கணவன் மனைவி ஒரே அலுவலகத்தில் பணி புரிந்தால்!!!
கணவன் மனைவி இருவரும் ஒரே அலுவலகத்தில் - ஒரே குழுவில் பணி புரிந்தால் நல்லதா, கெட்டதா? கீழே படிங்க.
இங்கே சொல்லியிருக்கிறது எல்லாமே ரங்ஸும், தங்ஸும் மனசிலே நினைக்கறதுதான். அதனால் நீங்களும் இந்த பதிவை மனசிலேயே படிங்க. ஹிஹி...
ஏதாவது ஒரு பிரச்சினையில் ரங்கமணியை தலைவர் திட்டிவிட்டால்:
ரங்ஸ்: அடச்சே, இவ எதிரே என்னை ஏண்டா திட்டறே? இதை சொல்லி சொல்லியே இவ என் மானத்தை வாங்குவாளே? சரி வெளியே வராமெயா இருந்துடுவே. வெச்சுக்கறேன் உன்னை.
தங்ஸ்: நான் திட்டினா என்னை திரும்பி கத்துவீங்களே? இப்போ கத்துங்களேன் பாக்கலாம். உடனே வீட்டுக்கு அனுப்பிச்சிடுவான்.
புதுசா ஒரு பொண்ணு குழுவில் சேர்ந்தா:
ரங்ஸ்: இவ்ளோ நாளா இல்லாமே, இப்பத்தானா இந்த பொண்ணு இங்கே வந்து சேரணும்? தங்ஸ் எதிரே இவகிட்டே சிரிச்சே பேசமுடியலியே??
தங்ஸ்: பாப்போம் இன்னும் எவ்வளவுதான் வழியறாருன்னு. எல்லாத்துக்கும் சேத்து வெச்சி வீட்லே பாத்துக்கறேன்.
புதுசா ஒரு ஆண் குழுவில் சேர்ந்தா:
ரங்ஸ்: டேய் டேய். எந்த சந்தேகமாயிருந்தாலும் என்கிட்டேயே கேளுடா. அவகிட்டே போய் வழியாதே. அவ என் பொண்டாட்டி.
தங்ஸ்: வேலையே செய்யாமே நான் இந்த புது ஆளோட பேசறத பாத்துக்கிட்டே இருக்காரே. வீட்லே போய் என்ன திட்டு விழப்போகுதோ!!!
சாப்பிடும் நேரத்தில்:
ரங்ஸ்: இவ மட்டும் பக்கத்திலே இல்லேன்னா, இந்த சாப்பாட்டை யாருக்காவது தள்ளி விட்டுட்டு பக்கத்து உணவகத்துக்குப் போய் சாப்பிடலாம்னு பாத்தேன். அது முடியலியே.
தங்ஸ்: இவரே என் சாப்பாட்டை இவ்ளோ பிரியமா சாப்பிடும்போது, நான் சாப்பிடாமே இருக்க முடியுமா? பிடிக்கலேன்னாலும் சாப்பிட்டுத்தானே ஆகணும்?
ஆட்குறைப்பு நடைபெற்றால்:
ரங்ஸ்: ஐயா ஐயா. முதல்லே என்னை வேலையை விட்டு தூக்கிடுங்க. இவளோட தொல்லை தாங்க முடியல.
தங்ஸ்: ஐயா ஐயா. முதல்லே என்னை வேலையை விட்டு தூக்கிடுங்க. இவரோட தொல்லை தாங்க முடியல.
24 comments:
;-)))))))
\\இவரே என் சாப்பாட்டை இவ்ளோ பிரியமா சாப்பிடும்போது, நான் சாப்பிடாமே இருக்க முடியுமா? பிடிக்கலேன்னாலும் சாப்பிட்டுத்தானே ஆகணும்?\\
அல்டிமேட்
அனுபவம் பேசுது.
//இவரே என் சாப்பாட்டை இவ்ளோ பிரியமா சாப்பிடும்போது, நான் சாப்பிடாமே இருக்க முடியுமா? பிடிக்கலேன்னாலும் சாப்பிட்டுத்தானே ஆகணும்?//
:-))))))
//
கணவன் மனைவி இருவரும் ஒரே அலுவலகத்தில் - ஒரே குழுவில் பணி புரிந்தால் நல்லதா, கெட்டதா?
//
கேள்வி வேறயா?? ஹி..ஹி.. கண்டிப்பா கெட்டதுதான், ரங்கமணிக்கு.. :)))
:))
//இவரே என் சாப்பாட்டை இவ்ளோ பிரியமா சாப்பிடும்போது,//
நீங்க அவ்ளோ நல்லவாரண்ணே?
இஃகி இஃகி இஃகி இஃகி !!
எல்லாத்துக்கும் ஒரு ரிப்பீட்டேஎய்ய்ய்
ஹாஹாஹாஹா:-)
Dear Dr. Chinna,
'~Ungalai NagaiChuvai Dilagam nu Sollalaam~'
Ipdi Manasukkul Pesurathellam Ketka Mudinthal Ennagurathu Veedu, Valkkai Ellam.
Superrrrrrrrrrrrrr
Raja - Bgl
:))
வாங்க பிரேம்ஜி, ராகி ஐயா, வேலன் ஐயா -> நன்றி..
வாங்க முரளிகண்ணன் -> ஹிஹி..
வாங்க மிஸஸ்.டவுட் -> இல்லீங்கோ... அப்படி நடந்தா - மேலே கடைசி வசனத்தை படிச்சீங்கல்ல - அதுதான் நடக்கும்... :-))))))
வாங்க வெண்பூ -> ஒரு ஆம்பளயோட கஷ்டம் இன்னொரு ஆம்பளக்குத்தான் புரியும்... :-)))
வாங்க வித்யா -> நன்றி..
வாங்க மகேஷ் -> என்ன, இதிலேந்து தப்பிக்கக்கூட முடியுமா?..... தயவு செய்து அதை சொல்லுங்க.... :-)))
வாங்க கார்க்கி, பாஸ்கர், ராஜா, விக்கி -> மிக்க நன்றி...
நல்ல வேளை, நான் தப்பிச்சுட்டேன்
சூப்பர் சுப்பர் :)
நீங்கள் றம்ப நல்லவரு
அட... எப்பிடி மொகத்தை ரசிச்சு சாப்பிடற மாதிரி வெச்சுப்பீங்கன்னு விளக்கமா சொல்லுவீங்கன்னு பாத்தா....
அண்ணே... நம்ம கடைல ஃபாண்ட் ப்ராப்ளம் சரி பண்ணிட்டேன்...
சூப்ப........ர்
:))))))))))))))
வாங்க நசரேயன் -> ஹாஹா... தப்பிச்சிட்டீங்களா?????
வாங்க பொடிப் பொண்ணு, கஜன், படகு -> நன்றி...
ரெண்டு பேரும் கைபேசிலே லவ்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கும் போது - மானேசர் வந்தான்னா - கிளையண்ட் டிஸ்கஷன் சார் னு சொல்வாங்களா
//*
கணவன் மனைவி இருவரும் ஒரே அலுவலகத்தில் - ஒரே குழுவில் பணி புரிந்தால் நல்லதா, கெட்டதா? கீழே படிங்க.
இங்கே சொல்லியிருக்கிறது எல்லாமே ரங்ஸும், தங்ஸும் மானசிலே நினைக்கறதுதான். அதனால் நீங்களும் இந்த பதிவை மனசிலேயே படிங்க. ஹிஹி...
*//
அவ்வளவுதான் ரங்கமணிக்கு நிம்மதியும் போயி
தங்கமணிக்கும் நிம்மதியும் போய்
அலைய வேண்டியதுதான்.
இந்த விஷ பரிச்சை யாரும் செய்யாதீங்க
உலகம் வேறே அழிய போகுதுன்னு
குடுகுடுப்பை உடுக்கை அடிச்சிருக்காரு
நல்லா சந்தோஷமா இருங்க அப்பு !!
//*
புதுசா ஒரு பொண்ணு குழுவில் சேர்ந்தா:
*//
இது ஒரே ஜாலி தான்
தங்கமணிக்கு பயப்படாதீங்கப்பா
வேலையிலே சந்தேகம்னு
சொல்லி சமாளிங்க
சாரிங்க தங்கமணிங்க !!
//*
ஆட்குறைப்பு நடைபெற்றால்:
*//
ஆஹா என்னா தபிச்சுக்கலாம்
பாருங்கோ!!
மேனேஜர்: ஒழுங்கா ரெண்டு பெரும்
போய் வேலையை பாருங்கோ..
:))))))))))))))))))))
Post a Comment