வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷல்...!!!
இந்த வாரயிறுதியிலே நான் பெங்களூர்லேயோ, மங்களூர்லேயோ இருக்கணும்னு நினைச்சேன்... யாரையும் பாக்கறதுக்கு இல்லேங்க... சும்மா அங்கங்கே நின்னுகிட்டு - போற வர்ற லேடீஸ்கிட்டே இப்போ டைம் என்ன? இன்னிக்கு தேதி என்ன? அப்படின்னு கேக்கத்தான். ஸ்ரீராம் சேனாக்காரங்க புண்ணியத்துலே எனக்கும் ஏதாவது நல்லது(!!!) நடக்காதாங்கற நப்பாசைதான் பாருங்க.
நம்ம ஊர்லேதான் இந்த நாளை 'காதலர்' தினமா கொண்டாடறாங்க. காதலர்களுக்கு பூ, புஷ்பம், புய்ப்பம் (இல்லே, நீங்க சொல்றா மாதிரியும் சொல்லலாம்!!!), வாழ்த்து அட்டை மாதிரியான சமாச்சாரங்கள் விக்குதுன்னு சொல்றாங்க.
இங்கே, காதலர்களுக்காக மட்டுமில்லாமல், பெற்றோர், ஆசிரியர், சகோதர சகோதரிகள், நண்பர்கள் அப்படி இப்படின்னு மானாவாரியா எல்லோருக்கும் தங்கள் அன்பை வெளிக்காட்டும் ஒரு நாளாக கொண்டாடறாங்க.
ஒரு டாலருக்கு விற்கும் வாழ்த்து அட்டையிலிருந்து, ஆயிரங்களில் விற்கும் நகைகள் வரை இந்த தினத்திற்காக விற்பனைக்கு வந்திருக்கிறது. கடைகள்லே கூட்டம் அலைமோதுது. சரி நாங்களும் - வெறும் சில வாழ்த்து அட்டைகள் வாங்கறதுக்காகவும், வாங்கறவங்கள பாக்கறதுக்காகவும் சிலபல கடைகளுக்குப் போய் வந்தோம்.
வாழ்த்து அட்டை எதுக்குன்னு கேக்கலியே, சஹானாவுக்கு பள்ளியில் படிக்கும் நண்பர்களுக்குக் கொடுக்கத்தான். வாழ்த்து அட்டை மட்டும் போதாது, ஏதாவது ஒரு கிஃப்டும் வாங்கணும்னு ரெண்டு கால்களிலும் நின்று அடம்பிடித்தவரை ஒரு சாக்லேட் வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்தி விட்டோம்.
நேற்று உட்கார்ந்து எல்லா அட்டைகளிலும் படங்களை வரைந்து, கையெழுத்திட்டு, உறைகளிலும் நண்பர்கள் பெயர் எழுதி - அனைத்தையும் தயார் செய்துவிட்டார். வெள்ளி அன்று பள்ளியில் துள்ளி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்ஞ்ஞ்சள் அரைத்து.... சாரி சாரி... எதுகை மோனையோட சொல்லணும்னு ஆரம்பிச்சி, வசனம் எங்கேயோ போயிடுச்சு... மறுபடி முதல்லேந்து ஆரம்பிக்கறேன்...:-))
வெள்ளி அன்று பள்ளியில் நடக்கும் சிறு பார்ட்டியில் அட்டைகளை நண்பர்களுக்குக் கொடுக்க வேண்டியதுதான் பாக்கி.
*****
ஆசிரியர்களுக்கு கொடுப்பதற்காக சில...
நண்பர்களின் பட்டியல்
*****
பயங்கர பிஸிப்பா.. கொஞ்ச நேரம் கழிச்சி வாங்க.. பேசலாம்...
*****
மொத்த அட்டைகள். கையெழுத்துடன் ஒரு படம் போட்டு தரப்படும்.
34 comments:
உங்க ஊர்ல எதும் ராம்சேனா, சீதா சேனா எல்லாம் இல்லயே? நல்ல வேளை.
சஹானாவின் கார்டுகளும் வாழ்த்துகளும் அட்டகாசம். எனது பிரத்யேகமான வாழ்த்துகளை குட்டிப்பாப்பாவுக்கு அளித்துவிடவும்.
ஐ...மீ த மொத !!!
//
ஒரு கிஃப்டும் வாங்கணும்னு ரெண்டு கால்களிலும்
//
இப்போ தான் இதே வார்த்தையை என்னோட பதிலில் எழுதிகிட்டு இருந்தேன்.. இங்க வந்து பாத்தா.. அவ்வ்வ்வ்வ்வ்... :)))))
//ஒரு கிஃப்டும் வாங்கணும்னு ரெண்டு கால்களிலும் நின்று அடம்பிடித்தவரை ஒரு சாக்லேட் வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்தி விட்டோம்.//
:-)))))))))
என்னோட வாழ்த்துக்களையும் சேர்த்துக்குங்க எல்லோருக்கும்...
அன்பைத் தெரிவிக்கும் நாள்தான் இது.
இந்தியாவில் மட்டும் 'காதலர்' நாளா இருக்கே......
எல்லாருக்கும் ஒரு வழின்னா இடும்பனுக்கு வேறுவழி என்றது உண்மைதான்போல!
சஹானாக் குட்டிக்கு வெரி ஹேப்பி வேலண்டைன் டே!
சஹானா ரொம்ப அழகா பூ படமெல்லாம் வரைஞ்சுருக்கா.. வாழ்த்துக்கள்.. :)
சத்யா,
கொஞ்ச நாளாவே ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க.
// எனக்கும் ஏதாவது நல்லது(!!!) நடக்காதாங்கற நப்பாசைதான் பாருங்க//
உங்களுக்கு ஏதாவது பண்ணனும் பாஸ்.
//எனக்கும் ஏதாவது நல்லது(!!!) நடக்காதாங்கற நப்பாசைதான் பாருங்க.
//
வார இறுதியில நடக்கறதை எல்லாம் அப்புறம் பாத்துக்கறோம். இப்ப வீட்டுல பூசை எப்படி நடக்குது அதை சொல்லுங்க :)
//இங்கே, காதலர்களுக்காக மட்டுமில்லாமல், பெற்றோர், ஆசிரியர், சகோதர சகோதரிகள், நண்பர்கள் அப்படி இப்படின்னு மானாவாரியா எல்லோருக்கும் தங்கள் அன்பை வெளிக்காட்டும் ஒரு நாளாக கொண்டாடறாங்க.
//
நல்ல விஷயமா இருக்கே
சஹானாவிற்கு வெரி ஹேப்பி வேலண்டைன் டே :)
அப்புறம் சஹானாகிட்ட எனக்கும் வாழ்த்து அட்டை மட்டும் போதும் பரிசு எல்லாம் வேண்டாமுன்னு சொல்லிடுங்க. சரியா ? :)
நீங்க உங்க ஆபிஸ் பிகர்களுக்கு கொடுக்கலயா??
குட், குட். இப்படித்தான் இருக்கணும்.
சஹானா ரொம்ப அழகா பூ படமெல்லாம் வரைஞ்சுருக்கா.. வாழ்த்துக்கள்.. :)//
நானும் வழி மொழிகிறேன்
உண்மையாகவே ரொம்ப நல்ல பழக்கம்.. ஆனா ஒரு 15 வயசு பொண்ணு தன் கூட படிக்கிற பசங்களுக்கு இதே மாதிரி கார்ட் எழுதுனா (Valentine's day, I am thinking of you) நாம ரசிப்போமா என்பதுதான் கேள்வி..
சொல்ல மறந்துட்டேன்.. சஹானா ச்சோ க்யூட்.. ச்சோ ச்வீட்..
//எனக்கும் ஏதாவது நல்லது(!!!) நடக்காதாங்கற நப்பாசைதான் பாருங்க.//
இன்னும்மாய்யா நம்புற??.. ஹஹஹஹா கலக்கல் ந"ச்சின்னப்பையன்"
//சும்மா அங்கங்கே நின்னுகிட்டு - போற வர்ற லேடீஸ்கிட்டே இப்போ டைம் என்ன? இன்னிக்கு தேதி என்ன? அப்படின்னு கேக்கத்தான்.//
No font, only smiley :))))
//. ஸ்ரீராம் சேனாக்காரங்க புண்ணியத்துலே எனக்கும் ஏதாவது நல்லது(!!!) நடக்காதாங்கற நப்பாசைதான் பாருங்க.//
திட்டம் மாற்றப்பட்டதாம்,
இப்போ எல்லாருடய கையிலும் உருட்டை கட்டை மீண்டும்
/வித்யா said...
நீங்க உங்க ஆபிஸ் பிகர்களுக்கு கொடுக்கலயா?//
அவங்க ஆஃபிஸ்ல ஃபிகரா??????? அந்த மேட்டர் தெரியாதா?
வாங்க மகேஷ்ஜி, ஆளவந்தான், ராகி ஐயா, தமிழன் - கறுப்பி -> நன்றி....
வாங்க துளசி மேடம், மு-க அக்கா -> நன்றி...
வாங்க வேலன் ஐயா -> அவ்வ்வ்....
வாங்க தாரணி பிரியா -> நன்றி..
வாங்க வித்யா -> ஏங்க இப்படி வெளிப்படையா கேட்டா எப்படி சொல்லமுடியும் சொல்லுங்க... :-)))))
வாங்க சரவணகுமரன், பு.தென்றல் அக்கா -> நன்றி...
வாங்க வெண்பூ -> அது நம்ம ஊர்லேன்னா கண்டிப்பா திட்டி தீர்த்துடுவாங்க... இங்கே எனக்குத் தெரியல... நான் என்ன பண்ணுவேன்னு கேக்கறீங்களா -- அது வரும்போது பாத்துக்கலாம். இப்போ செய்யறதை மட்டும் இப்போ ரசிப்போம் - இதுதான் என்னோட பாலிஸி... எப்படி!!!!!!!!! :-)))))
வாங்க நர்சிம்ஜி -> அவ்வ்வ்..
வாங்க ராஜ நடராஜன் -> நன்றி..
வாங்க வால் -> எகொஇச? நமக்கு நல்லது பண்ற திட்டத்தை மாத்திட்டாங்களா????
வாங்க கார்க்கி -> ஹலோ.. .என்ன இது கேள்வி... இப்படி கேக்கறத பாத்து மக்கள் நீங்க சொல்றது ‘ நிஜம்'னு நினைச்சிக்கப் போறாங்க.... அவ்வ்வ்..
வடகரை வேலன் said...
// எனக்கும் ஏதாவது நல்லது(!!!) நடக்காதாங்கற நப்பாசைதான் பாருங்க//
உங்களுக்கு ஏதாவது பண்ணனும் பாஸ்.
///
என்னையும் சேத்துக்கங்க வேலன், பண்ணும் போது ஒண்ணாவே பண்ணிடலாம்.!
சஹானா, அழகா செஞ்சு இருக்காங்க. வாழ்த்துக்கள்.
வெண்பூ, மனசுல விகல்பம் இல்லாம நண்பர்களுக்கு கொடுக்கறதா நினைச்சு கொடுத்தா நிச்சயம் தப்பு இல்லை.
அச்சச்சோ.. ச்சின்னப்பையன், எஸ் கே.. யாரையும் குறிப்பிட்டு நான் கேக்கலை. ஆனா நம்மள்ல எத்தனை பேரால அதை ஏத்துக்க முடியும்னு நெனச்சி பாத்தேன் அவ்வளவுதான்..
அண்ணா, நானும் சதரனமாத்தான் சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க :)
//அண்ணா, நானும் சதரனமாத்தான் சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க :)//
repeattee..........:-))
// வித்யா said...
நீங்க உங்க ஆபிஸ் பிகர்களுக்கு கொடுக்கலயா??
//
நான் கேட்க நெனச்ச கேள்விய தங்கச்சி கேட்டுருச்சு :))
யோசனை நல்லா இருக்கு அடுத்த வருசத்துக்கு எனக்கு உபயோகமா இருக்கும், அதனாலே காப்புரிமை இல்லாம திருடிக்கிறேன்
வாங்க தாமிரா -> அடடா... ஒண்ணா கூடிட்டாங்கய்யா..... என்ன நடக்கப்போகுதோ!!!!!
அப்துல்லா அண்ணே -> நீங்களுமா???? அவ்வ்வ்...
வாங்க நசரேயன் -> :-)))) நன்றி...
சஹானாவும் , அந்த எழுதப்பட்ட வாழ்த்து அட்டைகளும் கொள்ளை அழகு!
வாழ்த்துக்கள் அண்ணே !
நல்லா இருந்தது. முக்கியமா வெள்ளியன்று பள்ளியில் எங்கள் குலப்...ன்னு சரளமா நீங்க வழிமாறி போனது நல்ல தமாஷ்.
ஒண்ணு கேட்கணும் உங்ககிட்ட...உங்க மத்த பதிவ பார்க்கரபோது இது உங்களுக்கும் இடது கைகள் எழுதுயதா நான் கருதறேன்.
நானும் மூச்சு வாங்க யோசிச்சு, கை வலிக்க வே..டேக்கு ஒரு பதிவு போட்டிருக்கேன்.
பொதுவா என் பதிப்புக்கு பின்னூட்டங்கள் எதுவும் வர்றா மாதிரி தெரியல...
படிச்சி பார்த்துட்டு உங்க அபிப்ராயத்த சொல்றீங்களா ச்ச்சின்ன பையன்?
நீங்க எல்லா ஒரு கூட்டமா? உங்களுக்குள்ளேயே பரிமாறிப்பீங்களா? புதுசா வந்த அவங்கள மதிக்கக் கூட மாட்டீங்க்களா?
தயவு செய்து இந்த பின்னூட்டத்தை அப்ரூவ் செய்யவும். நன்றி.
அச்சச்சோ.. என்ன விஜயசாரதி இப்படி கேட்டுட்டீங்க.. ஒத்த கருத்துடையவங்க ஒரு குழுவா இயங்குறத நீங்க இந்த வலையுலகத்துல பாக்கலாம்.. நாங்க எல்லாருமே மொக்கை அப்படின்ற ஒரே விசயத்துல ஒண்ணுபடுறதால உங்களுக்கு அப்படி தோணி இருக்கலாம்.. அதே மாதிரி நான் உட்பட பலர் வேலை அதிகமா இருக்கும்போது ரீடரோட நிறுத்திக்கிறதால புதிய பதிவர்களோட பதிவுகளை படிக்கிறதில்லை.. ஆனா எல்லாரும் அப்படி இல்லை.. நல்ல பதிவுகளா எழுதி, சரியான தலைப்பு கொடுத்து, சரியான லேபிளோட வெளியிட்டீங்கன்னா கண்டிப்பா உங்களையும் ஒரு கூட்டம் ஃபாலோ பண்ணும்..
சொன்ன விசயத்த அழகா எடுத்துகிட்டு அதுக்கு பதில் தந்ததுக்கு உங்களுக்கு நன்றி. நான் ஒத்துக்கறேன்.
ஆனா நீங்களும் ஒரு முறை என்னோட பதிப்பை பார்த்து சொல்லுங்க...நீங்க குறிப்பிட்ட அந்த விசயமெல்லாம் இருக்குதான்னு...
விஜயசாரதி அண்ணா...
ஒபாமா பதிவப் பாத்துதான் உங்க பதிவு பத்தி எனக்குத் தெரிஞ்சுது...
அன்னிக்கே ரீடர்லே சேத்துக்கிட்டு வரிசையா பின்னூட்டம் போட்டுக்குட்டு வர்றேன்..
ஒண்ணு ரெண்டு விட்டுப் போயிருக்கலாம்... :-((
தவிர, உங்க சூப்பரான நகைச்சுவை உணர்வைப் பத்தி ஒரு தடவை சொல்லியிருக்கேன்... சரியா..
நீங்க தமிழ்மணத்துலேயும் இணைஞ்சிக்கோங்க... நிறைய பேர் படிக்கக் கிடைப்பாங்க...
வாழ்க!!! வளர்க!!!
Post a Comment