Monday, February 2, 2009

இரு சக்கர வாகனத்தில் பிரச்சினைகள்...


இந்தியாவில் இரு சக்கர வாகனத்தில் ஊர் சுற்றிய காலங்களில், வண்டியில் ஏதாவதொரு பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும். அது என்னென்ன பிரச்சினைன்றீங்களா? - இல்லே,
என்ன பிரச்சினையா இருந்தா எனக்கென்னன்றீங்களா??? - எதுவாயிருந்தாலும் வந்தது வந்துட்டீங்க.... முழுப் பதிவ படிச்சிடுங்க.

விளக்கு:


ஒரு தடவை என்ன ஆச்சுன்னா, வண்டியின் விளக்கு நான் அணைத்தாலும், அணையாமல் - தலைவர்கள் சமாதியில் எரிவதுபோல் - அணையா விளக்காகிவிட்டது. நானும் அந்த
பிரச்சினையை சரிசெய்யாமல் ஒரு வாரம் வரைக்கும் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன். மெக்கானிக்கிடம் போய்வர சோம்பேறித்தனம்தான், வேறென்ன. வீட்டில் கேட்டதற்கு - பகல்
வேளையில் திடீரென்று பயங்கர மழை வந்து வானம் இருட்டிக்கொண்டால் என்ன செய்வது?(!!!) அதனால்தான் விளக்கை அணைக்காமல் அப்படி எரியவிட்டிருக்கிறேன் - என்று
சொல்லிவிட்டேன்.


அதற்குப்பிறகு எங்க வீட்டிலேயே ஒண்ணும் சொல்லாமல் விட்டு விட்டாலும், ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து என்னை அந்த பிரச்சினையை தீர்க்க வைத்துவிட்டார்கள். அப்படி என்ன
செஞ்சாங்கன்றீங்களா? எப்ப வண்டியில் போனாலும், எதிரே வருபவர்கள் என் விளக்கு எரிவதை சைகை மூலம் (ஹார்ன் அடிப்பதுபோல செய்கை) சொல்லிக்கொண்டே இருக்க, நானும் பிரச்சினையை அவர்களுக்கு விளக்காமல் - வணக்கம் செய்வதுபோல் தலையாட்டிக் கொண்டே போய்விடுவேன்.


வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டும் தலையாட்டினால் போதும் என்று நினைத்த எனக்கு - அந்த வாரம் நான் போகுமிடமெல்லாம் அனைவருக்கும் தலையாட்டிக் கொண்டே இருந்ததால் -
தலை(யும்) லூஸாகி விடுமோ என்ற பயம் வந்துவிட்டதால், உடனே மெக்கானிக்கிடம் போய் அந்த பிரச்சினையை சரிசெய்தேன்.


ஒலிப்பான்:


முன்னாடி சொன்ன விளக்கு மாதிரியே ஒலிப்பானும் ஒரு தடவை பிரச்சினை பண்ணிச்சு. நான் அதை பயன்படுத்தலேன்னாலும், ஒலிப்பான் தன்னாலே ஒலிக்க ஆரம்பிச்சிடுச்சு. ரொம்ப
மெதுவா நகர்கிற போக்குவரத்தில், திடீர் திடீரென்று என் ஒலிப்பான் ஒலிக்க, முன்னாலிருப்பவர்கள் திரும்பிப் பார்த்து திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். நானும் உலகை உய்விக்க வந்த பரம்பொருள் ஆசீர்வாதம் செய்வதுபோல் கையை தூக்கிக் காட்டி - எதுவும் என் கையில் இல்லை, அது தன்னால் கத்திக்கொண்டிருக்கிறது என்று சொல்ல முயற்சிப்பேன்.
சில நாட்கள் கழித்து, இந்த பிரச்சினையால் அடிதடி எதுவும் வந்துவிடக்கூடாதென்று இதையும் சரி செய்துவிட்டு வண்டி ஓட்டினேன்.


ப்ரேக்:


என் வண்டிக்கும் ப்ரேக்குக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம்தான். அதாவது, வண்டியில் எப்பவுமே இல்லாத ஒன்று - இந்த ப்ரேக்தான். உடனடி (சடன்) ப்ரேக் அடித்தாலும், ஒரு பத்தடி
தள்ளிப்போய்தான் மெதுவாக நிற்கும்.


ஒரு தடவை என்ன ஆச்சுன்னா, ரெண்டு (நிஜ) நாய்கள் - காதல் தோல்வியில் என் வண்டி முன்னால் விழுந்து தற்கொலை செய்யும் எண்ணத்தோடு திடீரென்று வழியில் வந்துவிட்டன.
எங்கேயோ வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த நான், சடாரென்று ப்ரேக் போட்டேன்.


ஏற்கனவே சொன்னதுபோல் - நான் அவ்வளவு வேகமாய் ப்ரேக் அடித்தும், ஒண்ணுமே
நடக்காததுபோல் - வண்டி சிறிது தூரம் தள்ளிப் போய் நின்றது.


அப்படி வண்டி போய் நின்ற இடத்தில் இரண்டு நண்பர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். என் வண்டி மெதுவாக அவர்கள் நடுவே போய் நின்றது. அந்த இருவரில் ஒருவர் தோளோடு
தோள் இடித்து நானும் வண்டியோடு நின்றேன்.


ஒருவர் : “டேய், இவர் உனக்குத் தெரிஞ்சவரா?”


மற்றொருவர்: “இல்லையே. நான் உனக்குத் தெரிஞ்சவர்னுதான் நினைச்சேன். உன்மேலேதானே வந்து இடிச்சிக்கிட்டு நின்னாரு?”


நான்: “உங்க ரெண்டு பேரையுமே எனக்குத் தெரியாது சார். ஒரு நாய் மேலே இடிக்கக்கூடாதுன்னு ப்ரேக் அடிச்சதுலே, வண்டி சறுக்கிக்கிட்டு உங்களுக்கு நடுவே வந்துடுச்சு. அங்கே பாருங்க அந்த நாய்தான்...”


நான் காட்டிய திசையில் அந்த நாய்கள் மட்டுமல்ல, எந்த உயிரினமும் இல்லை!!!


மறுபடி ஒருவர் (சரியான கடுப்பில்): சரி சரி. கிளம்புங்க. நாங்க பேசணும்.


வண்டியை கிளப்ப நான் மட்டும் நினைத்தால் போதுமா, வண்டியும் அப்படி நினைக்கணுமே. அடுத்த ஐந்து நிமிடத்திற்கு அடிஅடியென்று அடித்தும், வண்டி கிளம்பவேயில்லை. அவர்களும்
வெறுத்துப்போய், பேசுவதற்கு வேறு இடம் தேடிப்போய்விட்டார்கள்.


ஓட்டுனர் உரிமம்:


ஓட்டுனர் உரிமம்ற ஒண்ணு இல்லாமலேயே நானும் ஐந்தாறு வருடமாக சென்னையிலும், நோய்டாவிலும் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தேன். ரொம்ப நாள் கழித்து திடீரென்று ஞானோதயம் வந்து - நம்மால் ஒரு சாராயக்கடை உரிமத்தையோ அல்லது ஒரு பெட்ரோல் பங்க் உரிமத்தையோதான் வாங்க முடியவில்லை - குறைந்தபட்சம் இந்த ஓட்டுனர் உரிமத்தையாவது வாங்கிவிடுவோமென்று முடிவு செய்து - எட்டு போட்டுக் காட்டி வாங்கிவிட்டேன்.


நம்ம நண்பர் தொழிலதிபர் சஞ்சய்க்கு ஏற்பட்ட அனுபவம் மாதிரியே - நானும் ஓட்டுனர் உரிமத்தை வாங்கிய அடுத்த நாள் காவலர்களால் ஓரம்கட்டப்பட்டேன். எல்லா
ஆவணங்களையும் அவர்கள் சரிபார்த்துக் கொண்டிருக்க - நான் யோசித்துக் கொண்டிருந்தேன், எந்த அவதாரம் எடுக்கலாமென்று - அன்னியன்? இந்தியன்?. “சனியன், எல்லாத்தையும்
சரியா வெச்சிண்டிருக்கு” - எல்லா ஆவணங்களையும் திருப்பிக்குடுத்து என்னைப் போகச்சொன்ன அந்த காவலர் பார்த்த பார்வையிலிருந்து நான் புரிந்து கொண்டது.


26 comments:

எம்.எம்.அப்துல்லா February 2, 2009 at 11:02 PM  

//தலை(யும்) லூஸாகி விடுமோ என்ற பயம் வந்துவிட்டதால்,//

அண்ணே எனக்குப் புரியல....நீங்க தலையாட்டுறதுக்கு நம்ப ஜே.கே.ஆர் எப்படி லூஸாவாரு??

:)))

ஆளவந்தான் February 2, 2009 at 11:53 PM  

//
நான் யோசித்துக் கொண்டிருந்தேன், எந்த அவதாரம் எடுக்கலாமென்று - அன்னியன்? இந்தியன்?. “சனியன், எல்லாத்தையும்
சரியா வெச்சிண்டிருக்கு” - எல்லா ஆவணங்களையும் திருப்பிக்குடுத்து என்னைப் போகச்சொன்ன அந்த காவலர் பார்த்த பார்வையிலிருந்து நான் புரிந்து கொண்டது.
//

அவருக்கு ஒரு ஏழரைய போட்டு காமிச்சுருக்க வேண்டியது தானே

வால்பையன் February 3, 2009 at 12:26 AM  

//அன்னியன்? இந்தியன்?. “சனியன், எல்லாத்தையும்
சரியா வெச்சிண்டிருக்கு”//

மாஸ்டர் டச்சிங்

Mahesh February 3, 2009 at 12:30 AM  

//தலை(யும்) லூஸாகி விடுமோ என்ற பயம் வந்துவிட்டதால்,//

அஜீத்தை வம்புக்கு இழுத்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். :)))

Vidhya Chandrasekaran February 3, 2009 at 12:48 AM  

\\நானும் உலகை உய்விக்க வந்த பரம்பொருள் ஆசீர்வாதம் செய்வதுபோல் கையை தூக்கிக் காட்டி - எதுவும் என் கையில் இல்லை\\

ROTFL:)

இராகவன் நைஜிரியா February 3, 2009 at 1:06 AM  

//
இந்தியாவில் இரு சக்கர வாகனத்தில் ஊர் சுற்றிய காலங்களில் //

ஊர் சுற்றியதை தவிர வேறு எதாவது செஞ்ச மாதிரி ஞாபகம் இருக்குங்களா?

இராகவன் நைஜிரியா February 3, 2009 at 1:09 AM  

// வண்டியில் ஏதாவதொரு பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும். //

வண்டி அப்படின்னு ஒன்னு வச்சிருந்தா, அத அடிக்கடி மெக்கானிக்கிட்ட காண்பிச்சு, சரியா வச்சுக்கணும், அத விட்டுவிட்டு, மாமாங்கத்து மாமாங்கம் மெகானிக்கிட்ட போனா அப்படிதாங்க

பரிசல்காரன் February 3, 2009 at 3:19 AM  

எதைப் பற்றின்னாலும் பின்றீங்களே ச்-சின்னப்பையரே!

//காதல் தோல்வியில் என் வண்டிமுன்//

ROFTL!!

நவநீதன் February 3, 2009 at 4:01 AM  

>> ROFTL!!
நானும் விழுந்து விழுந்து சிரித்தேன்....!

சின்னப் பையன் February 3, 2009 at 5:29 AM  

வாங்க அப்துல்லா அண்ணே -> அவ்வ்வ்... எப்படி இப்படி????? முடியல.......:-)))

வாங்க ஆளவந்தான் -> ஹாஹா... கரெக்ட்தான்.... அடுத்த தடவை கண்டிப்பா ஒரு 7.5 போட்றவேண்டியதுதான்.... :-)))

வாங்க வால் -> நன்றி..

வாங்க மகேஷ்ஜி -> அவ்வ்வ்.. அவரு ‘தல'ங்க... நான் சொன்னது ‘தலை'.... ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கே..... :-)))))

வாங்க வித்யா -> நன்றி...

ராம்.CM February 3, 2009 at 5:47 AM  

என் வாழ்வில்.. நானும்,எனது வண்டியும் இது போன்ற அனுபவங்கள் பெற்றதுண்டு..

Anonymous,  February 3, 2009 at 7:10 AM  

இப்ப தங்கமணிக்கு தலையாட்ட அப்பவே பிராக்டிஸ் பண்ணியிருக்கீங்களே. உங்கள நான் மெச்சுகிறேன். (மெட்ராஸ் பாஷையில மெச்சுருவேன் இல்லை)

நசரேயன் February 3, 2009 at 10:49 AM  

நீங்க சொன்னது எல்லாம் உண்மைதான்

முரளிகண்ணன் February 3, 2009 at 12:05 PM  

\\நம்மால் ஒரு சாராயக்கடை உரிமத்தையோ அல்லது ஒரு பெட்ரோல் பங்க் உரிமத்தையோதான் வாங்க முடியவில்லை - குறைந்தபட்சம் இந்த ஓட்டுனர் உரிமத்தையாவது வாங்கிவிடுவோமென்று முடிவு செய்து \

:-)))))))))))))

சின்னப் பையன் February 3, 2009 at 1:01 PM  

வாங்க இராகவன் -> ஹிஹி. வண்டியே ரொம்ப அழுது என்னை மெக்கானிக்கிட்டே கூட்டிட்டு போன்னு சொல்லும்போதுதான் போறது வழக்கம்.... :-)))

வாங்க பரிசல் -> என்னதான் இருந்தாலும் உங்கள மாதிரி எழுதமுடியுமா தல!!!!!!!.... :-)))

வாங்க நவநீதன், ராம் -> நன்றி...

வாங்க வேலன் ஐயா -> அவ்வ்வ்.. என்ன செய்தி சொன்னாலும் - கேட்ச் மை பாய்ண்ட் -ன்னு கரெக்டா மேட்டருக்கு வந்துடறீங்க!!!!!

வாங்க பிரேம்ஜி, நசரேயன், முரளிகண்ணன் -> நன்றிங்க..

RAMYA February 3, 2009 at 4:19 PM  

மொதல்லே நீங்க எனக்கு
ஒரு சந்தேகத்தை தீர்த்தாகணும்
நீங்க வச்சிருந்தது இரு சக்கர
வாகனமா இல்லே காயலான்
கடைலே இருந்து தாளிகிட்டு வந்ததா??

RAMYA February 3, 2009 at 4:26 PM  

இரு சக்கர வாகனத்திலே விளக்கு: சரி இல்லே
இரு சக்கர வாகனத்திலே பிரேக் சரி இல்லே
இரு சக்கர வாகனத்திலே ஒலிப்பான் சரி இல்லே
இரு சக்கர வாகனத்திலே ஓட்டுனர் உரிமம் இல்லே

உங்க இரு சக்கர வாகனத்திலே இவ்வளுவு இல்லே

அது பேரு இரு சக்கர வாகனமா வாகனமே இல்லே

ஏதோ குத்து மதிப்பா பிரிஞ்சி மேஞ்சி வச்சத வண்டின்னு வச்சிக்கிட்டு சென்னைலே அலம்பல் பண்ணி இருக்கீங்க உங்களுக்கே இது நியாயமாப் படுதா ???

RAMYA February 3, 2009 at 4:30 PM  

//
நம்மால் ஒரு சாராயக்கடை உரிமத்தையோ அல்லது ஒரு பெட்ரோல் பங்க் உரிமத்தையோதான் வாங்க முடியவில்லை //

அட பின்னிட்டீங்க போங்க
எதெல்லாம் வேறே ஆசை இருக்கா??

தாரணி பிரியா February 3, 2009 at 6:18 PM  

அட வண்டின்னா இப்படித்தான் இருக்கணுங்க. அப்புறம் நம்ப வண்டின்னு எப்படி அடையாளம் தெரியும். இப்ப என் வண்டியில பாத்திங்கன்னா ஆக்ஸிலேட்டர் திருகினாதான் வண்டி நிக்கும். பிரேக் போட்டா வேகமெடுக்கும். என்னை தவிர வேற யாரும் ஒட்டமுடியாது.

அப்புறம் ஒட்டனர் உரிமம் நான் ச்சின்னபையன்னு சொல்லி ஒரு நாலு போட கேட்டு இருந்திருக்கலாம் (அவங்க நாலு போட்டு இருந்திருப்பாங்களேன்னு எல்லாம் கேட்கக்கூடாது)

Sanjai Gandhi February 4, 2009 at 12:45 AM  

//சஞ்சய்க்கு ஏற்பட்ட அனுபவம் மாதிரியே - நானும் ஓட்டுனர் உரிமத்தை வாங்கிய அடுத்த நாள் காவலர்களால் ஓரம்கட்டப்பட்டேன்//

அடிங்க.. என்னாதிது ச்சின்னப்பையன் தனமா? என் பதிவுக்கு ஒரு லின்க் குடுக்க வேணாமா? என் பதிவை பிறர் படித்து விடக் கூடாதென்று இருட்டடிப்பு செய்யும் உங்கள் நுண்ணரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சின்னப் பையன் February 4, 2009 at 9:39 AM  

வாங்க ரம்யா -> அவ்வ்வ்... அது வண்டியேதாங்க... ஆனா ப்ராப்ளம் ஒண்ணுமே இல்லேன்னாத்தான் ஏதோ ப்ராப்ளம் இருக்கும்னு நினைக்கற மாதிரி இருக்கும்.... ஹிஹி...:-)))

வாங்க தாரணி பிரியா -> உங்க வண்டியின் வண்டவாளங்களை தனிப்பதிவு போட்டு சொல்லுங்க.... :-)))

வாங்க சஞ்சய் அண்ணா -> ஆஆஆ... என்னண்ணா இப்படி சொல்லிட்டீங்க???? ஏதோ ச்சின்னப்பையன், தெரியாம மிஸ் பண்ணியிருப்பான்னு மன்னிச்சி விடக்கூடாதா???? சூரியனுக்கே டார்ச்சான்னு கூட நினைச்சிருக்கலாமே????... அவ்வ்வ். அடுத்த தடவையிலேந்து சரியா உரல் கொடுத்துடறேன்... சரியா?????.....:-))))

மங்களூர் சிவா February 4, 2009 at 1:47 PM  

//அன்னியன்? இந்தியன்?. “சனியன், எல்லாத்தையும்
சரியா வெச்சிண்டிருக்கு”//
:))

Anonymous,  February 5, 2009 at 6:43 AM  

பாஸிட்வ் திங்கிங்ன்னு ஒரு எடுத்துக்காட்டு நம்ம ஸ்மால் பாய்...

1. அவ்வளவ்ய் பிரச்ச்னையிருந்தும் அந்த வண்டி ஓடுதுங்கற ஒரு பாஸிடிவிடி.

2. எல்லாரும் கவனிக்க...தலைப்பு...இரு சக்கர வாகனத்தில்....சக்கரம் இருக்குது இல்ல...வேறே எது இல்லன்னா என்ன..

3. ஒலிப்பானின் தயவால் பரம்பொருள் ஆனது.

4. கடைசியில் “சனியன்” என்று தெரியவந்தது.

Anonymous,  February 5, 2009 at 1:12 PM  

very funny! esp, the last para- anniyan/indian - saniyan !! had a good laugh :-) - Mona

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP