Sunday, February 8, 2009

நொறுக்ஸ் - ஞாயிறு - 02/08/2009

(காட்சி 1)
"என்னங்க, என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க இவ்ளோ நேரமா?"
"பழ்ழு தேழ்ழிக்கிழுக்கேன்."
"அதுக்கு இவ்ளோ நேரமா? சீக்கிரம் வெளியே வாங்க. காபி ஆறிப்போகுது.."
"வன்ழுத்தேன். ழிவிலே ழொன்னது கேழ்ழியா. ழொம்ப நேழம் பழ்ழு தேழ்ழணும்னு ழொன்னாங்க..."
"சரி சரி. சீக்கிரம் வாங்க வெளியே..."

(காட்சி 2)
"என்னம்மா... தோசை ரெடியா? ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டிருக்கேன்.."
"அது சரி. நான் என்ன இங்கே சும்மாவா இருக்கேன். தோசை செய்துட்டுதானே இருக்கேன்.."
"சீக்கிரம் ஆவட்டும். கை காயுது பாரு."
"அப்படியே கொஞ்சம் திரும்பி பாருங்க."
(கையில் சூடாக தோசைத்திருப்பி)
"சரி சரி. நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு இவ்ளோ கோச்சிக்கறே..."

-----

மேலே இருக்கும் இரண்டு காட்சிகளும் எங்க வீட்லே நடந்ததுதான். அதில் என்ன ஸ்பெஷல், இது எல்லா வீட்லேயும் நடக்கறதுதானேன்னு சொல்றீங்களா.. அப்படி இல்லே... இதற்கான
பதில் பதிவின் கடைசியில்!!!

********

என் பிறந்த நாள், தங்ஸின் பிறந்த நாள், எங்கள் திருமண நாள், சஹானாவின் பிறந்த நாள் - இந்த நாலு நாட்களும் நான் அலுவலகத்திற்கு லீவ் போட வேண்டுமென்ற தீர்மானம் வருட
ஆரம்பத்திலேயே வீட்டில் போடப்பட்டு விடுகிறது. காலையில்/மாலையில் அல்லது அந்த நாளுக்குப் பக்கத்து வாரயிறுதியில் கொண்டாடலாமென்று கூறினால் வெளிநடப்பு(!!!)
செய்துவிடுகின்றனர்.

ஆட்சியாளர்களிடம் சொல்லி, இப்படிப்பட்ட கொண்டாட்டங்களையெல்லாம் எல்லோரும் ஜனவரி 1ம் தேதிதான் கொண்டாட வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கச் சொல்ல வேண்டும். என்ன சொல்றீங்க?.... அவ்வ்வ்..

*****

நண்பர்களுடன் பேசவேண்டியிருந்தால், அவர்களை ஒரு குறிப்பிட்ட நேரத்தைச் சொல்லி, சரியா அந்த நேரத்திற்கு தொலைபேசச் சொல்வேன். (அதாவது - பேசுவதற்கு
‘அப்பாயிண்ட்மெண்ட்'!!!) அது எதுக்குன்றீங்களா???

நாமும் நிறைய வீட்டு வேலை (பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல்) போன்ற வேலைகளை செய்கிறோம் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டேன் என்கிறார்கள். அதனால், நாம் வேலை செய்யும் நேரமாகப் பார்த்து அவர்கள் தொலைபேசினால், அவர்கள் இரு நிமிடம் காத்திருக்க வைத்துவிட்டோ அல்லது (சத்தத்துடன்) அந்த வேலை செய்துகொண்டோ அவர்களிடம் பேசி - நான் வேலை செய்ததை ‘வரலாற்றில்' இடம்பெறச் செய்வதற்காகத்தான். ஏன்னா, வரலாறு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியம். சரிதானே????

*****

ஒரு வாரம் டென்ஷனாய் கழிந்தபிறகு ஒரு வழியாக இன்று பூச்சாண்டிக்கு 50-வது ஃபாலோயர் கிடைத்தார். ஃபாலோயர் எல்லோரும் பின்னூட்டம் போடுவதில்லை.. பின்னூட்டம்
போடுறவங்கெல்லாம் ஃபாலோயரா இருக்கறதில்லை - இந்த வாதமெல்லாம் ஓகே என்றாலும், நான் கூட 50 அடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால், முதல் 49 ஃபாலோயர்களுக்கு
நன்றி.. நீங்க இல்லேன்னா எனக்கு 50 கிடைச்சிருக்காது. 50வது நண்பருக்கு மிக்க நன்றி!!!

*****

முதலில் சொன்ன ரெண்டு காட்சிகளிலும் நாங்க சாதாரணமா பேசிக்கிட்ட மாதிரி தெரியும். ஆனா. ஒவ்வொரு வாக்கியத்துக்குப் பிறகும் 'ஓவர்'னு சொல்லிப் பாருங்க.... கரெக்ட். நண்பர்
ஒருவர் தன் மகனின் பிறந்த நாளுக்கு சஹானாவுக்கு, சிறுவர்கள் விளையாடும் வாக்கி-டாக்கி ஒன்று பரிசாகக் கொடுத்தார். இப்பல்லாம் வீட்லே (இருக்கறதே மொத்தமே ரெண்டு
அறைதான்!!!) அந்த வாக்கி-டாக்கியில்தான் பேசறதே..... :-)))

பிகு: அவ்வ்வ்.... இதெல்லாம் ரொம்ப 'ஓவர்' - அப்படின்னு வர்ற பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்!!!

24 comments:

ஆளவந்தான் February 8, 2009 at 9:34 PM  

இதெல்லாம் ரொம்ப ரொம்ப 'ஓவர்' ( கவனிக்க ரெண்டு ”ரொம்ப”)

முத்துலெட்சுமி/muthuletchumi February 8, 2009 at 10:09 PM  

சிறுவர்கள் விளையாடன்னு சொல்லி தானே குடுத்தாங்க..அதைவச்சிட்டு இந்த விளையாட்டா.. சஹானா எப்படி இதுக்குஅனுமதிகொடுத்தா..? அவளோடத வச்சிட்டு இப்படி நீங்க பெரியவங்க விளையாடற்து ஓவர் தான்.. :)

ஸ்ரீதர்கண்ணன் February 8, 2009 at 10:31 PM  

ஃபாலோயர் தான் உங்க பிரச்சினையா நான் வரேன் தலைவா ... 52 வது ஆ ..... :)))))))

இதுக்கு போய் பீல் ஆகலாமா ச்சின்னப் பையன் சார்.....

Vidhya Chandrasekaran February 8, 2009 at 11:06 PM  

\\நண்பர்களுடன் பேசவேண்டியிருந்தால், அவர்களை ஒரு குறிப்பிட்ட நேரத்தைச் சொல்லி, சரியா அந்த நேரத்திற்கு தொலைபேசச் சொல்வேன்\\

அவங்களும் பாத்திரம் தேச்சிட்டுத்தான் இருப்பாங்க:))

ராம்.CM February 9, 2009 at 12:07 AM  

நல்லாயிருந்தது...

அருப்புக்கோட்டை பாஸ்கர் February 9, 2009 at 12:10 AM  

//ஃபாலோயர் எல்லோரும் பின்னூட்டம் போடுவதில்லை//


மிக சரி !
நான் எல்லா பதிவையும் படித்துவிடுகிறேன் .
ஆனால் கருத்து சொல்வது ஒன்றிரண்டுக்குதான் !
:-)

வால்பையன் February 9, 2009 at 1:32 AM  

இதெல்லாம் ரொம்ப ஓவரு!

தாரணி பிரியா February 9, 2009 at 1:45 AM  

காட்சி 1 : என்ன பல்லு தேச்சுட்டுதான் காபி குடிப்பிங்களா :(
காட்சி 2 : தங்கமணி தோசை சுடணுமா?

என்ன கொடுமை இது?
****

நீங்க வேலை செய்யறது இப்ப பதிவாவே ஆகிபோச்சுதானே. வரலாறுல இடம் பிடிச்சுட்டிங்க ச்சின்னப்பையன்

****

நானெல்லாம் கரீட்டா பின்னூட்டம் போடற பாலோயராக்கும்.

****

ஓவர் :)

வெண்பூ February 9, 2009 at 1:51 AM  

//
அந்த நாளுக்குப் பக்கத்து வாரயிறுதியில் கொண்டாடலாமென்று
//

எங்க வீட்டில் இப்படித்தான், ஒரே வித்தியாசம் என்னோட பிறந்தநாள் மட்டும் மைனஸ்.. :))))

50க்கு வாழ்த்துகள்..

என்னது வீட்டுக்குள்ளயே வாக்கி டாக்கியா அதுவும் பாத்ரூம்ல பல்லு விளக்கும்போதா? ஹி..ஹி.. பல்லு விளக்கும்போது மட்டுமா இல்லை.....

pudugaithendral February 9, 2009 at 2:22 AM  

ஓவரத்தான் இருந்தாலும் நல்லா இருக்கும்

முரளிகண்ணன் February 9, 2009 at 3:10 AM  

ரொம்ப ஓவர் இல்லை பேபி ஓவர்

\\எங்க வீட்டில் இப்படித்தான், ஒரே வித்தியாசம் என்னோட பிறந்தநாள் மட்டும் மைனஸ்.. :))))
\\

:-((((

நவநீதன் February 9, 2009 at 3:21 AM  

ஒரு ஓவருக்கு ஆறு பால் தானே...!

(காட்சி 1)
"என்னங்க, என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க இவ்ளோ நேரமா?"
"பழ்ழு தேழ்ழிக்கிழுக்கேன்."
"அதுக்கு இவ்ளோ நேரமா? சீக்கிரம் வெளியே வந்து காபி போட்டு கொடுங்க .."

உண்மைய சொல்லுங்க....முதல் காட்சி இப்படித்தானே உண்மையில நடந்துச்சு...

இராகவன் நைஜிரியா February 9, 2009 at 3:42 AM  

// ஒரு வாரம் டென்ஷனாய் கழிந்தபிறகு ஒரு வழியாக இன்று பூச்சாண்டிக்கு 50-வது ஃபாலோயர் கிடைத்தார். ஃபாலோயர் எல்லோரும் பின்னூட்டம் போடுவதில்லை.. பின்னூட்டம்
போடுறவங்கெல்லாம் ஃபாலோயரா இருக்கறதில்லை - இந்த வாதமெல்லாம் ஓகே என்றாலும், நான் கூட 50 அடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால், முதல் 49 ஃபாலோயர்களுக்கு
நன்றி.. நீங்க இல்லேன்னா எனக்கு 50 கிடைச்சிருக்காது. 50வது நண்பருக்கு மிக்க நன்றி!!!//

50 ஃபாலோயருக்கு மேல் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

மேன் மேலும் பெறவும் வாழ்த்துக்கள்

பரிசல்காரன் February 9, 2009 at 4:16 AM  

50க்கு வாழ்த்துகள். 50க்காக 49பேருக்கும் நன்றீ தெரிவித்த உங்கள் பண்புக்கு நன்றி.

//ஆட்சியாளர்களிடம் சொல்லி, இப்படிப்பட்ட கொண்டாட்டங்களையெல்லாம் எல்லோரும் ஜனவரி 1ம் தேதிதான் கொண்டாட வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கச் சொல்ல வேண்டும். என்ன சொல்றீங்க?.... அவ்வ்வ்..//

வகைதொகையில்லாமல் வழிமொழிகிறேன்!! (பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா!)




என்னமோ கேள்விப்பட்டேனே.. உண்மையா? (கூப்பிடுங்க சொல்றேன்..)

Thamira February 9, 2009 at 6:07 AM  

ஜாலி தங்கமணின்னு நெனைக்குறேன்.. குடுத்து வ‌ச்ச ஆளு.. ஓவர்.!

சின்னப் பையன் February 9, 2009 at 7:09 AM  

வாங்க ஆளவந்தான் -> ஹாஹா... ரொம்ப ரொம்ப.... சமீபத்துலே 'ஏக் துஜே கே லியே' பாத்தீங்களா????:-))))

வாங்க மு-க அக்கா -> ஹாஹா.... அக்கா... எந்த பொருளையும் வீணாக்காமே பயன்படுத்தறோம்னு சொல்ல வந்தா..... :-)))

வாங்க ஸ்ரீதர்கண்ணன் -> ஹிஹி... இது காசு குடுத்து சேத்த கூட்டமில்லே... விஷ்க்... விஷ்க்... இது அன்பாலே சேந்த கூட்டம்...விஷ்க்.. விஷ்க்.. விஷ்க்... அப்படின்னு கண்ணித்திரைக்கு முன்னாலே சொல்ல வாய்ப்பளித்ததற்கு உங்களுக்கும் நன்றி... :-)))

வாங்க வித்யா -> அவ்வ்வ்... பாத்திரத்தோடு பாத்திரமா ஒன்றியவங்க பேசிக்கிட்டா தப்பா.... சொல்லுங்க சொல்லுங்க... :-)))

சின்னப் பையன் February 9, 2009 at 7:13 AM  

வாங்க ராம்.CM -> நன்றி...

வாங்க பாஸ்கர் -> சரி சரி... அப்போ கந்தசாமியா மாறிக்கிட்டு வர்றீங்கன்னு சொல்லுங்க... (ஒன்லி டமாஷ்!!!) ஹிஹி... :-)))

வாங்க வால் -> சரிங்க... ஓவர்...:-))

வாங்க தாரணி பிரியா -> ஹிஹி.. அடுத்து ஒரு நல்ல கல்வெட்டா பாக்கணும்... அது ஒண்ணுதான் பாக்கி.... ஓவர்... :-)))

சின்னப் பையன் February 9, 2009 at 7:18 AM  

வாங்க வெண்பூ -> ஹிஹி.. .இதெல்லாம் இவ்ளோ வெளிப்படையாவா கேக்கறது????

மீண்டும் வந்துட்டீங்க.... இந்த வாரம் கூப்பிடறேன்....

வாங்க புதுகை தென்றல் அக்கா -> நீங்க ஒருத்தர்தான் ஓவர் நல்லா இருக்குன்னு சொல்லியிருக்கீங்க..... மத்த எல்லாரும் ரொம்ம்ம்ம்ம்ப ஓவர்னுட்டாங்க.... அவ்வ்வ்.... நன்றி...:-))))

வாங்க முரளிகண்ணன் -> நன்றி..

நசரேயன் February 9, 2009 at 10:27 AM  

நான் இதெல்லாம் ஓவர்ன்னு சொல்ல மாட்டேன்

சின்னப் பையன் February 9, 2009 at 12:02 PM  

வாங்க நவ நீதன் -> அவ்வ்வ்... உண்மையை சொல்ல வேண்டிய நேரம் இன்னும் வரலே... அதனால் நான் ஒண்ணும் சொல்லலே.... :-)))

வாங்க இராகவன் -> வாழ்த்திற்கு மிக்க மிக்க நன்றி...

வாங்க பரிசல் -> 49 பேர் இல்லேன்னா அந்த 50 இல்லீங்களே.... அதுக்காகத்தான்...
அப்போ அந்த சட்டத்தை உடனே போட்டுடலான்றீங்க.... அதானே...... ஓகே...

வாங்க தாமிரா -> மிக்க நன்றிங்க... ஓவர்...

ILA (a) இளா February 9, 2009 at 12:35 PM  

ஓவர், அடுத்தவங்களை போடச்சொல்லுங்க. Over- Over- Over-

சின்னப் பையன் February 9, 2009 at 3:00 PM  

வாங்க ராகி ஐயா, நசரேயன், இளா -> நன்றி...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP