டாக்டர் விஜயின் அடுத்த படம் - காலு.. The Golden Leg...
ஒரு மருத்துவமனையில் ஒரு பெண் புலம்பிக் கொண்டிருக்கிறார்.
"உடனே பத்தாயிரம் கொடுத்தாதான் ஆபரேஷன் பண்ணுவேன்னு இந்த டாக்டர் சொல்றாரு. இப்போ நான் பணத்துக்கு எங்கே போவேன். யார்கிட்டே கேப்பேன்?".
அங்கிருந்து ஒருவர் வந்து அந்த பெண்ணிடம் ஒரு கைபேசியை கொடுக்கிறார் - "இந்தாங்கம்மா, நம்ம வேலு இதை கொடுத்தார். நீங்க அவருக்கு உடனே இந்த தொலைபேசியில் ஒரு கால் போட்டு, அந்த டாக்டர்கிட்டே கனெக்ட் பண்ணி கொடுங்க. அப்புறம் எல்லாம் சரியாயிடும். கவலைப்படாதீங்க".
"ஐயா, அந்த வேலு எங்கிருந்தாலும் நல்லாயிருக்கணும். நான் இப்பவே கால் பண்றேன்".
*****
திருமண மண்டபத்தில் பெண்ணின் தந்தை பையனின் தந்தையிடம் கெஞ்சுகிறார்.
"ஐயா, இப்படி கடைசி நிமிஷத்திலே வந்து ஒரு லட்சம் கொடுத்தாத்தான் கல்யாணம் நடக்கும்னா எப்படிங்க? இன்னும் ஒரு மாசத்திலே என் தலையை அடகு வெச்சாவது நான் ஒரு லட்சம் புரட்டித் தர்றேன்னு சொன்னேனே? தயவு செய்து உங்க பையனை தாலி கட்டச் சொல்லுங்க".
"அதெல்லாம் முடியாது. டேய். எழுந்திருடா. இந்த கல்யாணம் நடக்காது".
அங்கிருந்து ஒருவர் வந்து பெண்ணின் தந்தையிடம் ஒரு கைபேசியை கொடுக்கிறார். "ஐயா, இந்தாங்க. நம்ம வேலு இதை கொடுத்தனுப்பிச்சாரு. நீங்க உடனே அவருக்கு இதிலேந்து ஒரு காலைப் போட்டு அந்த ஆளிடம் கனெக்ட் பண்ணிக் கொடுங்க. எல்லா பிரச்சினையும் சரியாயிடும். வருத்தப்படாதீங்க".
"தம்பி. உடனே பண்றேம்பா. உடனே பண்றேன்.. என் பொண்ணுக்கு வாழ்க்கையைத் தந்த அந்த வேலுத்தம்பி எங்கிருந்தாலும் மகராசனா இருக்கணும்".
*****
"எல்லாருக்கும் இப்படி செல்ல குடுத்து உதவி பண்றாரே நம்ம வேலு... இப்ப அவரு எங்கே இருக்காரு?"
"இன்னிக்கு என்ன நாளு! நம்ம ராயபுரம் டீமுக்கும் ராயப்பேட்டை டீமுக்கும் கால்பந்து இறுதிப் போட்டி. அண்ணந்தான் ராயபுரம் டீமுக்கு தலைவர். அங்கேதான் இருப்பார்".
*****
கால்பந்து மைதானம். ஒருத்தர் கால்களை மட்டும் க்ளோசப்பில் காட்டுகிறார்கள் (அது விஜயின் கால்கள்தான்னு நமக்கு ஏற்கனவே தெரியும்!!!).
இன்னும் ஒரே ஒரு கோல் போட்டால், அந்த கால் பார்ட்டியின் அணி கோப்பையை வென்று விடும். அனைவரும் தயாராக, நம் ஆளும் பெனால்டி ஷாட் அடிக்க தயாராகிறார்.
ஒரு பத்தடி பின்னால் தள்ளிப்போய் அங்கிருந்து பந்தை நோக்கி ஸ்லோ மோஷனில் ஓடிவருகிறார். அவர் வைக்கும் ஒரு காலடிக்கும் - பூகம்பமும், எரிமலை வெடிக்கும் எஃபெக்ட் காட்டப்படுகிறது - அரங்கத்தில் அனைவரும் வேலு, வேலு என்று கத்திக்கொண்டிருக்க - பின்னணி இசையில் காலு, காலு என்று இசைக்கப்படுகிறது.
பந்தின் பக்கத்தில் வரும்போது, திடீரென்று அவர் கைப்பேசி அடிக்கிறது. ஓடிக்கொண்டே அதை எடுத்துப் பார்க்கிறார். ஒரே சமயத்தில் இரண்டு (தொலைபேசி) கால்கள் வருகிறது. (லாஜிக்கையெல்லாம் மறந்துடுங்க!!!).
அந்த தொலைபேசி கால்கள் எங்கிருந்துன்னு எல்லோருக்கும் தெரியும். ஒண்ணு, மருத்துவமனையிலிருந்து.. இன்னொண்ணு கல்யாண மண்டபத்திலிருந்து.
விஜய் எப்படி இந்த பிரச்சினைகளை சமாளிப்பார், கோல் போடுவாரா, ஆட்டத்தில் வெல்வாரா - இப்படி ஏகப்பட்ட கேள்விகளுடன், படம் பார்க்கும் மக்கள் படபடப்பில் சீட்டின் நுனிக்கே வந்துவிடுகின்றனர்.
'டக்'கென்று விஜய் அந்த கைப்பேசியை தூக்கி மேலே போடுகிறார். அது கீழே வரும்போது, தன் காலால் அதை எட்டி உதைக்க, அது பறந்து போய் பந்தின் மேல் பட்டு, பந்து பறந்து போய் கோல்போஸ்டில் விழுகிறது.
இப்போது திரைப்பட ஸ்க்ரீனை மூன்றாக பிரித்துக் காட்டுகின்றனர்.
முதல் ஸ்க்ரீனில்:
மைதானம்: கோல் போட்ட விஜயை எல்லோரும் தூக்கி வெற்றியை கொண்டாடுகின்றனர். பயங்கர ஆரவாரம்.
இரண்டாவது ஸ்க்ரீனில்:
மருத்துவமனை: கைப்பேசியை எட்டி உதைத்த விஜயின் கால், டாக்டரின் கையில் இருக்கும் கைப்பேசியிலிருந்து வெளியே வந்து அவரை எட்டி உதைப்பதுபோல் பயமுறுத்துகிறது.
பயந்து போன டாக்டர், அந்த ஆபரேஷனை இலவசமாக செய்துவிடுகிறேனென்று சொல்கிறார்.
மூன்றாவது ஸ்க்ரீனில்:
கல்யாண மண்டபம்: கைப்பேசியை எட்டி உதைத்த விஜயின் கால், பையனின் தந்தை கையிலிருக்கும் கைப்பேசியிலிருந்து வெளியே வந்து, அவரை எட்டி உதைக்கிறது.
அவரும் பயந்து கொண்டு - "உங்க காசே வேணாங்க. டேய், தாலிய கட்றா. சீக்கிரம் சீக்கிரம்" என்று சொல்லி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
*****
இப்போது இரண்டாவது ஸ்க்ரீனும், மூன்றாவது ஸ்க்ரீனும் மறைய - முதல் ஸ்க்ரீன் பெரிதாகிறது. உடனே தொடங்குகிறது பாட்டு.
ஏய்.. காலைப் பாரு... காலைப் பாரு..
வேலுவோட காலைப் பாரு
கோலு போடும் காலைப் பாரு
ஷூவுக்குள்ளே சாக்ஸை பாரு
சாக்ஸுக்குள்ளே நகத்தை பாரு
நகத்தில் அழுக்கு இல்லே பாரு
வெட்டியாக இருக்கும்போது
அழுக்கை சுத்தம் செய்துடுவாரு
வாயாலே நாம பேசும்போது
காலாலே இவரு பேசுவாருடா.. ஹாஹாஹாஹா..
ஹேய்... Goldன்னா வேலுதான்..
Legன்னா காலுதான்...
Gold... வேலு... Leg... காலு...
*****
டக்கென்று விஜய் நம்மைப் பார்த்து திரும்பி கண்ணடித்து சிரித்துக் கொண்டே வணக்கம் செய்கிறார்.
திரையில் "காலு.. The Golden Leg..."... "கதை, திரைக்கதை, வசனம், டைரக்சன்... டாக்டர் விஜய்" என்று காட்டப்படுகிறது.
51 comments:
me the first????
இருங்க படிச்சுட்டு வாரேன்!!!
/* "இந்தாங்கம்மா, நம்ம வேலு இதை கொடுத்தார். நீங்க அவருக்கு உடனே இந்த தொலைபேசியில் ஒரு கால் போட்டு, அந்த டாக்டர்கிட்டே கனெக்ட் பண்ணி கொடுங்க. அப்புறம் எல்லாம் சரியாயிடும். கவலைப்படாதீங்க".
*/
யாரு அந்த வேலு நம்பர் கொடுங்கோ
நானும் ரொம்ப கஷ்டத்துலே இருக்கேன். யாரு அந்த வேலு நம்பர் கொடுங்கோ.
நானும் ரொம்ப கஷ்டத்துலே இருக்கேன்
ஹி ஹி ஹி ஹி ஹி
//
இன்னும் ஒரு மாசத்திலே என் தலையை அடகு வெச்சாவது நான் ஒரு லட்சம் புரட்டித் தர்றேன்னு சொன்னேனே?
//
தலைக்கெல்லாம் எந்த சேட்டும் கடன் தரமாட்டாங்க.
அவிங்க பொய் சொல்லறாங்க, தம்பி கொஞ்சம் யோசி !!
//
'டக்'கென்று விஜய் அந்த கைப்பேசியை தூக்கி மேலே போடுகிறார். அது கீழே வரும்போது, தன் காலால் அதை எட்டி உதைக்க, அது பறந்து போய் பந்தின் மேல் பட்டு, பந்து பறந்து போய் கோல்போஸ்டில் விழுகிறது.
//
ச்சே ச்சே கடைசியிலே இது நம்ப விஜயஆ !!!
அப்போ இதெல்லாம் ஓகே!!
நான் கூட சீட் நுனிக்கே வந்த்துட்டேங்க
//
இப்போது இரண்டாவது ஸ்க்ரீனும், மூன்றாவது ஸ்க்ரீனும் மறைய - முதல் ஸ்க்ரீன் பெரிதாகிறது. உடனே தொடங்குகிறது பாட்டு.
//
இந்த பாட்டு ரொம்ப நல்லா இருக்கு
பாட்டெல்லாம் எழுதி அசத்திட்டீங்க போங்க
தினம் தினம் ஒரு கற்பனையை
அள்ளி விடறீங்களே!!
அடுத்த டைரக்டர், நடிகர் நீங்கதான்
ஆனா producer நம்ப நசரேயனை மாட்டி விட்டுடுங்க.
ரொம்ப நேரமா முயற்சி செய்தும் இந்த பதிவு தமிழ்மணத்துலே இணையமாட்டேங்குது.. யாராவது உதவி பண்ணுங்க... நான் தூங்கப் போறேன்...
குட் நைட்!!!
:-))))))))))))))))))))))))))))))))
:-))))))))))))))))))))))))))))))))
:-))))))))))))))))))))))))))))))))
ROTFL
//
ஹேய்... Goldன்னா வேலுதான்..
Legன்னா காலுதான்...
//
பாத்தவனுக்கெல்லாம் மறுநாள் ”பாலு” தான் :)))
//
திரைப்பட ஸ்க்ரீனை மூன்றாக பிரித்துக் காட்டுகின்றனர்
//
ஸ்க்ரீனை கிழிச்சுடுறாங்க’ங்கிறத எவ்வள்வு சூசகமா சொல்றீங்க தல :))
RAMYA said...
//
யாரு அந்த வேலு நம்பர் கொடுங்கோ
நானும் ரொம்ப கஷ்டத்துலே இருக்கேன். யாரு அந்த வேலு நம்பர் கொடுங்கோ.
//
இதுக்கு பேர்தான் ”சொந்த செலவில் சூன்யங்”கிறது
சூப்பரோ சூப்பர் :)))))))
இப்ப சிங்கப்பூர்ல இருந்து ஒரு கட்டைக்காலு வரப் போகுது... பாத்து.. முதுகத் தயாரா வெச்சுக்கோங்க !!
இவண்
சிங்கை "வில்லு" விஜய் ரசிகர் மன்றம்
(வில்லு - ஒரு காவியம்)
:-D
ரொம்ப நல்ல இருந்திச்சுங்க...
சிரிப்போ சிரிப்பு...
:-)
Fuck
படிச்சுபுட்டு சிருச்சு கிட்டே இருக்கிறேன். இத படிச்சதால என் அலுவலக வேலைய சரியா செய்ய விடாமல் என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய ச்சின்னப் பையனுக்கு என் கண்டனங்கள் . !!!!
:-))))))))))))))))
அண்ணா சூப்பருங்கண்ணா
வாய்ப்பே இல்ல நண்பா..
ROFTL!!
ஒரு கசப்பான உண்மை என்னவென்றால் இதையே எடுத்துத் தொலைத்தாலும் சொல்றதுக்கில்ல!
சகா கார்க்கி.. எங்கிருந்தாலும் உடனே வரவும்!
திரையில் "காலு.. The Golden Leg..."... "கதை, திரைக்கதை, வசனம், டைரக்சன்... டாக்டர் விஜய்" என்று காட்டப்படுகிறது.
:))
உங்க காலையும் பிளாக்கையும் பத்திரமா பாத்துக்கங்க.
இங்க ஏற்கனவே விஜய் ஆதரவாளர் கூட்டமொண்ணு எங்க தலைவரை கிண்டலடிச்சா பிளாக் இருக்காதுன்னு மெரட்டறாக.
ஆனாலும் ரொம்ப நல்லா இருந்துச்சுங பதிவு.
Mudiyalappa!
Do you have any suside tips!!!!!!!!
வாங்க ரம்யா -> :-))) அவரு நம்பர் எங்கிட்டே இல்லீங்கோ.. யாராவது பின்னூட்டத்திலே தந்தா பாத்துக்குங்க... நன்றி... :-)))
வாங்க பிரேம்ஜி -> நன்றி...
வாங்க ஆளவந்தான் -> 'சொசெசூ' மேட்டர் சூப்பர்.... :-)))))
வாங்க பட்டாம்பூச்சி -> நன்றி...
வாங்க மகேஷ்ஜி -> ஏங்க இதை நான் ‘மஹாகாவியம்'னு சொல்லலாம்னு நினைச்சேன்.... :-((((
வாங்க ஸ்வாமி, வேத்தியன் -> நன்றி..
வாங்க அனானி -> இதை இங்கே சரமாரியா பயன்படுத்தறதாலே, நீங்களும் ஜாலியா சொல்றீங்கன்னே எடுத்துக்கறேன்... நன்றி... :-)))
வாங்க அசோசியேட் -> அவ்வ்வ்வ்....
வாங்க முரளிகண்ணன் -> தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி...
வாங்க ரஹாவஜ், பரிசல், புதுகைத் தென்றல் அக்கா -> நன்றி...
கடவுளே இந்த பதிவ டாக்டர் படிச்சிடக்கூடாது. அப்புறம் படம் பண்ண கிளம்பிடுவாரு:(
இந்த லோகத்திலே அவா அவா விஜய் படம் பார்த்திட்டு படற கஷ்டம் போறாதோடா அம்பி...
நீ வேற இப்படி எல்லாம் எழுதி, வழி காண்பிக்கப்பிடாது, பிடாதுன்னா பிடாதுதான்.
ச்சின்னப்பையானா லக்ஷணமா, வேற எதாவது எழதப்பிடாதாடாப்பா?
டாக்டர் ச்சின்னப்பையன் வாழ்க, இந்த படத்துக்காவது டைரக்டர் வாய்ப்பு கிடைக்குமா?
ஹிஹிஹி.. ஜூப்பர்.! (நான் வந்து சிரிச்சுட்டுப்போனதை கார்க்கியிடம் சொல்லிவிடவேண்டாம். பை தி வே.. முந்தைய ஆபீஸ்ல வேலை பாக்குற பதிவையும் படிச்சாச்சு.. பிரமாதம்)
இப்போது திரைப்பட ஸ்க்ரீனை மூன்றாக பிரித்துக் காட்டுகின்றனர்.
:)))))))))
வாங்க அனானி -> இதை இங்கே சரமாரியா பயன்படுத்தறதாலே, நீங்களும் ஜாலியா சொல்றீங்கன்னே எடுத்துக்கறேன்... நன்றி... :-)))
I like your positive attitude
நீங்க ரொம்போ நல்லவருங்க .. :-)
விஜயோட அடுத்த பட டைரக்டர் நீங்கதானா? வாழ்த்துக்கள் :)
Very very funny!! Cudnt stop laughing for sometime....sema creativity !! U shud definitely come for movies & make us laugh :-)
வாங்க நாஞ்சில் சுதேசி -> அவ்வ்வ்... ஏங்க இந்த முடிவுக்கு வந்துட்டீங்க???? என் பதிவு படிச்சதாலேயா????... :-)))
வாங்க வித்யா -> ஹாஹா... :-))
வாங்க இராகவன் -> பிடாது பிடாது... :-)))
வாங்க நசரேயன் -> அடங்காமெத்தான் திரியறீங்க.... டைரடக்கர் ஆகணும்னு ரொம்ம்ம்ப நாள் ஆசையா?????
வாங்க ஸ்ரீதர்கண்ணன் -> நன்றி...
வாங்க பிரியா கண்ணன் -> அவ்வ்வ்.. ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு????? :-))
வாங்க அனானி -> Thanks for your comments... I sincerely hope your wish come true... :-))))
ஹைய்யோ ஹைய்யோ....
நாளைக்குக் கோர்ட் கேஸுன்னு மல்லாடப்போறீங்களா? :-)))))
இதை அப்படியே (திருடி) எடுத்துக்கிட்டு 'அவுங்க' கதைன்னு சொல்லப்போறாங்க:-))))))
அடுத்த படத்தில் இந்த காட்சியெல்லாம் வந்தா ஆச்சரியம் இல்லை ...
\\துளசி கோபால் said...
ஹைய்யோ ஹைய்யோ....
நாளைக்குக் கோர்ட் கேஸுன்னு மல்லாடப்போறீங்களா? :-)))))
இதை அப்படியே (திருடி) எடுத்துக்கிட்டு 'அவுங்க' கதைன்னு சொல்லப்போறாங்க:-))))))//
வழிமொழிகிறேன்.. :))
செம நையாண்டி ச்சின்னப்பையன்.. பாத்து கார்க்கி கோச்சுக்கப்போறாரு?
முடியல
அழுதுருவேன்!
@பரிசல், தாமிரா, வெண்பூ,
பயம் இருக்கிர மாதிரி நடிக்கறீங்க. ஆனா பயமில்லை. உங்களுக்காக அடுத்து இதையே படமா எடுக்க சொல்ரேன் தள்பதிகிட்ட..
இன்னொரு மேட்டர் படம் நல்லாயிருந்தா ரவிகிருஷ்ணா படம் ஓடும்.. பிராஷந்த் படம் ஓடும். சில சமயம் அஜித் படம் கூட ஓடும். அதுவா முக்கியம்? படம் நல்லாயில்லைனாலும் ஓடுறதக்கு விஜய்தான் வேனும்..
மத்த்வங்க எல்லாம் இயக்குனர் என்ற சுவத்துல ஊறுகிற பல்லி
எங்காளி காத்துல பறக்கிற கில்லி
கவிதைக்கு ஷெல்லி
கலக்ஷனுக்கு கில்லி
மதுரைன்னா மல்லி
சினிமான்னா கில்லி
அரேபியான்னா குதிர
அண்ணன் பேரு மதுர
ஜப்பானில் இருக்கு எரிமலை
அதுக்கு மறுபேரு திருமலை
சுமாரான படம்தான் வில்லு
விஜய எதிர்க்க தேவை தில்லு
மலையில தண்ணி கொட்டினா அருவி
மக்கள் கைய தட்டினா அது குருவி
சோடா ப்ளீஸ்
டாக்டர் விஜயின் அடுத்த கால் :-) உங்களுக்குத்தானாமே ?!
:-)
வாங்க துளசி மேடம், பூங்குழலி, மு-க அக்கா, வெண்பூ, வால் -> நன்றி..
வாங்க கார்க்கி -> 50 அடிச்சாதாம்பா சோடால்லாம்.... 45லே அவுட்டாயிட்டீங்களே.... ஹிஹி....
வாங்க பாலராஜன்கீதா ஐயா -> அவ்வ்வ்... வேணாங்க.... எனக்கு காலே வேணாம்.... :-)))
49
//
50 அடிச்சாதாம்பா சோடால்லாம்.... 45லே அவுட்டாயிட்டீங்களே.
//
சோடாவுக்கான எனது முயற்சி. கொரியர்ல சோடா அனுப்பி வைங்க :)
அ(ட)ப்பாவி ஆளவந்தான் -> சோடாதானே????? கவலைய விடுங்க.. ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணுங்க... ‘எல்லாத்தையும்' குடிச்சிடலாம்.... :-)))))
நண்பரே
I have been reading you blogs recently, amazing humour sense.
நாங்க எல்லாம் எப்படி கலாச்சி கலாச்சி வாழ்க்கை ஓட்டினோம் ஒ அதே மாதிரி ஒரு
மெகா சிறந்த நகைச்சுவை உணர்வு (அதுக்காக எனக்கு வயசு உங்கள விட ஜாஸ்திநு
நெனசிரதிங்க i am 28 :-) ஹி ஹி )
உங்கள் அலுவலக வேலைக்கு மத்தில் எப்படி டுமில் டமில் நு நம்ம பாண்டு அதாங்க 007 கணக்கா காமெடி பண்றது நலல் இருக்கு.
நீங்க நல்லஅழககா எழுதுறிங்க, உங்கள பற்றி அதிகமா தெரிந்து கொள்ள அசை படுகிறான் இந்த சுரேஷ்
கண்டிப்பா மெயில் id சொலுங்க நிறைய பேசலாம் ( இப்போ போடுற மொக்கயே
முடியலையே எதுல மெயில் வேறயானு நீங்க சொல்றது கேட்குது )
நீங்கள் கண்டிப்பாக ஒரு மிக சிறந்த நகைச்சுவை படம் எடுக்கலாம், நீங்க சீரியஸ் எடுத்த குட நாங்க எல்லாம் சிரிச்சிகிட்டே பார்ப்போம் ல கண்டிப்ப படம் ஹிட் தான்
உங்கள் கதையே விஜய் சுட்டு விட்டார் :-) அடுத்த படம் அதாங்க வேட்டைக்காரன் ஒ வேட்டிபயல ஒ அதுல ஒபெநிங் சீன் உங்களுது தான் கேஸ் போட்டு காச வாங்கிடுவோம்
Post a Comment