தமிழ்குடும்பத்தில் ஒரு அவசரக்கூட்டம்...!!!
முகு - 1: இதில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவம் அனைத்தும் கற்பனையே. அப்படியே யாரையும் குறிப்பிடும்படியாக இருந்தால், அது தற்செயலானதுதான். ***** "கண்ணுகளா, நம்ம குடும்பத்திலே மொத்தம் எவ்ளோ குழந்தைகள் இருக்குன்னு ஒரு கணக்கு பண்ணி சொல்லுங்க பாப்போம்". "எதுக்குப்பா?" "அப்ப ஓகே... ம்... மொத்தம் 25 குழந்தைங்க இருக்காங்க இப்போதைக்கு." "அந்த தொலைக்காட்சியிலே முதல் தொடரே - திருவள்ளுவர் கதைகள்னு சொல்லிடலாம். இதில் அவரோட 'காமத்துப்பால்' லேந்து ஒவ்வொரு குறளா எடுத்து அதை ஒரு வாரம் வரக்கூடிய ட்ராமாவா போடறோம். அதுக்கு கதை, வசனம் நாந்தான் எழுதுவேன்." "டேய், நாளைக்குத்தான் இறுதியான நாள். இலங்கைதான் கண்டிப்பா ஜெயிக்கணும். அதுதான் எனக்குப் பிடிக்கும். "
முகு - 2: அதே மாதிரி எந்த வசனத்தை யார் பேசினாங்கன்றது முக்கியமில்லை. என்ன பேசினாங்கன்றதுதான் முக்கியம். படிச்சிட்டு நல்லா இருந்தா சொல்லுங்க...
"யாரு இது எதிர்க்கேள்வி கேக்கறது? எல்லா குழந்தைங்க பேருலேல்யும் ஒரு தொலைக்காட்சி சேனலோ, FM-ஓ ஆரம்பிக்க வேணாமா? இன்னும் நாலைஞ்சு மாசத்துலே தேர்தல் வருது. அதுக்குள்ளே எல்லா லைசன்சும் வாங்கிடணும்."
"25ஆ? அண்ணா... கணக்கு இடிக்குதே????... ஆ... இந்த மூணு குழந்தைங்க பக்கத்து வீட்டு குழந்தைங்க. இங்கே சும்மா விளையாட வந்திருக்காங்க. அவங்கள விட்ருங்க."
"அநியாயம்... அக்கிரமம்.... இது எதிர்க்கட்சிகளின் சதி.. நம்ம வீட்டுக்குள்ளே குழந்தைகளை ஏவி, இங்கே நடக்கும் விஷயங்களை கவரப் பாக்கறாங்க... முதல்லே இவங்கள வீட்டுக்கு அனுப்புங்க.."
"அப்பா... இவ்ளோ தொலைக்காட்சி ஆரம்பிக்கிறோமே? என்னென்ன சப்ஜெக்ட்லே ஆரம்பிக்கப் போறோம்? அறிவியல், வரலாறு, ஸ்போர்ட்ஸ் இப்படியா?"
"எவ அவ? இதெல்லாம் ஆரம்பிச்சா மக்களுக்கு ஞானம் வந்துடாதா? அப்புறம் நம்ம பொழப்பு?
அப்போ என்ன சப்ஜெட்லே ஆரம்பிக்கறது?"
"சினிமா, நகைச்சுவை, பாட்டு இதெல்லாம் ஏற்கெனவே இருக்கு. வேணா 'அடல்ட்ஸ்' சேனல் ஒண்ணு ஆரம்பிச்சிடலாம். இதில் 'பெரியவர்களுக்கு' மட்டும் காட்டக்கூடிய சினிமா காட்சிகள், ட்ராமா இதெல்லாம் போடலாம்."
"அப்ப பிரச்சினையேயில்லே.. இப்ப வர்ற எல்லா சினிமாக்களையும் அந்த சேனல்லே காட்டிடலாம்... "
"இப்படியெல்லாம் செய்ய முடியுமா? மக்கள்கிட்டேந்து எதிர்ப்பு வராதா?"
"அதெல்லாம் ஒண்ணும் வராது. அதுக்கு நான் ஒரு ஐடியா வெச்சிருக்கேன். "
"என்ன அது?"
"இதெல்லாம் சரிப்படுமான்னு எனக்குத் தெரியல."
"சரிப்பட்டுத்தான் ஆகணும். நான் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன்.. ஏன்னு தெரியுமா?"
"ஏன்?"
"ஏன்னா 'பின்'லே காலு வெச்சேன்னா.. பின் - பின்னங்கால்லே குத்திடும்."
"அய்யோ தம்பி... இந்த மாதிரி மொக்கை ஜோக்கை அடிக்காதேன்னு எவ்ளோ தடவை சொல்லியிருக்கேன்..."
(சிறுவர்களுக்குள் சண்டை)
"ஆஹா. எங்கள் வீட்டு ச்சின்னச்சின்ன தொண்டர்களும் இலங்கையில் நடக்கும் போரின் நடவடிக்கைகளை கவனிக்கிறார்கள் என்று நினைக்கையில் என் மனம் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது."
"தங்கச்சி... ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா இந்த பசங்களை நினைச்சி... இனிமே நல்லா வலுவடைஞ்சிடும் நம்ம கட்சி..."
"அட.. என்னண்ணா நீங்களும் அவரைப்போலவே லூசா இருக்கீங்க... இவங்க இந்தியா - இலங்கை கிரிக்கெட் மேட்ச் பத்தி பேசறாங்க... அங்கே நடக்கும் போரைப் பத்தி இல்லே..."
"சரி சரி... எனக்கு நேரமாச்சு. நான் போகணும். எல்லாரும் கிளம்புங்க.. அடுத்த வாரம் இதே நாள் இதே நேரம் உங்களை சந்திக்கும்வரை நன்றி கூறி விடைபெறுகிறேன்... நன்றி.. வணக்கம்."
"சரிதான். நம்ம புது சேனல்லே காம்பியரிங் செய்யறதுக்கு ஒரு ஆள் கிடைச்சாச்சு" ...
(அனைவரும் கலைந்து செல்கின்றனர்).
25 comments:
:-))))))))
ச்சும்மா இருக்கமாட்டீங்களா?
ஹைய்யோ ஹைய்யோ:-))))
//
14. Seducing Dr.Lewis
//
பாத்துட்டீங்க போல, படம் எப்டி?
ஜாக்கிரதை ஆட்டோ வர போகுது :)
ஹி ஹி..ஆட்டோக்கள் ஜாக்கிரதை:)
வெளியே ஆட்டோ வர்ர மாதிரி இருக்கு பாருங்க.
சூப்பரப்பு!!!
அப்படியே என்னையும் தத்து எடுத்துக்க ஏற்பாடு செய்யமுடியுங்களா?
இதப் படிச்ச பிறகு தியாகராஜரோட "நிதி சால சுகமா?" பாட்டு ஏன் எனக்கு ஞாபகம் வருதுன்னு புரியலயே :(
மகேஷ்,
உங்களுக்குத் தெலுங்கு தெரியுமுன்னு நினைக்கிறேன். அதான் நிதி சால சுகமா? வந்தது.
தமிழ் மட்டும்தான் தெரியுமுன்னா....
'பணம் என்னடா பணம் பணம்' ஞாபகம் வந்துருக்கும்:-)))))))
ஆஹா... துளசிகோபால்...'காசேதான் கடவுளடா' பாட்டுதான் ஞாபகம் வரணும். வரும்ம்ம்ம்ம்...ஆனா...வராது :)
ஆட்டோ காலம் எல்லாம் போயாச்சு அப்பு..
வாசல்ல டாடா சுமோ / ஸ்கார்பியோ நிக்கப் போகுது பாருங்க..
ஏன்? இந்த மாதிரி வம்புகெல்லாம் போறீங்க...?
இருங்க, அழகிரி அண்ணன்கிட்ட போட்டு கொடுக்கிறேன் இந்த பதிவை பத்தி... :)
//.'காசேதான் கடவுளடா' //
No Way.....
கடவுள் இருக்கார்ன்னு அவுங்க ஒத்துக்கிட்டமாதிரி ஆகிரும்.
அப்புறம் உடன்பிறப்புகள் எப்படி இந்துக்களை ஏய்ப்பது?
வாங்க ராகி ஐயா, துளசி மேடம் -> நன்றி..
வாங்க ஆளவந்தான் -> படம் அட்டகாசம். சிபாரிசு செஞ்ச உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்....
ஆளவந்தான், வித்யா, வேலன் ஐயா -> ஹிஹி.. நான் ஆட்டோ கூப்பிடவேயில்லையே... கால் டாக்ஸிதான் கூப்பிட்டேன்... :-)))
வாங்க குசும்பன் -> ஹிஹி...முதல்லே நானு.. என் பேர் ஒரு சேனல். அதுக்கப்புறம்தான் நீங்கல்லாம். ஓகேவா????
வீட்டு முன்னாடி ஆட்டோ சத்தம் கேட்குதா பாருங்க!
வாங்க மகேஷ்ஜி, துளசி மேடம் -> உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச பாட்டுல்லாம் வரிசையா சொல்லுங்க. எங்க சேனல்லே ஒளிபரப்பறோம்... ஓகேவா... :-))))
வாங்க இராகவன் -> ஹிஹி... வம்பையே போர்வையா போத்திட்டு படுக்கறவங்க நாங்க... எப்படி????...:-)))
வாங்க சிவாஜி த பாஸ் -> அவ்வ்.... ஏன் இந்த கொல வெறி உங்களுக்கு?????
ச்சே...தமிழ்ல கேபிடல் லெட்டர்ஸ் இல்லாதது லைட்டா வரு...விடுங்க.
எஜமான்..எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். சாமி...
எல்லாத்தையும் தொகுதி வாரியா சொன்ன நீங்க...அதுக்கு தனியா தட்டு வாங்கணுமா இல்ல அ(ப்பாவி)ரசு கேபிள்ள வருமான்னு சொல்லவேயில்லயே எஜமான்...
எஜமான்....என...மீண்டும் மேலிருந்து படிக்கவும்...
மீண்டும்...
மீ...
அய்யயோ...அடிக்கறாங்க...அய்யயோ...
:-))
\\துளசி கோபால் said...
ச்சும்மா இருக்கமாட்டீங்களா?
ஹைய்யோ ஹைய்யோ:-))))//
ரிப்பீட்டேய்.. :)
:-)))))))))))))))))))
வாங்க விஜயசாரதி -> துட்டு??? முதல்லே எல்லாமே ஃப்ரீயாத்தான் காமிப்போம். அப்புறம் மொத்தமா கறந்துடுவோம்.... இது எப்படி இருக்கு.... :-)))
வாங்க தாமிரா, மு-க அக்கா, மு-க அண்ணா -> நன்றி...
/* கதை, வசனம் நாந்தான் எழுதுவேன்."
*/
டைரக்டர் நான் தான்
ஹைய்யோ ஹைய்யோ:-))))
ச்சின்னப்பையன், ஒரு அட்டன்டன்ஸ் போட்டுக்கிறேன். உங்களோட எல்லா பதிவையும் படிச்சாலும் அப்பப்ப பின்னூட்டம் போடமுடியல, ஆணி கொஞ்சம் அதிகம். ஒவ்வொரு பதிவ போட்டப்புறமும் "கலக்கல்", "சூப்பர்", "அருமை", "அற்புதம்" இதுல எதாவது ஒண்ணை நான் சொன்னதா நெனச்சிக்கோங்க... :))))
டமாஸ் மாதிரி
ஆனா டமாஸ் இல்ல :)))))
Post a Comment