மனைவிக்கு கணவன் கூறும் அறிவுரைகள் பத்து...!!!
போன வாரம் நடந்த பத்து தொடர்லே என்னாலே கலந்துக்க முடியல. அதனால், சூப்பர் ஸ்டார் தனியா உண்ணாவிரதம் இருந்த மாதிரி, நானும் தனியா இப்போ இந்த பதிவை
போட்டிருக்கேன். இப்போ Over to பதிவு.
*****
வண்டி ஓட்ட கத்துக்கோ:
கார் (அல்லது ஸ்கூட்டி, சைக்கிள் ஏதாவது) ஓட்ட கத்துக்கோ. அப்போதான் மனசுலே தன்னம்பிக்கை வரும். 'மனதில் உறுதி வேண்டும்' பாட்டுலே சுகாசினி எப்படி தைரியமா
ஓட்டிக்கிட்டு போய் வாழ்க்கையில் ஜெயிக்கறாங்கன்னு பாத்தேயில்லே. நான் எது சொன்னாலும் உன் நல்லதுக்குதான் சொல்லுவேன்.
எதையாவது இன்ட்ரெஸ்டிங்கா டிவியில் பாத்துக்கிட்டிருக்கிற என்னை எழுப்பி, ஒரே ஒரு தேங்கா பத்தையோ, கொஞ்சூண்டு கறிவேப்பிலையோ வாங்க அனுப்பாதே. வண்டி ஓட்ட
தெரிஞ்சிருந்துதுன்னா, நீயே போய் வாங்கிட்டு வந்துடலாம். என்னை ஆள விட்டா போதும்!!!
யோகா கத்துக்கோ:
சமீபகாலமா நீ ரொம்ப டென்ஷனாயிடறே. இப்பவே இப்படின்னா, வயசானப்புறம் இதே மாதிரி டென்ஷனானா உடம்புக்குதான் கஷ்டம். அதனால் நான் சொல்றது என்னன்னா, யோகா
கத்துக்கோ. மனசும், உடம்பும் அமைதியாகும். அதிகம் ஒண்ணுமில்லே தினமும் ஒரு அரை மணி நேரம் செலவழிச்சா போதும் - வாழ்நாள் முழுக்க பயனடைலாம்.
ஏம்மா, நாள் முழுக்க கஷ்டப்பட்டு ஆபீஸ்லே வேலை செய்துட்டு வீட்டுக்கு வர்றவனை, ஈவுஇரக்கமே இல்லாமே மொக்கை போடுறியே... அட்லீஸ்ட் யோகா கத்துக்கறேன்னு தினமும்
ஒரு அரை மணி நேரம் அமைதியா இருந்தீன்னா, உனக்கு அமைதி கிடைக்குதோ இல்லையோ, எனக்கு ரொம்ம்ம்ம்ம்ப அமைதி கிடைக்கும்.
நல்லா தூங்கு:
காலங்கார்த்தாலேந்து ராத்திரி வரைக்கும் வீட்டுலே எல்லா வேலையையும் இழுத்து போட்டுட்டு செய்யுறே. கொஞ்ச நேரமாவது ஓய்வெடுக்க வேண்டாமா? மதியம் தூங்க
முடியலேன்னாகூட பரவாயில்லை. ராத்திரி சீக்கிரம் தூங்கப் போயிடு. ஒரு நாளைக்கு 10 மணி நேரமாவது தூங்கினாத்தான், உடம்பு ஆரோக்கியமா இருக்கும்.
ஆபீஸ்லே இருக்கிற பிரச்சினையால் அங்கேயும் இணையத்துலே எதையும் பாக்கமுடியல. வீட்லேயாவது ராத்திரி கொஞ்ச நேரம் கணிணியில் உக்காரலாம்னா, படுக்க வாங்க, படுக்க
வாங்கன்னு படுத்தாதே. நீ போய் படுத்திட்டீன்னா, ஜிடாக்லே யார்கிட்டேயாவது கொஞ்ச நேரம் கடலை போட்டுட்டு வந்து படுத்திடுவேன்.
பாட்டு கத்துக்கோ:
உனக்கு இருக்கிற குரல் வளத்துக்கு நீ சரியான ஆசிரியர்கிட்டே பாட்டு கத்துக்கிட்டிருந்தின்னா, இன்னேரம் சங்கீதக்கடல்லே மூழ்கி முத்துமாலையே எடுத்திருக்கலாம். இப்பவும் ஒண்ணும்
கெட்டுப் போயிடலே. பக்கத்து தெருவுலே ஒருத்தரு பாட்டு சொல்லிக் கொடுக்கறாரு. கத்துக்கறதுன்னா கத்துக்கோ.
முடியலேம்மா. எஃப்.எம் லே கண்றாவி பாட்டு வந்தாக்கா உடனடியா அதை ஆஃப் செய்துடலாம். வீட்லே அது மாதிரி பாடினீன்னா, என்ன பண்றது? ஏ.ஆர்.ரஹ்மானோ, சங்கர்
மகாதேவனோ உச்சஸ்தாயிலே பாடலாம். நீ பாடலாமா? தொடர்ச்சியா தொலைபேசற எல்லார்கிட்டேயும் - “ஒண்ணும் பிரச்சினையில்லே. இவ பாட்டுதான் பாடிக்கிட்டிருக்கா” -
அப்படின்னு எவ்ளோ தடவைதான் சொல்லமுடியும் ஒரு ஆளாலே?
நிறைய சாப்பிடு:
டயட், டயட் அப்படின்னுட்டு சாப்பிடாமே இருந்துடாதே. நிறைய சாப்பிட்டாத்தான் உடம்புக்கு தெம்பு வரும். அதே மாதிரி விதவிதமா சமைக்கவும், சாப்பிடவும் கத்துக்கோ.
எனக்கு தனியா எடுத்து வெச்சிட்டு எவ்ளோ வேணா சாப்பிட்டுக்கோம்மா. எந்த சமையல் செய்தாலும் ஒரே மாதிரி இருக்குதுன்னு, உன் மனசு கஷ்டப்படும்படி என்னாலே சொல்ல
முடியல. ஏதாவது பாத்து செய். நாக்கு செத்து போயிடும்போல் இருக்கு.
The End.
*****
பி-கு : 1: மனைவிக்கு அறிவுரைகள் 10ன்னு சொல்லிட்டு, கம்மியா சொல்லியிருக்கீங்களேன்னு கேக்கறவங்களுக்கு. பத்துதானேன்னு இன்னிக்கு அறிவுரை சொல்லிட்டா, நாளைக்கு
அதுவே கிட்டத்தட்ட 11 மடங்கு அதிகமாகி அர்ச்சனையா மாறி 108ஆ திரும்ப நமக்கே கிடைக்கும். அப்படிப்பட்ட பின்விளைவுகள் திடீர்னு நினைவுக்கு வந்துடுச்சு. அதனால்தான்
பாதியிலேயே நிறுத்துக்கிட்டேன்.
பி-கு : 2 : பதிவை படிச்ச தாய்மார்கள் அனைவரும் எனது நன்றி.. மீண்டும் வருக.
பி-கு : 3: மீசை வெச்சிருக்கிற, மீசை வெட்டிவிட்ட, மீசை வளரவே வளராத, மீசை வளராமலேயே வெட்டிவிட்ட நிகழ்கால / வருங்கால கணவன்மார்கள் எல்லாரும் Ctrl+A
அமுக்கிக்கிட்டு பதிவை இன்னொரு தடவை படிச்சிடுங்க.
52 comments:
மீ த பர்ஷ்ட்டு !
இருங்க படிச்சுட்டு வரேன்...
சார் கலக்கல்ங்க...
அனுபவம் பேசுதோ???
:-)
முக்கியமா அந்த யோகா மேட்டர்..
சூப்பர்ங்க அண்ணாத்தே...
:-)))
கொஞ்ச நேரமாவது வாயை மூடிட்டு அமைதியா இருக்கணும்ல...
கலக்கல்...
மேக்கப் சமாச்சாரங்கள் எல்லாம் மிஸ்ஸாகுதே :))
பிற்காலத்தில் உதவும் :)))
Rear window பாத்திருக்கீங்க போல.. படம் எப்டி.. செம சூப்பர்ல.. என்னாம யோசிக்கிறாங்க பா.. :)))
சின்னப்பையன், என்னா இது சூப்பர்!!
நல்ல யோசைனைகள், அதற்கு
சரமாரியான பதில்கள்.
ம்ம்ம், சாப்பாடு முடிஞ்சி போச்சா
இல்லைன்னா ரொம்ப கஷ்டம் !!
எப்படித்தான் உக்காந்து யோசிப்பாங்களோ??
தெரியலையே, யாரவது கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்..........
//
காலங்கார்த்தாலேந்து ராத்திரி வரைக்கும் வீட்டுலே எல்லா வேலையையும் இழுத்து போட்டுட்டு செய்யுறே. கொஞ்ச நேரமாவது ஓய்வெடுக்க வேண்டாமா? மதியம் தூங்க
முடியலேன்னாகூட பரவாயில்லை. ராத்திரி சீக்கிரம் தூங்கப் போயிடு. ஒரு நாளைக்கு 10 மணி நேரமாவது தூங்கினாத்தான், உடம்பு ஆரோக்கியமா இருக்கும்.
//
ஆஹா தாங்க்ஸ் இதை எல்லாம் அப்படியே நம்பாதீங்க, இது வஞ்சப் புகழ்ச்சி!!!
//
முடியலேம்மா. எஃப்.எம் லே கண்றாவி பாட்டு வந்தாக்கா உடனடியா அதை ஆஃப் செய்துடலாம். வீட்லே அது மாதிரி பாடினீன்னா, என்ன பண்றது? ஏ.ஆர்.ரஹ்மானோ, சங்கர்
மகாதேவனோ உச்சஸ்தாயிலே பாடலாம். நீ பாடலாமா? தொடர்ச்சியா தொலைபேசற எல்லார்கிட்டேயும் - “ஒண்ணும் பிரச்சினையில்லே. இவ பாட்டுதான் பாடிக்கிட்டிருக்கா” -
அப்படின்னு எவ்ளோ தடவைதான் சொல்லமுடியும் ஒரு ஆளாலே?
//
சரி, சரி இது கொஞ்சம்.........
ஒன்னும் சொல்லிக்கறமாதிரி இல்லை.
ட்ரிங் ட்ரிங், தங்கமணி, ப்ளீஸ் இன்னைக்காவது இந்த பதிவை
படிச்சுட்டு உங்க comment போடுங்க!!!
ஹையா மாட்டி விட்டுட்டேனே!!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... அண்ணி ரொம்ப நல்லவங்க.. இதெல்லாம் எழுத டயமெல்லாம் கொடுத்து அமைதியா இருக்காங்க.. வாழ்க ஜனநாயகம்!
மக்கள்ஸ், உங்க தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி... பதில்கள் நாளைக்கு.. இப்போ தூங்கப்போறேன்...
குட் நைட்!!!
தங்கமணிக்கு "அறிவுரை" சொல்ற அளவுக்கு உங்களுக்கு சுதந்திரம் இருக்கா? பெரிய்ய்ய்ய்ய்ய பையனதாங்க நீங்க :)))))))))
பத்து மேட்டரு இன்னும் ஓயல ?
பரிசல்காரனுக்கு யாராவது பாராட்டுவிழா எடுத்தால் நான் பொன்னாடை போற்றுவேன்
இந்த மாதிரி தைரியமான ஆமபளைங்க எண்ணிக்கை அதிகமா ஆவுற மாதிரி தெரியுது
இதையெல்லாம் படிச்சப்புறமாவது,இந்த கல்யாணம் ஆகாத பசங்களெல்லாம் உஷாரானா சரி
உங்க வழி தனி வழி தான்
நல்லாயிருந்தது...
நீங்க மனசுல நினைக்குறது தெளிவா இல்லை.அதாவது அந்த எழுத்துக்களை சரியா படிக்கமுடியாம தெளிவா இல்லைன்னு சொல்ல வந்தேன்.
Rear Window பார்த்துட்டீங்களா? படம் எப்படி? கலக்கியிருப்பாங்க இல்ல?
எனக்கும் எழுத்துக்கள் சரியா தெரியலை.
:((
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.
இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
nTamil குழுவிநர்
சூப்பர்..
எழுத்துகள் வெள்ளைக்கு பதிலா ப்ளாக் நிரத்திலே போட்டிருக்கலாம். மொத தடவியே ரெண்டும் படிச்சிட்டேன் :))
எப்படீங்ணா இப்படி எல்லாம் யோசிகறீங்க?
ஜூப்பரு.
வலியை சமாளிக்க பத்து வழிகள் இதுதானே அடுத்த பதிவோட தலைப்பு :)
ஆனாலும் சூப்பர் ச்சின்னப்பையன். ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னாலும் இத்தனை அர்த்தம் இருக்கும் அப்படின்னு நாங்க யோசிச்சு பார்த்ததே இல்லை :).
sir, enga viittula karant illa. unga viittula? o. ok. unga viittilayum appadiththaanaa? sari, sari.
ippaththaan nimmathiyaayirukku.
ஹலோ. பூரிக்கட்டை சப்ளையரா? ஆமாங்க. மரத்துல வேணாம். சீக்கிரம் உடைஞ்சிடுது. இரும்புல ஒரு 100 பீஸ் வேணும். அட்ரஸா. இருங்க அண்ணிக்கு கனெக்ட் பண்றேன். டிடெய்ல் அவங்க சொல்லுவாங்க.
அய்யா ச்சின்னப்பையரே, ரெண்டு பாயின்டு.
ஒண்ணு, உங்கள் பதிவில் பொருள் குற்றம் உள்ளது.
மனைவிக்கு அறிவுரை எப்படி கூறலாம். சஜஷன்ஸ் என்று இருக்க வேண்டும்.
ரெண்டு, ஒரு யோசனைக்கும் இன்னொண்ணுக்கும் நெறைய இடைவெளி இருக்கே. ஏன்?அப்படின்னு தங்க்ஸ் எல்லாம் யோசிக்க மாட்டாங்களா?
இப்படி எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சி ரங்க்ஸ் எல்லாம் இடியாப்பச்சிக்கல்ல மாட்டி குழம்பி போயி அவியலாகணும்னு இருக்கு (சரியாக மதியான நேரத்தில் இடப்படும் பின்னூட்டம்)
நானும் கார்க்கி மாதிரியே சூட்டிகை. மொதோ தடவையே ரெண்டையும் படிச்சுட்டேன்.
பதிவு சூப்பர். ப்ரின்ட் அவுட் எடுத்து 'வீட்டின்' பார்வையில் படும்படி வைத்து விட்டேன்.
வாங்க வேத்தியன் -> ஆமா. நீங்கதான் மொதோ.... நன்றி..
வாங்க ஆளவந்தான் -> நன்றி... ஆமா. படம் சூப்பர்.
வாங்க ரம்யா -> ஆஹா... மாட்டி விடறதுக்கு முதல் ஆளா வரிசையில் நிப்பீங்க போலிருக்கே.... :-))
வாங்க தமிழ் பிரியன் -> எவ்ளோ அடி வாங்கினா இந்த உடம்பு தாங்குதுன்னு டெஸ்ட் பண்ணணும்னு வடிவேலு சொல்றா மாதிரி இதெல்லாம் ஒரு ‘டெஸ்ட்' பதிவுதான்.... :-)))
வாங்க மகேஷ்ஜி -> ஹாஹா....
வாங்க கண்ணன் -> ஹிஹி. நீங்க பொன்னாடை போர்த்தும்போது நான் பக்கத்திலிருந்து பார்ப்பேன் என்று உறுதி கூறுகிறேன்... :-)))
வாங்க பாபு -> என்னிக்காவது ஒரு நாள் புரட்சி வெடிச்சித்தானே ஆகணும்.... :-)))
வாங்க நசரேயன் -> அவ்வ்வ்வ்வ்...
வாங்க ராம்.CM -> நன்றி...
வாங்க பிரேம்ஜி, புதுகைத் தென்றல் அக்கா -> Control+A புடிச்சிக்கிட்டு படிச்சீங்களா இல்லையா? பின்குறிப்புலே சொல்லியிருக்கேனே...
வாங்க கார்க்கி -> முதல் தடவையில் அவற்றை மறைக்கணும்னு முயற்சி பண்ணேன். ஆனா ‘வெள்ளை' எழுத்துருலேயே பளீர்னு தெரியுது... :-((((
வாங்க பட்டாம்பூச்சி -> மிக்க நன்றி...
வாங்க தாரணி பிரியா -> யோசிங்க யோசிங்க... இனிமே விடாதீங்க அண்ணனை.... (ஹிஹி.. ஏதோ என்னாலானது!!!).. :-)))
வாங்க முத்துவேல் அண்ணே -> ஹாஹா... வீட்டுக்கு வீடு வாசப்படின்றீங்க.... ஓகே ஓகே.... :-))))
வாங்க வித்யா -> அவ்வ்வ்.. என்ன கொலவெறி உங்களுக்கு???? வேணாம்மா விட்டுடுங்க... நான் புள்ளகுட்டிக்காரன்.... :-)))))
வாங்க இளைய பல்லவன் -> பின்னே நான் மட்டும் தனியா மாட்டிக்கிட்டு இருக்கும்போது, மத்தவங்கல்லாம் ஜாலியா சிரிச்சிக்கிட்டிருந்தா, எனக்கு எப்படி இருக்கும்??? அதான், எல்லாரையும் மாட்டி விடலாம்னு ஒரு சின்ன முயற்சி... ஹிஹி..... :-))))
வாங்க ரமேஷ் வைத்யா அண்ணே -> கை குடுங்க. நம்ம கட்சிக்கு பலமான ஆள் கிடைச்சாச்சு.. அட உங்களைத்தான் சொன்னேன்.... :-)))
வணக்கம் குரு.!
:-))))
அறிவுரை அதுவும் மனைவிக்கு முடியும்கறீங்க!?!?!?
என்னங்க காமெடி பண்ணிகிட்டு :((((
:))))))))))
/
தாரணி பிரியா said...
வலியை சமாளிக்க பத்து வழிகள் இதுதானே அடுத்த பதிவோட தலைப்பு :)
/
ROTFL
:))
/
ச்சின்னப் பையன் said...
வாங்க தமிழ் பிரியன் -> எவ்ளோ அடி வாங்கினா இந்த உடம்பு தாங்குதுன்னு டெஸ்ட் பண்ணணும்னு வடிவேலு சொல்றா மாதிரி இதெல்லாம் ஒரு ‘டெஸ்ட்' பதிவுதான்.... :-)))
/
பதிவுல மட்டும் டெஸ்ட் பண்ணுங்க அடி வாங்கி ஆஸ்பத்திரிக்கு போகறமாதிரி ஆகிட போகுது சாக்கிரதை
:))))
//மங்களூர் சிவா said...
அறிவுரை அதுவும் மனைவிக்கு முடியும்கறீங்க!?!?!?
என்னங்க காமெடி பண்ணிகிட்டு :(((( //
அதானே? ஏதாவது நடக்குறதப் பத்திப் பதிவு எழுதுப்பா.
சேம் ப்ளட் தல
ஹாஹாஹாஹா....You are too honest!!!!!
அன்புடன் அருணா
ஹாஹாஹாஹா....You are too honest!!!!!
அன்புடன் அருணா
ஹாஹாஹாஹா....You are too honest!!!!!
அன்புடன் அருணா
சேம் ப்ளட்...
கலக்கல்..
முடியலேம்மா. எஃப்.எம் லே கண்றாவி பாட்டு வந்தாக்கா உடனடியா அதை ஆஃப் செய்துடலாம். வீட்லே அது மாதிரி பாடினீன்னா, என்ன பண்றது? ஏ.ஆர்.ரஹ்மானோ, சங்கர்
மகாதேவனோ உச்சஸ்தாயிலே பாடலாம். நீ பாடலாமா? தொடர்ச்சியா தொலைபேசற எல்லார்கிட்டேயும் - “ஒண்ணும் பிரச்சினையில்லே. இவ பாட்டுதான் பாடிக்கிட்டிருக்கா” -
அப்படின்னு எவ்ளோ தடவைதான் சொல்லமுடியும் ஒரு ஆளாலே
Super :)
உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பாக்குறோம் :)))))))))
மீசை வெச்சிருக்கிற, மீசை வெட்டிவிட்ட, மீசை வளரவே வளராத, மீசை வளராமலேயே வெட்டிவிட்ட நிகழ்கால / வருங்கால கணவன்மார்கள் எல்லாரும்
அப்புறம் இது ஸுபெரு
ஹலோ. பூரிக்கட்டை சப்ளையரா? ஆமாங்க. மரத்துல வேணாம். சீக்கிரம் உடைஞ்சிடுது. இரும்புல ஒரு 100 பீஸ் வேணும். அட்ரஸா. இருங்க அண்ணிக்கு கனெக்ட் பண்றேன். டிடெய்ல் அவங்க சொல்லுவாங்க.
பாத்து கொஞ்சம் கவனமா இருங்க தல
//ரமேஷ் வைத்யா said...
நானும் கார்க்கி மாதிரியே சூட்டிகை. மொதோ தடவையே ரெண்டையும் படிச்சுட்டேன்.
பதிவு சூப்பர். ப்ரின்ட் அவுட் எடுத்து 'வீட்டின்' பார்வையில் படும்படி வைத்து விட்டேன்.//
இப்போ நல்லா பட்டிருக்குமே.
:-)))
//இவ பாட்டுதான் பாடிக்கிட்டிருக்கா” -
அப்படின்னு எவ்ளோ தடவைதான் சொல்லமுடியும் ஒரு ஆளாலே?//
நான் வழக்கம்போல பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றுதான் சொல்லுங்களேன்.
:-)
வாங்க சுரேஷ் -> பாக்கறேன் உங்க பதிவையும்... நன்றி...
வாங்க தாமிரா -> சிஸ்யா.... வணக்கம்... :-)))
வாங்க பாஸ்கர் -> நன்றி...
வாங்க சிவா, வேலன் ஐயா -> எதையும் ஒரு தடவை முயற்சி செய்து பாத்துடணுமில்லே... அப்புறம் சரிப்படலேன்னா விட்றவேண்டியதுதான்.... அவ்வ்வ்...
வாங்க வால், அருணா, பாபு -> நன்றி...
வாங்க ஸ்ரீதர்கண்ணன் -> இன்னும் என்ன எதிர்பாக்கறீங்க என்கிட்டேந்து??? எங்கெங்கே அடிபட்டு வீங்கியிருக்குதுன்னா????? ஆஆஆ....
வாங்க பாலராஜன்கீதா -> ஆமாங்க ஐயா... வேறே வழி????? அதான் சொல்லிட்டிருக்கேன் இப்போதைக்கு... ஹிஹி.... நன்றி...
ultimate ponga
Post a Comment