சில மொக்கை ஹைக்கூகளும் பின்னே ஒரு கவிதையும்...!!!
இன்னிக்கு முழுக்க மொக்கை மூடுலே இருந்ததாலே ( நீ என்னிக்குதாண்டா சீரியஸ் மூடுலே இருந்திருக்கேன்னு நிறைய பேர் தட்டச்ச தயாராவது தெரியுது!!!), மனசுலே கவிதை மழையா
பொழிஞ்சுது. அதை அப்படியே பிழிஞ்சி சிலதை மட்டும் இங்கே போட்டிருக்கேன். பாக்கி அப்பப்போ வரும்!!! எஞ்சாய் பண்ணுங்க.... அவ்வ்வ்....
புத்தூர் மருத்துவமனை
பின்னவீனத்துவ
எழுத்தாளரின்
கட்டு உடைக்கப்படுகிறது...
வலைப்பதிவாளன்
கடனட்டைக்காக
தொலைபேசுபவரிடம் --
“உங்க பேர் என்ன?”
கொள்ளுப்பேத்தி அழுகை
கோடிக்கணக்கில்
பிங்க் டிரஸ்
அனுப்பும் போராட்டம்.
கொள்ளுப்பேரன் பதவியேற்பு
ஜ்யாமெண்ட்ரி பாக்ஸ்
திறக்கும் மாபெரும்
விழா..
பேசும்படம் - II (விளக்கம் கீழே...)
சந்தானத்தின்
முழு நீள
நகைச்சுவைப் படம்...
குடும்பஸ்தரின் வாரயிறுதி
எங்கு போறதுன்னு முடிவு பண்றதிலே சண்டை...
அங்கு போகும்போதும் வழியிலே சண்டை...
தின்னும் இடத்துலே திட்டிக்கிட்டே சண்டை...
திரும்பி வரும்போது தாறுமாறா சண்டை...
வீட்லே நுழைஞ்சதும் விடாமே சண்டை...
போறுண்டா சாமி..
சண்டே வந்தாலே காயுது மண்டை
-----
பேசும்படம் - II வின் விளக்கம்!!!
சஹானாவுக்கு ஆங்கிலம் சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தபோது, silent எழுத்துகளைப் பற்றிய சர்ச்சை(!!!) வந்தது. உதாரணத்திற்கு :- queue.
அவரின் கேள்வி என்னன்னா - அந்த உபரி எழுத்துக்கள் தேவையில்லேன்னா, விட்றவேண்டியதுதானே... எதுக்கு வீணா அதையும் சேர்த்து எழுதிக்கிட்டு??? இப்படில்லாம் கேட்டா என்னன்னு பதில் சொல்றது சொல்லுங்க... நான் வழக்கம்போல் ‘பே'ன்னு முழிச்சிட்டிருந்தேன்.
இதாவது பரவாயில்லை...
அதன் பிறகு தமிழ் படிக்கும்போது -- இதில் ஏன் silent எழுத்துக்கள் இல்லைன்னு ஒரு கேள்வி... என்னோட ‘ரசம்' என்னன்னுதான் உங்களுக்கு தெரியுமே!!!
பிறகு தட்டுத்தடுமாறி நான் சொன்னது இதுதான்.
”எனக்குத் தெரிஞ்சி தமிழ்லே அந்த மாதிரி இல்லை. ஆனா, நம்ம நகைச்சுவை நடிகர்களோட சீன்லே பல இடங்கள்லே, அவங்க பேசறப்போ பல வார்த்தைகளை - பின்னால் அதிகப்படியா இசை அமைத்தோ அல்லது வெறும் காத்தடித்தோ - சென்சார்லே அமுக்கிடுவாங்க.”
இந்த விவாதம் செய்துகொண்டிருக்கும்போதுதான் மேற்கூறிய ஹைக்கூ(???) தோன்றியது... எப்படி????
34 comments:
இங்கே பாருங்கள்
வாழ்த்துக்கள்
\\
குடும்பஸ்தரின் வாரயிறுதி
எங்கு போறதுன்னு முடிவு பண்றதிலே சண்டை...
அங்கு போகும்போதும் வழியிலே சண்டை...
தின்னும் இடத்துலே திட்டிக்கிட்டே சண்டை...
திரும்பி வரும்போது தாறுமாறா சண்டை...
வீட்லே நுழைஞ்சதும் விடாமே சண்டை...
போறுண்டா சாமி..
சண்டே வந்தாலே காயுது மண்டை\\
இது ரொம்ப அருமை
அருமை
செம மொக்கை கவுஜ...
அதிலயும்..
//
சண்டே வந்தாலே காயுது மண்டை
//
சேம் ப்ளட்.. சேம் ப்ளட்.. சேம் ப்ளட்..
//பின்னவீனத்துவ
எழுத்தாளரின்
கட்டு உடைக்கப்படுகிறது...//
பரிசலை எப்போதும் பின்தொடர்வதை கண்டிக்கிறேன்
//கடனட்டைக்காக
தொலைபேசுபவரிடம் --
“உங்க பேர் என்ன?”//
மன்னிக்கவும்
what you name?
என்று தான் கேட்போம்
//குடும்பஸ்தரின் வாரயிறுதி//
கொடுத்து வைத்தவர்
வாரத்தில் ஒரு நாள் மட்டும் மண்டை காய்கிறார்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//அந்த உபரி எழுத்துக்கள் தேவையில்லேன்னா, விட்றவேண்டியதுதானே... எதுக்கு வீணா அதையும் சேர்த்து எழுதிக்கிட்டு???//
இன்று வரை என் கேள்வியும் அதுவாக தான் இருக்கிறது!
எங்கு போறதுன்னு முடிவு பண்றதிலே சண்டை...
அங்கு போகும்போதும் வழியிலே சண்டை...
தின்னும் இடத்துலே திட்டிக்கிட்டே சண்டை...
திரும்பி வரும்போது தாறுமாறா சண்டை.///
எல்லா இடத்திலயும் இதுதானா?
மனசுலே கவிதை மழையா
பொழிஞ்சுது. அதை அப்படியே பிழிஞ்சி சிலதை மட்டும் இங்கே போட்டிருக்கேன். பாக்கி அப்பப்போ வரும்!!! எஞ்சாய் பண்ணுங்க.... அவ்வ்வ்....///
கவிதை வந்தா அடக்கி வைக்காதீங்க..
ஆஹா கவுஜ கவுஜ:)
ஒரு கவிதையே கவிதை சொல்கிறதே அடடா..
//சண்டே வந்தாலே காயுது மண்டை//
நல்ல எகன மொகனையா எழுதுறீங்க. வைரமுத்துவுக்கு நீங்கதான் வாரிசு.
சந்தானம் பற்றி என் கருத்தும் அஃதே.
//வலைப்பதிவாளன்
கடனட்டைக்காக
தொலைபேசுபவரிடம் --
“உங்க பேர் என்ன?”//
சூப்பருங்கோ !
தலைப்பே கவிதை மாதிரி இருக்கே :)
பிரிச்சு பிரிச்சு போட்டு இருந்திங்கன்னா அதுவும் ஹைக்கூ ஆகியிருக்குமே :)
யூத் விகடன்ல வந்து யூத் ஆனதுக்கு வாழ்த்துக்கள் :)
வாங்க ஜமால் அண்ணே -> வாழ்த்திற்கும் செய்திக்கும் மிக்க நண்றிண்ணே....
வாங்க ராகி ஐயா -> அவ்வ்வ். சிரிக்காமே சொல்றீங்களே... அப்போ அடுத்தடுத்த பகுதிகளை இறக்கி விட்டுடவா..... ஆஆஆ....
வாங்க வெண்பூ -> ஹாஹா... மக்களே... என்ன சந்தோஷம் பாருங்க இங்கே ஒருத்தருக்கு... நானும்.. நானும்..னு குதிக்கறாரு... :-)))
வாங்க வால் -> நன்றி...
வாங்க தேவன்மயம் -> இதிலே சந்தேகமா!!!... அப்போ நீங்க கொடுத்துவெச்சவருதான்..... :-)))
வாங்க வித்யா -> அவ்வ்வ். டென்ஷனாயிட்டீங்களா??????
வாங்க வினோத் -> அவ்வ்வ்...
வாங்க வேலன் ஐயா, பாஸ்கர், முரளிகண்ணன் -> நன்றி...
வாங்க தாரணி பிரியா -> அவ்வ்வ்.. அப்போ ச்சின்னப் பையன ச்சின்னய் யூத்னு மாத்திக்கவா??????
>அதன் பிறகு தமிழ் படிக்கும்போது -- >இதில் ஏன் silent எழுத்துக்கள் >இல்லைன்னு ஒரு கேள்வி...
தமிழிழும் silent எழுத்துக்கள் உள்ளன. (உ.ம்)
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
இங்கு "தூஉம்" என்பது.
//
Rajasekaran said...
தமிழிழும் silent எழுத்துக்கள் உள்ளன. (உ.ம்)
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
இங்கு "தூஉம்" என்பது.
//
இல்லையென்று நினைக்கிறேன் ராஜசேகர்.. "தூஉம்" என்பதை "தூ..உ..ம்" என்றுதான் சொல்வீர்களே தவிர "துப்பார்க்கு தூம் மழை" என்று சொல்ல மாட்டீர்கள்.. சரியா? எனக்கு அப்படித்தான் சொல்லித்தந்திரிக்கிறார்கள். அதனால் அது சைலன்ட் இல்லை. தவறாக இருந்தால் சொல்லவும்.
//அந்த உபரி எழுத்துக்கள் தேவையில்லேன்னா, விட்றவேண்டியதுதானே... எதுக்கு வீணா அதையும் சேர்த்து எழுதிக்கிட்டு??? //
சஹானா, அவங்க அம்மாவ போல இருப்பாங்க்களோ? புத்திசாலித்தனமா கேள்வியெல்லாம் கேக்கறாங்களே...
/தமிழிலும் silent எழுத்துக்கள் உள்ளன. (உ.ம்)/
இராமன்,உரூபா,அரங்கசாமி,...
(சரிதானா..? தெரியவில்லை)
ஜாலியான இடுகையில சீரியசா வந்து காமெடி பண்ணறேனா?
வாங்க ராஜசேகரன் -> வெண்பூ சொல்லியிருப்பது போல் 'தூஉம்' சரியான உ-ம் ஆ தெரியல. ஒரு வேளை நான் தவறாயிருந்தா சொல்லவும்... நன்றி..
வாங்க வெண்பூ -> நன்றி..
வாங்க அறிவிலி -> அவ்வ்வ்..
வாங்க முத்துவேல் ஐயா -> நீங்க என் கடைக்கு வந்ததே எனக்கு சந்தோஷம் ஐயா...
அதிலும் சரியான உதாரணங்களை சொல்லியிருக்கீங்க. மிக்க நன்றி...
என்னது ? ஐயாவா? இப்படின்னு தெரிஞ்சுருந்தா என்னோட யூத் இமேஜை கெடுத்துக்காம ,தமிழை ஒருபக்கம் ஓரமா வச்சுட்டு பின்னூட்டம் போட்டுருருப்பேன்.
(அதெல்லாம் சொம்மானாங்காட்டியும்)
தமிழை விட்டுக்கொடுக்கமாட்டோமில்ல. நம்மாள முடிஞ்சவரைக்கும்...
உங்க கடைக்கு வரமுடிஞ்சதுல எனக்கும் சந்தோசந்தான்...
Good post... :)
கவித கவித...
:-))))))
//
சண்டே வந்தாலே காயுது மண்டை
//
மண்டே வந்தா இல்லே சண்டை??
ஒன்னுக்கு கீழே ஒன்னா எழுதி இருந்ததுனால, இதை கவிதையா எடுத்துகிறேன் :D :))))))
//
பின்னவீனத்துவ
எழுத்தாளரின்
கட்டு உடைக்கப்படுகிறது...
//
அடிச்சது யாரு தங்க்ஸா?
ரைட்டு //பின்னவீனத்துவ
எழுத்தாளரின்
கட்டு உடைக்கப்படுகிறது.../
இந்த நல்ல காரியம் எப்பொழுது நடந்தது!
மீதி அனைத்துக்கும்:)))))))))))))))))))))))))))))))))))))))))))))
vinoth gowtham said...
ஒரு கவிதையே கவிதை சொல்கிறதே அடடா..
//
ஆஹா.. ரிப்பீட்டு.!
முதல் கவிதை அட்டகாசம்..
அப்புறம் என்னங்க 'Queue'வுக்கு யாருமே அர்த்தம் சொல்லமாட்றாங்களே.?
boochandi.com க்கு வாழ்த்துக்கள். இப்போ தான் நான் பார்த்தேன்.
@ வெண்பூ and ச்சின்னப் பையன்...ஆம். தவறு.
//"தூஉம்" என்பதை "தூ..உ..ம்" என்றுதான் சொல்வீர்களே// பெய்தல் என்ற பொருள் கொண்டு நீக காமெடி பண்றீக...போக...அது வேற “தூவும்” from “தூவு” and இது வேற…
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
துப்பு+ஆயதும் = துப்பாயதும்
துப்பு+ஆயதூஉம் = துப்பாயதூஉம் = துப்பாய தூஉம்
துப்பு- உணவு, ஆயதூஉம் – ஆயதும்-ஆனதும், மழை.
ஆயதூஉம் à உயிரளபெடையில் இன்னிசையளபெடை (உ)
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
இங்கு, உழாஅர் – உழார் à செய்யுளிசையளபெடை (அ) அல்லது இசைநிரையளபெடை.
one more example is
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
//எனக்கு அப்படித்தான் சொல்லித்தந்திரிக்கிறார்கள்.// பாவம்..வயித்து பொயப்புக்கு...
My only intention here is please don’t change the meaning additionally this is not silent letters we need to pronounce that too.
-செந்தில்வேல்
@ வெண்பூ and ச்சின்னப் பையன்...ஆம். தவறு.
//"தூஉம்" என்பதை "தூ..உ..ம்" என்றுதான் சொல்வீர்களே// பெய்தல் என்ற பொருள் கொண்டு நீக காமெடி பண்றீக...போக...அது வேற "தூவும் (தூவு)" and இது வேற…
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
துப்பு+ஆயதும் = துப்பாயதும்
துப்பு+ஆயதூஉம் = துப்பாயதூஉம் = துப்பாய தூஉம்
துப்பு- உணவு, ஆயதூஉம் – ஆயதும்-ஆனதும், மழை.
ஆயதூஉம் à உயிரளபெடையில் இன்னிசையளபெடை (உ)
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
இங்கு, உழாஅர் – உழார் à செய்யுளிசையளபெடை (அ) அல்லது இசைநிரையளபெடை.
one more example is
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
//எனக்கு அப்படித்தான் சொல்லித்தந்திரிக்கிறார்கள்.// பாவம்..வயித்து பொயப்புக்கு...
My only intention here is please don’t change the meaning additionally this is not silent letters we need to pronounce that too.
-செந்தில்வேல்
Post a Comment