளி) மட்டும் இல்லேன்னா க.பொ வந்திருக்கிற விஷயமே ஜா.துரைக்குத் தெரியாதே. அப்புறம் சரித்திரப்புகழ் பெற்ற அந்த சந்திப்பே நடக்காமேயே போயிருக்குமே.//

பட்டாம்பூச்சி March 5, 2009 at 6:59 AM  

//எப்படி முக்கியம்னு கேட்டீங்கன்னா,
நான் (காவலாளி) மட்டும் இல்லேன்னா க.பொ வந்திருக்கிற விஷயமே ஜா.துரைக்குத் தெரியாதே//
ஆமாமா.பெரிய நியூஸ் ஆனந்தன்னு நெனப்பு :))).இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல :)).

//சில வருடங்களுக்கு முன்னால், அதை இடிச்சி அந்த இடத்திலே அடுக்கு மாடி வீடுகள் கட்டிட்டாங்க.//
இப்படித்தாங்க நம்மாளுங்க....அறிவே இருக்கறது இல்ல....எவ்வளவு பெரிய கலைஞன் நடிச்சதுன்னு கொஞ்சம் கூட யோசிக்காம இப்படி வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை எல்லாம் தரைமட்டம் ஆக்கிட்டாங்களே :))).

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP