நொறுக்ஸ் - செவ்வாய் - 02/25/2009
"இவ்ளோ பெரிசா வளர்ந்திருக்கியே? இன்னுமா இப்படி?" - அப்படின்னு ஒரு பத்து பேரு சுத்தி நின்னு உங்களை கேட்டாங்கன்னா எப்படி இருக்கும்? - என்னோட அனுபவம் கீழே...
*****
ஒரு வாரம் பதிவு எதுவும் போடலேன்னா நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அந்த நாலு பேரும் பேசிக்கிட்டே, கோச்சிக்கிட்டு ஃபாலோயர் பட்டியலிலிருந்து போயிடுவாங்கன்னு இப்பத்தான் கேள்விப்படறேன்... அவ்வ்வ்... போன வாரம் 61ன்னு இருந்தது இன்னிக்கு 57 ஆயிடுச்சு... அதனால், விடாமே எழுதி தமிழுக்கு மறுபடி தொண்டாற்றலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. எனக்கென்ன போச்சு... படிக்கறவங்களுக்குத்தானே கஷ்டம்!!!!
*****
அலுவலக நேரத்துலே வெளியே போய் ஷாப்பிங் பண்ற சுகமே தனி... என்ன சொல்றீங்க? ஆனா அது யாருக்கும் தெரியாத மாதிரி பண்ணனும்.
ஒரு தடவை இப்படித்தான், நண்பன் சொன்னான்னு அலுவலகத்திலிருந்து கிளம்பி ஷாப்பிங் செய்ய போயாச்சு. ஒரு மணி நேரம் சுற்றிவிட்டு கடகடன்னு திரும்ப வந்தாக்கா, அலுவலக வாசல்லே எங்களுக்கு பலத்த வரவேற்பு. அந்த கட்டிடத்தில் இருக்கும் 200-250 பேரும் வெளியே நிக்கறானுவ. வரும்போதே எங்க மேனேஜர் எங்களை பாத்துட்டாரு. சிரிச்சிக்கிட்டே அவர்கிட்டே போனாக்கா - அரை மணி நேரமா வெளியேதான் நிக்கறோம். fire alarm அடிச்சிருந்துச்சு... நீங்க எப்போ வெளியே போனீங்கன்னாரு...
”ஹிஹி... இப்படி வெளியே நிற்க போரடிச்சுது... இப்பத்தான் ஒரு பத்து நிமிஷம் முன்னாடி போனோம்”னு சொல்லி சமாளிச்சோம்....!!!
*****
எல்லாரும் நிறைய பேசிட்ட நம்ம தல ஏ.ஆர்.ஆர் பற்றிய செய்திதான். விருது வழங்கும் விழாவை பார்த்துக் கொண்டிருந்தபோது நான் (கண்டிப்பா நிறைய பேரும்) நினைத்தது, உணர்ந்தது எல்லாத்தையும் உணர்ச்சிபூர்வமா அப்படியே தன் பதிவில் சொல்லியிருக்காரு இவரு. அட்டகாசமா இருக்கு. இங்கே போய் பாருங்க. நண்பர் பேரு விஜயசாரதி.
*****
நான் பொறந்து வளர்ந்ததும் தமிழ்நாட்லேதான். ஒரு நல்ல குடும்பத் தலைவனா கொஞ்ச நாள் இருந்தது தமிழ்நாட்லேதான். இந்திய வாக்காளர் அடையாள அட்டையும், அரசு வழங்கியிருக்கும் ரேசன் அட்டையும் என் பேர்லே இருக்கு. எங்க வீட்லே ஒரு மூணு பேரு இருக்கோம். குறைந்த பட்சம் ஒரு கலைமாமணி அவார்டாவது கொடுப்பாங்களான்னு யாராவது சொல்லுங்க. அதுக்கு எங்கே அப்ளை பண்ணணும்னு ஏதாவது உரல் கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்.
முதல் ரெண்டு நாளா எல்லார்கிட்டேயும் ரஹ்மான் ரஹ்மான்னு பொலம்பிக்கிட்டிருந்தேன்னா, இப்போ ரெண்டு நாளா ஐஸ்வர்யா தனுஷ்னு பொலம்பிக்கிட்டிருக்கேன்.. முடியல சாமி... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
*****
தமிழ்மண முகப்பு கீழ் பகுதியில், 'அனுபவம்' தொகுப்பில் ஒரு பதிவு ரொம்ம்ம்ம்ம்ப நாளா அப்படியே இருக்குன்னு நினைக்கிறேன். யாராவது பாத்திருக்கீங்களா????? கீழே படத்துலே வட்டம் போட்டு காட்டியிருக்கேன்... ஒரு ஜெனெரல் நாலெட்ஜ்காக தெரிஞ்சிக்கலாமேன்னுதான் கேக்கறேன்.
*****
ரெண்டு வருஷத்துக்கு முன் ஒரு நீண்ட பயணம் போனபோது ஓய்வுக்காக ஒரு உணவகத்துலே நின்றோம். சஹானாவுக்கு டயபர் (diaper) மாத்தணும்னு சொன்னதால், அவரையும் கூட்டிக்கிட்டு ஒரு டயபரையும் எடுத்துண்டு, 'பராக்கு' பாத்துக்கிட்டே போகும்போது அந்த டயபர் என் பாக்கெட்லேந்து கீழே விழுந்துடுச்சு. அங்கேயிருந்த ஒரு குறும்புக்கார தாத்தா ஒருத்தரு - "அண்ணே, உங்க டயபர் கீழே விழுந்துடுச்சு பாருங்க"ன்னு கத்தி சொல்லிட்டாரு. நான் திரும்பி பாக்கறதுக்குள்ளே, என்னை ஒரு பத்து பேரு பாத்துட்டாங்க.
எல்லார்கிட்டேயும் போய் - அண்ணே, அது நான் போட்டிருந்திருக்கலே... என் பாக்கெட்லேந்துதான் விழுந்துச்சு. நம்புங்க - ன்னு சொல்லிட்டிருக்கவா முடியும்?. அந்த தாத்தாக்கு 'நற நற'ன்னு ஒரு நன்றி சொல்லிட்டு, மத்தவங்களுக்கு ஒரு 'ஹிஹி' சொல்லிட்டு அந்த இடத்தை விட்டு ஓடிட்டேன். வேறே என்ன பண்றது????
*****
31 comments:
வாங்க ஒரு வாரமா நீங்க இல்லாம ரொம்ப போரடிச்சிருச்சு.
பதிவை படிச்சிட்டு வந்துர்றேன்.
///கலைமாமணி அவார்டாவது கொடுப்பாங்களான்னு யாராவது சொல்லுங்க. அதுக்கு எங்கே அப்ளை பண்ணணும்னு ஏதாவது உரல் கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்//.
எனக்கும் தேவைப்படுது.விவரம் தெரிந்தவர் தெரிவிக்கவும்
//அலுவலக நேரத்துலே வெளியே போய் ஷாப்பிங் பண்ற சுகமே தனி... என்ன சொல்றீங்க? //
அதுசரிதான்!!!
ஃபாலோயர் பத்தின உங்க வருத்தம், எழுதாததினால இல்ல சத்யா. பல சமயம் நான் நண்பர்கள்கிட்ட சொல்றதுண்டு... அதாவது நான் ரெண்டு, மூணுநாள் எழுதலைன்னா ரெண்டு பேர் சேர்ந்திருப்பாங்க. ‘ஓ! நீ எழுதறதவிட, எழுதாம இருந்தாத்தான் சரி'ங்கறாங்க போலன்னு நெனைச்சுப்பேன்.
ஃபாலோயர் ரிலீவ் ஆனது வேற ஏதோ மேட்டர். என்னன்னு தெரியல. எனக்கு திங்கள் கிழமை ஒரே நாள்ல 9 பேர் எஸ்கேப்பூ! கரண்ட் போன உடனே பக்கத்து வீட்டை எட்டிப் பார்க்கறா மாதிரி, சில நண்பர்கள்கிட்ட ஃபோன் பண்ணி கேட்டப்போ சேம் ப்ளட்னு தெரிஞ்சது. அவங்கவங்க எண்ணிக்கைக்கு தகுந்த மாதிரி குறைஞ்சிருக்காங்க். 5,4ன்னு.
சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிடணும்!
இல்லீன்னா, சேரறது ஈஸி, ரிலீவ் ஆகறதுக்கு நம்ம பர்மிஷன் கேட்கறா மாதிரி பண்ணணும்!!!!!
/ அவ்வ்வ்... போன வாரம் 61ன்னு இருந்தது இன்னிக்கு 57 ஆயிடுச்சு//
சேம் ப்ளட் தல.. யார் அந்த நாலு பேர்?
உங்களுக்காவது பரவாயில்ல, எனக்கு கிடைச்ச பத்து முத்துக்கள், இன்னிக்கு காலையில் பார்த்தா ஒண்ணு கூட இல்ல ,இதுக்கு என்ன பண்றது??
எங்க வீட்லே ஒரு மூணு பேரு இருக்கோம். குறைந்த பட்சம் ஒரு கலைமாமணி அவார்டாவது கொடுப்பாங்களான்னு யாராவது சொல்லுங்க. அதுக்கு எங்கே அப்ளை பண்ணணும்னு ஏதாவது உரல் கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்.
எனக்கும் அதே சந்தேகம் தான் ப்ளீஸ் யாராவது சொல்லுங்களேன் :)))))))))
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
ரிப்பீட்டு ரிப்பீட்டு ......
/ போன வாரம் 61ன்னு இருந்தது இன்னிக்கு 57 ஆயிடுச்சு... /
எனக்கு 101 லிருந்து 97
என்ன தான் நடக்குது இங்கே!
// குறைந்த பட்சம் ஒரு கலைமாமணி அவார்டாவது கொடுப்பாங்களான்னு யாராவது சொல்லுங்க. அதுக்கு எங்கே அப்ளை பண்ணணும்னு ஏதாவது உரல் கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்.//
அப்பிளிகேசன் தேவையில்லை
கலைஞர் வாழ்க!
என்று தினம் 108 முறை மந்திரம் சொல்ல வேண்டும்.
யார் தி.மு.க வை திட்டினாலும் உடனே வரிஞ்சி கட்டி சண்டைக்கு செல்ல வேண்டும்.
குறைந்த பட்சம் ஒரு கோடி கட்சி வளர்ச்சி!? நிதி கொடுக்க வேண்டும்.
அடித்த வருடம் நீங்க தான் கலைமாமணி!
இதுக்கே இப்படியா அடுத்த வருஷம் தனுஷ் பத்மஸ்ரீ வாங்குவாரு..
அப்ப என்ன சொல்லுவிங்க..
ஃபாலோயருக வரதும் போறதும் சகஜம்ணே... எனக்கும் ஒண்ணும் பெரிய அளவுல இல்லாட்டாலும் அதுலயே 3-4 பேரு காணாமப் போய்ட்டாங்க. :))
கலைமாமணிக்கு உரல் வேணுமா? இருங்க உலக்கையும் சேத்துத் தரேன். விருது குடுக்காதவங்க தலைய உரல்ல வெச்சு நல்லா நச்சுன்னு இடிச்சுடுங்க. :))
"கலைமாமணி" ச்சின்னப்பையன், டயபரை தவற விட்ட ச்சின்னப்பையன், வேலை நேரத்துல ஊரைச்சுத்துன ச்சின்னப்பையன் வாழ்க !!
போதுமா பட்டம் ?
சுவையான தீனி
:))
வாங்க பிரேம்ஜி, ராகி ஐயா, குசும்பன் -> நன்றி..
வாங்க பரிசல் -> கண்டிப்பா ஏதாவது செய்யணும் பாஸு..... :-)))
வாங்க கார்க்கி -> தெரியலியேப்பா... :-)
வாங்க பாபு -> ஏதாவது உண்ணாவிரதம் இருந்து பாக்கலாம்னு தோணுது.. என்ன சொல்றீங்க????
வாங்க ஸ்ரீதர்கண்ணன் -> நன்றி..
வாங்க கலைமாமணி வால் -> முயற்சி பண்றேங்க.... மிக்க நன்றி யோசனை சொன்னதுக்கு... :-))
வாங்க வினோத் -> ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு????
வாங்க மகேஷ்ஜி -> அடுத்தது ஏதாவது மொக்கை ஜோக்ஸை சொல்லிட்டிருந்தா பத்மஸ்ரீ பட்டமும் கொடுத்திடுவாங்கல்லே!!!!
வாங்க முரளிகண்ணன், வித்யா -> மிக்க நன்றி...
:) :)
//அப்பிளிகேசன் தேவையில்லை
கலைஞர் வாழ்க!
என்று தினம் 108 முறை மந்திரம் சொல்ல வேண்டும்.
யார் தி.மு.க வை திட்டினாலும் உடனே வரிஞ்சி கட்டி சண்டைக்கு செல்ல வேண்டும்.
குறைந்த பட்சம் ஒரு கோடி கட்சி வளர்ச்சி!? நிதி கொடுக்க வேண்டும்.
அடித்த வருடம் நீங்க தான் கலைமாமணி!//
இது உண்மைன்னா பதிவர்கள்ள ஒரு பத்துப் பேரு குறைந்தபடசம் மூனு பேராவது கமாமணியாக ஆகீருக்கனுமே? (வேணும்னுதான் லை போடலை)
//ஃபாலோயர் ரிலீவ் ஆனது வேற ஏதோ மேட்டர். என்னன்னு தெரியல. எனக்கு திங்கள் கிழமை ஒரே நாள்ல 9 பேர் எஸ்கேப்பூ! கரண்ட் போன உடனே பக்கத்து வீட்டை எட்டிப் பார்க்கறா மாதிரி, சில நண்பர்கள்கிட்ட ஃபோன் பண்ணி கேட்டப்போ சேம் ப்ளட்னு தெரிஞ்சது. அவங்கவங்க எண்ணிக்கைக்கு தகுந்த மாதிரி குறைஞ்சிருக்காங்க். 5,4ன்னு.//
Same blood...
last weekla 5 per marainjitaanga :)
Naan kooda mootha pathivarna yaarunu ketathaala thaan es aagitaanganu ninaichikiten :)
//
ஒரு வாரம் பதிவு எதுவும் போடலேன்னா நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.
//
நானும் கேக்கணும்னு தான் இருந்தேன் :)
கூட்டி கழிச்சு பாக்கும் போது இந்த மாதத்துக்குறிய கோட்டா முடிஞ்ச மாதிரி தெரிஞ்சுது :))))
//
ஒரு நல்ல குடும்பத் தலைவனா கொஞ்ச நாள் இருந்தது தமிழ்நாட்லேதான்
//
இதை நீங்க எப்படி சொல்லலாம்.. We require a certificate from thangs :)))
//
ஒரு நல்ல குடும்பத் தலைவனா கொஞ்ச நாள் இருந்தது தமிழ்நாட்லேதான்
//
இதை நீங்க எப்படி சொல்லலாம்.. We require a certificate from thangs :)))
வாங்க நவ நீதன் -> நன்றி..
வாங்க வேலன் ஐயா -> ஹாஹா... சரியா சொன்னீங்க....
வாங்க வெட்டி -> நல்ல வேளை சொன்னீங்க... நான் 'அந்த' கேள்விய மட்டும் கேக்கவே மாட்டேன்... :-)))
வாங்க ஆளவந்தான் -> அவ்வ்வ்... அதெல்லாம் 'அவிங்க' எழுத்துலே தரவே மாட்டாங்களே!!!
என்னாது டயாப்பர் போட்டுட்டீங்களா? (கீழேதான்)(ஒன்லி ஒன் மீனிங்)
இங்க வயசானவங்களுக்கும் diaper இருக்கு, ஒரு வேளை அது அந்த தாத்தா diaper இருக்குமோன்னு நினைச்சு இருப்பாரு
follower ஆனா திரும்ப எடுக்க முடியாத படி ஒரு வழி செய்ய கூகிள் குழுமத்திற்கு விண்ணப்பம் அனுப்பனும்
அந்த டயப்பர் மேட்டரும், கலைமாமாமணி மேட்டரும் நகைச்சுவையின் உச்சம்.
அதி சரி டயப்பர் எந்த பாக்கெட்டிலிருந்து விழுந்தது? பேண்ட்டா சர்ட்டா?
உங்க ஹி..ஹி..ய மார்த்தா அநேகமா அது பேண்ட்டாத்தான் இருக்கணும்னு தோணுது..சரியா?
சொல்ல மறந்துட்டேனே...எங்க வீட்டுக்கு மொக்குமாவு விக்கற கன்னியம்மாவுக்கு கலைமாமணி கிடைச்சிருக்கறதா சொல்லி வருத்தப்பட்டுகிட்டா..என்னத்த சொல்ல?
இத பத்தி ஒரு பதிவ போடறேன் படிங்க...
அண்னே என் பிளாக்கிலும் நாலு ஃபாலோயர்ஸ் அப்பீட்டு
:((
(நம்ப இரண்டு பேருரோட லட்சனம் நாலு பேருக்கு மட்டும்தான் தெரிஞ்சு இருக்கு!சந்தோஷப்படுங்க)
:)
அவ்வ்வ்... போன வாரம் 61ன்னு இருந்தது இன்னிக்கு 57 ஆயிடுச்சு...// இது எனக்கும் நடக்குது பாஸ்.!
இப்பத்தான் ஒரு பத்து நிமிஷம் முன்னாடி போனோம்// ரொம்ப புத்திசாலி பாஸ் நீங்க.. நமக்கு அவ்வளவா பத்தாது.
அப்புறம் கலைமாமணி, டயாபர்.. அத்தனையும் அட்டகாசம்.!
சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிடணும்!
இல்லீன்னா, சேரறது ஈஸி, ரிலீவ் ஆகறதுக்கு நம்ம பர்மிஷன் கேட்கறா மாதிரி பண்ணணும்! ///
ஹாஹா.. சூப்பர் ஐடியா.!
Post a Comment