Tuesday, January 27, 2009

ஒரு சதுரங்கப் போட்டியில் கடைசி நிமிடங்கள்...

தேசிய சதுரங்கப் போட்டியில் இன்று இறுதிப் போட்டி. ஆட்டம் ஆரம்பிச்சி இருபது நிமிஷம் ஆயாச்சு.

அங்கே கண்ணாடி போட்டுட்டு ஆடறாளே, அவதான் என் பொண்ணு. அவளுக்கு இப்போ பதினைந்து வயசுதான் ஆகுது. அஞ்சு வயசுலே சதுரங்க விளையாட்டை கத்துக்க ஆரம்பிச்சவ, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு ஏகப்பட்ட பரிசுகளை வாங்கியிருக்கா. அவ்ளோ பரிசுகளை அடுக்கி வைக்கவே எங்க வீட்லே இடமில்லை. எப்பவும் அவளுக்கு இந்த விளையாட்டை பற்றி சிந்தனைதான். அதனால் சரியா படிக்க மாட்டான்னு நினைச்சிக்காதீங்க. படிப்புலேயும் கெட்டிதான் அவ. எப்படியும் பத்தாவது ரேங்கிற்குள் வந்துடுவா. இந்த வெற்றி எல்லாத்துக்கும் அவளோட விடாமுயற்சிதான் காரணம்.

சரி. இந்த மேட்சுக்கு வருவோம்.

இந்த போட்டியின் தகுதிச்சுற்றுகள் எல்லாவற்றிலும் மிகச்சுலபமாக ஜெயித்துவிட்ட என் மகள், இறுதிப்போட்டியிலும் அப்படியே ஜெயித்து விடுவாள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு மிக அதிகமாகவே இருக்குது. கூடியிருக்கும் மக்கள் கூட்டம் மிக உன்னிப்பாக இந்த போட்டியை பாத்துக்கிட்டிருக்காங்க. எப்போதும் போலில்லாமல் இந்த தடவை தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால், இந்த போட்டியை இந்தியா முழுக்க லட்சக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.


கடந்த சில நிமிடங்களாக எதிராளியை 'செக்-மேட்' செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். எதிராளி எப்படியோ தப்பித்து விடுகிறார். சற்றும் மனம் தளராமல் இதோ... இதோ... மறுபடியும் 'செக்' வைக்கிறாள். இப்போ பாப்போம். ஆஹா.. ஆஹா... இது 'செக்-மேட்'டேதான். முடிந்தது. ஆட்டம் முடிந்து விட்டது. எதிராளி தோல்வியை ஒப்புக்கொண்டு என் மகளிடம் கை கொடுக்கிறார்.

என் மகள் ஜெயித்தே விட்டாள்.

நாங்கள் இருக்கையை விட்டு எழுந்து உற்சாகத்தில் கத்திக் கொண்டிருக்கிறோம். எனக்கு கண்கள் பனிக்கிறது. இதயம் கனக்கிறது.பக்கத்தில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் எனக்கு கை கொடுத்து வாழ்த்து சொல்கின்றனர். "டேய், ட்ரீட் எங்கேடா? என கேட்கின்றனர். அனைவரையும் பொறுமை காக்கச் சொல்லிவிட்டு நான் என் மகளிடம் ஓடிப்போக முயற்சி செய்கிறேன்.

பின்னாலிருந்து என் மனைவி, "ஏங்க பர்சை எடுத்து, காசு குடுங்க. இவங்க ட்ரீட் கேக்கறாங்க" என்கிறார். நானோ படபடப்பில் இருந்தேன் - "இப்போ என்னம்மா அவசரம், முதல்லே நம் பொண்ணைப் பாப்போம் வா" என்று அவளையும் இழுத்துப்போக முயற்சிக்கிறேன்.

என் அவசரத்தைப் புரிந்துகொள்ளாத அவளோ - "ஏங்க, பாக்கட்லேந்து பர்சை எடுத்து காசை கொடுங்க" - "ஏங்க, பாக்கட்லேந்து பர்சை எடுத்து காசை கொடுங்க" என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். "காசை கொடுக்கலேன்னா இவ விடமாட்டா" என்று சொல்லிக் கொண்டே நானும் எடுத்துக் கொடுக்கிறேன்.

அப்போதுதான் கவனித்தேன் - "யார் இந்த பொண்ணு? இவ எப்படி திடீர்னு என் முன்னாடி வந்தா? ஏன் இவளும் என்கிட்டே காசு கேக்கறா?"

"சதுரங்கம் வாங்க வந்த கடையிலே, காசை எடுத்துக் கொடுத்துட்டு சட்டுபுட்டுன்னு வீட்டுக்குக் கிளம்பற வழியை பாக்காமே -- 'பே'ன்னு கடைக்காரி மூஞ்சியை பாத்துக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்? -- பின்னாடி வரிசையில் நிக்கறவங்கல்லாம் கத்தறாங்க பாருங்க" - இது மறுபடியும் என் மனைவிதான்.

The End.

*****


பிகு - 1: வழக்கம்போல கனவு / பகல் கனவு மாதிரி கதையை முடிச்சதுக்கு மன்னிச்சிடுங்க.

பிகு - 2: இந்த வாரம்தான் கடைக்குப் போய் சதுரங்கம் வாங்கிட்டு வந்தோம். அதை சஹானாவுக்கு சொல்லிக் கொடுத்து பெரிய சாம்பியனாக்கணும்னு பேசிக்கொண்டோம். அதைத்தான் கதையா போட்டிருக்கேன்... ஹிஹி...

பிகு - 3: லேபிள்லே 'சொந்த கதை'ன்னு போட்டா கண்டுபிடிச்சிடுவீங்கன்னுதான், 'சிறுகதை'ன்னு போட்டிருக்கேன்!!!

28 comments:

Vidhya Chandrasekaran January 27, 2009 at 11:19 PM  

சஹானாவுக்கு வாழ்த்துக்கள். குழந்தைக்கு ஆர்வமிருக்கிறதா என தெரிந்துகொண்டு ஊக்கப்படுத்துங்கள். திணிக்க வேண்டாம்(சொல்லலாம் தானே??).

Vidhya Chandrasekaran January 27, 2009 at 11:20 PM  

உங்கள் தங்கஸ் கமெண்ட் தான் சூப்பர்:)

நவநீதன் January 28, 2009 at 12:20 AM  

ஆரம்பிச்சப்பவே தெரிஞ்சுடுச்சு இது ஒரு கனவு பதிவுன்னு....!
இருந்தாலும் சுவாரசியம்....!

வால்பையன் January 28, 2009 at 12:52 AM  

கனவு காணுங்கள்ன்னு அப்துல்கலாமே சொல்லிருக்காரு!
பிறகு ஏன் தயக்கம் சும்மா கனவு கண்டுகிட்டே இருங்க!

வினோத் கெளதம் January 28, 2009 at 1:08 AM  

கலக்கல். வாழ்துக்கள் சகானாவுக்கு.
எனக்கு கூட நேத்து ஒரு கனவு செஸ்ல World champion ஆகுற மாதரி.
பலிக்குமா..?? ஆனா என்னால செஸ்ல கடைசி வரைக்கும் RED COINக்கு Follow போட முடியறதே இல்ல.
தெரிஞ்ச எனக்கு கூட கொஞ்சம் சொல்லி தாங்க.

வால்பையன் January 28, 2009 at 1:16 AM  

//ஆனா என்னால செஸ்ல கடைசி வரைக்கும் RED COINக்கு Follow போட முடியறதே இல்ல.
தெரிஞ்ச எனக்கு கூட கொஞ்சம் சொல்லி தாங்க. //

அதே தாங்க எனக்கும்
ஒவ்வொரு முறையும் கோல் கீப்பர் தடுத்துகிட்டே இருக்காரு

இராகவன் நைஜிரியா January 28, 2009 at 3:25 AM  

குழைந்தைக்கு வாழ்த்துக்கள்...

கற்று கொடுக்கப்போகும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Anonymous,  January 28, 2009 at 4:24 AM  

சஹானா சாம்பியன் ஆக வாழ்த்துக்கள்

RAMYA January 28, 2009 at 4:33 AM  

இந்த கனவுதான்பா சூப்பர்
ஒரு தந்தையா, தாயா இருந்து
கனவு கண்டிருக்கிறீர்கள்
சஹானாவுக்கு என் வாழ்த்துக்கள்

எம்.எம்.அப்துல்லா January 28, 2009 at 4:36 AM  

//எனக்கு கண்கள் பனிக்கிறது. இதயம் கனக்கிறது.//

இதயம் இனிக்கிறதுன்னு இருக்கனும்.அதுதான் ஒரிஜினல் டயலாக்
:)))

RAMYA January 28, 2009 at 4:38 AM  

வழக்கம் போல இது கனவுன்னு
நான் நினைக்கலை ரொம்ப சீரியஸ் ஆ
படிச்சுகிட்டே வந்தேன் வழக்கம் போல்
என் சகோதரியும் கேட்டு கிட்டே வந்தாங்க பாதி படித்தவுடன் எனக்கு லேசா சந்தேகம் வந்துச்சு இருந்தாலும் சுவாரசியமா இருந்ததாலே முழுவதும் படிச்சேன்.

RAMYA January 28, 2009 at 4:39 AM  

தங்ஸ் பணம் கேட்டதும்,
நீங்க கிரௌண்ட்க்கு ஓட நினைப்பதும்
என் கண் முன்னே ஒரு பெற்றோரின் ஆர்வம் நிறைந்த அருமையான காட்சி ஓடியது.

சஹானாவுக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் கனவு நனவு ஆக என்
பிரார்த்தனைகள் எப்போதும் உண்டு

அருப்புக்கோட்டை பாஸ்கர் January 28, 2009 at 4:58 AM  

//எனக்கு கண்கள் பனிக்கிறது. இதயம் கனக்கிறது.//

ம்ஹூம் , அது இதயம் இனிக்கிறது .

Mahesh January 28, 2009 at 5:31 AM  

ஆஹா... இன்னொரு ஜும்பா லாஹிரி !!

சஹானாவுக்கு வாழ்த்துகள்.

ராம்.CM January 28, 2009 at 5:34 AM  

உங்கள் கனவு அருமையாக உள்ளது!..


சஹானா சாம்பியன் ஆக வாழ்த்துக்கள்

சின்னப் பையன் January 28, 2009 at 5:52 AM  

வாங்க வித்யா -> உரிமையோடு சொன்னதுக்கு நன்றி... கண்டிப்பா திணித்தல் இருக்காது. வாங்கி வெச்சிருக்கிற விளையாட்டுப் பொருட்களெல்லாம் போரடிக்கும்போது, இதையும் எடுத்து விளையாட சொல்லிக் கொடுக்கலாம்ன்ற எண்ணம்தான். பாக்கலாம் எப்படி போகுதுன்னு.... :-)))

வாங்க முரளிகண்ணன், நவநீதன், வால் -> நன்றி..

வாங்க வினோத், வால் -> அவ்வ்வ்... எனக்கு வேறே மாதிரி ப்ராப்ளம். அந்த கூடைய ரொம்ப உசரத்துலே வெச்சிருக்காங்க. எனக்கு எட்டவே மாட்டேங்குது... :-)))

சின்னப் பையன் January 28, 2009 at 5:52 AM  

வாங்க இராகவன், சின்ன அம்மிணி -> நன்றி...

வாங்க ரம்யா -> மிக்க நன்றி...

வாங்க அப்துல்லாஜி, பாஸ்கர் -> அவ்வ்வ்... கூகுளிட்டு ஒரு தடவை பாத்துக்கணும்னு நெனெச்சேன்.... மறந்துட்டேன்.... :-))))

வாங்க மகேஷ்ஜி, ராம் -> நன்றி...

ராஜ நடராஜன் January 28, 2009 at 5:53 AM  

சஹானா ராணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

முன்பு ஒரு சதுரங்க மென்பொருள் இருந்தது என்னிடம்.எப்படி காய் நகர்த்தினாலும் கம்ப்யூட்டரே ஜெயிக்கறதப் பார்த்துட்டு டூ விட்டுட்டேன்:)

Thamira January 28, 2009 at 7:49 AM  

அழகுதான்..

தேனீ January 28, 2009 at 10:57 AM  

வாழ்த்துக்க‌ள் ச‌ஹானா
ந‌டுப்ப‌குதியில் ச‌ந்தேக‌ம் வ‌ரும்ப‌டியாக‌ இருந்தாலும் நல்லாவே ஓட்றீங்க‌.

பிர‌பா

சின்னப் பையன் January 28, 2009 at 6:38 PM  

வாங்க ராஜ நடராஜன் -> ஹாஹா... மறுபடி முயற்சித்து பாருங்களேன்.... :-)))

வாங்க சென்ஷி, தாமிரா, தேனீ -> நன்றி.

RAMASUBRAMANIA SHARMA January 29, 2009 at 12:20 PM  

நல்ல பதிவு....தங்களின் கனவுகள் நனவாகட்டும்...வாழ்த்துக்கள்...

தாரணி பிரியா January 29, 2009 at 12:58 PM  

பெரிய அளவில் விளையாடவில்லை என்றாலும் செஸ் கொஞ்சமாவது கற்றுக் கொள்ளலாம். யோசிக்கும் திறனை அதிகரிக்கும்தானே. சஹானாவுக்கு இந்த விளையாட்டு பிடிக்க வாழ்த்துகள்

வெண்பூ January 31, 2009 at 5:44 AM  

ஹா..ஹா..ஹா.. அடுத்தது "ஒரு கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில்", "ஒரு கேரம் போட்டியின் கடைசி நிமிடத்தில்", "ஒரு டென்னிஸ் போட்டியின் கடைசி கேமில்" இப்படியெல்லாம் போடுவீங்களோ???? :))))

அன்புடன் அருணா January 31, 2009 at 10:59 AM  

உங்கள் கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா

மங்களூர் சிவா February 4, 2009 at 1:53 PM  

கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்.

பொண்டாட்டி கூட இருக்கப்பவே தில்லா கடைக்கார பொண்ணை சைட் அடிக்கிறீங்களா? என்ன இருந்தாலும் சீனியர் சீனியர்தான்

:)))))

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP