DosaSoft - மென்பொருள் நிபுணரின் தோசைக்கடை!!!
இந்த கதையில் மொத்தம் மூணு பேர்.
சா=சாப்பிட வந்தவர்; மு=முதலாளி; தொ=தொழிலாளி.
மு-வும், தொ-வும் முன்னாள் மென்பொருள் நிபுணர்கள்.
**********
சா: எனக்கு பயங்கர பசியாயிருக்குது. உடனே என்ன கிடைக்கும்னு சொல்லுங்க. சூடா இருக்கணும்.
மு: எல்லாமே உடனடியா, சூடா கிடைக்கும். உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. நான் கொண்டு வந்து தர்றேன்.
சா: அப்ப சரி, ரெண்டு சப்பாத்தி கொண்டு வாங்க.
(ஒரு பதினைந்து நிமிடம் கழித்து)
மு: மன்னிச்சிடுங்க. சப்பாத்தி மட்டும்தான் இங்கே இல்லே. அதைத் தவிர வேறே என்ன வேணும்னாலும் கிடைக்கும்.
சா: சரி. பரவாயில்லே. எனக்கு ஒரு தோசை கொண்டு வாங்க. நல்லா சூடா, முறுகலா, கொஞ்சமா நெய் போட்டு கொண்டு வாங்க.
(சமையலறையில்)
தொ: நான் இங்கே வேலைக்கு சேர்ந்து ஒரு வாரமாயிடுச்சு. எப்போ எனக்கு ப்ரமோஷன் கொடுக்கப் போறீங்க?
மு: என்னது, ஒரே வாரத்துலே ப்ரமோஷனா?
தொ: ஆமா. என்னை ‘சீனியர் மாஸ்டர் (சரக்கு)' ஆக்கிடுங்க. எனக்குக் கீழே வேலை செய்ய ரெண்டு பேரை போடுங்க. அவங்களை நான் நல்லபடியா வேலை வாங்கி, எல்லா
சிற்றுண்டியையும் தயார் பண்ணிடுவேன். முக்கியமான விஷயம் - அந்த ரெண்டு பேர்லே ஒருத்தராவது பொண்ணா இருக்கட்டும். பக்கத்து கடையிலே பாருங்க. அழகழகா பொண்ணுங்க
தோசை சுடறாங்க. நானும் இருக்கேனே இங்கே உங்களோட!!!
மு: இவ்ளோதானா? வேறே ஏதாவது இருக்கா?
தொ: அப்படியே, இந்த கடையில் வரும் லாபத்தில் எங்களுக்கும் 10% கிடைக்கறா மாதிரி ஏற்பாடு பண்ணுங்க. என்னை ஒரு மூணு மாசம் வெளி நாட்டுக்கு அனுப்பிச்சீங்கன்னா, பல
நல்ல ஐட்டங்களை சமைக்கறதுக்கு கத்துக்கிட்டு வந்துடுவேன்.
மு: இதெல்லாம் உனக்கே ரொம்ப டூ மச்சா தெரியல? ஒழுங்கா முறுகலா ஒரு தோசை சுடற வழியப்பாரு.
தொ: தோசை போட இப்பத்தான் நான் கத்துக்கிட்டிருக்கேன். அதனால் நான் போடற தோசை சரியா வரும்னு சொல்ல முடியாது.
மு: வேலைக்கு சேரும்போது, எல்லா டிபனையும் அருமையா பண்ணுவேன்னு சொன்னியே. முன்னாடி வேலை பாத்த இடத்துலே தோசை, சப்பாத்தி எல்லாம் போட்டிருக்கேன்னு
சொன்னதா வேறே ஞாபகம்.?
தொ: அது வந்து.. அது வந்து... அங்கே வேலை பாக்கும்போது... ரெண்டு வருஷமா அந்த சரக்கு மாஸ்டர் தோசை சுடும்போது, பக்கத்துலே இருந்து பாத்திருக்கேன். அவ்ளோதான்.ஆனா, தோசையைத் தவிர மத்த எல்லா டிபனையும் அருமையா செய்வேன் நான்.
மு: அந்த கதையெல்லாம் இங்கே வேணாம். இப்ப அவர் தோசைதான் கேக்கறாரு. இன்னும் ரெண்டு நிமிஷத்துலே எனக்கு தோசை ரெடியாகணும்.
தொ: முயற்சி பண்றேன். சரியா வரலேன்னா எனக்கு தெரியாது. உங்களை யாரு ரெண்டு நிமிஷத்துலே தோசை ரெடியாயிடும்னு அவர்கிட்டே சொல்லச் சொன்னது? அதெல்லாம்
எவ்ளோ கஷ்டம்னு வேலை செய்யற எனக்குத்தான் தெரியும்.
மு: சரி சரி. கோச்சிக்காதேப்பா... சீக்கிரம் செய்துடு.
தொ: அது சரி. என்னோட திறமைக்கு நான் இன்னேரம் தாஜ் ஹோட்டல்லே தோசை சுட வேண்டியவன். இங்கே வந்து உங்ககிட்டே மாரடிக்க வேண்டியிருக்கு. எல்லாம் என்
தலையெழுத்து.
தொழிலாளி பல தடவை முயற்சித்தும் தோசை முறுகலாகவே வரவில்லை. முறுகலாக இருந்தால் வட்டமாக இல்லை. எல்லாம் சரியாக இருந்தால், அதை கல்லிலிருந்து எடுக்கவே
முடியவில்லை.
(மேலும் அரை மணி நேரம் கழித்து)
சா: என்னப்பா, தோசை வருமா வராதா?
மு: உங்க தோசை அருமையா வந்துக்கிட்டேயிருக்கு. அதை கல்லிலிருந்து எடுக்க வேண்டியதுதான் பாக்கி. நீங்க அதுவரைக்கும் இந்த சட்னியும், சாம்பாரும் சாப்பிட்டுக்கிட்டிருங்க.
சா: நான் ஒரே ஒரு தோசை கேட்டு ஒரு மணி நேரம் ஆயிடுச்சு. கண்லேயே காட்டமாட்டேன்றீங்க. என்னை விட்டுடுங்கப்பா. நான் போறேன். இனிமே இந்த கடைப்பக்கம் வரவே மாட்டேன்.
மு: அப்படியா. இப்படி ஒரு நல்ல கஸ்டமரை இழக்க எனக்கு மனசே வரமாட்டேங்குது. சரி, என்ன பண்றது. இந்த ஒரு மணி நேரம் உங்களுக்காக தோசை செய்ய முயற்சித்ததற்கான
பில் இந்தாங்க. வெறும் ஐநூறு ரூபாய்தான்.
சா: என்னது? ஒண்ணுமே சாப்பிடாததுக்கே ஐநூறு ரூபாயா? இது ரொம்பவே அநியாயம்.
மு: அதோட இன்னும் ஒரு ஐந்து நிமிடம் செலவு செய்து - எங்க சர்வீஸ் எப்படி இருந்ததுன்னு சொல்ற இந்த சர்வேயும் பூர்த்தி செய்துடுங்க. இப்போ வந்ததுக்கு மிக்க நன்றி... இதே
மாதிரி நீங்க அடிக்கடி இங்கே வரணும்.
(சாப்பிட வந்தவர் அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறார்).
27 comments:
me the 1st
இருங்க படிச்சிட்டு வாரேன்!!!
தொ: அப்படியே, இந்த கடையில் வரும் லாபத்தில் எங்களுக்கும் 10% கிடைக்கறா மாதிரி ஏற்பாடு பண்ணுங்க. என்னை ஒரு மூணு மாசம் வெளி நாட்டுக்கு அனுப்பிச்சீங்கன்னா, பல
நல்ல ஐட்டங்களை சமைக்கறதுக்கு கத்துக்கிட்டு வந்துடுவேன்.
:)))))))
//
தொ: ஆமா. என்னை ‘சீனியர் மாஸ்டர் (சரக்கு)' ஆக்கிடுங்க. எனக்குக் கீழே வேலை செய்ய ரெண்டு பேரை போடுங்க. அவங்களை நான் நல்லபடியா வேலை வாங்கி, எல்லா
சிற்றுண்டியையும் தயார் பண்ணிடுவேன். முக்கியமான விஷயம் - அந்த ரெண்டு பேர்லே ஒருத்தராவது பொண்ணா இருக்கட்டும். பக்கத்து கடையிலே பாருங்க. அழகழகா பொண்ணுங்க
தோசை சுடறாங்க. நானும் இருக்கேனே இங்கே உங்களோட!!!
//
பாவம் அந்த மொதலாளி ஆரம்பத்திலேயே தலைலே
துண்டுதான். இதுலே இருக்கிற எல்லாமே தொளிலாளில்க்கு ரொம்ப ஓவரா தெரியலையா ???
தோசையே சுடத் தெரியலை இதுலே
உதவிக்கு ஆளுங்க வேறே ஹையோ ஹையோ....
Hi
We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.
Please check your blog post link here
If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Sincerely Yours
Valaipookkal Team
//
(சாப்பிட வந்தவர் அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறார்).
//
காசை குடுத்துட்டு ஒடுனாரா.. இல்ல.. அவரும் கம்பி நீட்டிட்டு ஓடினாரா..
சாப்ட்வேர் மக்க பண்ற அழிச்சாட்டியத்த சாஃப்டா சொல்லிட்டீங்க :)
super super super
:-))))
//
தோசையே சுடத் தெரியலை இதுலே
உதவிக்கு ஆளுங்க வேறே ஹையோ ஹையோ....
//
அதுனால தான் உதவிக்கு ஆள்.. :) அப்புறம் அவர் சுட்டது சரியா இருக்கானு செக் பண்ற்துக்கு ஒரு ஆள், சுடுவதற்கு முன்னே ரிவ்யூ ப்ணறதுக்கு ஒரு கூட்டம்.. இப்படி பல காமெடிகள்.
நானும் ஒரு தோசை மாஸ்டர் தான்,உங்களுக்கு தோசை வேணுமுனா சொல்லுங்க
//நானும் ஒரு தோசை மாஸ்டர் தான்,உங்களுக்கு தோசை வேணுமுனா சொல்லுங்க
வாங்க மாஸ்டர் 100% hike தர்றேன் என்கடைக்கு வர முடியுமா :-)
நீங்க நல்லா தோசை சுடுவீங்களா??
தோசாசாஃப்ட் - ஒரு தோசை சாப்ட்ட மாதிரி இருக்கு !!
ROTFL :)
வாய்ப்புகளே இல்ல.. கலக்கல்..
நல்ல பதிவு...
எழுதிய விதம் அருமை...
உண்மையை அப்பட்டமாக சொல்லியிருக்கீங்க.....
வாழ்த்துக்கள்.
வாங்க ரம்யா -> ஹிஹி.. தோசை சுடத்தெரியாதவந்தான் மேனேஜர் - இது(வும்)தான் இந்த கதையின் கருத்து!!! :-))))
வாங்க ஸ்ரீதர்கண்ணன், முரளிகண்ணன் -> நன்றி...
வாங்க ஆளவந்தான் -> ஹாஹா... காமெடியோ காமெடிதான்.... :-)))
வாங்க நசரேயன் மாஸ்டர் -> சூடா ஒரு ஸ்பெஷல் சாதா.... :-))))
வாங்க சஞ்சய்ஜி -> நன்றி...
வாங்க வித்யா -> ஹிஹி.. நான் சுடறவங்கள பாத்திருக்கேன்.... :-))
வாங்க மகேஷ்ஜி, கார்க்கி, வேத்தியன், தேனீ -> அனைவருக்கும் நன்றி.... :-))
:)))
அருமை :)
ஏன் இப்படி :)
ROTFL post.! அட்டகாசம்.! ஏற்கனவே நொந்து போய் கிடக்குறாங்க.. நீங்களும் கூட சேந்து பஞ்சராக்குறீங்களே.!
/
உங்க தோசை அருமையா வந்துக்கிட்டேயிருக்கு. அதை கல்லிலிருந்து எடுக்க வேண்டியதுதான் பாக்கி. நீங்க அதுவரைக்கும் இந்த சட்னியும், சாம்பாரும் சாப்பிட்டுக்கிட்டிருங்க.
/
மிஸ்டர் சின்ன பையன் அசத்தீட்டிங்க போங்க
:)))))
ROTFL
/
தாமிரா said...
ROTFL post.! அட்டகாசம்.! ஏற்கனவே நொந்து போய் கிடக்குறாங்க.. நீங்களும் கூட சேந்து பஞ்சராக்குறீங்களே.!
/
ரிப்பீட்டு
வாங்க பாபாஜி -> மிக்க நன்றி...
வாங்க தாரணி பிரியா -> அவ்வ்.. இப்பவே ட்ரைனிங் எடுத்துக்கலாம்னு ஒரு ஐடியாதான்.... :-))
வாங்க தாமிரா -> அண்ணே... நானும் 'அதே' லிஸ்ட்லேதான் இருக்கேன்.... :-(((
வாங்க சிவா-ஜி -> மிக்க நன்றி...
http://b1.magmypic.com/usermags/7/40/9ae2e6b39bbe88e11a1d41c57238a_3601.jpg
american riches magazine-la ungala paththi article vanthatha paththi sollave illai :(
ஹேய் யாருப்பா இது அனானி -> ஒரு நிமிஷம் டென்ஷனாயிட்டேன்....
அப்புறம் பாத்தா.... ஹிஹி இதே மாதிரி நிறைய பத்திரிக்கையிலே வரலாம் போல இருக்குதே!!!!!!
நன்றி...
ச்சின்னப் பையனா நீங்க...ல்லொள்ளுப் பையன்னு மாத்திக்கோங்க...
சர்வே பூர்த்தி செய்வது காமெடியின் உச்சக்கட்டம்.
அது சரி இப்போ ட்ரெண்டு மென்பொருளாளர்கள் ஹோட்டலில் வேலை பார்த்தல் காமெடியா என்ன..
சரி நானும் ஒண்ணு ரெடி பண்றேன்...உங்களுக்கு ஒரு தோசைன்னா எனக்கு ஒரு உப்புமா..புளியோகரே(அப்படித்தான் சொல்லச் சொல்றாங்க) இல்லையா? :-)
Post a Comment