Thursday, February 26, 2009

ஒற்றுமையில் வேற்றுமை!!!

ஒருத்தரு கல்யாணம் பண்ணிக்கணும்னு பெண் பாக்கப் போறாரு. போன இடத்துலே பையனும் பொண்ணும் தனியா பேசிக்கட்டும்னு ஒரு அறையில் போட்டு தள்ளிடறாங்க. இதான் சீன். இனி கதை.

*****

"ஏதாவது பேசுங்களேன்"

"ம். என்ன பேசறது?"

"உங்களுக்கு பிடிச்சது, பிடிக்காதது இதெல்லாம் சொல்லுங்க. நானும் அதுக்கு பதில் சொல்றேன். நம்ம ரெண்டு பேரோட டேஸ்டும் ஒத்துப்போகுதான்னு பாப்போம்."

"ம். சரி. எங்கேந்து ஆரம்பிக்கறது. ம். நான் தமிழோடு நிறைய இந்திப் படங்களும் பாப்பேன்".

"அப்படியா. வெரிகுட். ஆனா எனக்கு இந்தி தெரியாது. அதனால் வெறும் தமிழ் படங்கள மட்டும்தான் பாப்பேன்".

"படத்துக்குப் போறதுன்னா, முதல்லே விமர்சனம் எல்லாத்தையும் படிச்சிட்டு நல்லா இருந்தாதான் படத்துக்கே போவேன் நான்".

"அது சரிப்படாது. விமர்சனத்தை படிச்சிட்டா அப்புறம் படம் பாக்கும்போது த்ரில்லே இருக்காது. அதனால் நான் முதல்லே படத்தைப் பாத்துட்டுதான் விமர்சனம் படிப்பேன்".

"ஒரு நல்ல புத்தகம் கிடைச்சுதுன்னா, சீக்கிரம் படிச்சி முடிச்சிடக்கூடாதேன்னு, மெல்ல அனுபவிச்சி படிப்பேன்".

"நான் அப்படியில்லேப்பா. நல்ல புத்தகமா இருந்துதுன்னா, அதை கீழே வெக்கவே தோணாது எனக்கு. ஒரே மூச்சிலே அதை கடகடன்னு படிச்சி தூக்கிப் போட்டுடுவேன்".

"பத்திரிக்கைகளை நான் பின்னாடியிருந்துதான் படிக்க ஆரம்பிப்பேன்".

"பின்னாடியிருந்தா? ச்சேச்சே! அப்படி படிச்சா, விடுகதை மாதிரியான மேட்டருக்கெல்லாம் முதல்லே பதில் தெரிஞ்சிடுமே. நான் அப்படி படிக்கமாட்டேன்".

"சாப்பிடும்போது எனக்குப் பிடிக்காத ஐட்டம் ஏதாவது போட்டாங்கன்னா, அதை தொடவே மாட்டேன்".

"அதுக்கு நேரெதிர் நான். மொதல்லே அந்த பிடிக்காத ஐட்டத்தை காலி பண்ணிட்டு, அப்புறம் இருக்கறதை ரசிச்சி ருசிச்சி சாப்பிடுவேன்."

(சிறிது நேரம் அமைதி)

ஆண்: "நமக்குள்ளே இவ்ளோ வேற்றுமை இருக்கே... நாம திருமணம் செய்துக்கிட்டா சந்தோஷமா இருப்போமா?"

பெண்: "அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லை. அப்பப்போ சிறுசிறு சண்டை போட்டால்தான் வாழ்க்கை இன்பமா இருக்கும். எனக்குள்ளே பட்சி சொல்லுது -- நாம வேற்றுமையில்தான் ஒற்றுமை காணப்போறோம்னு."

ஆ: "அதெல்லாம் சரி. ஆனா.. "

பெ: "ஆனா என்ன... சொல்லுங்க..."

ஆ: "ஒரே ஒரு ஒற்றுமை இருக்கு நம்மகிட்டே. ஆனா, அதுவே பெரிய பிரச்சினையாயிடக் கூடாதேன்னுதான் எனக்கு கவலையாயிருக்கு".

பெ: "என்ன சொல்றீங்க? ஒற்றுமை இருந்தா பிரச்சினை எதுக்கு வருது? சொல்றேனேன்னு தப்பா நினைக்காதீங்க. நீங்க கமலஹாசன் பேட்டிகள் நிறைய பாப்பீங்களா? ஏன்னா, நீங்க சொல்றது எனக்கு புரியவேயில்லே..."

ஆ: "சொல்றதை தெளிவா கேளுங்க. நீங்க ஒரு பொண்ணு. நீங்க யாரை கல்யாணம் பண்ணிப்பீங்க?"

பெ: "இது என்ன கேள்வி? ஒரு ஆம்பளையத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்."

ஆ: "அதேதான் நானும் சொல்ல வர்றேன். எங்க வீட்லே இதை தெளிவா என்னாலே சொல்ல முடியல. அதனால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கல்யாணம் நடக்காதுன்னு நீங்களே சொல்லிடுங்க. நான் வர்றேன். பை பை..."

31 comments:

நசரேயன் February 26, 2009 at 9:48 PM  

நான் அவனில்லை

நசரேயன் February 26, 2009 at 9:49 PM  

ஹையா நான் தான் முதல்ல இன்னைக்கு

ஆதவா February 26, 2009 at 10:09 PM  

ஹி ஹி.... ரொம்ப அருமை!!! இப்படியே ஒவ்வொரு பெண்பார்க்கும் படலத்திலும்ப்போனா...

கல்யாணமே ஆவாது!

ஆதவா February 26, 2009 at 10:12 PM  

நீங்க ச்சின்னப்பையன் இல்லை... பெரிய்ய்ய்ய்ய பையன்...

சரிதானா??

Mahesh February 26, 2009 at 10:15 PM  

வால்பையன் படிச்சா சிரிப்பாரு !!!

ஸ்ரீதர்கண்ணன் February 26, 2009 at 11:15 PM  

ஐயோ முடியல :)))))))))))))))))))))))

வால்பையன் February 26, 2009 at 11:53 PM  

நல்ல ஒற்றுமை!

என்னா வில்லத்தனம்!

எம்.எம்.அப்துல்லா February 27, 2009 at 12:43 AM  

அரவானிகளைப் பார்த்து பரிதாபம் வேண்டாம். அவர்களும் நம்மில் ஒருவர் என்ற உணர்வு இருந்தால் போதும்

Anbu February 27, 2009 at 6:32 AM  

நன்றி இருக்குது அண்ணா

நவநீதன் February 27, 2009 at 6:38 AM  

// நான் அவனில்லை //
Repeateey....!

www.narsim.in February 27, 2009 at 7:25 AM  

ச்சின்னப்பையன்.. நல்லா இருந்தது flow.. கமல் பேட்டி கலக்கல்!!!

Anonymous,  February 27, 2009 at 7:46 AM  

one does not have to be impotent to be a gay guy. in india this is the problem, not many people know what exactly it is, since it is considered 'tabu'.

more over 'gay' can make babies if they want to, they are not impotent, but their sexual orienttion/ desire is different.

eunoque is what you call 'aravaani' i suppose.

அறிவிலி February 27, 2009 at 9:07 AM  

//ஒருத்தரு கல்யாணம் பண்ணிக்கணும்னு பெண் பாக்கப் போறாரு//

//அதேதான் நானும் சொல்ல வர்றேன். எங்க வீட்லே இதை தெளிவா என்னாலே சொல்ல முடியல//

அப்புறம் ஏங்க பெண் பார்க்க போனாரு? ஆண் பார்க்க இல்ல போயிருக்கணும்.

சின்னப் பையன் February 27, 2009 at 11:01 AM  

வாங்க நசரேயன், ஆதவா, மகேஷ், ராகி ஐயா, ஸ்ரீதர்கண்ணன், வால்பையன் -> நன்றி..

வாங்க அப்துல்லா அண்ணே -> நீங்க சொல்ற கருத்து மிகச்சரியானதுண்ணே... ஆனா, இந்த கதை 'அரவாணிகளைப்' பற்றி இல்லேண்ணே... ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றியது....

வாங்க வித்யா, அன்பு, நவநீதன், நர்சிம்ஜி -> மிக்க நன்றி...

சின்னப் பையன் February 27, 2009 at 11:12 AM  

Hello Anony ->

We didnt talked abt 'aravaani' or the guy's impotency here in this story.

But it is true that many people doesnt understand the diffeences between gay / lesbian / impotency / aravaani etc.,

வாங்க அறிவிலி -> தன் நிலையை இன்னும் வீட்லே தெளிவா சொல்ல முடியலேன்னு சொல்லிட்டாரே...

Anonymous,  February 27, 2009 at 12:33 PM  

அண்ணா....!

சூப்பர் கலக்கிட்டீங்க. க்ளைமாக்ஸ் சூப்பரோ சூப்பர். முதல்ல படிக்க ஆரம்பிச்சபோது ஏதோ காமெடி கீமெடி பண்ணப்போறீங்களோன்னு நெனச்சேன். ஆனா கடைசில கலக்கிட்டீங்க. ஆ...ங்....அப்புறம் ஓட்டு போட்டுட்டேன் சார்...

SK February 27, 2009 at 7:03 PM  

பொம்மலாட்டம் படம் சமீபத்துல பாத்தீங்களா. :) :)

பழமைபேசி February 27, 2009 at 8:58 PM  

// நசரேயன் said...
ஹையா நான் தான் முதல்ல இன்னைக்கு
//

Do you think, I am the on came so late? No yaar, some one will follow me.... :-0)

பழமைபேசி February 27, 2009 at 9:00 PM  

// நசரேயன் said...
ஹையா நான் தான் முதல்ல இன்னைக்கு
//

:-o)

ஒரு காசு February 27, 2009 at 9:11 PM  

கடைசி பத்தி படிக்கிற வரைக்கும் அது உங்க சொந்த கதைனே நெனைச்சேன் ;)

பரிசல்காரன் February 28, 2009 at 3:50 AM  

மீ த 25!

நல்ல கருத்து!

நன்றி!

வெண்பூ February 28, 2009 at 4:58 AM  

என்னாச்சி ச்சின்னப்பையன், திடீர்னு சீரியஸ் கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க.. ஆனா முடிவு எதிர்பாராதது.. நல்லாவே இருந்தது..

சின்னப் பையன் February 28, 2009 at 9:37 AM  

வாங்க விஜயசாரதி, தாரணி பிரியா -> நன்றி...

வாங்க SKஜி -> அவ்வ்... இல்லீங்கோ... தமிழ் படம் பாத்தே ரொம்ம்ம்ம்ப நாளாச்சுங்கோவ்.....

வாங்க பழமைபேசி -> ஆமாங்க. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கேன்னு சொல்லிடுங்க... :-))

வாங்க ஒரு காசு -> அவ்வ்வ். ஒரு படைப்பாளி எப்பவுமே சொந்த கதைதான் எழுதுவானா என்ன???? ஹிஹி... படைப்பாளின்னவுடனே யாரோன்னு நினைச்சிக்காதீங்க... அது நாந்தான்... :-))

வாங்க பரிசல் -> நன்றி...

வாங்க வெண்பூ -> அப்பப்போ இது மாதிரியும் வரும். கண்டுக்காதீங்க.... :-)))

Thamira March 1, 2009 at 6:53 AM  

ஏன் இப்படி ஒரு கொலவெறிக்கதை திடீர்னு.. யாராவது ஏதாச்சும் சொல்லிட்டாங்களா?

மணிகண்டன் March 1, 2009 at 8:55 AM  

நல்ல இருந்தது சார். எதிர்பார்க்காத முடிவு.

RAMYA March 1, 2009 at 1:55 PM  

ரொம்ப சஸ்பென்சா கதை சொல்லி இருக்கீங்க.

நீங்க சீக்கிரம் வெள்ளித் திரையில் வரும் வாய்ப்பு அதிகம் இருக்கு. :))

சின்னப் பையன் March 1, 2009 at 8:47 PM  

வாங்க தாமிரா -> அவ்வ்.. கற்பனையை அவுத்து விடலாம்னு பாத்தா...

வாங்க மணிகண்டன் -> நன்றி...

வாங்க கேபிள் சங்கர் -> முதல் வருகைக்கு மிக்க நன்றி..

வாங்க ரம்யா -> நன்றி...

Prabhu March 2, 2009 at 11:24 AM  

கடைசில ஜெர்க் ஆக வச்சுடீங்க தலைவா!!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP