மாலில் (Mall) ஒரு நாள்!!!
வாரயிறுதியில் ரொம்பவே போரடிச்சதுன்னா, நாங்க போற இடம் எங்க ஊர் மால். ஒரு நாள் முழுக்கக்கூட உள்ளாற சுத்திக்கிட்டே இருக்கலாம். யாரும் - என்ன பண்றீங்க, எங்கே வந்தீங்கன்னு கேக்கவே மாட்டாங்க. ஒரே ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன செய்வேன்னாக்கா, கடனட்டைகளை வெளியே காரிலேயே விட்டுட்டு போயிடுவேன். இல்லேன்னா, இது நல்லாயிருக்கு, அது நல்லாயிருக்குன்னு தேவையில்லாமே வாங்க ஆரம்பிச்சிடுவாங்க(!!!). அதனால், ஆத்திர அவசரத்துக்கு ஒரு பத்து ரூபாய் மட்டும் பாக்கெட்லே போட்டுட்டு உள்ற போயிடுவோம்.
அந்த மாலில் என்னன்ன கடைகள் இருக்கு, அங்கே நாங்க பண்ற கலாட்டாக்கள் என்னென்ன - கீழே படிங்க.
முதல்லே வர்றது ஒரு ஃபர்னிச்சர் கடை. அந்த கடைக்கு வரும் சிறுவர்களுக்கு ஒரு பெரிய பலூன் ஊதித்தருவாங்க. அந்த பலூனுக்காகவே அந்த கடைக்குள்ளே போய் - இந்த அலமாரி வாங்கலாமா, அந்த சோஃபா வாங்கலாமான்னு சிறிது நேரம் தங்ஸுடன் ஆலோசித்தபிறகு(!!!) - சஹானாவுக்காக பலூன் வாங்கப் போய் நிற்போம். ஒரே ஒரு தொல்லை என்னன்னா, அங்கிருக்கும் சீட்டில் நம்ம பேரு, தொலைபேசி எண் எல்லாத்தையும் எழுதினாத்தான் அந்த பலூன் கொடுப்பாங்க. முதல் தடவை தெரியாத்தனமா எங்க தொலைபேசி எண்ணைக் கொடுத்து பலூனை வாங்கி வந்துட்டோம். அவங்களும் தொடர்ந்து பல தடவை தொலைபேசி, அதை வாங்குங்க, இதை வாங்குங்கன்னு ஒரே தொல்லை பண்ணிட்டாங்க... நாம விடுவோமா... அடுத்த தடவையிலிருந்து பலூன் வாங்கிவிட்டு - தொலைபேசி எண் கொடுக்கும்போது - நண்பர்கள் யாராவது ஒருத்தரோட எண்ணை கொடுத்துட்டு... எஸ்கேஏஏஏப்......
கடைகளுக்குள்ளே நடந்துபோகும்போது நான் சிறிது முன்னாடி நடந்துகொண்டிருக்க, மத்த ரெண்டு பேரும் பின்னாடி வருவாங்க. எங்க கூட நடந்து வாங்களேன்னு தங்ஸ் சொன்னாங்கன்னா நான் சொல்றது - ”அதான் கல்யாணம் ஆயிருச்சுல்லே... அதுக்கப்புறம் என்ன பக்கத்துப் பக்கத்துலே நடக்க வேண்டியிருக்கு? ஊர் உலகத்திலே எல்லாம் இப்படியா நடக்கறாங்க?”. -- இந்த என் கூற்றை மறுக்கறவங்க கையைத் தூக்குங்க.
அடுத்து வர்றது - பொம்பளைங்களுக்கான முடிதிருத்தும் கடை. இந்த உலகத்துலேயே எனக்குப் புரியாத ஒண்ணே ஒண்ணு (!!) இதுதான். இந்த பெண்கள், நீளமான முடியிருந்தா ரொம்ப அசிங்கமாயிருக்குன்னு - அதை சுருட்டையாக்கிக்க கடைக்கு வர்றாங்க. அதே சுருள் முடியிருக்கிறவங்க என்னடான்னா - அதுவும் நல்லாயில்லேன்னு சொல்லி முடியை நீளமாக்கிக்கணும்னு கடைக்கு வர்றாங்க. இருக்கறத வச்சிக்கிட்டு ஏன் இருக்க'முடி'யலேன்னு தெரியல!!! யாராச்சும் சொல்லுங்க. இந்த கடையைத் தாண்டி போறப்ப நான் தங்ஸ்கிட்டே சொல்றது என்னன்னா - நானும் ஒரு தடவை அந்த கடையில் புகுந்து, நீளமா இருக்கற என் மீசையை சுருள்மீசையாக்கி விடும்மான்னு அங்கிருக்கிறவங்கள கேக்கணும்.!!!
அடுத்து வர்றது - பெண்களுக்கான மேக்கப் சாமான்கள் கடைகள். சஹானாவையும், அவங்கம்மாவையும் கடைக்குள்ளே 'வேடிக்கை' பாக்க அனுப்பிச்சிடுவேன். நமக்கு பெண்களின் மேக்கப் சமாச்சாரங்கள் எதுக்கு சொல்லுங்க? அதனால் நான் மேக்கப் கடைக்குள்ளே போகாமே, மேக்கப் போட்டுட்டு வர்றவங்கள வேடிக்கை பாத்துக்கிட்டே வெளியே உக்காந்திருப்பேன்.
அந்த மாலில் நடந்து கொண்டிருக்கும்போது நம் வழியில் திடீரென்று சில விற்பனைப் பெண்கள் குறுக்கிடுவாங்க. புதுசா வந்திருக்கிற ஏதாவது ஒரு பொருளை காட்டி - இதை வாங்கிக்குங்கன்னு பெரிய லெக்சர் கொடுத்திட்டிருப்பாங்க. நானும் ‘மனதைத் திருடிவிட்டாய்' பிரபுதேவா மாதிரி தலையாட்டிக்கிட்டு - பின்னாடி வர்ற தங்ஸ் என்னை நெட்டித்தள்ளிப் போறவரைக்கும் - சிரிச்சிக்கிட்டே நின்னுட்டிருப்பேன். நம்மையும் ஒரு மனுசனா மதிச்சி பேசறவங்களை நாமும் மதிச்சி நின்னு பேசறதுதானே முறை? தங்ஸுக்கு அது புரிவதேயில்லை... அடுத்த தடவை போகும்போது, அவங்க கிட்ட்ட்ட்டே போய் அவங்க பேசறத கேட்டுக்கிட்டேஏஏஏ இருக்கணும்.
இப்படியாக ஒரு தடவை மாலில் இருந்து வெளியே வரும்போது -- எதிரில் வந்த இன்னொரு இந்திய ஜோடி ஒன்றைப் பார்த்தோம். “இங்கே வரவேண்டாம், வரவேண்டாம்னு எவ்ளவோ சொல்றேன். கேட்டாத்தானே? இதுக்கு வீட்லேயே ஏதாவது படம் பாத்துக்கிட்டிருக்கலாம். “ -- அப்படி இப்படின்னு அந்த தங்ஸ் வளவளவென்று பேசிக்கொண்டே போனார். “ நான் தனி மரமில்லேடா... ஒரு தோப்பு...”ன்னு சொல்லிக்கிட்டு நெஞ்சை நிமித்திக்கிட்டு வெளியே வந்தேன்.
36 comments:
அதான் கல்யாணம் ஆயிருச்சுல்லே... அதுக்கப்புறம் என்ன பக்கத்துப் பக்கத்துலே நடக்க வேண்டியிருக்கு? ஊர் உலகத்திலே எல்லாம் இப்படியா நடக்கறாங்க?
:)))))))
/கடனட்டைகளை வெளியே காரிலேயே விட்டுட்டு போயிடுவேன். இல்லேன்னா, இது நல்லாயிருக்கு, அது நல்லாயிருக்குன்னு தேவையில்லாமே வாங்க ஆரம்பிச்சிடுவாங்க(!!!). /
எங்க வீட்டுலேயும் அதே கதைதாங்க...கவலே படதீங்க தோப்புக்கு நிறைய ஆள் இருக்கோம்.....சில படங்கலை பாக்கறதை விட இதுவே நல்லதான் இருக்கும்
அதனால் நான் மேக்கப் கடைக்குள்ளே போகாமே, மேக்கப் போட்டுட்டு வர்றவங்கள வேடிக்கை பாத்துக்கிட்டே வெளியே உக்காந்திருப்பேன்.
அப்படி ஆஆஆ....
யாரும் தனிமரமில்ல.. :))
நானும் ஒரு மரம் தான் தோப்புல
//நான் தனி மரமில்லேடா... ஒரு தோப்பு...”ன்னு சொல்லிக்கிட்டு நெஞ்சை நிமித்திக்கிட்டு வெளியே வந்தேன்./
நான் இன்னமும் தனிமரம்தான் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக்கிறேம்ப்பா
:))
\\ஒரு பத்து ரூபாய் மட்டும் பாக்கெட்லே போட்டுட்டு உள்ற போயிடுவோம்.
\\
?????????????
:-))))))))))))))))
அப்பறம்..அவங்க எல்லாம்..இந்த ஃபோட்டோ பித்தா இருக்கிறதை சொல்ல மறந்துட்டீங்களே
நாங்க போற இடம் எங்க ஊர் மால்.
//
அந்த மாலுக்கு பதிலா திருமால் அல்லது பெருமாளை மீட் பண்ணுனீங்கன்னா புண்ணியமாவது கிடைக்கும் :))
“ நான் தனி மரமில்லேடா... ஒரு தோப்பு...”ன்னு சொல்லிக்கிட்டு நெஞ்சை நிமித்திக்கிட்டு வெளியே வந்தேன்.
//
ஹையா! நானும் மொத்த மரத்துல ஒத்த மரம் :))
“ நான் தனி மரமில்லேடா... ஒரு தோப்பு...”ன்னு சொல்லிக்கிட்டு நெஞ்சை நிமித்திக்கிட்டு வெளியே வந்தேன்.////
அட்டகாசம் தல.. ROTFL..
கிளப்புறீங்க.. லைஃப என்ஜாய் பண்றீங்க தல.. லக்கி பெல்லோ..
//
”அதான் கல்யாணம் ஆயிருச்சுல்லே... அதுக்கப்புறம் என்ன பக்கத்துப் பக்கத்துலே நடக்க வேண்டியிருக்கு? ஊர் உலகத்திலே எல்லாம் இப்படியா நடக்கறாங்க?”
//
இது ஜஸ்ட் ஃபார் ஜோக்னு நம்புறேன்..
அப்புறம் முக்கியமானத விட்டுட்டீங்களே, ஃபுட் கோர்ட் பக்கம் ஒரு ரவுண்ட் போனா ஒரு சைனீஸோ இல்ல ஜாப்பனீஸோ எதுனா புது ஐட்டத்த கையில வெச்சிகிட்டு நின்னுகிட்டு இருப்பாங்க.. வெக்கப்படாம ரெண்டு மூணு கேட்டு வாங்கி சாப்டுட்டு அப்புறமா வேற கடைக்கு போறத எழுதலயே நீங்க..
நானும் மொத்த மரத்துல ஒரு மரம் :-)
// அதான் கல்யாணம் ஆயிருச்சுல்லே... அதுக்கப்புறம் என்ன பக்கத்துப் பக்கத்துலே நடக்க வேண்டியிருக்கு? ஊர் உலகத்திலே எல்லாம் இப்படியா நடக்கறாங்க //
கல்யாணம் ஆன வாலிப வயோதிக நண்பருக்கு இன்னும் மீசை நரைக்களிங்கோவ்வ்வ்வ்வ்வ்...
// கடனட்டைகளை வெளியே காரிலேயே விட்டுட்டு போயிடுவேன். இல்லேன்னா, இது நல்லாயிருக்கு, அது நல்லாயிருக்குன்னு தேவையில்லாமே வாங்க ஆரம்பிச்சிடுவாங்க(!!!). அதனால், ஆத்திர அவசரத்துக்கு ஒரு பத்து ரூபாய் மட்டும் பாக்கெட்லே போட்டுட்டு உள்ற போயிடுவோம்.. //
அனாலும் நீங்க ரொம்ப உஷாருங்க... அடுத்த தடவ தங்ஸ் கடனட்டைய எடுத்துட்டு வர சொல்ல மாட்டாங்களா?
அவனவனுக்கு தங்ஸ்சோட ஷாப்பிங் போகவே பயப்படுறான்...! நீங்க ஷாப்பிங் போனதையே பதிவா போடுறீங்க....?
//இந்த கடையைத் தாண்டி போறப்ப நான் தங்ஸ்கிட்டே சொல்றது என்னன்னா - நானும் ஒரு தடவை அந்த கடையில் புகுந்து, நீளமா இருக்கற என் மீசையை சுருள்மீசையாக்கி விடும்மான்னு அங்கிருக்கிறவங்கள கேக்கணும்.!!!//
ஆகா..:-)))))))))))))
மாலின் மலரும் நினைவுகளா???மலரட்டும்...மலரட்டும்...
அனுடன் அருணா
வாங்க ஸ்ரீதர்கண்ணன், மலர், மு-க அக்கா, நசரேயன் -> நன்றி..
வாங்க கார்க்கி -> கூடிய விரைவில் தோப்பில் வந்து ஜாயின் ஆக வாழ்த்துகள்!!!!!!!!
வாங்க வித்யா -> நன்றி...
வாங்க முரளிகண்ணன் -> அவ்வ்வ்... ரூபாய்னா ரூபாய் இல்லீங்கோ... அது டாலருங்கோ..... :-)))
வாங்க ராகி ஐயா -> ஆமாமா... எந்த புது கடை வந்தாலும், அது முன்னால் நின்றுகொண்டு ஒரு க்ளிக்... ஹிஹி.. நான் இப்படி நிறைய ஃபோட்டோ பிடித்துவிட்டு, வீட்டில் வந்து அதை அழித்துவிட்டிருக்கிறேன்!!!!!!!
வாங்க அப்துல்லா அண்ணே -> அவ்வ்வ்... அப்போ பெருமாள்ன்ற பேரோட யாராவது ஒருத்தர விமானத்துலே ஏத்து அனுப்புங்க.. தினமும் பாத்துட்டிருக்கேன்... :-))
வாங்க தாமிரா -> நன்றி...
வாங்க வெண்பூ -> ஹிஹி. இங்கே ‘stew leonards'னு ஒரு பெரிய்ய்ய்ய கடை இருக்கு. வெறும் samples சாப்பிட்டே வயிறு ரொம்பிடும். நாங்களும் அடிக்கடி போவோம்.. :-)))
வாங்க பாஸ்கர் -> ஹாஹா...
வாங்க நவநீதன் -> அவ்வ்வ்.. ஷாப்பிங் பண்றவங்களை பாப்போம்னுதானே சொல்லியிருக்கேன்.... :-(((
வாங்க டொன் லீ, பிரேம்ஜி, அன்புடன் அருணா -> நன்றி...
//நானும் ஒரு தடவை அந்த கடையில் புகுந்து, நீளமா இருக்கற என் மீசையை சுருள்மீசையாக்கி விடும்மான்னு அங்கிருக்கிறவங்கள கேக்கணும்.!!!//
ஹாஹா...ஹாஹா...
படிச்சுட்டு பின்னூட்டம் போட மறந்துட்டேன் :)))
//
”அதான் கல்யாணம் ஆயிருச்சுல்லே... அதுக்கப்புறம் என்ன பக்கத்துப் பக்கத்துலே நடக்க வேண்டியிருக்கு? ஊர் உலகத்திலே எல்லாம் இப்படியா நடக்கறாங்க?”. -- இந்த என் கூற்றை மறுக்கறவங்க கையைத் தூக்குங்க.
//
நான் கையை தூக்கல..
”மவுனம் பேசியதே” படத்தின் பாதிப்பா?? :))
சூப்பரோ சூப்பர்.உங்களுக்கு நகைச்சுவை மிக இயல்பாய் வருகிறது.
அநேகமாய் வாழ்வை "டேக் இட் ஈசி" என்று எடுத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.சரிதானா?
அடுத்த தடவையிலிருந்து பலூன் வாங்கிவிட்டு - தொலைபேசி எண் கொடுக்கும்போது - நண்பர்கள் யாராவது ஒருத்தரோட எண்ணை கொடுத்துட்டு... எஸ்கேஏஏஏப்......
//
பார்த்துக்கோங்க நண்பர்களே நம்ம மேல எம்புட்டு பாசமுன்னு
அதான் கல்யாணம் ஆயிருச்சுல்லே... அதுக்கப்புறம் என்ன பக்கத்துப் பக்கத்துலே நடக்க வேண்டியிருக்கு? ஊர் உலகத்திலே எல்லாம் இப்படியா நடக்கறாங்க?”. -- இந்த என் கூற்றை மறுக்கறவங்க கையைத் தூக்குங்க.//
நோ கமெண்ட்ஸ்
(பக்கத்துல தங்ஸ் ஸ்டேண்டிங்)
இருக்கறத வச்சிக்கிட்டு ஏன் இருக்க'முடி'யலேன்னு தெரியல!!! //
”முடியலத்துவம்” எழுதுறாரே அவரை கேட்டால் பதில் தெரியுமோ!?
நீளமா இருக்கற என் மீசையை சுருள்மீசையாக்கி விடும்மான்னு அங்கிருக்கிறவங்கள கேக்கணும்.!!!//
”ச்சின்னபையனு”க்கு மீசையா?
மேக்கப் போட்டுட்டு வர்றவங்கள வேடிக்கை பாத்துக்கிட்டே வெளியே உக்காந்திருப்பேன்.//
இதற்கெல்லாம் ஒரு நாள் வட்டியும்,முதலுமாக கிடைக்கலாம்
யூத்ஃபுல் விகடன்ல லிங்க் குடுத்திருக்காங்க.. வாழ்த்துகள்..
மாலுக்கு போகணும்னு மல்லு கட்ற மனைவிய சமாளிக்கிறது எப்படின்னு ஒரு நீள் பதிவு போட்டீங்கன்னா உலகளாவிய தமிழர்களும் அகமகிழ்ந்து பாராட்டுவார்கள்.
கல்யாணமாயிருச்சுன்னு சொல்றாங்க ஆனா அடங்க மாட்டேங்கிறாருப்பா..
;)
\\
அதனால், ஆத்திர அவசரத்துக்கு ஒரு பத்து ரூபாய் மட்டும் பாக்கெட்லே போட்டுட்டு உள்ற போயிடுவோம்.
\\
வெவுரமாத்தான்யா இருக்காங்க..:)
//தொலைபேசி எண் கொடுக்கும்போது - நண்பர்கள் யாராவது ஒருத்தரோட எண்ணை கொடுத்துட்டு... எஸ்கேஏஏஏப்......//
இது வரை எத்தனை நண்பர்களை இப்படி "அடகு" வச்சிருக்கீங்க ச்சின்னப்பையரே? :)))
வாங்க ராஜ நடராஜன் -> நன்றி...
வாங்க ஆளவந்தான் -> :-(( நான் அந்த படம் பாக்கலே... அதனால் தெரியல.... :-)))
வாங்க பட்டாம்பூச்சி -> மிகச்சரி... அதானே கரெக்டு??? :-)))
வாங்க வால் -> நன்றி...
வாங்க வெண்பூ -> நல்ல செய்தி கொடுத்ததற்கு மிக்க நன்றி...
வாங்க அறிவிலி -> அவ்வ்வ்... நீங்களே முயற்சி செய்து பாருங்களேன் அந்த பதிவு போடறதுக்கு.... :-)))
வாங்க தமிழன் கறுப்பி -> நன்றி..
வாங்க கேயாரெஸ் -> ஹிஹி... அவை கணக்கிலடங்கா... அதுக்காக அதை எண்ணிக்கை தெரியாத குற்றம்னு நினைச்சிக்காதீங்க... :-))))
Post a Comment